Advertisement

UD-20:

பஞ்சுமிட்டாய் கலரில், ஜிகுஜிகுவென்று மின்னிய ஜிகுனாவின் ஜொலிப்பில் அந்த புடவை தியாவிற்கு சற்று தூக்கலாக தான் தெரிந்தது… 

அடர்ந்த முக அலங்காரமும் கைகள் நிறைந்த வலையலும் அவளை கூனி குறுக செய்தது…அன்னையிடம் கைநிறைய வலையல் அணிந்து எப்படி இருக்கிறது என்று கேட்டு தொல்லை செய்த காலங்கள் அவள் நினைவில் வந்து போக, 

ஏற்கனவே அழுது சிவந்திருந்த அவளது கண்கள் மீண்டும் கலங்க தொடங்கியது… ஒற்றை படுக்கை மட்டும் அமைந்த அந்த அறையில் மூச்சு முட்டியது தியாவிற்கு… 

கிருஷ்ணன் திரௌபதியை காப்பாறியது போல் ஏதேனும் கடவுள் காப்பாற்ற கூடுமோ என்னும் எண்ணங்கள் மண்டையில் ஓடிய சமயம் அறை கதவு திறந்தது பட்டென்று… 

“ஏளோ…” என்று அந்த திருநங்கை ஒருவனை உள்ளே அனுப்ப, தியாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… 

‘கெஞ்சி பார்க்கலாமா…? காப்பாத்த சொல்லி கேட்டு பார்க்கலாமா…?’ என்று கையை பிசைந்த நொடி, 

‘நல்லவனா இருந்தா எதுக்கு இந்த மாதிரி இடத்துக்கு வரணும்…?’ என்று எண்ணம் தோன்றவும் இறுகிவிட்டாள்… 

‘யாருகிட்டையும் கெஞ்ச கூடாது… நான் என்ன தப்பு பண்ணினேன் எதுக்கு கெஞ்சணும்…? எந்த ஆம்பிளையும் நல்லவன் கிடையாது…’ என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு அந்த அறையில் ஒருவனுடன் இருப்பது அறுவருப்பை தந்தது… 

உள்ளே நுழைந்தவன் இரண்டு நிமிடமாகியும் எதுவும் நடந்தது போல் தெரியாததால் நிமிர்ந்து பார்த்தாள் மெல்ல…

அதற்காகவே காத்திருந்தான் போலும், அதுவரை அவளை உச்சிமுதல் பாதம் வரை கண்களால் அளந்தவன் அவள் நிமிர்ந்ததும் ஒரு புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்தான் அமைதியாக… 

பயம்தான், இல்லையென்று சொல்லிவிட முடியாது… தெரியாத ஆடவன், என்ன செய்ய வேண்டும், அவன் என்ன செய்வான் என்று புரியவில்லை தெரியவில்லை… கடந்த சில தினங்கள் அவள் கண்முன் தெரிந்தும் தெரியாமலும் நடந்த பல விஷங்கள் இப்பொழுது நினைவில் இல்லை… 

உள்ளுக்குள் தோன்றும் பயத்தை எத்தனை முயன்றும் முகத்தில் காட்டாமல் இருக்க முடியவில்லை… பதிமூன்று வயதில் எதை அனுபவிக்க கூடாதோ அதை எதிர் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்… 

அவளது பதற்றத்தை பார்த்து, “தும் சே நாம் கியாஹே…?” என்று கேட்டது அவளுக்கு புரிந்தது… 

ஒருவாரம் லேகாவுடன் பழகியது ஹிந்தியை சற்று கற்று வைத்திருந்தாள்… கேள்வி புரிந்தது தான் ஆனால் பதில் சொல்ல தோன்றவில்லை உண்மையில் அதற்கு தைரியம் வரவில்லை… 

அவளிடம் பதில் இல்லாமல் போக மெல்ல அவள் தோளை தொடவும், பதறி விலக அழுகை வந்து விடும் போல் இருந்தது தியாவிற்கு… 

வாயை திறந்தால் அழுகை வரும் என்ற பயம்… ஆனால் அழ கூடாது என்று உறுதியில் இருந்தாள்… அவளது விலகலை பார்த்து புன்னகைத்தவன், எழுந்து வலுக்கட்டாயமாக அவள் கைபிடித்து படுக்கையில் அமர வைத்தான்… 

