Advertisement

UD-25:

“உங்க உண்மையான பெயர்…?” பொதுநல வக்கில் கேட்ட கேள்விக்கு தயங்கியவளுக்கு என்ன தோன்றியதோ சட்டென,

“தியா… தியா மட்டும் தான்…” என்ற நிமிர்ந்த பதில்…

“ஆசிப்பை உங்களுக்கு எப்படி தெரியும்…?” ஒருபெருமூச்சுடன்,

“நான் வேலை பார்க்குற கம்பெனியோட எம்டி…”

“எம்டி அப்படினா எதுக்கு அவர் உங்க வீட்டுக்கு வந்தாரு…? அவ்வளவு நெருக்கமா…?” என்ற கேள்வி தியாவோடு சேர்த்து மற்றொரு ஜீவனுக்கும் கோபத்தை தூண்டியது…

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்… முறைக்க கூடாது…” என்று தியாவை பார்த்து எச்சரிக்கை செய்ய, நீதிபதியின் புறம் திரும்பியவள்,

“சார்… அவர் எனக்கு எம்டி தான்… ஆனா அவர் என் கிட்ட பல தடவை தவறா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காங்க… நான் ஒத்துக்கலை… அதே மாதிரி தான் நேத்தும்… வீட்டுக்கே வந்துட்டாங்க… எல்லை மீறி நடந்துக்கிட்டாங்க… என்னை காப்பாத்திக்க வேண்டி இருந்தனால, அடிச்சேன்… அவ்வளவு தான்…” என்று கூற பொதுநல வக்கீலுக்கு ஒருமாதிரி ஆகிவிட, வார்த்தையை விட்டார்…

“அதெப்படி நீங்க இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க…? தப்பா நடந்துக்க வந்தார்னு..? பல தடவை தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினதா சொல்லுறீங்க… இதை பற்றி யார்கிட்டையாச்சும் சொன்னீங்களா..?” என்ற கேள்வியில் பல்லை கடித்தவள்,

“இல்ல சொல்லல…” என்க,

“ஏன் சொல்லல…?” என்று எதிர்கேள்வி வரவும்,

“நான் இருந்த பொஸிஷன் சொல்ல விடலை… அதுவும் இல்லாம யார் கிட்ட சொல்ல முடியும்…? என்னோட எம்.டி… சோஸைடில பெரிய ஆளு… எல்லார் கூடையும் லிங்க் இருக்கு… என்னனு போய் சொல்ல முடியும்…? அவங்க பவர் யூஸ் பண்ணி என்னை ஒன்னுமில்லாம ஆக்கி இருப்பாங்க…” என்றவளின் வார்த்தை நூறு சதவீதம் உண்மையே…

“சரி… அப்ப வேற வேலையை பார்த்து போயிருக்கலாமே…?” என்று நிறுத்த,

“எனக்கு இந்த வேலை பிடிச்சு இருந்துச்சு… எம்டி பிரச்சினை பண்ணாலும் வேலைல எனக்கு எந்த தொல்லையும் தரலை…” என்றவளுக்கு ஏனோ நெருப்பில் நிற்பது போல் ஓர் உணர்வு…

“ஏன் அப்படி…? நீங்க ஏதாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டீங்களா வேலைக்காக…” என்று இருபொருள் பட கேள்வியை எழுப்ப,

“சார்…” என்று பல்லை கடித்தவள், அவரின் தகுதியை உணர்ந்து,

நிதானமாக, “நாங்க நேர்ல பார்க்கும் போது தான் எனக்கு இந்த பிரச்சினை வந்தது… அவர் கம்பெனி பக்கம் அதிகம் வந்ததே இல்ல… ரொம்ப கம்மியா தான் வந்திருக்காரு… அதுனால எப்பவாச்சும் வர பிரச்சினை தானேனு விட்டுட்டுடேன்…” என்றவள்,

“உங்க பாஷைல அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன்…” என்று வார்த்தையால் கொட்டு வைக்க,

முறைத்து பார்த்தவர், “அப்படின்னா இப்ப மட்டும் எதுக்கு அவங்களை தாக்குற அளவுக்கு அதுவும் பிழைப்பாரா மாட்டாரான்னு அளவுக்கு அடிக்கணும்…?”

