Advertisement

UD-6:

“ஆசிப்…” என்று குரலை உயர்த்தி இருந்தார் மன்சூர்…

 

அதில் அந்த அறையே சற்று நடுங்கி அமைதியாகி நிறக், ஆசிப் மட்டும் அடங்குவதாக தெரியவில்லை… 

“சும்மா என்னை கத்தாதீங்க ப்பா… முதல்ல யார் இவ…? எதுக்கு இவளுக்கு இத்தனை இடம் குடுக்குறீங்க…? இவ சொன்னான்னு நீங்க சரின்னு சொல்ல போய்தான் இப்ப போலீஸ் எல்லாம் வர மாதிரி ஆயிருச்சு… ” என்று எகிற, மன்சூர்

“இன்னும் ஒருவார்த்தை பேசுன… நானே உன்னை அடிக்க கை ஓங்க வேண்டி இருக்கும்… அப்புறம் மத்தது எப்படின்னு யோசிச்சுக்கோ…. ” என்று கத்தியபடி எழுந்து நிற்க, 

அவமானமாக இருந்தது ஆசிப்க்கு… அதுவும் தியாவின் முன்பு தந்தையின் இவ்வார்த்தைகள் பெருத்த அவமானமே அவனை பொறுத்தவரை… 

இத்தனை பேச்சிலும் தியா முகத்தில் எதுவும் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் குளிர்ந்து கொண்டு தான் இருந்தாள்… 

இங்கு தியா மன்சூரிடம் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இருவருக்குளும் மோதலே அது நாட்கள் நகர நகர இருவருக்குள்ளும் சண்டைகள் அதிகரித்தது தியாவை முன்வைத்து… அதற்கு மாறாக தன் நிலையிலும் மன்சூரின் உள்ளத்திலும் உயர்ந்து கொண்டே போனாள் படிபடியாக… 

“இதுனால ஒருநாள் நீங்க ஃபீல் பண்ணுவீங்க ப்பா… இவ பேச்சை கண்ணை மூடிட்டு கேட்குறீங்க… கீழ விழுந்த பின்னாடி நான் சொன்னதை நினைச்சு பார்ப்பீங்க… ” என்றபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், இருக்கையின் கைபிடியில் கையூண்றியவனுக்கு வேக மூச்செடுத்தது தன் கோபத்தை அடக்கும் பொருட்டு… 

அவன் அமர்ந்தும் பொறுமையாக மன்சூரின் புறம் திரும்பியவள், மறந்தும் ஆசிபின் முகத்தை பார்க்கவும் இல்லை அவன் புறம் திரும்பி பேசவும்வுமில்லை… 

ஒருவித ஒதுக்கத்தை உணர வைத்தாள் அவனுக்கு… அது இன்னும் இன்னும் கோபவத்தை தான் தூண்டியது உள்ளுக்குள்… 

“சார்…” என்று அழைக்கவும் ஆசிப்பை முறைத்து கொண்டிருந்தவர், இருக்கையில் அமர்ந்து, 

“என்னாச்சு தியா…?” என்று நேரிடையாக கேட்கவும், 

“நத்திங் சீரியஸ் சார்…” என்று சொல்லும் போது ஏதோ சொல்ல வாய் திறக்க வந்த ஆசிப்பை ஒற்றை முறைப்பில் அடக்கி விட்டார் மன்சூர்…. 

“அப்புறம்…” என்று ஆரம்பிக்கும் முன்பே, 

தியா, “அப்புறம் எதுக்கு போலீஸ் வந்தாங்கனு கேட்க போறீங்க… அதானே…” என்றவள், 

நிமிர்ந்து அமர்ந்து, “சார் நாம இப்ப ஒரு ஐட்டி கம்பெனி ரன் பண்ணுறோம் அதுவும் சக்சஸா போயிட்டு இருக்கு… அதுவும் டாப் லிஸ்டுல இருக்கு… சோ எதாச்சும் ஹெல்ப் கேட்டு போலீஸ் வரது நார்மல் தான்…” என்கையில், 

