Advertisement

UD-26:

திறந்த வாயை மூடவில்லை அதிர்ச்சியில், “கடவுளே…” என்று நெஞ்சில் கையை வைத்தவன், சட்டென சுதாரித்து வெளியேறிவிட்டான் அவசரமாக… 

இங்கு விசாரணை அறையில் பேந்த பேந்த முழித்தபடி அமர்ந்திருந்தாள் தியா… 

என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தவளின் விளியருகே தெரிந்த மகிழனின் முகத்தை கண்சிமிட்டி பார்த்தவளுக்கு பக்கென்று இருக்க, அவசரமாக அவனிடம் இருந்து தன்னை விலக்கி கொண்டவள், வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து பின்சென்று நின்றவளுக்கு மூச்சு வாங்கியது பதற்றத்தில்… 

ஆனால் மகிழனோ அவள் தள்ளியதும் விலகி கொண்டவன் ஒரு மென்னகையுடன் தன் இதழை துடைத்தபடி, “நல்லாதான் இருக்கு….” என்றதும் தியா, 

“ஹே…. உன்னை…” என்று அவனை அடிக்க கை ஓங்கி கொண்டு அருகில் வர, 

அதை லாவகமாக தடுத்தவன், அவள் கைகளை பின் மடக்கி பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டான் நொடியில்… 

இதை எதிர்ப்பார்க்காதவள், முகம் கோபத்தில் சிவக்க, “விடு … ம்பச்ச்… கையை விடு…” என்று திமிற, 

மகிழனோ அவளது பிடியை மேலும் இறுக்கியவன், தியாவின் முகத்தருகே லேசாக குனிந்து  “போலீஸை அடிக்க கை ஓங்குற… அவ்வளவு தைரியமா…?” என்று கேட்கவும், 

“போலீஸ்னா போலீஸ் மாதிரி நடந்துக்கணும்…. இப்படி சீப்பா இல்ல… நீ எந்த தைரியத்துல கிஸ் பண்ணியோ அந்த தைரியத்துல தான் நான் அடிக்க கை ஓங்கினேன்…” என்று பல்லை கடித்தபடி, அவனிடம் இருந்து கையை உருவி கெள்ள முயற்சித்தாள்… 

முயற்சி முயற்சியாக மட்டுமே இருந்தது அவளுக்கு, மகிழன் அவள் வார்த்தையில் மீண்டும் பார்வையை இவள் இதழுக்கு மாற்ற, கடுப்பாகி போனாள் தியா…

“சீசீசீ…. அசிங்கமாக இல்ல… இப்படி விசாரணைன்னு கூட்டிட்டு வந்து கேவலமா நடந்துக்க…” என்று முகத்தை திருப்பிக்கொள்ள, 

மகிழன் கூலாக, “இல்லவே இல்ல… உண்மைய சொல்ல போன செம்ம திரில்லா, கிக்கா இருக்கு…” என்றவன் மறுகையால் அவள் முகநாடியை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், 

“உன் மேல செம்ம கிரேஸா இருக்கு டி… ஏன்னே தெரியல நீ என்னை மேகனட் மாதிரி உன் பக்கம் இழுக்குற டி…” என்றவன் மீண்டும் அவள் இதழில் புதைந்து போனான்… 

மகிழனின் வார்த்தையில் உரைந்து போனவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் போதே அவனின் செயல் அவளை கோபம் மூட்டியது… 

அதில் அவன் வார்த்தைகள் பின் ஓடிவிட, தன்னை விடுவித்துக்கொள்ள போராடியவளுக்கு அவனது இதழொற்றலை அனுபவிக்க முடியவில்லை… 

இரண்டொரு நிமிடத்தில் தன்னை பிரித்து கொண்டவன் கண்களில் அத்தனை காதல் ஆனால் அதற்கு நேரெதிரே பெண்ணவளின் கண்கள் கனலை கக்கியது… ஆணின் காதலை பார்க்கும் நிலையில் இல்லை… 

வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து, “ச்சீசசீ…” என்று புறங்கையால் வாயை துடைத்து கொண்டவள், 

“நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானே… உன் புத்தியை காட்டிட்ட இல்ல…” என்று கத்த, 

அவளது கோபத்தை ரசித்தபடி மேஜையின் மீதிருந்த கோப்பைகளை கையில் எடுத்துக்கொண்டவன், 

“நீ இதுவரை பார்த்த ஆம்பலைங்க மாதிரி நான் இல்ல டி திமிர் அழகி… சிலநேரம் அதையும் விட மோசமான ஆளு…” என்றபடி தன் கண்ணாடியை ஒற்றை கையால் அணிந்தபடி அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டவன், 

