Advertisement

பகுதி 15

ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள்.

ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே

மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே!

எந்த ஒரு குறையும் கூறாமல் அவளை ஏற்றுக்கொண்டதற்கான முக்கிய காரணம் அவள் காதல்… பிர்லாவின் மீதான அவள் காதலால் தான் இத்தனையும் நடந்து முடிந்திருக்கிறது என பார்வதிதேவி உணர்ந்தார். அதனால் தான் எந்தொரு எதிர்ப்பையும் காட்டாமல் அவளை வீட்டினுள் விட்டது.

ஆனால் இப்போது சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த  ப்ருந்தாவுடனான விவாதங்கள்,அவளின் கோபம், குத்தலான பேச்சுக்கள், எல்லாவற்றுக்கும் மேல் இதெல்லாம் நடிப்பு ப்ருந்தாவின் முழு நடிப்பு என அவளின் மூலமே தெரிய வந்த போது அதிர்ந்து தான் போனார்.

அதையெல்லாம் யோசிக்க யோசிக்க தலைவலியே மிஞ்சியது. ஏற்கனவே ப்ருந்தாவின் குடிப்பழக்கமே அவளது நன்மதிப்பை தரையிறக்கி இருந்தது எனில், அவளின் ‘நடிப்பு’ என்ற ஒற்றை சொல்லில் அவளது காதலும் தரையிறங்கிப் போயிற்று, ஒருவேளை அவளது காதலும் நடிப்போ என்று.

ப்ருந்தாவை பற்றி முழுவதும் மகனிடம் பேச வேண்டும்,அவளின் பேச்சுக்கள், விவாதங்கள்,நடிப்புகள் என அனைத்தையும் பேச வேண்டும். அதன் பின்பு தான் அவன் வாழ்வு தொடங்க வேண்டும். ஆனால் அதுவரை இருவரையும் பிரிக்க தான் வேண்டும் இன்று ஒரு நாளாவது பிரிக்க தான் வேண்டும் என நினைத்து தான் பிர்லாவை சதாவுடன் தங்க வைத்தது.

பிரித்து விட்டதாய் பார்வதிதேவி நினைத்திருக்க, அந்தசிறு பிரிவு தான் அவர்களின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்பதை அறியாமல் போனார்.

மகனின் மேல் நம்பிக்கை இருந்தாலும் , அவன் காதலியின் மீது நம்பிக்கை இல்லை. கண்களை தழுவிய தூக்கத்தையும் விட்டு, மகனை சென்று பார்க்க, அங்கே மகனும் இல்லை  ப்ருந்தாவை சென்று பார்க்க அங்கே மருமகளும் இல்லை. ‘இரண்டு பேரையுமே காணோமே ’ என்ற யோசனையின் ஊடே

“தூங்காமல் இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க !” சந்த்ரபோஸின் குரலில் பதறி திரும்பினார் பார்வதிதேவி.

“சும்மா தான் ” என்ன சொல்வதென தெரியாமல் திரு திருவென முழிக்க

“சும்மா எல்லாம் வர்ற ஆள் இல்லை நீ ” காரணம் வேண்டும் என இவர் நிற்க

“இரண்டு பேரையும் காணும் ” என பிர்லாவின் அறையை பார்த்தார் பார்வதிதேவி.

“வெளியே  எங்கேயாவது  போய் .” என சொல்ல வந்தவர்.

“இந்த நேரத்தில் நீ ஏன் அவங்களை வேவு பார்த்துட்டு இருக்க ! இந்த நேரத்தில் அவங்க ரூமுக்கு வந்ததே தப்பு இதில் இரண்டு பேரையும் காணும்னு வேற…. சீ நீயெல்லாம் திருந்தவே மாட்டீயா !” காச்சு காச்சு என காய்ச்சி எடுத்துவிட்டார் சந்திரா.

“போதும் நிறுத்துறீங்களா !” இதற்கு மேலும் மறைக்க முடியாது என ப்ருந்தாவின் நடவடிக்கைகள் அனைத்தையும் சொல்லி முடித்தவர், பிர்லாவையும் ப்ருந்தாவையும் பிரித்து  வைக்க வேண்டும் என ஆலோசனையும் சொல்ல

கையை மார்புகிடையே கட்டிக்கொண்டபடி…

“என்னை மாதிரி இரண்டாவதா  ஒரு பொண்ணை பிர்லா தேடிப்போகனுமா ! வேண்டாமான்னு ! நீயே முடிவு பண்ணிக்க ” என அத்தனைக்கும் ஒற்றை வரியில் பதில் உறைக்க

பார்வதிதேவியின் முகமே இருண்டு போனது.

