Advertisement

‘இவங்க  இரண்டு பேரும் எப்போ பேசிக்கிட்டாங்க ?’ என்ற கேள்வியை முந்திக்கொண்டு வந்தது வேறொரு சந்தேகம்   ‘என்ன பேசி வச்சானு தெரியலையே !‘  அதே சந்தேகத்துடன் பல்லை கடித்தவன், மீண்டும் மொபைலை எடுத்து ப்ருந்தாவை அழைத்தான்.

முதல் அழைப்பிலேயே எடுத்தாள் காத்திருந்தவள் போல.

“எப்போ அம்மாகிட்ட பேசின ? என்ன பேசின ?”பற்களுக்குள் இருந்து சிக்கி கொண்டு வந்தது வார்த்தைகள்

“எனக்கு உன்னை பார்க்கனும் பிர்லா  அதுவும் கடைசியாய் ஒரே ஒரு தடவை  கோவிலுக்கு வர்றியா ?” சோம்பலாய் வந்தது வார்த்தைகள்

அவளது குரல் வித்யாசம் ஏதோ பிரச்சனை என கூறியது என்றால், அவளது வார்த்தைகள் பிரச்சனை தான் என அடித்து சத்தியம் செய்தது

“எதுவும் பிரச்சனையா ப்ருந்தா !” இவன் நெற்றிகள் சுருங்க

“நான் சாகறதுக்குள்ளவாவது வந்திடு பிர்லா ” வெகு அமைதியாய் நிதானமாய் வந்துவிழுந்தன வார்த்தைகள்.

“ஏ ஏய்  என்ன ? என்ன சொன்ன ?”நழுவிய மொபைலை இறுக்க பிடித்தபடி  வார்த்தைகளும் மறந்து போக

பதிலில்லை அவளிடம் மெலிதாய் விரக்தியில் வந்தது சிரிப்பு

“என்னடீ பண்ணி தொலைச்ச !” கேட்ட பிர்லாவிற்கு உள்ளுக்குள்ளே சென்று கொண்டிருந்தது குரல்

“ஸ்லீப்பிங் டோஸ் போட்டுட்டேன் ! அதுவும் பத்து ! போட்டு ஒரு மணிநேரம் ஆச்சு  அட்லீஸ்ட் நான் சாகுறதுக்குள்ளயாவது வந்திடு ” என கட் செய்துவிட்டாள்.

மீட்டிங்கில் அவள் கால் செய்த நேரமும் தற்போதைய நேரமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வித்யாசத்தை காட்ட  தன் நெற்றில் ஓங்கி அறைந்தான்

அதன் பின் விவேகம் அவனை தொற்றிக்கொள்ள  அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்த கோவிலில் இருந்தான்  வேக வேகமாய் சுழன்ற கண்களுக்குள் அகப்பட்டாள் ப்ருந்தா

தூணோடு தூணாய் அதில் இருந்த சிலையோடு சிலையாய் ஒட்டி கிடந்தவளிடம் கிட்டதட்ட ஓடினான்.

“ப்ருந்தா, ஹேய் இங்க பாரு” ஒரு புறமாய் சரிந்திருந்த முகத்தை ஆனமட்டும் பலமாய் தட்டி உலுக்க பலகீனமாய் கண் திறந்தாள்.

அதற்கு மேலும் அவன் தாமதிக்க வில்லை  அவளை ஒற்றை கையில் எழுப்பி தன்னுடனே இழுத்து செல்ல  எத்தனித்தான்.

“எங்கே! பி…ர்….லா…?” தன்னை யாரோ இழுக்கிறார்கள் என புரிந்து போய் கண் விழித்தவள் அது பிர்லா என உணர்ந்து “எங்கே என்னை கூப்பிடுற பிர்லா” என கேட்டாள்.

“என்ன கேள்வி இது, ஹாஸ்பிடலுக்கு தான் ப்ருந்தா”  அதை விட பலகீனமாய் இவன் சொல்ல

நன்றாக கண் விழித்தவள், அப்போதும் சொருகி கிடந்த விழிகளோடு “ஹாஸ்பிடல் தானே போகலாம் ஆனால் அதுக்கு முன்னாடி!” என இழுத்தவள் வலது கையில் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அவன் முன் நீட்டீனாள்.

மீண்டும் ஒரு முறை தன் முகத்திற்கு நேராய் ஆடிக்கொண்டிருந்த தாலியை பார்த்து “மறுபடியுமா ” என கண்கள் சாசராய் விரிந்தது.