“ரெடியா இரு… சீக்கிரம் வந்து உன்னை அள்ளிட்டு போறேன்…” என்றபடி வெளியேற போக, எரிச்சலாக வந்தது தியாவிற்கு… 

ஏதோ தோன்ற வேகாமாக கேமராவை திரும்பி பார்க்க அது உயிர்பில் இல்லை என்பது அதில் எரியும் வெளிச்சம் இல்லாததை வைத்தே தெரிந்து கொண்டவள் ஒரு பெருமூச்சை விட, 

மகிழன், “அதை நான் எப்பவோ ஆப் பண்ண சொல்லிட்டேன்… தப்பு பண்ணுறவன் எல்லாத்தையும் கரெக்டா பிளான் பண்ணி பண்ணணும் இல்லாட்டி உன்னை மாதிரி தான் மாட்டிக்கணும்…” என்று புன்னகைக்க, 

“நான் என்ன தப்பு பண்ணினேன்…?” என்று முறைத்தபடி கேட்க,

“ம்ம்ம்… உன் ஸ்மார்ட்னேஸ் என் கிட்ட காட்ட முயற்சி பண்ணாத டி… நீதான் மன்சூரை மர்டர் பண்ணினன்னு எனக்கு தெரியும்…” என்று நிமிர்ந்து நின்று சொன்னவனை உறுத்து பார்த்தவள்,

“இல்ல நான் பண்ண….” முடிக்கும் முன்பே,

“என்ன…? நான் பண்ணலைன்னு சொல்ல போரியா…?” பதில் சொல்லது எதிரில் இருப்பவனை பார்த்தபடி இருந்தவளை கண்டு ஒரு புன்னகையை சிந்தியவன்,

“எங்க தப்பு பண்ணினனு யோசி டி திமிர் அழகி…” என்று திரும்பி வெளியேற போனவன்,

“நீயும் ஷிவானியும் சேர்ந்து தான் இதை பண்ணி இருக்கீங்க… நேச்சுரல் டேத் மாதிரி பக்காவா பிளான் பண்ணி இருக்கீங்க… ஐ கேன் ஸ்மெல் இட்…” என்றவன்,

அவளது வெறித்த பார்வையை கண்டு,”ஆனா அதை இங்கவரை கொண்டு வர மாட்டேன் டி… நான் இப்ப பண்ணது தப்புன்னு தெரியும்… ஆனா அழகான தப்பு டியர்…” என்று கண்ணாடியை லேசாக கீழ் இறக்கி அவளை பார்த்து கண் சிமிட்டியவன், 

அடுத்து அவள் திட்ட வாய்திறக்கும் முன், “டேக் கேர் டி திமிர் அழகி…” என்றதோடு வெளியேறிவிட்டான் வேகமாக… 

“இவனை…” என்று கையை முறுக்கி பல்லை கடிந்தவள், கோபத்தை அடக்கியபடி

“ச்சே…” என்று இருந்த நாற்காலியை ஆவேசமாக தள்ளி விட அது பொத்தென்று சரிந்து விழுந்தது அவள் வேகத்தில்…

 

வெளியே வந்தவன் வேகாமாக வெளியேற, பிரவீண் ஓடி வந்து சேர்ந்து கொண்டான் மகிழனுடன்… 

அணிந்திருந்த கண்ணாடியை கழட்டாதவன், “பார்த்துட்டியா எல்லாத்தையும்…?” என்று கேட்கவும், எச்சிலை கூட்டி விழுங்கியவன், 

“லைட்டா சார்…” என்று கண்ணை சுருக்கி இருவிரல் குறுக்கி காட்ட, சட்டென நின்று கேள்வியாக திரும்பி பார்த்து நிற்க, 

பிரவீண், திருட்டு முழியோடு “சாரி சார்… பார்க்கணும் பார்க்கல… நீங்க சொன்ன மாதிரி சிக்கனல் குடுத்ததும் எல்லாரையும் பேசி சரிக்கட்டி வெளியேத்தி நான் கிளம்புறதுக்குள்ள நீங்க பாஸ்டா மூவ் பண்ணிட்டீங்க…” வேகமாக பேசிக்கொண்டே வந்தவன் கடைசியில் மெல்லிய குரலில் இழுக்க, 

“நீ தப்பு பண்ணிட்டு என்னை தப்பு சொல்லுறியா…?” என்று பல்லை கடிக்க, 

“அப்படி இல்ல சார்… “என்று தலையை சொரிய,

 

“சாரி சார்… ஆனா ஒரு நிமிஷம் கூட இல்ல சார்… பார்த்ததும் வெளிய வந்துட்டேன் சார்… அதிகபட்சம் ஒரு ஒருநிமிஷம் இருக்கும் சார்…” என்றதும் அவன் முக பாவனையில் இதழோரத்தில் சிறு புன்னகையை காட்டியவன், திரும்பி நடக்க தொடங்கினான் தன் வண்டியை நோக்கி… 

