Advertisement

பகுதி 18

கல்லூரியில் புழங்கும் ஏகப்பட்ட கருப்பு பணங்கள் அனைத்தும்  வெள்ளையாய் மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பார்வதிதேவி பினான்ஸ். ஏகப்பட்ட பெரிய தலைகளுக்கு  கூட  இவர்களிடம் இருந்து தான் பினான்ஸ் வசதிகள் கிடைக்கப்பெரும். கல்லூரியில் கிடைக்கும் லாபத்தை விட பினாஸ் கம்பெனியில் கிடைக்கும் லாபம் பத்து மடங்கிற்கும் மேல்.

ஆனால் அதிலும்  ஏகப்பட்ட குறுக்கு வழிகள், பெரிய இடத்து பரிந்துரைகள் என நேர் வழியில் இருந்து சற்று குறுக்கு வழியில் இறங்கி தான்  வெற்றியடைய வேண்டி இருந்தது.

சீனிவாஸ் கிட்டதட்ட ஏழு எட்டு வருடங்களாய்  அவரது கல்லூரியில் ஸ்டேசனரி,கேன்டீன் என இரண்டிலும் டென்டர் எடுத்து அதில் தரம் குறைந்த பொருட்களை நிறைந்த விலைக்கு விற்பனை செய்து கொழுத்த லாபம் பார்த்து வந்தான். இவர்களே நேர்மையாய் இல்லாத போது நான் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே முதல் காரணம்.

முதல் இரண்டு வருடத்திற்குள் சுந்தரம் அறிந்து கொண்டார், அவனது நடவடிக்கைகளை, ஆனால் அதன் பின் ஸ்ரீநிவாஸை கண்டிக்காமல் அவனுடன் இவரும் கூட்டு சேர  சுந்தரத்தின் தயவில் கல்லூரி ஹாஸ்டலிலும் ஸ்ரீநிவாஸின் ராஜ்யம் தான்  இந்த ஏழு வருடங்களில் அத்தனை லாபம் பார்த்திருந்தனர் இருவரும்

ஒவ்வொரு முறையும் டென்டர் அனவுன்ஸ்மெண்ட் முடியும் தருவாயில் கடைசி ஆளாய் தருபவன் சீனிவாஸ் தான்  டென்டர்களை போடுவதற்காய் உபயோகிப்படும் முறை டென்டர் பாக்ஸ் தான்  அது அட்டென்டர் கண்ணனின் கீழ் பொறுப்பில் வரும்  அன்றாட டென்டர்களை சந்திராவின் கையில் சேர்ப்பது அவன் கடமை. ஆனால் அதற்கு முன்பு அவனுக்குரிய கடமை, டென்டரில் கோட் செய்யப்பட்டு இருக்கும் தொகையை எல்லாம் எழுதி வைத்து அதை சீனிவாஸ் கையில் கொடுப்பது கண்ணனின் வேலை.

இது போதாதா அவனுக்கு, டென்டர் தொகையை விட இருப்பதிலேயே குறைந்த தொகையை கோட் செய்து டென்டர் பிடித்து விடுவான்.

முதல் இருமுறை கண்டு கொள்ளாமல் இருந்த சந்திரா “சீனிவாஸ் அதென்ன எப்போ பார்த்தாலும் கடைசியா டென்டர் போடுற ”

“முதல் இரண்டு முறையும் கடைசியா கொடுத்ததுனால தான் டென்டர் கைக்கு வந்த மாதிரி ஒரு ராசி  அதான் ” என இழுக்க,

“ஓ  இதெல்லாம்மா ராசின்னு கணக்கெடுப்ப ” என சிரித்தவருக்கு அவன் மீது துளியும் சந்தேகம்  வரவில்லை.இதுவரை அவன் கொண்ட தொழிலில் இவர் குறை கண்டதில்லை என்பது தான் மிகப்பொருந்தும்.

