Advertisement

UD-5:

“ம்ம்ம்… திமிர் தான்… பட் ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…” என்றபடி தன் லேப்டாப் திரையை பார்த்தபடி, அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அரைவட்டம் அடித்தபடி இருந்தான் மகிழன்….

“டேய் மகி…” என்றபடி தமிழ்செல்வன் அறைக்குள் நுழைந்தது தான் தாமதம்… 

அடித்துபிடித்து லேப்டாப்பை மூடி வைத்தவன், திரும்பி அண்ணனை பார்த்து, “ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…?” என்று கத்தி முடிக்கும் முன், 

“ஏன் இல்லைன்னு சொன்னா நீ உன்கிட்ட இருந்து தரபோறியா…?” என்று நக்கல் அடித்தபடி அவன் லேப்டாப்பில் கை வைக்க போக அவன் கையை தட்டிவிட்டவன், 

“அப்படி உனக்கு வேண்ணும்னாலும் என்னால எல்லாம் தரமுடியாது… இப்ப எதுக்கு வந்தன்னு சொல்லு…” என்றபடி எழுந்து லேப்டாப்பை மறைத்து நின்றவனை சந்தேகமாக பார்த்த தமிழ்ச்செல்வன், 

“ம்ம்ம்…” என்று அவன் முகத்தை நோட்டம் விட்டபடி, 

“ஸ்வேதா பார்க்க போறோம்… நீ வரியான்னு கேட்கதான் வந்தேன்…” என்றதற்கு, 

“என்னைக்குன்னு சொன்னாதானே முடியுமா முடியாதான்னு சொல்ல முடியும்… மொட்டையா போறோம் வரியான்னா எப்படி சொல்லுறது…?” அவன் பதிலில் தமிழ்செல்வனின் சந்தேகம் வலுபெற்றது… 

“ஓஹோ…. இந்த சன்டே…” என்னும் போது மேஜையின் மேலிருந்த மகிழனின் ஃபோன் அலறியது… 

எட்டி பார்க்க, பிரவீண் என்று காட்டவும், வேகமாக எடுத்தவன், “சொல்லு பிரவீண்… எல்லாம் கிடைச்சுதா…” என்று கேட்கவும், 

“ஆமா சார்… கிடைச்சுது… பிளைட்ல வந்த பேசன்ஜர் எல்லாரையும் லிஸ்ட் எடுத்தேன்… அதை உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன்… அப்புறம்….” என்று இழுக்கவும், 

“சொல்லு இன்னொரு வேலை என்ன ஆச்சு…” என்றவனின் குரலில் அர்வம் அப்பட்டமாக தெரிந்தது… 

“சார்…” என்று இழுத்தவன்,பின் என்ன நினைத்தானோ “அதையும் அனுப்பி இருக்கேன் சார்…” என்க, 

“ம்ம்ம்… ஓகே… நான் பார்த்துட்டு சொல்லுறேன்…” என்றதோடு அழைப்பை துண்டித்தபடி திரும்பி பார்க்க, 

தன் லேப்டாப்பை உயிர்பித்து அதில் தெரிந்த தியாவின் புகைப்படத்தை கைகட்டி பார்த்து கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.. 

கடுப்பாகி போனான் உண்மையில், பிரவீணுடன் பேசியபடி சில அடிகள் நகர்ந்த இடைவெளியில் தமிழ்செல்வன் அப்படி எதை மறைத்தான் என்று பார்க்க எண்ணி அதை உயிர்பித்தான் அவன் அசந்த அந்த கேப்பில், 

“டேய்… யாரை கேட்டு என் லேப்டாபை ஆன் செஞ்ச…? ஃபர்ஸ்டு பாஸ்வேர்டை மாத்தணும்…” என்று கோபமாக அருகில் வந்தவனை,

“எதுக்கு தியா ஃபோட்டோவை பார்த்துட்டு இருக்க…?” என்ற கேள்வியில் ஒருநொடி நின்றவன் பின் லேப்டாபை தன் புறம் இழுத்து, 

“ஏன் நான் சொல்லி நீ தெரிஞ்சு என்ன பண்ண போறா…?” என்றபடி தன் ஈமெயிலை திறந்து பார்க்க, 

