ப்ருந்தா பிடித்த ஓட்டம் எங்கு நின்றதோ ஆனால் காலையில் இருந்து கண்ணாமூச்சி ஆடியவள் தன் ஒற்றை பார்வைக்கும் , ஒற்றைக்கேள்விக்கும் ஓடுவதை பார்த்து, எழுந்த பிர்லாவின் மென்னகை அவள் பிடித்த ஓட்டத்தில் ஹை பிச்சில் ஒலித்தது.
இதுவரை இல்லாத மகிழ்ச்சி…! பிர்லாவின் முகத்தில் காணவே முடியாத மகிழ்ச்சி…! தாண்டவமாடியது.
மகனின் மகிழ்ச்சி பெற்றோர்களின் முகத்திலும் எதிரொலித்தது. அதே மாறாத சிரிப்புடன், ஓடி மறைந்த மனைவியை கண்குளிர ரசித்தபடி,மாடிப்படிகளில் குதித்திறங்கினான் இளங்காளையாய்.
என்ன நினைப்பில் வந்தானோ பெற்றோர் அமர்ந்திருப்பதை கூட அவன் பார்வைகள் உணரவில்லை. பெற்றோர்களின் எதிரில் கிடந்த ஒற்றை ஷோபாவில் அமர்ந்தவன் டீபாயின் மீது கால்களை போட்டு லேசாய் ஆட்டியபடியே,நாடிக்கு கை கொடுத்து, உதட்டுக்கு தன் விரலை கொடுத்தபடி ஏதோ நினைவில் இதழ்களுக்கு புன்னகையை கொடுத்தான் கைகள் அதன் போக்கில் ப்ருந்தாவிற்கு கால் செய்தது
இரண்டு முறை பிப் என்ற சத்தத்துடன் கால் கட்டாக கோபத்திற்கு பதிலாய் இன்னமும் புன்னகை மலர்ந்தது அவன் முகத்தில்
இவனும் சளைக்கவேயில்லை அவளுக்கு போன் மேல் போன் போட்டுக்கொண்டே இருந்தான் ஒரு கட்டத்தில் இவள் போனை எடுத்து விட்டாள்.
பழையபடி ஏதோ சொல்ல போகிறான் என பட பட இதயத்துடன் அவள் கால் அட்டெண்ட் செய்ய
“வீடியோ காலிங் வா ” என சட்டமாய் இவன் பேச
“ம்ஹூம் நான் மாட்டேன் ”
“அட்டெண்ட் பண்ற இல்ல… “
“இல்லைன்னா !”
“நான் இன்னைக்கு ஆபிஸ் போக மாட்டேன் லீவ் போட்ருவேன் ”
“வேணாம் வேணாம் நான் வீடியோ காலிங் வரேன் ” என வீடியோ காலிங்கை ஆன் செய்தாள்
ஆன் செய்தாளே தவிர அதிலும் அவன் முகத்தை பார்க்கவே முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை
“வீட்டில் யாருமே இல்லை அம்மு ” அம்மு என்ற வார்த்தையில் அவள் நாடி துடிப்பு ஒரு நொடி நின்று தான் போனது.
அம்மு அம்மு என பிதற்றிய நேற்றைய இரவுகளின் மிச்சம் அவளை அவன் முகம் காண வைத்தது .
“அம்மு, நான் பேசுறதை கவனிக்கிறியா இல்லையா !” குரலை லேசாய் உயர்த்த
“ம் ம்… என்ன ?” வீட்டில் யாருமில்லைன்றானே என்னவா இருக்கும் பீதியானது அவள் மனம்.
‘டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட ஆளுமில்ல
விளையாடுவோமா உள்ள தில்லானா !’ எகிறி குதித்து பாட வேண்டிய பாடலை கதறி தவித்து பாடியது அவள் மனசாட்சி
‘அப்படினா எனக்கு அடுத்த கச்சேரி ரெடி பண்ணிட்டான் போலயே !
‘நைட் நடந்த கச்சேரிக்கே ஆர்கெஸ்ட்ரா அந்தரத்துல தொங்குது இதில் பகல்ல வேறையா ! அதுவும் வீட்டில் வேற யாருமில்ல யாருமில்லன்றானே…’
என அவளும் அவள் மனசாட்சியும் சேர்ந்து அவள் குட்டி இதயத்தில் பட பட வென மத்தளம் கொட்டி தட்டி கவிழ்த்தது.
