Advertisement

“உள்ளே வாங்க” என தலையசைக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

“ஐஞ்சு பிரான்சில் இருந்தும் டீடெய்ல்ஸை எடுத்தாச்சா சார்?” என கேட்டபடி தான் உள்ளே வந்தார்.

“எடுத்தாச்சு, உட்காருங்க” என தனக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர சொன்னார்.

அதன் பின் லேப்டாப்பை ஓபன் செய்து, அதில் ஒரு பென்டிரைவை போட்டார்.

பிர்லாவிற்கு எல்லாமே ஸ்லோ மோஷனில் நடப்பது போலவே தோற்றம். ‘இவரோட டக் இத்தனை தானா’ மனதினுள் ஓடினாலும் தன் முன் இருந்த லேப்டாப்பிலேயே பதிந்து கிடந்தது இவன் விழிகள்.

எடுத்து பார்த்ததில் கிட்டதட்ட இருநூற்றி ஐம்பது பில்கள் இவன் சொன்ன அந்த இரு தேதிகளுகளில் இவர் சேகரித்த சேல்ஸ் பில்கள் வரிசை கட்டி நின்றது

பார்த்த பிர்லாவிற்கு “இதென்ன இத்தனை இருக்கு” என அதிர்ச்சியானான்.

“நீங்க சொன்ன இரண்டு தேதிக்கும் இடையில் கிட்டதட்ட ஐஞ்சு மாசம் இருக்கே  இந்த ஐஞ்சு மாசமும் தாலி வாங்கினவங்களோட லிஸ்ட் இது” என இவர் சாதாரணமாய் சொன்னார்.

ஆனாலும் மனம் தளரவில்லை பிர்லாவிற்கு, “எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் வெயிட் பண்றேன்,தேடி சொல்லுங்க” என

இவரோ அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாரே தவிர வேலையை ஆரம்பிக்கவே இல்லை.

“மறுபடியும் என்னாச்சு!” என இவன் நிதானம் இழக்க

“உங்க முழு பேர் தெரியாது, போஸ் க்ரூப்னு மட்டும் தெரியும்!” பின்னே எதை வைத்து தேட என தயங்க

லேசாய் சிரித்தபடி “பிர்லா போஸ்” என

“ஓகே சார், நான் தேடி சொல்றேன் நீங்க வேணா” இழுக்க

“அதான் சொன்னேனே, எவ்வளவு நேரம் ஆனாலும்  நான் கேட்டது கிடைக்காமல் இங்க இருந்து போக மாட்டேன்” என

மேனேஜர் இவர் வேலையை தொடங்கிவிட, வரிசை கட்டி நின்றிருந்த ஒவ்வொரு பில்லையும்  பார்த்து, கண்கள் வலிக்கவே தொடங்கிவிட்டது மேனேஜருக்கு. ஆனால் இவன் இரையை தேடும் புலியாய் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

ஒவ்வொன்றிலும் திருமணமான ஜோடிகளின் பெயர்களில் பிர்லா போஸ் என்ற பெயரை தேடியது அவரின் விழிகள். கிட்டதட்ட இரண்டு மணி்நேரங்களும் ஓடி மறைய, அவர்களின் தேடலுக்கு விடை கிடைத்தது.

இவர் பிர்லாவை அழுத்தமாய் பார்க்க, இவனோ சாசராய் விரிந்த கண்களோடு இவன் விழிகள் பளிச் சீன மின்னியது.

இன்னும் நன்றாக லேப்டாப் ஸ்கீரினை அவன் புறமாய் திருப்பி, வார்த்தைகள் அற்ற பதிலை கொடுத்தார் அந்த மேனேஜர்.

தன் புறம் நன்றாக திரும்பிய ஸ்கீரினில்

மணமகள் பெயர் : V. ப்ருந்தா

மணமகன் பெயர்: C. பிர்லா போஸ்

என்ற இருவருடைய பெயர்களிலும் ப்ருந்தாவின் பெயரில் நீண்ட நேரமாய் விழுந்து கிடந்தது அவன் விழிகள்.

பார்த்தவனுக்கு, அந்த பெயர்  காற்றில் ஊடுருவும் ஒளியாய் அவன் உயிரினுள் ஊடுருவி சென்றது.’ப்ருந்தா’ ஒரு முறை அல்ல பலமுறை சொல்லி பார்த்துக்கொண்டது அவன் இதழ்கள் சிறு புன்னகையோடு!

