Advertisement

பகுதி12

பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது.

அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து  அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த வலியை மறக்க, ப்ருந்தாவின் வயிற்றுக்குள் இரண்டு பாட்டில் ஓட்கா குடியேற  ஏதேச்சியாய்  பாருக்கு அவனது கூட்டாளி ஒருவனை சந்திக்க வந்த ஸ்ரீநிவாஸின் கண்களில் இது சிக்கியது.

‘இவளை பிர்லா கூட பார்த்திருக்கிறோம்  இவ குடிக்க வேற செய்யுறாளா ? இது ஒன்னு போதுமே பார்வதிதேவியையும் பிர்லாவையும் பிரிச்சு வைக்க ’  ‘பார்வதிதேவியோட குடும்பமானத்தை காத்தில் பறக்க விட இது ஒன்னு போதுமே…’ இப்படியாய் அவன் மனம் குறுக்காய் யோசிக்க

சீனிவாஸ்  மறுபடியும் களத்தில் இறங்கினான்,பிர்லாவை பழிவாங்க.

அவள் எதிரில் சற்று தள்ளி வேறொரு சேரில் அமர்ந்தவன், மற்றவர்களின் கண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்ததா வண்ணம், அவளையும், அவளது குடியையும்  வீடியோவாகவே எடுத்துவிட்டான்.

வந்த வேலையை முடித்து கொண்டு, அவனது கூட்டாளியை கூட மறந்து, சிறிதும் தாமதிக்காமல், அலுவக நேரத்திற்கு காத்திருந்து, இவன் நேராக சென்ற இடம் பார்வதிதேவியின் கம்பெனிக்கு தான்.

“மார்னிங் மேடம்” என உள்ளே வந்தவன், அடுத்த டென்டர் சம்பந்தப்பட்ட விசயங்களை சிறிது நேரம் பேசினான்’ அதன் பின் சாதாரணம் போல் “மேடம் அப்பறம் இன்னொரு விசயம்!” லேசாய் இழுத்து, தன் மொபைலில் இருந்த வீடியோவை  பார்வதிதேவியின் பார்வைக்கு வைத்தான்.

‘என்ன வீடியோ இது’ லேசான புருவ சுழிப்போடு யோசித்தவரிடம்,

“யார் இந்த பொண்ணு, எதுக்கு என்கிட்ட காட்ற?” என இவர் கேட்க

 “இந்த பொண்ணோட பிர்லா சாரை நான் அப்பப்போ பார்த்திருக்கேன்” என பிள்ளையார் சுழியை போட்டு “வாய் வார்த்தையா சொன்னால் நம்ப மாட்டீங்க அதான், வீடியோவாவே எடுத்துட்டேன், பிர்ரால சார் இந்த பொண்ணுகிட்ட மாட்டீக்காமல் பார்த்துக்கோங்க” எந்த ஒரு முன்னுரையும் வழங்காமல் முடிவுரையை இவன் எழுதிவிட்டு தான் அங்கிருந்து அகன்றான்.

அவன் பற்ற வைத்த நெருப்பு எண்ணெய் எதுவும் இன்றி பற்றி கொண்டது பார்வதிதேவியினுள்.

அவருக்கு அந்த வீடியோ ஒன்றே போதுமானதாய் இருந்தது, ப்ருந்தா பற்றிய குணநலன்களை பற்றி அலசுவதற்கு. வெகு நேரம் அதே சிந்தனை தான் அவரை ஆட்டி படைத்தது எங்கே பிர்லா இந்த பெண்ணிடம் மாட்டி கொள்வானோ என! அதன் விளைவு ப்ருந்தாவுடனான கலந்தாலோசனையில் வந்து நின்றது மறுநாளே. ஆம் ஸ்ரீநிவாஸை வைத்தே, அவனிடம் சில பண நோட்டுகளை வைத்தே, ப்ருந்தாவை கம்பெனிக்கே அழைத்து வர வைத்திருந்தார் பார்வதிதேவி.

கான்பரன்ஸ் ஹாலில் பிர்லாவோடு அபிசியல் மீட்டிங் நடந்து கொண்டிருக்க  கீழே ப்ருந்தாவுடன் மீட்டிங் ஆரம்பமானது பார்வதிதேவிக்கும் அவளுக்கும்  இடையில் பார்வையாளராய் சந்த்ரபோஸ் வேறு

“ஹாய் அங்கிள், ஹாய் ஆண்டி ” என சிரித்தமுகமாய் வந்தவளை கண்டு கொள்ளாமல்

“உன் டார்கெட் பணமா இருந்தா எவ்வளவு எக்ஸ்பெக்ட் பண்ற…?” எடுத்த எடுப்பிலேயே தன் குணத்தை காட்டினார் பார்வதிதேவி.

