Advertisement

எல்லையற்ற பேரழகே!!!

பாரதி கண்ணம்மா

அத்தியாயம் 7 :

இன்றுடன் அர்ஜுன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்ததுஅவனுக்குமே உடல் நலம் தேறி கை கால்களில் அங்கு அங்கு சிறிய பிளாஸ்திரிகளால் காணப்பட்டானே ஒழிய, மற்றபடி உடல்  நலம் தேறியே இருந்தான்ஆனால்

அவனுக்கு உடலை விட மனமே சோர்ந்து காணப்பட்டதுகாரணம் இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி அவனின் கண்ணம்மாவின் ஞாபகம் அதிகமாய் வந்ததுஅன்று மருத்துவமனையில் அவளின் கவிதையை கேட்டவனுக்கோ, அதற்கும் தன் முன்னே இருக்கும் நந்தினிக்கும் அதை பொருத்தி பார்க்கஎப்படி யோசித்தும் இரண்டையும் ஒன்று சேர்க்க முடியவில்லை….

ஏனெனில் இது வரை நந்தினி அவனிடம் தன் மனதில் உள்ளதை வாய் வார்த்தையாய் கூறியிருக்கிறாள் ஒழிய, அவள் எப்போதும் செய்வது போல் கவிதையை எழுதி அவன் பார்த்ததில்லைஅதுமட்டும் இல்லாமல் இப்போதெல்லாம் அவனுக்கு இன்னொரு சந்தேகமும் வந்து அவனை ஆட்கொண்டதுஅது நந்தினி தான் தன் உண்மையான கண்ணம்மாவா என்று?…. ஆனால் உண்மை தெரியும் வேளையில் காலம் கடந்து போயிருக்கும் என்பதை அவன் அறியவில்லை….

டேய் அர்ஜுன்…”–சரஸ்வதி

சொல்லுங்கம்மா..”

இல்லடா..இன்னிக்கு சண்டே தானஅதான் உன்ன கேக்காம நான் ஒரு முடிவெடுத்துட்டேன்….” என்று பேசுபவரை பார்த்தவன் என்ன என்று கண்களால் வினவ,

இல்லடா….அன்னிக்கு ஆக்சிடென்ட் ஆச்சுல்ல.. அதுக்கு அப்புறம் பாவம் அந்த கண்ணம்மா பொண்ண நாம பார்க்கவே இல்ல…” என்று முடிப்பதற்குள் இவனுக்கு இங்கு புரை எறதண்ணீரை குடித்து அதை இறக்கியவன் அவரை பார்க்க

அதான்இன்னிக்கு அவளை வீட்டுக்கு கூப்ட்ருக்கேன்..பாவம்டா ரொம்ப நல்ல பொண்ணுஇன்னிக்கு கூப்பிடும் போது கூட அவ வரமாட்டேன்னு தான் சொன்னா..நான் தான் வற்புறுத்தி அவளை வரவெச்சி இருக்கேன்அதனால இன்னிக்கு வெளிய எங்கேயும் போகாதஅந்த பொண்ணு இருக்குறவரை நீயும் இங்கயே இரு..இல்லனா புது இடம் அவளுக்கு பழக கொஞ்சம் சிரமமா இருக்கும்…” என்று பேச..

அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவன்

சிரித்துக்கொண்டே

அம்மா..அதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம் இருடான்னு சொன்னா இருந்துட்டு போறேன்இதுல என்ன இருக்குஇன்னும் சொல்ல போனா  அவ என்னோட ஸ்டாப்( staff )… அவளுக்கு நான் பண்ண வேலைக்கு நான் தான் அவங்ககிட்ட சாரி கேக்கணும்….இன்னிக்கு வரட்டும் கண்டிப்பா கேட்டுர்றேன்…” என்றவன்

அடுப்பறையில் பார்த்து விட்டு

அதான பார்த்தேன்..என்னடா அம்மா இன்னிக்குனு வித விதமா செஞ்சிருக்கங்களேன்னு யோசிச்சேன்அப்போ இந்த விருந்து எல்லாம் அந்த மேடம்க்கு தானாஎன்று போலியாய் வருத்தப்பட

அதை கேட்டு அவர் சிரித்துக்கொண்டே அவன் காதை திருக

நாங்க வரது ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சி போல..”

என்று சிரிப்புடன் வந்தாள் நந்தினிஅவளின் கூடவே அவளின் பெற்றோரும் வந்தனர்

அவள் பேசியதை கேட்ட அனைவரும் அவளை சிரிப்புடன் பார்த்தனர் என்றால்….

அர்ஜுனோ, இந்த விருந்து எல்லாம் உனக்காக இல்ல, இந்த வீட்டுக்கு வரபோற ஸ்பெஷல் VIP –க்காகஎன்று கூற..