மகிழன் நகர்ந்ததும் நெஞ்சில் கை வைத்து ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டவன், “அவன் அவன் எப்படி எல்லாமோ லவ் பண்ணிட்டு சுத்துறாங்க… ஆனா இவரு வித்தியாசமா லவ் பண்ணுறாருயா…” என்ற புலம்பலோடு மகிழனை நோக்கி ஓடினான் வேகாமாக… 

இரவு உணவு மேஜையில் அமர்ந்திருந்த மகிழனின் தட்டில் சப்பாதியை வைத்தபடி, “தியா விஷயம் என்னாச்சு டா…?” என்று கேட்க, 

“ம்ம்ம்… ஏதோ அப்படியே போகுது… சீக்கிரம் வெளிய எடுத்தரலாம்…” என்றபடி உணவை உள்ளே தள்ள, 

தமிழ்செல்வன், “ஏதாச்சும் கேஸாகுமா…?” 

“இல்ல… ஆசிப் கேஸ்ல மட்டும் தான் இன்வால்வ் ஆகி இருக்கா… அதுவும் தற்காப்புக்காக தான் அட்டேக் பண்ணி இருக்கா சோ அவ பேருல கேஸாகாது… அதுவும் இல்லாம அவன் ஏற்கனவே தியா கிட்ட தப்பா நடந்துக்கிட்ட ஆதாரமும் இருக்கு… சோ வெளிய வந்துருவா…” என்றிட, 

“செம்ம போல்டு டா…” என்ற தமிழ்செல்வனுக்கு, 

“ம்ம்ம்…” என்று தலையை ஆட்டி ஆமோதித்தவனுக்கு மனம் வலிக்கதான் செய்தது அவள் கடந்து வந்த பாதையை நினைத்து….

சௌந்தர்யாவிற்க்கும் அந்த நினைவுதான் ஓடியது உள்ளுக்குள், “பேசிட்டியா…? இல்ல இனிதான் பேசணுமா…?” என்று அவர் கேட்கவும்,

“இன்னைக்கு உறுதியா சொல்லாம சொல்லிட்டேன்…” என்றபடி கூலாக உணவை ருசிக்க, புரையேறியது தமிழ்செல்வனுக்கு…

அவன் தலையை தட்டி தண்ணீரை குடிக்க குடுத்த அதிர்ச்சி தான் மகிழனின் வார்த்தையில்… 

“இன்னைக்கா…? என்ன டா சொல்லுற…?” என்று அன்னையின் கேள்விக்கு, 

நிமிர்ந்து பார்த்தவன், “ம்ம்ம்… இன்னைக்கு தான்… விசாரிக்க போனேன் கேஸ்காக… அப்படியே சொல்லிட்டேன்…”  என்று தோளை உலுக்கி கொள்ள, 

சௌந்தர்யா, ‘என்ன பிறவி…” என்பதை போல் பார்க்க, தமிழ்செல்வன் தன் தலையில் அரைந்து கொண்டான்…

“ஏன் என்னாச்சு…?” என்றபடி இருவரையும் மாறி மாறி பார்க்க, தமிழ்செல்வன்

“லூசா டா நீ… லவ் சொல்ல ஒரு நேரம் காலம் வேண்டாம்… முக்கியமா சொல்லற இடம்னு ஒன்னு வேண்டாமா…?” என்று முறைத்த அண்ணனை பார்த்து, 

“காதல் உண்மையா இருந்தா அது சொல்லுற இடமும் காலமும் எப்படியா இருந்தாலும் பிரச்சினை இல்லை… அதுவும் இல்லாம நான் ஏற்கனவே லவ் சொல்லிட்டேன்… இன்னைக்கு அதை இன்னும் உறுதி பண்ணிட்டு வந்து இருக்கேன்…” என்று கையை ஆட்டி சிவாஜி போல பாவனை காட்டி சொல்லவும்,

அவன் தலையில் தட்டிய சௌந்தர்யா, “உன்னையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியலை…” என்று சலித்தபடி இருக்கையில் அமர, 

“ஏன் ம்மா… என்ன ஆச்சு…?” என்று கேட்டவனை பார்த்து முறைத்தவர், தமிழ்செல்வனிடம்

“இவனுக்கு கல்யாணம் ஆகும்…?” என்று சந்தேகமாக கேட்க, 

தட்டில் இருந்த கடைசி வாய் உணவை உண்டபடி, “வாய்ப்பு கம்மி தான் ம்மா…” என்று எழுந்துக்கொள்ள, மகிழன்

