Advertisement

 

பகுதி 17

கெங்கா வீட்டில் இருந்து இவர்கள் கிளம்ப, சந்திரா கம்பெனிக்கு கிளம்ப, இவர்கள் ப்ருந்தா வீட்டிற்கு வந்தனர்.

வாசலில் இவனுக்காக காத்திருந்தனர் ஒட்டு மொத்த குடும்பமும், ஆரத்தி எடுத்திலிருந்து அடுத்தடுத்து கவனித்த கவனிப்பில் மூச்சு முட்டிப்போனது பிர்லாவிற்கு

“மகனாய் தாங்கிய மாமனார், மருமகனாய் கொண்டாடும் அத்தை  உடன் பிறப்பாய் தன்னையே சுற்றிக்கொண்டிருந்த மச்சினன், இவர்களின் அதீதமான கவனிப்பில் மாப்பிள்ளை விருந்தென்றால் எப்படி இருக்கும் என உண்மையிலேயே உணர்ந்தான் பிர்லா, உணர வைத்தனர் ப்ருந்தாவின் குடும்பம்.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு, “இன்னும் இவள் என்ன செஞ்சிட்டு இருக்கா!” அறையில் இருந்தவனுக்கு அவளை எப்படி வரவழைப்பது என யோசனையில் இறங்கினான். மண்டைக்குள் பல்ப் எறிய, அவளது அறையில் அமர்ந்தபடி இவளுக்கு போன் செய்ய அதுவோ ஸ்விட்ச் ஆப் என வந்தது கடுப்பாகிப்போனான் பிர்லா.

வந்ததில் இருந்து கண்டுக்கவே மாட்றாளே! இவளை! என ப்ருந்தாவை தேடி கீழே வந்தான்., கிச்சனில் ப்ருந்தா எதோ ஜூஸ் ஒன்றை குடித்தபடி தாயுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தை பார்த்தான்.

ப்ருந்தா மறுவீடு என அவர்களது வீட்டிற்கு வந்த பிறகு பிர்லாவை கவனிக்கவேயில்லை அவள். அம்மா அப்பா  என நடை பழகும் குழந்தையாய் இருவரையும் சுற்றிக்கொண்டிருந்தாள்.  இரண்டு நாட்களாய் இல்லாத தாய் தந்தை பாசம் அவர்களை பார்த்ததும் வந்ததோ என்னவோ  தாயிடமும் தந்தையிடமும் அத்தனை அரட்டை

 “என்னை தனியா விட்டுட்டு உனக்கு அரட்டையா கேட்குது!”  என கிச்சனுக்கு நேராய் இருந்த ஷோபாவில் அமர்ந்து மொபைலை ஆன் செய்து பாடலை ஓட விட்டான்.

“உரசாத  உசுரத்தான்

உருக்காத… மனசத்தான்

அலசாத…

என் சட்டை கிழிஞ்சி…

தனியே பறக்கும் இதயம்” என ஹை வால்யூமில் கத்தவிட்டான் பிர்லா.  அது அவர்களுக்கான பிரத்யேகமான பாடல் வரிகள். அது சரியாய் பிருந்தவின் காதில் சென்று பாடல் வரிகள் விழ, இந்த பாட்டை யார் இப்படி அலற விடறது? என திரும்பியவளின் விழிகளில்  அவன் விழுந்தான்.

அவன் முகமும், பார்த்த பார்வையும், பின்னனியில் ஒலித்த பாடல்வரிகளும் அவள் உயிரில் ஒளியாய் ஊடுருவியது.

எதையோ ரசித்து ருசித்து குடித்துக்கொண்டிருந்தவளுக்கு முழு மூச்சில் புரை ஏறி  கண்களில் நீர் கோர்த்தே விட்டது

“ஒரு ஜூஸை ஒழுங்கா குடிக்க தெரியுதா  ஏழு கழுதை வயசாச்சு” அவளது தலையில் தட்டியபடி இன்னம் இன்னும் அவள் தாய் என்னவெல்லாம் திட்டினாரோ  அவள் காதில் விழுந்ததெல்லாம் மீண்டும் மீண்டும் ஒலித்த அந்த பாடல் வரிகள் தான். விழிகளோ அவனை வேண்டும் மட்டும் முறைத்துக்கொண்டிருந்தது.

