Advertisement

UD-4:

“சார்…” என்று சலியூட் அடித்தபடி வந்து நின்றான் பிரவீண்… 

“ம்ம்ம்… எனிதிங் நியூ டூ நோ…?” கேள்வி வந்தாலும் நிமிர்ந்து எதிரில் இருப்பவனை பாராது கையில் இருந்த கோப்பையை தான் பார்த்திருந்தான்… 

“ஐ’ம் நாட் சியூர் அபௌட் திஸ் சார்….” என்றவன் மேலே தொடர்ந்தான், 

“நமக்கு வந்த இன்பர்மேஷன் வச்சு அந்த டைமிங்ல டிராவல் பண்ண பிளைட் கௌன்ட் செக் பண்ணா மொத்தம் ஒன்பது பிளைட் சார்… அன்னைக்கு அந்த டைம்ல வந்த பிளைட் எல்லாத்தையும் சிசிடிவில செக் பண்ணினேன் எதுவும் வித்தியாசமா தெரியல… கூட்ஸ் லிஸ்ட் செக் பண்ணினேன் அதுவும் கிளியரா இருக்கு… இதுல எப்படி சார் நாம அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்குறது…?” என்று கேட்கவும், 

தன் கையில் புரட்டிக்கொண்டிருந்த கோப்பையை மேஜை மீது எரிந்தவன், “அதை விட முக்கியமான வேலை ஒன்னு இருக்கு… அதை பர்ஸ்ட் முடி…” என்றபடி கோப்பையை அவனிடம் காட்டி, 

“ஒரு நல்ல ஹேக்கரை வச்சு இந்த ஐடியை டிராக் பண்ணி இமிடியட்டா சொல்லு…” என்றவனின் கண்ணில் தன்னை கோபம்… 

கைமுஷ்டிகளை இறுக்கி டேபிளில் தட்டிக்கொண்டவன், இன்னும் பிரவீண் அவ்விடத்தை விட்டு நகராமல் இருப்பதை கண்டு, 

“வாட் மேன்…?” என கத்தவும், 

அவனது கோபம் அறிந்து “எனிதிங் சீரியஸ் சார்….?” என்று தயக்கமாக கேட்கவும், 

“ஏன் என்ன விஷயம்னு சொன்னாதான் வேலை செய்வியோ…?” என்று கேட்டதுமே மகிழனின் தற்போதைய கோபத்தின் அளவை புரிந்து கொண்ட பிரவீண், சட்டென

“இல்ல சார்…. இன்னும் அரைமணி நேரத்துல ஃபுல் டீடையல்ஸோட வரேன் சார்… ” என்றபடி வெளியேறியவனை பார்த்து பல்லை கடித்தான் மகிழன்… 

‘சே…’ என்று தலையை கோதிக்கொண்டே தன்னை அமைதிபடுத்தி கொள்ள வேண்டி, ஜன்னலின் அருகே சென்று நின்று வானத்தை வெறித்து பார்க்க தொடங்கியவன் உள்ளம் மட்டும் அனலாக தகித்து கொண்டிருந்தது… 

“மனசாட்சி இல்லாத நாய்ங்க….” என்ற வார்த்தையோடு பல கெட்ட வார்த்தையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அடுத்த இருபது நிமிடங்களில் மீண்டும் அறைக்குள் வந்தான் பிரவீண்…

“சார்… நீங்க குடுத்தது ஒரு பேக் ஐடி சார்… அந்த ஐடி உருவாக்குனது ஒரு ஐ.ட்.டி கம்பெனியோட சர்வர்ல’ன்னு கண்டு புடிச்சுட்டோம் சார்…”  என்றதும், 

“பின்ன ஒரிஜினல் ஐடி’யை வச்சிருக்க அவன் என்ன உத்தமனா… ரெஸ்கல்…” என்றபடி சுவற்றை குத்தியவன், 

