Advertisement

UD-27:

“என்ன கேட்க வரீங்கன்னு புரியலை…” அவளது கேள்வியில் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன், 

“மன்சூர் உங்க சேர்மன்… உங்க கன்டுரோள்ல ஸ்டாப்ஸ் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க… இதுல ஸ்மக்லிங் நடந்து இருக்கு… எப்படி சாத்தியம் ஆகும்…?” என்று கேட்கவும், 

“நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்… எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது… இப்படி கூட கடத்தல் பண்ணலாம்னு இப்ப தான் எனக்கே தெரியும்…” என்ற தெளிவான பதில் அவளிடம்… 

“ம்ம்ம்…. வேற எதாச்சும் தொழில்ல எதிரின்னு எதாச்சும் தெரியுமா…?” என்று கேட்க, 

கண்களை இறுக மூடி திறந்தவள், “சார்… நீங்க எத்தனை முறை கேட்டாலும் எனக்கு தெரியாததை எப்படி என்னால சொல்ல முடியும்…? நான் அந்த கம்பெனியோட சிஈஓ… அவ்வளவுதான்… இந்த கம்பெனியோட ஆப்போஸிட் கம்பெனி யாருன்னு கேட்ட கூட நான் சொல்ல முடியும்… பட் சேர்மன் பத்தி எல்லாம் தெரியாது சார்….” என்று முடிவாக சொல்லிவிட, அவளையே ஆழ்ந்து பார்த்தவன், உள்ளுக்குள் ‘அழுத்தகாரி….’ என்று நினைத்துகொண்டவன் மேற்கொண்டு ஆசிப் பற்றி சில கேள்விகளும் அவன் தவறாக நடந்துக்கொண்ட நாட்களின் குறிப்பையும் பெற்று கொண்டவன் முன்தினம் போல் கண்ணாடியை பார்த்து சிக்னல் தர, 

பிரவீண், “ம்க்கும்… இது ஜெயிலா இல்ல லவ்வர்ஸ் பார்கான்னு தெரிய மாட்டீங்குது…” என்று முனுமுனுத்தபடி அனைவரையும் கிளப்பி கொண்டு வெளியேறி விட்டான் சட்டென…

இங்கு உள்ளே, தியா மகிழனின் செய்கையை கவனித்து விட்டவள், கேமேரா ஆஃப் ஆனதை கவனித்து விட்டு,

“எனக்கு கொஞ்சம் பேசணும்..” என்று கேட்க, 

அவனும் எழுந்து சோம்பல் முறித்தபடி, அவள் அருகில் வந்தவன் மேஜையின் மீது ஒற்றை காலை தொங்கவிட்டவாரு அமர்ந்து கொண்டு, 

“கேளு மா…” என்று மென்மையாக கேட்க, 

தியாவிற்கு அது பிடித்தும் பிடிக்காமல் போக, “ம்ப்ச்ச்… கொஞ்சம் ஒழுங்கா பேசுறீங்களா…?” என்று முகத்தை சுழித்து கொண்டாள் வேற பக்கம் பார்த்தபடி… 

அவளது முக நாடியை ஒற்றைவிரல் கொண்டு பற்றி தன்னை பார்க்கும் படி செய்தவன், “எனக்கு எப்படி பிடிக்குமோ அப்படி தான் என்னால கூப்பிட முடியும்…” என்று கண் சிமிட்ட, வேகமாக அவன் கையை தட்டி விட்டவள், 

“நான் தான் மன்சூரை கொன்னேன்னு உங்களுக்கு தெரியும் ஏன் அதை பற்றி என்கிட்ட நேரிடையா கேட்காம சுத்தி சுத்தி விசாரணை பண்ணுறிங்க…?” என்று கேட்க, 

“ஏன்னா நீ எனக்கு வேண்ணும்… வாழ் நாள் முழுக்க சண்டை போட்டு சமாதானம் ஆகி சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழணும்… அவன் பண்ண தப்புக்கான தண்டனையை அவன் அனுபவிச்சான் அவ்வளவுதான் என்னை பொருத்தவரை…” என்று தோளை உழுக்கிக் கொள்ள, 