மன்சூர், யோசனையாக புருவம் சுருக்கி “ஹெல்பா….?” என்று கேட்க, ஆசிப் தன் கோப பார்வையை அவள் மீதிருந்து மாற்றி கொள்ளவில்லை… 

“ஆமா சார்… அவங்க கேஸ்ல ஒரு டௌட்… அதுக்கு ஹெல்ப் கேட்டு வந்தாங்க… ஒரு ஐபி அட்ரஸ் கேட்டாங்க சோ பார்த்து சொன்னதும் கிளம்பிட்டாங்க… தட்சால்… ” என்று சாதாரணம் போல் சொல்லி முடிக்க, 

மன்சூர், “என்ன கேஸ்…?” என்று கேட்டதும் உள்ளுக்குள் இறுகியவள் எப்பொழுதும் போல் முகத்தில் எதுவும் காட்டி கொள்ளாமல், 

“அது சீக்கிரெட்டுனு சொல்லிட்டாங்க… வெளியே சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க… ” என்று நிறுத்த, புருவம் சுருங்க யோசித்த மன்சூர் தன் தாடையை தடவியபடி, 

“அவங்க டிபார்ட்டுமென்டுல இல்லாத ஹேக்கரா…?” என்று கேட்டு முடிக்கவும், 

ஆசிப், “அப்படி கேளுங்க ப்பா…” என்று டேபிளை தட்ட,

தியா அவன் புறம் திரும்பாமல் மன்சூரை பார்த்தவாரே, “இதே கேள்வியை நானும் கேட்டேன்… நம்ம லாஸ்டா பண்ண பிராஜட் அதை பத்தி தான்… அதுனால நம்ம கிட்ட வந்திருந்தாங்க…” என்றவளை புரியாது பார்க்க, 

இப்பொழுது தியா ஆசிப் புறம் திருப்பி, “அந்த ஐட்டி கம்பெனியோட எம்.டி நீ தானே… உனக்கு தெரிஞ்சு இருக்குமே அது என்ன பிராஜக்ட்னு… ” என்று திமிராக கேட்கவும், முழிக்க மட்டுமே முடிந்தது அவனால்… 

மன்சூர்க்கு புரிந்தது தியாவின் இந்த கேள்விக்கு அர்த்தம்… இது தேவையா என்பது போல் மகனை ஓர் பார்வை பார்த்தவர், ஒரு பெருமூச்சுடன்

“நீ சொல்லு தியா… அவன் அப்படிதான்னு தெரிஞ்சது தானே… விடு….” என்றதும், தியாவின் நேர்பார்வையில் எந்த மாற்றமும் இன்றி ஆசிப்பை பார்த்தவள்,

“எதுவும் தெரியலைன்னா அமைதியா இருக்கணும்… தெரிஞ்சு பண்ணுற யாரும் இங்க முட்டாள்னு சொல்ல முடியாது…” என்றவள், அவன் ஏதோ பேச வரும்முன், 

மன்சூரின் புறம் திரும்பி, “ஹியுமன் டிராக்கிங்…” என்றவள், 

“எனக்கு சரியா தெரியலை… பட் என் யூகம் கரெக்ட்னா ஆள் கடத்தல் அதும் குழந்தைங்களை கடத்தி இருக்கணும்… அதான் நம்ம கிட்ட வந்து இருக்காங்க… இதோட மெயின் பிராஜக்ட் அவங்க டிபார்மென்டுக்கு நம்ம தான் செஞ்ச குடுத்தோம்…” என்றவளை 

“என்ன கேஸ்னு தெரியாதுன்னு சொன்ன… இப்ப இவ்வளவு சொல்லுற…” என்று ஆசிப் கேட்கவும், 

“ம்ம்ம்… இப்பவும் சொல்லுறேன் என்ன கேஸ் யார் என்னனு எல்லாம் தெரியாது… இது விஷயமா அவங்க கேட்கவும் நான் யூகிச்சதை தான் இங்க சொன்னேன்…. மேபி அவங்க டெரரிஸ்டை கூட தேடலாம்… ” என்னும் போது, 