அதுவரை தேடிய விழிகளுக்கு விமோச்சனம் கிடைக்க அப்படியே கண்களை முடியபடி சேரில் பின்னுக்கு சாய்ந்து அமர்ந்தான்.

அதே புன்னகையோடு மூடிய கண்களோடு “எனக்கு இது ஒரு பிரிண்ட் அவுட் வேணும்!” என கேட்க  இரண்டொரு நொடிகளில் “சார்  பிரிண்ட் அவுட்” என அவன் கைகளில் வைக்க

அதன் பின் தான் கண்களை திறந்து அமர்ந்தான். அவனது மகிழ்ச்சியை பிரதிபலித்த முகம் மேனேஜருக்கும் அது அப்பட்டமாய் புரிய “இது என்ன வகையான காதலோ!” என புருவம் உச்சிக்கு ஏற

அதை எடுத்து கொண்டு எழுந்து நின்றவன் “இந்த பில் உங்களுக்கு ஒரு காபி எடுத்து வச்சுக்கோங்க” என நிதானமாய் சொல்ல

“எ எனக்கு எதுக்கு இது?” என

“இதில் தான் தாலி வாங்கின தேதி, டைம், பிரான்ச் பேருனு எல்லாமே இருக்கே!”

“ஆமா  இருக்கு  ஆனா இதை வச்சு நான் என்ன செய்ய?” என

கையில் இருந்த அந்த பிரிண்ட் அவுட்டை காட்டி “எனக்கு இது  மட்டும் போதாதே. சிசிடிவி புட்டேஜூம் வேணுமே” என இவன் சொல்ல

‘அம்மாடி’ என வாய் பிளந்தவர் “ஹான் அதெல்லாம் எடுக்க முடியாது!” என

“தேதி நேரம் முதற்கொண்டு எல்லாமே இருக்குல்ல! அப்பறமும் ஏன் தயங்குறீங்க?”  என்பது போல் இவன் கேட்டு முடிக்கும் போது, தன் பாக்கெட்டில் இருந்த சிறு பண கட்டு, அவன் முன் வைக்கபட

“சார் அவங்க நகை வாங்கினது அண்ணாநகர் பிரான்ச், அங்கே போய் தான் எடுக்க முடியும், ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க!” என பணத்தை எடுத்து தனது டேபிள் ட்ராவில் இவர் போட்டுகொள்ள தயங்கவில்லை.

“இல்லை இரண்டு நாளெல்லாம் என்னால் வெயிட் பண்ண முடியாது! தவிர நீங்க போய் சிசிடிவி எடுக்கவும் வேண்டாம்” என இவன் தடுத்தான்.

‘இவன் என்ன சொல்றான் ஒரு இளவும் புரியமாட்டுது’ என இவர் தலை சொறிந்தார்.

“இதில் குழம்ப ஒன்னுமே இல்லை” லேசாய் சிரித்தவன் “நீங்க அண்ணாநகர் பிரான்சக்கு கால் பண்ணி கன்வே பண்ணிடுங்க, நான் இப்போ அங்க தான் போக போறேன். எனக்கு நீங்க இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க போதும்“ வாய் பேசிக்கொண்டிருக்க, கால்களோ நடையை எட்டிப்போட்டு கொண்டிருந்தது.

“இவன் என்ன கேட்டகிரின்னே தெரிலையே!” என அவர் மனம் யோசித்தாலும் கற்றையாய் வந்த பணத்திற்காக, அண்ணா நகர் கிளைக்கு போன் செய்தார்.

அடுத்து ஒரு மணிநேரத்தில் அண்ணாநகர் பிரான்ஜில் இருந்தான்.

இதோ அவன் கண் முன் மானிட்டரில்,  ப்ருந்தா தாலி வாங்கிய தேதிக்கான  சிசிடிவி  ரெக்காடிங்க்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.

