Advertisement

UD-9:

“சார்…” அவன் இழுக்கும் போதே மகிழனுக்கு புரிந்தது அதுயாரென்று தெரியும் என்பதை…

 

“கேட்கும் போதே சொல்லிடு இல்லைன்னா அடி பலமா விழும்…” என்று வாய்க்குள் நாக்கை மடித்து கண்களை உருட்டியவனை பார்க்க சற்று பயம் ஏறியது என்னவோ உண்மை… 

“அது ஆசிப் சார்…” என்று சொல்லிவிட, மேலே சொல்லு என்பதை போல் ஓர் பார்வை எதிரில் இருப்பவனிடம்… 

“சார்… அவங்க தான் ஹாயா கம்பெனியோட எம்.டின்னு தெரியும்… அவ்வளவுதான்… அதுக்கு மேல எதுவும் தெரியாது சார்… சத்தியமா…” என்ற கெஞ்ச, மீண்டும் கணினியில் பார்வையை செலுத்தியவன், 

“இவங்க அங்க ரூம்குள்ள போன மாதிரி சீன்னே இல்லையே அப்புறம் எப்படி வெளிய வராங்க….?” என்று கணினியில் கண்களை பதித்து புருவம் சுருக்கி, தாடையை தடவியபடி கேட்டவனை பார்த்து, 

“சார்… இவங்க எல்லாருமே விஐபி… யாரும் பொதுவான என்டிரன்ஸ் வழியா வரமாட்டாங்க… சிலநேரம் இந்த மாதிரி போலீஸ் வந்து பிரச்சினை ஆகும்னு தனி என்டிரன்ஸ் தனி டோர் சார்… இந்த ஃபளோர்ல இருக்குற எல்லா ரூம்க்கும் வேற டோர் அண்ட் என்டிரன்ஸ் கேட் இருக்கு சார்…” என்றவனை பார்த்து முறைத்தவன், 

“பண்ணுறது கேடி தனம் இதுல பக்கா பாதுகாப்பு வேற… ” என்று பல்லை கடித்தபடி,

அதை முன்னும் பின்னும் ஓட்டி பார்த்து, “இந்த நாள் பூட்டேஜை மட்டும் கொடு…” என்றதும் மகிழன் கேட்டதை செய்து தர, 

“ஏதாச்சும் விசாரணைனா வந்து சேரு ஸ்டேஷனுக்கு…” என்று அவன் தோளில் பலமான அடி ஒன்றை வைத்து செல்ல, 

“அய்யோ….” என்று வலியில் முதுகை தடவிக் கொண்டான் அந்த பப்பின் மேலாலர்… 

நேராக ஸ்டேஷனுக்கு சென்றவன், அந்த வீடியோவை அதிலும் அந்த குறிப்பிட்ட சில மணி நேரங்களை ஓட்டி ஓட்டி பார்த்தவனுக்கு எதுவும் புலபடவில்லை…

ஆசிப் என்று கூகுளில் தேடி பார்த்தவனின் புருவம் ஏறியது மேலே… முழுவதுமாக அவனை பற்றி அந்தம் முதல் ஆதிவரை நோண்ட தொடங்கினான்… 

“ஹலோ அண்ணா…” என்று குரலில், 

“அதிசயம் தான் மகி… அண்ணான்னு சொல்லுற… என்ன விஷயம் இந்த நேரத்துல ஃபோன் பண்ணியிருக்க…” என்று தமிழ்செல்வன் கேட்கவும், 

“ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்… அதான் கால் பண்ணினேன்… நீ பிரியா…?” என்று கேட்டபடி கணினியை நோண்டி கொண்டிருக்க, 

அந்த பக்கம், “நோ இசியூஸ்… கேளு… சொல்லுறேன்…” என்றதும், 

“ஆசிப் தெரியுமா…? ஹாயா கம்பெனியோட எம்.டி…” என்ற கேள்வியில் முதலில் சில நொடிகள் யோசித்த தமிழ்செல்வன், 