“பைட்டோ பிளீஸ்…” என்று மென்மையாக சொல்லவும், 

வேக மூச்செடுத்து அமர்ந்திருந்தவளின் அருகில் மீண்டும் அமர்ந்தவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கார்ட்டை எடுத்து நீட்டினான் அவளிடம்… 

கைகள் நடுங்க அதை வாங்கி பார்த்தவளின் கண்கள் விரிந்தது ஆச்சரியத்தில்… 

அதில் மீண்டும் புன்னகைத்தவன், “தும் சே நாம் கியாஹே…?” என்று கேட்க, 

இப்பொழுது சிறுதயக்கத்துடன் “திவ்ய…” என்று சொல்ல வந்தவள், வார்த்தையை மூழுங்கிவிட்டு, 

“தியா…” என்றாள்… 

அவளது மாற்றத்தை புரிந்து கொண்டவன், “ம்ம்ம்…” என்றவன், 

“கியா ஏஜ்…?” என்று கேட்கவும், 

கேள்வியை ஓரளவிற்கு புரிந்தவள், 

“தேர்டீன்…” என்க, 

“பர்ஸ்ட் டைம்…?” என்று அவளுக்கு புரியும்படி எளிதாக கேட்க, அது அவளுக்கு புரியவும் செய்தது… 

கேள்வியின் அர்த்தம் புரிந்ததில் உடல் கூசினாலும், சூழ்நிலையை கருதி

‘ஆம்…’ என்று தலையை ஆட்டி வைத்தாள் அமைதியாக… 

அதன்பின் எல்லாம் அமைதியாக, நேரம் ஒருமணி நேரத்தை கடந்தது…

படுக்கையில் அனைத்தும் சிதறி கிடக்க, அலங்காரங்கள் அலங்கோலமாகி இருக்க, தன் உடையை சரி செய்தபடி வெளியே வந்தான் மெதுவாக… 

கீழே தேவிம்மாவிடம் காசை நீட்டியவன், “சுக்ரியா ஜீ…” என்று வணக்கம் வைத்துவிட்டு வெளியேற, லேகா வேகமாக அறைக்குள் நுழைந்தாள் சின்னவளின் நிலை அறிய… 

அவளோ படுக்கையின் ஓரத்தில் காலை கட்டிக்கொண்டு முட்டியில் தலையை புதைத்து அமர்ந்திருந்த விதம் லேகாவை கலங்க செய்தது… 

ஓடிசென்று அணைத்து கொண்டவளை நிமிர்ந்து பார்த்தவளின் விளிகள் கலங்கவில்லை கல்லாக சமைந்திருந்தாள் தியா.. 

முதல் முறை என்றதால் தேவிம்மாவிற்கு சந்தேகம் தோன்றியது உள்ளுக்குள், ‘உண்மையா எல்லாம் நடந்துச்சா…? ஒரு சத்தமும் இல்ல…?’ என்ற சந்தேகத்தில் அந்த அறையை லேசாக எட்டி பார்த்த நேரம் தியா லேகா இருவரும் அணைத்தபடி இருந்ததும், தியாவின் அசைவற்ற கோலமும் படுக்கையின் நிலையும் கண்டு இகழ்ச்சி புன்னகையுடன்,

 

“அழுத்தகாரி தான்…” என்று முனுமுனுத்தபடி சென்றவர் அப்படி நினைக்க காரணம் அவளது இந்த ஒருவார நடவடிக்கைகள் தான்… 

இங்கு அறையில் லேகாவின் தோளில் தலை சாய்ந்திருந்தவள், தேவிம்மா சென்றதை கவனித்துவிட்டு மெல்லிய குரலில், 

“எதுவும் நடக்கலைக்கா… நான் நல்லா தான் இருக்கேன்…” என்றதும் லேகா அதிர்ந்து சட்டென விலகி அவளை பார்த்தாள் வியப்போடு… 

தியாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை… ஒருவித இறுக்கம் மட்டுமே… தன் காதில் விழுந்ததை அவள் நம்பவில்லை என்றாலும் அது உண்மை என்பதை அறிய வேண்டி, வேகமாக எழுந்து சென்று கதவை மூடியவள், 

