Advertisement

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா
தீராதா உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்..”

மறுநாள் காலை சென்னைக்குத் திரும்பியிருக்க அபினவ் அவளீடம் எப்போதும் போலவே இயல்பாய் இருந்தான்.ஆனால் அவளால் தான் தான் செய்ததை சாதாரணமாய் விட முடியவில்லை.அவனை மிகவும் நோகடித்து விட்டோமோ என மனதளவில் ஒடீந்து போயிருந்தாள்.

அது தெரிந்திருந்ததவனும் ஒன்றும் கேட்காமல் அமைதியாய் இருந்தான்.இருந்தும் அவளை தன்னருகிலேயே அமர்த்திக் கொள்ள அத்தனையையும் செய்தான்.

திஷா டைம்ஷீட் பில் பண்ணணும் அர்ஜெண்ட் ப்ளீஸ் எனக்கு தட்டுல சாப்பாடு போட்டு இங்கேயே எடுத்துட்டு வர்றியா?”

ம்ம் சரிங்க இதோ வரேன்”,என்றவள் தன்னவனுக்காய் வேக வேகமாய் எடுத்து வந்தாள்.

அவனுக்கு அது முக்கியமான வேலை இல்லையெனினும் அவளை சரி செய்வதற்கு இதெல்லாம் தேவையோ என தோன்ற உணவை அவள் ஊட்டி விட உண்ண ஆரம்பித்தான்.

அவனோடு சேர்ந்து அவளையும் சாப்பிட வைத்தான்.இரவு வரை அப்படி இப்படியாய் சமாளித்தவளுக்கு உறங்கச் செல்லும் நேரம் மறுபடியும் ஒருவித பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.எங்கேயோ வெறித்தவாறே ஹாலில் நின்றிருந்தவளை பின்னிருந்து இடைப்பற்றி அவன் இழுக்க,

ஐயோ அத்தை மாமா யாராவது வந்துர போறாங்க..”

தெரியுதுல அப்பறம் என்ன இங்க நின்னு கனவு கண்டுட்டு இருக்க..தூக்கம் வரலையா?”

இல்லங்கஅது ஏதோ யோசனையில..”

ம்ம் நல்லா யோசிக்குற..வா பேபி..”,என அழைத்துச் சென்றான்.வழக்கம் போல் திஷா ஓர் ஓரமாய் கட்டிலில் அடைக்கலம் தேட,

திஷாஷா..”,அர்த்தமுள்ள அழைப்பு அவனிடமிருந்து.அது புரிந்தவள் மெதுவாய் அவன்புறம் திரும்பிப் படுத்தாள்.

அவன் ஒன்றுமே கூறாமல் அவளையே பார்த்திருக்க விழி தாழ்த்தியவளாய் தானாய் அவனருகில் நகர்ந்து படுத்தாள்.உதட்டோர புன்னகையோடு கையை தலைக்கடியில் வைத்தவாறு அவளைப் பார்த்தவன் அவளின் முன் தலையில் செல்லமாய் தட்டினான்.

டீச்சரம்மா வர வர என்கிட்ட ஸ்டுடண்ட் மாதிரி பிகேவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..என்னாச்சு டியர் என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு..”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க..சாரி..”

சாரியா எதுக்கு டா?”

நேத்து நா அப்படி நடந்துகிட்டதுக்கு..”

ஹே இன்னுமா நீ அதை நினைச்சுட்டே இருக்க..நானே ஒண்ணும் சொல்லல அப்பறம் என்ன திஷா..கல்யாணம் நடந்ததுக்காக எல்லாமே உடனே நடந்தாகனும்னு எந்த கட்டாயமும் இல்ல டா..அதுவா இயல்பா நடக்கனும்.நேத்தும் அப்படிதான் ஆச்சு..அதையும் தாண்டின ஏதோ ஒன்னு உன்னை அன்கம்பர்டபிளா பீல் பண்ண வச்சுருச்சு..

சொல்ல போனா என் மேல தான் தப்போனு கூட யோசிச்சேன்.என்னதான் என் கன்ட்ரோலை இழந்திருந்தேன்னாலும் உன்னை ஹர்ட் பண்ணிறகூடாதுனு நிச்சயமா கவனமா தான் இருந்தேன் திஷா..அதையும் மீறி.. அம் சாரி..”,என்றவன் அவள் கையை எடூத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

ஐயோ சத்தியமா அதெல்லாம் இல்ல..எனக்குதான்..நாதான் தேவையில்லாம..”

சரி விடு திஷாம்மா..ரிலாக்ஸ்..ரெண்டு நாளா எவ்ளோ ஹாப்பியா இருந்த அப்படியே இரு வேற எதையும் போட்டு குழப்பிக்காத..ஒழுங்கா தூங்கு”,என்றவாறே தன் கையை அவள் தலைக்கடியில் நீட்ட தன்னோடு சேர்த்து நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான்.

