Advertisement

UD-29:

அவளது பார்வக்கான அர்த்தம் புரிந்து, “என்ன மா லுக் இது… ? என்ன மாதிரி டைமிங்ல என்ன மாதிரி லுக் விடுற நீ…?” என்றதில் கொதித்தவள்,

 

“விருப்பம் இல்லைன்னு சொல்லியும்… கேட்காம… என்கிட்ட இனி உன்முன்னாடி வர மாட்டேன்னு சொல்லிட்டு உங்க அம்மாவை வச்சு காரியத்தை சாதிச்சுட்டல… ஆம்பலைங்கற திமிர் தானே….” கோபம் கண்ணை மறைக்க வார்த்தை தடித்தது தியாவிற்கு… 

அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “ரொம்ப இமோஷன் ஆகுற… பர்ஸ்ட் ரிலாக்ஸ்…” என்றதில் வேக மூச்செடுத்தவள், 

“நா…” என்று ஏதோ சொல்ல வந்தவளின் இதழ் மேல் ஒற்றை விரல் வைத்து, 

“ஷ்ஷ்ஷ்….” என்றவன், அவள் கண் விரித்து அசந்த நேரம் இடையோடு கையிட்டு சட்டென் தன்னோடு அணைத்தான் நொடி நேரத்தில்… 

சற்றும் இதை அவள் எதிர் பார்க்கவில்லை, முகம் சிவந்துவிட்டது நொடியில்… அது கோபத்திலா அல்லது இடையில் தவழும் அவனது கையின் மாயத்திலா என்று அவளுக்கே தெரியவில்லை… 

இதழில் இருந்த அவனது விரலை எடுத்து கண்ணம் வருடினான் அதே ஒற்றை விரல் கொண்டு… சிலிர்த்து விட்டாள் பெண்ணவள்… 

“தியா…” என்ற மென்மையான அழைப்பில், கண் மலர்த்தி பார்த்தாளே தவிர என்னவென்று கேட்கவில்லை… உண்மையில் கேட்க நாவெழவில்லை…

அவளது பார்வையை கண்டவன், “உன்னோட வெட்கம் தான்… இந்த வெட்கம் தான் என்னை இங்க நிக்க வச்சு இருக்குடி… நீ தெரிஞ்சுக்கிட்டியா இல்லையான்னு தெரியல… ஆனா நான் தெரிஞ்சுக்கிட்டேன்… உன்னோட முதல் வெட்கம் கண்டிப்பா அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு தான் வந்தது… அதுவும் என்னால…” என்றவன் அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து புருவம் தூக்கி என்னவென்று கேலியாக கேட்கவும் தன்னிலை தெளிந்தவளுக்கும் அது புரிந்துதான் இருந்தது… 

ஏன் அன்று மகிழன் சென்றதும் வீட்டிற்கு நுழைந்தவளுக்கு மனம் முழுவதும் அதே நினைவுகள் தான்… தன் பெண்மையை இவன் உணர வைக்கிறான் என்று புரிந்தது… தனது உணர்வுகளை வெளி கொணர்கிறான் என்று புரிந்தது… 

ஆனாலும் மகிழனுடன் ஒரு மண வாழ்க்கையை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை… அது தன்னால் முடியும் என்றும் தோன்றவில்லை… 

அதனால் வேண்டாம் என்று சொன்னாளே தவிர அவனை மறக்க முடியவில்லை அதற்கு அவள் முயற்சிக்கவும் இல்லை… 

ரெண்டு நாள் கழித்து வந்த சௌந்தர்யா இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்று சொல்லிவிட்டு செல்ல, கோபம் ஒருபுறம் எதிர்பார்ப்பு ஒருபுறம் என்று இருவேறு நிலையில் தவித்தவள் மகிழனை தொடர்பு கொள்ள முயற்சித்தவளுக்கு பலன் பூஜியமே… 

அவன் இவள் கையில் சிக்குவதாகவே தெரியவில்லை… எந்த ஷாப்பிங்கிற்கும் அவன் தலை தென்படவில்லை… கோவிலில் வைத்து திருமணம் என்று சௌந்தர்யா சொல்ல தியாவாள் எதுவும் செய்ய இயலாமல் போனது அவரை எதிர்த்து… 

அதன் முடிவாக இன்று தான் மகிழன் தியாவின் முன் நின்றான் பட்டுவேட்டி செட்டையில் மாப்பிள்ளை தோரணையில் கம்பீரமாக…