அவன் பேசியதில் நெற்றியை சுருக்கிய நந்தினிஅவன் பதிலில் வெகுண்டெழுந்தாள்….. இருந்தும் அதனை காட்டாது வெளியில் சிரித்த முகமா இருக்க முயற்சிக்க

அந்த பொண்ணுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய விருந்துகைல பத்தோ இருபதோ குடுத்தா போதாதா?…” என்று நந்தினியின் அம்மா கேட்க

அது வரை இருந்த சுமுக நிலை மாறி அனைவரிடமும் ஒரு சங்கடம் ஏற்பட்டது….கூடவே அர்ஜுனிற்கும் அவரின் பேச்சில் ஓர் கோவம் எழ, அவன் பதில் பேச வருவதற்குள்

அதனை கலைக்கும் பொருட்டு…. சரஸ்வதியே

அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுங்கபணத்தை பாத்து பழகுறவ கெடையாது….அது இருக்கட்டும் நீங்க உள்ள வாங்க..” என்று அனைவரையும் வரவேற்க….

அனைவரும் ஒருவாராய் தேறினர்

—————

சரியாக ௧௧ மணியளவில் அந்த வீட்டு வாயிலில் ஆட்டோவில் வந்து இறங்கினாள் கண்ணம்மா….

தன் முன்னே அரண்மனை போன்று பிரம்மாண்டமாய் இருக்கும் அந்த வீட்டை பார்த்தவளுக்கு பயத்தில் வேர்க்க, தன் முட்டைக் கண்ணை விரித்து அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்த கண்ணம்மாவை வீட்டின் மாடியில் இருந்து கவனித்த அர்ஜுன் அவளின் அந்த தோற்றத்தில் மெய்மறந்து தான் போனான்…..

மான் விழிகள் இரண்டும் பந்து போல் அங்கும் இங்கும் ஓட, செவ்விதழ் லேசாக பிளந்த வண்ணம், அந்த வீட்டின் அழகை பார்த்தவளுக்கு தெரியவில்லை தன் அழகை ஒருவன் தன் கண்களால் ரசித்துக் கொண்டிருக்கிறான் என்று

திடீரென ஏதோ உறுத்த தன் பார்வையையே சுழல விட, அதற்குள் சுதாரித்துக் கொண்ட அர்ஜுன் சிரிப்புடன் அவளை வரவேற்க கீழே சென்றான்அதற்குள் அவள் வீட்டில் நுழைவாயிலை அடைய, அவளை கண்டு கொண்ட சரஸ்வதி

அடேடேய், வாம்மா….என்ன ஆச்சு..இவ்ளோ நேரம், உள்ள வா..” என்று அவள் கை பிடித்து இழுத்து செல்ல, சிரிப்புடன் அவரை பின் தொடரந்தவள் அங்கு இருந்த அனைவரையும் பாத்து அதிர்ந்து நின்றுவிட்டாள்…. மனதுக்குள், ‘இவங்க சும்மாதானே வரசொன்னாங்க..இப்போ பார்த்தா இத்தனை பேரு இருக்காங்க.. ‘ என்று மனதுக்குள் புலம்பியவள் வெளியே சிரித்த முகமா அனைவரையும் பார்க்க….

பண்டிகைகளில் வரும் போதே அவளை பார்த்து வந்த அர்ஜுன் அவளின் கண்ணை வைத்தே அவளின் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்டவன் புன்சிரிப்புடன் அங்கு செல்ல….

அதுவரை ஒருவித கலக்கத்துடன் பார்வையை ஓடவிட்டவள் கண்பார்வையில் விழுந்தான் அவளின் கள்வன்

ரொம்ப நாள் கழித்து அவனை பார்த்ததாலோ என்னவோ, அவளின் கண் பார்வை அவனை விட்டு இம்மியும் நகரவில்லை….சுற்றி அத்தனை பேர் இருக்க, அதனை பற்றி கூட யோசிக்காமல் அவனையே தலை முதல் கால் வரை அவள் பார்வை மேய்ந்துக் கொண்டிருந்தது….அவனின் உடல் நலத்தை அது தேறி வருவதை புரிந்த பின்னே, அவள் மனம் அமைதியடைய, தன் பார்வையை திரும்பியவள் அங்கு அனைவரும்  அவளையே குறுகுறுப்புடன் பார்ப்பதை அறிந்து தனக்குள் வெட்கியவளாக, அதை விட அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என பயம் வர( ஹ்ம்ம்இப்போ பயந்து என்ன பண்றது..அதை உன் ஆள சைட் அடிக்கும் போதே புரிஞ்சிருக்கணும்…)

அவள் பயத்துடன் அர்ஜுனை பார்க்க, அவளின் பயத்தை உணர்ந்தவன்

எனக்கு சரி ஆயிடுச்சி….இப்போ நான் நல்ல தான் இருக்கேன்..” என்று சொல்ல, அதை கேட்டவள் தன் சிவந்த முகத்தை மறைக்கும் பொருட்டு திரும்பிக் கொள்ள, அவளையே சிரிப்புடன் கண்டிருந்த சரஸ்வதியை பார்த்தவள் மேலும் சிவந்தாள்….

