“என் கையில் இல்லைன்னா என்ன டாட் உங்க கையில் இருந்திருக்கும் அதுதான் காலையில் பார்க்க வேண்டிய ரைய்டை நைட் புல்லா பார்த்திருக்கீங்களே புருஷனும் பொண்டாட்டியும் விடுங்க டாட் ”
என்ன பேசியும் சமாதானம் ஆகாமல் புலம்பிக்கொண்டிருந்தவரிடம்
“நம்ம கம்பெனி காலேஜ்ன்னு, டென்டர் சம்பந்தப்பட்ட எல்லா டாகுமெண்டும் ஈசியா கிடைக்குற அளவு ஆளுங்களை புடிச்சு வச்சிருக்கான்,அந்த சீனிவாஸ் ஆனால்… டென்டர் டாகுமெண்ட்ஸை விட இதெல்லாம் ரொம்ப முக்கியமானதாச்சே நம்பளை ஒட்டுமொத்தமா பொதைக்குழிக்குள்ளேயே தள்ளி விடற டாகுமெண்ட்ஸ் டாட், இதெல்லாம் அதான் ஆபீஸ் சேப் இல்லைன்னு வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டேன். இதே மாதிரி எல்லாத்திலேயும் கவனமா இருந்துக்கலாம் டாட் ரிலாக்ஸ் ” என பிர்லா சொல்ல
“ம் ” என இப்போதைக்கு சமாதானம் ஆனார் சந்திரா. பேச்சு வார்த்தை முடிந்து அவர் அவர் அறைக்கு சென்றனர்.
பிர்லா அறை கதவை திறக்க நைட் லேம்ப் கூட எறியவில்லை, அறையெங்கும் கும்மிருட்டு
அறை விளக்கை கூட போடும் எண்ணம் வரவில்லை அவனுக்கு “அம்மு” என அழைத்தபடியே உத்தேசமாய் கட்டிலை தேடி அதில் இவளை தேட
பளிச் என்ற வெளிச்சத்துடன் ரோலிங் ஆனது ஒரு சிறிய சிலை
“ஐ…
லவ்….
யூ…பிர்லா… ” என அவனை மயக்கும்,அவன் மட்டுமே மயங்கும் ப்ருந்தாவின் குரலில் மயங்கி நின்றான் அந்த மாய கண்ணன்.
மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு ஓரே இடத்தில் ரோலிங் ஆகிக்கொண்டிருந்தது அந்த சிலை இரு அழகிய காதலர்கள் இடையோடு இடை கோர்த்து ஆடுவது போல் ரோலிங் ஆகி கொண்டிருந்தது.
கட்டிலில் ரோலிங் ஆன சிலையை லேசாய் எடுக்க, அது கையோடு வந்தது. ரோலிங் தனியாக, சிலை தனியாக என இருந்தது. இப்போது அதை தன் கைக்கு மாற்றி இருந்தான். கைக்குள் அடங்கும் சிலை அது.
ஏதோ தோன்ற சிலையை நகரவிடாமல் பிடித்து அதை உற்று பார்த்த பிர்லாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, இதழ்களோ “அம்மூஊஊஊஊ…” என தானாகவே ஆச்சர்யத்தில் உச்சிரத்தது.
ஏனெனில் அது ஒரு கஸ்டமைஸ்ட் செராமிக் டால் அசத்தலான ஜீன்ஸ் டீசர்ட் போட்டு, அசையாத புன்னகையுடன் பிர்லாவும், லாங் ஸ்கர்ட்டும், நெட் டாப்பும், கழுத்தை சுற்றிய ஸ்கார்ப்பும்,சுருள் கேசங்களும் அதனுள் புதைந்திருந்த நிலவென மலர்ந்த முகமும் என ப்ருந்தாவும் பிர்லாவையும் ப்ருந்தாவையும் சிறிதாக்கியது போல் செய்த சிறிய அளவிலான சிலை அது பிர்லா அவளை தோளோடு அனைத்திருக்க, இவளோ அவனை இடையோடு அனைத்திருந்தாள். கவிதையாய் இருந்தது அந்த சிறிய சிலை. பார்க்கவே தத்ரூமாய் இருந்தது அந்த மினி ஸ்டாட்ச்சு.
“ஏய் எங்கடீ இருக்க!” மனம் அவளது பரிசையே துளாவிக்கொண்டிருக்க, விழிகளோ அவளை துளாவிக்கொண்டிருந்தது அந்த இருட்டில்.
அறையில் வெளிச்சமும் அவளும் ஒன்றாய் அவன் கண்களுக்கு புலப்பட, கட்டிலின் அருகில் இருந்தவள் இப்போது அவனது அருகில்.
“எப்போ ஆர்டர் பண்ணின !” இன்னமும் ஆச்சர்யம் விலகாமல் இவன் கேட்க
“நம்ப கல்யாணத்துக்கு முன்னாடியே ஆர்டர் பண்ணி வாங்கிட்டேன் கொடுக்க மறந்திட்டேன், இப்போ தான் நியாபகம் வந்தது ” என
“ம் கிப்ட்டை மறக்குற அளவுக்கு இந்த இரண்டு நாளா ரொம்ப பிசியோ மேடம்” இவன் கண்ணடிக்க
பதிலுக்கு இவள் கண்களே சிவந்து போனது அவனது பார்வையில்.