 

எளிமையான முறையில் கோவிலில் வைத்து நல்ல நேரத்தில் தியாவின் கழுத்தில் தாலியை கட்டியவன், அவளது பார்வையை அவன் சந்தித்ததாகவே தெரியவில்லை… 

பார்த்தால் எப்படியும் முறைக்கதான் போகிறாள் அதற்கு எதற்காக பார்க்க வேண்டும் என்று முற்றிலும் தவிர்த்து விட்டான். அதுவேற தியாவை இன்னும் கோபமூட்ட அமைதியாக பல்லை கடித்து நின்றிருந்தாள் வரவேற்பில்… 

அனைத்தையும் யோசித்தவளை மகிழன், “தியா…” என்று கிசுகிசுப்பான குரலில் மீண்டும் அழைக்க, அவன் பார்வை ஏற்று நின்றவள், 

“உன்னோட வெட்கம் எனக்கு சொந்தமானது அதை காலத்துக்கும் அனுபவிக்கணும்னு நினைச்சேன்… என்னால உண்டான வெட்கத்தை கடைசி காலம்வரை நான் ரசிக்கணும்னு நினைச்சேன்…” என்று இடையின் அழுத்ததை கூட்ட, தியாவாள் இந்த உணர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் போகவும்,

 

பட்டென, “ம்பச்ச் விடு என்னை…” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள, 

அவளது கையை மறுகரத்தால் பற்றியவன், “உன் மனசுல விருப்பம் இல்லாமலா இந்த வெட்கம் வந்துச்சு… இல்ல இப்படி நிக்க வச்சுது…?” என்று கேட்டபடி பற்றிய அவள் கைகளில் ஒரு முத்தம் வைக்க, உதட்டை கடித்துக் கொண்டாள் நடுக்கத்தில்… 

அவனது எந்த கேள்விக்கும் தியாவாள் பதில் கூர இயலவில்லை… அத்தனை தடுமாற்றம் உண்டானது அவனது சீண்டலில்… 

மெல்ல அவள் உள்ளங்கையில் முத்தம் வைக்க, உடல் சூடேற மெல்ல கண் மூடியவளுக்கு உடலும் உள்ளமும் தடுமாற மகிழனை இறுக பற்றிக் கொண்டாள் பிடிமானத்திற்கு… 

அவளது நிலையை புரிந்து கொண்டவன், பற்றிய அவள் கைகளை தூக்கி தன் கழுத்தை சுற்றி போட்டவன் அவளை சேர்த்து அணைத்து கொண்டான் மென்மையாக… 

இரு உடல்கள் உரசவும் இருவருக்கும் சுர்ரென்று மின்சாரம் பாய, கைகளின் பிடிமானம் இறுகியது தன்னை போல்… 

தியாவின் நெருக்கத்தை உணர்ந்தவன் மெல்ல அவள் தோளில் தன் இதழை பதிக்கவும் உடல் ஒருநொடி துடித்து அடங்கியது பெண்ணுக்குள்… 

“ஷ்ஷ்ஷ்…” என்று தியாவின் முதுகை வருடி அவளை சமநிலைக்கு கொண்டுவந்தவனின் மறுகை அவளது இடையில் விளையாட தொடங்கியது மிருதுவாக… 

“மகி…” என்று துடித்து முனுகியவளை மேலும் துடிக்க வைக்க நினைத்தான் போலும் அந்த கள்வன்… 

தன் கை விரல்களின் ஜாலத்தில் அவளை மேலும் தன்னுள் இழுத்து கொண்டவன் மெதுவே நகர்ந்து படுக்கையில் மனைவியுடன் விழவும், தியாவிற்கு உடலும் மனமும் விளித்து கொண்டது நொடியில்…

பெண்ணவளின் வாசனையை கழுத்தில் நுகர்ந்து போதை ஏற்றியவன் அதில் முத்தம் வைக்கவும், தியா பலம் கொண்ட மட்டும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளவும் சரியாக இருந்தது…

மெல்ல தன்னிலை மறந்த நிலையில் இருந்தவனுக்கு தியாவின் இந்த பலம் அவனை முற்றிலும் விலகி ஓரம் சென்று விழ செய்ய, ஒன்றும் புரியவில்லை மகிழனுக்கு, 

“ஹே… என்ன டி…?” அப்பட்டமான எரிச்சல் அவன் குரலில்… 

“வேண்டாம்… போ… போயிரு…” என்று பதறி படுக்கையில் இருந்து எழுந்தவள் அவசரமாக தன்னை சரி செய்துக் கொண்டாள் கண்கள் கலங்க… 