“அன்னைக்கு நான் உனக்கு கட்டின தாலிக்கு தான் மதிப்பில்லை  ஆனால் இன்னைக்கு நீ கட்டபோற தாலிக்கு  மதிப்பு அதிகம், கட்டு பிர்லா ”

“ப்ருந்தா ” அதிர்வை உள்வாங்க பல நொடிகள் ஆனது.

கண்கள் சொருகிக்கொண்டு வந்தது அவளுக்கு ,”சீக்கரம் பிர்லா, நான் சாக முன்னாடியாவது உன் தாலியை வாங்கிட்டு சாகனும் !” என அந்தகிரக்கத்திலும் லேசாய் விரிந்தது இதழ்கள்.

“பீளீஸ் பிர்லா “ அவள் கண்களோடு மனமும் யாசிக்க

அடுத்தநொடி காற்றில் ஊஞ்சாடிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறு, அவளது மார்பில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. கோவிலில் அந்த அம்மன் சந்நிதியில் அவளை தன் மனைவியாய் மாற்றி கொண்டான்

 அன்று அவன் கழுத்தில் விழுந்ததும் இன்று அவள் கழுத்தில் விழுந்ததும் தாலி தான் ஆனால் அதன் மதிப்பு கட்டுபவனின் கரத்தில் அல்லவா இருக்கிறது

“லவ் யூ பிர்லா .”  என தாலியை ஒரு கையில் பிடித்தபடி கண்கள் சொருக  அவன் நெஞ்சிலேயே விழுந்தாள்.

அவள் காதல் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் பதில் சொல்ல முடியா நிலையில் தன்னவளை அப்படியே வாரிக்கொண்டு காருக்கு விரைந்தான்.

மருத்துவமணை  அவசர சிகிச்சை பிரிவில் ப்ருந்தா அவளுடன் இரு மருத்துவர்கள் என சிகிச்சையில் ஈடுபட்டு இருந்தனர்

நடந்து முடிந்த நிகழ்வில் பிர்லாவின் உயிர் அடி ஆழம் வரை ஆட்டம் கண்டு எப்போதும் வேண்டுமானாலும் வீழ்ந்து விடுவேன் என்ற நிலையில் இருந்தது

லப்டப் ஓசை கூட இடியாய் முழக்கமிட்டு அவன் நிம்மதியை ஒரேயடியாய் பறித்து சென்றுவிட  ப்ருந்தாவை உயிரோடு மீண்டும் பார்த்துவிட வேண்டும் என தவமிருந்தது அவனது உள்ளம்.

முதல் முறையாய் ப்ருந்தாவின் தந்தை தாய் நினைவும் அவனுள் எழுந்தது. மொபைலை   நடுங்கும் விரலால் எடுத்து அவளின் தந்தைக்கு போன் செய்தான். கூடவே தன் தந்தைக்கும்

பதறி அடித்து வந்த இரு பெற்றோர்களுக்கும் ப்ருந்தாவின் தற்கொலை முயற்சி பெரும் அடியாய் விழுந்தது

அதைவிட யோசிக்கவே முடியாத அளவு ப்ருந்தாவின் காதல் ,அதுவும் பிர்லாவுடனான காதல் !

தற்கொலை செய்யும் அளவிற்கு காதலா ! அங்கிருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி விலகவில்லை

காதல் என வரும் போது எதிர்த்து நிற்பவர்கள் அதற்கு உயிரையே கொடுப்பவர்களை கண்டு ஒதுங்கித் தான் போகவேண்டி இருந்தது.

பிர்லா ப்ருந்தாவின் பெற்றொர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ! ஒதுங்கி கொண்டார்கள்

“சொல்லி இருந்தா தடுத்து இருக்க மாட்டோமே  அதுக்காக சூசைட் பண்ணிப்பாளா !” என்ற கோபமே ப்ருந்தாவின் தந்தைக்கு ஆற்ற முடியா கோபமாய் அமர்ந்து கொண்டது மற்றபடி , என் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலை தான்

ப்ருந்தாவின் தாய் செண்பகமோ ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கண்ணீர்விட்டு அழுதே விட்டார்.

இரண்டு மணி நேரத்திற்கு பின் அவளை தனியறைக்கு மாற்றினர்.

டிரிப்ஸை உள்வாங்கியபடி அமைதியாய் படுத்திருந்த மகளை கண்டு அவளது பெற்றோர்கள் அப்படியே ஒரு மூலையில் அமர்ந்துவிட்டனர்.