“அடேய் அண்ணா…” என்று பல்லை கடிக்க, சௌந்தர்யா அவன் தலையில் ஒரு கொட்டை வைத்து, 

“சாப்பிட்டு முடிச்சுட்டு இடத்தை காலி பண்ணு முதல்ல… உன்னை பார்த்தாலே கோபமா வருது…” என்று திட்டிவிட்டு செல்ல, 

குழம்பிய முகத்துடன், “இப்ப என்ன பிரச்சனைன்னு இவங்க இவ்வளவு பண்ணுறாங்க…? என்னை மாதிரி ஒரு நல்ல பையனை எங்கையாச்சும் பார்க்க முடியுமா…?” என்று தோளை உலுக்கியபடி தன் தட்டில் தலையை குனிந்து கொண்டான் பிஸியாக…

இங்கு சிறையில் தறையில் படுத்திருந்த தியாவிற்கு உள்ளம் ஒரு நிலையில் இல்லை, “எப்படி எங்க தப்பு பண்ணினேன்… எப்படி கண்டு புடிச்சான்….?” எத்தனை யோசித்தும் எதுவும் பிடிபடவில்லை…

யோசித்தாள் தான் அன்றைய நாள் முழுவதும் யோசித்தாள் ம்கூம் ஆனால் தெரியவில்லை… அன்றைய நாளின் நினைவில் மீண்டும் ஒரு முறை மூழ்கி போனாள் தியா…

“என்ன சார் இவ்வளவு ஷாக்…? நான் ஏன் இங்க வந்தேன்… அதுவும் இந்த நேரத்துல இங்க ஏன் வந்தேன்னு தானே பார்க்குறீங்க…?”என்று அமர்திருந்த இருக்கையின் சாய்வில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவள்,

“பெருசா எதுவும் இல்ல சார்… உங்க கடைசி பயணத்தை நான் என் கையாள தொடங்கி வச்சு, அதை கண்ணு குளிர பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…” என்றதில் கண்கள் விரித்தவன், பேச முயற்சிக்கவும்.

“ரொம்ப எல்லாம் முயற்சி பண்ண வேண்டாம்… ஏன்னா… “ என்றவள் தன் பேச்சை நிறுத்தி அவன்புறம் குனிந்து, மெல்லிய குரலில்

“உன்னால பேச முடியாது… நீ பேசணும்னு முயற்சி பண்ணும் போது எல்லாம் உனக்கு இதையம்ன்னு ஒண்ணு இருக்கே அங்க வலின்னு ஒண்ணு இருக்கு அது கூடிக்கிட்டே போகும்…அதுக்கு காரணம் என்ன தெரியுமா…?” கேள்வியோடு அவன் முகத்தை பார்க்க, அப்பட்டமான பயம் மன்சூரின் முகத்தில் தெரிந்தது தியாவை காணக்காண…

“கண்டிப்பா தெரியாது தான்… சோ நானே சொல்லிறேன்… நீ ஸ்மக்லிங் பண்ணியே ஒரு போதை மருந்து… அதை கொஞ்சம்… ரொம்ப கொஞ்சமா மாத்தி உன் உடம்புக்குள்ள ஏத்திட்டேன்… அது பண்ணுற வேலை தான் இது எல்லாம்…” மன்சூரின் உடலை பார்வையாள் சுட்டிகாட்டி பேசியவளின் முகத்தில் அத்தனை நக்கல்…. மீண்டும் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவள்,

மன்சூர் சாவின் பயத்தோடு பின் நின்றிருந்த ஷிவானியை பார்க்க, அவளோ “என்ன பேபி பார்குற…? உனக்கு அந்த டிரக் குடுத்ததே நான் தான்… நீ பேசணும்னு நினைச்சு உன் பாடியை ஸ்டிரெயின் பண்ண பண்ண உன் ஹார்ட்க்கு பிரஷர் ஏறும்…” என்று நிறுத்த,

தியா, “அப்புறம் என்ன ஹார்ட் அட்டாக் தான்… அப்படியே இல்லைனாலும், இப்ப நான் அடுத்த டோஸ் குடுக்குறதுல தானாவே வலிப்பு வந்து உன் உயிர் போகதான் போகுது…” என்று தோலை உலுக்க,

மன்சூர்க்கு என்ன செய்வது, ஏன் தியா இவ்வாறு செய்கிறாள், எவ்வாறு தப்பிப்பது என்று எதுவும் தெரியவில்லை… வார்த்தைகள் வாய்வரை நின்றாலும் எதையும் கேட்டிட முடியவில்லை…