அவளை அனைத்துக் கொண்ட சரஸ்வதி

எனக்கு உன்ன பத்தி தெரியாதா….என் பையன் மேல உனக்கு இருக்க அக்கறையா பத்தி இங்க யாரும் எதுவும் நெனைக்க மாட்டாங்கஉள்ளவாஎன்று சிரிப்புடன் செல்ல, அவளின் சிவந்த முகம் ஒருவனுக்கு ரசனையை தோற்றுவித்தால் இன்னொருத்திக்கோ  வெறியை தோற்றுவித்தது….

சிறிது நேரம் சரஸ்வதியுடன் பேசிக் கொண்டிருந்தவளை பார்த்த நந்தினியின் அம்மா துர்கா

இங்க பாரு மா, பொன்னேஇங்க எங்க சம்மந்தி மட்டும் இல்ல, நாங்களும் இருக்கோம்எங்க கூடவும் கொஞ்சம் பேசலாம்..” என்று அந்தஎங்க சம்மந்திஎன்ற வார்த்தையில் அழுத்தம் குடுக்க, அந்த அழுத்தத்தை புரிந்துக் கொண்டவள் மென்னகையுங் அவரை பார்க்க,

அவரோ,

அம்மா, இந்த காயம் பார்க்கவே ரொம்ப பயங்கரமா இருக்கே, உன்ன எப்படி கரைசேத்த போறாங்க உங்க வீட்ல….” என்று தன் விஷ சொல்லை வீச, அதை கேட்டவள் மனம் ரணமாய் வலித்தது….அந்த வலி அவள் கண்களில் தெரிய, அதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனிற்கு எங்கிருந்து தான் அந்த கோவம் வந்ததோ,

சடாரென்று,

அது அவ யோசிக்க வேண்டிய விஷயம் ஆண்ட்டி, இனிமே என் முன்னாடி என்ன சேர்ந்தவர்களே இப்படி பேசாதீங்க, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை…” என்று கூர்மையாய் சொல்லியவன் வேறு யார் முகத்தையும் பார்க்காமல் விடுவிடுவென்று படிகளில் ஏற போக,

அனைவரும் போகும் அவனையே பார்த்திருந்தனர்

கண்ணம்மாவிற்கு தனக்காக பேசிய கண்ணனை எப்போதும் போல் விழிகளில் தன் கடல் காண அன்பைக் கொண்டு காண, சரஸ்வதியோ அவனை சிறுமெச்சுதலுடன் பார்த்தார்காரணம் தன் மகன் செய்தது சரியே என்ற கர்வமே

ஆனால் நந்தினியின் அம்மா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தால் என்றால், நந்தினியோ போகும் அவனின் முதுகை வஞ்சினத்துடன் பார்த்தல், அவளுக்கு அவன், அவளின் அர்ஜுன் அந்த கண்ணம்மாவிற்காக பேசியதை அவளால் தாங்க முடியவில்லை….

அந்த கோபம் அவள் முகத்தில் தெரிய, அதை கண்டா அவள் தந்தை அவளின் கையில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து, கண் மூடி திறந்தவர்,

அந்த சமயத்தை தன் கையில் எடுத்தார்…. ஆம், தீடிரென,

அவ கேக்கவந்தது வேற, எப்படி கேக்கணும்னு தெரியாம கேட்டுட்டா…” என்று சமாளித்தவர்….

இல்ல என் கம்பெனில வேல பாக்குற பையன் ஒருத்தன் இருக்கான்ரொம்ப நல்ல குடும்பம், நல்ல பையன் அந்த பையன நம்ம கண்ணம்மாவுக்கு பேசலான்னு நான் தான் சொன்னேன்….” எனவும்

படிகளில் ஏறிக்கொண்டிருந்த அர்ஜுனின் நடை அவரின் குரலில் அங்கேயே நின்று திரும்பி கண்ணம்மாவை பார்க்க, அந்த நொடி அவர் சொன்ன பதிலில் தன் அதிர்ச்சியை முகத்தில் முழுதாக வெளியிட்டு அவளும் தன் கண்ணாவையே பார்த்திருந்தாள்

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க, அங்கிருப்பவர்களோ அவர்களின் மௌன நாடகத்தை கவனியாமல் அந்த வரனை பற்றி பேச, கவனிக்க கூடாத இரண்டு ஜோடி கண்கள் அதை கவனித்தது மட்டும் அல்லாமல் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனஅடுத்து நடவிருக்கும் நிகழ்விற்காக….

கண்ணன் வருவான்….

Advertisement