Advertisement

இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை  இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நினைப்பில்.

அங்கே மருத்துவமணையில் எப்போதும் போல் இவனை செக் செய்துவிட்டு அவனை அனுப்பிவிட்டு இவர்கள் உள்ளே அமர்ந்து பேசக்கொண்டிருக்க, வெளியே பிர்லா அமர்ந்திருந்தான்.

அந்நேரம் சரியாய் பார்வதியும் அவனை நோக்கி வந்தார். “அதுக்குள்ள டாக்டரை பார்த்தாச்சா  என்ன பிர்லா சொன்னாங்க?” என கேட்டவர் “அப்பா எங்கடா ?” என  அடுக்கடுக்காய் கேள்வி கேட்க

தன் தாயை அங்கே எதிர்பாராமல் திடுக்கிட்டவன் எழுந்து நின்றானே ஒழிய, எந்தவொரு பதிலையும் கூறாது பெங்காவின் அறையை பதற்றத்துடன்  திரும்பி பார்த்தான்.

“ஓ  உள்ளே இருக்காறா ?” என  யாருடைய அனுமதியையும் பெறாமல் சட்டென உள்ளே நுழைய “அப்போ என் பையனோட தலைவலிக்கு நான் தான் காரணமா ?” என கேட்ட சந்த்ரபோஸ்க்கு

“ச்சே ச்சே அப்படிலாம் நினைக்காதீங்க  உங்க வொய்ப் மேலயும் தப்பிருக்கு !” என பதில் சொன்ன கெங்காவும்

“முதலேயே நீ என்னோட கண்ணில் பட்டிருக்கலாம் கெங்கா  நானும் என் பையனும் அன்புக்காக இப்படி தவிச்சிட்டு இருக்க மாட்டோம் ” புலம்பிய சந்த்ரபோஸூம்

“அதுக்காக டைம் டிராவல் எல்லாம் பண்ண முடியாது போஸ்” என சிரித்த கெங்கவும்

அவர்களின் பேச்சும், இருவருக்கும் இடையேயான உறவை அப்பட்டமாய் காட்டி கொடுத்து தேவியை கோபத்தின்  உச்சிக்கு கொண்டு சென்றது.

“கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா ! இல்ல ஹாஸ்பிடல்னு கூட பார்க்கமாட்டேன். அசிங்கப்படுத்திடுவேன்…” என்ற தேவியின் கர்ஜனையான குரலில் கெங்காவும் சந்த்ரபோஸூம்  அதிர்ந்து எழுந்தனர்.

காரில் வரும் போது பிர்லாவின் நிலையை கருத்தில் கொண்டு இருவரும் அமைதியாகவே வந்தனர். பிர்லா தன் அறைக்குள் அடைந்த அடுத்த நொடி

தேவியின் உக்ர பார்வை சந்த்ராவை அடியோடு வெறுக்க “நான் பிடிக்கலைனு தானே இன்னொருத்தியை தேடி போய் இருக்கீங்க  நான் உங்களுக்கு தேவையில்லாத போது எனக்கு நீங்களும் தேவையில்லை” எடுத்த எடுப்பில் தடித்தது வார்த்தைகள்.

“என்னோட தேவையை, அன்பை நீ உணராத போது நீயும் எனக்கு தேவையில்லை” அசராமல் சந்த்ரபோஸ் பதில் கொடுத்தார்

“என்னாச்சு தேவி மறுபடியும் என்னாச்சு? என்ன பிரச்சனை ? என மரகதாம்பாள் கேட்டபடி அங்கே வர

‘என்ன பிரச்சனை என இந்த சில நாட்களிலேயே கண்டுகொண்ட சதானந்தம் அமைதியாகவே பார்த்திருக்க.