“நான் நடிச்சு தான் கல்யாணம் பண்ணினேன்னு, அவளே உன்கிட்ட ஒத்துக்கும் போது, பிர்லாகிட்ட சொல்லாமல் இருக்க மாட்டாள்” பிரச்சனையின் ஆணி வேரை பிடித்தார் சந்திரா, ஆனால் அதன் பின்பும் விடுவேனா என

“இது அவன் வாழ்க்கை,  என்னைக்கு ஆரம்பிக்கனும்னு நினைக்கிறானோ அது அவன் இஷ்டம்  அது இன்னைக்கோ,நாளைக்கோ  ஆனால் இதில் நீ தலையிட்ட  உனக்கு மரியாதை அவ்வளவு தான்  என் வாழ்க்கையை தான் ஆட்டி படைச்ச  அதோட நிறுத்திக்க, இனி பிர்லா லைப் ல விளையாண்ட… நான் மனுசனா இருக்க மாட்டேன்” என பார்வதிதேவியை பேசவே விடாமல் முற்று புள்ளியை வைத்துவிட்டு நகர்ந்தார் சந்திரா. ஆனால் ப்ருந்தாவிற்கு ஆதரவான பேச்சு,அந்த முற்று புள்ளியை கமாவாக மாற்றியது, அது ப்ருந்தாவின்  மீதான கோபமாய் உருமாறியது.

இப்போதைக்கு இருவரையும்   பகைத்துக்கொள்ள கூடாது என முடிவு செய்தபடி அவர்களது அறைக்குள் நுழைய  சந்திரா போனில் கத்திக்கொண்டிருந்தார்.

“என்ன  ரெய்டா !”

“ஆமா சார், இன்பர்மேஷன் வந்தது  நாளைக்கு ரெய்ட் சார்  முடிஞ்சளவு எஸ்கேப் ஆகிக்கோங்க பெட்டர் ” என போனை வைத்து விட

“என்னங்க யார் போனில் ?”

“காலேஜில் இன்கம்டேக்ஸ் ரெய்டாம்  அதுவும் நாளைக்கே  சரி நான் பிரின்சிபல்ல வர சொல்லிடறேன்,முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணனும், அப்படியே நம்ம பினான்ஸ் கம்பெனிக்கும் ரெய்ட் நடக்க சான்ஸ் இருக்கு  பிர்லா வந்தா, காலேஜ் வர சொல்லிடு ” நடு இரவு என்றும் பாராமல் இவர் துரிதமாக,

“இரண்டு பேரோட போனும் ரூமில் தான் இருக்கு ” முகத்தை திருப்பியபடி பதில் சொல்ல

“நீ திருந்தவே மாட்ட…“ என விறு விறுவென போஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு கிளம்பிச் சென்றார்.

பிர்லா வர போவதில்லை, என பார்வதிதேவியும் அவர்களது பினான்ஸ் கம்பெனிக்கு  கிளம்பி சென்றார்.

தவறாக எதுவும் செய்யாத போதும், பிளாக் மனி ஜாஸ்தியாகவே பதுக்கி இருந்தனர், அதை பினான்ஸில் போட்டு இன்னமும் அதிகப்படுத்தி இருந்தனர். அதை பற்றிய அத்தனை டாகுமெண்டையும் மறைக்க வேண்டுமே என அரக்க பறக்க  ஓடினர் இருவரும்.

ஆனால் பப்பில்  ப்ருந்தாவோ… பிர்லாவின் ஒற்றை முத்தத்திலேயே அரண்டு போய் கிடந்தாள்.

சற்று அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது பிர்லாவின் முத்தம் வலுவிலக்க  வலுவிலந்த அடுத்தநிமிடமோ, அவனை விட்டு விலகி விட்டாள் ப்ருந்தா.

தான் வேண்டாமென மறுக்கும் போதெல்லாம் நெருங்குபவள், தான் நெருங்கும் போது விலகி நிற்பது பெரும் அவஸ்தையாய் இருந்தது பிர்லாவிற்கு. அதன் பின்பே பப் என்பது உறைத்தது அவனுக்கு.

சுற்றும் முற்றும் பார்த்தவனோ ‘இவ கிட்ட இருந்தா, பப்பும்னும் மறந்திடுறோம் பப்ளிக் பிளேஸ்ன்றதையும் மறந்திடுறோம்…’ என பின்னந்தைலையை கோதியவன்

“போகலாமா” என இவன் அழைக்க  பதில் எதுவுமே கூறாமல் அமைதியாய் வந்தவளின் இதழ்களே அவனை மிகவும் கவர்ந்திழுக்க  ‘எப்படி இருந்த பிர்லா இப்படி ஆயிட்டியேடா!’ என தலையை உலுக்கியபடி அவளுடன் வெளியே வந்தான்.

