Advertisement

ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.
தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். விவேக் ஆர்யாவின் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
“என்னடா… எப்படிப்போச்சு உன் பேச்சுப்போட்டி?”- விவேக்.
“ப்ச்… தள்ளி உட்காரு… எதுக்கு உரசுற?”
“நல்லா பேசுனியா?”
“ம்.”
“ப்ர்ஸ்ட் பிரைஸ் தட்டிருவியா?”
“வரும் வரும். செகன்ட் பிரைஸ் வந்திடும்.”
“அப்ப உன் அக்காகிட்ட பெட்டுல தோத்துட்டியா??” என்று கூறியபடியே சிரித்துக்கொண்டே தனது இடதுபுறம் திரும்ப, அங்கே மதுமிதாவும் அவளது தோழிகளும் கட்லட் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தனர். இரண்டு நிமிடங்கள் அந்த திசையில் தனது கண்ணின் லென்சுகளை ஃபோகஸ் செய்தவன் மீண்டும் ஆர்யாவின் பக்கமாகத் திரும்பினான். ஆனால் ஆர்யாவின் கண் லென்சுகள் மதுமிதாவின் மேல் இருந்த ஃபோகஸை எடுக்கவே இல்லை.
‘அடப்பாவி, இதுக்குதான் உரசாம தள்ளி உட்காரச் சொன்னானா?’ என்று மனதில் நினைத்தாலும் உடனே நண்பனை மன்னித்து அவன் செய்த பிழையை மறந்து,
“டேய் ஆர்யா.. அது மதுமிதாதான? போன மாசம்தான்டா லோட்டஸ் காம்ப்டிஷன்ல பார்த்தேன்.. செம டேலென்ட்டா அந்தப் பொண்ணுக்கு.” என்று விசாரித்தான் விவேக்.
“ம். வெரி டாலென்டட் மதுமிதா.”
“அவகிட்ட தோத்துட்டியா?”
“ம். கிட்டத்தட்ட, ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு…”
“எப்படிடா அவகிட்டத் தோத்திட்டு அவளைப் புகழ்ந்து பேசுற? டேய் காலையில என்னமோ சொன்னியே? அது என்ன… ம் ப்ரஸ்டீஜ் போயிடும்னு சொன்ன? அந்த ப்ரஸடீஜ் குக்கர் இப்ப என்ன ஆச்சு டா?”
“திறமை எங்க இருந்தாலும் தட்டிக் கொடுக்கலாம் டா.”
“நீயும் தட்டிக்கொடு… குட் ஜாப்ன்னு சொல்லி தட்டிக்கொடு ஆனா எதுக்கு விழுந்து விழுந்து ஸைட் அடிக்கிற?”
“சும்மாதான் ஸைட் அடிக்கிறேன். ரொம்ப அமைதியா இருக்கால?”
“இப்ப அது ரொம்ப முக்கியமா? வா மெயின் ஸ்டேஜ் போகலாம். ரிசல்ட் சொல்லப்போறாங்க.”
“என்னோட காம்ப்படிஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்ப நான் ரெஸ்ட் எடுக்கிறேன். நீ போகணும்னா போ. நான் பத்து நிமிஷம் கழிச்சிதான் வருவேன்.”
“உன்னோட கண்ணுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தா தேவலை.”
ஆர்யா விவேக்கைப் பார்த்து முறைக்கவும்,
“நைட்லாம் காம்ப்படிஷனுக்கு படிச்சிருப்பில டா. அதான் சொன்னேன்.” என்று பம்மினான்.
“நீ கிளம்பு டா. நான் எனக்கு கட்லட் ஆர்டர் பண்ணப்போறேன். நிதானமா கட்லட் சாப்பிட்டதும் வர்றேன்.”
“அப்ப நீ வரமாட்ட? ஸ்கூல்விட்டு ஸ்கூல் வந்திருக்கோம்… வேணா, வா போலாம்.”
“ஏன் குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கக்கூடாதுன்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா?”
“குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கலாம் ஆனா… குட்ஷெப்பர்டோட வி-பி பொண்ணை ஸைட் அடிக்கக்கூடாது.”
“வி-பி பொண்ணா இருந்தா என்ன? பிரின்சி பொண்ணா இருந்தா என்ன? நான் ஸைட் அடிப்பேன்.” என்றவன் மதுமிதா கண்டுபிடிக்கும்வரை ஸைட் அடிப்பதை நிறுத்தவேயில்லை.