கடுப்பாக வந்தது தியாவிற்கு இவரது கேள்வியில், “ம்ம்ம்… சார்… அவர் என் வீட்டுக்கு வந்துட்டாரு… இதுவரை இப்படி ஆனதில்லை… வந்ததும் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க… தடுத்து பார்த்தேன் முடியலை… சோ கைக்கு சிக்குன கண்ணாடி கிளாஸால அடிச்சேன்… மறுபடியும் நெருங்க முயற்சி பண்ணதால என்னை காப்பாத்திக்க வேண்டிய நிலைமைல திரும்ப திரும்ப அடிச்சேன்…” என்று கண்கள் சிவக்க கத்தியவளை பார்த்த அனைவருக்கும் ஒருமாதிரி ஆகிவிட, பொதுநல வக்கீல் நீதிபதியின் புறம் திரும்பி,

“மை லார்ட்… இவங்க சொல்லுறது எந்த அளவுக்கு உண்மையா இல்லையான்னு விசாரிக்கணும்… அதுக்கு நீங்க கால அவகாசம் குடுக்கணும் மை லார்ட்…” என்று கேட்கவும்,

ஒருபெருமூச்சுடன், “பதினைந்து நாள் ரிமேன்டுல வச்சு விசாரிக்க உத்தரவிடுறேன்…” என்று முடித்துக்கொள்ள, தியாவிற்கு ஆயாசமாக வந்தது…

ஆனால் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை… அமைதியாக இறங்கி வெளியே வந்து நின்றுக்கொள்ள அவளுக்கு அருகில் ஒரு காவலரும் வந்து நின்றார்…

சில பல நிமிடங்கள் கழித்து அங்கு வந்த மகிழன், காவலரிடம் கண்ணை காட்ட புரிந்து கொண்டவர், சற்று விலகி போய் நின்றுக்கொள்ள, மெல்லிய குரலில்

“தியா…” என்று அழைக்க, பதிலில்லை அவளிடம்…

“தியா…” என்று மீண்டும் அழைத்தவன் குரலில் கடினம் கூடி இருந்தது…

அப்பொழுதும் அசையாது எங்கோ பார்த்து நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன் பல்லை கடித்து, “திமிர் பிடிச்சவளே… உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்…” என்றுவிட்டு விலகிவிட, அப்பொழுதும் அசையாது தான் நின்றாள் தியா…

வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளே உள்ளம் கொதித்து கொண்டிருந்து…

அடுத்த அரைமணி நேரத்தில் ஜெயிலில் அவளுக்கென்று ஒதுக்கிய அறையில் நின்றிருந்தாள் தியா…

அந்த அறையை சுற்றி பார்த்தவளுக்கு விரக்தியாக ஒரு புன்னகை மட்டுமே…

“இன்னும் எவ்வளவு தான் ம்மா நான் சந்திக்கணும்…” என்று முனுமுனுத்தவளுக்கு அடுத்து வந்த நினைவுகள் அனைத்தும் மகிழன் மட்டுமே…

மறுநாள் விடியல் யாருக்கும் காத்திறாமல் உதித்தது சூரியன்… தியாவை விசாரணை என்று ஒரு அறையில் உட்கார செய்திருந்தனர்…

அவளுக்கு தெரிந்தது இது அனைத்தும் ரெக்கார்ட் செய்யபடும் என்று… கேமராவை பார்த்தாள் அது ஆன் செய்திருப்பது தெரிந்தது அதில் எரிந்த விளக்கின் ஒளியில்…

யாரு வருவார், என்ன கேட்பாரு, என்ன ஆகும், அடிப்பார்களா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளின் விளிகள் இரண்டும் சுருங்கியது…

