Advertisement

                                                  அத்யாயம் — 7
       ரகுராம்  வீட்டிற்குள்  மாலை  நான்கு  மணிக்குத்தான்  வந்தான்.   ரகுராம்  வீட்டில்   அவனின்  தாய்மாமா  அப்பாவிற்கு  கூட  பிறந்த  சகோதரிகள்  என்று  ஒரு  பத்து  பேர் வரை  கூடியிருந்தனர்.   நேராக  தன்  மாமாவிடம்  சென்றவன்  ‘அம்மா  எங்க  மாமா..?” என்றான்.
       ‘தில்லா  கல்யாணம்  பண்ணிக்க  தெரிஞ்சா  மட்டும்  போதாது.    உடம்பு  சரியில்லாத  அம்மாவாச்சே  அவங்க  சாப்பிட்டாங்களா..?  இல்லையான்னு  கூட  கவனிக்காம..  அப்படி  எங்கடா  போய்  ஊர்  சுத்திட்டு  வர..?” என்று   சுந்தரத்தின்   மீதிருந்த   கோபத்தை  வெளிப்படுத்தும்  விதமாக என்றுமில்லாமல்  ரகுவிடம்   அவ்வளவு  கோபத்தை  காண்பித்தார்  தம்பிதுரை.
       ரகுராமிற்கு  பதட்டம்  அதிகமாக..  தன்  அம்மாவின்  அறையை  நோக்கி  ஓடினான்.  சுசிலா  கண்  விழித்துதான்  படுத்திருந்தார்.  அவரைப்  பார்த்ததும்  சற்று  நிம்மதியடைந்தவன்  ‘என்னம்மா  ஆச்சு..?” என்று  பதறினான்.
     ‘மயக்கம்  போட்டு  கீழ  விழுந்துட்டாங்கப்பா..  காலைல  இருந்து  ஒன்னும்  சாப்பிடாம  இருந்திருக்காங்க.. “ என்று  தன்  அத்தை  சொன்னதும்  ‘ஏன்மா..?  நான்  ஒரு  முக்கியமான  வேலையா  இருக்கேன்..  தயவு  செஞ்சி  சாப்பிடுங்கன்னுதான  உங்ககிட்ட  சொன்னேன்.  ஏன்மா..  என்னை  எல்லாரும்  சேர்ந்து  இப்படி  சாகடிக்கிறிங்க..?” என்று  புலம்பினான்.
       ரகுராமின்   முகத்தைப்  பார்த்த  சுசிலா..  ‘நீயும்   காலைல  இருந்து  இன்னும்  சாப்பிடலைன்னு  உன்  முகத்தை  பார்த்தாலே  தெரியுது.  முதல்ல  நீ  போய்  சாப்பிடு..” என்றார்.
    ‘அவன்  எப்படி  சாப்பிடுவான்..?  ஆ‡பீஸ்ல  மயக்கம்  போட்டு  விழுந்தவளை  ஆஸ்பிட்டலுக்கு  கூட்டிட்டு  போய்  டாக்டர்  கிட்ட  செக்கப்  பண்ணிட்டு  அவளுக்கு  ஜூஸ்  வாங்கி  குடிக்க  வச்சி..  பத்திரமா   வீட்டுக்கு  கூட்டிட்டு  போய்  விடறதுக்கே  இவ்ளோ  நேரமாய்டுச்சி.  இதுல  சாப்பிடவெல்லாம்  அவனுக்கு  எங்க  நேரம்  இருக்கும்..?” என்றார்  சுந்தரம்.
    ‘நான்  என்ன  பண்ணிட்டிருக்கேன்னு  கவனிக்கிற  நேரத்தில   கட்டின  பொண்டாட்டிய  கவனிச்சிருந்தா..  இவ்ளோ  பிரச்சணையாயிருக்காது.” என்று   ரகுராமும்  கோபமாக  பதில்  கொடுத்தான்.
    ‘ரகு..  தயவு  செய்து  அப்பாவை  எதிர்த்து  பேசறதை  விட்டுட்டு  முதல்ல  சாப்பிடு.” என்று  கெஞ்சினார்  சுசிலா.   சுந்தரம்  விருட்டென்று  வெளியேறினார்.  ஆனால்  கதவருகேதான்  நின்றிருந்தார்.