“தியா… என்னை ரொம்ப சோதிக்குற நீ…” என்று படுக்கையில் இருந்து எழுந்தவன் அவளை முறைத்து கொண்டே, 

“போன்னு சொன்னா என்ன அர்த்தம்…? நான் எதுக்கு போகணும்…? இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டி…” என்று பல்லை கடிக்க, 

“இல்ல வேண்டாம்… எதுவும் வேண்டாம்…” என்று தலையை ஆட்டியபடி பின் சென்றவளின் விளிகள் கண்ணீரை சிந்தி விடுவேன் என்னும் நிலையில் இருந்தது…

“மனஷனை படுதி எடுக்குற டி… அப்படி என்ன திமிர் உனக்கு …? உன் பின்னாடி வரதுனால சீன் போடுறியா…?” என்று கோபத்தில் கத்தியவனுக்கு அப்பொழுது தான் அவளது கண்ணீரும் பதற்றமான உடல் நிலையும் கண்ணில் பட்டது… 

சட்டென தன்னை உதறி தள்ளியதில் வந்த கோபத்தில் கத்தியவனுக்கு கண்ணும் கருத்தும் வேலை செய்யாது போக, வார்த்தையை விட்டிருந்தான் இரண்டொரு நிமிடத்தில்… 

மகிழனின் வார்த்தையில் கண் விரித்து பயத்தில் நடுங்கியவள் சுவரோடு இடித்து நின்றபடி, வாய் மூடி அழுந்தவள், அப்படியே சரிந்து கால் மடக்கி அமர்ந்து விட்டாள் பெரும் அழுகையோடு… 

எதிரில் நின்றவனுக்கு நொடியில் எல்லாம் புரிந்துவிட, ஒரு பெருமூச்சோடு தன் பின்னந்தலையை கோதிக்கொண்டான் தன்மீது கோபம் கொண்டு… 

‘அவசர பட்டுட்டியே டா லூசு…’ என்று தன்னையே திட்டியபடி தியாவை திரும்பி பார்க்க, மனம் பொறுக்கவில்லை… 

இதுவரை அவன் பார்த்த தியா இத்தனை கலங்கி நின்றதுமில்லை… அவள் அழுததுமில்லை… ஏன் தன் உணர்வுகளை பெரிதாக வெளிகாட்டியதும் இல்லை… 

இப்பொழுது இவள் அழுவதற்கு தானே காரணமாகி விட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது மெல்ல அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், 

“தியா…” என்று அவள் தோள் தொட, வெடுக்கென்று தட்டி விட்டவள், 

“போ… இதுக்கு தான் சொன்னேன்… வேண்டாம்… எனக்கு விருப்பம் இல்ல… என்னால இப்படி வாழ முடியாதுன்னு சொன்னேன்… கேட்டியா…? இப்ப என்னை குறை சொல்லுற…” என்று அழுகையோடு கத்தியவளை பார்க்க முகம் கசங்கியவன், 

“பிளீஸ் தியா… ஐ ஆம் சாரி… வெரி சாரி… நான் இதை அப்ப யோசிக்கவே இல்ல…எ…” அவன் பேசி முடிக்கும் முன், 

“அதான் இப்ப தெரிஞ்சுடுச்சுல… விட்டுரு… என்னால அதையெல்லாம் மறக்க முடியும்னு தோணல… நினைச்சாலே உடம்பெல்லாம் எரியுது…ஒருமாதிரி அசிங்கமாக இருக்கு…” என்று காதை மூடியவளின் இறுகிய விளிகளுக்குள் காண கூடாத காட்சியை கண்ட நிகழ்வுகள் படமாக ஓடியது அதன் போக்கில்… 

அவளது நிலையை புரிந்து கொண்டவன், “தியா… பிளீஸ்… கொஞ்சம் என்னை பாரேன்…”என்று அவள் கண்ணம் பற்றி நிமிர்த்தியவன், 

“கண்ணை திறந்து பாரு தியா…” என்று கெஞ்சவும், மெல்ல கண்களை திறந்தவளின் விளிகள் சிவந்திருக்க, 

“நானும் நீ பார்த்த ஆளுங்களும் ஒன்னா…?” என்று கேட்டதில் பதறி இல்லையென்று தலையை ஆட்டியவளை பார்த்து மெலிதாக சிரித்தவன், 