பார்வையால் போர் செய்து கொண்டிருந்தவர்களை கலைத்தபடி, பிர்லாவின் அருகில் நைசாக வந்து அமர்ந்தான் விமலேஷ்.

ப்ருந்தாவை விடுத்து அவன் பார்வை சில நொடிகள் விமலேஷின் மீது விழுந்தது  எப்போதும் குறும்புடன் தன்னை பார்ப்பவன் இன்று ஆராயும் பார்வையுடன் தன் அருகே அமர “டேய்.. மச்சான் எப்படி இருக்க!” விமலிடம் நலம் விசாரித்தான் பிர்லா.

“என்ன மாமா என்ன போய் மச்சான்னு சொல்லிகிட்டு, நான் உங்களை விட சின்ன பையன் மாமா!” என அவன் நெளிய

“சின்னவனா இருந்தாலும் பெரியவனா இருந்தாலும் மச்சான் மச்சான் தான்  அப்படி தான சின்ன மச்சான்!” என அவனின் தோளை இடித்தான் பிர்லா

‘மாமா வா  இது’ என விழி விரித்து பார்த்திருக்க

“மச்சான் எப்படி இருக்கன்னு கேட்டேன்  இன்னும் பதில் வரலை!” நமட்டு சிரிப்பு சிரிக்க

“மாமா நான் கேட்க வேண்டியதை நீங்க கேட்குறீங்க.!” கொஞ்சம் ஆச்சர்யமாய் இவன் கேட்க

“ஏன், நான் கேட்க கூடாதோ?” இவனும் சரிக்கு சரியாய் கேட்க

“அப்படி கேட்க வேண்டிய நிலையில் நீங்க தான் இருக்கீங்க  நான் இல்லை!” ப்ருந்தாவின் அட்டகாசங்களை நினைவில் வைத்து லேசாய் சிரித்தான் விமல்.

“அந்தளவுக்கெல்லாம் மோசமா இல்லைடா என் நிலைமை  பார்த்தவுடனே கண்டு பிடிச்சிருப்பன்னு நினைச்சேன் கவுத்திட்டியேடா கமலேஷூ”

‘உன் அக்காவோட நிலைமை தான் படுமோசம் என சொல்ல வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே அழுத்தினான் தனக்குள்ளயே!’

ப்ருந்தா பிர்லாவாகவும், பிர்லா ப்ருந்தாவாகவும் மாறி நின்றிருந்ததை வெகு அதிர்ச்சியாய் பார்த்தபடி இருந்தான் விமல்.

அடாவடி அக்கா, தன் மாமனிடம்  அடங்கி கிடப்பதை பார்த்து பெரிதாய் ரசித்துக்கொண்டிருந்தான் அந்த மச்சினன்.

இருவரது முகத்திலும் ஏதோ வித்யாசத்தை கண்டவனுக்கு அதன் அர்த்தம் புரியாத போதும், இருவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது வரை புரிந்தது அவனுக்கு.

பிர்லாவின் பேச்சுகள் முழுதும் கமலிடம் இருந்தாலும் கண்கள் முழுவதும் தன் காதல் மனைவி ப்ருந்தாவையே வண்டமடித்துக்கொண்டிருந்தது.

அதை கவனித்த விமல்  அங்கேயே இருக்கவா போகவா  என மதில் மேல் பூனையாய் அமர்ந்திருந்தான். பின் நைசாக வந்தது போலவே அங்கிருந்து  சென்றான்.

விமலேஷ் சென்றது கூட தெரியாமல், பார்வை அவளையே வட்டமடிக்க

 ‘ப்ருந்தா ’

 ‘பிருந்ந்தா ’

 ‘பிருந்ந்ந்ந்ந்தா ’

‘இங்கே பாரு’

‘என்னை பாரு’ என மனதினுள் உரக்க கூறியவனின் குறு குறுவென்ற பார்வை ப்ருந்தாவை திரும்பி பார்க்க செய்தது.