மேஜை மீது சாய்ந்து நின்று இருகைகளையும் நெஞ்சுக்கு குறுக்காக கட்டியபடி, “நீ என்னை அம்மாகிட்ட போட்டு குடுத்த மாதிரி நானும் உன்னை போட்டு குடுத்து இருப்பேன்… ஆனா வேண்ணாம் டா இது…” என்றவனின் வார்த்தையில் முதலில் நக்கலாக சிரித்தவன், பின் குழப்பமாக நிமிர்ந்து பார்க்கவும், 

“அந்த ஆபோஸிட் கம்பெனியோடு சி.ஈ.ஓ இந்த தியா தான்… அதும் இல்லாம அப்படி இப்படியின்னு சில விஷயங்கள் காதுக்கு வந்துச்சு…” என்றதும் மகிழனின் மூளை தீவிரமாக வேலை செய்ய தொடங்கியது.. 

“புரியலை…” என்றதும், 

“எனக்கும் சரியா தெரியலை டா… ஒரு பொண்ணை பத்தி முழுசா தெரியாம தேவையில்லாம பேச கூடாது… அதுனால விட்டுறலாம்… ஆனா அவளுக்கு அப்பா அம்மா யாரும் கிடையாதுன்னு கன்பார்ம் தெரியும்…” என்றவனை அதிர்ச்சியாக பார்க்கவும், 

“ஆமா… ஒருநாள் பப்ல பார்த்தேன்… நீ கூட என்னை வீட்டுல போட்டு குடுத்தியே ஆபிஸ் பார்ட்டின்னு பப்க்கு போனான்னு அன்னைக்கு தான் பார்த்தேன்… டிரெஸ்ஸிங் கூட… வேண்டாம் டா… நம்ம பேமிலிக்கு மார்டன் டைப் செட் ஆகாது… ” என்றதற்கு, 

“ஒருநாள் பார்த்ததை வச்சு நீ இப்படிதான்னு டிசைடு பண்ணுறியா…?” புருவம் சுருங்கி இருந்ததே அவன் தீவிர யோசனையை காட்டிது… 

“டேய்… நான் அந்த பொண்ணோட கேரக்டரை சொல்லல… எனக்கு அது பத்தி தெரியாது… நான் சொன்னது மார்டன் பொண்ணு தான் வேண்டாம்னு சொன்னேன்…” என்றதும், 

“ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டபடி இருக்கையில் சாய்ந்து கைகளை தன் லேப்டாப்பில் வைதிருந்தவனை கண்டு, 

“நல்லா யோசிச்சு முடிவெடு… எதுவா இருந்தாலும் உனக்காக சப்போர்ட் பண்ணுறேன்…” என்றபடி தம்பியின் தோளில் தட்டிவிட்டு நகர்ந்தவன், அறைவாசலில் நின்று, 

“கமிங் சன்டே… ஸ்வேதா வீட்டுக்கு வரியா இல்லையான்னு யோசிச்சு சொல்லு நாளைக்கு காலைல…” என்க, 

திரும்பி தன் தலையை மட்டும் ஆட்டி ஒப்புதல் சொன்னவனை பார்த்து லேசாக புன்னகைத்தவன் கதவை சாற்றிவிட்டு வெளியேறினான் யோசனையாக… 

இங்கு அறையில் மகிழனின் முன் லேப்டாபில் தெரிந்த தியா என்னும் பெயர் பட்டனில் அழுதுவதா வேண்டாமா  என்னும் குழப்பத்தில் இருந்தான்… 

‘முதன்முதலா ஒரு பொண்ணு மேல விருப்பம் வந்து இருக்கு… அது என்னனு ஃபீல் பண்ணுறதுக்குள்ள இந்த அண்ணா இப்படி பண்ணிட்டு போயிட்டான்… இப்ப இந்த போல்டரை திறந்து பார்க்குறதா வேண்டாமா…?’ தியாவை பற்றி விசாரித்து அனுப்பும்படி பிரவீணிடம் சொல்லியிருந்தான் மகிழன்… 

கூகுளில் தேடினால் அவளை பற்றி எந்த தகவலும் இல்லை ஒருசில ஃபோட்டோக்கலை தவிர, அதில் அனைத்திலும் புடவை மட்டுமே அதும் கருப்பு வெள்ளை கலந்த விதம் மட்டும் தான் இருந்தது… 

