Advertisement

UD-23:

“சார்…” என்ற அதிர்ச்சி மட்டுமே பிரவீணிடம்… 

“சொன்னது கேட்டுச்சா இல்லையா…?” என்று குரலை உயர்த்தவும், குழம்பியவன் மெல்லிய குரலில்

“புரிஞ்சுது சார்… ஆனா நீங்க யாரை சொல்லுறீங்கன்னு தான்…” என்று இழுக்கும் போது அவனை பார்த்து முறைத்த மகிழன், 

“சாக கிடக்குறவனை அரெஸ்ட் பண்ண நான் என்ன முட்டாளா…?” என்று கேட்கவும், பதறி

“சார்… இல்ல சார்… நான் ஏன் கேட்டேனா…” எப்படி கேட்பது என்று திணறி இழுக்க, மகிழன்

“அவனை சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க… ஐ நீடு ஹிம் அலைவ்…” என்று பிரவீணுக்கு பின் வந்தவர்களிடம் உத்தரவிட, 

ஸ்டெச்சரை கொண்டு வந்தவர்கள் இன்னும் வேகமாக செயல் பட்டனர் நிலைமை அறிந்து… 

பிரவீணுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை… இருந்தும் இப்பொழுது எதுவும் கேட்டிட முடியாது என்றதால் திரும்பி வெளியே நின்றிருந்த பெண் போலீஸிடம் கண் ஜாடை காட்ட, உள்ளே வந்தனர் வேகமாக… 

“சார்…” என்று வந்து நின்ற பெண் போலீஸிடம், 

“இவங்களை ஜீப்ல ஏத்துங்க…” என்று சொல்லவும்,  திரும்பி பார்க்க

கால்களில் கை முட்டியை ஊன்றியபடி தலையை குனிந்து அமர்ந்திருந்தவளின் கோலமும் ஆடை கிழிந்திருந்த விதமும் சொல்லாமல் சொல்லியது சூழ்நிலையை… 

“எஸ் சார்…” என்று நகர போக, மகிழன்

“ஒரு நிமிஷம்…” என்று தடுத்து,

 

“உள்ள ஏதாச்சும் ஷால் இருந்தா எடுத்து குடுங்க…” என்று சொல்லவும் தான் தியாவிற்கு தன் உடை பற்றிய கவனம் வந்தது… 

அதில் பதறி நிமிர்ந்து பார்க்கும் வேலையில் பெண் போலீஸ் ஒரு ஷாலுடன் வர, 

“தேங்க்ஸ்….” என்று வாங்கி தன்னை சுற்றி கொண்டவளின் பார்வை ஒருநொடி மட்டுமே மகிழனை தொட்டு மீண்டது… 

ஆனால் அதை கூலரின் பின் ஒளிர்ந்திருந்த அவன் விளிகள் சரியாக கவனித்தாலும், முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை… 

அமைதியாக அவனை கடந்து சென்று ஜீப்பில் அமர்ந்து கொள்ள, மகிழன் அவ்விடத்தை முற்றிலும் நோட்டமிட்டான்… 

இடம் முழுவதும் கண்ணாடி துகள்கள், ‘கண்ணாடி டம்ளர் மட்டுமே யூஸ் பண்ணி மொத்தமும் முடிச்சு இருக்கா போல…’ என்ற எண்ணத்தோடு, மற்ற அறைகளை பார்க்க, எந்த பொருளும் கலையவில்லை… 

போராட்டமும், சண்டையும் ஹாலில் மட்டுமே நடந்துள்ளது என்பதை குறித்துக் கொண்டான்… கேள்விகள் முளைத்தது… 

தெளிவுபடுத்த மனம் பரபரத்தாலும் அமைதியாக கையாள நினைத்தான்… எதிரில் இருப்பவள் உயிரானவள் என்பதையும் தாண்டி அணிந்திருக்கும் உடையும் அதற்கான பொருப்பும் அவனை நிதானிக்க செய்தது… 

ஒருபெருமூச்சுடன் வெளியேறியவன் தன் வண்டியில் ஏறியபடி, பிரவீணிடம் “கேஸ் பைல் பண்ணிருங்க… நாளைக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும்…. அப்படியே அந்த ஆசிப் மேல ஒரு கண்ணை வச்சுக்கோங்க… நான் எஸ்பி ஆப்பீஸ் வரை போயிட்டு வரேன்… ” என்று வண்டியை உறும விட, ஜீப்பில் அமரந்திருந்தவள் திரும்பி பார்க்கவில்லை வண்டியின் சத்ததில்… 

