Advertisement

“இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க

“வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த  நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா.

அடேய் உன்ன நான் சிமெண்ட் பாக்டரினு நினைச்சிட்டு இருந்தா  நீ இப்படி ஐஸ்க்ரீம் பாக்டரியா இருக்கியேடா  இன்னைக்கு நான் அவ்வளவு தான்… ப்ருந்தா இன்னைக்கு நீ ஃபீரிஷ் ஆக போறது உறுதிடீ  என நினைப்பு ஓட

அவனிரு கைகளுக்குள் அவள் இடை லாவகமாய் இடம் பிடித்திருந்தது.  அவன் கைகளுக்காகவே செய்ததைப் போல் அடங்கி கிடந்தது அவள் மென்னிடை .அதை பார்த்தபடியே பெருமூச்சு எறிந்தவளின் தோளில் தன் நாடியை முட்டுக்கொடுத்து “வீட்டுக்கு போற ஐடியா இல்லையா உனக்கு” என இவன் சொல்ல  அதன் பின் சிரமப்பட்டு வண்டியை ஓட்டினாள்.

வேறு எந்த சில்மிசங்களும் செய்யாமல் வந்ததே பெரிது என ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.

இடையில் இருந்த கையை எடுத்துவிட்டு இவன் இறங்கி நிற்க  அதற்காகவே காத்திருந்தார்ப்போல் , பைக் ஸ்டாண்ட் போட்ட அடுத்த நொடி காற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.  இந்த முறை வெகு சிரத்தையாய் கதவை வேறு லாக் செய்ய மறக்கவில்லை அவள்.

‘ப்ருந்தாவை கண்டாலே நீ அலறிட்டு ஓடுன, இப்போ  உன்னை பார்த்து  அவள் அலறி அடிச்சிக்கிட்டு ஓடுறா!’ தனக்குள்ளே சிரித்து கொண்டவன், வண்டியை ஷெட்டில் விட்டுவிட்டு இவனும் உள்ளே வந்தான்.

அறையினுள் இருந்த ப்ருந்தாவோ,  பட படவென கொட்டி கவிழ்த்த இதயத்திற்கு பெரிய பெரிய மூச்சுக்களை அனுப்பி ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தாள் கட்டிலில் அமர்ந்தபடியே.

மிஞ்சி போனால் பத்துநிமிடங்கள் தான் இருக்கும்.  கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கண் விழிக்க  மறுபடியும் இதயம் முரசு கொட்ட தயாரானாது, தன் கண்களுக்குள் பாய்ந்த பிர்லாவின் உருவத்தால்

‘நான் தான் கதவை லாக் பண்ணினேனே  இவன் எப்படி உள்ளே வந்தான்!’ இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது அவளுக்கு.

“கதவு இல்லைன்னா பால்கனி வழியா வந்துடுவேன்” ஒற்றை வார்த்தையில் அத்தனை கேள்விக்கும் பதில் கூறியபடி சட்டை பட்டன்களை கழற்றினான் பிர்லா.

‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் டைட்டில் மாதிரி ‘கதவு இல்லைன்னா பால்கனி’ன்றானே  முகம் சிறிதாய் வெளுத்தது.

‘அடியேய் திரிஷாவ விடு, இவன் சட்டையைவேற கழட்டி தொலைக்கிறான்…! முதலில் அதை பாரு.’ என மனசாட்சி கூறியதில் எச்சில் மொத்தமாய் இறங்கியது தொண்டையினுள்.

“தெரிஞ்சுக்க வரியா?” என கண் சிமிட்டியபடி அவளை நெருங்கினான் பிர்லா

‘என்னத்தை தெரிஞ்சுக்க கூப்புடுறான் இவன்’ பீதியானாள் இவள்.

அவள் விழிகளின் கேள்வியை சரியாய் புரிந்து கொண்டவன் “ம்  ABCD கூட தெரியாதுனு சொன்னேல்ல! அதான் தெரிஞ்சுக்க வரியானு கூப்பிட்டேன்?” இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தான்.

அவன் வார்த்தைகளும்,செயல்களும்  அவளை கட்டிலில் இருந்து குதித்து இறங்க வைக்க

அதை பார்த்து சிரித்தபடி அவளை நோக்கி இவன் முன்னேறினான்

“கிட்ட வராதே பிர்லா” என பின்னால் நகர்ந்தாள் இவள்.

“வந்தா தானே ABCD கத்துக்க முடியும் வா”

“எனக்கு எதுவும் கத்துக்கவே வேணாம்  ஆளை விடு” என அவனிடமிருந்து தப்புவதிலேயே இவள் குறியாய் இருந்தாள்.

“அதெப்படி நீ வேணாம்ன்னு சொல்லலாம்? ABCD கூடபார்க்க முடியலன்றே, அப்போ அதுக்கு பிறகுலாம் எப்படி!”