பின் நிதானித்து, “தெரியும் டா… பட் நல்லா தெரியாது… இன்னும் சொல்ல போனா பார்த்ததே இல்லை… எல்லாம் காதுல கேட்டதோடு சரி…” என்க, 

“ஓஓஓஓ… என்ன கேட்டு தெரிஞ்சுக்கிட்ட இதுவரை…?” என்று கேட்கவும், 

“ம்ம்ம்… அவன் பேருக்கு தான் எம்.டி மத்தபடி எல்லா டெஷிஷன் அத்தாரிடி எல்லாம் தியா தான்…” என்று சொல்லவும் சந்தேகம் பெரிதாகி கொண்டே போனது அவனுக்கு… 

“ஏன்…?” 

“தெரியாது… எல்லா மீட்டிங்ளையும் அவ மட்டும் தான் வருவா… ஆசிப்பை எங்கையும் பார்த்ததே இல்லை… அவன் வந்ததும் இல்லை… நான் கேள்விபட்டது, அவனுக்கு அந்தளவுக்கு திறமை பத்தாதுன்னு தான்… தியா உள்ள வந்த கொஞ்ச நாள்ல கம்பெனி பயங்கர வளர்ச்சி காட்டி இருக்கு… இதை நானே கூட சொல்லுவேன்…” என்று முடிக்க, 

“ம்ம்ம்….” என்ற பதில் மட்டுமே, 

“இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையான்னு யோசிச்சு இருக்கேன்…” 

“ம்ம்ம்…” 

“இதுவரை எம்.டி ன்னு எந்த பிசினஸ் மீட்டுக்கும் வந்தது கிடையாது அந்த ஆசிப்…” என்று சொல்லவும், 

“ம்ம்ம்… ஓகே தேங்கஸ்… நான் அப்புறம் பேசுறேன்…” என்றபடி அழைப்பை துண்டித்தும் விட்டான்… 

அவன் அழைப்பை துண்டிக்கும் நேரம் பிரவீண் உள்ளே நுழைந்தான் கையில் கோப்பையுடன்… 

“சார்…” என்று வணக்கம் வைக்க, தலையை ஆட்டி அதை பெற்று கொண்டவனிடம், 

“சொல்லுங்க பிரவீண்… நான் சொன்ன வேலை என்னாச்சு…?” என்று கேட்கும் போதே அவன் முன் கோப்பையை நீட்டியிருந்தான் சொன்ன வேலை முடிந்தது என்று…

அதை வாங்கி புரட்டி பார்த்தவன், “ஹாயா கம்பெனி….” என்று யோசனையுடன் நெற்றியை ஒருவிரல் கொண்டு நீவியபடி இருக்கையில் சாய்ந்தமர்ந்தவனுக்கு மண்டைக்குள் எலி ஓடியது… 

“ஆரம்பத்துல இருந்து எங்கையோ எதுலையோ இந்த கம்பெனி முடிச்சு விழுது… என்னனு தான் தெரியல… பார்க்குறேன்… எதுவரை போகுதுன்னு…” என்றவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் கையில் தேவையானதோடு… 

“சார்….” என்று பிரவீண் இழுக்கவும், 

“தியாவை பார்க்க போறேன்… ஒரு சில விஷயம் தெளிவுபடுத்திக்க வேண்டி இருக்கு… நீங்க வேண்டாம் நானே பார்த்துக்குறேன்…” என்றபடி வெளியேறிவிட, 

“பர்ஸ்னல் விஷயமா இல்ல கேஸ் விஷயமா…?” என்று தனக்குதானே கேட்டுக்கொண்டவன், 

“பர்ஸ்னல் இல்லாட்டியும் பர்ஸ்னலா இனி அடிக்கடி போக வேண்டி இருக்கும் தான்…” என்றதோடு தன் வேலையை பார்க்க சென்றான் அமைதியாக… 

