Advertisement

AVN-3:

“அண்ணா…” என்று சற்று குரலை உயர்த்தவும் தான் தமிழ்ச்செல்வன் தலையை உயர்த்தினான்… 

“ஹான்… என்ன டா…?” என்று கேட்டவனை பார்த்து முறைத்த மகிழனை, 

“ம்பச்ச்… இப்ப எதுக்கு கூப்பிட்ட…?” ஒருவித சலிப்பு என்று சொல்லலாம் அவன் குரலில், 

அதில் மகிழனின் பார்வை ஆராய்ச்சியாக மாறியது… அதில் இன்னும் கடுப்பானவன், 

“உன் போலீஸ் பார்வையை எதுக்கு என்மேல வீசிட்டு இருக்க இப்ப…?” என்னும் போதே சௌந்தர்யா கையில் தட்டுடன் வந்தவர், 

“என்னனு தெரியல மகிழா… நாலு மணி போல வந்தான்… வந்ததுல இருந்து இப்படிதான் இருக்கான்… நானும் கேட்டேன் சரியா பதில் இல்ல…” என்றவறை திரும்பி பார்த்த தமிழ்செல்வன், 

“ம்மா… எதுவுமில்ல… நான் சும்மா வேலை தான் பார்த்துட்டு இருக்கேன்…” என்று சமாளிக்கும் போது, 

“சரிதான்… நீ எத்தனையோ முறை வீட்டுல உட்கார்ந்து வேலை செஞ்சு இருக்க ஆனா இந்த மாதிரி சீரியஸ் மோட்ல இல்ல…” என்றபடி விரலால் காற்றில் அவனது முகத்தை வட்டமிட்டு காட்ட ஒரு பெருமூச்சு தமிழ்ச்செல்வனிடம்… 

மடியில் இருந்த லேப்டாப்பை மூடி வைத்தவன், டேபிளில் அன்னை வைத்த பலகாரத்தை கையில் எடுத்தபடி, 

“ம்ம்ம்… ரொம்ப பிரச்சினை இல்ல ஆனா கொஞ்சம் பிரச்சினை…” என்னும் போது அவனது அன்னை பதற்றத்தோடு, 

“என்னாச்சு பா… ஏதாச்சும் லாஸா…?” என்று தயங்கி கேட்க, 

“அப்படின்னும் சொல்லலாம் ம்மா… ஆப்போஸிட் கம்பெனி கொஞ்சம் பெருசு… சோ… வித்தியாசமா யோசிக்குறாங்க… அது எனக்கு கொஞ்சம் குடைச்சலா இருக்கு…” 

“தெளிவா சொல்லு அண்ணா… ஏதாச்சும் என்னால முடிஞ்ச யோசனையை சொல்லுறேன்…” என்றவனுக்கு தெரியவில்லை அடுத்து என்ன நடக்க போகிறது என்று… 

“ம்ம்ம்… அது ஒன்னுமில்ல டா… ஆப்போஸிட் கம்பெனி பெருசு… நிறைய பிரான்ச் வச்சு இருக்காங்க…” என்றவனை இடைமறித்தான் மகிழன், 

“நீயும்தானே வச்சு இருக்க…. சென்னை, கோயம்பத்துர், அப்புறம் இங்க பெங்களூர்ல… அப்புறம் என்ன…?” 

“இல்ல டா… அவங்க பிரான்ச் எல்லாம் பாரின்ல இருக்கு… ” என்றதும் மகிழன் வாயில் பலகாரத்தை வைத்தபடி, 

“ஓஓஓஓ…”என்றவன் மூளை வேலை செய்ய தொடங்கியது போலீஸாக, 

“இப்ப பிரச்சினை என்னனா… எனக்கும் அவங்களுக்கும் தனிபட்ட முறைல எதுவும் இல்ல… ஆனா வேலை செய்யுறவங்க மூலமா பிரச்சினை வருது…” என்றவன் மகிழன் கேள்வியை எடுக்கும் முன், 

“அதாவது… அவங்க எம்ளாய் எல்லாரையும் என்கரேஜ் பண்ண ஒரு ஆஃபர் வச்சு இருக்காங்க… அது என்னன்னா… நல்ல வொர்க் பண்ணுற எம்ளாய் அடுத்த பிராஜக்ட்ல பாரின் பிரான்ச்ல வொர்க் பண்ணிட்டு ரிட்டர்ன் வந்துருவாங்க…” என்றதும் மகிழனின் புருவம் சுருங்கியது… 