‘ஐ ஒர்க் அவுட் ஆயிடுச்சு’ மனதினுள் சிறு குதூகலம் கொப்பளிக்க  அவளையே பார்க்க

‘என்ன?’ ஒற்றை புருவத்தை ஏற்றி இவள் கேட்க

‘இங்க வா  சொல்றேன்’ ஒற்றை புருவத்தை இறக்கி இவன் அழைக்க,

‘எதுக்கு’ கேள்வியாய் இவள்

‘ப்ச்  வா சொல்றேன் ’ பதிலாய் அவன்

‘என்னனு சொல்லுங்க வரேன்’ வராத கோபம் அவளிடம்

‘இப்போ நீ வர முடியுமா முடியாதா.’ வரவழைக்கப்பட்ட கோபம் அவனிடம்

‘ம்ஹூம்  மாட்டேன்’ திமிராய் அவள்

‘மரியாதையா வந்திடு’ திமிருக்குள் அடங்கியவனாய் இவன்

‘வரமாட்டேன் என்னடா பண்ணுவ!’ இவள் அடங்காத திமிராய் துள்ள

அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி சட்டை பட்டன்களில் முதல் இரண்டை விடு வித்து, அடுத்ததாய் தான் செய்யப்போகும் காரியத்தை கண் முன் காட்ட

‘ஹ ஆஆ’ என நிஜமாகவே பேய் அறைந்தாறப்போல்  ஸ்தம்பித்துவிட்டவள்

 “ஆத்தி நான் இந்த விளாட்டுக்கு வரலாடா சாமி”

அலறி அடித்துக்கொண்டு தாயின் முகம் பார்த்து அமர்ந்து கொள்ள

அடக்கமாட்டாமல் அப்படி ஒரு சிரிப்பு பிர்லாவிடம். அடங்காத புன்னகையை அப்படியே வெளியிட்டது.

“மாப்பிள்ளை கூப்பிட்டா போகனும்  போ” பட்டும் படாமல் இதெல்லாம் அவர் பார்வையில் பட்டதால் மகளுக்கு அறிவுரை சொல்ல  பிர்லாவை விட்டு தாயை முறைக்க துவங்கினாள் ப்ருந்தா.

தன் மகளின் நேர்மையற்ற திருமணம் அங்கு எப்படிப்பட்ட பிரச்சனைகளை கிளப்புமோ என பயந்திருந்த ப்ருந்தாவின் தாய்க்கு பரம திருப்தி.

ப்ருந்தாவினுள் மூழ்கி இருந்தவனை கலைத்தது தன் தந்தையின் போன் காலில்

“சொல்லுங்க டாட்” என

 “பிர்லா சீனிவாஸ் இருக்குற இடம் தெரிஞ்சிருச்சு, வரமுடியுமா இல்லை,நான் டீல் பண்ணிக்கவா” என

“எங்கனு சொல்லுங்க நானும் வரேன், தனியா போக வேணாம் நம்ப பசங்களையும் கூப்பிட்டுக்கோங்க!” என கூறியவன், பேசியபடியே ப்ருந்தாவின் அருகில் வேகமாய் வர  அவனது சீரியஸான முகத்தை பார்த்து  அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றே விட்டாள்

எல்லாம் மறந்து புன்னகை தவழ, “கொஞ்சம் அர்ஜெண்ட் ஒர்க் அத்தை, போனால் திரும்ப வர்றது கஷ்டம், ரெய்ட் விசயமா போறேன் ப்ருந்தா வேனா சாயந்திரம் வரை இருக்கட்டும்” என

“இல்ல தம்பி இன்னைக்கு ஒரு நாளாவது ” என பேசியவரை முடிக்க கூட விடாமல்

“அதான் விருந்து நல்லபடியா முடிஞ்சதே அத்தை  அடுத்த முறை பத்துநாளுக்கு இங்க தான்” என  கூறியவன் ப்ருந்தாவை பார்த்த பார்வையில் அவளும் போர்டிகோ வந்தாள் அவனுடன் “சாரிடா  ரெய்ட் விசயமா தேடிட்டு இருந்தவன் சிக்கிட்டான்  போகலைன்னா, தலைமறைவா ஆயிடுவான் அப்பறம் கஷ்டம்” என விளக்க

அது தேவையே இல்லை என்பது போல “பரவாயில்லை  இன்னொரு நாள் பார்த்துக்கலாம்  நான் அப்பாவோட வீட்டுக்கு வந்துடுவேன்  நீங்க வேலை முடிச்சிட்டு நேரா அங்க வந்திடுங்க” என

விளக்கம் தேவையில்லாத புரிதல் அவளிடம்  அதை உணர்ந்தவனுக்கோ  பெருமிதம் நெஞ்சை நிறைத்தது.