“அம்மா கூட இல்லடீ…!” என கேட்டவனின் குரல் தாளம் போட்டது என்றால்
“அ…அதுக்கு…!”என கேட்டவளின் குரலில் தாளம் தப்பியது
“அதுக்கு என்னவா ! ஏய் யாருமே இல்லடீ பக்கத்துல !”சிறிதாய் கோபம் வெளிப்பட
‘யாருமே இல்லைன்னா அதுக்கு நான் என்னடா செய்யமுடியும் ?’ மனம் பேசியதே தவிர வாய் திறக்கவில்லை
“அம்ம்ம்ம்மு…” குரலில் ஒருவகை அழுத்தம்
எச்சில் கூட்டி விழுங்குவது ஸ்கிரினில் தெரிய
“உங்களுக்கு என்ன தான் வேணும் இப்போ ” அவன் படுத்தும் பாட்டில் அழுதே விடுவாள் போல் இருந்தது அவள் குரல்.
வாய்க்குள் புன்னகையை அதக்கியபடி “என்ன வேணுமா ! டீ வேணும் அம்மா இருந்தா அம்மாட்ட கேட்ருப்பேன் அம்மாவும் இல்லை பின்ன என் பொண்டாட்டி கிட்ட கேட்காமல் பக்கத்து வீட்டு காரன் பொண்டாட்டிகிட்டேயா கேட்க முடியும் ”என ஆழ்ந்த குரலில் இவன் கேட்க
‘ங்ஙே…’ என முகம் ஒரு போக்காய் போனது ப்ருந்தாவிற்கு ‘ஒரு டீக்காடா இத்தனை அக்கப்போரூ ’ என
மொபைல் ஸ்கீரினில் தெரிந்த அவள் நவரசத்தில் பிர்லா வாய்விட்டு சிரித்தேவிட அதைவிட பேரிடியாய் வேறொரு சிரிப்பு சத்தம் ப்ருந்தா வரை கேட்டது
இவன் சிரிக்கிறதுக்கே தாண்டவாளத்துல தலையை வைக்கனும் போல இருக்கு இதில் இப்படி பேய் மாதிரி சிரிக்கிறது யாரு ’ என்ற ரீதியில் ப்ருந்தா மொபைல் ஸ்கீரினையே பார்க்க
ஆனால் தெரிந்ததென்னவோ பிர்லாவின் முகம் தான்
இதுவரை காணகிடைக்காத பொக்கிசமாய் வெட்கம் சுமந்த முகம் அந்த முகம் நச்சென பதிந்தது அவளுள் அப்படி ஒரு முகம் பாவம் அவனிடம்
கண்களில் கனலுக்கு பதில் காதல்
விழிகள் பேசும் பாசையில் காதல் மொழி
விடும் சுவாசத்தில் காதல் வாசம்
சூட்சமமான முகத்தில் கூட வெட்கம்
வர்ணனைகளில் காதல் வண்ணம் மட்டுமே மிச்சமாய்
மொத்தத்தில் முதல் முறை காதல் வயப்பட்டவனாய் தெரிந்தான் அவள் கண்களுக்கு.
சந்திரா தான் சத்தம் போட்டு சிரித்திருந்தார்.பார்வதிதேவியோ ‘இதென்ன இவர் இப்படி சிரிக்காரு ’ என சந்திராவையே பார்த்திருக்க
அப்போது தான் தாய் தந்தை இருப்பதையே பார்த்தவன்
‘ப்ருந்தா! கூட இருந்தா கண் முன்னாடி இருக்குற அம்மா அப்பா கூடவாடா கண்ணுக்கு தெரியாமல் போய்டும் உனக்கு’
தன் கண்களோடு உறவாடிய மொபைலுக்கும், மொபைலின் வழியே குரலோடு உறவாடிய மனைவிக்கும், பதில் சொல்ல முடியாமல் மட்டியை கடித்து, தலையை கோதி, தாடையை தடவி என தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டு போனான்.
மொபைலை அணைப்பதா
தன் மனைவியிடம் பேச்சை தொடர்வதா
இல்லை இரண்டையும் விடுத்து தாய் தந்தையிடம் விளக்கம் கூறுவதா ? என தெரியாமல் அல்லாடி கொண்டிருந்தவனின் முகம் போன போக்கை ஸ்கீரின் வழியே பார்த்த ப்ருந்தாவின் மனதினுள் இந்த முகம் தான் அத்தனை நவரசங்களையும் காட்ட பச்சக் என பதிந்து போனது.