நக்கலாக சிரித்தவள், “மிஸ்டர் மகிழன், அதுவும் போலீஸ் ஆபிசர்க்கு கடமை ரொம்ப முக்கியம் ஆச்சே… அப்புறம் எப்படி…? இந்த பதில் ஏத்துக்குற மாதிரி இல்லையே…?” என்று சந்தேகமாக பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டவளை காதலாக பார்த்தவன்,

“புருஷனுக்கு பொண்டாட்டியா என்னை நல்லா புரிஞ்சு வச்சு இருக்க… இதுக்கு மேல என்ன வேண்ணும்…?” என்று அவள் கண்ணம் கிள்ளியவனின் கையை தட்டி விட்டு முறைத்தவளை பார்த்து, 

“நீ தான்னு நான் கண்டு புடிச்சேன்… அதுக்கு காரணம் உன் செய்ன்… அது அங்க பெட் பக்கத்துல இருந்துச்சு… அதை பார்த்து தான் சந்தேகம் வந்தது… எப்படி அங்க வந்துச்சுன்னு உன்கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்க தான் வீட்டுக்கு வந்தேன்…. ஆனா நான் எதிர்ப்பார்க்காதது எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியாதா போச்சு…” என்றபடி எழுந்தவன், தன் உடைமைகளை எடுத்தபடி

“எனக்கு போலீஸ் வேலை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் முக்கியம் தியா…” என்றதோடு வெளியே செல்ல இருந்தவனை, 

“நான் என்னை பத்தி அவ்வளவு சொல்லியும் இப்படி பேசுறிங்க…? இதுல ஒரு கொலையும் பண்ணி இருக்கேன்… தேவையில்லாம என்னை தொல்லை பண்ணாதீங்க… என்னை என் போக்குல விட்டுருங்க…” என்றவளை திரும்பி பார்த்த மகிழன், 

“பைன்… அதுக்கு என்ன பண்ணலாம்…? செத்தவன் ஒன்னும் நல்லவன் இல்ல அவன் ஒரு அயோகியன், ரவுடி, மாப்பியாவும் கூட… இப்ப நான் அவனை பிடிச்சு இருந்தாலும் கண்டிப்பா தப்பிச்சு வெளிய வந்து இருப்பான் அவன் பவர் ஏதாச்சும் யூஸ் பண்ணி… ஆனா அவன் பண்ண எல்லா தப்புக்கும் தண்டனை கிடைச்சுருச்சு…” என்று அவள் முகம் பார்க்க,

தியா, “இருந்தாலும்…” என்று பேச வாய் திறக்கும் முன்,

“அவன் பண்ண எல்லா தப்புக்கும் சாவு ஒரு ஈசி தண்டனை தான்… ஆனா கண்டிப்பா அதை நீ அவ்வளவு சாதாரணமா அவனுக்கு குடுத்து இருக்க மாட்டன்னு நம்புறேன்…” என்றவனை கண் சிமிட்டாது பார்த்தவளை கண்டு லேசாக புன்னகைத்தவன்,

அவள் அருகில் முன் போல் மேஜையில் அமர்ந்தவன், “லுக் தியா… மன்சூர் போயிட்டான்… அதை மனசுல கொண்டு வா முதல்ல… நீ எப்படி  இதை பண்ண, என்ன பண்ணனுன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல… அதை அன்னைக்கு நடந்ததை மறந்துரு… எனக்கு என் கடமை இருக்கு தான்… போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்ல நேச்சுரல் டெத்ன்னு வந்துருச்சு… முடிவை தாண்டி, உண்மையை கண்டு புடிக்கணும்னு நான் நினைக்கும் அதே நேரம் எனக்கு மனசாட்சியும் இருக்கு தியா…” என்றவன் எழுந்து நின்று,

