Advertisement

சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்’ ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம்  தான் மிக முக்கியமானவர்கள். அதனுடைய ஆதாரங்கள் இந்த பென்டிரைவ் மட்டுமே.

பிர்லாவின் நினைவிழப்பு, ஸ்ரீநிவாஸின் பயத்தை போக்கி இருக்க, சந்திராவின் பிளாக் மணி  புழங்கும் இந்த முக்கிய இரு ஆசாமிகளை பிடித்து

“பிர்லாவிற்கு தெரிஞ்சா பிரச்சனை தான்?”

“அதுதான் தெரியாதே!””

“எப்படி?”

 “பிர்லா எல்லாத்தையும் மறந்துட்டான், பணம் வாங்கின விசயம் , அதோட லீகல் எவிடன்ஸ் எல்லாத்தையும் அவன் மறந்திருப்பான், ஏன் அந்த எவிடன்ஸையும் எங்கே வச்சான்றதை மறந்திருப்பான்”

“ஒரு வேளை சந்திரா கிட்ட அந்த எவிடன்ஸ் இருந்தா ?”

“இருக்க சான்ஸே இல்லை, அது மட்டும் கன்பார்மா தெரியும் தவிர எவிடன்ஸ் எதுவும் இல்லாமல் சந்திராவோ, பிர்லாவோ கண்டிப்பா உன் மேல் ஆக்‌ஷன் எடுக்க மாட்டாங்க, ஒரே டார்கெட் ஆனால் இரண்டு பெனிபிட் ” என உசிப்பேற்றி விட்டிருக்க, இது தான் சரியான நேரமென

 “பணத்தை திரும்ப கொடுத்தாயிற்று, இதோ அதற்கான எலக்ட்ரானிக் டாகுமெண்ட், என போலியானதொரு எவிடன்ஸை சந்திராவிடம் காட்ட “டூப்லிகேட் என யாராலும் சொல்ல முடியாத அளவு பக்காவா ரெடி பண்ணி இருக்காங்னுங்களே!” என அதிர்ந்து போனார்.

பிர்லாவிடம் இதை சொன்ன பொழுது, “ஒரு வேளை நான் வாங்கியிருப்பேனாப்பா?” என

“பினான்ஸில் இன்வால்வ் ஆகுறது என்னவோ, அது உன்னோட முடிவு, ஆனால் என்கிட்ட சொல்லாமலோ கேட்காமலோ, எதுவும் நீ செஞ்சது  கிடையாது” என

“அப்போ இது யாரோட வேலையா இருக்கும்?”

“வேற யாரு எல்லாம் அந்த சீனிவாஸ் குரூப்பா தான் இருப்பாங்க?” என்றவர் அவர்களது குள்ளநரித்தனங்கள் அத்தனையையும் கூறி அவர்கள் நமது கம்பெனியில் தான் வேலை பார்ப்பது வரை எடுத்து சொல்ல, தலை சுற்றிப்போனது.

அதன் பிறகு தான் இந்த தேடுதல் வேட்டை! வேட்டை வெற்றி பெற  இரு பென்டிரைவ்களையும் தன் கைக்கு மாற்றியபடி

“நீங்க இருங்க, நான் பார்த்துகிறேன் ” என்றவன், ராம் டெய்ரீஸ், கிருஷ்ணா எண்டர்பிரைஸ் இருவருக்கும் போன் செய்து தன்னுடைய கம்பெனிக்கு வரவழைத்தான்.

“தொலைஞ்சு போன பென்டிரைவ் கிடைச்சிடுச்சு, உங்களோட ஈ டாகுமெண்டில், நீங்க அமௌண்ட் செட்டில் பண்ணுனதுக்கான எந்த ஒரு எவிடன்ஸூம் இல்லை” கையோடு கொண்டு வந்த லேப்டாப்பில் போட்டு காட்டி, “நீங்களே செக் பண்ணிக்கங்க” என அவர்கள் இருவர் புறமும் திருப்பி வைத்தான்.

பார்த்த இருவருக்கும் பகீரென இருந்தது.

ஏனெனில் பணம் செட்டில் செய்யும் பட்சத்தில் இருவரிடமும் இருக்கும் ஈ டாகுமெண்டில்  மற்றவர் எலக்ட்ரானிக் சிக்னேச்சர் வைப்பது தான் முறை.

