Advertisement

 “நான் டாக்டர் முரளி, ஞாபகம் இருக்கா ?”

 “கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் !” என முரளி அவனை தூண்டினார்.

முரளி கேட்டதும்  நெற்றி தானாகவே சுருங்க, அவனது இடது கை நெற்றிப்பொட்டை அழுத்தமாய் வருட

வெகு நேரம் கழித்து “நான் உங்…களை பார்….த்த மாதிரி நி யாபகம் இல்லை  நிச்சயமா . இல்லை ” தன் நினைவுப்பெட்டகம் அழிந்து போன கதை தெரியாமல் இவன் வெகு அழுத்தமாய் சொல்ல

‘தெரியவில்லை’ அவன் உடல் மொழியே கூறியது

“ஓகே  இவங்களாவது யாருனு தெரியுதா பிர்லா ?” அவன் குடும்பத்தாரை காட்டினார்.

சற்றும் யோசிக்காமல் “ம்ஹீம்…” தலையாட்டி மறுத்து, அவர்கள் தலையில் இடியை இறக்கினான்.

 பிர்லாவிற்கு நியாபகங்களை திரும்ப பெறுவதில் பிரச்சனை என முரளி உணர  அவருக்கும் சிறு அதிர்ச்சி்தான். அதை மறைத்து

“இட்ஸ் ஓகே ஸட்ரெயின் பண்ணிக்க வேண்டாம்  ரெஸ்ட் எடுங்க” என அவனிடம் கூறியவர், மூளைக்கு தனியாய் ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட்டே அகன்றார்.

“பிர்லா நான் அம்மாடா ,

இதோ இவர் உன் அப்பா,

அவங்க உன் தாத்தா பாட்டி டா ” என பார்வதிதேவி

“நான் உன் சதாடா  மறந்திட்டியா !” அவன் தலையை வருடிய சதானந்ம்

“ஞாபகப்படுத்தி பாருய்யா ” என மரகதாம்பாள்  என அனைவரும் முரளி சென்றபின் அவனை சூழ்ந்து கொள்ள

வலிப்பு நோய் வந்த போதெல்லாம் அவன் நினைவுகளை இழந்த காட்சிகள் மட்டும் சந்திராவின் நினைவில் ஊஞ்சல் கட்டி ஆட  எதுவுமே பேசாமல் பிர்லாவின் கை பிடித்து அமர்ந்தார்.

தன்னை வருடி பேசிக்கொண்டிருக்கும் தன் சொந்தங்களை அடையாளம் காண முடியாமலும், அவர்களின் பேச்சு பாதி புரிந்தும் புரியாமலும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தான்.

அவர் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமலும் திண்டாடிக்கொண்டிருந்தான்

பிர்லா பற்றி பேச வேண்டும் என சந்திராவை மட்டுமே வர சொல்லி இருந்தார் முரளி.

“அவனுக்கு என்ன சார் ஆச்சு  பெத்த எங்களையே அடையாளம் தெரியலைன்றான் !” பீதியுடன் முரளியிடம் கேட்டுகொண்டிருந்தனர் சந்திரா

“பிர்லாவுக்கு வந்திருக்கிறது அம்னீசியா !”

“என்ன ? அம்னீசியாவா ?”

“எஸ்  அல்ரெடி அவனுக்கு அம்னீசியா ப்ராப்ளம் இருக்கிறது தெரிஞ்ச விசயம் தானே !”  கேள்வி எழுப்பியவர், சந்திராவின் குழப்பமான முகத்தை பார்த்து

“ அவனுக்கு பிட்ஸ் வந்த  நேரத்திலெல்லாம் , நடந்த எல்லாவற்றையும் மறந்திருக்கான்  அண்ட் அதுக்கப்பறம் அது அவனோட நியாபகத்துக்கு வரவே இல்லை இன்னைக்கு வரை, இப்போ வந்திருப்பதும் அதே ப்ராளம் தான். அதே வகையான பிட்ஸ் தான் ஆனால் நைட் முழுதும் அன்கான்சியஸா இருந்திருக்கான்

தென்  எம் ஆர் ஐ ரிப்போர்ட் படி பார்த்தால் அவனோட  டெம்போரல் சிஸ்டம் அபக்ட் ஆகி இருக்கு ” தெளிவாய் அவர் சொல்ல

“இதனால எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கா சார்?” சந்திரா கேட்க

“கண்டிப்பா வாய்ப்பிருக்கு, தன்னொட ஞாபக சக்தியை இழக்க நேரிடலாம் ! குறுகிய கால ஞாபக இழப்பு ஏற்படலாம், தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்களை மறந்துவிடலாம், அவர்களை அடையாளம் காண இயலாமல் சிரமப்படலாம். அவங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர இயலாமல் இருக்கலாம்,உரையாடல்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம்,பதற்றம் மற்றும் பயம் எதிலும் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படலாம்,வழக்கமான வேலைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படலாம் ” முரளி பேச பேச அவனை பெற்றவர்களுக்கு மூச்சு வாங்கியது.