“மேடம்… எஸ்பி சார் வந்து இருக்காங்க…” என்று பிஏ வந்து சொல்லவும், 

கோப்பையில் கண்களை பதித்திருந்தவள் தலையை நிமிர்த்தாது கண்களையும் உயர்த்தாது அமைதியான குரலில், 

“ம்ம்ம்… வர சொல்லுங்க…” என்ற குரல் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது… 

அடுத்த இரண்டொரு நிமிடத்தில் உள்ளே நுழைந்தவன் கண்ணில் பட்டது அவளது தீவிரமான முகம் மட்டுமே… 

நுழைந்தவன் அன்று போல் இல்லாமல் இன்று வந்ததும் அவள் எதிரில் இருந்த இருக்கையில் வாகாக சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டு அம்ர்ந்து கொண்டான்… 

இவை அனைத்தும் தியாவிற்கு உணர முடிந்தாலும் தலையை நிமிரத்தி என்னவென்று பார்க்கவும் இல்லை வாவென்று சொல்லவும் இல்லை… 

கோப்பை முழுவதும் படித்து கையப்பம் போட வேண்டிய இடத்தில் அனைத்தையுமிட்டு ஒருமுறை சரி பார்த்து என்று அவள் பார்த்து கொண்டிருந்த வேலையை முழுவதும் முடித்து அதை மூடியபின்பே தலையை நிமிர்த்தி பார்த்தாள் எதிரில் இருப்பவனை… 

“சொல்லுங்க சார்….?” என்று கேட்டவளின் பார்வையிலும் பாவனையிலும் இதற்கு முன்பு நாம் சந்தித்ததே இல்லை என்னும் தோரனை… 

அவன் பேசும் முன் அங்கிருந்த அவளது பிஏவை ஓர் பார்வை மகிழன் பார்க்க, அமைதியான குரலில் கையில் இருந்த கோப்பையை நீட்டியபடி, “நீங்க போய் இதை பிராசஸ் பண்ணுங்க…” என்று அனுப்பி வைக்க, ஒரு மெச்சும் பார்வை மகிழனிடம்… 

“சொல்லுங்க….” என்று அவள் ஆரம்பிக்கவும், 

“சிம்பிளி வாவ்… ” என்று இருக்கையின் கைபிடியில் கையை ஊன்றி உள்ளங்கையில் முகநாடியை தாங்கிபடி ரசனையாக சொல்ல, 

“வாட்…” என்று புருவம் சுருக்கியவளை கண்டு, 

“உன் சின்சியாரிட்டி… வாவ்… உன் அண்டர்ஸ்டான்டிங்… வாவ்… உன் சாரி… வாவ்… உன் பியூட்டி… வாவ்…” என்று அவன் அடுத்து வாய் திறக்கும் முன், 

“ஹலோ… ஹலோ… ஸ்டாப்… எதுக்கு வந்தீங்களோ அதை மட்டும் பேசுன்னா போதும்….” என்று லேசாக குரலை ஏறி சொல்லவும், 

“ம்ம்ம்… ரொம்ப தான் மா… சரி விஷயத்துக்கு வரேன்… அதுக்கு முன்னாடி ஒருவிஷயம்… இந்த ரெட் வித் பிளாக் சாரில நீ செம…” என்று பார்வையில் ரசனையும் முகத்தில் வலிசலையும் காட்டியவனை பார்த்து, 

“ம்பச்ச்…” என்று சலிப்பாக உச்சுக்கொட்டியவளை, 

“ஓகே… நவ் விஷயத்துக்கு வரேன்… ஆசிப் யாரு…?” என்று கேட்கவும் இப்பொழுது தியாவிடம் இருந்த இலகுதன்மை முகபாவனை அனைத்தும் நொடியில் மாறியது அவனது கேள்வியில்… 