“எந்த கம்பெனி அது…?” என்றபடி தன் உடமைகளை எடுத்துக் கொண்டே கேட்க, பிரவீண்க்கு அடுத்து என்னவென்று புரிந்தது… 

“ஹாயா கம்பெனி சார்… ” என்னும் போதே அரையைவிட்டு வெளியேறி இருந்தான்… 

அடுத்த ஐந்து நிமிடத்தில் பிரவீணுடன் அவனது ஜீப்பில் இருந்தான் அடக்கிய கோபத்துடன்… 

பிரவீணுக்கு விஷயம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் அது மிகவும் பெரியது என்று மட்டும் விளங்கியது… 

காரை ஓட்டுவதும் திரும்பி பார்ப்பதுமாக வந்தவனை புரிந்து, “ஒரு ஆறு மாச குழந்தையை விபச்சாரத்துக்கு வித்து இருக்காங்க…” என்றதும் காரை ஓட்டி கொண்டு வந்தவன் அதிர்ச்சியில் சட்டென பிரேக்கிட்டு நிறுத்த மகிழனுமே இதை எதிர் பார்த்தான் போலும்… 

பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ளாமல், “வண்டி நடுரோட்டுல நிக்குது… எடு வண்டியை…” என்றதும் சுயத்திற்கு வந்தவன், வேகமாக வண்டிக்கு உயிர் கொடுத்து கிளப்பினான்… 

“வித்துட்டாங்கன்னா என்ன சார் சொல்ல வரீங்க…?” பெற்றொருக்கு தெரியாமல் குழந்தையை திருடி மற்றொருவருக்கு விற்பதை சொல்ல வருகிறார், நாம் தான் தப்பாக புரிந்துகொண்டோம் என்று நினைத்து கேட்க, 

மகிழன், “ம்ம்ம்… விபச்சாரத்துக்கு வித்து இருக்காங்க… ” என்று அழுத்தமாக பெரும் அதிர்ச்சி பிரவீணிடம் ஆனால் அதை வண்டியின் மீது காட்டாது இருந்தான்…

கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது… எத்தனை பெரிய ஈழ செயல் இது… ஆறு மாத குழந்தை…. என்னென்று அறியாத உலகம் புரியாத குழந்தை அது… விபசார விற்பனைக்கா? இதற்கு நான் நினைத்தது எத்தனையோ மேல் என்று தோன்றியது உள்ளுக்குள்….ஒருவரிடம் குழந்தையை விற்று இருந்தால் எங்கோ நலமுடன் பாதுகாப்பாய் வாழ்ந்தால் போது என்று தோன்ற வைத்தது பிரவீணுக்கு… 

மகிழனுக்கும் இதை பற்றின எண்ணங்கள் தான் உள்ளுக்குள் சுழன்று கொண்டே இருந்தது…

அந்த குழந்தை இப்பொழுது இருக்கிறதா இல்லையா என்றாவது தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது முதலில்…

அடுத்த பத்து நிமிடத்தில் மகிழனின் வண்டி ஹாயா நிறுவனத்தின் முன்பு வந்து நின்றது….

வேகமாக இறங்கியவன் கண்ணில் இருந்த கூலரை கழட்டியபடி அவ்விடத்தின் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு வந்தான்… 

எல்லாம் இரண்டு நிமிடம் தான்… காவலாளி ஒருவர் அவன் அருகில் வேகமாக வந்து, “என்ன சார் வேண்ணும்…? யாரை பார்க்கணும்…?” என்று கேட்கவும் திரும்பி வந்தவரை ஓர் பார்வை பார்த்தவன், 

“ம்ம்ம்… கம்பெனியை விலைக்கு வாங்கலாம்னு வந்து இருக்கேன்…” என்றவன் தான் பேசியதற்கு பதிலை எதிர் பாராமல் நேரே கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவனை பார்த்து ஏதோ வில்லங்கம் என்று புரிந்து தன் இடத்திற்கு ஓடினான் காவலாளி…