பிர்லாவினது எவிடன்ஸில் ராம் டெய்ரீஸ் மற்றும் கிருஷ்ணா என்டர் பிரைஸின் கையெழுத்தும் இல்லை சீலும் இல்லை. பார்த்த ராமிற்கு நா வறண்டு போனது என்றால்

 “உங்களுக்கு சரியா ஒரு வாரம் டைம் தரேன், அதுக்குள்ள, நீங்க வாங்கின ஒன்றரை கோடியும் வரனும்  அண்ட் நீங்க வாங்கின ஒன்னேகால் கோடியும் வந்தாகனும” என  இருவரிடமும் கிடுக்கு பிடி போட்ட பிர்லாவை பார்த்து உடல் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. ஒன்றரை கோடி, ஒன்னேகால்  சும்மாவா???

ஏன் தான் ஸ்ரீநிவாஸின் பேச்சை கேட்டோமோ? என இருவருமே நொந்து கொண்டிருக்கும் போதே !

பிளாக் மணி விவகாரத்தில் போலீஸ் உதவியை நாடினால் இருதரப்பினரும் பாதிக்கபடுவது உறுதி, ஏன் வழக்கு பதிவு கூட செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் வேறு யார் உதவியை கேட்கலாம்? கேட்க வாய்ப்பிருக்கிறதா? என இருக்கும்  போதே மனம் குறுக்காய் யோசிக்க

அதை புரிந்தவன் போல் “ முறைப்படி போலீஸ்கிட்டலாம் போக மாட்டேன், ஆனால் ரவுடி கிட்டே போவேன்,   ஒரு நாள் தாங்குவ! இரண்டு நாள் தாங்குவ ! ஆனால் ஒவ்வொரு நாளும் தாங்க மாட்ட தானே!” என இருவரிடமும் கூறி

“நீங்க கிளம்பலாம்” என மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பிக்க

ஆடிப்போன இருவரும் சென்ற இடம் ஸ்ரீநிவாஸின் வீடு!

———–

வீட்டிற்கு வரும் வழியிலேயே தாய் தந்தை இருவருக்கும் நடந்ததை கூறிவிட்டு, அவன் அடைந்த இடம், அவனது அறை !

அவன் விட்டு சென்ற அதே இடத்தில் கிடந்தது அந்த தாலி. லிங்க வடிவ பென்டெண்ட் ஒரு புறமும் தாலி மறுபுறமும் கிடக்க, அதை எடுக்கும் முன் மண்டியிட்டது அவன் கால்கள். குழந்தையென  ஏந்தியது கைகள்.

‘யாருடையது இது ?

“நான் யாருக்காவது  வாங்கி வச்சு இருந்ததா?

அப்படி வாங்கி இருந்தா நிச்சயம் இது அந்த பொண்ணு கழுத்தில் தானே இருக்க வேண்டும்

அப்படியில்லாமல் இது என்னோட கழுத்தில் இருக்க காரணம் என்ன?

ஒரு பொண்ணுக்காக வாங்கின தாலியை ஒரு ஆண் அவனோட கழுத்தில் போட்டுப்பானா?

அப்படியென்றால் அந்த பொண்ணு ஒருவேளை உயிரோட இல்லையோ! நினைக்கும் போதே நெஞ்சம் பதறியதை கண் கூடாய் மனம் உணர!

இல்லை, இல்லை! ஒரு வேளை  காதல் தோல்வியா கூட இருக்கலாமே! என அவன் மனமே சமாதானம் செய்தது.

கூடவே! அந்த பெண்ணிடம் வசமாய் ஏமாந்து விட்டேனா ! இல்லை நான் ஏமாற்றி விட்டேனா! அதான் இப்படி மறைத்து வைத்திருக்கிறேனா !

காதல் செய்யாதவனுக்கு ஒரே கவலை, காதல் செய்பவனுக்கு ஆயிரம் கவலை என்பது போல் ,இத்தனை நாளாய் அமைதியாய் கிடந்த அவன் மனம் குழம்பி போனது தான் மிச்சம்.

ஆனால் இத்தனை யோசித்த அவன் மனம், அவள் தனக்கு தாலி கட்டிஇருப்பாள் என ஒரு சதவீதம் கூட யோசிக்கிவில்லை! ஒருவேளை இதெல்லாம் தெரியவந்தால்!

இப்படியே நேரம் கடந்து கொண்டிருந்தது.

பார்வதிதேவி,சந்திரா என இருவரும் அமர்ந்து ஏதோ பைல்களை பிரட்டிக்கொண்டிருந்தனர்.

“ப்பா  ஒன்னு கேட்கனும்,எனக்கு தேவையானது உண்மையான பதில் மட்டும் தான்” பிடிவாதமான அந்த பேச்சில் இருவருமே அவனிடம் கவனமாக

“அப்பா நான் யாரையாவது லவ் பண்ணினேனா  இல்லை ஏதாவது லவ் பெயிலியரா?”

