Advertisement

பகுதி 20

கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ?

அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன் இருக்கக் கூடும் !  என சுற்றுபுற சூழல் உறைக்காதளவு கெங்காவின் நினைவுகள் ஆக்ரமிக்க, அதன் நினைவிலேயே தவமிருந்தார்.

பார்வதிதேவி கம்பெனி நிர்வாகத்தை விடுத்து,கணவனுக்காக நேரத்தை செலவிட துவங்கினார்இந்த நான்கு நாட்களாய். வாழ்க்கை கற்று கொடுக்காத பாடத்தை கெங்கா கற்று கொடுத்திருந்தார். இல்லையில்லை கெங்காவின் அகால மரணம் கற்று கொடுத்து இருந்தது.

இறந்து நான்கு நாட்கள் ஆனது கூட நினைவில் நில்லாமல் ஏதேதோ நினைவுகளுடன் அன்று காலை  வெறுமையான மனதுடன் எழுந்தார் பார்வதிதேவி.

அயர்ந்து உறங்கும் கணவனை கண்டு ஏதோ ஒரு வித உணர்வு மேலோங்கியது. என்னவென பிரித்தறிய முடியவில்லை. அமைதியாய் கிளம்பி கீழே வந்தார் பார்வதிதேவி, கெங்கா இல்லாத வாழ்வு சந்திராவிற்கு எப்படி இருக்கும் என ஊகிக்க முடியாதளவு இருந்தது.

இவர் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி எங்கெங்கோ யோசனைகள் பறந்தோட,   நெடியை துளைத்த ஆவி பறக்கும் டீ அவரின் யோசனைகளை கலைத்தது.

நிமிர்ந்து பார்க்க, “அம்மா  டீ ” என அவரின் முன் வைத்துவிட்டு சென்றார். மிடறு மிடறாய் உள் இறங்கியது.ஆனாலும் நினைவுகள்  கணவனை சுற்றியே !

டீ கப்பை எடுக்க வந்த வேலன் “அம்மா இன்னைக்கு என்ன சமைக்க ?” என கேட்க.

டீ கப்பை அவரிடம் கொடுத்தபடி காலண்டரில் பதிந்தது அவரின் பார்வை  ‘நாழு நாளாச்சா ?’ மனதினுள் எழுந்த கேள்வியில் “நாழு நாளா யாரும் சரியா சாப்பிடலை வேலா ! ஹெவியா எதுவும் சமைக்க வேண்டாம் ! ஆனால் ஹெல்த்தியா ஏதாவது பண்ணு போதும் ”என

இந்த நான்கு நாட்களாய் சரியான சாப்பாடே செய்யவில்லை  செய்ய வேண்டாம் என பார்வதிதேவி சொல்லி இருக்க, சொந்தபந்தங்கள் அகன்ற நிலையில் இன்று கேட்டு ஆக வேண்டிய நிலை…

பார்வதிதேவியிடம் ஏதோ மாற்றம் தெரிவது போல் உணர்ந்தார் வேலன், “சரிங்கம்மா” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தார்.

ஏனெனில் வேலன் சாப்பாட்டு விஷயத்தில் தலையிடவே மாட்டார்  கேட்டாலும் “எங்கிட்ட கேட்டு தான் எல்லாம் ரெடி பண்ணனும்னா உன்னை எதுக்காக வேலைக்கு சேர்த்திருக்கேன் ?” கோபமாய் எழும் வார்த்தையில்  ‘யார் யாருக்கு எதெல்லாம் பிடிக்கும் என வேலனே அறிந்து கொண்டு ஒரு சாட் போட்டு சமைத்துவிடுவார் !’ அப்படி இருக்கும் போது இந்த பார்வதிதேவியின் பதில் பெரிய ஆச்சர்யமே !

அதன் பின் மரகதாம்பாள், சதானந்ம் கடைசியாய் சந்திரா என அனைவரும் அமைதியாய் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர் ஹாலுக்கு.

ஷோபா, சேர், மாடிப்படி என கிடைத்த இடத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்தனர்.

அவர்களிடம் ஒரு பார்வை பதித்தபடி ,பார்வதிதேவி சமையலறையை எட்டி பார்க்க, வேலுனும் அரவம் உணர்ந்து வெளியே வந்தார். “டீ எடுத்துட்டு வா !” என மெதுவாய் சொல்ல

அவரவர் சுவைக்கு ஏற்ப டீ போட்டு எடுத்து வந்தார்.  அருந்தி முடித்த பின்பும் ஏதோ ஒரு அமைதி அவர்களை ஆட்கொள்ள, வெறித்திருந்த சந்திராவையே வெறித்து பார்த்திருந்தனர் மற்ற அனைவரும்.