சந்த்ரபோஸ், பார்வதிதேவி என இருவரும் தயக்கத்துடனே அறைக்குள் நுழைந்தனர். ‘தன் பேச்சு தான்  இவளை இந்த நிலையில் கொண்டு வந்து விட்டது ’ குற்ற உணர்ச்சி பேயாய் ஆட  அதை சமாளிக்காமல் அங்கிருந்து வெளியே கிளம்பினார்,பார்வதிதேவி. சந்த்ரபோஸிற்கு அடுத்து என்ன செய்ய! என்ற நிலையில் பேச்சு வார்த்தைகள் வரவேயில்லை, இதில் எங்கிருந்து பேச? யாருக்கு ஆறுதல் சொல்ல  அவரோ கிளம்பாமல் வெளியில் சென்று அமர்ந்துவிட்டார்.

இறுதியாய் தான் பிர்லா வந்தான்  யார் பார்க்கிறார்கள் என கவலை கொள்ளாமல், ஒரே வித ஆற்றலை அவன் உயிருனுள் ஊடுருவ நின்றபடி அவளை தான் பார்த்திருந்தான்.

இவனை கண்டதும் ப்ருந்தாவின் பெற்றோர்கள் அங்கிருந்து நாசுக்காய் வெளியில் சென்றனர்.

அவளது பெட்டில் ஓரமாய் கிடைத்த சிறு இடத்தில் அமர்ந்தான். லேசாய் நடுக்கம்  கொண்ட இவன் விரல்கள் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அவள் விரல்களை பிடிக்க,  கண்களில் உருண்டோடிய கண்ணீரை அடக்க பெரும் பாடு பட்டு கொண்டிருந்தான் பிர்லா

பிடித்திருந்த அவனது விரல்களை அழுத்தமாய் விலக்கி அவனை இழுத்து வந்து ப்ருந்தாவின் தலைப்புறமாய் நிறுத்தியது கமலேஷின் கைகள்

ஏதோ அனிச்சை செயல் போல, கமலின் செயலுக்கு இவன் உடல் ஒத்துழைத்தது இவனே அறியாமல்.

ஏதோ பேச எத்தனித்த பிர்லாவை சைகையிலேயே அடக்கிவிட்டு  ப்ருந்தாவின் அருகில் அமர்ந்தான் விமல்

“ஏய்  நடிச்சது போதும் எழுந்திரு !” என இவன் அசால்ட்டாய் சொல்ல

பிர்லாவின் இதயம் இரத்த ஓட்டத்தை நிறுத்தியது சில நொடிகள் .

 “அக்கா யாருமில்லை, எழுந்திரு ” என இந்த முறை சற்று சப்தமாய் எழுப்ப  அப்போதும் அசைவில்லை அவளிடம்

“அக்கா ரொம்ப நடிக்காத கண்டுபுடிச்சிட போறாங்க !” இந்த முறை அவள் கைகளில் லேசாய் தட்டியபடி எழுப்ப

ஒற்றை கண்னை லேசாய் திறந்தவள் விமல் மட்டும் அருகில் இருப்பதை பார்த்து… தன் மேல் இருந்த பெட் சீட்டை உருவி அவன் மீதே விட்டெறிந்தவள்,

“நாட் நாட் செவன் வேலை பார்க்காத…. பார்க்காதனு…. உனக்கு எத்தனை தடவை சொல்றது ? .

அதெப்படி டா நீ மட்டும் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்க…!

எத்தனை வேலை பார்த்தாலும் அதை உடைக்கனே வந்து தொலைச்சிடு, குண்டா , குட்டி அண்டா …

இங்க இருந்து போய் தொலைடா சைத்தானே ” சகட்டு மேனிக்கு இவள் திட்டிக்கொண்டே இருக்க

“இவளாவது சாகறதாவது, எல்லாத்தையும் அனுப்பி வச்சிட்டு கடைசியாய் தான் இவ போய் சேருவா ! திருவாரூர் தேர் மாதிரி !  இவளுக்காக உங்க கண்ணீரை வேஸ்ட் பண்ணிகிட்டு  போங்க மாமா வேற வேலை இருந்தால் போய் பாருங்க ?” என இவன் எழுந்து செல்ல

கமலின் பேச்சு தனக்கு பின்னால் தான் இருக்கிறது என உணர்ந்து இவள் திரும்பி பார்க்க

ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான் பிர்லா…!

நாவினுள் நர்த்தனம் ஆடிய எச்சில் கூட  உள்ளுக்குள் இறங்க மறுத்தது ப்ருந்தாவிற்கு.

Advertisement