‘பார்க்காத… பார்க்காத…’ என்ற ஜபம் மட்டுமே அவள் உள்ளத்தில்… தன்னை அவன் எளிதில் அனுகிவிடுகிறான் என்னும் கோபம் அவளிடம்… 

சில நொடிகள் உறுமவிட்டவன், ‘திமிர் பிடிச்சவ…’ என்று உள்ளுக்குள் திட்டியபடி கிளம்பினான் அவ்விடத்தை விட்டு, 

“என்னடா நடக்குது இங்க…? கொலை முயற்சியா இல்ல காதல் படமா…?” என்று நெற்றியில் விரலால் நீவியபடி புலம்ப, 

“சார்… அக்கியூஸ்டை கூட்டிட்டு போகலாமா…?” என்று கேட்க, 

‘ஹான்… அக்கியூஸ்டா…? அப்ப சாரோட லவ்…?’ என்று யோசித்தவன், தன் பதிலுக்காக எதிரில் காத்திருப்பதை பார்த்து, 

“ம்ம்ம்… வண்டியை எடுங்க…” என்றதோடு தியாவை ஓர் பார்வை பார்த்தவன், குழப்பத்தோடு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் இதுவோ அதுவோ என்று யோசித்தபடி… 

“என்ன சொல்லுறீங்க மகிழன்…? உண்மையாவா…?” என்ற அதிர்ச்சி சந்திரனிடம்… 

“ஆமா சார்… அரெஸ்ட் பண்ண தான் பிளான் பண்ணேன் பட் இப்படி இருக்கும்னு நினைக்கலை… போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்தா எல்லாம் புரியும் சார்…” என்று பதிலளித்தவனை கூர்ந்து பார்த்து, 

“யார் மேலையாச்சும் சந்தேகம் இருக்கா…? ” என்ற கேள்வி கேட்கவும், 

“எஸ் சார்…. நாளைக்கு டீடையல்ஸோட வரேன்…” என்றிட, 

“ம்ம்ம்… ஓகே…” என்றவர் இன்னும் என்ன என்பது போல் மகிழனை பார்க்க, 

“தியா…. ஹாயா கம்பெனியோட சிஈஓ… அரெஸ்ட் பண்ணி இருக்கேன் சார்… இன்னைக்கு நைட் கஸ்டடில எடுத்து இருக்கேன்… நாளைக்கு கோர்ட்ல ஆஜர் படுத்துறவரை ஐ நீட் பெர்மிஷன் சார்… ” என்றவனை குழப்பத்தோடு பார்த்து, 

“பட் போர் வாட்…? ராஜோட கொலை விஷயமா….?” 

“சார்… எஸ்பிளைன் பண்ணா பெருசு… நான் நாளைக்கு சொல்லுறேன்… பட் இப்போதைக்கு வேற கேஸ்ல அரெஸ்ட் பண்ணி இருக்கேன்… ” என்று நிறுத்த அவனை முறைத்து பார்த்தவர், 

பின் அவன் மேல் இருந்த நம்பிக்கையில், திமிராக நிற்பவனிடம் எதுவும் கேட்டிட முடியாது கேட்டாலும் பதில் வராது என்பதால் வேறு வழியின்றி, 

“மம்ம்… பைன்… கேரி ஆன்…. பட் பிராபிளம் வர கூடாது… அப்படியே வந்தா….” என்று முடிக்கும் முன், 

“நானே பொறுப்பெடுத்துக்குறேன் சார்… ” என்றதோடு எழுந்தவன், ஒரு சலியூட்டை வைத்து, 

“தேங்கியூ சார்…” என்க, தலையை ஆட்டி அவன் வணக்கத்தை ஏற்று கொள்ளவும் அவ்விடத்தை விட்டு நகரந்தவனை கண்டு, 