“இந்த விஷயத்தை நான் பேசினா உனக்கு தண்டனை கிடைக்கும் தான்… சேர்த்து ஷிவானிக்கும் கிடைக்கும்… அவ என்ன தப்பு பண்ணா…? ஜாமீன்ல உங்க ரெண்டு பேரையும் வெளிய எடுத்துறலாம் ஆனா அதுக்கு அப்புறம் அவ வாழ்க்கை… சின்ன பொண்ணு தியா…விஷயம் வெளிய வந்தா அவளை ஒரு வழி பண்ணிருவாங்க… வேண்டாம் விட்டுரு… எதையும் யோசிக்காத… எல்லாத்தையும் மறந்துரு…” என்றபடி வெளியேற போக,

தியா,”மகிழன்…” என்று அழைக்கவும், திரும்பி பார்த்தவன்

“ஒரு கதை தெரியுமா உனக்கு… பார்கடலை கடைஞ்சு அமுதை எடுத்தாங்கலாம் நல்ல எண்ணம் கொண்ட தேவர்களும் கெட்ட எண்ணம் கொண்ட அரக்கர்களும் சேர்ந்து… அந்த அமுதோடு சேர்ந்து நஞ்சும் வெளிய வந்துச்சு தியா… நீயும் அதே மாதிரி தான்… உன் வாழ்க்கைல நஞ்சு ஒரு பகுதின்னா அமுதம் ஒரு பகுதி… என்னை பொருத்தவரை அமுதவிஷம் நீ… உன்னை எப்படி ஹான்டில் பண்ணணும்னு எனக்கு தெரியும்…” என்றவன் வெளியேறிவிட்டான் மனநிறைவுடன்… 

இங்கு தியாவிற்கு தான் உள்ளம் பாரமாகி போனது மகிழனை நினைத்து… மனம் மகிழனை தேடினாலும் நிதர்சனம் அதை ஏற்கவிடவில்லை… 

அதற்கு பின் வேலைகள் அனைத்தும் படுவேகமாக நடந்தது… தற்காப்பிற்காக தாக்கியதால் தியாவிற்கு தண்டை ஏதுமின்றி விடுவிக்க பட, ஆசிப் இன்னும் மருத்துவமனையில் தான் இருந்தான் சிகிச்சையில்… 

மகிழன் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்கள் சிலவற்றில் அவன் தியாவிடம் தவாறாக நடந்துக்கொள்ள முயற்சித்தது தெரிய அவனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது… அதோடு கருணா என்னும் போலீஸ் அதிகாரி, தியாவின் விசாரணையின் போது பிரச்சினை செய்தவன், ஆசிப்புடன் இருந்ததால் அவன் பேரிலும் குற்றம் சாட்டி தண்டை வழங்கபட்டது வேலையில் இருந்து நீக்கி… 

“டேய்… ஏன் டா இப்படி பண்ணுற…? நீ லூசு மாதிரி பண்ணுற வேலைக்கு என்னை ஏன் கூட வச்சு இருக்க…?” என்று அடிகுரலில் சீறிய சௌந்தர்யாவை அருகில் நின்றிருந்தவன் சற்றும் மதிக்கவில்லை… 

அதை கண்டு பல்லை கடித்தவர் அடுத்து திட்ட வாய் திற்கும் போது, மகிழன் “என்னை வறுத்தது போதும்… அங்க பாரு வந்துட்டா உன் மருமக…” என்றவனை பார்த்து முறைத்தவர், திரும்பி தியாவை பார்த்து இழித்து வைத்தார் சங்கடமாக… 

சிறையில் இருந்து வெளி வந்த தியாவிற்கு வாசலில் வைத்து மகிழனையும் அவனது அன்னையையும் கண்டவளுக்கு உள்ளுக்குள் என்னவோ போல் ஆகிவிட்டது… 