ஆம், அன்று பிர்லா, ப்ருந்தாவை “எனக்கு நீ யார்? எனக்கு நீ யாரோ தான்!” என மீண்டும் மீண்டும் அவளை சீண்டிதை அவளால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. அவன் காலையே சுற்றி வந்த தன்னை அதே காலால் எட்டி உதைப்பது போன்றதொரு தோற்றம் அவள் கண் முன் உலாவந்தது.   ‘வெகு நாட்களாய் பழிகிவிட்டு, ‘எனக்கு யாரோ தான் நீ’ இந்த வார்த்தையை  இவன் எப்படி சொல்லலாம் ஒரு பக்கம் வலி எழுந்தது அவளுள்.

மானம் தான் பெரிது, இப்படி இவனிடம் பேச்சு வாங்கி தான் பிர்லாவை மணக்க வேண்டுமா? என ஒரு புறம் ஒதுங்கி போக நினைத்தாலும், மறுபுறம் “எப்போவுமே சந்தோஷமா இருக்குற என்னை இப்படி சீரியஸா புலம்ப வச்ச உன்னை அப்படியே விட்டுட்டு போனால் நான் ப்ருந்தா கிடையாதே” என குதற்கமாய் யோசித்தது அவள் மூளை.

அதன் விளைவு “நீ என்ன எனக்கு தாலி கட்றது  நான் கட்றேண்டா உனக்கு தாலி, அப்பறம் எப்படி “எனக்கு நீ யாரோ தான்” ன்னு சொல்றேன்னு பார்க்குறேன். என விபரீதமாய் முடிவெடுத்தாள்.

அதன்படி அன்றே கிளம்பி கண்ணில் தட்டுபட்ட நகைகடைக்கு சென்றாள். அவள் சென்ற இடம் அண்ணாநகரில் இருக்கும் ஜிஆர்டி.

வீட்டில் தனக்கென வாங்கி கொடுத்திருந்த வைரகம்மலை போட்டு அதற்கு ஈடான மதிப்பிறக்கு தாலியை எடுத்து கொண்டாள். அதன் பின் தான்

மறுநாளே விடியற்காலையில் பிர்லாவின் வீட்டிற்கு வந்ததும், அவன் சுதாரிக்கும் முன் அவன் கழுத்தில் தாலியை அணிவித்ததும் அறிந்த்து தானே.

இதெல்லாம் நடந்தது அக்டோபர் மாத இறுதியில் தான். அதன் பின் அதற்கும் சரிபட்டுவராத பிர்லாவை, ‘தற்கொலை’ என்ற பெயரில் ஏமாற்றி திருமணம் செய்தது.

இதெல்லாம் பிர்லாவிற்கு நியாபகம் இல்லாத போதும், அந்த நியாபகத்தை இவனே தேடி வர செய்தது அவனது காதல்.

காலை பத்தரை மணியில் இருந்து ரெக்கார்ட் ஓட ஆரம்பித்தது.

“கொஞ்சம் பார்வேர்டு, பண்ணுங்க ஜீ, தாலி வாங்கினதா பனிரெண்டு மணிக்கு மேல தான் பில்லில் டைம் காட்டுது!” என்ற இவன் அவசரம் பார்த்து சற்று அதிகமாய் ஓடவிட்டான், அந்த சிசிடிவி புட்டேஜ் காட்டுபவன்.

“ஜீ ஸ்டாப் பண்ணுங்க, ஜீ  பில் போட்ட  டைம்  பனிரெண்டறை! இப்போ ஓடிட்டு இருக்குறது பனிரெண்டே  முக்கால்.கொஞ்சம் பேக்வேர்டு வாங்க” என

இவன் ஆன மட்டும் முறைத்தான்.

பதிலுக்கு இவன் திரும்பி பார்த்த பார்வையில் “லவ்க்கு ஹெல்ப் பண்ணுங்க பாஸ்” என கெஞ்சி கொஞ்சி பனிரெண்டு இருபதில் இருந்து ஓட விட்டான்.

அந்த சில நொடிகளுக்குள்ளாகவே, ஆறு ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம், காதலர்கள் போல இருவர், வயதான தம்பதியினர் இருவர் என சிசிடிவி ரெக்கார்டிங்க் ஒன்று மாற்றி ஒன்றை காட்டிக்கொண்டிருந்தது.

 ஆனால்  அதற்குள்ளாகவே பிர்லாவின் நகக் கண்கள்  அவனின் பற்களின் உபயத்தில் காணாமல் போய் கொண்டு இருந்தது.