அவள் அருகில் அமர்ந்து, “இப்ப நீ என்ன சொன்ன…?” என்று கேட்க, 

“எதுவும் நடக்கலைன்னு சொன்னேன்…” என்று மீண்டும் அழுத்தமாக சொல்ல, 

“உண்மையாவா…? எப்படி விட்டான் உன்னை…?” என்று ஆச்சரியமாக கேட்க, 

“உண்மைதான்… அது எப்படின்னு சீக்கிரமே தெரிஞ்சுப்பீங்க…” என்று பொடி வைத்து பேச, பெரியவளுக்கு ஒன்றும் புரியவில்லை… 

“போகும் போது பணமெல்லாம் குடுத்துட்டு போனாங்க… ஏன் அப்படி பண்ணணும்…?” என்று குழப்பத்தோடு தனக்குதானே கேள்வியை கேட்டு கொண்டவள், 

பின் நியாபகம் வந்தவளாய், பதற்றத்தோடு “தேவிம்மாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிருமே….” என்றதற்கு தியாவிடம் அமைதியே, 

“என்ன நீ அமைதியா இருக்க…. பயமா இல்லையா…?” என்று கேட்க,

“தெரியலை க்கா… பயம் இருக்கு தான் ஆனா பயந்து ஒன்னும் ஆகாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்…” குரலில் உறுதி… 

லேகாவிற்கு அனைத்தும் பின்னுக்கு சென்றது அவளது பதிலில், வாஞ்சையுடன் தியாவின் முகத்தை வருடியவருக்கு, உள்ளுக்குள்

‘சந்தோஷமா சுத்தி விளையாட வேண்டிய வயசுல இப்படி உட்கார வச்சுட்டாங்களே… இது எத்தனை நாள் தொடர முடியும்…?  தேவிம்மா பார்வையாலையே எல்லாத்தையும் கண்டு பிடிக்குமே…’ என்று நினைத்து கொண்டவள், 

“சரி நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ… நான் அப்புறம் வரேன்… கஸ்டமர்’ஸ் வர ஆரம்பிச்சு இருப்பாங்க…” என்க, தியாவிடம் பதில் இல்லை அமைதியான பார்வை மட்டுமே… 

கதவை திறந்து வெளியேறியவளை கண்ட தேவிம்மா, “அரே லேகா… இதர் ஆவோ…” என்றழைக்க, 

உள்ளுக்குள் படபடத்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாது, “ஹான் ஜீ…” என்றவள் வேகமாக சென்று நின்றாள் தேவிம்மாவின் முன்பு… 

“இந்த கஸ்டமரை தியா ரூம்க்கு கூட்டிட்டு போ…” என்று கட்டளையிட, பக்கென்று ஆனது உள்ளுக்குள்… 

“ஜீ… அது…” என்று இழுக்கவும், கோபம் வர

“கியா…? சொன்னதை செய்…” என்று குரலை உயர்த்த, 

தடுமாறிய லேகா, “அவ சின்ன பொண்ணு…” என்று இழுக்க, 

“அதுக்கு… தேவையில்லாம பேசாத… எனக்கு எல்லாம் தெரியும்… சொன்னதை மட்டும் செய்… கூட்டிட்டு போ…” என்று கத்த, 

கண்களை இறுக மூடி திறந்தவள், அவரின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, “சின்ன பொண்ணு… இன்னைக்கு தான் முதல் முறை வேற… ஏற்கனவே ஒழுங்கா சாப்பிடாம ஓஞ்சு போய் படுத்துட்டா…” என்று சொல்லி முடிக்கும் முன், 

“அதுக்கு என்ன பண்ண சொல்லுற… தூக்கி இடுப்புல வச்சு ஊட்டணுமோ… அவதான் அனுபவிக்கணும் எதுவா இருந்தாலும்…” என்று வாயில் பீடாவை திணித்தபடி கத்த, 

“அதில்ல ம்மா… இன்னைக்கு மட்டும் வேண்டாமே… எதாச்சும்னா கண்டிப்பா தாங்க மாட்டா… அப்புறம் ஹாஸ்பிடலுக்கு நாம தான் தூக்கிட்டு அலையணும்… இனி போக போக பழகிருவா… அவளுக்கு பதில் இன்னைக்கு நான் பார்த்துக்குறேன்…” என்று கெஞ்ச, அவளை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்துபடி