           *   *   *
ஒருவழியாக மதுமிதா கிளம்பும் வரை அவளை ஸைட் அடித்துவிட்டு ஆடிட்டோரியத்திற்கு வந்தான் ஆர்யா. அடுத்த ஒரு மணி நேரத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
ஆர்யா மற்றும் அவனது பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்தபடியே நான்காம் இடத்தைப் பிடித்தார்கள். திர்ட் ரன்னர் அப் கப் அவர்கள் பள்ளிக்கு அந்த மாபெரும் மேடையில் வைத்து வழங்கப்பட்டது. அதை தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் கொடுக்கும் போது, “சூப்பர் பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ். Y.M.J கீப் இட் அப்.” என்று சிரித்தபடியே மாணவர்கள் கையில் கொடுத்தது தான் ஆர்யாவையும் அவனது பள்ளி மாணவர்களையும் பரவசப்படுத்தியது.
மேடையில் இருந்து இறங்கி வந்ததும் Y.M.J மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுழுக்கியபடி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். ஆர்யா அமைதியாக அந்த பிரமாண்டமான அரங்கத்தில் Y.M.J மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் நடு மயமாக உட்கார்ந்திருக்க, மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் “East or West Y.M.J is the best.” என்று கத்திக்கொண்டே இருந்தனர்.
Y.M.J கூட்டம் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகிலேயே தான் மதுமிதாவும் ஹரினியும் அமர்ந்திருந்தனர்.
“என்னப்பா… ஓவர்ஆல் ஷீல்ட்டு நமக்குதான கிடைச்சிருக்கு… அந்த Y.M.J ஸ்கூல் பயங்கரமா சீன் போடுறாங்க??” என்று மதுமிதா ஹரினியிடம் கேட்டாள்.
“ஆமா. மது நமக்கு தான் ஓவர்ஆல் ஷீல்டு. அந்த ஸ்கூலுக்கு திர்ட் ரன்னர் அப் கிடைச்சிருக்கு. அதுக்குதான் இந்த அலப்பறை..”- ஹரினி.
“ஏய் போட்டியில இருந்து மொத்தமா பிரின்சிபால் டிஸ்குவாலிஃபை செய்திருப்பாங்க, அதையும் தாண்டி வந்து ரன்னர் அப் வந்தது எவ்வளவு பெரிசு தெரியுமா?” என்று சொன்னாள் மற்றொரு மாணவி சாருலதா.
“East or West Y.M.J is the best.” என்று மீண்டும் மீண்டும் Y.M.J மாணவர்கள் கத்திக்கொண்டே இருந்தனர்.
“இவுங்க ரௌடிசம் தாங்கலயே…” என்று கூட்டத்தை மதுமிதா உற்றுப் பார்த்தபோதுதான் கூட்டத்தின் நடுவே இருந்த ஆர்யாவைப் பார்த்தாள்.
அவளும் மனதுக்குள் தனது தோழி சாருலதாவின் மெச்சுதலை ஆமோதித்தாள். ஆர்யா காட்டிய கெத்தை வேடிக்கை பார்த்தவளுக்கு சிரிக்கவா, கோபப்படவா என்றே தெரியவில்லை. தங்களது ரன்னர்-அப் கப்பை மேஜைமேல் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நின்று மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் கைதட்டிக் கத்திக்கொண்டிருக்க ஆர்யாவும் விவேக்கும் மந்தகாசமாய் சிரித்தபடி அனைவருக்கும் டிரீட் வைத்துக்கொண்டிருந்தார்கள். கேன்டீனில் இருந்து பப்ஸ், ஐஸ்கிரீம் என்று வாங்கி வந்து அனைத்து மாணவர்களும் பகிர்ந்து உண்டதை மதுமிதா வேடிக்கை பார்த்தாள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுவை மது என்று மெல்ல அழைத்தாள் ஹரினி.
“மது.”- ஹரினி.
“ம்??”
“அந்தப் Y.M.J பையன் ஆர்யா உன்னைப் பார்த்திட்டே இருக்கான்ப்பா..”
“ம்?? அப்படியா?”