“இன்னும் கொஞ்ச நாளில் இவருக்கு மருமகளே வந்துடுவா  இப்போ போய்  அதுவும் இந்த வயசில் ஒரு பொண்ணை சேர்த்து வச்சுக்கார் உங்க பையன் ச்சை ” என தேவி முகம் சுளிக்க

“என்னங்க  இவ என்னன்னமோ சொல்றா அதுவும் நம்ம  பையனை பத்தி  என்னனு கேளுங்க? ஏங்க தேவிகிட்டே என்னன்னு கேளுங்களேன்” என சதானந்த்தை உலுக்க

“உன்னோட கடமையை நீ சரியா செய்திருந்தால் என் பையன் ஏன் இன்னொருத்தியை தேடி போக போறான்  பிள்ளை இருக்கான் புருஷன் இருக்கான்னு உனக்கு நினைப்பு இருந்தால் தானே”  பிர்லாவை இந்த நிலைக்கு ஆக்கி விட்டாளே, என்ற நினைப்பில் சதானந்தமும் பேச

அவரின் அந்த பதிலில் மற்ற அனைவருமே ஆடிப்போயினர்

“என்ன மாமா, நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க ! அப்போ ஏற்கனவே இந்த விசயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு  தெரிஞ்சும் உங்க மகனை கண்டிக்காமல்? ஏண்டா இப்படி பண்ணின்னுன்னு உங்க மகன் சட்டையை பிடிக்காமல், என்னை குறை சொல்லிட்டு இருக்கீங்க  நீங்கலாம் என்ன அப்பா !” என தேவி கத்த

“அம்மாவா இருக்க தகுதியில்லாத நீயெல்லாம் ,எங்கப்பாவை பத்தி பேச உரிமையில்லை” சந்த்ரா பேச

“பிஸ்னஸ் பிஸ்னஸூனு அது பின்னாடியே ஓடின நீ என்னை ஒரு நாளாவது திரும்பி பார்த்தியா ? சாப்பிட்டியா தூங்கினியான்னு ஒரு வார்த்தை கேட்டியா? அதான் நான் வேற ஒரு பொண்ணு பின்னாடி போக வேண்டியதாயிடுச்சு ” என சந்த்ராவும் உண்மையை போட்டு உடைக்க  ரணகளமானது அந்த இடம்

“ஓ  நீங்க கூட தான் நான் எதிர் பார்த்த மாதரி என் கூட பார்ட்டி, கிளப் ப்ஸ்னஸூன்னு டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்றீங்க நான் என்ன இன்னொருத்தனையா தேடிட்டு போனேன் ” என பார்வதிதேவியும் வாய் விட

“அம்மாடி “ மரகதாம்பாள் அவரின் வாயில் கை வைத்தவர் தான் எடுக்கவில்லை தேவியின் அந்த கடுமையான பதிலில்

“தேவி ” என சதானந்தும் கூட பலமாய் அதிர்ந்து நின்றுவிட்டார்.

“தேடி போய்க்கோ  நான் வேணாம்னு சொல்லலையே ” என இன்னமும் ஆணவமாய் பதில் கொடுத்து தேவியையும் சேர்த்து அதிரவைத்தார் சந்த்ரா.

“டேய் அவ தான் அறிவில்லாமல் பேசுறான்னா  நீயும் கூட கூட பேசனுமா ! அவ உன் பொண்டாட்டி டா ” சதானந்தம் பேச

“பொண்டாட்டியா ? யார் இவளா? ஒரு வேளை சாப்பாடு போட்டு இருப்பாளாம்மா ?  எனக்கோ, பிர்லாவுக்கோ உடம்பு சரியில்லாத நேரம் “கண்ணப்பன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ  வேலா  அவருக்கு தேவையானதை செய்னு ஆர்டர் தான் போடுவா  என்னைக்காவது ஒருநாள்  பக்கத்தில் உக்கார்ந்து செஞ்சிருக்காளா உங்க மருமக ? நீங்களும் பார்த்துட்டு தானே இருக்கீங்க  நீங்களே சொல்லுங்க நான் பண்ணினது தப்புனு?” என சந்த்ரபோஸ் நன்றாகவே கேட்டுவிட