‘பண்ணது கொலையோடு சேர்த்து ஒரு கொலை முயற்சி வேற… இதுல உன்னை வந்து பார்த்து கூட்டிட்டு போக நீ என்ன தியாகியா…? யாரும் வர மாட்டாங்க… எப்பவும் போல நீயே உன் வழியை பார்க்க வேண்டியது தான்…’ என்ற எண்ணத்திலேயே செய்ய வேண்டிய அனைத்து சட்ட முறைகளையும் முடித்து வெளி வந்தவளுக்கு எதிரில் இருப்பவர்களை எப்படி எடுத்து கொள்வதென்றே தெறியவில்லை… 

“வா மா…” என்று சௌந்தர்யா கை நீட்டி அழைக்க, அமைதியாக வந்து சிறுபுன்னகையுடன் நின்று கொண்டவள் நீட்டிய அவர் கையை பற்ற வில்லை… 

ஆனால் அதை சௌந்தர்யாவும் மகிழனும் கவனித்தது போலவும் தெரியவில்லை… அடுத்து என்ன பேசுவது என்று பெண்கள் புரியாமல் தயங்கி நிற்க, புரிந்து கொண்ட மகிழன்

“நல்லா இருக்கியா தியா…?” என்று பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி சாதாரணம் போல் கேட்க, முறைத்து பார்த்தாள் தியா… 

“லூசு…” என்று சௌந்தர்யா அவன் தோளில் பலமாக ஒரு அடியை வைத்தவர், 

தியாவின் புறம் திரும்பி, “நீ தப்பா நினைச்சுக்காத தியா… அவன் கொஞ்சம் லூசுதான்… ஏதோ தப்பான டைம்ல பெத்துட்டேன் போல அதான் இப்படி இருக்கான்… நீ எதுவும் மனசுல வச்சுக்காத…” என்றபடி மகனை பார்த்து முறைத்தவர், 

“நீ வண்டில ஏறு மா…” என்றவர் தியாவை பார்த்து பல்லை காட்டி சிரித்து கொண்டிருந்தவனை, 

“வாயை தான் கொஞ்சம் மூடேன் டா… எருமை…” என்று அவன் தோள் பற்றி தள்ளவும், தடுமாறி நின்றான் அன்னையை முறைத்தபடி… 

தியாவும் எதுவும் சொல்லாது காரில் ஏறி அமர்ந்து கொள்ள உள்ளம் ஒருநிலையில் இல்லை… 

“கூட்டிட்டு வந்தது நானு ஜோடி போட்டுட்டு ஏறுறது நீங்களா…?” என்று புலம்பியபடி வண்டியை உயிர்பித்தவன், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களை முறைத்தபடியே வந்தான்… 

ஆனால் அவர்களோ இவனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை… பெண்கள் இருவரும் இருபுறம் பார்த்தபடி வந்தார்களே தவிர ஒன்றும் பேசிவிடவில்லை… 

அத்தனை அமைதி அந்த காரின் பயணத்தில்… அதை கலைக்க நினைத்த மகிழன், பாட்டை போட அதுவோ சரியாக மகிழனின் நிலையை உணர்த்தும் விதமாக

உண்மை காதல் யாரென்றால்

உன்னை என்னை சொல்வேனே….

நியும் நானும் பொய்யென்றால் 

காதலை தேடி கொல்வேனே…

என்று பாடவும், “ஆஹா… என்ன ஒரு டைமிங்….” என்று சில்லாகிக்கும் போது பின் இருந்து அவன் தலையை தட்டிய சௌந்தர்யா, 

“பேசாம வண்டியை மட்டும் ஓட்டுற வழியை பாரு…” என்று திட்டவும், 

“ம்பச்ச்….” என்று சலித்துகொண்டவன், கண்ணாடி வழியாக தியாவை பார்க்க, 

அவளோ அதே அமைதியான முகத்துடன் வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்… முகம் அமைதியை காட்டினாலும் உள்ளம் குழம்பி குழப்பத்தில் உழன்று கொண்டிருந்தது…

கார் தியாவின் அப்பார்ட்மென்ட் முன் நிற்க, இறங்கி நின்றவள் சௌந்தர்யாவை பார்க்க, அவரோ மகிழனிடம்