“ஏய். நீ பார்க்கல? அவன் பார்த்ததை நீ பார்க்கல? மேடம் இவ்வளவு நேரம் குற்றாலத்துல தான இருந்தீங்க. ஆர்யா அருவி கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.”
“அட போப்பா, நீ வேற… வேறப் பேச்சு பேசு. பேட்மிட்டன் கிளாஸுக்கு லேட் ஆச்சு. மணி மூனு.. போலாமா? பிரைஸ் கொடுத்துட்டாங்கல, வா போலாம். இந்த ஃப்ர்ஸ்ட் பிரைஸ் டிராஃபியை அப்பாகிட்ட முதல்ல காட்டணும். என்னோட டிராஃபியை எல்லாம் வைக்கிறது ஒரு ஷெல்ஃப் செய்யப்போறார் தெரியுமா?” என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.
“அப்ப நிஜமாவே போலாம்கிறியா? ஆர்யா இன்னும் கொஞ்ச நேரம் ஸைட் அடிச்சிட்டுப்போட்டுமே? மத்தவங்க சந்தோஷத்தைக் கெடுக்குறது ரொம்ப ரொம்பத் தப்பு மா.”
“யேய்…” என்று மது தனது பேக்கால் ஹரினியை மது அடிக்கவும், “சரி சரி அடிக்காத. போலாம்.” என்று அந்த ஹரினி இடத்திலிருந்து எழுந்தபோது அந்த மயில் உடையணிந்த Y.M.J பள்ளி சிறுமிகள் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தார்கள்.
“ஹலோ.”- மயில்கள்.
“ஹலோ. திர்ட் ரன்னர் அப் போல? கங்கிராட்ஸ்.”- மது.
“ஆமா அக்கா.. நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்க.. நீங்க கலந்துகிட்ட பேச்சுப்போட்டியை நாங்க வேடிக்கை பார்க்க வந்தோம். எங்க ஸ்கூல் ஆர்யா அண்ணா பேசுறதைக் கேட்கத்தான் வந்தோம், அப்படியே நீங்க பேசுனதையும் கேட்டோம். ரெண்டு பேரும் சூப்பரா பேசுனீங்க.
“தாங்க்ஸ். ஆர்யாவும் நல்லாதான் பேசினான்.”- மது.
“அக்கா எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?”- மயில்கள்.
“சொல்லுங்கப்பா.”- மது.
“உங்ககிட்ட ஃபோன் இருக்கா? என்னோட பேரன்ட்ஸ்க்கு ஒரு மிஸ்ட் கால் பண்ணணும். அப்பாவை கூப்பிட வரச் சொல்லணும்…”
“வீடு ரொம்ப தூரமா?”
“ஆமா. வரும்போது ஸ்கூல் பஸ்ல வந்தோம். போகும்போது அப்பா வர்றேன்னு சொன்னாரு, அதான் ஒரு கால் பண்ணி வருவாரா வரமாட்டாரான்னு கேட்கணும்.”
“சரி.. யார்கிட்டயும் எங்ககிட்ட ஃபோன் இருக்குன்னு சொல்லாதீங்க.”- மது.
“ம்… தாங்க்ஸ்க்கா.”
இரு மயில்களும் தங்களது பெற்றோருக்கு கால் செய்து பேசி முடித்ததும், “அக்கா அப்படியே எங்க கோஆர்டினேட்டருக்கும் அப்பா வர்றார்ங்கிற விஷயத்தை சொல்லிடுறோம். இந்த பெரிய கிரவுன்டல அவரை எப்படி நாங்க கண்டுபிடிக்கிறது?”
“ம். நம்பர் சொல்லுங்கப்பா. நான் டயல் பண்ணித் தர்றேன். சீக்கிரம்ப்பா நான் பேட்மிட்டன் கிளாஸ் போகணும்.”- மது.
“ஓகே.. ஓகே இதோ டூ மினிட்ஸ்க்கா. என்னோட டைரியில சார் நம்பர் வச்சிருக்கோம். இதோ எடுத்துட்டேன்..” – மயில்கள்.
                  *   *   *
                  8
மதுவும் ஜானுவும் தங்களது வேன் நிற்கும் இடத்தில் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். மதுமிதாவுடன் இன்னும் இருபது மாணவ மாணவிகள் காத்திருந்தனர்.