ஆனால் சந்திராவை ஏமாற்றிய அவனால் பாவம் பிர்லாவை தான் ஏமாற்ற முடியவில்லை  படிபடியாய் அவனை கண்டு கொண்டு இதோ ஹாஸ்பிடலில் படுக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தான்.

 “இனி என்னை விட்டுடுங்க சார்  நல்ல வேளை வேலையோடு என்னை தொரத்தி விட்டுட்டங்க, போலீஸ் அது இது என இழுத்தடித்தால் நான் என்ன செய்றது, இனி என்னை இழுக்காதீங்க” என அட்டென்டர் கண்ணன் ஓட்டை விழுந்த படகில் நழுவும் எலியாய் எப்போதோ கழன்று இருந்தான் கண்ணன்.

கை கால் உடைந்த நிலையில் சீனிவாஸ் அட்மிட் ஆகி இருந்த மருத்துவமணைக்கு வந்திருந்தார் சுந்தரம்.

“என்ன சார் எதுவும் பிரச்சனையா ? “ காரணமில்லாமல் அவர் வர மாட்டார் என்பதால் நேரடியாய் விசயத்திற்கு வந்தார்.

“பிர்லா வொர்க்கர்ஸ் மீட்டிங் ரெடி பண்ணிருக்கான் ”

“ஓ ” என ஒரு வார்த்தை வந்தாலும் அதன் பின் பல அர்த்தங்கள் கூடவே சிறு படபடப்பும்.

“என்ன நடந்தாலும் தெரியப்படுத்துங்க சார் ”

“ம் ” என சொல்லி சென்றார் சுந்தரம்.

அன்று வொர்க்கர்ஸ் மீட்டிங்  தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் நிறை குறைகளை நேரடியாய் தங்கள் கருத்து சுதந்திரத்தை பகிர்ந்து கொள்ளவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்துவர் தந்தையும் மகனும்

போன மாதம் தான் முடிந்த தருவாயில் மீண்டும் வொர்க்கர்ஸ் மீட்டிங்கா !

என்னவோ…? ஏதோ…! வென ஆளுக்கொரு சிந்தனையில் வந்தவர்கள் சற்று அதிர்ந்து தான் போயினர்  எதற்காக இந்த மீட்டிங்  என தெரிய வந்த போது.

சுமார் ஐந்நூறு அறநூறு பேர் வசதியாய் அமரும் ஹால் அது. ஏறத்தாழ அனைவரும் கூடிய சிறிது நேரத்தில் முழுமையான பார்மலில் தன் நீளக்கால்களை எட்டிப்போட்டு, அதற்கு தக்க இசைந்து வேகத்தை கூட்டிய தேக்குமர கைகளுள், வலது கை மட்டும் அதன் வேலையை நிறுத்தி அவன் கண்களில் இருந்த கூலரை கழற்றி அதை தன் இரு விரல்களின் இடுக்கில் சுழற்றியபடி பிர்லா வேக நடையுடன் வர அவர்கள் பின்னே சுந்தரம் , கண்ணன் அதையடுத்து பிர்லாவின் ஆட்கள் இருவர் என  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வந்தனர். சீனிவாஸ் மட்டும் வரவில்லை. வரமுடியாதளவு மருத்துவமணையில் கிடந்தான்.

சுந்தரம், கண்ணன் என இரண்டு பேரையும் வொர்க்கர்ஸ் மீட்டிங்கில் முன் நிறுத்தி அவர்கள் செய்த திருட்டையெல்லாம்,ஆதாரத்துடன் துகிலுறித்தான்.

பிர்லா பேச பேச  தனியாய் அழைத்து பேசியபோது தெரியாத திருட்டு தனம்  அங்கிருந்த அனைவரின் முன்பும் துகிலுறிக்கும் போது உடல் நடுங்கிப்போனது அவமானத்தில்.

