Advertisement

“ஏன் நான் தான் கவனிக்கனுமா? ஹாஸ்பிடல் கூட்டி போகனுமா ? ஏன் நீங்க என்ன செய்றீங்களாம்? நீங்களும் அவனுக்கு அப்பா தானே ? நீங்க கூட்டி போனால் அவன் வர மாட்டானா? இல்லை வர்மாட்டேன்னு உங்க கிட்ட சொன்னானா?” ஜான் இறங்கிய கோபம் பல அடிகளுக்கு மேல் மலையேறியது

இருவரின் சண்டையை பார்த்த பிர்லாவோ, தன்னால் தான் எல்லாம் என்ற எண்ணம் தலைவிரித்தாட “அன்றைக்கு ஒரு நாள் தான் சாப்பிடலை மாம், அன்னைக்கே சொல்லி இருந்தால் இத்தனை பிரச்சனை இருந்திருக்காது. அதுக்காக இரண்டு பேரும் இத்தனை சண்டை போடனுமா. டாட் உங்களுக்கும் சொல்றேன், யாராவது ஒருத்தர் என்னை கவனிச்சுட்டே இருக்க முடியாது. கவனிச்சுட்டே இருக்க நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது  என்னை எனக்கு பார்த்துக்க தெரியும். என்னை காரணமா வச்சு நீங்க சண்டை போட வேணாம்” என சமாதானம் பேச.

“டேய் பேசி பேசியே சரிகட்டாத உன் அம்மாவை  இப்போவாவது அவள் மேல இருக்குற குறையை சொல்லு  இனியாவது திருந்துறாளானு பார்ப்போம். துளி அளவு கூட கிடையாது. கடனுக்கு பெத்தோம் வளர்த்தோம்னு இருந்துட்டு, இப்போ அக்கறை இருக்குற மாதிரி பெரிசா பேச வந்துட்டா ” என முனுமுனுக்க  அது நன்றாகவே தேவியின் காதில் விழ

“பெரிசா என்னை சொல்ல வந்துட்டீங்க  நீங்க சொன்னீங்களே அதே அக்கறை உங்களுக்கு நிறைய இருக்ககோ!”

“ஏன் இல்லாமல்  அதான் நிறைய இருக்கே  இருக்க போய் தான் அவனுக்கு பைக் வேணும்கிறது வரை யோசிச்சேன், அது பிர்லாவுக்கும் தெரியும். ஆனால் அது உனக்கு தெரியலை. நீ தெரிஞ்சுக்கவும் இல்லை. உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.” என பல்லை கடிக்க

தேவிக்கு அவரது கோபம் பெரும் அதர.வை கொடுத்ததென்றால், அவனுக்கு பைக் எப்படி உடனடியாக வந்தது என்ற காரணம் இப்போது தெள்ள தெளிவாய் புரிந்து போக, குடும்பம் என்ற கூட்டினுள் தன்னை மட்டும் தனியாய் பிரித்தது போல் உணர்ந்தார் தேவி

தேவியின் ஒவ்வொரு அசைவும் தெரிந்தவர் ஆயிற்றே சந்த்ரபோஸ் “எனக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆயுள் இருக்குதுன்னு தெரியவில்லை. ஆனால் என் மகனுக்கு என்னை விட இரண்டு மடங்குக்கும் மேல் ஆயுள் இருக்கும். இருக்கனும். அதுவரை உன் பாசம் வேணும். என்னை தான் தவற விட்டுட்ட, அவனை விட்டுடாதே” முதல் முறையாய் ஆதங்கத்தை கொட்ட

அவரின் கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தேவி முகம் சுருக்க  ‘ம்மா, ப்பா இரண்டு பேரும் சண்டை போடாமல் இருக்கீங்களா  விட்ட தலைவலி திரும்ப வர மாதிரி இருக்கு’ என காட்டு கத்தலாய் கத்தும் வேகம் எழுந்தது பிர்லாவினுள்.

ஆனால் கத்த கூட பிடிக்கவில்லை. இவர்களையே ஓர் நொடி பார்த்திருந்தவன் நோட் புக் எல்லாம் போட்டது போட்டபடி போட்டுவிட்டு, மாடியேறி வேகமாய் உள்ளே சென்றுவிட்டான்.

