Advertisement

அவனது பேச்சில் பொறுமை முற்றிலும் பறக்க “உன்னை கரெக்ட் பண்ண உன்கிட்ட தான் ஐடியா கேட்க முடியும்  அப்பறம் என்ன சொன்ன ? காதலை புரிய வைக்கனுமா ? இதுக்கு மேல புரிய வைக்க என்னால் சத்தியமா முடியாது ! அப்பறம் ஏதோ சொன்னியே ! ம்  உன்னை திருத்தனுமா ? உன்னை திருத்த தான் எங்கம்மா அப்பா  என்னை பெத்து விட்ருக்காங்க பாரு. ஒன்னை மட்டும் நல்லா புரிஞ்சிக்க பிர்லா  உன்னை திருத்த நான் டீச்சரும் இல்ல  நீ ஸ்டூடன்டும் இல்ல ” ப்ருந்தா சீனி வெடியாய் வெடிக்க, அதில் காதல் பெறி இன்னமும் பற்றி கொண்டதே ஒழிய அணையவில்லை .பிர்லாவிற்கு.

காதல் என வரும் போது இருவரில் ஒருவர் ஆசானாகவும், மற்றவர் மாணாக்கருமாக தான் இருந்தாக வேண்டும் என்பதை தெரியாமல் அவள் பேச

அவனோ “அப்பா,ஒரு வழியாய் தொல்லை ஒழிஞ்சது கிளம்புறியா!” இதை தான் எதிர்பார்த்தேன் என்பதை போல் அவன் பேச்சு மாற

“அப்படினா ?” புரிந்தும் கேட்டால் ப்ருந்தா

“நீ என்னை திருத்தவும் வேணாம்  நான் திருந்தவும் வேணாம் மொத்தத்தில் நான் உனக்கு வேணாம் ” என

“இப்போ கூட ‘நீ எனக்கு வேணாம் !’ னு சொல்ல கூட மனசு வரலைல பிர்லா ” ஆழ்ந்த குரலில் ப்ருந்தா பேச,பிர்லாவோ பேச்சற்று போனான்

“சாதரண பேச்சில் கூட என்னை உன்னால் தள்ளி வைக்க முடியலை  இனியும் உன் காதலை மறைக்காத,. நீ மறைக்க மறைக்க தான் அதை அதிகமா உன் கண் காட்டி கொடுக்குது” கண்களில் காதல் பூக்க தயாரானது ப்ருந்தாவிற்கு

“நீ கனவில் வாழாதே  அவ்வளவு தான் சொல்வேன்…”

“அப்போ வா நிஜத்துல வாழ்வோம்” சளைக்காமல்  இவளும் பேச

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் ப்ருந்தா !”

“சீரியஸாவா ! அப்போ நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன்  சீரியஸா தான் நானும் சொல்றேன்  உன்கிட்ட இருந்தா நான் கம்பர்டபிளா பீல் பண்றேன் பிர்லா   உன் கூட வாழ்ந்தால் நிச்சயம் சந்தோஷமா இருப்பேன்” ஆழ் மனதில் இருந்து வார்த்தைகள் வர

“ஓட்கா குடிக்கிற உனக்கெல்லாம் ஓவர் லவ் ஃபீலா  நாடு தாங்குதோ இல்லையோ நான் தாங்க மாட்டேன் ”என

பதிலுக்கு ப்ருந்தா “என்னோட லவ் பீல் உனக்கு அவ்வளவு சிரிப்பா இருக்குல்ல !” என முறைக்க

“மறுபடியும் மறுபடியும் சொல்றேன்  லவ் கன்றாவியெல்லாம் உனக்கு தான் வரும் எனக்கு வரவே வராது ”

“அப்போ நீ என்னை லவ் பண்ணவே மாட்டியா ?”

“வேணும்னா ஒன்னு பண்ணு  நீ முதலில் அந்த லவ் ஃபீலிங்கை எனக்கு உணர வை  மத்ததெல்லாம் அப்பறம் தான் ”என

“அந்த பீலிங் எப்படி இருக்கும்ன்னு என்னால் உணர தான் முடியும், மத்தவங்களுக்கு  எப்படி உணர வைக்க முடியும்” மூக்கு விடைக்க ப்ருந்தா பேச

“முடியாது என்பது  தான் என்னோட பதிலும்  ஆனால் நீ ரொம்ப பிராங்கா காட்டிட்டு இருக்க  அது என்னைக்குமே உனக்கு ஆபத்து தான்  பீலிங்ஸ் என்பது வெடி மாதிரி தான், அதோட திரியை வெளியே வைச்சிருக்கிற வரை,ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். என்னோட பீலீங்க்ஸ் எனக்கு மட்டும் தான், அதை எனக்கு பற்ற வைக்கவும் தெரியும், பற்றி எரியாமல் தடுக்கவும் தெரியும்… ”

“என்ன இதுவும் ஈஷா யோகாவில் சொல்லி கொடுத்ததா?” என ப்ருந்தா அசராமல் கேட்க

பிர்லாவின் அதிர்ச்சியான முக பாவமே காட்டிக்கொடுந்தது ஈஷா யோகவில் சொன்னது தான் என

“முதலில் நீ யோகா போறதை நிறுத்து , லவ் பீல் தானா வரும்” அதீத எரிச்சலில் கிட்டதட்ட கத்தினாள்.