கண்ணு ப்யூசா போய்டும்னு சொல்றே! நிறைய எக்ஸ் பெக்டேசன்னு வேற சொல்ற!

இத்தனையும் கூட அக்சப்ட் பண்ணிப்பேன்  ஆனால் கடைசியா சொன்னியே ஒன்னு” என நிறுத்தினான்.

‘ஐய்யய்யோ இத்தனை பேசி இருக்கோமா!  இதுவே ஓவர்  இதுக்கும் மேல என்னத்த பேசி தொலைஞ்ச ப்ருந்தா?’ மனசாட்சி மீண்டுமாய் ஒரு கொட்டு வைத்தது.

“எதுவும் தெரியலைன்னா வீடியோ பாருனு சொன்னியே அத தாண்டி என்னால் தாங்க முடியல…” என்றவன் அவள் இதழ்களில் பார்வை பதித்து

 “அன்னைக்கு இவ்வ்வ்வ்ளவு பேசின இந்த வாயை இப்போ…… இன்னைக்கு…. என்ன செய்யலாம்? அவளை வெகுவாய் நெருங்கினான்

‘அதான் ஏற்கனவே பப்புலயே கடிச்சு வச்சிட்டியே இன்னமும் என்னடா செய்யனும்கிற’ என்றபடி அவள் பார்க்க

‘இதெல்லாம் ஜூ ஜூப்பி… இனிமேல் தாண்டி செய்யவே போறேன்’  என அதே பார்வையாலே இவன் பதில் கொடுக்க

வயிற்றை கலக்குவது போல் இருந்தது அவளுக்கு. அவள் நகர்வதற்குள் இடையில் கைகொடுத்து அலேக்காய் தூக்கியிருந்தான்

“பிர்லா விடு  விடு ” கை கால்களை உதற

“இன்னும் ஒன்னு சொன்னியே  குட் டச் பண்ணாத பேட் பாயா நான்… ரொம்ப தப்பா புரிஞ்சு வச்சிருக்க!” சொல்லியபடியே பொத் என கட்டிலில் போட்டான் அவளை.

கட்டிலில் விழுந்த அடுத்த நொடி மீனாய் துள்ளி எழுமுன், தூண்டிலாய் அவள் மீது விழுந்தான் பிர்லா

தூண்டிலில் சிக்கி அந்த மீன் மீண்டும் துள்ளிகொண்டே இருக்க

“ABCD தான் வேணாம், பாப்பாவும் வேணாமா?” ஒரு வித ஆழ்ந்த குரல் பிர்லாவிடமிருந்து வந்தது.

“பாப்பா,” என்ற வார்த்தையில் துள்ளுவதை விட்டு மௌனமானாள்.

“ம் சொல்லு  வேணாமா!” நேராக இதழ்களோடு உரசினான்.

“சொல்லு” உரசியவன் அழுத்தமாய் முத்தமிட்டான் அவள் இதழ்களில்.  பதில் அவள் சொல்லவும் இல்லை, இவனுக்கு பதில் தேவையும் இல்லை

இதழ்கள், கைகள் என அது அதற்கு தனித்தனியாய் காதல் கட்டளைகளை அவன் பிறப்பிக்க காதல் போர்களமானது அங்கே

சூரியனின் வெம்மையில் உயிர்பெற்றது அந்த குளிர் நிலவு

குளிரில் மட்டும் தான் உறைதல் சாத்தியமா

இதோ வெம்மையிலும் சாத்தியம்!

குளிர் நிலவினையும்  வெம்மையாய் மாற்றிக்கொண்டிருந்தான் அந்த சூரியன்.

—————

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் திரும்பி படுக்க, முகத்தில் மோதிய சூரிய வெளிச்சத்தில் நேரம் உறைத்தது. பட்டென கண்விழித்து பார்த்தாள் ப்ருந்தா. அவளிடை அவன் கையில் சிக்குண்டு கிடந்தது.  தாய்க்கு பயந்து எழுந்து கீழே போய் இருப்பான் என நினைத்திருக்க. இவன் அவள் அருகில் இருக்க,  சிறிதாய் அல்ல மிக பெரிதாய் ஒரு நிம்மதி.

அவன் உறக்கம் கலையாமல் எழுந்து பாத்ரூமினுள் புகுந்து கொண்டாள்.

குளித்து வந்தவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் பால்கனியில் வந்து நின்றாள். கீழே இறங்கிச் செல்ல ஏதோ ஒன்று தடுத்தது.

சிறிது நேரம் கழித்து எழுந்தவனோ,முகத்தை அந்தபுறம் இந்தபுறம் என திருப்பி பார்வையாலேயே அவளை தான் தேடினான். தேடியவள் தான் கிடைத்தபாடில்லை ’கீழே சென்றுவிட்டாள் போலும்’ என மெதுவாய் எழுந்து ரெப்ரஷ் ஆகி கதவை திறந்து வெளியே வர, அத்தனை நேரமும் அவனையே சைட் அடித்துக்கொண்டிருந்தவள், அவன் பின்னே பூனை போல் மெதுவாய் இறங்கி வந்தாள்.