மன்சூரின் நிலையை புரிந்து கொண்டாள் போலும் தியா,”என்ன வார்த்தை எல்லாம் வாய்வரை நிக்குது போல… ஏன் இப்படி பண்ணுறேன்னு தெரியணும் அப்படிதானே…?”என்று கேட்டவள், அவன் முகத்தை பார்த்தவளின் விழிகளில் இப்பொழுது முன்பிருந்த நக்கல் இல்லை, கேலி இல்லை மாறாக வெறி இருந்தது வதம் செய்யும் காளியின் கோபம் இருந்தது…

“ஏன்னா… உன்னை பழிவாங்க என் பதிமூணு வயசுல இருந்து காத்து இருக்கேன்…என்ன பார்குற…? இத்தனை வருஷம் ஏன்னு யோசிக்குறியா…?” என்று அவன் முகம் பார்த்து கேட்க,

எங்கோ புரிவது போல் இருந்த மன்சூரின் விழிகள் அவசரமாக தியாவின் முகத்தை ஆராய, “என்ன கண்டு புடிச்சுட்டியா…?” கேட்டவள் எழுந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு குப்பியை எடுத்தபடி,

“உன் புத்தி சொல்லுற மாதிரி… நானே தான்… உன் பொண்ணு… திவ்யதர்ஷினி…” அவன் முகத்தை பார்த்தபடி மது கோப்பையில் கலக்க,

மன்சூர் உள்ளுக்குள், ‘இவ எப்படி இங்க…? எப்படி அங்க இருந்து வந்தா…? ‘ என்ற எண்ணம் தான் வந்தது…

“கண்டிப்பா நீ என்னை பார்த்து சந்தோஷ் பட மாட்டான்னு தெரியும் எனக்கு… எப்படி தப்பிச்சான்னு தான் உன் மூளை யோசிக்கும் கரெக்டா…?” என்று கேட்டபடி கோப்பையுடன் அவன் அருகில் அமர்ந்தவள் அவன் முக மாற்றங்களை வைத்தே தான் சொன்னது உண்மை என்று புரிந்து கொண்டாள்…

“ஆமான்னு உன் மூஞ்சியே காட்டி கொடுக்குதே…” என்று இகழ்ச்சியாக ஒரு புன்னகையை சிந்தியவள்,

“உலகத்துல உன்னை மாதிரி மிருக பிறவி இருக்கும் போது சில தெய்வ பிறவிகளும் இருக்கும்னு தெரிஞ்சுகோ…” பேசியபடி அவன் வாயில் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ள, எத்தனை முயன்றும் மன்சூரால் அவளை தடுக்கவும் முடியவில்லை,மதுவை துப்பவும் முடியவில்லை… உடல் அவன் பேச்சை கேட்க மறுத்தது போதை மருந்தின் வீரியத்தில்….

தியா மதுவை குடிக்க வைத்தபடி, பேச்சை தொடர “சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம நீ என்னை சாக்கடைல தள்ளிட்டு போன்ன… ஆனா ஒருத்தர் என்னை காப்பாத்தி படிக்க வச்சு என்னை பாதுகாப்பா பார்த்துகிட்டாரு… ஒரு அப்பாவா தெய்வமா இருந்தாரு…” முழு கோப்பையும் குடிக்க வைத்தவள்,

படுக்கையில் இருந்து எழுந்தபடி, “உனக்கு பொண்ணா பொறந்ததை தவிர வேற எந்த பாவமும் நான் பண்ணலை…எதுக்கு இப்படி பண்ணணு கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்… ஏன்னா…. நீ தான் மனுஷ பிறவியே இல்லயே… உன் பொண்டாடியை கொன்னவன், சின்ன பொண்ணுன்னு பார்க்காம காசுக்காக பொண்ணை வித்துட்டு போன்ன நீ, அப்படிபட்டவன் கிட்ட கேள்வி கேட்குறது முட்டாள்தனம்… உன் கிட்ட அப்படியே ஏன் இப்படி பண்ணினனு கேட்டாலும் நியாயமான பதில் இருக்காது…. எதுவா இருந்தாலும் நான் கேட்க விருப்ப படல….” என்று பல்லை கடித்து கையை முறுக்கியவளை பார்க்க மன்சூர்க்கு உண்மையில் காளியை போல தான் தோன்றியது… 

“நீ பண்ண எல்லாத்துக்கும் ஒரே தண்டனை உன் சாவு தான்… அதும் நான் துடிச்ச மாதிரி நீயும் துடிச்சு துடிச்சு சாகணும்… நான் அனுபவிச்சா வழியை நீயும் அனுபவிக்கணும்…அதைநீ  இப்ப அனுபவிப்ப… அதை நான் பார்ப்பேன்… அதுக்காக மட்டுமே இத்தனை வருஷம் காத்து இருந்து இருக்கேன்…” என்றவள் கையை கட்டியபடி அவனையே பார்த்திருக்க,  

