Advertisement

நின்ற இடத்தில் இருந்தே பார்வையை சுழல விட்டான். அறையின் ஒவ்வோர் இடத்திலும் வெறித்து வெறித்து மீண்ட விழிகள், ஷோகேஷில் படியும் போது மட்டும் மீள மறுத்தது!

விருட்டென எட்டுகள் வைத்து ஷோகேஷின் அருகில் சென்றான். அதிலிருந்த ஒவ்வொன்றிலும் பார்வை படிந்து படிந்து மீண்டது. அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற கோபம் சுறு சுறுவென ஏற, வரிசை கட்டி நின்றிருந்த ஷோகேஸ் பொருட்கள்  ஒவ்வொன்றும் அவன் கையில் இடம் மாறி, அவன் விழிகளால் அழுத்தமாய் பார்த்து, அதன் பின் ‘இது இல்லை’ என அவன் மனம் கொடுத்த பதிலில் கையில் இருந்து வேறெங்கோ பறந்து கொண்டிருந்தது. ஒரு சில பொருட்கள் கட்டிலில் சென்று பாந்தாமாய் படுத்துக்கொள்ள, ஒரு சில பொருட்கள் தரையில் விழுந்து நொருங்கியது.

இறுதியில் பொறுமை பறக்கும் நேரத்தில் இவன் கையில் சிக்கியது, அவன் தேடியது கிடைத்தது. அது ப்ருந்தா அவனுக்காக கொடுத்த ‘செராமிக் சிலை’ பார்த்த விழி பார்த்தபடி பூவாய் பூத்து விட்டது. இதோ இப்போது சிசிடிவி ரெக்கார்டிங்கில் பார்த்த அதே உடையுடன் இருந்தது இந்த பெண் சிலை. அதன் அருகில் நெருக்கமாய் இருந்த சிலையை இவன் உற்று பார்க்க, அது அப்படியே இவனது முகத்தை கொண்டிருந்தது.

வேகவேகமாய் கண்ணாடி முன் சென்று நின்றான், இரு முகங்களையும் மாற்றி மாற்றி பார்க்க, ஒரு வித்யாசம் கூட கண்டறியமுடியவில்லை.

அதன் பின் கண்ணாடியில் இருந்து விலகிய இவன் விழிகள், அந்த பெண் சிலையை இன்ச் பை இன்ச் சாக துளைத்தெடுத்தது.

நியாபகங்களை இழந்த பின், மருத்துவணையில் சிகிச்சை முடிந்து வீட்டிறக்கு வந்த பின், தந்தையுடன் சில நாட்கள் தங்கி, அதன் பின் அவனது அறைக்கே மீண்டும் குடி பெயர்ந்த நாள் அவனது நினைவில் இப்போதும் நிழலாடியது.

அன்று ஆசையாய் பார்த்து ரசித்த அவன் அறை, ஓவியங்கள், போட்டோக்கள், ஷோகேஷ் அலங்கார பொருட்கள் என நீண்ட இவனது நினைவுகளில் எப்படி இந்த சிறிய சிலை எப்படி இவன் மனதை கவர்ந்தது? என சத்தியமாய் இவனுக்கு தெரியவில்லை. அவனை மீறி ஏதோ ஒரு சக்தி இவனை ஆட்டிபடைப்பது போல் தோன்றியது.

இல்லையென்றால் இதற்கு முன் மேலோட்டமாய் பார்த்தவனுக்கு,அதில் தெரியாத உயிரோட்டம் நிறைந்த  சிலை, இப்போது மட்டும் எப்படி உயிரோட்டம் கொடுக்க முடியும்? நினைக்க நினைக்க வெறித்த விழிகளில் நீர் சுரந்து  இரண்டு சொட்டு நீர் உருண்டோடி அந்த பெண் சிலையில் பட்டு தெரித்தது.

தாலி கிடைத்தபோதும் தனக்கென ஒருத்தி இருக்கிறாள் என நம்ப தயங்கியது.

நகை கடையில் கிடைத்த பில்லில் கூட “பிர்லா போஸ்” என்ற பெயரில் நான் மட்டும் தான் இருக்கிறேனா? என கேள்வி எழுப்பியது.