“என்ன மேடம் சௌக்கியமா…?” என்று கேட்டபடி எதிரில் இருந்த நாற்காலியில் அமர, தியாவிற்கு எரிச்சலாக இருந்தது…

பதில் கூறாமல் முறைத்துக்கொண்டே இருந்தாள் எதிரில் இருப்பவனை பார்த்து…

“சொல்லுங்க மேடம்… எப்படி இருக்கீங்க…?” என்று தன் கன்னத்தை தேய்த்தபடி பல்லை இழித்தவன்,

“என்னை நியாபகம் இருக்கா…?” என்று கேட்கவும், நிமிர்ந்து கேமராவை ஓர் பார்வை பார்த்தவள்,

“ஏன் நியாபகம் இல்லாம… அந்த ஆசிப் கூட சேர்ந்து நீங்களும்தானே அன்னைக்கு என்கிட்ட அடி வாங்குனீங்க…” என்று சாதாரணம் போல பாவனை காட்டி சொல்லவும் வந்ததே கோபம்…

“ஏய்… என்ன திமிரா…?” என்று டேபிளை தட்டி கத்த, இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்தவள்,

“ஆமா திமிரு தான்… அதுக்கு என்ன இப்ப…?” என்று புருவம் உயர்த்திக் கேட்க,

“ஏய்ய்… நீ என்ன உள்ள பிக்னிக்கு வந்ததா நினைப்பா…? ஒருத்தன கொலை பண்ண முயற்சி செஞ்சதுக்கு அரெஸ்ட் பண்ணி வந்திருக்க… நான் நினைச்சா உன்னை என்ன வேண்ணும்னாலும் பண்ண முடியும்…” என்று கத்த,

“நான் என்ன லூசா அது கூட தெரிஞ்சுக்காம இப்படி உட்கார்ந்து இருக்க… போலீஸ்னு சொல்லிட்டு பெரிய பொறுக்கிங்களுக்கு அள்ளகை வேலை பார்த்து அந்த ஆசிப்போடு சேர்ந்து என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு அதுக்கு அடியும் வாங்குன உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா… தப்ப நடந்துக்க முயற்சி பண்ணான்னு கொல்லுற அளவுக்கு போன எனக்கு உன்னை விட திமிரும் தைரியமும் அதிகம் தான்…” என்னும் போது,

“உங்க பவரை யூஸ் பண்ணி என்ன பண்ண போறீங்க சார்…?” என்றபடி உள்ளே நுழைந்தான் மகிழன்…

அவனை பார்த்ததும் லேசாக பம்மியவன், “இல்ல சார்… ஓவர் திமிரா பேசுறா… அதான் லேசா மிரட்டினேன்….” என்று மகிழன் அமர ஒதுங்கி இடம் தர,

“அப்படியா…?” என்று ஆச்சரியம் போல் அவனை ஓர் பார்வை பார்த்தவன், திரும்பி தியாவை பார்வையால் அளந்தபடி,

“மேடம்க்கு திமிர் ஜாஸ்தின்னு தெரியும்… அதுனால இனி அவங்களை எப்படி ஹான்டில் பண்ணணுமோ அப்படி பண்ணிக்குறேன்… நீங்க உங்க வேலையை பாருங்க….” என்றதில் கோபத்தை அடக்கி கையை முறுக்கி தன்னை கட்டுபடுத்தி கொண்டவன், மெல்லிய குரலில்

“சார்…. நானும் உங்ககூட இந்த கேஸ்ல இருக்கட்டுமா…?” என்று பவ்வியம் போல் கேட்க,

மகிழன் அதே பவ்வியமான குரலில், “எதுக்கு சார்…?”  என்று நக்கலாக கேட்க,

“இல்ல சார்… உங்களுக்கு உதவியா…” என்று இழுக்க, கையுயர்த்தி அவரை தடை செய்தவன்,

“மேடமை நானே ஹான்டில் பண்ணிக்குறேன்… நீங்க கிளம்புறீங்களா…?” என்று வாசலை காட்ட,

அந்த அதிகாரிக்கு இதற்குமேல் எப்படி கெஞ்சுவது கேட்பதென்று தெரியவில்லை… ஒருவித பயத்தோடும் எரிச்சலோடும் வெளியேறி விட்டான் தியாவை முறைத்தபடி…