“என்ன ?” என கண்கள் சுருக்கியவளுக்கு

“என் பையனை விட்டு நீ போக எவ்வளவுவேணும் ?” அழுத்தமாய் இவர் கேட்க. தெளிவாய் புரிந்தது ப்ருந்தாவிற்கு.

அதுவரை மரியாதை நிமித்தமாய் நின்றிருந்தவள் அந்த குஷன் சேரில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து

 “உங்க பையனை எனக்கு விட்டு கொடுக்க உங்களுக்கு எவ்வளவு வேணும்?” புருவம் உயர்த்தி கொண்டு இவள் டீல் பேச

 “ஏய், யார்கிட்ட  பேசுறனு தெரியுதா ?” எகிறிக்கொண்டு பார்வதிதேவி வந்தவர். “என்ன உரிமை இருக்கு நீ என்னோட பையனை கேட்கிறதுக்கு !” நக்கலாய் கேள்வி கேட்க

“உரிமையில்லாமல் இத்தனை தைரியமா பேசுவனா !”

“அப்படி என்ன உரிமை இருக்கு, உனக்கு ? அதுவும் என்னை விட அதிகமான உரிமை !” என

“நிச்சயமாய் உங்களை விட அதிகமான உரிமை எனக்கு இருக்கு ” சட்டமாய் ப்ருந்தா பேச

“பிர்லாவை பெத்தவ நான் ” என் உரிமை தான் பெரிது என அவர் பேச

“பிர்லாவோட பிள்ளையை பெறப்போறவ நான் ” என இகழ்வாய் இவள் சிரிக்க

‘ஒரு வேளை இவ் வயிற்றில் பிர்லாவின் குழந்தை ஏதாவது !’ என சரியாய் தவறாக கணித்த பார்வதிதேவி

‘குழந்தையா ?’

‘சீ சீ  பிர்லா அப்படிலாம் கிடையாது ’

‘பிர்லா பண்ண மாட்டான் ஆனால் இந்த ப்ருந்தா பண்ண சான்ஸ் இருக்கே !’

‘ஒருவேளை அப்படி தான் எதுவும் இருக்குமோ !’ தனக்குள் எழுந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரது தன்னம்பிக்கையை தகர்க்க

“ஏய் பையனை மயக்கி, அவன் உயிரை சுமந்திட்டு இருக்கியா ?”  வார்த்தைகள் தடித்து  விழுந்தது பார்வதிதேவியிடம்

‘மகன் தான் மக்குன்னு பார்த்தா, இந்தம்மா அதுக்கும் மேல போல’ ப்ருந்தாவின் விளையாட்டு புத்தி இப்படி யோசித்தாலும்.

‘இத்தனை கீழ்தரமாவுமா நினைப்பாங்க?’ முகம் சுருங்கிப்போனது ப்ருந்தாவிற்கு. ஆனால் அந்த முகத்தை பார்த்த பார்வதிதேவியோ

“அப்படி தான் பண்ணி வச்சிருக்க போல… நீ பிள்ளையை சுமந்துக்கோ , பெத்துக்கோ, ஆனால் அதுக்கு என் பிள்ளையை காரணம் காட்டாத  குடிகாரி குடிச்சிட்டு யார் கூட போனியோ…! இதையெல்லாம்….” என பேசிக்கொண்டிருந்தவரின் முன் “போதும்” என பிருந.தா கத்திய கத்தலில், பார்வதிதேவி அப்படியே நிற்க,

“கூடிய சீக்கிரமே உங்க வீட்டு மருமகளா வரேன் அத்தை” என சொல்ல… அந்த ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்தது, பார்வதிதேவியின் ஒட்டுமொத்த கர்வமும் அடங்குவதற்கு.

இந்தமுறை ப்ருந்தா  வெடியை  பற்ற வைத்து,  வெகு ஸ்டைலாய் ஒய்யாரமாய் கால் மேல் கால் போட்டிருந்தவள், போட்ட வேகத்திற்கே கால்களை மாற்றிப்போட்டு இறக்கியபடி அசால்ட்டாய் சென்றுவிட்டாள்.

பார்வதிதேவி சர்வாங்கமும் ஒடுங்கி நின்றிருக்க  அருகில் அமர்ந்திருந்த சந்திராவிற்கோ ‘பார்வதிதேவியோட வாயக்கு இது தேவை தான்” என மனதினுள் நினைத்தார்.

‘பிர்லா உனக்கேத்த ஜோடி தாண்டா  உன் வாழ்க்கை படு சுவாரஸ்யாமாய் இருக்க போது போ…’ என முதல் முறையாய் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை உணர்ந்தார் சந்திரா

‘அம்மாடி நீ் சீக்கிரமா  எங்க வீட்டுக்கு வந்திடுமா !’ என சந்திரா வேண்ட…

‘நீ எப்படி என் மருமகளா வரேன்னு நானும் பார்க்கிறேன் !’  அமைதியாய் அமர்ந்திருந்த சந்திராவை ஆன மட்டும் முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றார் பார்வதிதேவி.