இவன் பரிசளித்த ஓட்கா பாட்டில்கள் போகும் அவர்களை பார்த்து சிரித்தது.

பைக் எடுத்து வர, பின்னால் இவள் அமர்ந்தாள்.

பப்பிற்கு வரும் போது எத்தனைக்கெத்தனை இறுக்கி அணைத்தபடி வந்தாளோ அதை விட இருமடங்கு அவனை விட்டு விலகியபடி இப்போது வந்தாள் ப்ருந்தா.

அதை உணர்ந்தவனுக்கு கள்ளச்சிரிப்பு மேலேட்டமாய் எழுந்தது… ‘இதுக்கேவா? இருடீ உனக்கு இருக்கு’ என ஆளில்லாத அந்த சாலையிலும் சடன் பிரேக் அடித்து அடித்து ஓட்டினான் வண்டியை.

அதை எதிர்பாராமல் பலமாய் அவனுடன் மோத இருக்கும் கடைசி நிமிடங்களில் எல்லாம் தன் கைளால் தடுத்தபடி தப்பித்துக்கொண்டே வந்தாள் ப்ருந்தா

 “இவன் சரியான ரெமோவா இருப்பான் போலயே ப்ருந்தா, இவனை போய் அம்பின்னு நினைச்சு வசமா சிக்கிட்ட போலயேடீ?” மனதினுள் நினைத்தபடி அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டே வந்தாள் ப்ருந்தா.

பலத்த ஏமாற்றம் பிர்லாவிடம் ‘ஒரு சான்ஸ் கூட கிடைக்க மாட்டேன்ங்குதே!’   ‘ஏன் இவள் இப்படி பண்ணி தொலைக்கிறா?’ என்ற கடுப்பில் வண்டியை நிறுத்தியேவிட்டான்.

“இறங்கு ப்ருந்தா!” என இவன் பேசியபின்பே சூழ்நிலை உறைத்தது.”ஏன் என்னாச்சு?” என்றபடி இவள் இறங்க

ஹேண்ட் பாரில் இருந்து கையை எடுத்தவன், கால்களை  ஊன்றியபடியே சர்ரென பின் நகர்ந்தான் அமர்ந்த வாக்கிலேயே!

புரியாமல் பார்த்தவளிடம் “இப்போ நீ தான் ட்ரைவ் பண்ண போற பண்ணு!” என ஒரு மார்க்கமாய் கூறினான்.

“நானா? நான் டிரைவ் பண்ணவா? நான்! எ எனக்கு… எனக்கு இந்த வண்டிலாம்!” என திக்கி திணறியவளிடம்

“ஓட்டதெரியாதுன்னு மட்டும் சொல்லிடாத… ம்  அவன் பேர் என்ன…! ம்  நவீன்   அவனோட பைக்கில் டிரைவிங் பழகுறேன்னு,  பீச்சையே ரவுண்ட் அடிச்சியே அதை நான் ஏற்கனவே பார்த்துட்டேன்  சும்மா காரணம் சொல்லிட்டு இருக்காமல் வண்டியை எடு” என

‘அய்யோ நவீன் னு பேரு வரை நியாபகம் வச்சிருக்கான்  பாவி என் பின்னாடி எனக்கே தெரியாமல் சுத்திருக்கான் போலயே!’ என கண்கள் சாசராய் விரிய

‘இதுக்கு தான் கொஞ்சமா ஆடனும்கிறது… கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஆடிருப்பே இப்போ பாரு அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு  நல்லாவே ஆடறான் இவன் ’

‘இப்போ பீல் பண்ணி ஒரு ப்ரயோஜனமும் இல்லை  சாவுடீ சாவு’ என மனசாட்சி பெரிய குட்டாய் வைத்தது.

இனி நடித்து பயனில்லை என அணிந்திருந்த ஜீன்ஸின் உதவியால் முன்புறமாகவே காலை போட்டபடி லாவகமாய் ஏறி அமர்ந்தாள். பின்னால் இடித்தபடி அமர்ந்திருந்தவனை  தள்ளி உக்காரு பிர்லா” என இவள் நெளிய.

“ஏன் படுத்து தூங்க போறியா என்ன? 50 கிலோக்கு இந்த இடமே ஜாஸ்தி தான் ஓட்டு” என ஒரு இன்ச் கூட நகராமல் அசால்ட்டாய் சொன்னவன், அவள் வண்டியை ஓட்ட ஆரம்பித்த அடுத்த நொடி அவள் இடையை தன் இரு கைகளாலும் சேர்த்து இறுக்கமாய் கட்டிக்கொண்டான்.

Advertisement