     ‘எனக்கு  இங்கையே  சாப்பாடு  எடுத்திட்டு  வாங்க..” என்று  வேலையாட்களிடம்  கூறினான்.  சாப்பாடு  வந்ததும்  ‘இப்ப  கொஞ்சம்  சாப்பிடுங்கமா..” என்று  தன்  அம்மாவிற்கு  ஊட்டப்போக..  ‘இல்லப்பா..  நான்  இப்பதான்  சாப்பிட்டேன். நீ  சாப்பிடு..” என்றார்  வாஞ்சையாக.
     ரகு  அமைதியா  இருக்கவும்..  ‘ம்ம்..  சாப்பிடுப்பா..” என்று   சாப்பாடு  கையோடு  இருந்த  ரகுவின் கைபிடித்து..   அவனின்  வாய்  வரைக்கும்  கொண்டுபோனார்  சுசிலா.  அப்பொழுதும்  தன்  கையில்  உள்ள  சாப்பாட்டை  தட்டிலேயே   போட்டவன்  மனம்  தாளாமல்..  ‘அப்பா  சாப்பிட்டாராம்மா..?” என்றான்.
     ரகுவின்  கேள்வியில்  பூரிப்படைந்த  சுசிலா… ’அவர்  சாப்பிடாம  நான்  சாப்பிடமாட்டேன்னு  சொன்னதால..  இப்ப  ஒரு  அரைமணி  நேரத்திற்கு  முன்னாடிதான் இரண்டு  பேரும்  சாப்பிட்டோம்.  நீ  சாப்பிடு..” என்றார்.  அதற்கு  பிறகுதான்  ரகு   நிம்மதியாக  சாப்பிட்டான்.
       தாம்  இருந்தால்  வெளிப்படையாக  எதுவும்  தன்  அம்மாவிடம்  கூட  பேசமாட்டான்  என  நினைத்துதான்  சுந்தரம்  வெளியே  வந்தார்.  ரகு  தன்  அம்மாவிடத்தில்  தன்னைப்  பற்றி  விசாரித்ததில்  அவரின்  கண்களும்  கலங்கியது. 
       ரகு  சாப்பிடும்  வரை  அமைதியாய்     அணைத்தையும்  பார்த்துக்கொண்டிருந்த   இருந்த  ரகுவின்  அக்கா  நந்தினி..  அவன்  சாப்பிட்டு  முடித்ததும்..  ‘ஏன்  ரகு..  என்னையெல்லாம்  உனக்கு  மறந்தே  போய்டுச்சா..?  ஒரு  வார்த்தை  என்கிட்ட  சொல்லியிருந்தா  நான்  அப்பாகிட்ட  பேசிப்  பார்த்திருப்பேன்  இல்ல…  என்  பேச்சை  அவர்  என்னைக்கு  மறுத்திருக்கார்..?  சுமூகமா  முடிய  வேண்டிய  விசயத்தை  நீயே  பெரிசு  பண்ணி  வச்சிருக்க..” என்றாள்.
       ‘அப்பாக்கு  பிடிக்காத  விசயத்தை  எனக்காக  அவர்கிட்ட  நீ  முதல்ல  பேசுவியா..?  உண்மையாவே  உனக்கு   நான்  பார்வதியை  லவ்  பண்ற  விசயம்  தெரியாதுன்னு   என்மேல  சத்தியம்  பண்ணி  சொல்லு  பார்க்கலாம்.  கண்டிப்பா   உனக்கு  தெரியும்னு   எனக்கும்  தெரியும்.  நம்ம  தம்பியாச்சே..  ஆசைப்பட்டுட்டான்.. அப்பாகிட்ட  பேசிப்பார்க்கலாம்னு   என்னைக்காவது   நினைச்சி     பார்த்திருக்கியா..?   என்மேல  பாசம்  இருந்திருந்தா..  அப்படி  ஒரு  நினைப்பு   உனக்கு  வந்திருக்கும்..” என்று  கடுப்பாய்  சொல்லி..  தனதறைக்கு   போய்விட்டான்.
     ராஜா..  ரகுராமின்  அறைக்  கதவைத்  தட்டினான்.  ‘யாரு…” என்றான். 
    ‘நான்தான்  ரகு…” என்றான்  ராஜா.
    ‘ராஜா… நான்  தனியா  இருக்கனும்..  அப்பபுறம்  பேசலாம்..” என்றான்.
    ‘நான்  உன்கிட்ட  இப்ப  பேசியே  ஆகனும்..” என்றான்.
    ‘ப்ளீஸ்  ராஜா..” என்றான்.