நிமிடங்கள் கடந்து செல்ல, “அம்மா, தம்பி இன்னமும் வரலை” என வேலன் சொல்ல  வால்கிளாக்கில் பதிந்தது அவர் விழிகள்,  மணி பத்து ! நெற்றி சுருங்கியது. ஏன்  இன்னும் அவர்கள் எழவில்லை! என்ற கேள்வி எழுந்தாலும் அவர்களின் அறை வரை சென்று பார்க்க சங்கடம்.

ஒருமுறை பட்டதே போதும்  என மனம் சொல்ல,  சில நிமிடங்கள் பொறுமையாய் இருந்தார்  அதன் பின்பு மேலும் ஒரு அரைமணிநேரம் கடந்தது.

வால் கிளாக்கையும், பிர்லாவின் அறையையும் மாறி மாறி பார்த்தார்,  இத்தனை நேரம் பிர்லாவும் தூங்க மாட்டானே ! என அறிவு சொல்ல, வேலனை அழைத்து பிர்லாவை எழுப்பி வர சொன்னார்.

சென்று பத்து நிமிடங்களுக்கு பின் வந்தவர். “எவ்வளவோ கதவை தட்டி பார்த்துட்டேன் மா ! உள்ள லாக் ஆகி இருக்கு, தவிர ஒரு சத்தமும் கேட்கலை மா  நீங்க வந்து பாருங்க ” என வேலன் சற்று பதட்டத்துடன்  சொல்ல

சடாரென எழுந்த சந்திரா “நீ தட்டியும் கதவை திறக்கலையா ?” பேச்சு பேச்சாக இருக்கும் போதே, வேக வேகமாய் மாடிப்படியில் ஏறி, பிர்லாவின் அறை வாசலில் நின்றிருந்தார் சந்திரா  அடுத்து பார்வதிதேவி அதன் பின்  வேலன், கண்ணப்பன்  என  அவர் பின்னே சென்றனர்.

மரகதமும் சதானந்மும் கூட ‘இதென்ன சோதனைக்கு மேல சோதனை ?’ என்றபடி கீழ் இருக்க முடியாமல் முடிந்த மட்டும் வேகமாய் சென்றனர்.

“பிர்லா  பிர்லா  பிர்லா” என கை வலிக்க கதவை தட்டிக்கொண்டிருந்த பார்வதிதேவியிடம் “தட்டுறது வேஸ்ட்  நீ ஓரமா போய் நில்லு ” சந்திராவிற்கு  பற்களுக்கிடையில் வார்த்தைகள் பறக்க

“என்ன இரண்டு பேரும் பார்த்துட்டு இருக்கீங்க  உடைங்க கதவை” வேலனிடமும் கண்ணப்பன்விடமும் சந்திரா கோபத்தை காட்ட

கிடைத்த சுத்தியலை வைத்து லாக்கை உடைத்து திறக்க, தடதடக்கும் இதய ஓசையுடன் அறைக்குள் நுழைந்தவர்களின் நெற்றி வெற்று அறையை கண்டதில் சுருங்கியது.

பேன் ஓடும் சப்தம் மட்டும் காதில் விழ, கட்டிலில் இருவருமே இல்லை  கட்டிலை ஒட்டியிருந்த டேபிள் அலங்கோலமாய் கிடக்க  சுவற்றுக்கும் கட்டிலுக்கும் இடையில் பிர்லாவின் பாதங்கள் தென்பட “பிர்ர்ர்ர்லா” என பாய்தோடினார் சந்திரா.

கழுத்தை ஒரு மார்க்கமாய் சாய்த்தபடி பிர்லா கிடக்க, அவன் மீது ப்ருந்தா கிடந்தாள், நெற்றியில் வழிந்த இரத்தம், அவனின் மார்பை நனைத்த படி, காய்ந்து போய் அரக்கு கலரில் உறைந்து போய் இருந்தது.

