Advertisement

சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும்  தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க

அன்றைக்கு என சீக்கிரமே வந்து விட்டார் சந்த்ரா. இவர் வந்துவிட்டார் என தெரிந்த பின்போ தன் அறையை விட்டு கீழ் இறங்கி வந்தார் “டாட் ” என தந்தையை தேடி வந்தான்.

“வா பிர்லா “ மகனை பார்த்ததும் கையில் இருந்த பைலை சோபாவில் வைத்துவிட்டு அவனை பார்த்தார்.

“ரிப்போர்ட் கார்ட் ” என அவரிடம் கொடுத்து, “சைன் வேணும் டாட்” என நீட்ட இவரும் எல்லாவற்றையும் சரி பார்த்து கையெழுத்து போட்டு கொடுத்தார்.

“என்னடா, எல்லாமே ஆவரேஜ் மார்க் ம் ? சிலபஸ் ஃடப்பா? இல்லை நீ் படிக்கலையா” என நிமிர்ந்து பார்க்க

“ஆமாண்டா அவன் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிச்சிட்டு இருக்கான்  மார்க் கம்மியா வாங்கி இருக்கான்னு திட்டிட்டு இருக்க!” என அங்கே வந்தார் சந்த்ரபோஸின் தாய் மரகதாம்பாள்.

“அம்மா நான் திட்டவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள உன் பேரனுக்கு சப்போர்ட்டா பேச வந்தாச்சா” என

அவசரமாய் தன் பாட்டியிடம் சிறு கண் சிமிட்டலை பரிசளித்த பிர்லா “டாட், சிலபஸ் டப் எல்லாம் இல்லை. நான் தான் சரியா படிக்கலை. பப்ளிக்கில் கண்டிப்பா ஸ்கோர் பண்ணிடுறேன்” என

“மெரிட்டில் சீட் வாங்கனும்னு நினைப்பு இருந்தா நல்லா படி, அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!” என

“மெரிட் சீட் கஷ்டபடுறவங்களுக்கு போகட்டும் டாட், நான் மேனேஜ்மெண்ட் சீட்டில் போய்க்கிறேன். நமக்கு தான் இத்தனை பணமிருக்கே, சொத்திருக்கே!” என அந்த வயதிலேயும் இவன் சொல்லி காட்ட

“அப்படி சொல்லுடா என் பேராண்டி” என ஹை பை கொடுக்க, பிர.ராஇவனும் பதிலுக்கு கொடுத்தான்

இருவரையும் பார்த்து லேசாய் சிரித்து கொண்டார் சந்த்ரபோஸ்.

“இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டீங்க டாட் .” என பிர்லா கேட்க

“உனக்காக தான் சீக்கரமா வந்தேன், பைலை பார்த்துட்டு உன் ரூம்க்கு வரலாம்னு நனைச்சேன், நீயே வந்துட்ட” என்றார் சட்டென.

“எனக்காகவா ? அதுவும் சீக்கிரமாவா? ஆனால் எதுக்கு?” இந்த முறை பாட்டியும் சேர்ந்து கொண்டு கோரசாய் குரல் கொடுக்க

“கேள்வி கேட்டுட்டே இருந்தால் எப்படி தெரியும்? என் கூட வந்தா தெரிய போகுது !” என சந்த்ரபோஸ் சிரிக்க

“இன்னைக்கு இடி மின்னல் மழை தான் பேராண்டி ” சந்த்ராவின் சிரிப்பு மரகதத்தை பேச வைக்க

“ஏன் பாட்டி ?” என்றான் பிர்லாவும்

“இன்னைக்குனு உங்கப்பன் அதிசயமா சிரிச்சு பேசுறான்  உனக்காகாக தான் சீக்கிரம் வந்தேனு சொல்றான்  இப்போ என்னாடன்னா உன்னை வெளியில் கூட்டி போறானாம் ! பின்ன இடி மின்னல் மட்டுமா, மழையும் சேர்ந்து தான் வரும் ” என மரகதாம்பாள் சீண்ட

“பாட்டி நீ அப்படி ஓரமா உட்கார்ந்து புலம்பு  நான் டாட் கூட வெளியே போய்டு வரேன் ” என வாய் நிறைய புன்னகைத்து தனக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த பாட்டியை டீலில் விட்டுவிட்டு, தன் அறையை நோக்கி ஓடியவன் பத்து நிமிடங்களில் டிப்டாப்பாய் கிளம்பி வர, சந்த்ரபோஸ் அவனை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினார்.