காலை எட்டுமணி வரை காலேஜிலும், பினான்ஸ் கம்பெனியிலும் டாக்குமெண்டுகளை அப்புறப்படுத்துவதிலும்  நேரம் ஓடி மறைய, அப்போது தான் உள்ளே வந்தனர் சந்திரா பார்வதிதேவி இருவரும்.

“வேலா ” என குரல் கொடுத்த படியே “பிர்லா வந்துட்டானா பாரு ” என ஷோபாவில் அமர  ஜோடியாய் வந்த இருவரையும் பார்த்தபடி “வந்துட்டான் ” என லேசாய் முகம் சுருக்கியபடி சந்திராவிற்கு பதில் சொல்ல  இருவரின் பார்வையும் இளையவர்கள் மீதுதான்

தன் மீதான பார்வையும் தனக்கு பின்னால் சென்ற பெற்றோரின் பார்வை தொடர்ந்து இவனும் பார்க்க  பூனை போல் இறங்கி வரும் மனைவியை பார்த்து சத்தமாய் சிரித்தே விட்டான் பிர்லா

அதுவரை யாரையும் பார்க்காமல்  மாடிப்படிகளிலேயே பதிந்த இவன் காலடிகளிலேயே பார்வை பதித்தவள் சத்தமான சிரிப்பில் திடுக்கிட்டு கால் ஸ்லிப் ஆக, லாவகமாய் பிடித்துக்கொண்டான்.

எப்படியோ நின்று நிதானித்து , அவனை தாண்டி கடந்து போக, போகவிடாமல் பிடித்து நிறுத்தியது பிர்லாவின் கைகள்

அவனிடமிருந்து கைகளை திருகியபடியே “விடுங்க பிர்லா ”

“என்னாது  விடுங்க… ங்க ங்க வா…!” என வாய் பிளக்க

“ப்ளீஸ் பிர்லா  விடுங்க”

“ஒரு நாளில் மரியாதை தானா வந்திடுச்சு போல…”

“ம்  நீங்க முதல்ல விடுங்க ” பிடி தளரவே இல்லை அவனிடம்

இன்னும் இருக்கிப்பிடித்தபடி “நீங்க முதல்ல என் கண்ணை பார்த்து பேசுங்க “ அவன் முகத்தை பாராமல் அவன் சட்டையிலேயே பதிந்திருந்த அவள் விழிகளை சீண்டினான் பிர்லா…

“ம்ஹூம் ” மாட்டேன் என்பதாய் தலையசைக்க

“நீ நிமிர்ந்தே பார்க்க முடியாத அளவுக்கு நான் ஒன்னுமே பண்ணலையே ப்ருந்தா ”

“பிர்லா ” இவள் சிணுங்க

“ABCD கரைக்ட்டா காத்து கொடுத்தனா !”

“ப்ளீஸ் இப்படிலாம் பேசாதீங்க ”

“எக்ஸ்பெக்டேஷன் எல்லாத்தையும் புல்ஃபில் பண்ணிட்டேனா !”

“ஐய்யோ… பிர்லா…ப்ளீஸ் ஸ்டாப் திஸ் ”

“பேட் டச் பண்ற குட் பாய் தானே நான் !” என இறுதியாய் சொல்ல

அவ்வளவு தான் ஒரே உதறலில் அவனை உதறி தள்ளிவிட்டு எங்கு செல்கிறோம் என தெரியாமல் ,யார் கண்களுக்கும் சிக்காத ஒரு இடத்தை தேடி ஓடினாள் ப்ருந்தா.

இத்தனையும் கண்ட சந்திரா,அவர்கள் பேசுவது காதில் விழாத போதும் அவர்களின் காதலில் சிறு புன்னகையுடன் பார்வதிதேவியை பார்க்க பார்வதிதேவிக்கு கூட லேசாய் புன்னகை எழ திரும்பிக் கொண்டார்.

தென்றலாய் பிறந்து,இளந்தென்றலாய் வளர்ந்து புயல்காற்றாய் வலம் வந்தவளை வாடைக்காற்றாய் மாற்றி விட்டான்  இந்த சுறாவளிக்காற்று.

உன் கண்களால் கலவரமாகுதடா உள்ளம்

உன் முகம் பார்த்து பேசினால் மூர்ச்சையாகுதடா நெஞ்சம்

உன்  இதழ்கள் பொழியும் வார்த்தைகளில் மூச்சையும் அடைக்குதடா

உன் விழிகளில் வழியும் பார்வைகளில் பேச்சையும் தகர்க்குதடா

பார்க்க சொல்லாதே

பேச சொல்லாதே

மொத்தத்தில் என்னை கொல்லாதே !

Advertisement