ஆனால் சிசிடிவியில் தெரிந்த உடையுடன் ஒத்து போன இந்த சிலையின் உடை  அதே சிசிடிவியில் தெரிந்த ஒரு பாதி முகத்தை ஒத்திருந்த இந்த சிலையின் முகம்  இரண்டும் அவன் உச்சந்தலையில் ஆணி அடித்தாற்ப்போல் ஏதோ உண்மையை அவனுக்கு உணர்த்தியது. ஆனால் அந்த உண்மை எது என தெரியாமல் உடைந்து போனான்.

முதலில் தாலி !

இப்போது இந்த சிலை !

இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ! என மனம் ஒரு வித பயம் கொள்ள, “உன் சம்பந்தப்பட்ட அத்தனையும் பொக்கிஷம் மாதிரி பாதுகாத்துட்டு இருக்கேன்  ஆனால் நீ என்னை விட்டு போய்ட்டேல்ல ! என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சே நீ போனீயா? தெரியாமல் போனீயா” இதயம் முழுதும் வலி  வலி  வலி  மட்டுமே! உள்ளங்கைகளுக்குள் அந்த சிலையை அடக்கியபடி இறுக்கி கொண்டது அவன் கைகள்.

எத்தனை நேரங்கள் ஓடியதோ, அவன் மனம் ஒரு கட்டத்தில் அவனது தேடலை தூண்டிவிட, கையில் இருந்த சிலையை பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு,

கடையில் கிடைத்த பிரிண்ட்அவுட் ஷீட்டில் இருந்த ப்ருந்தாவின் முகவரியை எடுத்து கொண்டு அவள் வீட்டினை தேடி சென்றான். இருவரும் சென்னை என்றாலும் அரை மணி நேர பயணத்தின் பின், சில ஆட்டோகாரர்களின் வழிகாட்டுதலில் ப்ருந்தாவின் வீட்டின் முன் நின்றான்.

கிரில் கேட்டை மெதுவாய் தட்ட, சர்ரென எதுவோ இழுபடும் சப்தம். அந்தபுறம் செக்யூரிட்டி போல் யாரோ ஒருவருடைய முகம் மட்டுமே தெரிந்தது.

“கூடவே  யார் வேணும்” என்ற கராரான குரல் வேறு,

“பி பிருந் தா” என இழுக்க.

“நீங்க யாரு?”

“ப்ருந்தாவோட பிஃரண்ட், அவளை பார்க்கனும்! இருக்காளா!” முகத்தை திருத்தி சரளமாய் இவன் பேச

“பிஃரண்டு ன்னு சொல்றீங்க, அவங்க வேற ஊரில் இருக்குறது கூடவா தெரியாது?” இவர்கள் நாகப்பட்டினம் சென்றபின் வீட்டை பார்த்துக்கொள்ளவென புதிதாய் வந்த செக்யூரிட்டி, அவனை அடையாளம் தெரியாமல், கேள்விகளால் அவனை துளைக்க

“நானும் கொஞ்சம் வேலை விசயமா வெளியூரில் இருந்தேன், போன் நம்பர், அட்ரெஸ் எதுவும் அவள் கொடுக்கலை!” தடுமாற்றம் கொள்ளாமல் வந்தது இவன் பேச்சு.

“நீங்க சொல்றதெல்லாம் நம்புற மாதிரி இல்லை” சந்தேகம் அப்படியே வெளிப்பட்டது அவனிடம்.

“உஃப் ” மூச்சுக்காற்றை பலமாய் இழுத்து தள்ளியவன் “வேணும்னா நீங்க ப்ருந்தா கிட்டேயே கேட்டு பாருங்க,என் பேரை கேட்ட அப்பறமும் அவளுக்கு என்னை பார்க்க இஷ்டம் இல்லைன்னா, நான் இப்படியே திரும்பி போய்டுறேன்”  என இவன் உறுதியாய் சொல்ல

“அவளை பார்த்தே ஆகனும், ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம், ப்ளீஸ்” என

“ப்ருந்தாம்மாகிட்டலாம் பேச முடியாது, வேணும்னா ஐயா கிட்ட பேசி பார்க்குறேன்”

“ஐயா ? வா !”

“ப்ருந்தாம்மாவோட அப்பா!” என அவன் நெஞ்சில் பாலை வார்க்க

லேண்ட் லைனில் தொடர்பு கொண்டு, “சார், ப்ருந்தாம்மா பிரண்டாம், பார்க்கனுங்றாங்க? நாகபட்டினம் அட்ரெஸ் கேட்குறாங்க கொடுக்கவா?”

“ப்ருந்தா பிரண்டா?”