“அப்போ என்னோட வாழ்க்கைக்கு என் கழுத்தில் நீங்க கட்டுன தாலிக்கு என்ன பதில் ? என்ன பதில் சொல்ல்போறீங்க முடிவா ஒன்னு கேட்கிறேன் ! தாலி கட்டின நானா ! இல்லை அந்த ஸ்டெப்னி டாக்டரா? முடிவு பண்ணிக்கோங்க ” என

“உன்னோட வாழ்க்கைக்கு பதிலா? என்ன பதில் சொல்லனும்னு நீ எதிர் பார்க்கிற? பிர்லா மட்டும் தான் நம்ம வாழ்க்கை ! வேற என்ன இருக்கு நம்ம வாழ்க்கையில்?” ஆத்திரமாய் கேட்டவர்

“அப்பறம் என்ன சொன்ன தாலியா ? சும்மா தாலி கட்டினவுடனே எல்லாம் பாசம் வராது  பாசத்தை வரவழைக்கனும்  இதோ இப்போ கொஞ்சநாள் வரை உன் பின்னாடி தான் சுத்திட்டு இருந்தேன்  ஆனா நீ திரும்பி கூட பார்க்கலை  எனக்கும் ரிலாக்‌ஷேசன் வேணும்

தவிர கெங்கா நீ சொன்ன மாதிரி என்னோட ஸ்டெப்னி இல்ல  இரண்டாவது மனைவி, ஆமாம் அவளுக்கு தாலி கட்டி தான் என் மனைவி ஆக்கி இருக்கேன். ஆனால் என்னோட மனசுல அவளுக்கு தான் முதல் இடம்” என சந்த்ரபோஸ் போட்டுடைக்க

“என்னாது தாலி கட்டின மனைவியா?” இவர்களது உறவை ஏதோ மேலோட்டமாய் புரிந்து வேறு அர்த்தம் கற்பித்திருந்த, சதானந்தம் கூட முழுதாய் அதிர்ந்தார்.

“ஓ  கல்யாணமே பண்ணியாச்சா ! அப்போ இப்போவே டைவர்ஸூக்கு அப்ளை பண்ணுங்க  இத்தனை விசயம் நடந்த அப்பறமும் நீங்க தான் வேணும்னு உங்க பின்னாடியே வர நான் ஒன்னும் அவ்வளவு தரங்கெட்டு போகலை”

“என்ன டைவர்ஸா, இந்த வயசிலா? பையன் இருக்கானேமா” சதானந்தம் குரல் நடுங்க கேட்க

“உங்களுக்கு தான் அந்த கவலை எல்லாம் இருக்கு மாமா  இவருக்கு இருக்குற மாதிரி தெரியலையே “ என்றவர்

“ஒரு வேளை இந்த டைவர்ஸை இருபது வருசத்துக்கு முன்னாடியே கொடுத்திருக்கலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ.” நக்கலாய் பேச

“கொடுத்து இருந்தாலும் பிரயோஜனம் இல்லை  ஏனா கெங்காவை எனக்கு இப்போ தான் தெரியும்” நய்யாண்டியாய் சந்த்ராவும் பேச இருவருமே வார்த்தைகளாலேயே தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி்தூற்றி கொண்டனர்.

“ஆனால் இனி ப்ரயோஜனப்படும் தானே ! நான் பிர்லாவை கூட்டிட்டு எங்கம்மா வீட்டுக்கு போறேன் நீங்க அவளோட எக்கேடும் கெட்டு ஒழிங்க” என முடிக்க

“அதான் இருபது வருசமா உன் கூட கெட்டு ஒழிஞ்சாச்சே  இனி எனக்கு விடியல் தான்” என பேசியவரின் கன்னத்தில் விழுந்தது இடியென ஒரு அடி

