Advertisement

இன்னும் அவனது மோன நிலை உடையவில்லை, இவரே போனை எடுத்துப்பார்த்தார் அழைப்பது யாரென? ”ஸ்ரீதர்” என ஒளிர்ந்த பெயரை பார்த்து

“உன் ஃபிரண்ட் ஸ்ரீதர் தாண்டா  பேசுடா!” என போனை அவனிடம் கொடுத்து திசை திருப்ப

“ஸ்ரீதரா? இது யா…ரு?” சற்றே புருவங்கள் மேலேறியது. சந்திரா நினைத்தபடியே அவன் எண்ணம் திசை திரும்பியது.

“உன்னோட குளோஸ் ஃப்ரண்டுடா” “பேசுறியா!” அவனிடம் நீட்டினார் போனை

ஆனால் பிர்லாவின் முகத்திலோ ‘என்ன பேசுவது?  எப்படி பேசுவது?’ என அத்தனை கலக்கத்தை காட்டியது அவன் கண்கள். அதை பார்த்தவர், இப்போது பிர்லா பேசுவது சரியில்லை, பேச சொன்னாலும் பேச மாட்டான் என அறிந்து,போனை ஆன் செய்தார்.

“ஸ்ரீதர் நான் அங்கிள் பேசுறேன்டா !”

“என்ன அங்கிள் அவன் போனில் நீங்க பேசுறீங்க? பிர்லா எங்கே அங்கிள்?”

“அவன் இங்க தான் இருக்கான், நீ எங்கே போன இத்தனை நாளா?”

“இரண்டு மாசத்தில் ஆடிட்டிங் வருதில்லையா அங்கிள், பிளாக் மணியில் கொஞ்சம் வொயிட்டா மாத்துறதில் பிசியாகிட்டேன்! உங்களுக்கென்ன பிர்லா எல்லாத்தையும் பார்த்துப்பான், இங்கே நான் ஒத்தையா கிடந்து அல்லாடுறேனே  அங்க எல்லாம் முடிஞ்சதா அங்கிள்”

“சரியா போச்சு போ  இங்க ஆரம்பிக்கவே இல்லைடா “

“ஏன் அங்கிள்? ஏன் முடியலை? ஆடிட்டிங் வந்தாலே பிர்லா சுருசுருப்பாயிடுவானே! சொல்லப்போனால் இப்போ இந்த டேட்டில் எல்லாத்தையும் முடிச்சிருப்பானே!”

“அவனே முடியுற ஸ்டேஜ்க்கு போய்ட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கான்  இதில் நீ வேற ஏண்டா!”

“ஏன் அங்கிள் என்னாச்சு பிர்லாவுக்கு”

“அதுவா” என  ஆரம்பித்தவர்,பிர்லாவை விட்டு சற்று நகர்ந்து அறையை விட்டு வெளியே வந்தார்

கடந்து இருபது நாட்களாக பிர்லா மற்றும் ப்ருந்தாவிற்கு  நடந்த அத்தனை சம்பவங்களையும் விளக்க விளக்க, கேட்டுகெண்டிருந்த ஸ்ரீதருக்கோ மூச்சடைத்து போனது.

“இவ்ளோ நடந்திருக்கு, ஏன் அங்கிள் எனக்கு சொல்லவேயில்லை” ஆதங்கமாய் ஸ்ரீதர் கேட்க

“நடந்து முடிஞ்சதை பேசாதே ஸ்ரீதர், என்கிட்ட அதற்கான பதில் சத்தியமா இல்லை” என

“இப்போ பிர்லா எப்படி இருக்கான்?” இவரிடம் கோபப்பட்டு என்ன செய்ய, என்பது போல் ஸ்ரீதர் கேட்க

“இருக்கான், ஆனால் பழைய பிர்லாவா அவன் இல்லை  அவனை திரும்ப மீட்டெடுக்க  அவனுக்கு நீ வேணும்  ஸ்ரீதர், கொஞ்ச நாள் உன் பிசினஸ் எல்லாத்தையும் உன் அண்ணன் கிட்ட கொடுத்துட்டு வந்து சேரு.  எனக்காக செய்ய வேண்டாம், உன் பிரண்டுக்காக  வந்து சேரு” என ஆழ்ந்த குரலில் சொல்ல,

“ப்ருந்தா எங்கே அங்கிள்?”

“பிர்லா பிட்ஸை நேரில் பார்த்து மனசளவில்  டிஸ்டர்ப் ஆகி, பிர்லா உயிருக்கு ஆபத்துனு நினைச்சு பயந்துட்டா, சைக்கியார்டிஸ்ட்கிட்ட ட்ரீட் மெண்ட் எடுக்கனும்னு அவங்க பேரண்ட்ஸ் கூட்டிட்டு போய்ட்டாங்க”

“அதுக்கப்புறம் அவ பேரண்ட்ஸ் கிட்ட நீங்க பேசலையா?”

“இல்லைடா அவங்க யாரையும் கான்டாக்ட் பண்ண முடியல!”