“யாரு? பேர் என்ன?” அங்கு வேலாயுதம் கேட்க

”சார்  உங்க பேரு என்ன?” செக்யூரிட்டி கேட்கும் முன்  அவரிடம் இருந்து லேண்ட் லைனை பிடுங்கி

 “நான் பிர்லா  பிர்லா போஸ் !” என்ற குரல் போன் வழியே வேலாயுதத்தை அடைய, சர்வமும் அடங்கி போனது அவருக்கு.

“ப்ருந்தா எங்கே?”  கேள்வியாய் கேட்டவன், அந்த பக்கம் பதிலில்லாமல் போக

“ப் ப்ரு ந்ந்தா எங்க!” ஆத்திரமாய் கத்தினான்.

அந்த புறமிருந்து ‘பீப்’ என்ற ஒலி பிர்லாவின் காதினை வந்து அடைய  ஒரு நொடி வெறித்தவன் அடுத்த நொடி போனை அந்த செக்யூரிட்டியிடமே கொடுத்துவிட்டு  தன் வீட்டிற்கு வந்தான்

மீண்டும் சிறிது நேரம் கழித்து வேலாயுதம் செக்யூரிட்டிக்கு போன் செய்தார்.

“அந்த பையன்போய்ட்டானா?” என எடுத்ததுமே கேட்க

“ம் போயாச்சு சார்” என

“மறுபடியும் வந்தான்னா, எனக்கு நீ போனும் பண்ணாதே, இங்கே நாகப்பட்டினம் அட்ரெஸூம் கொடுக்காத” என வைத்துவிட்டார்.

இங்கே வீட்டிற்கு விரைந்து வந்தவன்

“அம் ம்ம்ம்ம…மா…” வீட்டிற்குள் இவன் நுழையும் முன்பு அவன் குரல் வீட்டையே கிடுகிடுக்க வைக்க

பதறி அடித்துக்கொண்டு வந்தார் தேவி, “என்னடா! என்னாச்சு! ஏன் இப்படி சத்தமா கத்திகிட்டே வர!”

“ப்ருந்தா எங்க இருக்கா?” என்ற ஒரே கேள்வியில் விரைத்து விட்டது அவர் உடல்

“உங்கட்ட தான் கேட்குறேன்? ப்ருந்தா எங்கே!”

“யார் யாரு? ப்ருந்தா?”

“ஓ  ப்ருந்தா யாருன்னு தெரியாதுல்ல!” “ம்”  அவரிடமிருந்து சற்றே நகர்ந்து கிச்சனுக்குள் சென்றான்.

வரும் போது அவன் கையில் கத்தி இருக்க,அரண்டே போனார் தேவி

“இப்போ சொல்லுங்க, ப்ருந்தா எங்கே?” பளபளப்பாய் மின்னிய கத்தி அவன் மணிக்கட்டில் பதிந்தது சற்று நெருக்கமாய்

“பிர்லா” “என்னடா பண்ற” “டேய்” என இவர் கத்திக்கொண்டிருக்கும் போதே, ஒரு கோடு போட்டான் அவன் மணிகட்டிற்கு சற்று மேலே!

பதில் சொல்லாமல் போனால் அடுத்து கோடு மணிகட்டில் தான் என கத்தியை சிறிது கீழே நகர்த்தி

‘இப்போ சொல்லுங்க’ பார்வை மட்டுமே தேவியிடம் கேள்வி கேட்க, இறுக்கி பூட்டிக்கொண்டான் அவன் இதழ்களை.

“நாகப்பட்டினத்தில் இருக்கா!” என அட்ரெஸை கடகடவென ஒப்புவிக்க

“க்ளிங்’ என சத்தத்துடன் கத்தி ஒரு புறமாய் வந்து விழ, தேவி அப்படியே அமர்ந்துவிட்டார்.

அடுத்த இரண்டொரு நொடிகளில் காரில் ஏறியிருந்தான். இரண்டு மூன்று மணி நேர பயணம், ஒரு சொட்டு நீர் கூட அவனுள் இறங்கவில்லை. அவன் தொண்டைக்குள்ளும் சரி, கண்களில் இருந்தும் சரி.

கூகுள் மேப் அவனுக்கு வழி காட்ட, நாகப்பட்டினம் வேலாயுதத்தின் வீட்டின் முன் நின்றிருந்தான்.

கேட்டை திறந்து விறு விறுவென உள்ளே சென்றான். அங்கிருந்த காரை செக்யூரிட்டி துடைத்து கொண்டிருக்க இவனை கவனிக்க வில்லை.