இங்கு தியாவும் அவனை தான் முறைத்துக்கொண்டிருந்தாள் அவன் தலை மறையும்வரை…

“சோ… மிஸ் தியா…?” என்று மகிழன் ஆரம்பிக்க, தியாவிற்கு உண்மையில் ஓஓ வென்று கத்த வேண்டும் போல் இருந்தது…

‘இன்னும் எத்தனை பேரை தான் நான் சமாளிக்கணும்…?’ என்னும் சலிப்பு அவளிடம், அது முகத்திலும் தெரிந்தது…

“ம்ம்ம்… மேடம் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இவ்வளவு சலிப்பா…?” நக்கல் கலந்த ஆராய்ச்சியான கேள்வி…

பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தவளை பார்த்தபடி தன்முன் இருந்த கோப்பையை திறந்தவன்,

“மிஸ் தியா…?” என்று மீண்டும் அழைத்தவன்,

“கேமரால இங்க நடக்குறது பேசுறது எல்லாம் ரெக்கார்ட் ஆகும்… உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்…  சோ… கோவாப்பிரேட் பண்ணா நல்லது…” என்றுவிட்டு நிமிர்ந்து அவளை பார்த்து, மீண்டும்

“மிஸ் தியா….” என்று அழைக்க, எரிச்சல் அடைந்தவள்,

“நான் தான்… இப்ப என்ன சார் வேண்ணும் உங்களுக்கு…?” என்று கத்த,

வாயிக்குள் ஏதோ முனுமுனுத்தவன், அவள் புறம் ஒரு ஃபோட்டோவை நகர்த்தி வைத்தான் அமைதியாக…

அவனை பார்த்து கத்தியவள் மகிழன் வைத்த ஃபோட்டோவை கண்டு புருவம் சுருக்கியவள், என்னவென்று அவனை பார்வையால் கேட்க, மகிழனும்

“இந்த ஃபோட்டோல இருக்குறவங்க யாருன்னு தெரியுமா…?” என்று கேட்டுவிட்டு தியாவின் முகத்தை பார்க்க, அவளோ நான் அனைத்திருக்கும் தயார் என்பது போல் நிமிர்ந்து அமர்ந்தவள்,

“மன்சூர்… ஆசிப்போட அப்பா…” என்று நிறுத்த,

மகிழன், “அதுமட்டும் தானா…?” என்று கேள்வியோடு பார்க்க,

“எனக்கு அவ்வளவு தான் தெரியும்…” என்க, உதட்டை வலைத்து தலையசைத்தவன்,

“ஓகே… இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கீங்களா…?”

“பார்த்திருக்கேன்…” என்க,

“எப்ப…? எப்படி…? அவருக்கு உங்களை தெரியுமா…?” குறுகுறு பார்வை அவனிடம்,

“தெரியும்… பேசி இருக்கிறோம்… மூன்னு மாசத்துக்கு ஒருமுறை பிஸ்னஸ் மீட் வைப்பாங்க… அதுல எல்லா பிஸ்னஸ் ஆளுங்களும் வருவாங்க… அப்ப ஹாயா கம்பெனியோட சிஈஓ சார்பா நான் போவேன்… அப்ப மீட் பண்ணி பழக்கம்… அபிஷியலா…” என்று முடிக்க,

“ம்ம்ம்… கம்பெனி எம்டி ஆசிப் தானே…?” கையை நாற்காலியின் கைபிடியில் ஊன்றியபடி கேட்க,

“ஆமா…”

“அப்ப அவர் அந்த மீட்டீங்க்கு போனா போதுமே எதுக்கு நீங்க போனீங்க…? அவசியம் என்ன…?”