“வேன் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சாம். முதல் டிரிப்புக்கு போன வேன் வர இன்னும் அரை மணி நேரம் ஆகுமாம்.” என்றாள் மதுவின் அருகே இருந்த மாணவி.
“மது, நாம அப்பாவுக்கு கால் பண்ணுவோமா?”- ஜானவி.
“இன்னும் அரை மணி நேரம்தான… வெயிட் பண்ணு ஜானு. அப்பாவுக்குதான் வெட்டி அலைச்சல்.”- மது.
மது ஜானவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆர்யாவும் விவேக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த தங்களது பள்ளிப் பேருந்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
“மது, அந்த அண்ணா செம போல்டுப்பா.”
“யாரு?”
“இப்ப நம்ம பஸ் ஸ்டான்டுக்கு பக்கமா நடந்து வந்துட்டு இருக்காரே… அவர்தான்.”
“ஓ… அப்படியா?”
“என்ன அப்படியான்னு கேட்டுட்ட? ஸ்பீக் அவுட் போட்டி ஆன் ஸ்டேஜ்ல நடந்தது. அந்த அண்ணா சூப்பரா ஆன்சர் கண்டுபிடிச்சாங்க. நீ இங்கயே வெயிட் பண்ணு. இதோ வந்திடுறேன்.”- ஜான்வி.
“ஒண்ணும் வேணாம். என் பக்கத்தை விட்டு நகர்ந்த… தொலைச்சிடுவேன்.”- மது.
“அடப்போ மது. நான் விஷ் பண்ணிட்டு வந்திடுறேன். உனக்கு என்ன வந்திச்சு?”
“ஆர்யாவை நான்தான் எலக்கியூஷன்ல ஜெயிச்சேன். நியாயமா பார்த்தா, நீ எனக்குதான் விஷ் பண்ணணும்.”
“நான் தான் உன் பிரைஸைப் பார்த்து ஸோ சுவீட் மதுன்னு சொல்லிட்டேனே? இப்ப ஆர்யா அண்ணாகிட்ட போய் விஷ் பண்ணிட்டு ஓடி வந்திடுறேன். பை மது..”
“ஜானு… எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற? எத்தனை பேர் பிரைஸ் வாங்கிருக்காங்க? இது ஒரு விஷயமா?”
“ஒரு போட்டியில சேர்ந்து முதல் பிரைஸ் வாங்குறது பெருசு இல்லப்பா. நாலு போட்டியில சேர்ந்து நாலுளையும் ஏதாவது ஒரு பிரைஸ் தட்டுறதுதான் பெருசு… அவுங்க பஸ்ல ஏறுறாங்க பாரு… உன்கூட பேசிட்டே அவுங்களை மிஸ் பண்ணப்போறேன்… அச்சோ.”- என்ற ஜான்வி வேகமாக ஆர்யாவின் பள்ளிப்பேருந்து நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
பேருந்தின் முதல் படிக்கட்டில் விவேக்குடன் நின்றிருந்த ஆர்யாவும் விவேக்கும் தங்கள் முன்னே “கங்கிராட்ஸ்ண்ணா.” என்று கைநீட்டிய ஜான்வியைப் பார்த்து புன்னகைத்தபடி கைகுலுக்கினார்கள்.
“எல்லா போட்டியிலயும் சூப்பரா பண்ணீங்க… இன்னும் பிரிபேர் பண்ணிருந்தீங்ன்னா சூப்பரா ஜெயிச்சிருப்பீங்க.”- ஜான்வி.
“ஆமா… ஆமா நிச்சியமா.” என்று பின்னங்கழுத்தை தடவிக்கொண்டே ஸ்டைலாகச் சொன்ன விவேக்கின் பார்வை ஜான்வியிடம் இருந்தாலும் ஆர்யாவின் பார்வை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மதுமிதாவிடம் இருந்தது. அதனைப் பார்த்த ஜான்வி, “அது என்னோட சிஸ்டர் தான். உங்ககூட எலக்கூஷன் போட்டியில ஜெயிச்சது என்னோட சிஸ்டர் தான்.” என்றாள் ஆர்யாவிடம்.
“உங்க சிஸ்டரா? நல்லா பிரசன்ட் பண்ணாங்க.” என்றவன் மதுவை நோக்கியபடி சிரித்துக்கொண்டே அந்த பேருந்து படிக்கட்டில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
               *   *   *

Advertisement