“கிரேஸி மேன்…” என்று முனுமுனுத்துக் கொண்டார்… 

“என்ன அக்கா சொல்லுறீங்க…? நிஜமாவே வா…?” என்று ஒருவர் கேட்க, டீயை பருகியபடி, 

“அட ஆமா… கண்ணாடி கிளாஸால அடிச்சு மண்டையை ஒடைச்சு இருக்கா… ஆள் பொழைக்குறது கஷ்டம் தான் அவனை பார்ததா…” என்று குசுகுசுவென்று தங்களுக்குள் பேசியது எல்லாம் பென்ச்சில் அமைதியாக அமர்ந்திருந்த தியாவை பார்த்து தான்… 

அவர்கள் பேசும் போது புயலாக உள்ளே நுழைந்தான் மகிழன், அந்த இரவின் அமைதியிலும் போலீஸ் ஸ்டேஷன் சட்டென பரபரப்பாகி இருத்தது அவன் வருகையில்… 

“சார்…” என்று சலியூட் வைக்க, தலையசைத்து அனைத்து வணக்கங்களையும் பெற்று கொண்டு அமர்ந்தான் கால் மேல் கால் போட்டு… 

அங்கேயே ஒரு ஓரத்தில் பென்ச்சில் அமர்ந்திருந்த தியா அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்தாள் வந்ததில் இருந்தது… 

தன் கண்ணாடியை கழட்டியபடி, “எப்ஐஆர் போட்டுட்டீங்களா…?” என்ற கேள்விக்கு, 

அவன் முன் எப்ஐஆர் ரெஜிஸ்டர் புக்கை எடுத்து காட்டியபடி, “எஸ் சார்… ” என்க, 

அமைதியாக வாங்கி கொண்டவன், தலையை நிமிர்த்தாமல் “சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க அவங்களுக்கு… ” என்று கட்டளையிட, 

அவனது வார்த்தையில் அதிர்ந்த காவலர், “என்…என்ன சார்…?” என்று மீண்டும் கேட்டவருக்கு அதிர்ச்சி தான்… 

அவனது கேள்வியில் தலையை நிமிர்த்தி பார்த்தவன் புருவத்தை உயர்த்தி, “என்ன…?” என்று முறைக்க, 

அதிர்ச்சி தான் என்றாலும் தன் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்து, “இல்ல சார்… நீங்க ஏதோ சொன்னீங்க…? என்று மீண்டும் கேட்கவும், மகிழனின் முறைப்பும் மாறவில்லை வாயில் இருந்து மீண்டும் வார்த்தையும் வரவில்லை… 

“சாரி சார்… இதுவரை நீங்க இப்படி சொன்னது இல்லை… அதான் ஒரு சந்தேகம்…” என்று இழுக்கவும், 

“சொன்னதை மட்டும் செஞ்சா போதும்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,

“எஸ் சார்…” என சட்டென பதில் சொல்லியவர், திரும்பி கன்ஸ்டபிளை பார்த்து கண்ணை காட்ட அவரோ அதற்காகவே காத்திருந்தது போல் ஓடினார்… 

எப்ஐஆர் காஃபியை பார்த்தவன், தியாவை திரும்பி பார்க்க அவளும் அவனைதான் பார்த்திருந்தாள்… 

“இங்க வந்து உட்காருங்க…” என்றதும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து வந்தவளை பார்த்தவனுக்கு அவளது மாற்றம் நன்றாக தெரிந்தது… 

எப்பொழுதும் அவள் நடையில் இருக்கும் கம்பீரம், நிமிர்வு இன்று அவளிடம் இல்லை… சோர்வு என்பதையும் விட மனதளவில் தளர்ந்திருந்தாள்… 

திரும்பி அருகில் இருந்தவர்களை ஓர் பார்வை பார்த்ததில் அனைவரும் விலகி சென்று நிற்க, மகிழன்

“உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லையா…?” என்று தன்னையே வேடிக்கை பார்த்தவர்களை கண்டு கேட்கவும், இரவு பணியில் இருந்த மூன்று நான்கு காவலர்களும் பதறி வெளியே சென்று விட்டனர்… 

அனைவருக்கும் இது புதிது அதும் மகிழனின் செய்கைகள் மிகவும் புதிது… ஒரு பெண்ணை இரவு அழைத்து வந்தது உணவு அளிக்க சொல்வது, பார்வையின் மாற்றம் என்று அனைத்தும் புதிதாக பட, வெளியே சென்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் அவன் செவியில் விழாதவாரு…

 

“சாப்பிட்டதும் ஹாஸ்பிடல் போகலாம்…” கையில் இருந்த பேப்பரை பார்த்தபடி முடிவை அவன் சொல்ல, 