“எந்த வீடு டா… சாவி…?” என்று கேட்க, 

சாவியை எடுத்து அன்னையிடம் தந்தவன், “இந்தாங்க… செகண்டு பிளோர்…” என்று கையில் திணிக்க, முறைத்து பார்த்தவர், தியாவின் புறம் திரும்பி

“நீ வா மா… போலாம்…” என்க, 

மகிழன், “நீங்க போங்க ம்மா… நாங்க பின்னாடி வரோம்…” என்றவன் பார்வை தியாவின் மேல் தான் நிலைத்திருந்தது… 

சௌந்தர்யாவும் ஏதோ புரிந்தார் போல், “ம்ம்ம்…” என்றதோடு கிளம்பிட, அருகில் வந்தான் ஒற்றை கையை பேண்ட்டில் நுழைத்தபடி… 

காக்கி பேண்ட் இறுக்கி பிடித்த வெள்ளை டீசர்ட், அடர்த்தியான அலை அலையான சேகம் அதில் போலீஸ் கட்டீங்க, கண்ணில் கருப்பு கூலர்ஸ் அடர்ந்த மீசை, அதை நீவியபடி அவனது இடது கையில் இருந்த கருப்பு வாட்ச், வலது கையில் இருந்த வெள்ளி காப்பு என்று அத்தனை வசீகரமாக இருந்தவனை இன்று தான் முழுதாக ரசித்து பார்த்தாள் தியா… 

அது அவளையும் அறியாத ரசனையாக இருக்க, அருகில் வந்தவன் “என்ன சைட் அடிச்சு முடிச்சுட்டியா…?” என்று கேட்கவும் திடுக்கிட்டவள், 

“எ…என்ன…? ” ஏதோ மாட்டிக்கொண்ட உணர்வு அவளிடம்… 

“ஒன்னுமில்ல…” என்றபடி கூலரை இடது கையால் கழட்டியவன், 

“என்ன பிரச்சனை உனக்கு…? என்ன ஓடுது உன் மண்டைக்குள்ள…?” என்று நேரிடையாக கேட்டவனின் முகம் இப்போது இறுகி இருந்தது… 

அவன் கேள்விக்கு சில நொடி கூட தாமதிக்காமல், “நீ தான்… நீ தான் என் பிரச்சினை… இது வேண்டாம்… என்னை விட்டுருன்னு சொல்லிட்டு இருக்கேன்… நீ என்னன்னா அம்மாவை எல்லாம் கூட்டிட்டு வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க…” என்று பல்லை கடிக்க, நிதானமாக கையை கட்டியபடி நின்றவன்,

 

“ஏன் வேண்டாம்…?” ஒற்றை கேள்வி, 

“எனக்கு பிடிக்கலை…” பட்டென்ற பதில், 

“ஆஹான்…” என்று குரலில் அத்தனை நக்கல்,

 

“வார்த்தை ஒன்னு சொல்லுது… பார்வை ஒன்னு சொல்லுதே… இதுல எது நிஜம்…?” என்று அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி கேட்க, பெண்ணவளிடம் மீண்டும் ஒரு தடுமாற்றம்… 

“அ..அது…சும்மா தான் பார்த்தேன்…” என்று தலையை திருப்பிக்கொள்ள, 

“பார்த்ததை பார்த்தா அப்படி தெரியலையே… விட்டா கண்ணாலையே ரேப் பண்ணி இருப்ப…” என்றவனை பார்த்து முறைத்தவளை, 

“பின்ன என்ன…? கண்ணால இவ்வளவு நேரம் என்னை நல்லா மேஞ்ஜுட்டு வாய் வேற மாதிரி பேசுது… இப்படி மாத்தி மாத்தி பண்ணுறதுக்கு ஒழுங்கா நடந்துக்கோ… நான் எப்பவும் போல இப்படி இருக்க மாட்டேன் எல்லா நேரமும்…” என்று மிரட்டி விட்டு செல்ல, 