“சரி அப்போ நான் கிளம்புறேன்”  என மேலும் பேச்சை வளர்க்காமல் காரினுள் ஏற இருந்தவனை

“ம்க்கும்” என செருமி மீண்டும் அழைத்தாள்.

“என்னடா” என கேட்டவனின் பார்வையை தவிர்த்து

“சர்ட்… பட்டன்” என கண்களை அவன் கழுத்துக்கு கீழ் இறக்க

குனிந்து பார்த்தவன், ‘இவளை டென்சன் ஆக்கவென, கழட்டப்பட்ட பட்டன்கள்’ காதலுடன் அவனை பார்த்து சிரிக்க   மெல்லிய மென்னகை அவனிடத்தில் ஏனோ அவளை வம்பிழுக்க தோன்றியது அவனுக்கு

 “பேசற நேரத்துக்கு நீயே பட்டனை போட்டு விடலாம்ல” அவள் புறமாய் நெருங்கி நிற்க  ‘போட்டால் தான் போவேன்  என்ற கட்டளை’ அவனிடம்.

கழுத்தின் கீழ் இருந்த பார்வையை லேசாய் அவன் முகம் நோக்கி திருப்பினாள் , நடுங்காமல் இருக்க பிரயத்தன பட்டது அவள் கைகள் மட்டுமல்ல அவளும் தான்.

சிரமப்பட்டு பட்டனை அவள் போட்டு விட்டு லேசாய் இவள் நிமிர, அதற்கெனவே கத்திருந்தாற்ப்போல், அவள் சிவந்த அவள் இதழ்களோடு அவசரமாய் உரசி விலகியது அவன் இதழ்கள்.

ஒரு கனம் என்றாலும் அந்த தீண்டலில்  அதிர்வாய் நடுக்கம் கொண்டாள்.

————

“இன்கம்டேக்ஸ்ஸில் ஒன்னுமே கிடைக்கலையாம்,சார்” அட்டென்டர் கண்ணன், ஸ்ரீநிவாஸிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“என்ன கிடைக்கலையா? போர்ஜரி வேலை நிறைய பார்த்து தான்டா அப்பனும் மகனும் சம்பாதிச்சு இருக்கானுங்க!” ஆத்திரத்துடன் கூறியவன் “ஒன்னு கூடவாடா மாட்டலை! நம்ப முடியலையே” என ஏமாற்றமாய் கேட்டான்.

“ஆமாம் சார். அது தான் எனக்கும் தெரியலை. நமக்கு சாதகமா அவங்களை மாட்ட வைக்கிறதுக்கு ஒரு டாகுமெண்ட் கூட கிடைக்கலை”

“டென்டர் இஸ்யூ பண்ணின அப்போவே நம்ம கண்ணுல நம்ப விரலை விட்டே ஆட்டினவன் அந்த பிர்லா. பினான்ஸ் சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டை மட்டும் கண் முன்னாடியா வச்சிருக்க போறான். இவனை குறைச்சு எடை போட்டது நம்ப தப்பு”  பினான்ஸ் கம்பெனி மேனேஜர் சுந்தரம் வாயை திறந்தார்.

“கிடைத்த  வாய்ப்பையும் தவறி போச்சே சார்  நாம இப்போ என்ன பண்றது” இது சீனிவாஸ்.

“என்ன என்ன பண்றது ,தேன் வாங்கி நக்கிட்டு போக வேண்டியது தான்” இது அட்டென்டர் கண்ணன்.

கண்ணன் சொன்ன பதிலில் சீனிவாஸ்க்கு வந்ததே ஆத்திரம், கையில் இருந்த ஏதோ ஒன்றை அவன் முகத்திலேயே விட்டெறிந்தான் “நீ  தான் நக்கிட்டு போகனும், நாங்க இல்ல !” என்றான் பல்லை கடித்த படி

ஆனால் அதை அழகாய் கேட்ச் பிடித்து “என்கிட்ட வெறுப்பை காட்டி ஒரு ப்ரயோஜனமும் சார்  இப்போ அந்த பிர்லா வந்து நம்பளை ஒரு வழி ஆக்கப்போறான் அவனை என்ன செய்யப்போறீங்க ?” கையில் இருந்த பொருளை மேஜை மீது வைத்தபடி கேட்க