“அப்போ பிர்லாக்கு உண்மையை சொல்லையா”

“தேவி  வேணாம்னு சொல்லிட்டாடா, தவிர பிட்ஸ் பத்தி சொல்றதா இருந்தா கெங்கா, அப்புறம் வரம்பு மீறி போன என்னோட செயல், அதுமூலமா அவன் டிஸ்டர்ப் ஆனது, எல்லாத்தையும் சொல்லி மறுபடியும் அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் சொல்லலை.  செத்து பிழைச்சு மறுபடியும் ஒரு குழந்தை மாதிரி எங்க கையில் கிடைச்சிருக்கான், இனியாவது அவன் சந்தோஷமா இருக்கனும்டா ”

ப்ருந்தா பிர்லாவிற்கு தன் காதலையே வரமாய் கொடுத்து அவன் வாழ்வில் ஒளிச்சுரடாய் இருந்திருக்க, பதிலுக்கு இவனோ, சாபத்தை அல்லவா கொடுத்து அந்த தேவதையை திருப்பி அனுப்பி வைத்துவிட்டான் இது தான் விதி செய்யும் சதியா? இருவரையும் நினைத்து, அவர்களின் காதலை நினைத்து  ஸ்ரீதரின் மனமும் வேதனையில் ஆழ்ந்தது.

“நான் என்ன செய்யனும் அங்கிள் சொல்லுங்க” என கேட்க

“அவனோட பழக்கவழக்கங்களில் நிறைய தடுமாற்றம் இருக்கு ஸ்ரீதர் பழைய மாதிரி யோகா, டான்ஸ் இதோட வெளி பழக்கத்தையும் அவனோட மனசுல பதிய வைக்கனும், நீ அவன் கூட இருந்தால் நல்லா இருக்கும்டா”

“அவனோட பிகேவியர் கூடவா மறந்துட்டான்?”

“எல்லாத்தையும் மறந்துட்டான்டா! ஆனா கத்து கொடுத்தால் ஈசியா கேட்ச் பண்ணிக்கிறான், யாருடைய உதவியும் இல்லாமல் பேசறான், பேப்பர் படிக்கிறான், புக்ஸ் ரீட் பண்றான்”

“அப்பறம் ஏன் இந்த மறதி ?”

“அவன் மூளையோட செல்ஸ்  டேமேஜ் ஆகி இருக்கு, ஸ்ரீதர், சரி பண்றது கஷ்டம்னு டாக்டர் சொல்றார். அவன் கோமாவில் இருந்து வந்ததே பெரிய விசயம், நீ முதலில் வீட்டுக்கு கிளம்பி வா, அப்பறமா விளா வாரியா எல்லாத்தையும் சொல்றேன்” என போனை வைக்க போனவர்

“ஸ்ரீதர் அப்பறம் ஒரு முக்கியமான விசயம் எந்த காரணம் கொண்டும் ப்ருந்தாவை அவனுக்கு நியாபகப்படுத்த வேண்டாம்” என முக்கியமான செய்தியை சொல்ல

“ம்ஹ்” என இதழ்கள் ஒரு ஓரமாய் வளைந்தபடி “அவங்க காதலை பார்த்த பிறகும் எப்படி அங்கிள் அவங்க இரண்டுபேரையும் பிரிக்க மனசு வந்தது.” ஆதங்கமாய் இவன் கேட்க

“பிரிக்கனும்னு தலையெழுத்தா டா எனக்கு! பட்டாம் பூச்சியாய் பிர்லாவையே சுத்திட்டு இருந்தவளை மயக்க ஊசி போட்டு தூங்க வைக்கிற அளவுக்கு என்னால் பார்க்க முடியலை,  இரண்டு பேருமே மனசளவில் காயப்பட்டு இருக்காங்க ஸ்ரீதர்,  இரண்டு பேரும் ரெக்கவர் ஆகி வரட்டும், இப்போதைக்கு நான் சொன்னதை மட்டும் செய்டா” என  இவரும் ஆதங்கமாய் பேச, ஸ்ரீதர் யாரை நோவது என தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிர்லாவின் வீட்டிற்கு புறப்பட்டான்.

சந்திரா ஒரு வழியாய் ஸ்ரீதரிடம் பேசி முடித்து வர, இன்னமும் அப்படியே தான் அமர்ந்திருந்தான் பிர்லா

“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி உக்கார்ந்திருக்க?” அந்த பாடல் கொடுத்த பாதிப்பு என புரிய அவன் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினார்.

“அந்த  அந்த  பாட்டு என்ன மூவி ப்பா?” வெகு கூர்மையாய் கேட்டது அவன் விழிகள் மட்டுமில்லை அவன் குரலும் சேர்ந்து தான்.சந்திராவிற்கே பெருத்த ஆச்சர்யம்  இதுவரை தயங்கி தயங்கி பேசியவனிடத்தில் சற்று தெளிவு தெரிய

“ரிங் டோன் வச்சது நீ  என்கிட்ட கேட்டால் எனக்கெப்படிடா தெரியும்?” என சந்திரா அவனிடம் மேலும் பேச்சு வளர்த்தார்.