‘இது பேரு லவ்வா…? திமிரு பிடிச்சவன்..’ என்று திட்டியவள் அவன் சென்றபின் தன்னையே திட்டி கொண்டாள் அவனை ரசித்ததற்கு… 

பின் தியாவும் தன் வீட்டிற்குள் நுழைய, அனைத்தும் ஒதுக்கி அழகாக இருந்தது முன்பு போல்… அன்று நடந்த சம்பவத்தின் தடையம் எதுவும் அவள் கண்களுக்கு புலபடவில்லை…

ஆனால் அவை அனைத்தும் அவள் மனகண்ணில் சட்டென படமாக விரிந்தது நொடியில்… தான் யார் என்று சொன்னதும் அதிர்ச்சியில் விரிந்த ஆசிப்பின் கண்கள் இன்னும் அவள் கண்முன் வர, கையை இறுக மூடிக்கொண்டாள்… 

“வந்துட்டியா…? ம்ம்ம்… போய் தலைக்கு குளிச்சுட்டு வா மா… மறக்காம எண்ணை வச்சு குளி…” என்று சமையலறையில் இருந்து வந்த சௌந்தர்யா சொல்ல, 

எதிர்த்து எதுவும் பேச தோண்றாது, அமைதியாக தன் அறைக்குள் நுழைய போனவள், ஹாலின் சோபாவில் நடுநாயகமாக கைகளை இருக்கையில் வைத்து கால் மேல்கால் போட்டு டிவி பார்த்து கொண்டிருந்தவனை கண்டவள் முடிந்த மட்டும் முறைக்க, அதை சட்டென கவனித்தவனும் பதிலுக்கு முறைக்கவே செய்தான்….

‘திமிர் பிடிச்சவன்….’ என்று உள்ளுக்குள் திட்ட, அவனோ மெல்ல வாயசைத்து, 

“போடி…” என்று சொல்ல, பல்லை கடித்தவள் சௌந்தர்யாவின் பொருட்டு அமைதியாக சென்று விட்டாள் முறைப்புடன்… 

அவள் சென்றதும் மகிழனின் அருகில் வந்தவர், “என்ன டா… ஏதாச்சும் பிரச்சினையா…?” என்று கேட்க,

“ஏன் ம்மா அப்படி கேட்குற…?” என்று கவனத்தை டீவியில் வைத்து கேட்க, 

“இல்ல தியா முகமே சரியில்லையே, அதான் கேட்டேன்…” என்று தயங்க, 

அன்னையின் புறம் திரும்பி அமர்ந்தவன், “தியாக்கு என்னை பிடிச்சு இருக்கு ம்மா… ஆனா யோசிக்குறா… முன்னாடி அவள் சந்திச்ச விஷயம் எதுவும் அவ மறக்காம இருக்கா… அதான் பிரச்சினையே… அதை விட்டு வெளிவர மாட்டீங்கிறா… பார்க்கலாம்… எவ்வளவு நாள்னு… டைம் குடுப்போம்…” என்றிட, சௌந்தர்யாவிற்கும் அதுவே சரியென்று பட்டது… 

அடுத்த அரைமணி நேரத்தில் சமையலறை வாசலில் வந்து நின்றவளை பார்த்த சௌந்தர்யா, “வா மா… ஏன் அங்கேயே நிக்குற…?” என்றவர், 

“இந்த குருமாவை டேபிள்ல வை…” என்றவருக்கு மறுப்பேதும் சொல்லாமல் அனைத்தையும் டேபிளில் அடுக்கியவள், அமைதியாக நிற்க, 

சௌந்தர்யா “உட்காரு மா… சாப்பிடலாம்…” என்று தட்டை எடுத்து வைத்தவர்,  மகிழன் புறம் திரும்பி

“வா டா சாப்பிட…” என்று அதட்ட, அன்னையை முறைத்தவாரே எழுந்து வந்தவன் தியாவிற்கு எதிரில் அமர்ந்து,

 