ஆனால் அவன் சொல்லமால் விட்டதை படீரென கதவை அறைந்து சாத்தும் சப்தம் சொல்லிவிட்டது. ஆனால் புரிய வேண்டுமே அவர்களுக்கு. பிர்லாவின் வித்யாசமான செயலில் ஓர் நொடி திகைத்தவர்கள் வேகமாய் அங்கே சென்றனர்

“பிர்லா கதவை திறயேன் பிர்லா”

“டேய் கதவை திறடா” என இருவருமே கதவை தட்ட,

சாத்திய வேகத்திலேயே கதவை வேகமாய் திறந்தான் “என்னம்மா வேணும்! என்னப்பா வேணும்? இரண்டு பேரும் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணின னா? இல்லையே! நீங்க உங்க சண்டையை கண்ட்னீயூ பண்ணுங்க. நான் தூங்கனும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. தலை பயங்கரமா வலிக்குது” என கத்தியவனின் கண்ணெல்லாம் செவ செவ என சிவந்து, முகம் கறுத்து போய் இருந்தது. அவன் கத்தியதை  பார்த்து பயந்து தான் போயினர் அவனை பெற்றவர்கள்.

ஆரம்பத்தில் இருந்து இப்போது இந்த நொடி வரை யடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்த மரகதமும் அதிர்ந்து போனார்.

இப்போது சற்று முன் வரை ஷோபாவில் ஹாயாக அமர்ந்து கொண்டு எழுதிக்கொண்டு இருந்தவனா இவன்? என யோசித்த மரகதத்துக்கு தோன்ற, ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து, சந்த்ராவின் தோளை தட்டி

“டேய் நீ முதலில் பிர்லாவை ஹாஸ்பிடல் கூட்டி போடா, மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்” என

“எல்லாம் இவளால தான் ” என தேவியை பேசும் குரல் அவனது அறைக்குள்ளும் கேட்க , காதை இறுக்கமாய் பொத்திக்கொண்டான் பிர்லா

சண்டையிடும் நேரம் இதுவல்ல என உணர்ந்து, பிர்லாவை மருத்துவமணைக்கு அழைத்து செல்வது தான் சரியென பட்டது. ஆனால் பிர்லா இப்போது அழைத்தால் வருவானா என்பது பெரும் சந்தேகமே!

அவன் எழும்பி வரும் வரை காத்திருந்தனர் அவன் பெற்றோர்கள்.

அன்றிரவும் தூங்காமல் காலையில் அசந்து உறங்கி கொண்டிருந்தவனை எழுப்பி, கிளம்ப செய்து, உணவுண்ண செய்து இழுத்து மருத்துவமணை இழுத்து சென்றார். சென்ற இடம் கெங்காவின் மருத்துவமணை.

பிர்லாவுடன் சதானந்தம் காத்தருக்க  இடைபட்ட நேரத்தில் கெங்காவை பார்த்து பிர்லாவை பற்றி, அவனது்தலை வலி பற்றி, அவனை பற்றி, வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி மேலோட்டமாய் சொல்லிவிட்டு வந்தார் சந்த்ரபோஸ்.

‘ப்ளஸ்டூ படிக்கிறவனுக்கு என்ன தலைவலி !’ என யோசனை சென்றாலும், தேவியுடன் சண்டை என மேலோட்டமாய் சொல்லப்பட்ட செய்தியில் கவனம் வைத்தார் கெங்கா.

“வா  பிர்லா  உட்கார் ” என்ற குரலில் பிர்லாவின் நெற்றி சுருங்கி அந்த குரலை அடையாளம் காட்ட  தானாகவே தன் தந்தையை பார்த்தது அவன் பார்வை.

“என்ன செய்து ” என இவர் பிர்லாவை  பார்த்து கேட்டார்.