“எதுக்கு கேட்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…?” என்ற அவளது எதிர் கேள்வியில், 

“கேள்வி முதல்ல என்கிட்ட இருந்து வந்துச்சு மேடம்…” என்ற அவன் தோரனையே காட்டி கொடுத்தது, நான் இப்பொழுது போலீஸ் மட்டுமே என்று…

‘ம்ம்ம்… இவனை’ என்று உள்ளுக்குள் பொறுமியவள் , வெளியே

“இந்த கம்பெனியோட எம்.டி அவரு…” என்றதும், 

“ஓஓஓ… ” என்று புருவம் உயர்த்தி முகத்தில் பாவனை காட்டி கேட்ட விதத்தில், அதில் நக்கல் நிறைந்திருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது தியாவினாள்… 

அதில் லேசான கோபத்தை காட்டி, “ஹலோ சார்… என்ன வேண்ணும் உங்களுக்கு… எதுக்கு வௌர்கிங் ஹவர்ல வந்து நக்கல் அடிச்சுட்டு இருக்கீங்க…?” என்று கேட்டவளை, 

“அப்ப நீங்க எப்ப ஃபிரின்னு சொல்லுங்க… பொறுமையா காஃபி குடிச்சுட்டே கேட்போம்…” அவனது பாவனையில் உல்லாசம் நன்றாக தெரிந்தது இப்பொழுது…. 

இவனை எப்படி கையால வேண்டும் என்று புரியவில்லை தியாவிற்கு… உண்மையில் அன்று வேலைகள் அதிகம் தான் அதில் இவன் அழிச்சாடியம் செய்து கொண்டிருக்க, நெற்றியில் கை வைத்து யோசிக்க தொடங்கினாள் எவ்வாறு இவனை கிளப்புவது என்று… 

அவளையே பார்த்திருந்தவன், “என்ன தியா மா… தலை வலிக்குதா…?” என்ற மென்மை சத்தியமாக தியாவை உள்ளுக்குள் ஆட்டி பார்த்தது அந்த நொடி தான்… 

இந்த வார்த்தை கடந்து வந்த சில வருடங்களில் இதுவரை யாரும் இவளிடம் கேட்டிறாத ஒன்று அதிலும் அந்த வார்த்தையில் இருந்த மென்மை… மென்மையில் இருந்த அக்கறை… தியாவிற்கு அது பொய்யில்லை பாசாங்கு இல்லை விளையாட்டு இல்லை என்று புரிந்தது… 

உண்மையில் அதை அவள் மனம் விரும்பியது தான்…ஆனால் எதையும் அவள் வெளிகாட்ட நினைக்காது… மகிழனின் வார்த்தைக்கு பதில் கூறும் முன், அவளது அழைப்பேசி சிணுங்க, எடுத்து காதிற்கு கொடுத்தாள் எதிரில் இருப்பவனை பார்த்தபடி, 

“எஸ்…. ”  எதிர்பக்கம் என்ன சொன்னார்களோ, அவசரமாக தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள் மீண்டும் எதிரில் இருப்பவனை பார்வையால் எரித்தபடி, 

“நோ… இன்னைக்கு வேண்டாம்… மீட்டிங்கை கேன்சல் பண்ணுங்க… நாளைக்கு அதை மாத்திக்கலாம்… ஒரு அர்ஜன்ட் மீட்ங் பிக்ஸ் ஆயிருச்சு…. அதான் வரமுடியல… நாளைக்கு கண்டிப்பா மீட்டிங் இருக்கும்…” என்ற கூறி வைக்கவும், 

மகிழன், “தேங்கஸ்….” என்றிட, 

“முக்கியமான மீட்டிங்… விட்டுட்டு உட்கார்ந்து இருக்கேன்… டைம் வேஸ்ட் பண்ணாம என்ன விஷயம்னு சொன்னா நல்லா இருக்கும்…” ஒருவித கடுப்பு அவள் முகத்தில்… 