நாளையிலிருந்த ஆபிஸ் செம கடுப்பு பேபி..நைன் அவர்ஸ் வில் மிஸ் யூ பேட்லி..ஆமா நீ எப்போ ஸ்கூல் போக ஆரம்பிக்க போற?”

“”நா இன்னும் டூ டேஸ் கழிச்சு போலாம்னு இருக்கேன்..இவ்ளோ லாங்க் லீவ் எடுத்ததேயில்லையா அதான் ஒரு மாதிரி சோம்பேறி தனமா இருக்கு..”

அப்போ பசங்க இன்னும் ரெண்டு நாள் ஜாலியா இருப்பாங்கனு சொல்லு..”

பசங்க மட்டுமா இல்ல அன்னைக்கு சாரு சொன்ன மதிரி நீங்களுமா?”,என்றவள் சிரிக்க 

ஐயையோ கண்டுபிடிச்சுட்டியா”,என போலியாய் அதிர்ந்தவனும் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

மறுநாள் அவனுக்காய் பார்த்து பார்த்து சமைத்து அலுவலகத்திற்கு பேக் செய்து அவனுக்கான உஉடையிலிருந்து அனைத்தையும் தயார் செய்து வைத்தாள்.அவனும் அவசர அவசரமாய் கிளம்பியதில் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்.அதைக் காணும் இதை எங்கே என அனைத்தையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு தன்னவனை நினைத்து மனம் இன்னுமே மென்மையடைந்ததாய் தோன்றியது..

அவளை சாதாரணமானவளாய் அவனைப் போன்ற ஒருத்தியாய் தான் ஒவ்வொரு முறையும் காண்கிறான்.எப்படி அதட்டிஉருட்டி வேலை வாங்குகிறான்.அப்போ எல்லோரையும் போன்று தான் நானுமா..என்னாலயும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் தான்.நானா தான் எதையோ போட்டு குழப்பிட்டே இருக்கேன்..”என்று தன் சிந்தனையில் உழன்றவளை கன்னத்தில் பதிந்த அழுத்தமான முத்தம் நடப்புகிற்கு அழைத்து வந்தது.

தன்னவனை நோக்கித் திரும்பியவள் கண்களுள் அவனை நிறைக்க,”திஷா பேபி..மிஸ் யூ பேட்லி..சாரி பேபி லேட்டா எழுந்ததுனால இவ்ளோ டென்ஷன்.ஈவ்னிங் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்துரேன் சரியா..ஹவ் டு கோ..பை டா என லேசாய் சாய்த்து தன் பாணியில் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றான்.

“பாத்து போய்ட்டு வாங்க”,என வேகமாய் கூறியவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்து கிளம்பினான்.

மதிய நேரம் வரை சாரதாவோடும் ராகவனோடும் பேசியவாறு பொழுதை கழித்தவளுக்கு அவர்கள் உறங்கச் சென்றப் பின் என்ன செய்வதென தெரியாமல் சுற்றி வந்தாள்.

அவர் சாப்டாரா என்ன பண்ணிட்டு இருக்காரு  தெரிலையே..”,என அவளள் யோசித்து முடிக்கும் முன் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஹாய் திஷா டியர் என்ன பண்ற சாப்டியா?நா இப்போ தான் லஞ்ச் முடிச்சேன்..டேஸ்ட் செமயா இருந்தது..லவ் யூ டீ பொண்டாட்டி..”

அதை பார்த்தவளுக்கு ஏதோ அவன் தன் எதிரிலேயே அமர்ந்து அதை தன்னிடம் கூறுவது போன்றதொரு பிரமை..மனம் சிலிர்க்க அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு மனது நிலையில்லாமல் தவிக்க என்ன செய்வைதென யோசித்தவள் சாருவிற்கு அழைக்கலாம் என முடிவு செய்து கால் செய்தாள்.

ஹாய் திஷானி எப்படியிருக்கீங்க?”

நல்லாயிருக்கேன் சாரு..நீங்களும் குட்டியும் எப்படியிருக்கீங்க..ஆபிஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிடேனா?”

நாங்களும் சூப்பரா இருக்கோம் டா..இல்ல இல்ல இன்னைக்கு லீவ் தான் ரொம்ப மொக்கையா இருந்துச்சு சோ ஆபீஸ் மட்டம் போட்டாச்சு..”

ஓஓ..”

என்னாச்சு டா எதுவும் ப்ராப்ளமா திஷானி குரலே சரியில்ல..அபி எங்க??”

எப்படி கண்டுபிடிச்சீசீங்க!!அவ்ளோவா தெரியுது..அவர் ஆபீஸ் ஜாயின் பண்ணிடாரு இன்னைக்குதான்..”