சந்த்ரபோஸ் அவனை அழைத்து சென்ற இடம் பைக் ஷோரூம் “பிடிச்ச பைக் எடுத்துக்கோ ” என பிர்லாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் அந்த மாலை நேரத்தில்.

“ஆவரேஜ் மார்க்குக்கு பைக் லாம் ஓவர் டாட்! இன்னும் பப்ளிக் எக்ஸாம் கூட வரலையே டாட்” என்ற பிர்லா “ஒரு வேளை  நல்லா படிக்கறதுக்காக  அட்வான்ஸ் கிப்ட்டா !” என கேள்வி கேட்டபடி ஆசையாசையாய் அங்கிருந்த பைக்குகளை பார்வையிட்டு கொண்டிருந்தான்.

அதற்கு சந்த்ராவோ “நீ நல்லா படிக்கிறதுக்காக இல்ல  நல்லா சாப்பிடறதுக்காக !” என கூற

பிர்லா சட்டென பைக்கில் இருந்த கண்களை பிடுங்கி  அவரை பார்த்தான், சிறு அதிர்வு அவனது முகத்தில்

“டாட் ” என கண்களை சிமிட்ட மறந்தவனை போல் நின்றிருந்தான் பிர்லா

“கண்ணப்பன் சொன்னான் ” என்றவர் “எல்லாத்தையும் சொன்னான்” என சேர்த்து சொல்ல

“உங்கம்மா பாசம் கிடைக்கும் கிடைக்கும்னு இருபது வருசமா நான் ஏமாந்து பேனேன், அதே போல நீயும் ஏமாறதே !” ஒரே வரியில் தன் வாழ்க்கை வரலாற்றை கூறிவிட

பிரச்சனை புரியாத போதும் ‘சரி‘ என்பதாய் ஒரு தலையசைப்பு பிர்லாவிடம் இருந்து வந்தது.

“அடிக்கடி தலை வலி வேற வருதாமே, ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை”

“எஸ் டாட், ரொம்ப பெயினா இருக்கு, நானே சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன்”

“இப்போவும் தலைவலி இருக்கா ”

“காலையில் இருந்தது டாட் இப்போ இல்ல ”

“உடம்பு தெம்பா இருந்தால் தான் மனசு தெம்பா இருக்கும்  கரெக்டான டைம்க்கு சாப்பிடு, அதுக்கு பிறகு  தான் படிப்பு கூட ”  என முடித்தவரை அதிசயமாய் பார்த்திருந்தான் பிர்லா

“அப்பா ” டாட் ஒரு வார்த்தை ஒரு சில நேரம் மறைந்துவிடும் அவனிடத்தில்  அதுவும் உணர்ச்சி கரமான நிலையில் அறவே மறந்துவிடுவான்

“என்னடா !”

“இப்போ என்மேல இருக்குற அக்கறை ஏன் முன்னெல்லாம் இல்லாமல் போச்சு !” தற்போதைய அக்கறையும் அவரின் மகிழ்வான முகமும் பிர்லாவை பேச வைத்தது

“மனசு அமைதியா இருக்கும் போது தான் மத்ததை பற்றி யோசிக்க முடியுது ”

“அது தான் அந்த அமைதி தான் எப்படி திடீர்னு வந்தது !”

“அதுவா, பேக்டரி போற வழியில் ஒரு போதிமரம் இருக்கா, அங்க இருந்த வந்த அமைதிடா அது ” சொல்லி பலமாய் சிரித்தவர். “போய் பைக்கை சூஸ் பண்ணு” என அனுப்பி வைத்தார். பிர்லாவும் தனக்கு பிடித்தமான பைக்கை தேர்வு செய்து விட, புல் கேஸ் செட்டில்மெண்ட் கொடுத்து பைக்கை வாங்கி கொண்ட கிளம்பினர் இருவரும்.