மகிழனும் அவள் நிலை புரிந்து, “ம்ம்ம்… ஆசிப்பை பார்க்கணும்… எப்ப முடியும்…?” என்று கேள்வியில் நெற்றியை தேய்த்து கொண்டவள்,

 

“எதுக்கு பார்க்கணும்…? என்ன விஷயம்னு சொல்லுங்க…” 

“இந்த கம்பெனி எம்.டியை நான் பார்க்கணும்னு சொன்னேன்… உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு ஏதாச்சும் அவசியம் இருக்கா…?” 

“ம்ம்ம்…” என்றவளிடம் ஒரு பெருமூச்சு வர, “அவரு எப்பவாச்சும் தான் வருவாரு… இங்க எல்லாமே நான் டிசைடு பண்ணுறது தான்…” என்றதும் கண்கள் இடுக்கியவன், 

“ஓஓஓ… நீங்க ஆசிப்பிற்க்கு என்ன வேண்ணும்…?” கேள்வி தியாவை கோபம் மூட்டியது…. 

“வாட்…?” என்று சற்று குரலை உயர்த்த, 

“நீங்களும் ஆசிப்பும் என்ன ரிலேஷன்னு கேட்டேன்…?” நேர்பார்வை அவனிடம்…

“எதுவும் இல்லை… ஐ ஏம் எ எம்பளாய் அண்டர் ஹிம்….” என்றவளுக்கு இவனிடம் வார்த்தையை பார்த்து விடவேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடித்தது… 

தாடையை நீவியபடி யோசித்தவன், “எந்த ரிலேஷனும் இல்லாம எப்படி இவவ்ளவு பவர் இந்த கம்பெனி மேல உங்களுக்கு…?” 

“ஹலோ சார்… நீங்க எதுக்கு இப்ப அதெல்லாம் கேட்குறீங்க… என்ன விஷயமா வந்து இருக்கீங்க…? அதை சொல்லுங்க முதல்ல…” என்று எரிந்து விழுந்ததை கவனித்துக் கொண்டான் உள்ளுக்குள்… 

‘ஏதோ ஒன்னு இருக்கு… கண்டுபிடிக்குறேன்…’ என்று எண்ணிக்கொண்டவன், 

“இது விசாரணை மேடம்… நீங்க பதில் சொல்லி தான் ஆகணும்… இந்த கம்பெனி மேல சந்தேகம் இருக்கு ஒரு கேஸ் விஷயமா… அதுக்கு தான் உங்க எம்.டி யை பார்க்கணும்னு சொன்னேன்… ஆனா நீங்க என்னமோ நான் தான் எல்லாம்னு சொல்லுறீங்க… அப்ப கேள்வியை உங்க கிட்டயே கேட்கலாமா…?” என்று திமிரான தோரணையில் கேட்கவும், தியாவிற்கு பல்லை மட்டுமே கடித்துக்கொள்ள முடிந்தது…

“சார்… அவருதான் எம்.டி ஆனா அவருக்கு வேற பிஸினஸும் இருக்கு… அதுனால எப்பவாச்சும் தான் வருவாரு…” என்று கூறி இடைவெளி விட்டவளுக்கு உள்ளுக்குள் ஏதோ எச்சரிக்கை மணி அடித்தது தான்… ஆனால் இன்று அதை எதையும் முகத்தில் கட்டாமல் இருக்க பெரிதும் முயற்சித்தாள்… 

அவன் மீது வரும் கோபமும், எரிச்சலும் முகத்தில் அவளையும் மீறி வெளிபட, ஒருகட்டத்தில் அதையும் சுதாரிக்க தொடங்கினாள்… 