“பிரவீண்… நீ என்ன நினைக்குற…?” லிப்டினுள் நுழைந்தபடி கேட்க, 

“சாதாரண ஆள் இதுல இருக்கும்னு தோணல… மேபி அ பிக் ஷாட்…” என்று சொல்ல, 

“எனக்கு என்னமோ பெருசா இருக்கும்னு தோணுது… இவ்வளவு ஈஸியா இது பிடிக்குற விஷயம் இல்லையே…” என்று தன் தாடையை தடவியபடி முதல் தளத்தில் நுழைந்தவனை, 

“வெல்கம் சார்… சி.ஈ.ஓ ரூம் டாப் புலோர் சார்…” என்று ஒரு பெண்மணி வந்து சொல்லவும், 

“ம்ம்ம்….” என்று தலையை ஆட்டி கேட்டவன் மீண்டும் லிப்டினுல் நுழைந்து கடைசி தளத்தின் பட்டனை அழுதிவிட்டு நிற்க, 

மூளை பலதை சில நொடிகளில் அலச தொடங்கியது. பிரவீணுக்கும் ஆச்சரியம் தான் ஆனால் இதை காவலாளி சொல்லி இருக்க கூடும் என்று நினைத்து கொண்டான்…

சில நிமிடங்களில் மேல் தளம் வந்துவிட , கூலரின் உள்ளே இருந்த அவன் கண்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து கொண்டே வந்தது… 

‘நைஸ்…’ என்ற எண்ணம் அது சுற்றி இருந்த இன்டிரியர் டிசைனை நினைத்து வந்தது… 

சி.ஈ.ஓ என்று இருந்த அறை முன் நின்றவன் அதில் இருந்த பெயரை கண்டு சேலாக புருவம் சுருக்கி பார்த்தபடி அதை தட்ட போக, அது தன்னால் திறந்து கொண்டது…

“பிளீஸ் சார்… ” என்றவனை பார்த்தபடி உள்ளே நுழைந்தனர் இருவரும்… 

மகிழன் சற்று கவனிக்கும் வேலைக்கு விடை கொடுத்தான் எதிரில் இருப்பவளை பார்த்து, உண்மையில் கூலரை அவன் அணியா விட்டால் அவனது உறைந்த பார்வை காட்டி கொடுத்திருக்கும் உள்ளத்து ரோமியோவை… 

பிரவீணுக்கு என்ன புரிந்ததோ, மெல்லிய குரலில் “சார்… ” என்று அழைக்கவும், நொடியில் தன்னை நிதானமாக்கி கொண்ட நேரத்தில் அவனிடம் தன் கையில் இருந்த கோப்பையை நீட்டினான் அமைதியாக… 

எதற்காக கோப்பையை கொடுத்தான் எதற்காக நாம் வாங்கினோம் என்று அறியாமலேயே அதை வாங்கி கொண்டான் பிரவீண்…கோப்பையை கொடுத்தவன் மீண்டும் திரும்பினான் பழைய மகிழனாக தியாவின் புறம்… 

அந்த அறையில் இருந்த மற்றொரு அறை கதவின் அருகே நின்றிருந்த தியாதான் இப்பொழுது மகிழனின் கண்கள் முழுவதும்… 

கருப்பு நிற சிந்தட்டிக்கு டைப் புடவையில் எந்த ஒப்பனையும் இன்றி, ஒற்றை பொட்டுடன் போனி டெயிலில், மெல்லிய ஹீல்ஸ் அணிந்திருந்தின் அடையாளமாய் அவள் நடந்து வரும் போது கேட்ட டொக் டொக் சத்தம் என்று முழுவதும் அவள் மட்டுமே இருந்தாள் மகிழனின் கண்களுக்கு… 

கையை ஓர் டர்கி டௌவல் கொண்டு துடைத்தபடி வந்தவள், “பிளீஸ்…” என்றபடி எதிரில் இருந்த இருக்கையை காட்டியதோடு, தானும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து, டௌவலை தன் பிஏ விடம் கொடுத்துவிட்டு திரும்பினாள் பொறுமையாக… 