“நீ பைக்கில் வா, நான் காரில் வரேன், யார் பர்ஸ்ட்னு பார்க்கலாம்.” என சந்த்ரா தோழனாய் மாற

கண்ணப்பனை எழுப்பி விட்டு “இன்னைக்கு நான் டிரைவ் பண்றேன்” என டிரைவர்சீட்டில் அமர்ந்து மகனோடு ரேஸூக்கு தயாரான சந்த்ரபோஸ் முற்றிலும் புதியவராய் தெரிந்தார் கண்ணப்பனுக்கு

‘தம்பிக்கு அம்மா பாசம் தான் கிடைக்கலை, அப்பா பாசமாவது கிடைக்கனும்’ என மனதார வேண்டினார் கண்ணப்பன். ஜரூராக ஆரம்பித்த போட்டியில் இறுதியில் ஜெயித்தது என்னவோ பிர்லா தான் ஜெயிக்கவிட்டார் சந்த்ரபோஸ்.

பைக்கை போர்டிகோவில் நிறுத்தி விட்டு தந்தையோடு வீட்டிற்கு வந்ததும் தான் தாமதம் “பிர்லா இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலை அவனுக்கு எதுக்கு பைக் ?” என ஆடி தீர்த்த பார்வதிதேவி

“என்னை கேட்காமல் எதுவும் செய்யாதீங்கன்னா, அதை செய்றது கிடையாது. மத்த எல்லாத்தையும் செய்றது. இந்த வயசில் அவனுக்கு எதுக்கு பைக். பாசம் காட்றேன்னு ரொம்ப செல்லம் கொடுத்து அவனை கெடுத்துடாதிங்க” என  கத்திவிட்டு தான் சென்றார்.

பார்வதி கத்துவதும், தந.தையெம் மகனும் அமைதியாய் கேட்பதும் அன்றாடம் நடப்பது தானே. எப்போதும் போல் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டனர்.

“போ போய் ரெஸ்ட் எடு. சொன்னதை நியாபகம் வச்சுக்க” மகனின் தோளில் தட்டிவிட்டு இவர் செல்ல, பெருமூச்சொன்றை வெளியிட்டபடி பிர்லாவும் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

தந்தை சொன்னதினாலேயே மறுநாளிலிருந்து காலை உணவு ஒரு நாளும் தவறியதில்லை பிர்லாவிற்கு.

“ஒரு வேளை சாப்பாட்டுக்கு பைக்லாம் ஓவர்டா உனக்கு” என தனக்குள்ளே கூறினாலும்  தன்னையும் கவனிக்க ஆள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி எழுவதை தடுக்க முடியவில்லை அவனால்.

காருக்கான சண்டைகள் அல்லாமல் தினமும் சாவகாசமாய் உணவுண்டுவிட்டு தன் பைக்கில் கிளம்பி பள்ளி செல்ல துவங்கினான். அதே போல் கார் பயணம் இல்லாத காரணத்தால் பள்ளியில் இருந்து இஷ்டப்பட்ட நேரத்திற்கு கிளம்பி வர துவங்கினான் ஆனால் எப்போதும் செல்லும் வழி அல்லாது வேறு வழியில்.

டிராபிக் அல்லாத வேறு ஒரு ஷாட்கட்டில் வர துவங்கினான்.  அப்படி வரும் போது தன் தந்தை ஒரு வீட்டினுள் செல்வதை பார்த்து “இது யார் வீடு, இங்கே ஏன் போறாங்க ?” என ஒரு நிமிடம் நின்றவன்.

“ஏதாவது வேலை விசயமா யாரையாவது பார்க்க வந்திருக்கலாம்” என நினைத்து கொண்டு அங்கிருந்து அப்போதைக்கு அகன்றான்.

ஆனால் அதன் பின்னான தொடர்ந்த சில நாட்கள் அதே வீட்டில் தன் தந்தையோ இல்லை தந்தையுடைய காரோ அவனது பார்வையில் பட்டுக்கொண்டே இருந்தது.

‘இன்று தெரிந்தே ஆக வேண்டும் ’ என்ற உந்துதல் எழ வீட்டின்  கேட்டையை மெதுவாய் திறந்து பிர்லாவும் வீட்டினுள் சென்றான்.