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த மரகதாம்பாள் தான் அறைந்திருந்தார் தன் மகனை “இந்தளவு நீ அசிங்கப்படுத்தினது உன் பொண்டாட்டி தேவியை மட்டுமில்ல  உன்னை வளர்த்த என்னையும், என் வளர்ப்பையும் சேர்த்து தாண்டா இப்போ வந்து  இவள் மேல குறை சொல்ற நீ  இருபது வருசமா என்னத்தடா கிழிச்ச  இரண்டு பேரும் ஒரு ரூமில் தானே இருக்கீங்க ! இத பேச ஒரு இரண்டு நிமிடம் ஆகுமா  பிரச்சனையை பேசி தீர்க்கிறதை விட்டுட்டு, பிரச்சனை உங்களை தீர்த்து கட்ற அளவுக்கு கொண்டு வந்துடீங்களேடா” ஆதங்கம் தாளாமல்  அதனை கொட்டி கவிழ்த்த மரகதாம்பாள்

“பிர்லாவை பத்தி  கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தீங்களா?” என கண்ணீருடன் அப்போது தான் பிர்லாவின் அறைப்பக்கம் கண்களை ஓட்ட, பார்த்த மரகதாம்பாள் ஸ்தம்பித்து போனார்  இவன் ரூமை விட்டு எப்போ வந்தான்? எத்தனை நேரமாய் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கான்? என அதிர்வாய் பார்த்திருக்கும் போதே  பிர்லாவின் உடலில் சிறு வித்யாசத்தை உணர்ந்தனர் மற்றவர்கள்

இவர்கள் பேச்சுக்குரல் கேட்ட ஆரம்பித்திலேயே என்ன சண்டை என அறையை விட்டு வெளியே வந்தவன் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டதில் மனதில் பதிந்தது என்னவோ இது தான்

தேவி டைவர்ஸ் வாங்க போகிறார், சந்த்ரா கெங்காவுடன் வாழ போகிறார்.  கெங்காவை பார்த்த நாளில் இருந்து தன் தாய் தந்தையின் வாழ்வு என்னாகுமோ? ஏதாகுமோ? என இந்த இருபது நாட்களாக பயந்து பயந்து தூக்கத்தை தொலைத்த விசயம் இன்று அப்படியே அரங்கேறி விட   இறங்கியிருந்த தலைவலி உச்சியில் ஏறி அமர்ந்துகொண்டது.

கெங்காவிடம் காட்டாத பிளட் பிரசர் விர்ரென தன் வீரியத்தை காட்ட  உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. அதீதமான மன உளைச்சலில் இரத்த ஓட்டம் உடலில் அதிகமாய் பாய்ந்தோட, மூளைக்கு செல்லும் இரத்தம் ஓட்டம் அதன் வேகத்தில் நிதானமில்லாமல் தடைபட்டது.

ஒரு நொடி அவனது உடலுக்கும் மனதிற்கும் என்ன செய்கிறது என அவனே அறியவில்லை. தடாரென விழுந்த உடலை நிதானபடுத்தி நிற்க வைக்க முடியவில்லை கை கால் என நான்கும் திசைக்கொன்றாய் இழுத்து சென்றதை தடுத்து கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை

திறந்திருந்த கண்களுக்கு வெளிச்சம் புலப்படாமல் போக இருளில் மூழ்கியது அவன் கண்கள். மொத்தத்தில் அவன் உயிரோடு வெட்டப்பட்ட உடல் போல துடிக்க ஆரம்பிக்க.

“பிர்லா“ என்ற மரகதத்தின் அலறலில் மற்றவர்களும் அவர் பார்வையை பின்பற்ற

“பிர்லா…” என்ற அனைவரின் கூக்குரல் மீண்டும் ஒரு முறை அந்த வீடையே அதிர செய்தது என்றால்  வெட்டி இழுத்த உடல், பிடிப்பார் இன்றி மாடிப்படியில் தட தடவென உருண்டோடி தனக்கு உயிர் கொடுத்த தாய் தந்தையின் காலடியிலேயே  உருக்குலைந்து கிடந்தது அந்த இளம் காளை.

Advertisement