“ஏன் இப்படி பண்ணணும்…? நல்லா வொர்க் பண்ணா சேலரி இன்கிரிமென்ட் குடுக்கலாமே… இதுல இவங்களுக்கு என்ன பிராபிட்…?” என்ற கேள்வியில் நிறுத்த, 

“அதான் மகிழா எனக்கும் புரியல… கரெக்டா ஒரு பிராஜக்ட் மட்டும் தான் பண்ணுறாங்க… வெளிநாட்டுல போய் வேலை பார்க்கணும்னு ஆசை படுற எல்லாருக்கும் இது ஒரு ஜாக்பாட் மாதிரி… அதுனால அவங்க குடுக்குற இன்புட்டும் அதிகம்…” என்க, 

“சரி இதுல உனக்கு என்ன பிரச்சினை…?” 

“ம்ம்ம்… பிரச்சினை தான் டா… அதான் சொன்னேன்ல… வெளிநாட்டுல போய் வேலை பார்க்கணும்னு நினைக்குறவங்களுக்கு இது சூப்பர் ஜாப்…” என்றவனை புரியாது பார்க்க, 

தமிழ்செல்வனே மேலே தொடர்ந்தான், “இங்க நம்ம கம்பெனில வொர்க் பண்ணுற நல்ல எம்ப்ளாய் எல்லாம் அந்த கம்பெனிக்கு டிரை பண்ண ஆரம்பிக்குறாங்க… சோ நமக்கு பிரச்சினை… புதுசா ஒருத்தரை வேலைக்கு எடுக்கணும் அவங்களுக்கு டிரைனிங் குடுக்கணும்னு… பிராசஸ் அதிகமாகுது… அது கூட மேனேஜ் பண்ணலாம் மகிழா பட் வொர்த்தான எஸ்பிரியன்ஸ் எம்ப்ளாய் எல்லாம் ஷிப்ட் ஆகும் போது தான் ரியல் பிராபளம்…” என்றவனது வார்த்தைகள் மகிழனுக்கு புரிந்தது… 

ஒருவனை செதுக்கி பக்குவ படுத்தி வைக்கும் சமயம் அவன் இடம்பெயர்ந்தால் அது எத்தனை நஷ்டம் என்று விளங்கியது… 

அவன் யோசிக்கும் போதே, “எனக்கு என்ன புரியலைன்னா…? இதுல இவங்களுக்கு என்ன லாபம்ன்னு தான்… இன்னும் சொல்ல போன எல்லா எஸ்பென்ஸும் இவங்களே ஏத்துக்குறாங்க முழுசா… இதுனால நல்லா கரெக்ட் டைமிங்க்கு வொர்க் பண்ணுறாங்க… ஓகே… அதுனால என்ன பெருசா என்ன லாபம்னு தான் நினைக்க தோணுது…” என்றதற்கு, 

“மே பி நீ சொல்லுற மாதிரி கரெக்ட் டைமிங்ல வொர்க் பண்ணுறனால பிராஜக்ட் அதிகம் வருதோ…” கேள்விகள் வண்டாய் குடைந்தது மண்டையை, 

“இல்ல மகிழா… அதுவும் நோட் பண்ணினேன்… தே ஆர் நாட் கம்பீட்டிங் என் பிராஜட்… அதாவது அடிச்சுபுடிச்சு பிராஜட் பண்ணி மேலும் மேலும் கம்பீட் பண்ணுறது இல்ல… அவங்களுக்கு வர பிராஜக்டை மட்டும் பண்ணுறாங்க அதுவும் அவங்களை தேடி வர பிராஜக்ட்ஸ்… அதுவும் ஓவர் லோட் பண்ணிக்குறது இல்லை…” 

மகிழனுக்கு சிலவிஷயம் புரிந்தது… தானாக தேடி செல்லாமல் பிராஜக்டை தேடி வர வைக்குறார்கள், வேலை செய்பவர்களை ஊக்குவிக்க நினைக்குறார்கள்… 

ஆனால் தமிழ்ச்செல்வன் சொன்னது போல் எதற்கு செய்ய வேண்டும் என்ற கேள்வியில் முட்டி நின்றான்… 