அப்போ இது பசலை நோயா!!தலைவனை காணாமல்..ஹா ஹா

ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சாரு..இது வேற எப்படி ஆரம்பிக்குறதுனு தெரில..அதான்..”

சரி ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாமா பேசலாம்

ம்ம் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையா வீட்டுக்கு வாங்களேன் ..குட்டியும் அழைச்சுட்டு வறீங்களா?”

ம்ம் சரி டா வரேன் அவ தூங்குறா எழுந்தவுடனே வரேன்..”

ம்ம் .கே சாரு..பை..”

மாலை ஐந்து மணியளவில் சாரு அங்கே வர திஷானி அவளை மாமனார் மாமியாருக்கு அறிமுகப் படுத்தினாள்.

வாம்மா அபினவ் சொல்லிருக்கான் உன்னைபத்தி..நேர்ல பாத்ததுல ரொம்ப சந்தோஷம்அடடா குட்டி பொண்ணு பாட்டிகிட்ட வாங்க..என்ன சாப்டுறீங்க”,என மேலும் சில நிமிடம் பேசிவிட்டு திஷானி தங்களறைக்கு அவளை அழைத்துச் செல்ல குழந்தை பெரியவர்களோடு விளையாட ஆரம்பித்திருந்தாள்.

சொல்லுங்க திஷானி என்னாச்சு முகமே சரியில்ல..”

அது வந்து எப்படி சொல்றதுனு தெரில சொல்லலாமானு கூட தெரில ஆனா நா ரொம்பவே குழம்பிருக்கேன் சாரு..ஆனா எனக்கு இதை இப்படியே கொண்டு போக தோணல..”

நீங்க பேசுறதுலயே தெரியுது விஷயம் கொஞ்சம் சென்சிட்டிவ்னு..உங்க ரெண்டு பேரோட பெர்சனலா..அபி எதுவும் உங்ககிட்ட??”

ஐயோ அப்படியெல்லாம் இல்ல..நாங்க பாண்டிச்சேரி போய்ருந்தோம்..நல்லா தான் போச்சு எல்லாம்..கடைசி நாள் நா தான் லூசு மாதிரி..என்ன மென்று முழுங்கி விஷயத்தை கூறினாள்.

ஆதரவாய் அவள் கைப்பற்றி அழுத்தியவள்,”திஷா உங்க பயம் நியாயமானது தான் ஆனா அதே நேரம் 100% அப்படிதான் நடக்கும்னு இல்லையே..ஏன் நீங்க பாசிட்டிவ் சைடையும் யோசிக்க கூடாது..”

கரெக்ட்தான் ஆனா நா நினைக்குறது நடந்துட்டா அப்பறம் அவருக்கு தான கஷ்டம் சாரு..என்னையும் குழந்தையும் வச்சுட்டு ரொம்பவே கஷ்டபடுவாரு..”

திஷானி குழந்தை மாதிரி பேசுறீங்க நீங்களே..அபி உங்களை என்னைக்குமே கஷ்டமா நினைக்க மாட்டாங்க..அப்படி நினைக்குறவங்களா இருந்தா தானே விரும்பி போய் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணணும்?

இப்போதைக்கு இந்த யோசனையை கொஞ்சம் ஓரம் கட்டி வைங்க எனக்கு தெரிஞ்சு நீங்க நடந்த விதத்தை வச்சு அவரே உங்களுக்கு கொஞ்சம் டைம் குடுப்பாங்கனு தான் தோணுது..ஒருத்தரை ஒருத்தர் இன்னும் புரிஞ்சு லவ் பண்ணி வாழ்க்கை ரசிச்சு வாழுங்க அப்பறம் தாம்பத்யம்ங்கிறது அதன் போக்கில் நடக்கும் அதுக்கு அப்பறம் நீங்க இந்த கவலையெல்லாம் படலாம்..

இப்போவே இவ்ளோ யோசிச்சு புதுமண தம்பதிகளுக்கான வசந்த காலத்தை விட்றாதீங்க..மோர் தன் எனிதிங் உங்க காதல் மட்டும் தான் வாழ்க்கை முழுவதற்குமான நிலையான ஒரு விஷயம்..சோ மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான்..சரியா?”,என முன்தலையை வருடிக் கேட்க சட்டென யோசிக்காமல் சாருவின் தோள் சாய்ந்து கொண்டாள்.

புரியுது சாரு..கண்டிப்பா நீங்க சொன்ன எல்லாத்தையும் மனசுல வச்சுக்குறேன்.என்ன தான் நீங்க அவரு ப்ரெண்ட்னாலும் இந்த விஷயத்துல எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க தான?”,என பாவமாய் கேட்டாள்.

Advertisement