ஐய்யோ இனி அம்மா அப்பா முன்னாடி சமாளிக்க முடியாது என அங்கிருந்து படாரென நகர
நகரவிடாமல் பிடித்து தன் அருகில் அமர்த்தினார் சந்திரா “மிஸ்டர் பிர்லா போஸ் எங்கே போறீங்க உட்காருங்க ” தோழனாய் கைபிடித்து தன் அருகில் அமர்த்த
‘ஏன் இப்படி பண்றீங்க ’ என பார்வையாலேயே அவரை பார்வதிதேவி அடக்க
அதை கண்டும் காணதது போல் “ப்ருந்தாக்கு கால் பண்ணி டீ கேட்டீயே அதுக்கு முன்னாடி உன்னை பெத்தவங்களோட இருபது மிஸ்ட் கால் இருந்தது உன் கண்ணுக்கு தெரியலையா ” என மகனிடம் வம்பிழுத்தார் அந்த தந்தை.
அதுவரை இருந்த நிலை சற்றே மாற கையில் இருந்த மொபைலில் கால் லாக் சென்று பார்க்க, இருபதுக்கும் மேலான தவறிய அழைப்புகள், பார்வதிதேவியிடமிருந்தும் ,சந்திராவிடமிருந்தும்., அதுவும் நடுராத்திரிக்கும் மேல்
நெற்றி லேசாய் சுருங்க “என்னப்பா எதுவும் பிரச்சனையா ”என இருவரின் முகத்தையும் பார்த்தான்.
“நம்ம வீட்டில் தான் டாட் இருக்கு சேஃப்பா வச்சிருக்கேன்” என இவன் கூறும் முன் ஆசுவாச பெரு மூச்சு அவரிடம்
“அதெல்லாம் சரி நேத்து நைட் எங்கே போய் இருந்த ” திடீரென பார்வதிதேவி கேட்டார் தங்கள் அருகில் வந்து கொண்டிருந்த ப்ருந்தாவை பார்த்தபடியே
“நைட் எங்கம்மா போக போறேன் வீட்டில் தான் இருந்தேன் கொஞ்சமும் யோசிக்காமல் அனாயாசமாய் பொய்சொன்னான்.
“உன் ரூம்க்கு கூட வந்தேனே தாத்தா ரூமில் நீயும் இல்லை, உன் ரூமில் ப்ருந்தாவும் இல்லை ” சிறு கோபம் வெளிப்பட்டது அவரிடம்…
“நாங்க மொட்டை மாடியில் இருந்தோம் மாம் ” அசால்ட்டாய் வந்தது பொய்.
‘அடப்பாவி, நான் தான் பொய்க்கெல்லாம் மன்னி ன்னு நினைச்சா இவன் மன்னனா இருப்பான் போலவே ’ ப்ருந்தாவின் மனதினுள் ஓடியது.
“என்னது மொட்டை மாடியிலேயா ! எ எதுக்கு…” என்றவர்
“சரி திரும்பவும் எப்படி உன் ரூமுக்கே போன !”
“மாம், ப்ளீஸ் ஸ்டே அவே வித் யுவர் லிமிட், ஷி இஸ் மை வைஃப் நாட் அ ஸ்டெப்னி வேவு பார்க்குற வேலையை அப்பாவோட நிறுத்திகோங்க தட்ஸ் இட் ”
இந்த பதிலில் அம்மா என்ற அத்தியாயமே தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டது. பார்வதிதேவி அதிர்ந்தே போனார்.
“நான் அப்போவே டீ கேட்டேன் !” என வேடிக்கை பார்த்திருந்த ப்ருந்தாவை ஒரு பார்க்க
‘டீயா…’
‘அய்யய்யோ டீ போட தெரியாதே ’
பீதியுடன் கிச்சன் பக்கமாய் செல்ல
ஆவி பறக்கும் டீ டிரேயுடன் நின்றிருந்தார் வேலன்
‘உஃப்…. ரொம்ப நன்றினா…!’ என டீயை வாங்கி வந்து மூவருக்குமாய் கொடுத்து தனக்குரியதை எடுத்தபடி நகர்ந்தாள்.