“இனிமேல் பண்றதுக்கு ஒன்னும் இல்லை  அவன் நேத்தே மோப்பம் பிடிச்சு உன்னை வேலை விட்டு தூக்கிட்டான் ” மேனேஜர் நக்கல் அடிக்க

“என்ன சார் செல்ற வேலை போச்சா !எப்படி  எப்படி தெரியும் பிர்லா சாருக்கு” அதிர்ச்சியில் வாய் பிளக்க

“அடுத்ததா நீயே போக போற  இதில் வேலை போனால் என்ன, போகாட்டி என்ன ?” சீனிவாஸ் நமட்டு சிரிப்பு சிரிக்க

“ஆப்ஸ்ட்ரால் டாகுமெண்ட்ஸை எல்லாம் எங்க வச்சிருக்கான்னு கண்டுபிடிக்கமுடியலை  உங்களை எல்லாம் வச்சு வேலை வாங்கினால் தேன் வாங்கி நக்க தான் செய்யனும். அவன் சொன்னதில் ஒரு தப்பும் இல்லை சீனிவாஸ்…”  மேனேஜர் சந்தரம் சொல்ல

“எப்படியும் பிர்லா நம்பள தேடிட்டு வருவான் என்ன செய்ய !”

“இனி ஒரு தடவை நம்ப கையில் மாட்டாமளா போவான் அப்போ இருக்கு அவனுக்கு ”

‘அப்போ அவன் மாட்றது இருக்கட்டும் இப்போ நாம மாட்டினதுக்கு என்னடா பண்ண போறீங்க ’ பீதியுடன் கண்ணன் மனதில் பயம் எழுந்தது.

“இப்போ மாட்டிட்டோமே சார்  என்ன பண்றது பிளைட்டுக்கு வேற இன்னமும் டூ அவர்ஸ் இருக்கே !” நகத்தை கடித்து துப்பினான் சீனிவாஸ்  மும்பைக்கு செல்வதற்கான பிளைட்டை பற்றி இவன் பேச

“அதுவரை பிர்லா கண்ணில் மாட்டாமல் இருக்கனும் வேற என்ன பண்ண சொல்ற ?” வேறு எதுவும் செய்ய முடியாத நிலை அவருக்கு

 மூவருக்கும் டென்சன் ஏறத் தான் செய்தது.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பிர்லா,சந்திரா  ஓங்கு தாங்காய் இருந்த இருவருடன் அவர்களின் இடத்திற்கே வந்தான் வெகு அமைதியாய்.

தந்தை,மகன் இருவரும் சேர்களில் அமைதியாய் அமர்ந்துகொள்ள, அரைமணிநேரத்திற்கு பின்பு  மேனேஜர் சுந்தரத்தின் ரெசிங்னேசன், கண்ணனின்  சஸ்பென்ட், ஸ்ரீநிவாஸின் கை கால்  என சகலவிதமான ட்ரீட்மெண்டுகளும் நடந்தேறியது மூவருக்கும்.

தந்தை மகன் இருவருக்கும் வீட்டிற்கு வர இரவானது, மூவரையும் தங்கள் புறம்  இருந்து அகற்றி விட்டு வர

 “இன்னும் எத்தனை கருப்பாடுகள் நம் கம்பெனிக்குள் சுத்திட்டு இருக்கோ” சந்திரா ஆதங்கமாய் கேட்க

“டாட், இத்தனை யோசனை தேவையில்லாதது டாட் விடுங்க ”

“சீனிவாஸ் தான் இப்படின்னா, மேனேஜருமா !” இன்னுமே புலம்பிக்கொண்டிருந்தார் சந்திரா.

“விடுங்க டாட்  நல்லவன்ற வேஷம்லாம் ரொம்ப நாளைக்கு பலிக்காது  இனி டபுள் மடங்கு கவனமா இருந்துக்கலாம் ”பிர்லா நம்பிக்கை கொடுக்க

“டாகுமெண்ட் எல்லாம் உன் கையில் இருந்ததால தப்பிச்சோம் இல்லைன்னா  வெகு வருட சேமிப்பெல்லாம் காற்றில் கலந்தது போல் காணாமல் போய் இருக்கும் ” நினைவு கதி கலங்க வைத்தது,சந்திராவிற்கு.

Advertisement