‘ஆட்டிடியூடு….’ என்று குறித்து கொண்டான்… 

“சொல்லுங்க என்ன வேண்ணும்…?” என்று கேட்டவள் மேசை மீது கையை கோர்த்து கொள்ள, 

“ம்ம்ம்… ஒரு இன்பர்மேஷன்….” என்றவனை பார்த்து, 

“சியூர்… என்னால முடிஞ்சை செய்யுறேன்… உட்காருங்க…” என்று மீண்டும் அமர சொல்லியதும் தான் மகிழன் இருக்கையில் அமர்ந்தான்… 

ஆனால் பிரவீண் அதையும் செய்யவில்லை… அமைதியாக மகிழனின் அருகில்  பின் கை கோர்த்து நின்று கொண்டான்… 

தியாவின் முகத்தில் எதுவும் இல்லையென்றாலும் கவனத்தில் அனைத்தையும் குறித்து கெண்டிருந்தாள்… அது அவளது சுபாவம் என்றும் சொல்லலாம்… 

“என்ன சாப்பிடுறீங்க… டீ, காஃபி…?” என்று நிறுத்த, 

“காஃபி… ” என்ற மகிழனுக்கு, 

“ம்ம்ம்…” என்றவள் நின்றிருந்தவனை ஓர் பார்வை பார்க்க, 

“எனக்கும் காஃபி…” என்க, 

“சியூர்…” என்றபடி தன் பிஏ வெங்கட்டை பார்க்க, 

“டூ மினிட்ஸ் மேம்…” என்றபடி அங்கிருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தான் வேகமாக… 

“சோ… சொல்லுங்க… என்ன இன்பர்மேஷன் வேண்ணும்…?” என்றதும் அவள்புறம் ஒரு காகிதத்தை தள்ள, அதை எடுத்து பார்த்தவளின் விழிகள் மட்டும் உயர்ந்தது மகிழனை நோக்கி… 

காகிதத்தை பார்த்துவிட்டு மீண்டும் அதை மேஜையின் மீது வைத்தவளை பார்த்து, “இந்த ஐடி உங்க கம்பெனி சர்வர் மூலமா தான் கிரியேட் ஆகி இருக்கு…” என்றதற்கு, 

“சரி… அதுக்கு…?” ஒருவித அலட்சியம், மகிழனுக்கு பிடிக்கவில்லை… 

ஒருபெருமூச்சை இழுத்துவிட்டு, “இது யார் கிரியேட் பண்ணதுன்னு தெரியணும்… அந்த பெர்சனோட ஒரிஜினல் ஐடி வேண்ணும்…” என்றதும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், மீண்டும் அந்த காகிதத்தை ஓர் பார்வை பார்க்கும் நேரம், 

காஃபியுடன் உள்ளே நுழைந்தான் வெங்கட், தியா “டேபிள்ல வச்சுட்டு போங்க….” என்றதும், 

அவனும், “ஓகே மேம்…” என்றவன் அவள் சொன்னது போல் டிரேயை மேஜை மீது வைத்துவிட்டு வெளியேற போனவன், அறை வாசலில் ஒருமுறை நின்று தியாவை பார்த்துவிட்டு வெளியேறினான் கையில் ஃபோனுடன்… 

“என்ன விஷயமா இந்த ஐடியை பத்தி கேட்குறீங்க…?” என்ற கேள்வி அவளிடம், 

“சொல்லியாகணும்னு அவசியம் இல்ல… அபிஷியல்…” கால் மீது கால் போட்டிருந்தவனுக்கு தியாவின் வெளி தோற்றம் எத்தனை கவர்ந்ததோ அதே அளவில் அவளது அணுகுமுறை அவளை எட்டி நிற்க சொன்னது… 

“இருக்கலாம்… ஆனா என் கம்பெனில இருந்து ஒரு விஷயம் வெளிய போகணும்னா இட் நீடு அ வேலிடு ரீசன்…” 