துடிக்கும் அவள் இதழை முழுவதும் தன்வசம் இழுத்துக் கொண்டான் சட்டென்று… 

அதில் அதிர்ந்து கண்களை விரித்தவள் அவன் தோள்களில் அடித்து தள்ளி தன்னை விடுவிக்க முயன்றவளுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் அவனிடம் சரணடைந்தாள் தோயிந்து போய்… 

சில நிமிடங்களுக்கு பிறகு விலகியவன், “எப்பவும் ஒன்னை நியாபகம் வச்சுக்கோ டி… நீ நெருப்பு மாதிரி யாராலையும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது… அன்னைக்கு நீ பார்த்தது எல்லாம் தப்பு தான்… தெரிஞ்சுக்க வேண்டிய வயசுல எதை தெரிஞ்சுக்கணுமோ அதை தான் தெரிஞ்சுக்கணும்… உனக்கு நடந்தது ஒருவித அதிர்ச்சி… பார்க்க கூடாததை பார்த்துட்ட, கெட்ட கனவா நினைச்சு மறக்க முயற்சி பண்ணுனு சொல்ல மாட்டேன்… ஆனா அதை மாத்தி அமைக்க என்னால முடியும்னு சொல்லுறேன்… அதை நம்பு… என்னை நம்பு… உனக்காக எப்பவும் நான் இருப்பேன்…” என்றவனை பார்த்து மீண்டும் கண்ணீரை சிந்த, 

அதை பெருவிரளால் அழுத்தி துடைத்தவன், “ம்பச்ச்… அழதா டி… நீ அழுது நான் பார்த்தது இல்லை… இனியும் பார்க்க கூடாது…” என்று அதட்ட, கண்ணீரோடு லேசாக சிரித்தவளை, இழுத்து அணைத்துக்கொண்டவன், 

“நாம வாழ்க்கைல நிறைய விஷயங்களை கத்துப்போம்… அதுல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்… நாம கெட்டதை ஒரு பாடமா எடுத்துட்டு அடுத்ததை பார்த்துட்டு நகரணும்… அதையே நினைச்சு வாழ்க்கை முழுசும் கஸ்ட பட கூடாது தியா… விட்டுரு… இன்னையோடு அதை எல்லாத்தையும் விட்டுரு…” என்றதில் இறுக கண்களை மூடியவள் அவனை அணைத்திருந்த பிடியை இன்னும் இறுக்கி தன் பதிலை தர, புன்னகைத்து கொண்டான் மெல்லிதாக… 

“தியா…” என்று அவள் தோளில் புரண்ட முடியை ஒதுக்கியபடி கைகளை படற விட மேலும் அவனுடன் ஒன்றிக்கொண்டாள் பெண்ணவள்… 

அவளை புரிந்தவன், “ரிலாக்ஸ் டி… கண்ணை மூடி என்னை மட்டும் நினைச்சுட்டு நான் பண்ணுறதை அமைதியா ரசி… போதும்…” என்றவன் அவளை தரையில் சாய்த்து கழுத்தில் முகத்தை புகுத்திக்கொள்ள, 

பெண்ணவளோ அவன் பிடரி முடியை கொத்தாக பற்றி கொண்டாள் அவனது செயலில்… 

கழுத்தில் ஊர்ந்த அவன் உதடுகள் அதன் எல்லை கோட்டை தாண்டி பயணிக்க, தியாவிற்கு அதை ஏற்கவும் முடியாது எதிர்கவும் முடியாது திணறிய நேரம் எல்லாம் கொஞ்சி, உதடுகளால் சமாதானம் பேசி அவளை கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழக்க செய்து முழுவதும் தன்வசம் படுத்தினான் அந்த கள்வன்… 

அடுத்து வந்த மணிதுளிகள் அனைத்தும் அவன் சேவகனாய் மாறி தன்னவளை ராணியாக்கி அழகு பார்த்தான் திணற திணற… 

“பிளீஸ்…” என்று திணறியவளை, 

“ரிலாக்ஸ் டி…” என்று சமாதானம் செய்வதும், 

“ம்ம்ம்…” என்று முனுங்கியவளை, 

“நான் இருக்கேன் டி…” என்று இறுக அணைப்பதும்,

“மகி…” என்று துடிக்கையில், 

“ம்ம்ம்….” என்று அவன் முனுங்குவதுமாய் நீண்டது அவர்களின் இரவு….

Advertisement