“ஒருவேலை சுத்தி வளைச்சு நம்ம ஆளுங்களை அவங்க தேடுனா…?” என்று நிறுத்த, 

“இத்தனை வருஷம் நடந்துட்டு இருக்கு… வெளியே போக வாய்ப்பில்ல… தப்பை சரியா பண்ணிட்டு இருக்கோம்… இத்தனை நாள் இல்லாம இப்ப பிரச்சினைனா கண்டிப்பா உள்ளுக்குள்ள யாரோ இருக்காங்கன்னு அர்த்தம்…” என்றவள் இப்பொழுது மன்சூரின் புறம் கம்பீரமாக திரும்பியவள், 

“போலீஸ் வரது சாதாரணம்… அவங்க தேவைக்கு ஐட்டி கம்பெனிக்கு ஹெல்ப் கேட்டு வரதான் செய்வாங்க… இட்ஸ் காமென்… அதுக்குன்னு நாம தப்புன்னு அர்த்தம் இல்ல… நான் எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன்… இத்தனை வருஷம் கொஞ்சம் கூட சிதராம நடக்குற வேலையை நீங்களே கெடுத்துக்காதீங்க… அப்புறம் நஷ்டம் நமக்கு…சாரி… உங்களுக்கு தான்…” என்றதோடு எழுந்து கொண்டவள், தன் கூலரை அணிந்து வெளியே செல்ல எத்தனிக்க, மன்சூர்

“தியா… நீ தப்பா எடுத்துக்காத… அவன் ஏதோ யோசிக்காம பேசிட்டு இருக்கான்…” என்று சொல்லவும், 

“அதுதான் சார் ரொம்ப ஆபத்து… இங்க பேசுன மாதிரி வேற எங்கையாச்சும் யோசிக்காம பேசுனாங்களா இல்லையான்னு விசாரிங்க ஃபர்ஸ்ட்…” என்றபடி வெளியேறி விட்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை சந்தோஷம் ஆனால் அதை முகத்தில் காண முடியாத அளவிற்கு உணர்ச்சியற்று இருந்தது… 

உள்ளே மன்சூர், ஆசிப்பை “கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு…?” என்று கத்த, 

“ப்பா… நீங்க அவளுக்கு ஓவரா இடம் தரீங்க…” என்று பதிலுக்கு கத்த, ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது…

“டேய் ஏன்டா இப்படி முட்டாளா இருக்க… அவ இன்னைக்கு இல்லைன்னா நமக்கு இத்தனை கோடி லாபம் வராது… அதுவும் இல்லாம நான் உயிரோட இருந்தும் இருந்திருக்க மாட்டேன்… ” என்னும் போது, 

“ஓஓஓ… அதான் நன்றிகடனா இப்படி கண்ணை மூட்டிட்டு நம்புறீங்களா…” என்றிட, ஆயாசமாக மீண்டும் இருக்கையில் அமர்ந்தவர், 

“நான் கஷ்டப்பட்டு இந்த சாம்ராஜியத்தை உருவாக்கி இருக்கேன் நீ உன் முட்டாள் தனத்தால அதை அழிச்சுறாத… அப்படி இதை அழியவும் நான் விடமாட்டேன்… ஏன்னா இதுக்காக நான் நிறைய இழந்து இழக்க வச்சு தான் இங்க வந்து நிக்குறேன்… முடிஞ்சா கூட இருந்து இதை இன்னும் பெருசாக்கி நீயே கைல எடு இல்லாட்டி…” என்று உறுதியாக பேசிக்கொண்டே வந்தவர் சிறு இடைவெளி விட்டு, 

“நீயே விலகிக்கோ…” என்றதோடு எழுந்து வெளியே சென்றுவிடு அப்படியொரு ஆத்திரம் வந்தது ஆசிப்பிற்கு…