அவனது யோசனையை கண்டு, “ரிலாக்ஸ் டா… இதை நான் பார்த்துக்குறேன்… நீ ஃபிரியா விடு… என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்…” என்றதற்கு புன்னகையை பதிலாக  தர, அவர்களின் அன்னையோ

“இதுனால உனக்கு எதுவும் லாஸ் இல்லல பா…” என்று கேட்கவும், 

“இல்ல ம்மா… நம்ம பண்ணுற பிராஜக்ட் ஒழுங்கா பண்ணுறனால இதுவரை அந்த பிராப்ளம் வரல, பட் இப்படியே போனா அதுக்கும் இடைஞ்சல் வர வாய்பிருக்குமோன்னு ஒரு டௌட்… ஆனா அதுக்கு முன்னாடி நான் ஏதாச்சும் பண்ணிருவேன் ம்மா…” என்று உறுதியாக பேசிய மகனை கண்டு உள்ளம் பூரித்தவர், மகிழனை திரும்பி பார்த்தார், 

அவன் பார்வை ஓர் இடத்தில் இருப்பதையும் மூளையின் செயல்பாடு எங்கோ இருப்பதையும் புரிந்தவர், 

“டேய்…” என்று குரலை உயர்த்தவும் நினைவிற்கு வந்தவன் முடிந்த மட்டும் அன்னையை முறைக்க, 

அதற்கும், “என்னடா முறைக்குற…?” என்று கேட்டபடி எழுந்து மேஜை மேல் இருந்த தட்டுகளை எடுக்க, 

“ம்ம்ம்… நான் மட்டும் டேய்… அவன மட்டும் கண்ணே மணியேன்னு கொஞ்சு…” என்று எரிந்துவிழ, 

“அவன் நல்ல பிள்ளையா இருக்கான் நீ பொறிக்கி மாதிரி இருக்க…” என்றவரை பார்த்து, 

“என்ன ஒரு அநியாயம்… ஒரு போலிஸை பார்த்து பொறிக்கின்னு சொல்லுறீங்க…” என்றபடி கை முஸ்டியா சோபாவில் குத்திக் கொள்ள, 

அதற்கும் அவர், “டேய்…. சோபா பத்திரம்… ” என்று கலாய்க்க, 

மகிழனுக்கு கோபம் ஏறிக்கொண்டே போனது, தமிழ்செல்வன் சிரித்தபடி அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனுக்கு ஸ்வேதாவிடம் இருந்து அழைப்பு வரவும், எழுந்து தன் அறைக்கு செல்ல, 

அதை கவனித்த மகிழன், “நீ நல்லவன்னு சொல்லுற உன் புள்ள உனக்கே தெரியாம லவ் பண்ணிட்டு சுத்துன்ன கேஸ்… அதை கண்டு புடிச்ச நான் பொறிக்கி அவன் நல்லவன்… அப்படிதானே…” என்று சீறி நிற்க, 

“டேய் … எல்லாரும் அப்படிதான்… நீ சொல்லாம இருந்தாலும் அவனே ஒருநாள் வந்து சொல்லி இருப்பான்… அதுவும் இல்லாம யாரும் நான் லவ் பண்ணுறேன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு இருக்க மாட்டாங்க…” என்று இன்னும் வாரா, கண்களை மூடி நெற்றியில் தட்டி கொண்டவன், 

“சே… இந்த வீட்டுல எனக்குன்னு ஒரு மரியாதை இல்ல, மதிப்பு இல்ல…நான் போறேன் வீட்டை விட்டு…. ” என்று எழுந்து வாசலை நோக்கி நடந்தவனை, 

“வரும்போது உழுந்து அரைகிலோ வாங்கி வா…” என்றபடி மீண்டும் சமையலறைக்குள் நுழைய போக, பின் ஏதோ நியாபகம் வந்தவராய் மகிழன் புறம் திரும்ப, அவனோ இடுப்பில் கை வைத்து அன்னையை முறைத்தபடி நின்றிருந்தான்… 

அதை கொஞ்சமும் சட்டை செய்யாது, பேச வாய்திறக்கும் முன், மகிழனே

“என்ன இப்ப அரிசி வாங்கணுமா…?” என்று கேட்க, 

“சே…சே… இல்ல டா… நைட்டுக்கு என்ன டின்னர் வேண்ணும்னு கேட்க வந்தேன்…” என்ற அன்னையை அப்பொழுதும் முறைத்தவன்,