மன்சூர்க்கு உடல் எல்லாம் பதறியது, இனி அடுத்தது என்ன செய்வது என்று புரியவில்லை, விழிகளை மட்டுமே உருட்டி பார்க்க முடிந்தது அவனால… அதில் விழுந்த ஷிவானியை கெஞ்சும் பார்வை பார்த்து வைக்க,

நக்கலாக சிரித்தவள்,”என்னை போய் பார்க்குரியே பேபி… உன் சாவுல தியாக்கு எவ்வளவு நிம்மதி இருக்கோ அதே அளவுக்கு எனக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாமே இருக்கு…. என் வாழ்க்கையை அழிச்ச நல்லவன் நீ… அப்ப நான் எப்படி உன்னை காப்பாத்துவேன்…?” என்று உதட்டை பிதுக்கி அப்பாவி போல் கேட்டவளை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது மன்சூரால்…

பெண்கள் இருவருக்கும் புரிந்து தான் இருந்தது, ‘இவன் திருந்தும் ஜென்மம் கிடையாது என்று… தியா மன்சூரிடம் நியாயம் கேட்க நினைக்கவில்லை… செய்த தப்பை உணர வேண்டும் என்று நினைக்கவில்லை… பழிவாங்க மட்டுமே நினைத்தாள்… தண்டனை தர எண்ணினாள் அவ்வளவே தான்…. 

என்ன செய்வது என்று சுத்தி சுத்தி பார்வையை அலையவிட்டவனுக்கு உடலில் நிகழும் மாற்றங்களை உணரமுடிந்தது சில மணித்துளிகளில்… அதில் வேக மூச்செடுக்க, தியாவை பார்த்தான் திணறலோடு,

“என்ன சார் சாக போறது தெரியுதா..? பயமா இருக்குதா…? என்ன பண்ணலாம்..?” என்று இடுப்பில் ஒரு கையைவைத்தபடி பின்னங்கழுத்தை தேய்த்தபடி அருகில் வந்து அமர்ந்தவள், 

மன்சூர்க்கு குடுத்த மதுக்கோப்பையை அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரால் துடைத்தபடி, “ஒண்ணு செய்யலாமா தனியா போக கஷ்டமா… ஒரு மாதிரி பயமா இருக்கும்ல அதுனால உன் பையனை உன் பின்னாடி அனுப்பி வைக்குறேன் துணைக்கு… என்ன ஓகேயா…?” என்று கேட்டபடி மது கோப்பையை மேஜை மீது வைத்தவள், திரும்பி மன்சூரை பார்க்க,

அவனோ ‘இல்லை…’ என்பது போல் தலையை ஆட்ட முயற்சித்து கொண்டிருக்க, பல்லை கடித்தவள்,

“உன் பையனதும் வலிக்குதோ… அப்ப என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு… ? பையன்னா உயிர்ல உனக்கு… கவலை படாத… நீ போனதுக்கு அப்புறம் பாவம் அவன் மட்டும் தனியா இருந்து என்ன பண்ணுவான் சொல்லு…? ரொம்ப நாள் எடுத்துக்காம சீக்கிரம் அனுப்பி வைக்குறேன்… இப்ப நீ சாகு…?” என்றவள், எழுந்து படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையை இன்னும் பின்னே தள்ளி போட்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் கைகளை கட்டியபடி….  

மன்சூர், ‘அய்யோ… அவனை பத்தி தெரியாம இப்படி பண்ண போறாளே… பாவம் டி அவன்… பைத்தியக்காரி, அவன் என்ன எல்லாம் பண்ணான்னு தெரியாம பேசுறா… என்ன பண்ணுவேன்னு தெரியலையே… ஆஆஆஆ…’ என்று எண்ணியதை சொல்ல முடியாமல் திண்ணற, அது அவன் இதய துடிப்பை எகுற செய்த நேரம் கையும் காலும் ஒரு பக்கம் இழுத்துக்கொள்ள தியாவின் கண்களை பார்த்தபடி, தரையில் விழுந்தவன் வலிப்பில் உயிரையும் விட்டிருந்தான் சில மணித்துளிகள் போராடிய நிலையில்….

மன்சூரின் விழிகள் தியாவின் முகத்திலே குத்தீட்டியாய் நிற்க, தியாவின் விழிகள் மன்சூரின் விழியோடு நின்றது நிலையாக… அவன் நிலை அடங்கிய பின்பே, பழையதை நினைத்து அமர்திருந்த தியா நிதானமான நிலைக்கு வந்தாள் ஒரு பேரு மூச்சுடன்…. 