 

“ஆஆஆஆஆ….” என்று கத்தியபடி அங்கிருந்த இருக்கைகளை தூக்கி எறிந்து காலால் எட்டி உதைத்து என தன் கோவத்தை காட்டி கொண்டிருந்தவனுக்கு அது மட்டுமே செய்ய முடிந்தது என்பது தான் உண்மை… 

“உன்னை….” என்று பல்லை கடித்தவன் வேகமாக வெளியேறினான் கண்மண் தெரியாத கோவத்தில்…

இங்கு பார்க்கிங்கில் காதில் ஃபோனுடன் நின்று கொண்டிருந்த தியாவிற்கு ஏனோ சரியென்று படாத ஒன்று உள்ளுக்குள்… புருவம் சுருங்க நின்றிருந்தாள் சிலையாக… 

“சார்… சொன்னா புரிஞ்சுகோங்க…” என்று கெஞ்சிக் கொண்டிருந்த பெண்மணியை சிறிதும் சட்டை செய்யவில்லை மகிழன்… 

“சார்… ” என்று மீண்டும் இழுக்கவும், 

“அப்ப இந்த டிரஸ்ட்க்கு யார் ஓனர்னு சொல்ல மாட்டீங்க அப்படி தானே…?” என்றபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் அங்கிருந்த மேஜையின் மீதிருந்த பைல்களை எடுத்து புரட்ட, 

எதிரில் நின்றிருந்த ஐம்பதை தொடவிருக்கும் பெண்மணிக்கு என்ன சொல்லதென்றே தெரியவில்லை… 

“அச்சோ சார்… நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்… எனக்கு தெரியாது சார்… இந்த ஆறு வருஷத்துல நான் பார்த்ததும் இல்ல…” என்று சொல்லவும், 

“வாட் ஆறு வருஷமா…?” என்று கேட்டவனுக்கு உள்ளுக்குள் சந்தேகங்கள் முளைக்க ஆரம்பித்தது… 

“ஆமா சார்… முதல்ல ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் தான் இருந்துச்சு… அப்புறம் வந்தவங்க தான் இவங்க எல்லாம்…” என்று சொல்லவும் தன் கையில் இருக்கும் புத்தகத்தை புரட்டி பார்த்தான் மீண்டும்… 

மொத்தம் பதினைந்தே பேர் மட்டும் இருந்த பெண்களுக்கான காப்பகம் அது… மகிழனுக்கு குழப்பமும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் சேர்ந்தே எழுந்தது…

“இப்ப அந்த பொண்ணு எங்க…?” என்ற மகிழனுக்கு, 

“இங்க தான் சார் இருக்கா… வேலைக்கு போயிட்டு இருக்கா…” என்றதும் இன்னும் ஆச்சரியம், 

“வேலைக்கா…?” என்று கேட்டவன், 

“அப்ப இங்க அந்த பொண்ணு வந்தப்ப என்ன வயசு…?” 

“ஒரு பதினாரு இருக்கும் சார்…” என்றதும் புருவம் உயர்ந்தது ஆச்சரியத்தில், 

“நீங்க எப்படி இங்க…?” 

“சார்… எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிறேன் சார்… எனக்கு ஒரு ஆக்சிடென் ஆச்சு… அதுல என் புருஷனை இழந்துட்டேன்… பையன் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டான்… அப்ப தான் ஒருத்தர் வந்து இப்படி ஒரு பொண்ணை பார்த்துக்கணும் முடியுமான்னு கேட்டாங்க… சரின்னு ஒத்துக்கிட்டேன்… அப்புறம் தான் இங்க வந்தேன்… இங்க வந்த அப்புறம் எப்பவும் வரவரு வந்து தேவையானதை செஞ்சு தருவாரு… ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு திரும்பவும் ரெண்டு பொண்ணுங்க வந்தாங்க… அப்படியே வந்தவங்க தான் இந்த பதினைஞ்சு பேர்… ஆனா இந்த குழந்தை… இந்த மாதிரி குழந்தை இதுதான் முதல்முறை சார்…” என்று கையை பிசைந்தபடி சொல்லி முடிக்க, 