“சப்பாத்தி, பன்னீர் மசாலா…” என்றதோடு திரும்பி வெளியே சென்றவன் முகத்தில் அத்தனை புன்னகை… 

இங்கு சௌந்தர்யாவிற்கும் அதே புன்னகைதான்… சமையலறைக்குள் நுழைந்தவரை, வள்ளி

“எதுக்கு தான் சின்ன தம்பியை சீண்டிட்டே இருப்பீங்களோ போங்க…” என்றபடி சப்பாத்திக்கு மாவை தயார் செய்ய தொடங்க, 

சிரித்தபடியே, “பெரியவன் அமைதி வள்ளி… என்னை தொல்லையே பண்ண மாட்டான் ஆனா சின்னவன் அப்படியே நேர் எதிர் சின்னதுல இருந்து விளையாட்டுக்கு இப்படி சண்டை போட்டு பழகி போச்சு… எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்…” என்றபடி சமையலை பார்க்க, 

அவரது பதிலில் திரும்பி ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தவள், “என்ன ஜாலியோ போங்க… ” என்றவளும் வேலையை பார்க்க தொடங்கினாள் அமைதியாக… 

இங்கு வெளியே தோட்டத்தில் இருந்த கல் பென்சில் அமர்ந்திருந்த மகிழனுக்கு மூளை படு பயங்கரமாக வேலை செய்து கொண்டிருந்தது இன்று தனக்கு வந்த கேஸை பற்றி… 

வெறும் மூன்று குறிப்பை வைத்து எவ்வாறு என்ன விஷயம் என்பதை கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை… 

‘இன்பர்மேஷன் குடுத்தவன் நம்மளை குழப்ப கொடுத்தா எப்படி இதை பொய்யின்னு விடுறது… ஒருவேலை உண்மைன்னா இதை எப்படி கண்டுபிடிக்குறது… உண்மையா இருக்கும் பட்சத்தில் அது என்ன மாதிரியான ஸ்மக்லிங் பொருள் அது…?’ என்ற கேள்விகள் அவன் மண்டைக்குள்… 

‘நமக்கு வர கேஸ் எல்லாம் இப்படி தான் வரும் போல…’ என்றபடி தலையை கோதியபடி சுற்றி பார்த்தவன் கண்ணில் பட்டது பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் தான்… 

அவனது உடல் மொழியும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் சொல்லாமல் சொல்லியது காதல் உலகில் மிதந்து கொண்டிருக்கிறான் என்று….

“இவன் வேற… ஆல் டைம் லவ் மூட்ல சுத்திட்டு இருக்கான்… பேசாம நம்மளும் லவ் மேரேஜ் பண்ணிக்கலாம்… டென்ஷனா இருக்கும் தான் பட் கூல்லா இருக்கும்…” இதுவரை யோசித்ததற்கு மாறாக யோசிக்க தொடங்கியவனுக்கு அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது…

சட்டென தன் ஃபோனை எடுத்தவன், பிரவீணுக்கு அழைப்பு விடுத்தான்… 

“ஹலோ சார்….” என்ற குரல் கேட்டதும், 

“இந்த கேஸை கொஞ்சம் ஈஸியா ஹேன்டில் பண்ணலாம் பிரவீண் ரொம்ப யோசிக்க வேண்டாம்….” என்றதில் முதலில் குழப்பியவன், 

“புரியல சார்… ஈஸியான்னா எப்படி சொல்லுறீங்க…?” என்று கேட்க, 

“விஷயம் ஸ்மக்லிங், எங்க இருந்துன்னு தெரியாது ஆனா கன்பார்ம் வெளிநாடு தான், எப்படின்னு யோசிச்சா அதான் இன்பர்மேஷன் வந்துச்சே பிளைட், டேட், டைமிங்… வெரி ஈஸி…” என்றதில் யோசித்தவன், 

“சோ…. அந்த டைமிங்ல டிராவல் பண்ண எல்லா பிளைட்டையும் செக் பண்ணா வேற ஏதாச்சும் கிடைக்கும்… கிடைக்க சான்ஸ் இருக்கு…” என்ற பிரவீணுக்கு