பதில் சொல்ல பிடிக்கவில்லை என்றாலும் “தலைவலி” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“எப்போ இருந்து இருக்கு  தலைவலி”

“அது இருக்கும் ஒரு…” என சொல்லிக்கொண்டிருந்த சந்த்ராவை தடுத்த கெங்கா “நீங்க பேச வேண்டாம்  பிர்லா நீ சொல்லு” என ஊக்கபடுத்த

அந்த குரலும், சாந்தமான அவரது முகமும் அவனை பேச வைத்தது “தலைவலி ரொம்ப நாளா இருக்கு  ஆனால் கரெக்ட்டா எவ்வளவு நாள்னு தெரியலை” என்றான்.

“ஓ” என்றவர் என்னைக்காவது ஜாஸ்தியா இருந்திருக்கா” என கேட்டார்.

“ம்” என யோசித்தவன் “அப்பப்போ வலிக்கும் ஆனால் நேத்து சாயந்திரம் ரொம்ப வலிச்சது” என்றான்.

“தலைவலி வரும் போது வேறென்ன செய்யும்? அதாவது வேற எதுவும் சிம்டம்ஸ் காட்டுமா?”

“பட படனு வரும். ஹார்ட் பீட் லாம் ஜாஸ்தியா ஆன மாதிரி தோணும், அப்பறம் ” என வேற எதுவோ சொல்ல வந்து , பின் அதை நிறுத்திவிட்டு “ஆனால் தூங்கி எழுந்தா எல்லா பிரச்சனையும் சரி ஆன மாதிரி பீல் ஆகும்” என

கெங்காவின் கூர்மையான கண்கள் அவனது தடுமாற்றத்தை குறித்துக்கொண்டபடி கைகள் அவனுக்கு பிரசர் செக்க செய்தது.

“இதென்ன கெங்கா இவனுக்கு போய் பிரசர் பார்க்குற ! பிரசர் பார்க்குற வயசா இவனுக்கு” என அதிர்ந்த சந்த்ரபோஸை கண் ஜாடையிலேயே அடக்கியபடி அவனுக்கெ பிரசர் செக் செய்து முடித்தார் கெங்கா

“தலைவலி வரும் போது  வலி எங்க ஜாஸ்தியாக இருக்கும்.” பிரசர் கிட்டை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு கேட்க

நெற்றியின் இடப்புறம் வலப்புறம் என எதையாவது காட்டுவான் என கெங்கா நினைத்திருக்க, அவன் காட்டிய இடமோ! பின்னந்தலை! பின்னந்தலையில் கை வைத்து “இங்கே தான் ரொம்ப வலிக்குது” என பிர்லா காட்டிய நிமிடம் அங்கிருந்த மூவருமே இதை எதிர்பார்க்கவே இல்லை. ஆம் மூவர் தான், சதானந்தமும் அவர்களோடு வந்திருந்தார். ஆனால் கெங்கா தான் முதலில் சுதாரித்தார்.

“ப்ளஸ் டூ தானே படிக்குற நீ!” என கேள்வி எழுப்பியவர் “நைட் தூங்கமால் ரொம்ப படிக்கிறியா ? இனி கரெக்ட் டைமுக்கு தூங்கிடு. தூங்கனும் சரியா! தவிர கொஞ்சம் டேப்லெட்ஸ் தரேன். ஒரு இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ஸ்கூல் போகலாம்  ஆனால் அடுத்த வாரம் மறுபடியும் கண்டிப்பா செக் அப்புக்கு வரனும் ” என அவனிடம் சொல்லிவிட்டு

“சார், நீங்க பிர்லாவை அழைச்சிட்டு போங்க  நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசனும்” என கூற

“வாடா” என பிர்லாவை அழைத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினார் சதானந்தம்.

சந்த்ரா வீட்டில் நடந்த பிரச்சனையை ஏற்கனவே கெங்காவிடம் கூறி இருந்ததால்

“வீட்டில் சண்டை போட்டது சரி ஆனால் அவன் முன்னாடி எதுவும் சண்டை போட்டீங்களா?” என கெங்கா  கேட்க

அவர் கேட்பதின் அர்த்தம் புரிந்ததில் லேசாய் முகம் கன்றியபடி“ஆம்“ என தலையசைத்தார் சந்த்ரா.