திடீரென கோபம் எதனால் ! என யோசிக்க நினைத்த மூளையை அவனின் தைரியமான பேச்சு சிலிர்க்க வைக்க டீயை சுவைத்தபடியே தங்கள் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவள் நகர்ந்ததும் தாய் தந்தையின் நடுவில் வந்து அமர்ந்து, தாயின் கைகளை பிடித்து தன் கைகளுக்குள் பொத்தியபடி
“சாரி மாம், ஹார்ஷா பேசி இருந்தா சாரி,வெரி வெரி சாரி மாம் ப்ருந்தாவை என் கூட வாழறதுக்கு தான் கூட்டி வந்திருக்கேன் தள்ளி வைச்சு வேடிக்கை பார்க்க இல்லை ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மீ மாம் ” என
“நல்ல நாள் பார்க்கனும்னு சொன்னேன்ல அட்லீஸ்ட் அதுவரை கொஞ்சம் நல்லவனா இருந்திருக்கலாம்ல ” மனம் பொறுக்காமல் கேட்டேவிட்டார் பார்வதிதேவி
“கல்யாணதுக்கு முன்னாடி வரை நல்லவனா இருந்துருக்கேன் மாம் போதும் ” பட்டு கத்தரித்தார் போல் வந்தது வார்த்தைகள்.
எப்படியாவது தன்னை நியாயபடுத்த வேண்டிய நிலை அவருக்கு “அவ சூசைட் பண்ற மாதிரி நடிச்சு தான் உன்னை கல்யாணம் ” என்றவரை முடிக்கவிடாமல்
“ஐ நோ மாம் ஐ நோ வெரி வெல்… வெரிவெல் அபவுட் மை லவ் “
“ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் மாம் என்னை அவகிட்ட இருந்து பிரிச்சுடாதீங்க “
“ரொம்ப விளையாட்டு தனமா இருக்கா பிர்லா ஏற்கனவே ஒரு தடவை அவளால தான் உனக்கு பிட்ஸ் வந்தது “ இதையும் முடிக்கவிடவில்லை அவன்.
“அவ மடியிலேயே நான் செத்து போனா கூட கவலை பட மாட்டேன் மாம் ” அவன் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகளில் பார்வதிதேவியின் கண்கள் நிறைந்தது
“பிர்லா, என்னடா பேச்சு இதெல்லாம்” இன்னொரு கையின் விரல்களை சந்திரா அழுத்தமாய் பிடிக்க.
மகனின் மனம் எந்தவிதத்திலும் பாதிப்படைய கூடாது என்று தான் சந்திராவையும் கெங்காவையும் சகித்துக்கொண்டிருக்க ஆனால் இவன் எவளோ ஒருத்திக்காக செத்தாலும் கவலை பட மாட்டேன் என சொன்னது பார்வதிதேவிக்கு மட்டுமல்ல எந்த தாய்க்கு தான் பொறுக்கும் மனமுடைந்து போனார் பார்வதிதேவி.
தன் மனக்கஷ்டம் தன்னுடனே போகட்டும் என அமைதியாய் அந்த இடத்தை காலி செய்தார் பார்வதிதேவி.
“டாட் , நான் எதுவும் தப்பா பேசிட்டேனா ” தாயின் சோர்ந்த முகம் அவனை பேச வைக்க
“அவளோட லிமிட்டை கிராஸ் பண்ணினது தப்பு தானே விடு அவளே புரிஞ்சிப்பா ” என மகனது முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தவர்
“பிர்லா , இன்னைக்கு ரெய்ட் வேற இருக்கு டாகுமெண்ட்ஸ் எல்லாம் எங்கடா இருக்கு” என அவனை திசை திருப்ப
“சேப்டி லாக்கர்லப்பா !”
“சேப்டி லாக்கரா ? அதை எப்போடா நம்ப வீட்டுக்குள்ள கொண்டு வந்த?”
அது ஆச்சு இரண்டு மாசத்துக்கும் மேல
“அடப்பாவி, இது தெரியாமல் கம்பெனி காலேஜ்னு ,வயசான காலத்தில் அலையவிட்டுடியேடா ! லாக்கரை எங்க பிட் பண்ணிருக்க ” என சந்திரா கேட்க
சட்டை பாக்கெட்டில் இருந்தபேனாவை எடுத்தான். அதன் கீழ் மூடியை திருக திருக
ஹாலின் ஒரு மூலையில் இருந்த மார்பிள்கல் மேல் நோக்கி எழுப்பிக்கொண்டே வந்து முடிவில் பெட்டி போன்ற அமைப்பில் வந்து முடிவு பெற்றது.
அந்த லாக்கரின் மேல் புறம் மார்பிள் கல்லோடு பதிக்கப்பட்டிருக்க, சந்திராவே வியந்து போனார்.
“பரவாயில்லை சேப்டியான இடம் தான் ” லாக்கரை திறந்து டாகுமெண்ட் எல்லாவற்றையும் பார்த்தவாறே
“டேய் ஹார்ட் காப்பி மட்டும் தான் இருக்கு சாப்ட் காபி எல்லாம் எங்கே வச்சிருக்க !” என கேட்க