“ம்ம்ம்… ” என்று தலையை ஆட்டி கேட்டு கெண்டவன், 

“ஏன் அந்த பொண்ணு அதாவது முதல்ல வந்த பொண்ணு இன்னும் இங்கிருந்து போகாம இருக்கா… பேரு…?” என்று கேட்டதற்கு, 

“சரியா தெரியலை சார்… இங்கையே இருக்கேன்னு தான் சொன்னா… சம்பளத்துள பாதி இங்க தான் செலவு பண்ணுறா… மீதியை அவளுக்கு வச்சுக்குறா… பேரு ஹினல்துர்கா…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவன், 

“வட இந்திய பொண்ணா…?” என்று ஆச்சரியமாக கேட்கவும், 

“ஆமா சார்…” என்றிட, 

“ம்ம்ம்…. எங்க வேலை பார்க்குறா…?” என்று கேட்கவும் தயங்கியவரை கண்டு, எழுந்து நின்றவன், 

“பயபடாதீங்க… இந்த என்கொய்ரி எல்லாம் சும்மா ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க தான்… இதுனால எந்த பிரச்சினையும் யாருக்கும் வராது… எனக்கு ஒரு தங்கச்சி மாதிரியா இருப்பா… நம்பி சொல்லுங்க…” என்று தன்மையாக கேட்கவும், 

சற்று தயங்கியவர், மெல்லிய குரலில் “ஹாயா ஐட்டி கம்பெனி… ” என்று சொல்லவும், மகிழனின் அழைப்பேசி அலரவும் சரியாக இருந்தது… 

“ஹலோ…” என்ற அவனது குரலுக்கு பதிலாக, 

“நேர்ல மீட் பண்ணலாமா…?” என்று நேரிடையாக கேட்கவும், 

லேசாக புன்னகைத்தவன், எதிரில் நின்றிருந்த பெண்மணியிடம் மெல்லிய குரலில், 

“ரொம்ப நன்றி ம்மா… இதுனால இந்த பிரச்சினையும் வராது… என்னை நம்புங்க… ஒரு முக்கியமான வேலை… நான் கிளம்புறேன்…” என்று விடைபெற, 

“சரிங்க சார்…” என்று விடைகொடுத்தவர், மகிழன் வெளியேறியதும், வேகமாக தன் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க, மறுபக்கம் எடுத்ததும்

“போலீஸ் வந்துட்டு போகுது… நம்மளை பத்தி முழுசா விசாரிச்சுட்டு போறாங்க…” என்று சொல்லவும், 

எதிர் பக்கம் என்ன பதில் வந்ததோ இங்கு அவர் முகத்தில் சற்று நிம்மதி வர, “ம்ம்ம்… அப்ப சரி… நான் வச்சுறேன்…” என்று அழைப்பை துண்டித்தவருக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது… 

இங்கு வெளியே வந்த மகிழன், “நீங்க யாருன்னு சொல்லாம நேர்ல பார்க்கணும்னு சொல்லுறீங்க…?” என்றபடி தன் புல்லட்டில் சாய்ந்து நின்று கேட்க, 

அமைதியை சில நொடிகள் பதிலாக வர, பின் “யாருன்னு தெரியும்னு நினைச்சேன்… தெரியலைன்னா பிரச்சினை இல்ல தெரிஞ்சுக்க நேர்ல மீட் பண்ணலாம்…” என்று சொல்லவும் புருவம் உயர்த்தி மெச்சி கொண்டவன், 

“குட்… பார்த்துட்டா போச்சு… அப்பதானே அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்…” என்றதற்கு, 

“வாட்…?” 