“இனி சண்டை போடாதீங்க! போடவும் கூடாது” என

“ஏன் கெங்கா ?” நெற்றி சுருங்கியது சந்த்ராவிற்கு.

“நேத்து அவன் ஸ்கூலுக்கும் போகலை ! பத்தாததுக்கு வீட்டில் நீங்க சண்டை போட்டு இருக்கீங்க ! சின்ன பையன் இல்லையா உங்க மூலமாக, வீட்டில் நடந்த சண்டை மூலமா அவன் நிறைய ஸ்ட்ரெஸ் ஆக சான்ஸஸ் இருக்கு. சின்னவயசு தானே அவனுக்கும். ஸ்ட்ரெஸை எப்படி ஹேண்டல் பண்ணனு தெரியாமல் வந்த தலைவலியா கூட இருக்கலாம்  கன்பார்மா சொல்லலை  ஒரு கெஸ்ஸிங் தான்.

ஒரு வேளை ஸ்கூலில் கூட அவனுக்கு பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கலாம்.

ஒரு இரண்டு நாள் வீட்டில் இருக்கட்டும் அப்பறம் ஸ்கூல் அனுப்புங்க. இரண்டு இடத்திலேயும் எப்படி இருக்கானு வாட்ச் பண்ணுங்க ! தலைவலிக்கான காரணம் தெரிஞ்சிடும்  அப்பறம் மறுபடியும் அவனை அழைச்சிட்டு வாங்க கண்டிப்பா ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடாலாம் ” என வேறு எதுவும் கூறாது  அனுப்பி வைத்தார்

ஆனால் வெளியில் பிர்லாவுடன் அமர்ந்திருந்த சதானந்திற்கு சிறு சந்தேகம் எழுந்தது. ஒரு டாக்டராய் கெங்கா பேசினாலும், பேச்சுக்கு பேச்சு கெங்கா கெங்கா என நின்ற சந்த்ரா அவருக்கு முற்றிலும் புதிதாய் தெரிந்தது. என்ன நடக்குது இங்கே ! என ஒரு கண்ணை இவர்களிடம் வைக்க மறக்கவில்லை சதா.

கெங்கா சொன்னபடி பிர்லாவிற்கு இரண்டு நாட்களுக்கு வீட்டில் நல்ல ஓய்வு. மாத்திரையினாலா? இல்லை வீட்டில் சண்டை நடக்காததாலா?  ஏதோ ஒன்று அவனுக்கு தலைவலி இல்லாமல் பார்த்து கொண்டது. ஓய்வின் பின் இவன் நாட்கள் பள்ளியிலும் தொடர்ந்து கழிந்தது. வீட்டிலும் பள்ளியிலும்  சந்த்ரா அவனை கண்காணிக்க துவங்கினார் அடுத்தடுத்த நாட்கள்.

அதன் பிறகு தான் உணர்ந்தார் பிரச்சனை பள்ளியில் இல்லை வீட்டில் தான் என. பிர்லாவின் தலை வலிக்கும்,   தேவியும் தானும் சண்டையிடுவதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாய்  உறைத்தது. தங்களால் தன் பிள்ளை உடல் நலன் கெட்டுவிடுமோ என பயந்து அடுத்து வந்த நாட்களில் வீட்டில் தன் பேச்சை குறைத்து கொண்டார் சந்த்ரபோஸ்.

அதை கெங்காவிடம் போன் செய்து சொல்லவும் மறக்கவில்லை.

அதற்கு கெங்காவும் வீட்டில் சண்டைபோடுவதை அறவே தவிர்க்க சொன்னார் “டேப்ளட் இனிமேல் போட வேணாம். ஒரு பத்து நாள் கழிச்சு மறுபடியும் ஹாஸ்பிடல் அழைச்சுட்டு வாங்க” என சந்த்ராவிடம் கெங்கா சொன்னார்

அதன் பின் பிர்லாவிற்கு தலைவலி பிரச்சனை இல்லாது போகவே அந்த பத்துநாட்களின் இறுதியில் மீண்டும் கெங்காவை பார்த்து வர சென்றனர் பிர்லாவும் சந்த்ரபோஸூம்.

Advertisement