பனிரெண்டறை ஆக சில நொடிகள் இருக்கும் போது லாங்க் ஸ்கர்ட், டைட் டிசர்ட், கழுத்தை மறைத்த கரு நிற ஸ்கார்ப், அதையும் தாண்டி வழிந்த சுருள் முடியுடன்  ஒரு பெண் உருவம் சில நொடிகளின் பின் ஏதோ ஒன்றை வாங்கியபடி திரும்பி சென்றது.

ஏனோ அவளை காணும் போது இதயதுடிப்பு சற்று அதிகமாகி அவனை மூச்சுக்காற்றுக்காய் திண்டாட வைத்தது. அவள் அந்த கணிணி திரையை விட்டு நகர்ந்து சென்றும் பார்வை இன்னமும் அந்த கம்ப்யூட்டர் திரையை விட்டு அகல மறுத்தது.

இவன் நிலை சற்று அசாதாரணமாய் தெரிய “சார்  சார்.!” என அவன் தோள் தொட  இவன் மீதும் படிந்தது பிர்ரலாவின் விழிகள்,சில நொடிகள்.

“இந்த பொண்ணு தானா?” கேள்வி கேட்கும் ஆர்வம் அவனுக்குள் இருந்தாலும் சரியாய் பனிரெண்டு முப்பது என காட்டிய நேரமும், பிர்லாவின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பிரசன்னமாகிய  பெண்ணும் அந்த சந்தேகத்தை உறுதி படுத்தியது.

பிர்லாவின் உடலிற்குள் எழும் உணர்வுகளை பிரித்தறியவே முடியவில்லை. ஆனாலும் சிறு ஏமாற்றம் அவனுள் எழுதையும் தடுக்கமுடியவில்லை.

ஆம் அவள் முகம் அவனுக்கு தெரியவில்லை! கவுண்டரின் மேல் இருந்து கீழாக காட்டப்பட்டு இருந்த கேமராவில் அவள் உருவம் தெரிந்த அளவிற்கு   சற்று தெளிவில்லாமல் தான் இருந்தது அவள் முகம். ஆனாலும் அவன் மனதில் ஆழ பதிந்தது அந்த அறை குறையான முகமும், அவனே அறியாமல்

ஆனால் அந்த உடை! எங்கோ தனக்கு பரிச்சயமான ஓர் உடை! என் மனதில் எங்கோ சிம்மாசனமிட்டு அமர்ந்த உடை! ஏதோ ஒரு நிலையில் தன் கவனம் மொத்தத்தையும் ஈர்த்த உடை!

எங்கே ! எங்கே…! எங்கே…! என யோசித்து யோசித்து, தலை பாரமாக, கூடவே அவன் மனதும் பாரமேறியது. ஒரு கட்டத்தில் தலை வின் வின் என வலியெடுக்க ஆரம்பித்தது. கண் மூடி நிதானித்தான் ஒரு சில நொடிகள். வலி சிறிது மட்டுபடவே கண் திறந்தான்.

கையில் இருந்த பிரிண்ட்அவுட் ஷீட், கண் முன் இருந்த சிசிடிவி புட்டேஜ் இரண்டையும் பார்த்தவனுக்குள், அடுத்த ஆக வேண்டிய வேலைகள் அணிவகுத்து நின்றிருந்தது.

வேகமாய் எழுந்தவன், அந்த வீடியோ கிளிப்பிங்கை மட்டும் எடுத்து ஒரு பென்டிரைவில் போட்டு வாங்கிக் கொண்டான்.

கம்பெனி செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்துவிட்டான்! தன் தேடலை ஆரம்பிக்க வேண்டிய இடம் தன் வீடு தான்,  அதுவும் தன் அறையில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என அவன் மனம் உறுதியாய் கூறியது. அதற்கு முக்கிய காரணம் இப்போது சிசிடிவியில் பார்த்த பெண்ணின் உடையை பிரதிபலிக்கும் ஒரு சிலை, ஆம் சிலை வடிவத்தில்  எங்கோ பார்த்திருக்கிறோம்! எப்போதோ பார்த்திருக்கிறோம்! எங்கே? என யோசித்தவனுக்குள் ,அவனது அறையே நியாபகம் வந்தது. ஒரு வேளை தனது அறையிலேயே அந்த சிலையை பார்த்திருப்போமா? என நினைத்தபடி தன் அறைக்குள் நுழைந்தான்.

Advertisement