“நத்திங்… எப்ப பார்க்கலாம்…? எங்க பார்க்கலாம்…? பிளேஸ்…” என்று சொல்லும் போதே, 

“காஃபி டுடே…” என்று பதில் வர, 

தாடையை நீவி கொண்டவன், “ம்ம்ம்…. ஓகே பைன்…எப்” என்று வாய் திறக்கும் போது, 

“இப்பவே பார்க்கணும்…” என்ற பதிலில் லேசாக கடுப்பாக, 

“ஹலோ… எனக்கும் வேலை இருக்குங்க… பார்க்கணும்னு நினைச்சேன் தான் அதுக்காக வேலைவெட்டி இல்லாதவன் இல்ல…” 

“எனக்கு அதை பத்தி கவலை இல்ல… நீடு டு மீட் ரைட் நௌவ்…”  என்றபடி அழைப்பை துண்டித்துவிட, 

“எவ்வளவு திமிர்…” என்றபடி தன் வண்டியில் கிளம்பியவன் அடுத்த இருபது நிமிடத்தில் காஃபி டுடே கடையின் முன் நின்றிருந்தான்… 

உள்ளே நுழைந்த அடுத்த இருபதாவது நொடி ஒரு ஓரத்தில் இருந்த டேபிளின் முன் நின்றவனை நிமிர்ந்து பார்த்து, 

“சிட்….” என்று எதிரே இருந்த இருக்கையை காட்ட, மண்டை சூடாகி போனது உண்மையில், 

“இங்கவரை வர தெரிஞ்ச எனக்கு உட்காரவும் தெரியும்… அதுவும் எங்க உட்காரணும்னு தெரியும்…” என்றபடி அருகிலேயே அமர்ந்தவனை, 

“ஹே… என்ன சீன் கிரியேட் பண்ணுறியா… ஒழுங்கா எழுந்து அங்க போய் உட்காரு…” என்று பல்லை கடிக்கவும், 

“பேசணும்… அதுக்கு எங்க உட்கார்ந்து பேசுனா என்ன…?”

 

“அதுக்கு என் பக்கத்துல உட்கார்ந்து பேசணும்னு அவசியம் இல்ல…” 

“அப்ப நீ போய் அங்க உட்காரு… எனக்கு இது தான் வசதியா இருக்கு… சோ இங்க தான் உட்காருவேன்…” என்றபடி கையை இருக்கையின் சாய்வில் வைக்க போக, சட்டென எழுந்து எதிர் இருக்கையில் அமர்ந்தவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது… 

தேவையில்லாத பேச்சை வளர்க்க விருப்பாது நேராக விஷயத்திற்கு வர எண்ணி, 

“எதுக்கு டிரஸ்ட்க்கு போய் விசாரிச்ச…?” அவளது ஒருமைபன்மையை குறித்து கொண்டான், 

“ம்ம்ம்… நான் கட்டிக்க போறவளை பத்தி விசாரிக்க போனேன்… உனக்கு அதுல என்ன பிரச்சினை…?” என்று திமிராக கேட்டு இருக்கையில் இலகுவாக அமர்ந்து கால் மேல் கால் போட்டவனை பார்த்து முற்றிலுமாக அதிர்ந்தவள், 

“வாட்….?” என்று வாயை திறக்க, மகிழனுக்கு அவளது இந்த  தோற்றம் மனதிற்கு மிகவும் பிடித்து போனது நொடியில்…

“எதுக்கு இந்த ஷாக்…?” என்றபடி மேஜையில் இருந்த காஃபியை எடுத்து பருகிய நேரம்,

 

“ஹே… அது என் காஃபி… நான் குடிச்சது…” என்று மெல்லிய குரலில் கத்த, 

“தப்பில்ல… பொண்டாட்டி குடிச்சதை புருஷன் குடிக்கலாம்…” என்று மீண்டும் குடிக்க, இரண்டாவது முறையாக தியாவின் கண்களில் அதிர்ச்சி என்னும் உணர்வை அழகாக உள்ளுக்குள் படம் பிடித்தான் மகிழன்… 

தொடரும்…

 

 

Advertisement