    ‘சரி..  நான்  இங்க  இருந்தே   கேக்கிறேன்..  அண்ணிக்கு  என்ன  ஆச்சி  ஏன்  மயக்கம்  வந்துச்சி..?  இப்ப    எப்படி  இருக்காங்க..?” என்றான்.
     பார்வதியைப்  பற்றி  கேட்கவும்  ரகுராம்  கதவைத்திறந்தான்.  ராஜா   ரகுவிடம்  கேட்டது  நந்தினி  காதிலும்  விழவே..  ‘அவ  எப்ப  உனக்கு  அண்ணியானா..?” என்றாள்  நந்தினி.
      ஊட்டியின்  நெம்பர்  ஒன்    பிஸ்னஸ்மேன்..  தி  கிரேட்  ரகுராம்..  எஜிகேசன்  டிப்பார்ட்மண்ட்டில்  எ.இ.ஒ வாக  பணியாற்றும்  பார்வதிங்கிற  பொண்ணு  கழுத்தில  தாலி  கட்டினதால..   மேடம்  பார்வதியா  இருந்தவங்க  இப்ப  பார்வதி ரகுராமாக  மாறிட்டாங்க.   அப்படி  அவங்க  மாறின  காரணத்தினால்  ரகுராமின்  ஒரே  தம்பியான  இந்த  ராஜாவிற்கு   பார்வதி ரகுராம்ங்கிறவங்க ..   அண்ணியா  மாறிட்டாங்கக்கா..” என்றான்  சிரிக்காமல்.
      நந்தினி..  ராஜாவை  முறைத்துக்கொண்டிருந்;தாள்.  ராஜாவின்  பேச்சு  ரகுவிற்கு  சிரிப்பை  வரவழைக்க..  ‘உள்ள  வாடா..” என்று  சிரித்த  முகமாக  ராஜாவின்  கையை  பிடித்து  இழுத்து  கதவை  சாத்தினான்  ரகு.
    ‘சிரிக்காத..  நான்  உன்மேல  செம  கோவத்தில  இருக்கேன்..”  என்றான்  கோபமாக.
    ‘சாரி..  ராஜா..” என்றான்.
   ‘ஒரு  நாளைக்கு  முன்னாடி  சொல்லியிருந்தாக்  கூட  நான்  நல்லபடியா  அரேன்ஜ்  பண்ணியிருப்பேன்.  வாழ்க்கையில  மறக்கமுடியாத   ஒரு  பங்சனைஇ  இப்படியா  அவசர  அவசரமா  பண்றது..?  இவ்ளோ  பணம்  காசு  இருந்து  எதுக்கு  பிரியோஜனம்..?”  என்றான்.
    ‘உண்மையாவே  இன்னைக்கு  அவளை  கல்யாணம்  பண்ணிக்கனும்னு   நேத்து  நைட்  எட்டு  மணிக்கு  மேலதாண்டா  முடிவு  பண்ணினேன்.  சின்னதா  லீக்  ஆய்டுச்சினா  கூட  அப்பா  பிரச்சணையை  வேற  மாதிரி  கொண்டு போய்டுவார்..    பார்வதியோட  அம்மா  இறந்ததுக்கப்புறம்   அவளை  போய்  பார்க்கவே  இல்லையேன்னுதான்  நேத்து  நைட்  ஒரு  ஏழு  மணிக்கு  அவங்க  வீட்டுக்கு  அவளை  பார்க்க  போனேன்.  அவங்க  அப்பா  ஏண்டா  இங்க  வந்தன்னு   செருப்பை  கழட்டி  அடிச்சிருந்தாருன்னா  கூட  நான்  தாங்கியிருப்பேன்  ஆனா…  எதுக்குடா  இங்க  வந்த..?  நானே   என்பொண்ணை  உனக்கு  கூ.. ட்..டிக்  குடுக்கிறேன்னு  உங்க  வீட்டு  ஆளுங்க  சொல்றதுக்கா..ன்னு   கேட்டாருடா..” என்று  கண்கலங்கினான்.
    ‘ச்ச்சே..  இப்படியா  நடக்கனும்..” என்று  ராஜாவும்  வருந்தினான்.