கதவும் லேசாய் திறந்திருக்க, உள்ளே செல்லவில்லை ஆனால் உள்ளிருந்த பேச்சுகுரலால் பின் தங்கினான் பிர்லா. சற்றே பின்னுக்கு வந்து ஜன்னல் வழியாய் பார்க்க  தந்தையின் முகமும் வேறொரு பெண்ணின் பின்புறமும் தான் தெரிந்தது. சுருக் என்றது பிர்லாவிற்குள்.

“சுகர் இருக்குறது தான் ஏற்கனவே தெரியுமே அப்பறம் ஏன் ஸ்வீட் வைக்கிற கெங்கா” என தன் தட்டில் இருந்த இனிப்பு வகைகளை பார்த்தபடி சொல்ல

“ரொம்ப கன்ரோல் பண்ணி கன்ரோல் பண்ணி தான் சுகர் அன் கன்ரோல்ல போய்ட்டு இருக்கு, ஸ்வீட் ஒவ்வொரு பீஸ் தானே இருக்கு சாப்பிடுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு பாகற்காய் சூப் தாரேன் குடிச்சிடுங்க ஈக்குவள் ஆகிடும்” என அக்கறையாய் கண்டிக்கும் பெண்ணும்.

“டாக்டர் மாதிரியா பேசுற நீ, சித்த வைத்தியர் மாதிரி பேசுற“ என சிரித்த தந்தையும்

“நான் டாக்டர் தான் ஆனால் இப்போ நீங்க என்னோட பேசண்ட் இல்லையே என்னோட ஹஸ்பண்ட். உங்களோட சந்தோசமும் எனக்கு முக்கியம் தானே” என சந்த்ரபோஸின் தலையை கலைத்த மெல்லிய வளை கரமும் அதனை தொடர்ந்து வந்த சிறிய சிரிப்பொலியும்

“ஆனால் என்னோட சந்தோஷம் நீ தானே ” என உணர்ச்சியான குரலில் தந்தையின் குரலும் கேட்கவே கெங்காவின் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து  சென்றுவிட்டான் பிர்லா.

கெங்காவின் முகம் தெரியாத போதும் தந்தையின் மகிழ்வான சிரித்த இந்த முகத்தை பிர்லா என்றுமே கண்டதேயில்லையே

‘இவங்க தான் உங்க திடீர் சந்தோஷதுக்கான காரணமா?’

‘இவங்க தான் நீங்க சொன்ன போதிமரமா!’

‘ஆனால் இது தப்பு டாட் ரொம்ப ரொம்ப தப்பு”

‘அம்மாக்கு நீங்க செய்ற துரோகம்’

‘உங்க வயசுக்கு இது எவ்வளவு பெரிய அசிங்கம். எனக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியலையா?’

‘இந்த விசயம் பாட்டிக்கும் தாத்தாக்கும் தெரிஞ்சா உங்க மானமே போய்டுமே ப்பா’

‘இப்போ தான் நீங்க எனக்கு குளோஸ் ஆனீங்க’

‘உங்களை நினைச்சு எவ்வளவு பெருமை பட்டேன்  ஆனால் இனி முகம் பார்த்து கூட பேச முடியுமா தெரியலையே ப்பா ’

இப்படி ‘அப்பா, அப்பா” என புலம்பிக்கொண்டு எப்படியோ வீட்டிற்கு வந்துசேர்ந்தான். வந்த உடன் அடைபட்ட அவன் அறைகதவு அதன்பிறகு இரவு சாப்பிடுவதற்கு கூட திறக்கப்பட வில்லை.

ஏற்கனவே சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த ஒட்டுதலற்ற தாய் தந்தை, அவர்கள் மூலம் கிடைக்காத பாசம், தாயின் கவனிப்பற்ற குணம், எல்லாவற்றுக்கும் மேல் தந்தையின் இன்னொரு உறவு என அனைத்தும், அவன் மனதை குடைந்து தலையையும் சேர்த்து குடைய துவங்க மீண்டும் ஆரம்பமானது அவனது தலைவலி  பாரமேறிய தலையை பிடித்தபடியே உறக்கமில்லா இரவாய் கழித்தான் அவர்களின் ஒற்றை புதல்வன் பிர்லா

Advertisement