ஏனோ தமிழ்ச்செல்வனின் வார்த்தையை புறம் தள்ளவும் முடியவில்லை புத்திக்குள் ஏற்றிக்கொள்ளவும் முடியவில்லை… 

அடுத்த ஐந்த நிமிடத்தின் முடிவில் இறுக கண்களை மூடி திறந்தவன், ஒரு பெருமூச்சுடன் தியா என்றிருந்த கோப்பையை திறந்து பார்த்தான்… 

படிக்க படிக்க புரிந்தும் புரியாமலும் சில விஷயங்கள் இடித்தது மகிழன் என்னும் போலிஸுக்கு… 

அமைதியாக அதை மூடி வைத்தவன், “கொஞ்சம் புரியாத புதிர் மாதிரி இருக்கா… உன்னை பொறுமையா ஹண்டில் பண்ணனும்… ” என்றதோடு தன் தலையை கோதிக்கொள்ள, மற்றொரு கோப்பையை திறந்து பார்த்தான் இப்பொழுது முழு கவனம் வேலையில் இருந்தது…

சிறிது நேரத்தில், “இதுல அப்படி ஒன்னும் டௌட் வரமாதிரி…” என்று இழுக்கும் போது புத்தியில் பொரி தட்ட, வேகமாக வேலையில் இறங்கினான்… 

அடுத்த அரைமணித்தில் பிரவீணை அழைத்தவன், 

“பிரவீண்… ” 

“சொல்லுங்க சார்…” என்னும் போதே கொட்டாவி விட, நிமிர்ந்து நேரத்தை பார்த்தான்… 

அது மணி பன்னிரெண்டு பத்து என்று காட்டவும், முதலில் நெற்றியை நீவியவன் பின் வேலையின் முக்கியம் புரிந்து, 

“நமக்கு எல்லாம் வேலை தான் ஃபர்ஸ்ட் பிரவீண்…” என்று சற்று கறாராக சொல்லவும், 

“எஸ் சார்…” என்றான் இப்பொழுது தெளிந்த குரலில், 

“குட்… பிரவீண்… நீ அனுப்புன போல்டரை பார்த்தேன்..” என்னும் போது, 

“எது சார்…? தியா மேடம்தா, இல்ல கேஸ் போல்டரா சார்…?” என்றதற்கு பல்லை கடித்தவன், 

“பேசும் போது முழுசா கேளு மேன்… நடுவுல கிராஸ் டாக் பண்ணாத…” என்று குரலை உயர்த்தவும், 

“சாரி சார்…” என்க, 

“ம்ம்ம்… அந்த லிஸ்ட்டுல… பேஷன்ஜர்ஜை பிரிச்சு இருக்கேன்… அதாவது என்ன பர்பஸ்காக டிராவல் பண்ணுறாங்க…? எங்க போறாங்கன்னு… மூன்னு நாளைக்கு இருக்குற லிஸ்ட்ல தனியா போட்டு இருக்கேன்…”

“ஓகே சார்…” என்றவனுக்கு புரிந்தும் புரியாத நிலை… 

“இந்த லிஸ்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அலசி பார்த்தா நமக்கு ஏதேச்சாம் கிளு கிடைக்க வாய்ப்பிருக்கு…” என்றதறக்கு, 

“சார்….” என்று பிரவீண் இழுக்கவும், 

“சொல்லு பிரவீண்… “

“சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்… எப்படி சார் பேஷன்ஜர்ஸை பிரிச்சீங்க…?” என்றவனுக்கு, 

“புரியலை… எப்படின்னா…? என்ன கேட்கவற…?” என்ற மகிழனுக்கு,

 “இல்ல சார் நாம தேடுற பொருள் எப்படி இருக்கும், எவ்வளவு பெருசா இருக்கும்ன்னு எதுவும் தெரியாது… எப்படிபட்ட ஆளுன்னும் தெரியாது…” என்க, 

“ஆமா பிரவீண் அதுதானே நமக்கு பெரிய சவால்… “

“அப்புறம் எதை வச்சுச்சு பிரிச்சு இருக்கீங்க…” 