    சற்று  நேரம்  கழித்து  ‘அவர்  சொல்றதும்  நியாம்தான்னு  எனக்கு  தோணிச்சி   பார்வதி  பிரச்சணை  பண்ணாதப்பவே  அவங்க  அம்மாகிட்ட  அப்படி  பேசியிருக்கார்  நம்ம  அப்பா.    பார்வதியும்  என்னை  திரும்பி  கூட  பார்க்க  மாட்றா..  அப்படியிருக்கும்போது நான்  அங்க   எந்த  உரிமையில  போகட்டும்.? அவளை  பார்க்காம  என்னால  இருக்க  முடியலை. வீட்லயாவது  பார்க்கலாம்னு   அங்க  போனாலும்  அவங்க  அப்பா  இப்படி  சொல்றார் இது  எல்லாத்துக்கும்  மேல  அவ  கர்ப்பமா  இருக்கா…   அவ  கழுத்தில  தாலி  இல்லாம  என்  குழந்தை  அவ  வயித்தில  வளருரதை  நான்  விரும்பல.  அதனாலதான்  இப்படி  அவசரப்  படவேண்டியதாய்டுச்சி..”
      ‘அண்ணியாவது இந்த  விசயத்தை  உன்கிட்ட  தனியா  சொல்லியிருக்கலாம்.  இப்படி  அவங்களை  அவங்களே  அசிங்கப்  படுத்திகிட்டு  வீணா  அவங்க  அம்மா  உயிரும்  போய்…”
     ‘அவளைப்  பத்தி  உனக்கு  தெரியாது  ராஜா.  அவ  அன்னைக்கு  எல்லார்  முன்னாடியும்  அப்படி  சொன்னது..  என்  கல்யாணத்தை   நிறுத்தறதுக்குன்னு   எல்லார்  மாதிரியும்   நீயும்   நினைக்காத..  வாழ்க்கையை  பிச்சையா  கேட்டு  வாங்குற  கேரக்டர்  அவ  கிடையாது.  அவ  வயித்தில  இருக்கிற  குழந்தைக்கு  நான்தான்  அப்பான்னு  எல்லாருக்கும்  தெரியனும்.  அவ்ளோதான்.  அதுவுமே அவ  குழந்தையை  யாரும்  தப்பா  பேசிடக்  கூடாதுங்கிறதுக்காகத்தான்   எல்லார்  முன்னிலையிலும்   அவ  அப்பபடி சொன்னதே..‚  நான்  அவளை  கல்யாணமே  பண்ணலைன்னாலும்..  நல்லபடியா  குழந்தையை  பெத்தெடுத்து  என்  நினைப்பாவே  காலம்  பூராவும்  வாழ்ந்திடுவா.   நான்  வேற  யாரையாவது  கல்யாணமே  பண்ணிகிட்டாலும்..  என்னை  எந்த  கேள்வியும்  கேட்காம  என்னை  விட்டு   விலகியும்   போய்டுவா.  அவ்ளோ   ரோசக்காரிடா  அவ..” என்றான்.
        ராஜா  பிரம்மிப்பாய்  உணர்ந்தான்.  ‘ரகு  வெரி  இன்ட்ரஸ்ட்டிங்.“ என்று  மகிழ்ந்து  ‘ஏண்டா..  அவங்களை  விட்டுட்டு   இருக்க  முடியலைன்னு    தாலியை  கட்டிட்டு   அப்புறம்  இங்க  கூட்டிட்டு  வராம  அவங்க  வீட்ல  எதுக்கு  விட்டு  வச்சிருக்க..?”
       ‘அவங்க  அப்பாக்கு  அவதாண்டா  உலகம்.  அவங்க  அம்மாவும்  இல்லாத  நேரத்தில  அவளை  கூட்டிட்டு  வரதுக்கு  எனக்கு  மனசு  வரலை.   அதுவுமில்லாம  என்னால  சுகுனா  மனசும்  இப்ப  வருத்தத்தில  இருக்கும். இந்த  மாதிரி  நேரத்தில.. என்னால  அவளோட  சந்தோசமா  இருக்கமுடியாது.” என்றான்.
      ‘இதெல்லாம்  சரிதான்.. அவங்க  மயக்கம்  போடப்  போறாங்கன்னு  உனக்கெப்படி  தெரியும்..?  சரியான  டைம்க்கு  நீ  எப்படி  அங்க  போன..?” என்றான்  நக்கலாக.
      ‘நேத்து  நைட்ல  இருந்து  நான்  தூங்கவே  இல்லடா.  எல்லாத்தையும்  இன்னைக்கே  சொல்லனுமா..?” என்றான்  சலிப்பாக.