“எக்ஸேட்லி….” என்ற மகிழனுக்கு, 

“பட் சார் என்னனு தேடுறது…?” என்ற கேள்வியில் மகிழன் சற்று யோசித்தவன் பின் தன் எண்ணங்களை கூற அமைதியாக கேட்டுக்கொண்டான் பிரவீண்… 

அனைத்தும் பேசி முடித்து வீட்டிற்குள் நுழைந்தவனை அவனது அன்னை, “டேய்… உளுந்து எங்க டா…?” என்று கேட்கவும், 

திருதிருவென முழித்தவன், “அப்ப உண்மையா தான் வாங்கிட்டு வர சொன்னீங்களா…?” என்று அப்பாவியாக கேட்கவும் முறைத்து பார்த்தவரை, 

“ஓகே … ஓகே… கூல்… இப்பவே போறேன்…” என்றபடி மீண்டும் வெளியேறியவனை பார்த்து புன்னகைத்த அவன் அன்னையை, 

வள்ளி  “இருந்தாலும் அந்த புள்ளைய ரொம்ப தான் கிண்டல் பண்ணுறீங்க ம்மா… அதுவும் சின்ன பையன்னா பரவாயில்ல இது போலீஸ் பையன்….” என்று சொல்லவும், 

“ஒரு அம்மாக்கு பையன்னா அது பையன் தான்…. இதுல என்ன சின்ன பையன் போலீஸ் பையன்னு வித்தியாசம் வேண்டி இருக்கு…?” என்றதற்கு, 

“சரி தான்… உங்களுக்கு பையனா இருக்குறவரை ஒன்னும் இல்ல… ஒருவேலை பையனுக்கு கல்யாணம் ஆகிட்டா என்ன பண்ணுவீங்க…? வர பொண்ணுக்கு என் புருஷன்னு தோணுமே… அப்ப என்ன பண்ணுவீங்க…? ” என்ற கூற்றில், சற்று யோசித்தவர், 

“சரிதான்… அப்ப கொஞ்சம் குறைச்சுக்குவேன்… அதுவும் அவன் அந்த மாதிரி பொண்ணு எல்லாம் பார்க்க மாட்டான்…” என்றபடி வேலையை பார்க்க, 

“என்னது… அப்ப சின்னதம்பியும் லவ் பண்ணுதா…?” என்னும் போது வீட்டினுள் நுழைந்த மகிழனை, 

“தம்பி… சொல்லவே இல்ல பார்த்தீங்களா…?” என்று கத்திக் கொண்டே அருகில் போனவளை, சௌந்தர்யா

“ஏய் வள்ளி…” என அழைத்து நிறுத்த பார்க்க, அவளோ நின்றபாடில்லை…

மகிழன் ஒன்றும் புரியாமல்,”என்ன சொல்லல…?” கேள்வியை கேட்டபடி சாப்பாட்டு மேஜையில் அமர, சௌந்தர்யா அவனது சப்பாத்தியை தட்டில் வைத்தபடி, 

“போய் முதல்ல கையை கழுவிட்டு வா… அவ ஏதோ உழறிட்டு இருக்கா… ” என்றதும், வள்ளி முறைத்து பார்க்கவும், மகிழனுக்கு என்னவென்று அறிந்துக்கொள்ள ஆர்வம் வந்தது… 

“ஊட்டிவிடு ம்மா…” என்றபடி வாய்யை ஆவென்று திறந்து வைக்க, முறைத்தபடி ஒரு வாய் ஊட்டிய சௌந்தர்யா, கண்ஜாடையில் வள்ளியை உள்ளே போக சொல்ல, கவனித்து விட்டான் போலீஸ்காரன்… 

உடனே, “வள்ளி அக்கா ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே… என்னது அது…? நான் என்ன சொல்லாம விட்டேன்…?” என்று கேட்கவும் வள்ளியும், 

“அதான் உங்க லவ் மேட்டரை பத்தி…” என்று பட்டென கூறவும், புறையேறிவிட்டது சட்டென்று…

அதில் சௌந்தர்யா வள்ளியை பார்த்து முறைக்க, மகிழன் தண்ணீரை பருகியபடி, 

“அப்படின்னு அம்மா சொன்னாங்களா…?” என்று கேட்கவும், 

சற்று யோசித்தவர், “அந்த மாதிரி… தான் சொன்னாங்க…” என்று இழுத்தவளுக்கு அப்பொழுது தான் சௌந்தர்யா சொன்னது சரியாக நினைவிற்கு வரவும், 