“இதில் மேக்ஸிமம் ப்ராளப்ளம் அவனோட ஒத்து போகுது  நாம பேசுறதை,  அவனால் ஐடன்ட்டிபை பண்ணமுடியலை, கேட்கிற கேள்விக்கு சரியா பதில் சொல்ல மாட்றான்,முக்கியமாக ரொம்ப தடுமாற்றமும் இருக்கு  அதைவிட முக்கியம் பெர்சனாலிட்டி ஐடன்ட்டிபிகேஷன் சுத்தமா அவனுக்கு வேலை செய்யாத காரணத்தால் தான் பெற்ற உங்களையும் மறந்து உட்கார்ந்திருக்கான்”

 “ஆனால் உங்களை டாக்டர்னு தெரியுது, ஆனால் பேர் மட்டும் எப்படி மறக்கும் ?”

“டெம்போரல் லோப் தான் நினைவுகள் எல்லாத்தையும் சேர்த்து வைக்கிற இடம்,  ஒரு மனிதனுக்கு அனிச்சை செயல் என்பது தானா உணர்ந்து கத்துகிறது, அது காதுவழியாவோ, இல்லை கண்கள் வழியாவோ, இல்லை ஒரு தொடு உணர்ச்சி மூலமாவோ  வருகிற ஒரு சென்சரி இன்பர்மேஷனை வாங்கி அதை ஒரு மீனிங்புல் யூனிட்ஸா ஸ்டோர் பண்ணி வச்சிகிறது தான் டெம்போரல் லோப்புடைய வேலை

பார்த்தவுடனே ஐடன்டிபை பண்றது, கேள்வி கேட்டவுடனே பதில் சொல்றது. இதெல்லாமே டெம்போரல் லோப் ஹெல்ப் இல்லாமல் பண்றது ரொம்ப கஷ்டம். இதில் தான் அவனோட பிரச்சனை ஆரம்பமாகுது.

பார் எக்ஸாம்பிள் ஸ்டெத்தஸ்கோப்பையும் என்னையும் வச்சு டாக்டர்னு முடிவு பண்றது. இது கெரக்டா ரெக்ககனைஸ் பண்ண முடிஞ்சவனால நமக்கு முன்னாடி நிக்கிற மெர்ஸ்னாலிட்டஸ் யாருன்றதை  ரெக்ககனைஸ் பண்ண முடியலை.

டெம்போரல் லோப்பில் இருக்கிற ஒரு சில செல்கள் டேமேஜ் ஆனதினால் வந்த பிராப்ளம் இது.

இதுக்கு பேரு டிரான்சியன்ட் எபிலப்டிக் அம்னீஸியா (Transient Epileptic Amnesia)  பிட்ஸ் வந்தப்பறமோ இல்லை வருவதற்கு முன்னாடியோ முப்பது நிமிடத்தில் இருந்து அறுபது நிமிடங்கள் வரை நடந்ததை மறந்திடுவாங்க  ஆனால் பிர்லா அன்கான்சியஸா இருந்த நேரத்தை பொறுத்து அவனோட டெம்போரல் செல்ஸ் டேமேஜ் ஆகி,  எல்லாரையும் மறக்குற அளவில் கொண்டு வந்து நிறுத்திருக்கு,ஒரு சில செல் டேமேஜ் ஆகாத காரணத்தினால அவனோட அனிச்சை செயலை உயிர்ப்போட வச்சிருக்கு, அதனால் தான் கேட்ட கேள்விக்கு தடுமாற்றத்தோடவாவது பதில் சொல்ல முடிஞ்சது ”

 “இந்த பிரச்சனையை சரி பண்ண முடியுமா  அதாவது ஆப்பரேஷன் ஏதாவது ” என சந்திரா இழுக்க

“சரியாகிடும்னு ஹன்ட்ரட் பர்சண்ட்  சொல்ல முடியாது, தவிர ஆப்பரேஷன் சான்சே இல்லை ! இப்போதைக்கு இந்த பிட்ஸ் மாத்திரையை மட்டும் கொடுங்க அது முதலில் கண்ட்ரோல் ஆனால் தான் மத்த ட்ரீட் மெண்ட் ஆரம்பிக்க முடியும், அப்பறம் உங்க வீட்டு ஆளுங்ககிட்ட எதை சொல்லனும் சொல்ல கூடாதுன்றதை நீங்க டிசைட் பண்ணிக்கங்க

பிர்லா, வளர்ந்த குழந்தையாய் உங்க கைக்கு மறுபடியும் கிடைச்சிருக்கான், கிட்டதட்ட கண்ணாடி மாதிரி இங்க இருந்து என்ன வருதோ  அதே தான் அவன்கிட்ட ரிஃப்லக்ட் ஆகும்  டேக் கேர் ஆப் ஹிம், மேக்ஸிமம் தனியா விட வேண்டாம் “ முரளி முடித்துவிட

அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்வதிதேவியிடம் ஒப்புவித்துவிட்டார், இனி பிர்லாவை முழுவதும் கையாளப்போவது பார்வதிதேவி தானே என்ற எண்ணத்தில் கூடவே தன் பெற்றோரிடத்தினிலும் பகிர்ந்து கொண்டார்.