“அவர் எப்பவாச்சும் தான் கம்பெனிக்கு வருவாங்க… சோ… கம்பெனியோட அப்ஸ் அண்ட் டௌன்ஸ் அவருக்கு தெரியாது… அதுனால நான் போவேன்…” என்று விளக்கமளிக்க,

“ம்ம்ம்… எத்தனை வருஷமா இந்த கம்பெனியில இருக்கீங்க…?” பேன்னால் எதையோ குறிப்பெடுத்தபடி கேள்வியை கேட்க,

“ஆறு வருஷம்…”

“அதாவது கம்பெனி தொடங்கியது முதலே நீங்க அங்க சிஈஓ’வா இருக்கீங்க… ரைட்…?” என்று கேட்படி பார்வையை மட்டும் உயர்த்தி அவளை பார்க்க,

தியாவிற்கு இது எங்கு கொண்டு முடியும் என்று ஓரளவிற்கு புரிந்தது… இருந்தும் தைரியமாக, “ஆமா….” என்று பதிலளிக்க,

“அப்ப உங்களுக்கு…. ஒரு இருப்பதி ரெண்டு வயசு தான் இருக்கும்…. ஆனா எப்படி கம்பெனியோட சிஈஓ…?” கேள்வி பாதியில் நின்றது…

“எனக்கு கம்பியூட்டர்ல ரொம்ப இன்டிரெஸ்ட்… ஏ டூ இஷட் எனக்கு அத்துப்படி… அந்த எஸ்பீரியன்ஸ்ல தான் இந்த வேலை கிடைச்சது…” என்றவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,

“நீங்க எப்படி வேலைக்கு சேர்ந்தீங்கன்னு சொல்ல முடியுமா…?” என்ற கேள்வியில் சற்று திணற, மகிழன் அதை கவனித்து விட்டான் நொடியில்…

“அது… நான்… நான் அப்ப பாம்பேல ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்து இருந்தேன்… அப்ப எதர்ச்சையா எம்டியோட அப்பாவை அதாவது மன்சூரை மீட் பண்ண வேண்டியதா இருந்துச்சு… அவரோட லேப் ஏதோ பிராப்ளம் ஆகி இருந்தது… அதை நான் சரி செஞ்சு தந்தேன்… அப்ப அவரு ஒரு கம்பெனி வைக்க போறேன்… நீ வரியான்னு கேட்டாங்க… போஸ்ட் சம்பளம் எல்லாம் அதிகம் சோ ஒத்துக்கிட்டேன்… அப்ப இருந்து இந்த ஜாப்ல நான் சின்சியரா இருக்கேன்…” என்றிட,

“ம்ம்ம்…” என்றவன்,

“ஏன் ஆசிப் பத்தி அவங்க அப்பா கிட்ட நீங்க சொல்லலை…?”

“சொல்ல தோணலை…” என்ற வார்த்தையில் மகிழன் புரியாது பார்க்க, தியாவே மேலே தொடர்ந்தாள்,

“எனக்கு லைப்ல இந்த மாதிரி நிறைய தொல்லைங்க வந்திருக்கு… அதுமாதிரி தான் இதையும் நினைச்சேன்… என் கவனம் எல்லாம் வேலை மட்டும் தான்… சோ இதை சொல்ல தோணல…” என்று நிறுத்த,

“எல்லாம் ஓகே… ஆனா மன்சூர் ஸ்மக்லிங் பண்ணது உங்களுக்கு தெரியுமா…?” என்று கேட்கவும்,

“தெரியாது… வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வர ஐடியா என்னோடது தான்… ஆனா அதை இப்படி மிஸ்யூஸ் பண்ணுவாங்கனு தெரியாது…?” என்றவளை கூர்ந்து பார்த்தவன், இருக்கையில் இருந்து எழுந்தபடி,

“அதெப்படி உங்களுக்கு தெரியாம போகும்… உங்க பிளான், உங்க கம்பெனி, உங்க ஸ்டாப் மெம்பர்ஸ்… இப்படி இத்தனை வருஷம் தெரியாம போச்சு…?” அத்தனை யோசனையுடன் இருந்தது அவன் முகம்…