இப்பொழுதும் அதே பெருமூச்சுடன், விரல் நேகத்தை கடித்தவளுக்கு அப்பொழுது தான், உதட்டின் ஈரதன்மை காலை நடந்த சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வந்தது கண்கள் விரிய….

 

சட்டென இதயம் படபடவென்று துடித்தது மகிழன் செய்த காரியதால்… ஆச்சு சம்பவம் நடந்து முடிந்து காலை போய் மதியம் மறைந்து மாலை மங்கி இரவு கவிழ்ந்து விட்டது ஆனால் அவன் தந்த ஒற்றை இதழ் முத்தம் அவளை அத்தனை பாடாய்படுத்த தொடங்கியது அப்பொழுது தான்… 

“ச்சே… இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும்… இவனை எல்லாம் நம்பவே கூடாது…” என்று புலம்பியபடி மீண்டும் உதட்டை தொட்டு பார்க்க தியாவிற்கு மன்சூரின் நினைவுகள் பின்னுக்கு சென்றிருக்க, மகிழனின் நினைவில் குப்பென்று ஆனது… 

நொடிகள் நிமிடங்கள் மணி துளிகள் பல கடந்தாலும் மகிழனின் முதல் முத்தம்… தியாவின் வாழ்வில் கிடைத்த முதல் காதல் பரிசு அவளவனின் திடீர் முத்தம் தியாவை புது உணர்வை உணர செய்தது உண்மையே… 

என்ன தான் சண்டையிட்டாலும் நடந்த நிகழ்வை நினைக்கையில் தியாவிற்கு வெட்கமும் ஆசையும் முகத்தில் வந்து போனது சட்டென்று… 

“ம்ம்ம்… இரெண்டு நாளா சுத்தமா கண்டுக்காம இப்ப வந்து கிஸ் பண்ணா எல்லாம் சரியா போச்சா…?” என்று உள்ளம் சிணுங்க, உதட்டை சுழித்து கொண்டவளுக்கு அப்பொழுது தான் தன்னையே உணர்ந்தாள்… 

இது… இது நான் இல்லையே… இந்த உணர்வு இந்த எண்ணம் இந்த செய்கை அணைத்தும் புதிதல்லவா என்ற அதிர்ச்சி… படுத்திருந்தவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள்… 

‘இவன் என்னை மொத்தமா மாத்த முயற்சி பண்ணுறான்… வேண்டாம் தியா… இது நல்லதுக்கு இல்ல…’ என்று யோசித்தவள், 

‘இன்னும் நீ எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்…? நீ நினைச்ச மாதிரி எல்லாரையும் பழி வாங்கிட்ட இதுக்கு அப்புறம்…?’ என்ற கேள்வியில் முகம் கசங்க தலையை பிடித்துக்கொண்டாள்… 

அன்று முழுவதும் உள்ளம் கிடந்து குழம்பி தவித்தது… அடுத்து மகிழனை காணும் வரை… விசாரணை அறையில் அமைதியாக தலையை தாங்கிய படி அமர்ந்திருந்தாள் மகிழனை நினைத்து… 

அறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, தலையை நிமிர்த்தாது கண்களை மட்டும் உயர்த்தி பார்த்தாள்… பார்வையில் அத்தனை கூர்மை… 

“மேடம் சரியா தூங்கலை போல….?” என்று கேட்டபடி அவன் இருக்கையில் அமர, பதிலில்லை அவளிடம் ஆனால் அதற்காக முறைப்பும் இல்லை… 

ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைந்துக் கொண்டிருந்தது தியாவிற்கு… ஒன்று உடைகிறது என்றால் வேறேதோ ஒன்று உருமாறி பெரிதாக உருவம் பெற்று கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது…

“என்ன மேடம் பார்வை எல்லாம் பலமா இருக்கு…?” என்றவனுக்கு பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து அமர்ந்தவள் கைகளை கட்டி கொண்டு அவனையே நேர் பார்வையாக பார்த்திருந்தாள்… 

கோபம் இல்லை ஆராய்ச்சி இல்லை வெறுப்பு இல்லை காதல் இல்லை பின் எதுவென்று மகிழனுக்கு உண்மையில் புரியவில்லை… 

“கேட்ட கேள்விக்கு பதில்…?” என்று மீண்டும் கேட்டவனுக்கு ஏனோ அந்த பார்வையை சில நொடிகளுக்கு மேல் எதிர்கொள்ள முடியாமல் போக, லேசாக திணறினான்… 

அதை தியா புரிந்து கொண்டது போல் கண்ணாடி திரைக்கு பின் இருந்த பிரவீணுக்கு புரிந்தது.. அப்பொழுது அவன் மண்டைக்குள் சட்டென, 

காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட 

போர்களத்தில் பூக்கள் பறிப்பான்

காலையும் மாலையும் படிக்குமுன்னே  இன்று

காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்

காவல் காரனை இருந்த உன்னை

இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

என்று லேசாக முனுமுனுத்தபடி டேபிளை பென்னால் தட்டி கொண்டே சுழல் நாற்காலியில் அங்கும் இங்கும் ஆடியபடி வேடிக்கை பார்க்க, அருகில் இருந்த மற்ற காவலர்கள் திரும்பி ஓர் பார்வை பார்க்க, 

பிரவீண், “என்னை பார்த்தது போதும்… விசாரணை நடக்குறதை பாருங்க…” என்று கட்டளையிட, ஒன்றும் புரியாமல் தலையை திருப்பி கொண்டனர் அமைதியாக… 

மகிழன் உள்ளுக்குள், ‘என்ன பார்வை டா சாமி…’ என்று இருபுருவம் தூக்கி மூச்சை இழுத்து விட்டவன் தொண்டையை செருமி கொண்டு, 

“சம்பவம் நடந்த அன்னைக்கு ஏன் நீங்க போலீஸை கூப்பிடலை…?” என்று கேட்க, புருவம் சுருக்கியவள் தன் பார்வையை மாற்றிக்கொண்டு, 

“புரியலை…” என்றவளுக்கு உண்மையில் புரியவில்லை,’அதான் போலீஸ் வந்துச்சே… அப்புறம் எதை சொல்லுறாங்க…?’ என்று குழப்பம்… 

“ஆசிப் தப்பா நடந்துக்க முயற்சி பண்ண நேரம் நீங்க ஏன் போலீஸை கூப்பிடலைன்னு கேட்டேன்…?”  என்ற கேள்வியில் லேசாக முறைத்தவள் பின் கேவலமான ஒரு பார்வையை பார்த்தபடி, 

“பாம்பு கடிக்க வந்தா அடிச்சு போட்டு தப்பிக்க பார்ப்பீங்களா இல்ல எல்லாரையும் கூப்பிட்டு என்னை பாம்பு கடிக்க வருதுன்னு சொல்லிட்டு இருப்பீங்களா சார்…?”என்று அவனிடம் திருப்பி கேள்வியை கேட்க, 

மூச்சை இழுத்து விட்டவன், “நீங்க சேர்ல உட்கார்ந்து இருந்தீங்க நான் உள்ள வரும் போது…” கேள்வியாக தியாவை பார்க்க, 

அவளும், “ஆமா….?” என்க, 

“ஆசிப் அடிச்சு மயக்கம் வர நிலைக்கு போனதும் ஏன் போலீஸ்க்கு சொல்லல…? சாவகாசமா சேர்ல உட்கார்ந்து இருந்தீங்க… ஏதோ ஆசிப் கிட்ட பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு…  என்ன பேசிட்டு இருந்தீங்க..? கொலை செய்யுற நோக்கம் ஏதாச்சும் இருந்துச்சா…?” என்று கேட்கவும் பல்லை கடித்தவள், 

“இல்ல… அப்பதான் அவனை அடிச்சுட்டு உட்கார்ந்தேன்… என் கைலையும் ரத்தம் வந்துட்டு இருந்துச்சு… கை வலில இருந்தேன்… கோபம் வேற… இப்படி நடந்துகிட்ட அவனை நாலு வார்த்தை நல்லா கேட்கணும் நினைச்சு பேசினேன்…” என்றவளின் பார்வை வேறு கதை சொல்லியதை மகிழன் புரிந்து கொண்டான் நடந்தது என்னவென்று அறிந்ததால்… 

பின் மகிழன் ஷிவானியை பற்றி கேட்க, “ரெண்டு மூணு டைம் பிஸினஸ் பார்ட்டில பார்த்திருக்கேன் மன்சூரோட… அவ்வளவு தான்…” என்றவளின் பார்வையை கூர்ந்து பார்த்தவன், 

“அவங்க ரிலேஷன்சிப் பத்தி ஏதாச்சும் தெரியுமா…?”

“தெரியாது… ” 

“ஷிவானி மன்சூரை கொலை செய்ய வாயிருக்கா…? 

“தெரியாது…” 

“ம்ம்ம்… “என்று அமைதியாகி போனவனின் கண்கள் கூர்மையாக எதையோ யோசித்தவன் சில நொடிகளுக்கு பின் நிமிர்ந்து பார்த்தான் தியாவை… 

“அந்த ஸ்மக்லிங் பத்தி என்ன தெரியும்…?” என்ற கேள்வியில் புருவம் சுறுக்கினாள்… 

தொடரும்… 

Advertisement