‘அப்போ வேலையை பிடுங்கினது எல்லாம் நாடகமா !’ என கண்ணன் அதிர்ந்து நிற்க  சுந்தரமோ ‘நெற்றியை சுருக்கியபடி’ பெரும் அவமானத்தில் இருந்தார். அவர் சட்டை பையில் இருந்த மொபைல் வழியே லைவ் வீடியோ பார்த்து கொண்டிருந்த சீனிவாஸ்க்கு அந்த நிலையிலும் கை நடுங்கியது மொபைலை பிடிக்க முடியாமல்.

முழு உண்மையும் எடுத்துரைத்த பின் “ஒவ்வொரு வருசமும் வொர்க்கர்ஸ்ஸை என்க்ரேஜ் பண்றதுக்காக நிறைய காம்பளிமெண்ட், நம்ப கம்பெனியில் இருந்து கொடுக்குறோம்  அது அவங்களோட நேர்மைக்காக ! ஊக்குவிக்கிறது எங்களோட கடமை அதே மாதிரி தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறது எங்களோட கடமைன்னு இறங்கி அவங்க உடலை காயப்படுத்துறது…!!!!”  சிறிது இடைவெளி விட்டவன் “அது தப்பு ” என வொர்க்கர்ஸை பார்த்தபடி…

“அதனால் இனி இவங்க மூனு பேரும் நம்ப கம்பெனி காலேஜ்னு எல்லாத்திலேயும் அதே பொசிசனில் தான் இருக்க போறாங்க  சுந்தரம் – மேனேஜர், கண்ணன்- அட்டென்டர், சீனிவாஸ்க்கு மட்டும் பொறுப்பை மாத்தி கொடுத்திருக்கேன் இனி கம்பெனி காலேஜ்னு எந்த டென்டர் வந்தாலும் அவன் தான் புல் இன்ஜார்ஜ் ”

“இதில் உங்களோட ஒப்பினியன் வேணும்  மாற்று கருத்து இருக்குறவங்க தாராளமா சொல்லலாம் ”

பின் ட்ராப் சைலன்ஸ் என்பார்களே அப்படி ஒரு அமைதி அங்கே… நிசப்தம் மட்டுமே அங்கே பெரும் சப்தமாய் நீடித்தது.

ஒருவர் மட்டும் எழுந்தார்  காலேஜின் பினான்ஸ் மேனேஜர்  தக்க தருணங்களில் கை கொடுப்பவர்,அவர். “போலீஸ் போகலாம் சார் இல்லை கம்பெனியை விட்டு அனுப்பிடுங்க !”

“போலீஸ் போறாதாலையோ இல்லை கம்பெனியை விட்டு  அனுப்புறதாலையோ, அவங்களை விட ஜாஸ்தியாக பாதிக்க பட போறது அவங்க குடும்பம் தான்”

எனக்கு என்னோட வோர்க்கர்ஸ்ம் எம்ப்ளாயீஸூம் முக்கியம்  அதை விட அவங்களோட குடும்பமும் முக்கியம் என்ற அவனின் பேச்சு அத்தனை பேரையும் ஆசுவாச பெருமூச்சு விட வைத்தாலும்

“மறுபடியும் இவங்களால இந்த மாதிரி பிரச்சனை வராதுனு என்ன நிச்சயம்?” என கேள்வி கேட்க தயங்கவில்லை

“கண்டிப்பா வராது”

“அதெப்படி சார் உறுதியா சொல்றீங்க ?”

“வராது வருவதற்கு வாயப்போ இல்லை! ஏனென்றால் அவங்களை இன்னும் அதிகமாக கவனிக்க இப்போ நீங்களும் இருக்கீங்களே, அதனால தான் நான் உறுதியா சொல்றேன்” இறுதியில் அவர்கள் தலையிலும் பொறுப்பை வைக்க மறக்கவில்லை அந்த வித்தகன் அத்தோடு “தட்ஸ் இட், நான. உங்க கிட்ட பேச நினைச்சது இது தான்” இருகைகளையும் விரித்து சிறு வளைவுடன் மைக்கில் இருந்து விலகியது அவன் இதழ்கள்

சிறு வியப்பு ஆம் வியப்பே தான் பின்னே திருடிய இடத்தில் மீண்டும் வேலை செய்வது அவ்வளவு எளிதல்லவே அம்மூவருக்கும் ஆழம் தெரியாமல் கால் விட்டு அதில் மாட்டுவது போல ஆயிற்றே! கம்பெனியின் உள்ளே இருக்கவும் முடியாமல் கம்பெனியை விட்டு வெளியேவரவும் முடியாமல் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான் பிர்லா.