“ஓ ” இவன் பேச்சை வளர்க்காமல் வாயை மூடிக்கொண்டான்.

——————

“ஏய், பக்கி  இரண்டு மாசம் கழிச்சு நான் வந்திருக்கேனே, பாசமா அக்கறையா ஏதாவது கேட்குறியா ! தம்பி டயர்டா இருப்பானே அவனுக்கு ஏதாவது கொடுக்கனும்னு தோணுதா  பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி  உக்கார்ந்திருக்க ” கையில் இருந்து சிறு லெதர் பேக்கை ப்ருந்தாவின் மேலேயே போட்டுவிட்டு எதில் இந்த சோபாவில் அமர்ந்தான் விமல்.

“டேய், மரியாதையா எழுந்து போய்டு,என்னோட நிலைமை தெரியாமல் விளையாடாதே” அந்த பேக்கை ஒரு ஓரமாய் போட்டபடி இவள் சிடுசிடுத்தாள்.

பழைய ப்ருந்தா என்றால் இவன் போட்ட சிறு லெதர் பேக்கிற்கு பதில் லெதர் பெல்ட் தான் பேசி இருக்கும். ஆனால் இந்த ப்ருந்தாவே வார்த்தைகளால் கூட பேச மறுத்தாள்

ஆனால் அப்படியே விட்டால் அது விமலேஷ் இல்லையே !

“மாமாவோட நிலைமை என்னனு தெரியாமல் தான், நீ இப்படி இருக்கன்னு எனக்கு தெரியும் ” சிப்ஸ் பாக்கெட் ஒன்றை முழுங்கியபடி பேச

“எ  என்ன ?” அதிர்வாய் அவனை பார்த்தவள்

 “விமல்,  அவருக்கு என்னாச்சுன்னு உனக்கு தெரியுமா ?”

“நீ அவரை பார்த்தியா ? பேசினியா ?” என இவள் கேட்டு கொண்டே இருக்க

இவனோ சிப்ஸை காலி செய்வது தான் அவன் வாழ்வின் லட்சியம் என்பது போல் தின்று கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவள் சிப்ஸ் பாக்கெட்டை பிடுங்கி ஒரு மூலையில் எறிந்து “இங்கே நான் உயிர் போற வலியில் கேட்டுகிட்டு இருக்கேன், உனக்கு சிப்ஸா முக்கியம் ” ஆத்திரமாய் கேட்க

அவளையே பார்த்தவன் “மாமாவை பார்த்தேன் பேசினேன் ”

பனியில் நனைந்த மலராய் முகம் வைரமாய் ஜொலிக்க “அவர் அவர் என்னை பத்தி  என்ன பத்தி எதுவும் கேட்டாங்களா ?” சந்தோஷத்தில் திக்கு முக்காடியதில் வார்த்தைகள் தகிடதோம் போட்டது அவளுக்கு

இவனோ அவளையே முறைத்தபடி இருக்க

“டேய், குண்டா  உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்றா” அவனை உலுக்க

“எனக்கு என் சிப்ஸ் வேணும்” அதன் பிறகு தான் மற்றதெல்லாம் என்பது போல் பார்வையை எதிர்புறம் திருப்பி, கைகளை இறுக்கமாய் கட்டிக்கொண்டு அவளை தவிர்த்தான்.

“சி சிப்ஸா…” “அய்யோ அது எந்த மூலையில் கிடக்குனு தெரியலையே!”  தனக்குள்ளேயே முனுமுனுத்து சிப்ஸை நோக்கி பாய்ந்தோடினாள் ப்ருந்தா

ஆனால் அதுவே திசைக்கொன்றாய் பறந்து கிடந்தது,பாக்கெட்டில் சொச்சமே மிஞ்ச “இதை வச்சு அட்ஜெட்ஸ்ட் பண்ணிக்கோடா ! ப்ளீஸ்” என கெஞ்ச

“எனக்கு முழு சிப்ஸ் பாக்கெட் வேணும்  நீ வாங்கிட்டு வந்து அதுக்கப்பறம் என்கிட்ட பேசு !” சோபாவில் அப்படியே சாய்ந்து கொண்டான்.

விமலை பற்றி தெரிந்தவளாயிற்றே ப்ருந்தா , சிப்ஸ் கொடுத்தால் மட்டுமே பிர்லாவை பற்றி அறிய முடியும் என யோசித்தவள் வேக வேகமாய் வீட்டின் வெளியே சென்றாள்.

சுற்றி முற்றி பார்த்தவளுக்கு எந்த கடையும்  தென்படவில்லை. மீண்டும் வீட்டினுள் பறந்து வந்தாள்

“டாடி  டாடி  டாடிஈஈஈ” என சிறு குழந்தையாய் கூப்பாடு போட்டாள். என்னவோ ஏதோ வென விழுந்தடித்து கொண்டு வந்தார் வேலாயுதம், கூடவே செண்பாவும்.

இவர் மாடியில் இருந்து இறங்கும் முன் பாதிப்படியை கடந்திருந்தாள் ப்ருந்தா

Advertisement