ஆனால் ப்ருந்தாவோ  பார்வதிதேவியிடம் பேசி முடித்து  சென்று சேர்ந்த இடம் கோவில் தான். அவள் அங்கிருந்த படியே  பிர்லாவிற்கு போன் செய்தாள்.

‘வீட்டுக்கு வந்தே அத்தனை ரகளை பண்னினாள்! இனி போனில் என்ன ரகளை பண்ண காத்திருக்காளோ! என மனதினுள் எண்ணங்கள் ஓடினாலும், மீட்டிங்கில் இருந்தவன் நாசுக்காய் அதை தவிர்த்து கொண்டே இருந்தான்.

ஆனால்  போன் கால்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்க, ஒரு கட்டத்தில் இவள் தொல்லை தாங்காமல் “எக்ஸ் க்யூஸ் மீ ” என போனை அட்டெண்ட் செய்தபடி மீட்டிங் ஹாலைவிட்டு வெளியே வந்தான்.

“பிர்லா  அன்னைக்கு மீட் பண்ணினோமே அந்த கோவிலுக்கு வா ” எடுத்த எடுப்பிலே அவன் நிலை புரியாமல் இவள் கட்டளையிட

“உன் இஷ்டத்துக்கெல்லாம் ஆட முடியாது. நீ கூப்பிட்டதும் வரவும் முடியாது ” அடிக்குரலில் உறுமினான் பிர்லா

“வர முடியுமா முடியாதா ?” தீவிரமாய் இவள் கேட்க

“வரலைன்னா ! என்ன செய்வ ?” அவளது கட்டளையை தகர்க்க

“செத்து போய்டுவேன் ” ஹை பிட்சில் இவள் கத்த

“செத்து தொலை” மீட்டிங் ஹால் வெளியில் இருக்கிறோம் என்பதையும் மறந்து உச்சபட்ச டெசிபலில் வந்து விழுந்தது வார்த்தைகள் பிர்லாவிடமிருந்து.

‘கூடவே பீப்  என்ற சப்தமும் ’

இவன் கட் செய்தது காலையா ? இல்லை தன்னையா ? என்ற கேள்வி பெரும் கேள்வி எழுந்தது.

ஒரு பெண்ணாய் பிர்லாவிற்கு அணிவித்திருந்தாலும், ஏற்கனவே தன் தாலியை மதிக்காமல் அதை விட்டெறிந்த பிர்லாவின் குணம், தன்  காதலை கொஞ்சமும் மதிக்காமல் அதை அசிங்கப்படுத்திய ,  அவனின் தாய் குணம் என இரண்டும் சேர விளையாட்டு பிள்ளையான ப்ருந்தா விபரீத முடிவுக்கு தயாரானாள்.

மீட்டிங்கை முடித்து தனது அறைக்கு சென்றவன் கையில் இருந்த போனை ஆன் செய்வது ஆப் செய்வதுமாய் இருந்தான் ப்ருந்தாவின் நினைவில்.

“பிர்லா… உன்கிட்ட பேசனும் !” என கதவை திறந்து அவனெதிரில் அமர்ந்தார் பார்வதிதேவி.

“என்ன மாம் ”  மொபைலை தானாகவே  கீழே வைத்தது அவன் கைகள்.

“நீ அந்த ப்ருந்தாவை மறந்திடு !” நேரடியாய் பார்வதிதேவி பேச

‘அம்மாவுக்கு எப்படி தெரியும்?’ என்ற யோசனைகளையும் மீறி

“ஏன் மாம் ?” கேட்ட கேள்வியிலேயே எழுந்த அதிர்ச்சியை இவனால் மறைக்க முடியவில்லை

“பேசி பார்த்தேன் பிடிக்கலை , உனக்கு செட் ஆக மாட்டா ! மறந்திடு ” அழுத்தமாய் பார்வதிதேவி சொல்ல

‘என்ன இரண்டு பேரும் பேசினாங்களா ?’ மீண்டும் குறுக்கே விழுந்த யோசனைகளை தாண்டி

“அவ நல்ல பொண்ணு மா !” தவறாக புரிந்து கொண்டார் என்ற பரிதவிப்பில் இவன் ப்ருந்தாவை பற்றி எடுத்து சொல்ல

“மரியாதை னா என்னனு கேட்குறவ நல்ல பொண்ணா ? எனக்கு பிடிக்கலை விட்டுடு” அவரும் விடுத்தது என்னவோ கட்டளை தான்  கட்டளைகள் பிறப்பிக்க பட்ட பின் பார்வதிதேவி சென்றுவிட்டார்.

Advertisement