“அப்படியே வந்தாலும் நான் உன்கிட்ட சொல்லமாட்டேன்  உன் பீலீங்க்ஸை நீ வச்சுக்க, என்னோட பீலீங்க்ஸை நான் வச்சுகிறேன்” என

“இரண்டும் சேர்ந்த தான் காதல் பிர்லா, “

“அதான் சேராதே!” ஸ்தீரமாய் பிர்லா  பதில் சொல்ல

“சேர்ந்திட்டா…”அவனை பார்வையாலேயே எரித்தபடி இவள் கேட்க

“அதெப்படி சேரும்….” இரட்டை புருவங்களும் சுழித்துக்கொள்ள

“இப்படி தான்” என சற்றே எம்பி பிர்லாவின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தி வைத்தாள்

நின்று துடித்தது அவன் இதயம் மட்டுமல்ல அவனது உயிரும் சேர்ந்து தான்  அப்படி ஒரு மின்சாரம் பாய்ந்தது அவள் இதழ்களின் வழியே

அழுத்திய அடுத்த நொடியே ‘ப்ச்’ என்ற சத்தத்துடன்  வேகமாய் பிரிந்தது அவள் இதழ்கள்.

 “இது தான் லவ்  இது தான் இரண்டுபோரேட பீலிங்ஸ் ” அவன் கண்களில் பிரதிபலித்த மயக்கத்தில் தைரியமாய் வெளி வந்தன வார்த்தைகள்.

அதில் தலை உலுக்கி நினைவுலகிற்கு வந்தவன்.

“இது லவ்  இல்லை…. உன்னோட தேவை” வேண்டுமென்றே அவனை பேச

“என்ன…? தேவையா ?” இனிமேலும் என்னால் முடியாது  என்பது போல் தலை கிறு கிறுத்தது ப்ருந்தாவிற்கு.

“ஆமாம் தேவை தான் உன் லிப்க்கு தேவையான இன்னொரு லிப்  இதுக்காக தான் என் பின்னாடியே வந்தியா  முதலையே சொல்லி இருந்தா” என அவளை ஒரு மார்க்கமாய் பார்க்க….

“சீ” என முகம் அஷ்டகோணலாய் மாறியது ப்ருந்தாவிற்கு

“என்ன சீ! கொடுக்கும் போது தெரியலையோ” முதல் முறையாய் அவள் முகத்தில் கண்ட அசூசையில், “காதல்ன்னாலே தேவையை நிறைவேத்திக்கிறது தான்…. “ இவன் அவளை வெறுப்பது போல் பேசிக்கொண்டே செல்ல

“ டேய், இப்போ நீ வாயை மூடலை… ”மரியாதை காற்றில் பறந்தது பிர்லாவிற்கு.

“ இல்லைன்னா நீ மூட போறீயா… “ என  ப்ருந்தாவிற்கு பிபியை ஏற்றினான்.

“தேவை தேவைன்னு சொல்ற… ஒகே ஐ அக்சப்ட் இட், ஆனாலும் அந்த தேவையை யார் யார்கிட்ட வேணும்னாலும் நிறைவேத்திக்க முடியுமா… ” என தன் பேச்சினால் எகிறிய பிபியை குறைத்து பதிலடி கொடுக்க

“நான் கூட உனக்கு இப்போ யாரோ தான்…. நீ நிறைவேத்திக்கலை ” ஒற்றை புருவம் ஏறியதே தவிர இறங்கவில்லை.

 “நான் உனக்கு யாரோவா ?” வார்த்தையில் கூட தீப்பொறி பறந்தது ப்ருந்தாவிற்கு, அதில் கோபம் தலைக்கு எகிற “அடுத்த முறை நீ, எப்படி என்னை ‘யாரோன்னு’ சொல்றேன்னு நானும் பார்க்குறேன்…”

“ஏன் ? மாப்பிள்ளை கேட்டு வீட்டுக்கு வரப்போறீயா ?” அவளின் குறுக்கு புத்தி தெரிந்தவளாய் “வந்துடாதே  ஏன்னா இந்த மாப்பிள்ளைக்கு இந்த பொண்ணை பிடிக்கலையாம் ” என கிண்டலடித்தவனின் பேச்சு, அவளின் நீர் நிறைந்த கண்களை பார்த்து,

“ஹேய் ப்ருந்தா, உன்னை பிடிக்கும் ஆனால் நிஜமாவே உன் மேல ஒரு பர்சண்ட் கூட எந்த லவ்வும் இல்ல  ஏதோ ஒரு அட்ராக்சன், அதை புரிஞ்சிகிட்டு டீசன்டா ஒதுங்கிப்போயிடு  அது தான் உனக்கு நல்லது ” இவன் பேசி முடிக்கும் முன்

“முத்தம் கொடுக்கும் போது விலக்கி தள்ள துப்பில்லாத நீயெல்லாம் டீசன்சிய பத்தி பேசாத ” சுட்டு விரலால் கண்ணீரை சுண்டி எறிந்துவிட்டு இவள் நிற்க.

 “விலக்கி தள்ளுற அளவுக்கு நீ எனக்கு நேரம் கொடுக்கலையே  சும்மா உரசுனதை போய் பெரிசு பண்ணிகிட்டு ” என

“என்னது உரசுனேனா ! டேய் வேணாம்  உனக்கு அவ்வளவு தான் மரியாதை ”

“தோடா  நானா கேட்டேன்  நீ தான கொடுத்த  இல்ல இல்ல உரசுன !”

“சும்மா சும்மா உரசுனேன் உரசுனேன்னு சொல்லாத…”

“அப்படி தான் சொல்லுவேன் என்ன பண்ணுவ !”

“ஏண்டா இந்த வார்த்தையை சொன்னோம்னு வருத்தப்பட வைப்பேன் !”

“நீ சொல்றதுக்கெல்லாம் வருத்தப்படற ஆள் நான் கிடையாது  ஏன்னா !” னன நிறுத்தியவன்

“நீ… எனக்கு   யாரோ…. தான் ” என பிர்லா நிறுத்தி் நிதானமாய்  கூறினான்.

Advertisement