“தேவையில்லை…” மறுப்பை அவள் காட்டினாள்… 

“உன்கிட்ட தேவையா இல்லையான்னு நான் கேட்கல… இன்பர்மேஷன் சொன்னேன் தட்சால்…” என்றதில் பல்லை கடித்தவள்,

“எதுக்கு உங்களுக்கு இந்த அனுதாபம்…? அது எனக்கு வேண்டாம்… எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்… நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க…” என்று வார்த்தையை விட, 

அவளது பேச்சில் அமைதியாக நிமிர்ந்து பார்த்தவன், இருக்கையில் சாய்ந்தமர்ந்து இடதுகையில் நாடியை ஊன்றியபடி எதிரில் இருந்தவளை கூர்ந்து பார்த்தபடி நிதானமான குரலில், 

“இது போலீஸ் ஸ்டேஷன்… நான் டிஎஸ்பி… மேடம் கிட்ட வேலை பார்க்குற ஆளு இல்லை நான்… ” என்றதில் கோபம் வந்தாலும் இறுக கண்களை மூடி திறந்தவள் தன்னை கட்டுபடுத்திக்கொண்டு, 

“சாரி சார்…” என்று கடித்த பல்லுக்கிடையில் சொல்ல, மெல்லிதாக சிரித்தவன், 

“தட்ஸ் குட்…” என்றவன், மீண்டும் பேப்பரில் பார்வையை செலுத்தியபடி

“கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா இல்ல சாப்பிட்டு அப்புறம் சொல்லுறீங்களா…?” என்று கேட்க, தியாவிற்கு அவனை ஒன்றும் சொல்ல முடியாத நிலை… 

பொறுமையை இழுத்து பிடித்து வாய் திறக்க போகும் நேரம் அவளுக்கான உணவோட வந்தார் காவலர்… 

“சார்… சாப்பாடு…” என்று நிறுத்திக்கொள்ள, 

“ம்ம்ம்… வச்சுட்டு போங்க…” என்றதோடு முடித்து கொண்டவனிடம், 

“யெஸ் சார்…” என்று சென்றதும் இருக்கையில் இருந்து எழுந்தவன், உள்ளே எங்கோ சென்று விட்டு சில நிமிடங்கள் கழித்து வர, தியாவிற்கு அமரவே முடியவில்லை… 

அவளை பார்வையால் கவனித்தபடி அருகில் வந்தவன் உணவு பார்சலை திறந்து, இட்லியை பிட்டு அவள் வாயருகே கொண்டு செல்ல, முடிந்தமட்டும் முறைத்து பார்த்தாள் தியா… 

“சும்மா சும்மா முறைச்சு பார்த்தா கண்ணை நோண்டிருவேன்… ஒழுங்கா வாயை திற…” என்று மிரட்ட, 

“இல்ல எனக்கு வேண்டாம்…” என்று முகத்தை திருப்பியவளை, இப்பொழுது மகிழன் முறைத்து பார்க்க, தியா அதை கண்டுக்கொள்ளவே இல்லை… 

“இப்ப நீயா திரும்பி வாய் திறந்து வாங்கிக்கலைன்னா நானா வாங்க வைப்பேன்…” என்றபடி அவள் இருக்கையை சற்றே பின் நகர்த்தி, டேபிளில் அவள் முன்னே அமர்ந்து கொள்ள பதறி விட்டாள் தியா… 

“என்ன மேன் பண்ணுற…?” என்று பதற்றத்தோடு சுற்றும் முற்றும் பார்க்க, 

“யாரும் இல்ல…” என்றபடி மீண்டும் அவள் இருக்கையை தன் பக்கம் இழுத்துக்கொள்ள மூச்சே நின்று விடும் போல் இருந்தது தியாவிற்கு…

டேபிளில் மகிழன் அமர்ந்திருக்க, அவன் இரு கால்களும் இருக்கையின் கால்களை பிடித்தவண்ணம் இருந்ததில், தியாவிற்கு என்னவோ அவனுக்குள் அடங்கி இருப்பதை போன்றதொரு உணர்வு… 

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? ஸ்டேஷன்ல வச்சு என்ன பண்ணுறன்னு தெரிஞ்சுதான் பண்ணுறீங்களா…?” கோபம் மட்டுமே படமுடிந்ததது அவளால்… 