“சிம்பிள்… ஒரு கெஸ்தான்… பர்பஸ் ஆஃப் டிராவல் வச்சு…  பிமேளி ஆளுங்களை, வொர்க் பண்ணுறவங்களைன்னு தெரிஞ்சவரை தனி தனி ஆக்கி இருக்கேன்… டௌட் இருக்குறவங்களை தனியா வச்சு இருக்கேன்…” 

“ஓகே சார்… ஆனா இதுக்கு அப்புறம்…?” என்ற பிரவீணுக்கு, 

“இவங்களை ஃபர்ஸ்ட் வெரிபை பண்ணலாம்… ஏதாச்சும் கிளு கிடைக்கலாம்…” என்ற மகிழன், 

“நாளைக்கு இதை மட்டும் நீ பண்ணா போதும்… ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்போம்…” 

“ஓகே சார்… ஈவினிங்க்குள்ள உங்க டேபிளுக்கு வந்துரும் சார்…” என்றவனுக்கு, 

“நாளைக்கு எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு… சோ வர லேட் ஆகும்…. உனக்கு ஏதாச்சும் வேண்ணும்னா ஃபோன் பண்ணு…” என்றிட, மகிழனின் வேலையை என்னவென்று ஓரளவிற்கு புரிந்து கொண்டவன், 

“ஓகே சார்… போற வேலை உண்மையா இருக்கும் சார்…” என்ற வார்த்தையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், 

“ம்ம்ம்… ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சுட்டியா என்ன…?” கேலி மகிழனின் குரலில்,

 

“இல்ல சார் ஒரு கெஸ்… இது… இந்த விஷயம் நல்லா இருக்கும்னு தோணுது…” என்றவனது வார்த்தை மகிழனுக்கு பிடித்திருந்தது தான்… 

ஆனால் உண்மையும் விதியும் என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது அல்லவா… 

“ஓகே பிரவீண்… டைம் ஆச்சு… நாளைக்கு பார்க்கலாம்…” என்றவன் அழைப்பை துண்டித்துக்கொண்டு படுக்கையில் சரிந்தான்… 

நினைவுகள் அனைத்தும் நேற்று தியாவை சந்தித்து வந்தது முதல் இன்று வரை பயணித்து ஏதேதோ உணர்வுகளையும் சந்தேகங்களையும் உண்டாக்கி கொண்டே இருந்தது…

“நாளைக்கு என் சந்தேகத்துக்கு ஒரு பதில் கிடைக்கும்னு நம்புறேன்…” என்றவன் தலைக்கு கீழ் இருகைகளையும் வைத்தபடி விட்டத்தை பார்த்தவனுக்கு மட்டும் திரையாக, அவளை முதலில் பார்த்த நொடி படமாக ஓடிக்கொண்டிருந்தது… 

“உனக்கு பிளாக் அண்ட் வௌய்ட் புடிக்குமோ… பில்டிங் கலரும் உன் டிரஸ் கலரும் ஒரே மாதிரி இருக்கு…” என்றபடி சிரித்து கொண்டான்… 

ஏனோ மனதிற்கு அவள் வேட்டையாடும் பெண் சிங்கம் போலவே காட்சியானாள் முழுவதுமாக… அவளது அணுகுமுறையும், நிமிர்ந்த பார்வையும், திடமான நம்பிக்கையும் அவளை நலினமான பெண் என்பதையும் தாண்டி கம்பிரமானவளாக தான் மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றியது மகிழனுக்கு… 

இங்கு அவள் நினைவில் தூக்கம் தொலைத்து கிடப்பவன் போல் அங்கு தியாவும் அதே நிலையில் தான் இருந்தாள் ஆனால் சற்று மாறாக கோபத்தின் உச்சியில்… 

அறை முழுவதும் சிதறி கிடந்த பொருட்களை வைத்தே ஒரு ருத்திரதாண்டவம் ஆடி இருக்கிறாள் என்று புரிந்து கொள்ளலாம்…. 