இவன் வாசல்படி ஏறி உள்ளே நுழைய, இவனை பார்த்ததும் அதிர்வில் எழுந்து நின்றேவிட்டார் வேலாயுதம்.

நான்கு எட்டுகளில் அவரிடம் வந்தான்.

“ப்ருந்தா  எங்கே!” வேங்கையாய் இவன் கர்ஜித்ததில் செண்பா சமையலறையை விட்டு வெளிவர “பிர்லாவை பார்த்து, அவர் இதழ்கள் புன்னகைக்கு திரும்ப, “மாப்பிள்ளை” தனக்குள் சொல்லியபடி அவரிடம் நெருங்க

“ப்ருந்தா எங்கேன்னு கேட்டேன்!” விட்டால் அடித்து விடுவான் போல் அப்படி ஒரு ஆத்திரம் அவன் பார்வையிலும் வார்த்தையிலும்!. அதில் செண்பாவும் பின் தங்கி விட

“அங்கே… மேல இரண்டாவது ரூம்!” பின்னால் இருந்து வந்த செண்பாவின் குரலில் திரும்பி இரு ஆண்களின் முகத்திலும் இரு வேறு பாவங்கள் தாண்டவமாடியது!

ஒரு அழுத்தமான பார்வையை கொடுத்துவிட்டு, மூன்று மூன்று படிகளாய் கடந்து மாடியில் இருந்த இரண்டாவது அறை கதவை இவன் திறந்தான்,

தாழ்பாள் எதுவும் போடப்படாத  அறைகதவு இவன் திறந்த வேகத்திற்கு படார் என்ற சத்தத்துடன் சுவற்றில் மோதி மீண்டும் இவன் முகம் நோக்கி வர, அவனது வலுவான கரம் அதை தடுத்து நிறுத்தியது. அறைக்குள் பாய்ந்த அவன் கண்களில் விழுந்தாள், கட்டிலில் இருந்து பதறி அடித்து அமர்ந்த ப்ருந்தா.

நிஜமாகவே சிலமணி நேரங்களுக்கு முன்பு, தான் பார்த்த  அந்த சின்ன சிலைக்கு உயிர் பெற்று தன் முன் அமர்ந்திருப்பது போல் ஒரு தோற்றம்.

சிசிடிவியில் தான் கண்ட அந்த பாதி பிறை நிலவு, முழு நிலவாய் மாறி இருப்பது போல் ஒரு பிரம்மை.

இதை அவன் மனம் கிரகித்து கொண்டிருக்க, அவன் செவிகளோ “சின்ன பையனை ஏமாத்தாதீங்க டாடீ” என்ற சாட்சாத் அவனுடைய குரலையே கிரகிக்க

அதிர்ந்து போனான் பிர்லா. அவனுடைய குரலை அவனே கிரகிக்க முடியுமா? குரல் வந்த திசையை நோக்கி பார்க்க, அன்று விமல் கொண்டு வந்து கொடுத்த அதே வீடியோ, டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு நொடிகள் டிவியை வெறித்தவன், ப்ருந்தாவை உக்கராமாய் வெறித்தான்.

டிவியில் பிர்லாவின் நிழல், அறை வாசலில் பிர்லாவின் நிஜம், நம்பமுடியாமல் இமை தட்டி விழித்தாள் ப்ருந்தா.

கனவிற்கும் நனவிற்கும் இடையிலான அவள் பார்வை ஒருபுறம் அவனை ஏதோ செய்தது என்றால், ஏற்கனவே இருந்த ஆத்திரம் உக்கிரமாய் ஒரு புறம் வெடித்துக்கிளம்ப, ஆத்திரத்துடன் அவள் அருகே சென்றான்.

தன் முன்னே ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தவனை அண்ணாந்து இவள் பார்க்க, அவள் கண்ணீர் கடகடவென கீழ் இறங்கி ஓட

அடுத்து உருண்டோடிய துளி நீரை தன் மார்பில் ஏந்தி கொண்டான் பிர்லா, தன் இறுகிய அணைப்பினால்

சுய சிந்தனைளும்

கடந்த கால நினைவுகளும்

களவு போன பிறகும்

காலன் கண்ணாமூச்சி ஆடியபிறகும்

உன்னை மட்டுமே தேடிவந்து

காதல் கொள்ளுமடி இந்த இதயம் !

நீ எங்கே ! என் மரணமும் அங்கே .!

Advertisement