“ம்ம்ம்… தென் பைன்… “என்று டெபிளை லேசாக தட்டியவன், 

“நீங்க எப்படி இந்த போஸ்டுக்கு இந்த சின்ன வயசுல வந்தீங்க…? இதுல உங்ஙளுக்கும் உங்க எம்.டிக்கும் எந்த ரிலேஷன்சிப்பும் இல்ல வேற… அப்புறம் எப்படி…?” என்று முதல் சந்தேகத்தை கேட்க, 

உள்ளுக்குள் கோபம் எரிமலையாக பொங்கியது, ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல், “எதுக்கு இந்த கேள்வின்னு தெரிச்சுக்கலாமா…?” என்று கேட்டதற்கு,

“கேள்வி கேட்டா பதில் சொல்லி பழக்கம் இல்லையோ…? எதிர் கேள்வி கேட்குறீங்க…?” பார்வை குத்தீட்டியாக இருந்தது… 

“எனக்கு கம்பியூட்டர்ல ரொம்ப இன்டிரஸ்டு அதிகம்… சோ… இங்க வரதுக்கு அந்த இன்டிரஸ்ட் ஒரு காரணம்… புது பிராஜக்ட் தனியா முடிச்சு குடுத்தேன்… அப்படியே படிபடியா இங்க வந்தேன்…” என்று உள்ளுக்குள் மூன்ட எரிச்சலை காட்டாது சொல்ல, 

“ம்ம்ம்… எத்தனை வருஷம் இந்த வேலைல இருக்கீங்க…?” என்று கேட்க, 

“சிக்ஸ் இயர்ஸ்…” 

“அப்ப இங்க வர பிராஜக்டை ஓகே பண்ணுறது…?” 

உள்ளம் எதையோ எடுத்துரைத்தது, “சிலநேரம் நான்…  சிலநேரம் எம்.டி சொல்லுவாரா….” சுதாரிப்பான பதில்,

 

“அப்ப கம்பெனில நடக்குற விஷயத்துல ரெண்டு பேருக்கும் பங்கிருக்கு…?” 

தியாவிற்கு எதுவும் சரியாகபடவில்லை… எதற்கு இத்தனை கேள்விகள், எதற்கு இந்த விசாரணை, எதற்கு இவன் வழிகிறான்… எங்கோ சருக்கிவிழ போகிறோமோ என்னும் பயஉணர்வு உள்ளுக்குள்… 

பல வருடம் கழித்து தோன்றும் பயம்… மாட்டி கொள்வோம் என்று அல்ல, உயிர் பயம் அல்ல, இத்தனை வருட தவம் வீணாகி விடுமோ என்னும் பயம்… 

அவளிடம் பதில் இல்லாமல் போகவும், மகிழன் “ஹலோ மேடம்….” என்று டேபிளை தட்டி அழைக்க, 

தன் யோசனையில் இருத்து வெளிவந்தவள், “ஹான்…. எஸ்…” என்றவள் பின் தெளிந்து,

“ஆமா…” என்று ஒப்பு கொண்டவளை ஆழ்ந்து பார்த்தவன், 

“ம்ம்ம்… உங்க கம்பெனி பிரான்ச் ஒன்னு வெளிநாட்டுல இருக்குல்ல…?” என்று கேட்கவும் அமைதியான முகத்துடன் இருக்கையில் சார்ந்தமர்ந்தவள், 

“ம்ம்ம்…” என்க, 

சற்று யோசிப்பது போல் உதட்டை சுழிந்தவன், “எதுக்கு உங்க எம்பாளாய்ஸை வெளிநாட்டு கம்பெனிக்கு அனுப்புறீங்க…? அதுவும் மாசமாசம்…?” என்ற கேள்விக்கு, 

“அது எங்க டேக்டிக்ஸ்… இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை…?” என்று திருப்பி கேட்கவும், 