‘இப்படி அவசரபட்டுடியே டி…’ என்று உள்ளுக்குள் நொந்தவள், வெளியே சமாளிப்பாக நிற்க, 

மகிழன், “பாருங்க… நீங்களே சொல்லுறீங்க… அந்த மாதிரின்னு… எனக்கு எல்லாம் ம்மா சொல்லுற பொண்ணுதான்… ம்மா பார்த்து தாலியை கட்டுடான்னு சொல்லுற பொண்ணை கண்ணை மூடிட்டு தாலியை கட்டுவேன்…” என்றதும் நெஞ்சில் கை வைத்தவர், 

“ஓஓஓ… உனக்கு அந்த நினைப்பு இருக்கா… அதெல்லாம் முடியாது கண்ணா… அம்மாக்கு வயசாயிருச்சு… இந்த வயசான காலத்துல பொண்ணு தேடி அலைய முடியாது பா… அதுனால நீயே உனக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து சொல்லு கல்யாணம் பண்ணி வச்சுறேன்…” என்றவரை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தவன், 

“ஏன்… அப்படியே ரெஜிஸ்டர் மேரேஜே பண்ணிட்டு வந்துறேன்… உங்களுக்கு ஏன் கஷ்டம் கல்யாண வேலை யெல்லாம் பார்த்து…” என்க, 

“அட இதுகூட நல்ல யோசனை தான் பா…” என்றதும் பல்லை கடித்தவன், 

“கடுப்பேத்தாம அமைதியா ஊட்டி விடு ம்மா…” என்றதும் கப்பென்று வாயை மூடி கொள்ளவும், வள்ளி தலையில் தட்டிகொண்டு உள்ளே சென்றவிட, தமிழ்செல்வன் உணவுண்ண வந்தான் காதில் ஃபோனுடன்… 

“ம்ப்ச்ச்… இவன் இன்னும் முடிக்கலையா…? கடவுளே…” என்று புலம்ப, சௌந்தர்யா மெல்லிய குரலில்

“அதுக்கு தான் சொல்லுறேன் பேசாம நீயே ஒரு பொண்ணை பாரு… நல்ல ஃபீல்லா இருக்கும்… ” என்று கூறவும் முறைத்து பார்த்தவன், 

“எனக்கு சப்பாத்தி போதும் போங்க…” என்றபடி எழுந்து அறைக்கு சென்றவனை பார்த்து யோசனையாக நிற்க, வள்ளி

“ஏன் அக்கா நல்லா இருக்க பிள்ளைய கெடுக்குறீங்க…?” என்ற கேட்க, 

“ஓஓஓ… அப்ப லவ் பண்ண நல்ல பிள்ளை இல்லையா…?” என்று கேட்டு முறைக்கவும், 

சட்டென திரும்பி தமிழ்செல்வனை பார்த்துவிட்டு சௌந்தர்யாவிடம், “அச்சோ அப்படியில்ல அக்கா… நான் என்ன சொல்ல வந்தேன்னா…” என்று பேசும் போதே, இடைமறித்தவர்

“உனக்கு மகிழனை பத்தி தெரியாது… அவன் குணத்துக்கு நாம பார்க்குற பொண்ணு ஒத்து போகலைன்னா நம்மைதான் சொல்லுவான்… நீங்க பார்த்த பொண்ணுதானேன்னு… தேவையில்லா பிரச்சினை அது… அவனுக்கு வேண்டியதை அவனே பார்த்து பண்ணுவான்… அதுநான் அவனுக்கும் நல்லது…” என்றதில் வள்ளி அமைதியாகி போக, சௌந்தர்யா தமிழ்செல்வனை கவனிக்க, 

அவனோ உலகம் மறந்து தன் பேச்சில் கவனமாக இருக்க, மகிழனின் மனம் ஒருநிலையில்லாமல் அழைந்து கொண்டிருந்தது… 

நாளைய பொழுது அவனுக்கு வைத்திருக்கும் திருப்பங்களையும் சோதனைகளையும் எதிர் கொள்ள தயாராக தொடங்கினான் என்னென்று அறியாமலேயே…

தொடரும்….

 

 

 

Advertisement