“இருக்கலாம்… பட் ஐ டோன்ட் ஹாவ் தட் ரீசன் டூ ஸே… இது ரொம்ப சீக்கிரெட்…” என்று விடாபிடியாக நின்றவனை ஓர் பார்வை பார்த்தவள், 

அந்த காகிதத்தை அவன் புறம் தள்ளி, “யார் வந்து கேட்டாலும் உடனே எல்லாத்தையும் சொல்லணும்னு இல்ல… பிராபர் பிரோசிடிங்க வேணும்… இந்த ஐடி எங்க கம்பெனி சர்வர்ல இருந்து கிரியேட் பண்ணதுன்னு சொல்லுறீங்க… அப்ப இதுனால என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்காம நானா ஏதாச்சும் சொல்ல போய் அது எங்க கம்பெனிக்கு பிரச்சினை ஆகா கூடாது… அப்படி ஆச்சுன்னா ஐ’ஏம் ரெஸ்பான்ஸிபில் பார் தாட்…” என்றபடி இருக்கையில் சாயந்தமர்ந்தவளை பார்த்து பல்லை கடித்தான் மகிழன்… 

‘அழகு இருக்குற இடத்துல தான் அகங்காரம் இருக்குமாம்… நான் ஒரு எஸ்ஐ… ஏதோ ரோட்டுல போறவன் வந்து கேட்குற மாதிரி பேசுறா…’ என்று உள்ளுக்குள் எரிந்தாலும் வந்த வேலை முக்கியம் என்பதால் சற்று இறங்கி போக நினைத்தான்… 

“ம்ம்ம்… இது…” என்று சொல்ல வரும்போது மேஜையின் மீதிருந்த தியாவின் அழைப்பேசி அலரியது… 

அதில் மூவரது கவனமும் அலைப்பேசியின் மீது விழ, தியாவின் முகம் மட்டும் ஒருநொடி ஒரேயொருநொடி கோபத்தை காட்டி பின் அமைதியாகி போனது… 

“ஒன் செக் பிளீஸ்…” என்று அனுமதி வேண்டியவள், அதை உயர்பித்து காதில் வைத்து

“நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்… அப்புறம் பேசுறேன்…” என்க, 

“என்ன மன்னாங்கட்டி வேலை…? பெரிய இவ மாதிரி அன்னைக்கு பேசுன்ன… பாரு இன்னைக்கு போலீஸ் வந்து நிக்குது… என்ன புடுங்க போற இப்ப…?” என்று கோபத்தில் கத்தியவனுக்கு நேரெதிர் மனநிலையில்

“அப்புறம் சொல்லுறேன்…” அத்தனை அமைதியான குரலில் நிறுத்திக்கொள்ள, 

“என்னத்த சொல்ல போற… அன்னைக்கே சொன்னேன் இது எல்லாம் சரிபட்டு வராது… வேண்டாம்… வேற ஐடியா பண்ணலாம்னு ஆனா அதை கேட்காம எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப என்னத்த சொல்ல போற…?” என்று கத்தியதற்கு, தியா விழிகளை உயர்த்தி மகிழனை ஓர் பார்வை பார்க்க, 

அவனோ கூலரை இன்னும் அகற்றாதிருந்ததில் எங்கு பார்க்கிறான் என்று தியாவிற்கு விளங்கவில்லை… 

“லுக்… ஐ’எம் ரெஸ்பான்ஸிபில் பார் வாட் ஐ டிட்… எப்பவும் அவசரபட்டு கத்துறது உன்வேலை… சோ… ரிலாக்ஸ்… நான் முக்கியமான வேலைல இருக்கேன்… அப்புறம் பேசுறேன்…” என்று எதிரில் இருந்தவன் கத்த கத்த, அதை காதில் வாங்காது அழைப்பை துண்டித்து விட்டாள் அவனது வார்த்தையை பெரிது படுத்தாமல்… 