கேட்ட பார்வதிதேவிக்கு இதோ பிர்லா கண்விழித்ததில் இருந்து இப்போது வரை இரண்டு நாட்களாய் பட்ட துயரம் போதாதா !  கிட்டதட்ட முப்பது வருட வாழ்க்கையை தன் மகன் இழந்துவிட்டான் என தெரியும் போது எந்த பெற்றவர்கள் தான் பொறுத்து கொள்வார்கள்,இவர்கள் பொறுப்பதற்கு  யாருக்கும் யாராலும் ஆறுதல் சொல்லமுடியவில்லை.

பெண்களின் அழுகுரலும் சந்திராவின் அழுத்தமான மனநிலையும் சதானந்த்திற்கு கோபத்தை வரவழைக்க

“கோமா ஸ்டேஜ்னு நினைச்சதுக்கு இது எவ்வளவோ தேவலை சந்திரா  இனியாவது அவனை ஒழுங்கா கவனிச்சு,உடம்பை தேத்துவியா  இல்லை அழுது அழுதே அனுப்பி வைக்க போறியா ?” என சதானந்ம் தன் காயங்களை மறைத்து வீட்டிற்கு பெரியவராய் பேச

வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தனர் அத்தனை பேரும் மரகதாம்பாள் உட்பட…

முரளி சொன்ன மருத்துவரிடம் செல்லாமல், வேலாயுதம் அவரின்  கம்பெனி பிரான்ச் இருந்த வேறொரு இடத்திற்கே  கொண்டு சென்றார் ப்ருந்தாவை

 “நாம வேற எங்கையோ போற மாதிரி இருக்கு ?” என ரத்தினம் கேட்க.

“ஒரே ஊரில் இருந்தாலும் பிரச்சனை தான் செண்பா எனக்கு என்னோட பொண்ணு பழைய மாதிரி வேணும் !”

“அதுக்காக, வேற ஊருக்கு கண்டிப்பா மாறியே ஆகனுமா ?”

“ப்ருந்தாவை பற்றிய எதுவும் அவங்ளுக்கு தெரிய கூடாது  அதற்க்காகவாவது மாறி தான் ஆகனும்.”

“எவங்களுக்கு தெரியகூடாது ? “

“மாப்பிள்ளையோட குடும்பத்துக்கு ”

“இதெல்லாம் தப்புங்க  இது நாம மட்டுமே முடிவு பண்ண வேண்டிய விசயம் இல்லை, ப்ருந்தா தான் முடிவெடுக்கனும் ”

“அவளை முடிவெடுக்கவிட்டதால தான் இங்க வந்து நிக்கிறா போதும் அவ முடிவெடுத்ததெல்லாம்  நீ இதில் தலையிடாத அவ்வளவு தான் சொல்வேன் ”

“ப்ருந்தா நம்ப மாப்பிள்ளையை எவ்வளவு லவ் பண்றான்னு தெரிஞ்சும் இப்படி பண்றது நியாமே இல்லிங்க, அதுவும் மாப்பிள்ளையோட சந்தோஷமா வாழ்ந்ததை பார்த்த பிறகும் இப்படி பேசறது ரொம்ப தப்புங்க.”

“தப்பாவே இருந்துட்டு போகட்டும்  என் பொண்ணு சந்தோஷமா வாழனும்னு தான் கல்யாணம் பண்ணி வச்சேன், இப்படி பையித்தியமா ஆகுறதுக்கு இல்லை.”

“பைத்தியம்னு நீங்களே சொல்லிட்டீங்களா ! ரொம்ப நல்லது”

“நெருப்புனு சொன்னால் வாய் வெந்திடாது, பிர்லாகிட்ட திரும்பவும் போனால் என் பொண்ணு கண்டிப்பா பைத்தியமா தான் ஆயிடுவா  பைத்திக்காரி மாதிரி காதலிச்சா, பைத்தியக்காரி மாதிரி சாகற நிலைக்கு போய் கல்யாணம் பண்ணினா  பைத்தியகாரி மாதிரி பிர்லா பிர்லான்னு சுத்தி சுத்தி  இன்னைக்கு பைத்தியகாரியா தான் போய்ட்டாள் என் பொண்ணு ” ஆக்ரோஷமாய் கத்தியவர் “என் பொண்ணு பழைய நிலைக்கு திரும்பலைன்னாலும் பரவாயில்லை, இந்த நிலைக்கு திரும்ப அனுப்ப நான் அனுமதிக்க மாட்டேன், என் பேச்சை மீறி ஏதாவது பண்ணின

நான் உயிரோடவே இருக்க மாட்டேன் ”

செண்பாவின் சுவாசம் ஒரு நொடி தடைபட்டது, வேலாயுதத்தின் மிரட்டலில்…

Advertisement