“அது எனக்கும் தெரியல… எப்பவும் லேப்டாப் ஹான்டோவர் பண்ணுவாங்க… அதை சர்வீஸ் பிளேஸ்க்கு அனுப்புவாங்க… அப்புறம் அங்க போய் லேப்டாப் வாங்கி சாப்வேர் இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லுவாங்க… நானும் இதை ஏன்னு கேட்டேன் பட் ஒழுங்கா பதில் வந்தது இல்ல… என்னதான் சிஈஓ னாலும் எனக்கும் ஒரு லிமிட் இருக்கு… சோ என்னால அதை அதுக்கு மேல கேட்டவும் முடியலை… இதை ஒரு பெரிய விஷயமா யோசிக்கவும் முடியலை…” என்ற வார்த்தைகள் நம்பும் படி இருந்தாலும் மகிழனால் முழுதாக அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

அமைதியாக டேபிளை ஒரு விரல் கொண்டு தட்டியபடி யோசித்தவன், “நேத்து ஆசிப் எதுக்கு உங்க வீட்டுக்கு வந்தார்…?” என்று அவள் முகம் பார்க்க,

“சரியா தெரியல… இந்த ஸ்மக்லிங் பத்தி கேட்க போய் சண்டை வந்தது ஆஃபீஸ்ல… அது காரணமா இருக்கலாம்….” என்று கூற,

“சண்டை வந்தது எத்தனை மணி இருக்கும்…?” மகிழனின் மூளை கணக்கு போட தொடங்கியது…

“ஒரு மூணு மணி இருக்கும்…”

“அப்புறம் என்னாச்சு…?”

“அவர் சண்டை போட்டுட்டு போயிட்டாரு… நான் இருந்து வேலையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பினேன்…” என்று திக்காமல் திணறாமல் பதில் வந்து கொண்டே இருந்தது…

“நீங்க எத்தனை மணிக்கு கிளம்புனீங்க…?”

“நைட் ஆயிருச்சு… ஒரு செவென் இருக்கும்… வந்து ரெப்ரெஷ் ஆனதும் ஆசிப் வந்துட்டார்…” அவளது விளிகளையே பார்த்திருந்தவனுக்கு ஆச்சரியம் தான்…

இருந்தாலும் சமாளித்தான், “இப்ப மன்சூர் உயிரோடு இல்ல… அது தெரியுமா…?” என்று கேட்கவும், சட்டென

“இல்ல தெரியாது எப்ப…? என்ன ஆச்சு…?” என்று அதிர்ச்சி போல் கேட்டவளை இப்பொழுது புருவம் உயர்த்தி பார்ப்பது அவன் முறை ஆயிற்று…

“இன்னைக்கு சாய்ந்திரம் தான்… சோ… உங்களுக்கு எதுவும் தெரியாது அப்படிதானே…?” ஆராயும் பார்வை அவனிடம்…

“உண்மை தான்… எதுவும் எனக்கு தெரியாது..” அத்தனை உறுதி அவளிடம்…

நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தவன், கேமராவை பார்த்து விரலை கத்தரிப்பது போல் பாவனை செய்ய, கண்ணாடி திரைக்கு பின் நின்றிருந்த பிரவீண்,

“போதும்… கேமராவை ஆஃப் பண்ணுங்க…” என்று கட்டளையிட,

“ஏன் சார்…விசாரணை போயிட்டே தான் இருக்கு…” என்று காவலர் ஒருவர் சொல்லவும்,

“அதான் சார் சிக்னல் கொடுத்தாருல… போதும்… ஆஃப் பண்ணிட்டு வெளியே போங்க…” என்று கட்டளையிட, வேறு வழியின்றி சொன்னதை செய்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினர் அங்கிருந்த காவலர்கள் சிலர்…

பிரவீண் மட்டும் பைலை எடுக்க நின்றிருந்தவன் எதிரில் தெரிந்த காட்சியில் அதிர்ந்து சிலையாக நின்று விட்டான் பைலுடன்…

 

தொடரும்… 

 

 

Advertisement