சந்திராவிற்கு மூச்சடைத்து போனது என்றால் பார்த்த பார்வதிதேவிக்கு இதயமே அடைத்து போக “பிர்லா…” அடிவயிற்றியில் இருந்து எழுந்த குரல் தொண்டையை கூட தாண்டவில்லை, நிற்க இயலாத பாதங்கள் அவர் எடையை தாங்கமுடியாமல் தரையில் சாய்த்தது. “அய்யோ அம்மா…” வேலனும் கண்ணப்பன்வும் பார்வதிதேவியின் அருகில் செல்ல…

“ஏய்  இங்க வந்து தொலைங்கடா ” என சந்திரா உச்சபட்ச குரலில் கத்த  அதில் பார்வதிதேவியை விட்டு சந்திராவிடம் வந்தனர்.

அங்கிருந்த ஜன்னலை திறந்து “செக்யூயூரிட்டீடீ….” உடலில் இருந்த அத்தனை சக்தியையும் குரலில் காட்ட… அங்கிருந்தே “இ தே  இதோ வரேன் சார் ” என அவரும் குரல் கொடுத்து , வீட்டினுள் வந்தார்.

“ஆம்புலன்ஸ்க்கு போன் போடவாய்யா ” சதானந்ம் கேட்க

“அதுக்கெல்லாம் டைம் இல்லப்பா  வேலா… வா தூக்கு ” என

பிர்லாவின் மேல் கிடந்த ப்ருந்தாவை முதலில் தூக்க  செக்யூரிட்டியும் கண்ணப்பன்வும் பிர்லாவை தூக்க, வேக வேகமாய் படிகளில் இறங்கி , போர்டிகோவில் நின்றிருந்த இரண்டு கார்களிலும் இருவரையும் படுக்க வைத்து

“கண்ணப்பன் நீ ப்ருந்தாவை கூட்டி போ, நான் பிர்லாவை கூட்டி வாரேன் ” என விவேகமாய் செயல்பட, புயலாய் கிளம்பியது இரு கார்களும்  பிர்லா அவனின் பெற்றோர் ஒரு வண்டியிலும், மற்றவர்கள் ப்ருந்தாவுடனும் வந்தனர்.

காரில் செல்லும் போதே ,பார்வதிதேவி, பிர்லா ட்ரீட்மெண்ட் எடுக்கும் டாக்டர் முரளிக்கு போன் செய்தார்., முடிந்தளவு  நடந்ததை ஒன்று கூட்டி சொல்லி, அவசர சிகிச்சை இருவருக்கும் தேவை படும் என்பதையும் சுருக்கமாய் முரளியிடம் கூறியதை பார்க்கும் போது பார்வதிதேவி சமநிலைக்கு திரும்பிவிட்டதை உணர்ந்து, “ப்ருந்தாவோட அப்பாக்கும் போன் பண்ணிடு” என தன் மனைவியிடம் கூறியபடி, இன்னும் காரின் வேகத்தை அதிகப்படுத்தினார் சந்திரா.

‘யார் கண்ணு பட்டுதோ ’ தன் மடியில் கிடந்த ப்ருந்தாவின் உறைந்து போன காயத்தினை மரகதாம்பாள் வருட, சதானந்ம் அவரை தோளோடு அனைத்துக்கொண்டார்.

கார் நின்றதும் சொல்லி வைத்தார்ப்போல் இரு ஸ்ட்ரெச்சர்களை கொண்டு வர, சந்திராவிற்கு முன் பார்வதிதேவி இறங்கி கார்கதவை திறந்துவிட, இவர்கள் செவிலியர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக சென்ற ஸ்ரெச்சரக்கள் கடைசியாய் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் ஒன்றாய்  பயணப்பட்டது. இனி பிரிவு தான் நிரந்தரம் என அறியாமல் !

ஒன்றரை மணி்நேரத்திற்க்கும் மேல் ஆனது முரளி வெளியே வர  அவருடன் ப்ருந்தா மட்டும் தனியறைக்கு மாற்றப்பட பிர்லா மட்டும் ஐசியூவில் இருந்தான்.

டாக்டர் முரளியின் அறையில்

“எங்க பொண்ணு எப்படி இருக்கா !”

“எங்க பையனுக்கு ஒன்றும் ஆகலை தானே…!”

 தத்தமது மகவுகளை பற்றி அவரவர் பெற்றோர்கள் விசாரிக்க  இரு குடும்பத்திற்குண்டான பரஸ்பர ஒற்றுமை தெரிந்துவிட, ஒரு வித இதழ் சுளிவு அவரிடம்.

கூடவே பிர்லாவின் ட்ரீட்மெண்டில் முதல் ஆளாய் வந்து நிற்கும் கெங்காவின் நினைவும் சேர்ந்தே எழந்தது

Advertisement