சற்று யோசித்தவன், “நத்திங்… நாங்க ஒரு கேஸ் விஷயமா விசாரணை பண்ணும் போது உங்க கம்பெனி ஆளுங்க தான் அதிகம் டிராவல் பண்ணி இருக்குற மாதிரி ரெகார்டு பார்த்தேன்… ஒரு சின்ன கிளாரிபிக்கேஷன்… “என்றதும்,

 

“இப்படி பண்ணா நிறைய எப்போர்ட்டு போட்டு வேலை செய்வாங்க… சோ இப்படி பண்ணுறோம்… மத்தபடி எதுவும் இல்ல…” தன் அண்ணன் மூலம் கேட்ட விசயம் தான் ஆனாலும் உள்ளுக்குள் எங்கோ இடித்தது…

ஆனால் பார்த்துக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு நினைத்தவன், “ம்ம்ம்… பைன்… ஏதாச்சும் விசாரணைனா கோவாப்பிரேட் பண்ணுங்க…” என்றபடி எழுந்து கொள்ள, 

அதற்கும், “ம்ம்ம்….” என்ற பதிலே அவளிடம்… 

“தென்…” என்று இழுத்தவன், “அந்த டிரஸ்ட்…?” கேள்வி பாதியில் நின்றது…

“அது என் பர்சனல்… அதுக்கும் இந்த கம்பனிக்கும் எந்த சமந்தமும் இல்ல… என்னும் சொல்ல போன்னா யாருக்கும் என்னோட இந்த டிரஸ்ட் பத்தி தெரியாது… அதை நீங்களும் அப்படியே மெயின்டையின் பண்ணுவீங்கன்னு நம்புறேன்…”என்றவளை ஆழ்ந்து பார்த்தவன் உள்ளுக்குள்,

‘அப்ப இதை தான் அன்னைக்கு பேச வந்திருப்பா போல…’ என்று யூகிதவன்,

“உங்களுக்கு எப்படி இந்த இன்பர்மென்ஷன் வந்துச்சு….?” என்று அவளை ஆழ்ந்து பார்க்க, மகிழனை நேர் பார்வை பார்த்தவளின் கண்களில் அத்தனை நிமிர்வு…

“எனக்கும் ஸ்பை இருக்காங்க சார்… இந்த மாதிரி பொண்ணுங்களை ரெஸ்கியூ பண்ணுறது தான் என்னால முடிஞ்ச ஹெல்ப்ன்னு நினைக்குறேன்… சில பொண்ணுங்களை சம்மந்தப்பட்ட குடும்பத்தோடு சேர்த்துடுவேன்… அப்படி இல்லாதவங்களை டிரஸ்ட்ல வச்சு பார்த்துக்குறேன்… தட்ஸ்ஆல்…”

அவளது விளக்கத்தில் எந்த சந்தேகமும் முரண்பாடும் தெரியவில்லை மகிழனுக்கு, மாறாக காதல் அதிகரித்தது உள்ளுக்குள்….

எழுந்து வெளியே செல்ல இருந்தவன் ஒருநொடி தாமதித்து, திரும்பி “இந்த சாரில அழகா இருக்க டி தியா… ” என்றுவிட்டு வெடுக்கென்று வெளியேறிவிட்டான் குறும்பு சிரிப்புடன்…

 

அவனது கடைசி வார்த்தைகள் எதுவும் தியாவை பாதிக்கவில்லை உண்மையில்… மண்டைக்குள் அணைத்தும் வேறு சிந்தனைகளே… 

மகிழன் சென்றதும் தியாவின் அழைப்பேசி மீண்டும் ஒளிக்க, எடுத்து பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் அதை உயிர்பித்து காதில் வைத்தாள் அதே நிதானத்துடன்… 

“ஹலோ மேடம்… நீங்க கேட்ட பார்சல் ரெடி… எப்ப வந்து வாங்கிறீங்க…?” என்ற கேள்வி அவளது வாழ்க்கை லட்சியதிற்கான அடுத்த கட்டமாக இருந்தது… 

தொடரும்….

 

 

Advertisement