“ஓஓஓ… அந்த அறிவு உனக்கு இருந்தா முதல்ல நீ ஒழுங்கா நடந்துக்கோ… இது என் இடம்… நான் வைக்குறது தான் சட்டம்… உன் வேலையை என்கிட்ட காட்டாத… என்னை கோப படுத்தினா இப்படிதான் நடக்கும்…” என்று முறைத்தவன் மீண்டும் இட்லியை அவள் வாயருகே கொண்டு செல்ல, தியாவாள் ஒன்றும் செய்ய முடியவில்லை… 

எழுந்து கொள்ளவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை முறைத்து மட்டுமே பார்க்க முடிந்தது.. 

அதற்கும் மகிழன், “இந்த முறைச்சு பார்க்குற வேலையை இனி என்கிட்ட வச்சுக்காத… அப்புறம் அதுக்கும் வருத்தபடுவ…” என்றுவிட்டு தன் கையையும் அவளது முகத்தையும் ஒரு பார்வை பார்க்க, 

தியாவிற்கு அதன் பொருள் புரிந்தது, விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல், வாய் திறந்து வாங்கி கொண்டவளுக்கு அந்த ஒரு வாய் உணவு கூட அத்தனை கசந்தது… 

முடியவில்லை தான் உடல் சூடு ஒருபக்கம், கையின் வலி ஒருபக்கம், மகிழன் ஒருபக்கம் என்று முற்றிலும் சோர்ந்து போனாள்… 

கஷ்டப்பட்டு ஒரு இட்லியை விழுங்கியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை… தன்நிலை இழுந்து விடுவோம் என்று திணளியவள், 

“பிளீஸ் மகிழன்… முடியலை…” என்று இடது கையால் நெற்றியை பற்ற போக, ரத்ததின் வாடை அவளுக்கு மேலும் மயக்கத்தை தர, 

அவள் நிலை புரிந்து விலகி,  கீழே இறங்கி குடிப்பதற்கு தண்ணீர் தர, மறுத்து விட்டாள்…

“ம்பச்ச்… கொஞ்சம் குடி…” என்று வற்புறுத்த, 

“பிளீஸ்….” என்றபடி முன்னிருந்த மேஜையில் தலை சாய்த்து கொண்டாள் தன்நிலை மறந்து… 

அவளை அமைதியாக ஓர் பார்வை பார்த்தவன், “கான்ஸ்டபிள்…” என்று அழைக்கவும், உள்ளே ஓடி வந்தனர் அனைவரும்… 

டேபிளில் மயங்கி கிடப்பவளை பார்த்து புரியாது முழிக்க, பெண் காவலர் புறம் திரும்பி, 

“கைல நிறைய பிளட் போயிருக்குன்னு நினைக்குறேன்… பீவர் மாதிரி தெரியுது… பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க…” என்றபடி தன் கைகளை துடைத்தபடி இருக்கையில் அமர்ந்து கொள்ள, முகம் அத்தனை கடினத்தை காட்டியிருந்தது… 

“சார்… ஆனா எப்ஐஆர் போட்டாச்சு…” என்று ஒருவர் இழுக்கவும், 

“அதுக்கு… மயங்கி கிடக்குற ஆளையா நாளைக்கு கோர்ட் கூட்டிட்டு போக முடியும்… ? என்னய்யா கேள்வி கேட்குற…?” என்று கத்தவும், அந்த காவலர்

“சாரி சார்… நான் போய் ஆட்டோ பிடிச்சுட்டு வரேன்…” என்று வெளியே ஓட, 

“ம்ம்ம்… அதுக்குள்ள ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ணுவ…?” என்ற கேள்வியில் நின்றுவிட, 

“ஸ்டேஷன் வண்டில கூட்டிட்டு போங்க… நாளைக்கு காலைக்குள்ள எனக்கு இவங்க நார்மல் ஆகி இருக்கணும்… புரிஞ்சுதா…?” என்ற கேள்வியில் அனைவரும் தலையை ஆட்டி வைக்க, அடுத்த சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் நோக்கி பறந்து கொண்டிருந்தாள் தியா… 

இங்கு மகிழனுக்கு கோபம் கண்களையும் மூளையும் நிறைத்தாலும் தன் நிதானத்தை இழக்கவில்லை…

தொடரும்….

Advertisement