“பதில் சொல்லு அம்மு” கழுத்தோரமாய் உரசியது அவன் இதழ்கள்
“ம், என் புருஷனுக்கு ஒவரா லவ்வாகிடுச்சு, அதான் நான் ரொம்ப பிசி” மாயையில் இருந்து விடுபட்டு அவனை தள்ளிவிட
“நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லவேயில்லையே!” தள்ளிவிட்டபோதும் கட்டிலில் ஸ்டைலாய் போஸ் கொடுத்தபடி அவளை சீண்டினான்.
‘ஹ…’ என வாய் பிளந்தவள் ‘ஆமாம்ல இவன் ஒரு தடவை கூட லவ் ப்ரபோஸ் பண்ணவேயில்லையே நம்மகிட்ட ’ டென்சனில் நகம் கடித்தவள், அவனை திரும்பி முறைத்தபடி, அவனருகில் கட்டிலில் அமர்ந்து, “நீங்க சொல்லலேன்னா என்ன! அதான் உங்க” என முடிக்க தெரியாமல் திணற
“செயல்ல தெரியுதோ…” என்றபடி அவள் மடியில் தலை வைத்தான் அவள் முகம் பார்த்தபடி.
“அம்மு குட்டி என்னையலாம் நம்பாத பார்த்துக்க ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை யாருனு கேட்டாலும் கேட்பேன்” அசால்ட்டாய் பிர்லா
“ஏன்!” அலட்சியமாய் ப்ருந்தா
“ஏன்னா… எனக்கு அம்னீசியா இருக்கு அதுவும் லவ் அம்னீசியா இருக்கு“ விழிகளை விரித்து பிர்லா பேச
“அதென்ன லவ் அம்னீசியா !” விழிகளை சுருக்கியபடி ப்ருந்தா கேட்க
“ஓ அப்படியா! ஒரு வேளை… என்னை மட்டும் மறந்துட்டேன்னா?” உதடுகளை சுழித்தாள் ப்ருந்தா
“ஜாலி தான் இரண்டாவதா ஒரு கல்யாணம் தான்!” மடியில் இருந்தவன் எழுந்து அமர்ந்து துள்ளி குதித்தான்.
வாகாய் தன் அருகில் இருந்தவனின் கழுத்தை பிடித்த ப்ருந்தா. “ஓ செகண்ட் மேரேஜா! பண்ணுவடா பண்ணுவ என்னை மறந்தா தானே நீ பண்ணுவ என்னைய மறந்திட்டு நீ ஒன்னும் உயிரோட வாழ வேண்டாம் நானே உன்னை சாகடிச்சிடுறேன் ”
“இன்னைக்கு சாகடிச்சலும் நான் தயார் தான் அம்மு!” ஆழ்ந்த குரல் பிர்லாவிடம் ஆனால் அடுத்த குரலுக்கு அங்கே வேலையில்லாமல் செய்துவிட்டாள் ப்ருந்தா அவனது சர்ட் பட்டனில் பதிந்து அதை கழற்ற ஆரம்பித்தது இவள் விரல்கள்
கொஞ்சம் காதல்
கொஞ்சும் கோபம்
மிஞ்சும் தாபம்
எல்லை கடக்கும் காமம்
என பிர்லா ப்ருந்தாவுடன் போட்டி போட்டுக்கொண்டு வேக வேகமாய் ஓடியது இம்மூன்றும்…
———-
அடுத்தடுத்து நாட்கள் மகிழ்வாய் ஓடி இதோ ஒரு மாதம் முடிந்திருந்தது.
“ஏய், ஏன் இப்படி உக்கார்ந்திருக்க” அன்று காலையிலேயே பால்கனியில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தவளிடம் கேட்டான் பிர்லா.
அவளிதழ்கள் பதில் சொல்லாத போதும், அவள் கைகளில் இருந்த பொருள் அவனுக்கு பதில் சொன்னது அவன் முன் ப்ரக்னன்ஸி கார்ட்டை நீட்டினாள்
அதை வாங்கி பார்த்தவனின் கண்களில் சிறு சிரிப்பு, அதிலிருந்த ஒற்றை சிவப்பு நிற கோடை பார்த்து
“ம்ப்ச் என்ன அம்மு, மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள பேபியை எக்ஸ்பெக்ட் பண்ணினா எப்படி ” கடந்த ஆறு நாட்களாய் நாட்கள் தள்ளி இருக்கிறது என இந்த ஆறு நாட்களும் தினம் தினம் இதே வேலையாய் இருக்கும் மனைவியின் அருகில் அமர்ந்தான்.