“ஏம்மா உனக்கு என்கிட்ட பாசமாவே பேச வராதா…?” என்று முகம் சுருக்க, 

“இதுவே போதும் உன் மூஞ்சுக்கு…” என்றதில் தியாவிற்கு புரையேறியது சிரிப்பில், 

“பாத்து… பாத்து மா…” என்று தலையை தட்டி கொடுக்க, மகிழன் இருவரையும் முறைத்தபடி உணவை வாயில் அடைத்தான்… 

தியா சற்று நிலையானதும், சௌந்தர்யா மெல்லிய குரலில் “எல்லாம் சீக்கிரம் சரியாகும் டா… மனசுல எதையும் வச்சுக்காத… இவனுக்கு ஓகே சொல்லு எல்லாமே மாறும்… மாத்திருவான்… நடந்தது எல்லாத்தையும் மறந்துருன்னு சொல்ல மாட்டேன்… அது சுலபமும் இல்ல… நம்மளை பிஸியா வச்சிருந்தா மத்தது எல்லாம் பின்னுக்கு போயிரும்… இவன் உன்னை டென்ஷனாவே வச்சு இருப்பான் அதுல மத்தது மறந்துரும் பாரு… என்னை நம்பு மா…”என்று அன்னை தன்னை கிண்டல் அடிக்கவும், 

“என்னை பார்த்தா எப்படி தெரியுது…? ஆஹான்….” என்று முறைத்தவனை பார்த்து தியா முழித்தவள், 

சௌந்தர்யா, “இப்படி கேட்டா உண்மையை சொல்லிருவேன் நீ வெளிய தான் சீன் காட்டுவ உள்ள ஒன்னுமே இல்லாத காலி டப்பான்னு… அப்படி ஓபனா சொல்லிட்டா உனக்கு தான் இமேஜ் டேமேஜ் ஆகும்… சோ… என் வாயை கிளராத…” என்று முறைத்தவருக்கு அத்தனை கோபம் அவன் மேல்… 

அதை அவ்வப்போது வார்த்தையில் காட்டிக் கொண்டிருந்தார் தியா மூழமாக… 

அன்னையின் வார்த்தையில் கண்களை இறுக மூடி திறந்தவன், முனுமுனுத்தபடி உண்ண தொடங்க… 

தியாவிற்கு தன் உணர்வுகளை கட்டுபடுத்துவது கடினமாக இருந்தது… பல வருடம் ஆகி இருந்தது இவ்வாறான வீட்டு உணவை சாப்பிட்டு அதுவும் அன்னை என்று ஒருவர் சமைத்து தான் உட்கார்ந்து சாப்பிடுவது… 

சாஸ்திரி வீட்டில் இருந்து வெளியேறிய பின், அனைத்தும் தான் என்று மாறி போனது தியாவிற்கு… தனிமையில் தைரியம் பழகி கொண்டிருந்தாள்… அனால் இன்று அனைத்தும் மாறியிருக்க, அவளால் அன்னையை நினைக்காமல் இருக்க முடியவில்லை… 

அன்னையின் நினைவில் உணவை அழந்து கொண்டிருந்தவளை கவனித்தவன், டேபிளுக்கு அடியில் தன் காலால் அவளது காலை சீண்ட, பக்கென்று ஆனது தியாவிற்கு… 

முடிந்த மட்டும் காலை உள்ளிளுத்து கொண்டவள் மகிழனை பார்த்து முறைக்க, அவனோ “என்ன அடிக்கடி டிரீம்க்கு போயிற…?” என்று கேட்க, முறைத்து பார்த்தாளே ஒழிய வாய்திறந்து பேசவில்லை… 

ஆனால் மகிழன் அடுத்து பேச வாய்திறக்கும் முன், அவனது ஃபோன் அலர எடுத்து காதிற்கு கொடுத்தான் பார்வையை தியாவின் மேல் பதித்து… 

“ஹலோ…” என்க, எதிர் பக்கம் கூறிய விஷயத்தில் கண்கள் விரிய, 

“அப்படியா…?” என்று கேட்டவன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் வேகாமாக…

தொடரும்…. 

Advertisement