கேள்வி கேட்ட மனிதரே கைதட்டலை ஏதோ ஒரு உந்துதலில் ஆரம்பித்து வைத்துவிட அதன் பின் பலத்த கரகோஷங்கள் அவனுக்கு மணி மகுடங்களாய்.!

“இனி மேல் இரண்டு மடங்கு கவனமா இருந்துக்கலாம் டாட்” இரண்டு நாட்களுக்கு முன் மகன் கொடுத்த ஆறுதல் இன்று உருவம் பெற்று நின்றிருந்தது.  தாமதமாக வந்தாலும் வாசலில் நின்றபடியே அனைத்தையும் பார்த்தவருக்கு பூரிப்பு எழுவதை தடுக்க முடியவில்லை.

விலக்கி வைத்த திருடர்களை  மீண்டும் தங்கள் வலைக்குள்ளே இழுத்துவிட்டு ஏதும் அறியாதவனாய். வெகு சாதாரணமாய் தந்தையின் அருகில் வந்தான்.

அதன் பின் கூட்டமும் முடிந்து விட

அதற்குள் ஆடிட்டரிடம் இருந்து போன் வர, சந்திரா அதில் கவனமெடுக்க, பிர்லா காரை எடுத்து வந்தான்.

வீட்டிற்கு வந்தபிறகும் போன்கால் தொடர்ந்து கொண்டிருக்க  மகனிடம்  பேசும் உந்துதலில் அவசரமாய் பேசி முடித்து வந்தார் வீட்டினுள்

“இது தான் இரண்டு மடங்கு கவனமா !” அறைக்கு பறந்த பிர்லாவை அவசரமாய் நிறுத்தியது அவர் உரையாடல் கூடவே அங்கிருந்த பார்வதிதேவியையும் கலைத்தது

 “என்ன…!” என யோசித்தவன்  இரண்டு நாளைக்கு முந்தையை பேச்சை இப்போது தொடர்கிறார் என உணர்ந்து

“இரண்டு மடங்கு இல்லை மூன்று மடங்கு… டாட் !”என சிரிக்க

“ம்  என்ன ?” இம்முறை அவர் யோசிக்க.

“சீனிவாஸ், கண்ணன், சுந்தரம்…!” என அந்தமூன்று மடங்குளுக்கும் பிர்லா பெயர் வைக்க

“அடேய்…!” அவன் சொல்ல வந்தது புரிந்து தோளில் ஒன்று வைத்து ஆனந்தமாய் சந்திரா சிரிக்க

 “அவன் திருடன் தான் ஆனால் நீ எப்போ தேள் ஆ மாறின !  நல்லா கொட்டிவச்சிட்ட அவனுங்களை  வாயையவே திறக்க முடியாத அளவுக்கு…” என சிரிக்க

“சான்ஸ் கிடைச்சா தான் டாட்  அவன் திருடன்  சான்ஸே கொடுக்கலைன்னா !” என இவன் சொல்ல

 கூடவே இணைந்து கொண்டது தேவியின் மெல்லிய சிரிப்பொலி  வீட்டில் நடக்கும் அவலங்கள் தெரிந்துவைத்து கொள்வதை விட தொழிலில் நடக்கும் அவலங்கள் அவரின் காதில் தானகவே வந்து விழுந்துவிடும்  எனவே தந்தை மகன் பேச்சு ஏன் ? எதற்காக ? என்ற குழப்பம் இன்றி லேசாய் ஒரு புன்முறுவல் அவர் முகத்தில்

Advertisement