“இல்லை எனக்கு கரெக்ட்டான ரீசைக்கிலிங் தான் இந்த தடவை சிக்ஸ் டேஸ் ஆயிடுச்சு அப்பறம் ஏன் கார்டில் காட்ட மாட்டுது ” அவன் தோளில் தலைசாய்ந்தாள்
‘அடியே அறிவு, வயித்துக்குள்ள பாப்பா இருந்தா இதில் காட்ட போகுது, இல்லலைன்னா இதில் எப்படி காட்டும் !’ மனிதினுள் பேசியவன்
கவலையாய் கேட்ட மனைவியிடம் தான் விளக்கம் கூறுவதை விட ,கெங்கா கூறினால் நன்றாக இருக்கும் என நினைத்தவன் அவள் தலையை வருடியபடி
“சரி வா, ஹாஸ்பிடல் போவோம் ஸ்கேன் பண்ணினா என்ன ரீசன்னு டாக்டர் கரெக்ட்டா சொல்லிடுவாங்க ” என மருத்துவமணை அழைத்து சென்றான்.
கெங்காவுடைய கிளினிக் தான் சென்றனர் ஆனால் கெங்கா அங்கே இல்லை வேறொரு டாக்டரை கன்சல்ட் செய்ய வேண்டிய நிலை
“கார்டில் நெகட்டிவ் தான் காட்டுது,வேணும்னா ஒரு ஸ்கேன் வேணா பண்ணி பார்த்திடுவோம்” என அவளை அழைத்துச் செல்ல
“நீங்க வெயிட் பண்ணுங்க நான் வந்துடுறேன்” என டாக்டருடன் ஸ்கேனிங் ரூம் ப்ருந்தா செல்ல இவன் ரிசப்சன் சென்றான்.
“டாக்டர் கெங்கா வரலையா !”
“அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, ரெஸ்ட்ல இருக்காங்க” ரிசப்சனிஸ்ட் கூறிய பின் அடுத்ததாய் போன் செய்தது தன் தந்தைக்கு தான்.
“டாட், கங்கம்மாக்கு என்னாச்சு !” எடுத்த எடுப்பிலேயே கேட்க…
“தெரில்ல டா டயர்டா இருக்கா ஏதோ டேப்லெட்ட போட்டுடுட்டு படுத்திருக்கா ”
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்கப்பா ”
“வர மாட்றா நான் என்ன பண்ண !”
“ஓ நான் வரேன் ! “ என போனை கட் செய்தான்
ரிப்போர்ட் வந்தபிறகு “நீர் கட்டி பார்ம் ஆகி இருக்கு, அதான் ப்ரீயட் ப்ராளமும் டேப்லெட்லையே சரி பண்ணிடுவோம் டேப்லெட்டை மட்டும் கன்டினீயூ பண்ணுங்க மறக்கமால் மன்திலி செக்கப் வந்திடுங்க” என
ப்ருந்தாவின் முகம் தான் ஒரு மாதிரி ஆனது முகத்தை தொங்கப்போட்டு கொண்டே வந்தாள்.
“நெக்ஸ்ட் மன்த்க்குள்ள பேபி பார்ம் ஆகிடும்ல…”
“அதெப்படி எனக்கு தெரியும் ப்ருந்தா ”
“மத்ததெல்லாம் தெரியுது இது தெரியாதா !”
‘எதுக்கும் எதுக்கும் கனைக்சன் போடறா இவ !’ மனம் சிணுங்க
“நெக்ஸ்ட் மன்த் எனக்கு பேபி பார்ம் ஆகனும் இல்லை !”
“இல்லை ன்னா !”
“உனக்கும் பேமிலி பிளானிங் தான் யூஸ் இல்லாதது…உனக்கு எதுக்கு” என சொல்லும் போதே “அடியேய் எதுவும் சொல்லிடாதடீ ” அவள் வாயை பொத்தினான் பிர்லா
“அந்த பயம் இருக்கட்டும்.” என அதிகமாய் முறைக்க முயன்று சிரித்தே விட்டாள் ப்ருந்தா, பிர்லாவின் முகம் போன போக்கை பார்த்து
ஒரு வழியாய் சமாதானம் செய்து இவளை வீட்டில் விட்டுவிட்டு, இவன் கெங்கா வீட்டிற்கு சென்றான்.
வெகுவாய் உடல் மெலிந்திருந்தவரை பார்த்து பயந்தே போனான் “வாங்கம்மா கிளினிக் போகலாம்” என அழைக்க
“டாக்டர் எனக்கு தெரியாதா பிர்லா ஜஸ்ட் ஐ நீட் சம் ரெஸ்ட் தட்ஸ் இட் ” ஒரேயடியாய் மறுத்துவிட
இவன் விடுவேனா என கட்டாயபடுத்த, ஒரு முடிவு வரும் வழியை தான் காணவில்லை.
“விடுடா பக்கத்தில் தான் நான் இருக்கேனே நான் பார்த்துகிறேன்” என சந்திரா தான் கூறும்படி ஆனது.
“நீங்க அம்மாகூடவே இருங்க டாட் ஆபிஸ் ஒர்க்கை நான் பார்த்துகிறேன் ”
“சரி பிர்லா” என சந்திராவும் அவனை அனுப்பி வைத்தார்.