“முக்கியமான கால்ன்னா பேசிட்டு வாங்க… நோ பிராப்ளம்…” என்ற மகிழனை பார்த்தவள், 

“நோ இசியூஸ்… இதை நான் பொறுமையா ஹான்டில் பண்ணிபேன்.. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க…” என்றிட, 

“ம்ம்ம்… சைல்டு பிராஸ்டீடியூஷன் கேஸ்…” என்று மட்டும் சொல்ல தியா இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், 

“ஓஓஓ….” என்றதோடு நிறுத்திக் கொள்ள, 

“உங்களுக்கு கதை சொல்ல நான் இங்க வரலை… இந்த ஐடியை யாரு கிரியேட் பண்ணதுன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க மேடம்… வீ டோன்ட் ஹவ் மச் டைம்…” என்று குரலை லேசாக உயர்த்தவும், 

“இப்ப கண்டுபிச்சு என்ன பண்ணுவீங்க…?” என்றவளை பார்த்து பல்லை கடித்தவன், வாய் திறக்கும் முன், 

“மேடம்… உங்களை யாருன்னு பார்த்து சொல்ல சொன்னோம்… அவ்வளவு தான்… போலீஸ் நாங்க என்ன பண்ணுவோம்னு நீங்க தெரிஞ்சுக்க அவசியம் இல்ல…” என்ற பிரவீணை பார்த்தவள், 

“கரெக்ட் தான்… பட் அதுனால என் கம்பெனி பெயர்…” என்று முடிக்கும் முன், 

“தனிபட்ட நபர் பண்ணுற தவறுக்கு உங்க கம்பெனி பொறுப்பெடுத்துக்குமா என்ன…?” என்ற மகிழனின் நக்கல் கேள்விக்கு, 

“இல்லை தான்… ஆனா தனி நபரை முழுசா விசாரிக்காம நாங்க வேலைக்கு எடுக்குறது இல்லை… இப்ப இந்த பிரச்சினைனா நாங்க தவறான ஒரு பெர்சனை வேலைக்கு எடுத்ததா ஆகிரும்… சோ… எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க நினைக்குறேன்…” என்னும் போது , மீண்டும் தியாவின் ஃபோன் அலறியது, 

“ம்ப்ச்ச்…” என்ற எரிச்சல் அப்பட்டமாக மகிழனின் குரலிலும் முகத்திலும் தெரிந்தது… 

தியாவிற்கும் கோபம் வந்தது தான்… அழைப்பை துண்டித்து விட்டாள்… ஆனால் அது மீண்டும் அலற, மேஜையின் இருபுறம் இருந்தவர்களுக்கும் பொறுமை காற்றில் பறந்தது… 

“டேமிட்… ஒன்னு எடுத்து பேசிட்டு வை, ஆர் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை, சும்மா கேட்டதை பண்ணாம சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க… எவ்வளவு முக்கியமான விஷயம்னு தெரியாம சும்மா கம்பெனி கம்பெனின்னு கதை விட்டுட்டு இருக்க… எங்களை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு…  கோமாளி மாறியா…?” என்று மேஜையின் மீது ஓங்கி தட்டி ஆவேசமாக எழுந்து நின்று கேட்டவனை நிதானமாக பார்த்தவள், 

“இதை நான் தான் கிரியேட் பண்ணினேன்….” என்றவள், அழைப்பை ஏற்று, 

“நான் தான் அப்புறம் பேசுறேன்னு சொல்லுறேன்ல…. சும்மா கால் பண்ணிட்டே இருந்தா உனக்கு பதில் சொல்லியே ஆகணும்னு இல்ல… வை ஃபோனை…” என்றவளின் குரல் சற்றும் உயரவில்லை அதோடு எதிரில் இருப்பவர்களின் அதிர்ந்த நிலையை கணக்கிலும் கொள்ளவில்லை…

தொடரும்….

 

 

 

 

 

Advertisement