       ‘இந்த  சென்சார்ல  கட்  பண்ற  வேலையெல்லாம்  என்கிட்ட  வேண்டாம்.  இதை  மட்டும்  சொல்லு..  நான்  போய்டறேன்..” என்றான்.
        சிரித்துக்கொண்டே.. ஒப்புவிப்பவன்போல்..  ‘திடீருன்னு  தாலி  கட்டினதால  கண்டிப்பா  சாப்பிடாமத்தான்  இருப்பான்னு  எனக்கு  தெரியும்..   அதனால    அவளை  சாப்பிட  வச்சிட்டு  வந்திடலாம்னுதான்  அவளைப்   பார்க்கப் போனேன்.  கொஞ்சம்தான்  சாப்பிட்டா..  அதுக்குள்ள  வாந்தி  எடுத்திட்டா.  அதை  க்ளீன்  பண்ணிட்டு  பார்த்தா..  மயங்கிப்போய்  டேபிள்லையே   படுத்திட்டா.  உடனே  ஹாஸ்பிட்டல்  கூட்டிட்டு  போனேன்.  ரொம்ப  வீக்கா  இருக்கிறதால  டிரிப்ஸ்  ஏத்தனும்னு  சொன்னாங்க.  அதனால  வீட்டுக்கு  வர  லேட்டாய்டுச்சி.. போதுமா..?” என்றான்.
       ‘அண்ணி  வாந்தி  எடுத்ததை  நீயே  க்ளீன்  பண்ணுனியா..?” என்றான்  சிரித்தபடி.
       ‘போடா  இங்கயிருந்து..  வந்துட்டான்  கேள்வி  மேல  கேள்வி கேட்டுகிட்டு..” என்று  சிரித்துக்  கொண்டே  ராஜாவை  வெளியே  தள்ளி  கதவை  சாத்தியவனுக்கு  தன்  தம்பியுடன்  மனம்  விட்டு  பேசியது  சந்தோசத்தை   கொடுக்க..  நிம்மதியாய்  தூங்கினான்.
        காலை  ஆறு  மணிக்கெல்லாம்   ரகுராம்  குளித்து   முடித்து  வெளியே  வந்தான்.  உடற்  பயிற்ச்சி  செய்து  கொண்டிருந்த  ராஜா  ஆச்சரியமாய்  பார்த்தான்.  ‘என்னடா  பார்க்கற.?”
       ‘பார்க்கிறது  ஒரு  தப்பா..?” என்றான் ராஜா.
        ‘நீ  என்னவோ  பார்த்துக்க..   நான்  ஒரு  முக்கியமான  வேலையா  வெளிய  போறேன்.  ஒன்பது  மணிக்கு  மேல  வீட்டுக்கு  வந்தே  சாப்டுக்கிறேன்.  அம்மா  கேட்டா  சொல்லிடு.”
       ‘கரெக்டான  ரீசன்  சொன்னாத்தான்  மெசேஜ்  பாசாகும்.” என்றான்.
       ‘என்  பொண்டாட்டிய  பார்க்கப்  போறேன்…  போதுமா..?” என்றான்.
       ‘உன்னைப்  பார்த்தா  அப்படி  ஒன்னும்  ரொமாண்டிக்கா  பொண்டாட்டிய  பார்க்க  போற  மாதிரி  தெரியலை..  ஏதோ  வில்லங்கம்  பண்றதுக்கு  போற  மாதிரியே  இல்ல  இருக்கு.” என்றான்.
       ‘இப்ப  என்ன  சொல்ல  வர..?”
       ‘நானும்  வரேன்னு  சொல்றேன்..”என்றான்  ராஜா.
       ‘என்னையே  அவங்க  உள்ள  விடமாட்டாங்க.  இதுல  நீ  வேற  எதுக்கு..?  அதெல்லாம்  ஒன்னும்  வேண்டாம்.” என்று  சொல்லி  கிளம்பினான்.
      ‘நேத்து   அவங்களுக்கு   மயக்கம்  வந்திடுச்சி  இல்ல.  இப்ப  எப்படி  இருக்காங்கன்னு  வந்து  பார்த்திட்டு  வந்திடறேன்.   கொஞ்சம்  வெய்ட்  பண்ணினன்னா  நான்  உன்  கூட  வரேன்.  இல்லன்னா  தனியா  வரேன்.” என்றான்.
     ‘சரி…  வந்து  தொலை..” என்று  ரகு  சொல்ல.. இருவரும்  கிளம்பினார்கள். 

Advertisement