திருமணம் முடிந்திருந்தால் நிச்சயம் தன் மனைவியை மறைத்து வைத்திருக்க முடியாது என்ற எண்ணத்தில் காதலை மட்டுமே முன் நிறுத்தி கேட்க

சந்திராவின் கையில் இருந்த டீ கப் கீழே உடைந்து சிதறியது.

ஆனால் பார்வதிதேவியோ “லவ்வா ! உனக்கா ! உனக்கு பொண்ணுங்கனாலே ஆகாது பிர்லா  நாங்கள் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தால் நீ பிடி கொடுத்தால் தானே ” அவர் கையில் இருந்த பைலை நிதானமாக அருகில் வைத்தபடி பேச

சந்திராவின் அப்பட்டமான அதிர்ச்சி, பார்வதிதேவியின் படு நிதானம் இரண்டையும் உள் வாங்கியவன். “நான் உண்மையான பதிலை கேட்டேன்” குரலில் சற்று அழுத்தம் இருந்தது.

“உன்கிட்ட பொய் சொல்ல எனக்கு எந்த காரணமும் இல்லை!” சற்றும் குறையாத அழுத்தத்துடன் பார்வதிதேவி பேச, ஊமையாய் இருந்தது என்னவோ சந்திரா மட்டும் தான்.

‘இனி இவர்களிடம் பேசி பயணில்லை’ என தன் அறைக்கே திரும்பினான்.

அடுத்தடுத்தாய் நாட்கள் நகர, இவனது நினைவுகள் தான் சிறிதும் நகர்ந்ததாய் தெரியவில்லை.

விழித்திருக்கும் போதும்,விழி மூடும் போதும்,மூடிய விழிகளுள் கனவாய், கனவிற்குள் நனவாய் அந்த பொன் தாலி ஒன்றே ஆக்ரமித்திருந்தது.

நான்காம் நாள் பொறுமை பறந்தது,

“ஒரு தாலியை வைத்து, எப்படி கண்டுபிடிப்பது?’ இவன் கொடுத்த குடைச்சலில் அவனது மனமே ஒரு தீர்வை கொடுத்தது.

‘ட்ரை பண்ணி தான் பார்ப்போமே !’ என அந்த தாலியை எடுத்து கொண்டு பிரபல நகை கடைக்கு சென்றான்.

“வெல்கம் சார்  என்ன பார்க்கனும்?” என என்ட்ரன்ஸில் பொம்மை போல் இருந்த பெண் ஒருத்தி கேட்க

“இந்த தாலி எந்த கடையில் செய்ததுனு சொல்ல முடியுமா !”

அவள் யோசனையை பார்த்து, “அமௌண்ட் எவ்வளவு வேணாலும் வாங்கிக்கங்க!” என சொல்ல

“அதோ அவர் கிட்ட கேளுங்க” என வேறு ஒருவரிம் அனுப்பி வைத்தாள்.

“தாலியின் பின்புறம் இருந்த குறிப்பிட்ட கோட் வேர்டை பார்த்து “GRT சார்” என அந்த கண்டுபிடிப்பை சிறிதளவு பணமாக்கிகொண்டார்.

அங்கிருந்து சிறிதுதூரம் தள்ளியிருந்த GRT கடைக்கு விரைந்தான்.

“இது எங்க கடை நகை தான், எதுக்கு இதை கேட்குறீங்க?”

“இதை யார் வாங்கினாங்கன்னு தெரியனும்”

“சார் இது எங்க கடை நகை தான், ஆனால் எந்த பிரான்ச்னு தெரியாதே? இங்கேயே ஐஞ்சு பிராஞ்ச் இருக்கு சார்  தவிர பில் இல்லாமல் நாங்க எப்படி கண்டுபிடிக்கிறது”

“பில் இருந்தா நான் ஏன் இங்க வரப்போறேன்” என இவனும் சிறிது கோபம் ஏற கேட்டான்.

“சார் நீங்க கோபப்படறதில் எதுவும் நியாமில்லை, அன்றாடம் வித்துட்டு இருக்கிற பொருள் இது  ஏதாவது ரொம்ப டிபரண்டான டிசைனா இருந்தா கூட தேடி கண்டுபிடிக்கலாம், இந்த தாலி மாடல் இன்னைக்கு கூட நாழு பீஸ் சேல்ஸ் ஆகி இருக்கு, அதுவும் பில் எதுவும் போடாமலே இரண்டு பேர் வாங்கிட்டு போய் இருக்காங்க, இதில் இந்த தாலி வாங்குன ஆளை கண்டுபிடிக்கிறது ரொம்பவும் கஷ்டம்” இவன் கோபம் பார்த்து அவரும் சற்று காட்டமாய் பேசிவிட

பொறுமை பறந்தது அவனுக்கு!

சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்

அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்

 

தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை

தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே

Advertisement