படுக்கையில் விட்டத்தை பார்த்து படுத்திருந்தவளின் கண் முன், அன்று மாலை நடந்தேறிய அனைத்தும் படமாக வந்து போனது… 

காரில் கண்களை இறுக மூடி திறந்தவள், கூலரை எடுத்து அணிந்தபடி நிமிர்ந்த தலையுடன் கீழே இறங்கியவள், அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் உள்ளே நுழைந்தாள் திமிரான நடையில்… 

அவளது கருப்பில் சிவப்பு கலந்த சிந்தடிக் புடவையும், ஒற்றை கையில் வாட்சும், மெலிதான சைனும், போனி டையிலும், இடது கையில் மாட்டி இருந்த பிராண்டடு ஹன்பேக்கும் அவளை எத்தனை அழகாக காட்டியதோ அதே அளவிற்கு திமிராகவும் காட்டியது… 

அவளது வருகையை கண்டு, “திஸ் வே மேம்….” என்ற படி அவள் செல்ல வேண்டிய வழியை அங்கு பணி புரியும் வேலையாள் காட்ட, 

“ம்ம்ம்…” என்ற ஒற்றை தலையசைப்பை தந்தபடி அந்த ஓட்டலில் இருந்த கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நடந்தாள்… 

“இதோ வந்துட்டா மகாராணி…” என்ற ஆசிப்பின் பேச்சை,

 

“ம்ப்ச்ச் அமைதியா இரு ஆசிப்…” என்ற கம்பீர குரலில் அடங்கி ஒரு இருக்கையில் அமர்ந்தான் அடக்கிய கோபத்துடன்…

 

அறைக்குள் நுழைந்தவளோ கூலரை கழட்டாது உள்ளே இருப்பவர்கள் அனைவரையும் கண்களால் ஒருசில நொடியில் அலசி ஆராய்ந்து கொண்டாள்…

“குட் ஈவினிங் சார்…” என்றபடி அமர்ந்தவளை பார்த்து பல்லை கடித்தான் ஆசிப்… 

காரணம் யாரும் அவளை போல் திமிராகவும் உரிமையாகவும் நடந்து கொண்டது கிடையாது தன் தந்தையிடம்… 

மன்சூர், ஆசிப்பின் தந்தை என்பதை விட நிழல் உலகின் தந்தை என்பதே பொருந்தும்… 

மன்சூரை கண்டு மிரளுபவர்கள் ஏராளம், எட்டடி தள்ளி நின்று பேசியவர்கள் மத்தியில் திமிராகவும் தைரியமாகவும் பேசிய தியாவை ஏனோ அவருக்கு மிகவும் பிடித்து போனது… அதற்கு அவளது அறிவு மிகபெரிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும்… அவளால் மன்சூர் கண்ட லாபங்கள் ஏராளம்… அவளது புத்தி கூர்மையும் கடின உழைப்பும் அவனை அதிகம் கவர்ந்த ஒன்று…

“குட் ஈவினிங்…” என்றவர், 

“கம்பெனி எல்லாம் எப்படி ரன் ஆகுது…?” என்று கேட்கவும், 

ஆசிப், “என்ன ப்பா நீங்க… நாம எதுக்கு கூப்பிட்டு இருக்கோம்… நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க…?” என்று கத்த, 

இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவள், தன் கூலரை கழட்டி எதிரில் இருந்த டேபிளில் வைத்தபடி, அமைதியான குரலில்

“நீ அந்த கம்பெனிக்கு எம்.டி… ஆனா எத்தனை நாள் அங்க வந்து இருப்ப….? என்ன ஸ்டேட்டஸ்ல ரன் ஆகிட்டு இருக்குன்னாச்சும் தெரியுமா…?” என்று கேட்கவும்,

 

“ஹே… என்ன ஓவரா பேசுற… நீ ஜஸ்ட் ஒரு எம்பளாய் மட்டும் தான்… அதை மனசுல வச்சுக்க… நீ சி.ஈ.ஓங்குறனால என்னை கேள்வி கேட்டிறலாம்னு நினைக்காத… எப்ப வரணும் போகணும்னு எனக்கு தெரியும்… நீ மூடிட்டு இரு…” என்றதும் எழுந்து எதிரில் இருப்பவன் கன்னத்தில் நான்கு இழுக்க வேண்டும் போல் இருந்தது உள்ளுக்குள்… 

ஆனால் முகத்திலும் ஏன் தன் பார்வையிலும் சரி உடல் மொழியிலும் சரி… எந்த மாற்றத்தையும் தன் உணர்வுகளை காட்டாது பொறுமையாக இருந்தவள் எதிர் பார்த்தது நடந்தது அங்கு…

தொடரும்….

 

 

Advertisement