“ஓஓஓ… ஒரே ஊர்னு பாசம் வழியுதோ…?” என்று கேட்க, அமைதியாக பல்லை கடித்தபடி தலை குனிய, அவளது முக நாடியை ஒற்றை விரல் கொண்டு தூக்கி

“இன்னைக்கு மட்டும் தான் நாளைல இருந்து எல்லாம் ஒழுங்கா நடக்கணும்… என்ன புரிஞ்சுதா…?” என்று கேட்கவும் உள்ளுக்குள் மகிழ்ந்தவள் சின்னவளுக்காக துன்பத்தை தாங்கிக் கொள்ள தயாரானாள் லேகா… 

அன்று ஒரு இரவிற்கு மட்டும், பத்து முறை துன்பத்தை அனுபவித்தவளுக்கு நரகமாய் இருந்தது ஒவ்வொரு நொடியும்… செத்து விட மாட்டோமா என்று எண்ணத்திலேயே அன்று இரவை கழித்தவளுக்கு வலியும் வேதனையையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… 

காலை விடிந்தது முதல்ல லேகாவை காணாது மலையாளி பெண்ணிடம் கேட்க, அவளோ தமிழும் மலையாளமும் கலந்து நடந்த அனைத்தையும் முடிந்த அளவிற்கு புரியும்படி கூற, உள்ளுக்குள் நொடிந்தே போனாள் தியா… 

லேகா இருந்த அறையினுள் நுழைந்தவள், கிழிந்த நாராக கிடப்பவளை கண்டு உதட்டை கடித்தவள், அவள் கரம் பற்றி 

“சாரி அக்கா…” என்று மனதார வேண்டியவளுக்கு கண்கள் கலங்கினாலும் அழவில்லை… 

“ஹே… இதுல போய் என்ன இருக்கு…? இதுதானே என் வேலை… நீ ஏன் சாரி எல்லாம் கேட்குற…? விடு…” என்றதும், 

“இல்ல மலையாளி அக்கா எல்லாத்தையும் சொன்னாங்க… எனக்காக தானே… என்னால தானே… இது…” என்று முடிக்க முடியாமல் பார்வையால் அவள் உடலை சுட்டி காட்ட, 

“ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவள், 

“எதுக்கும் வருத்தபடாத… எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்… நீயாச்சும் நல்லா இருக்கணும்… ஏதாச்சும் நல்லது நடந்தா சந்தோஷம்… எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவளை காப்பாத்த தான் நினைப்பேன்… அப்படி தான் நீயும்…” என்றதும், இறுக கட்டிக்கொண்டாள் லேகாவை… 

அன்னையை தேடிய மனதிற்கு லேகாவின் குணமும் அக்கறையும் அவளை நெகிழ செய்ய, அன்று முழுவதும் லேகாவுடனே இருந்தாள் அவளை கவனித்துக் கொண்டும் பேசிக் கொண்டும்… 

“எங்க போறீங்க க்கா…?” என்ற கேட்டவளை பார்த்து புன்னகைத்தவள், 

“நீ என்ன ஏதோ நோய்ல படுத்தவ மாதிரி என்னை கவனிக்குற…?” என்று நக்கல் பேச, முகம் சுருக்கியவள்

“என்னால தானே இப்படி…”என்று முடிக்கும் முன், 

“ஓஓஓ…. அப்ப குற்ற உணர்ச்சில தான் காலைல இருந்து கவனிக்குறியா…?” என்று கேட்கவும், 

“அச்சோ… இல்ல அக்கா…” என்று பதறவும், சிரித்தபடி அருகில் வந்தவள்

“இது நீ இல்லைன்னாலும் இப்படிதான் இருக்கும்… சில நேரம் இதைவிட மோசமா கூட இருக்கும்… அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது டா… விதி… எல்லாம் அந்த விதியை தான் சொல்லணும்…” என்றவள் ஒருபெருமூச்சை விட, 

அறைக்குள் வந்த திருநங்கை, “எப்ப பாரு கூடி கூடி பேசிக்குறீங்க… அப்படி என்னதான் பேசுவீங்களோ…ம்ம்ம்…” என்று முகத்தை திருப்பிக் கொள்ள, 

முகத்தை சிரித்தமாதிரி மாற்றிக் கொண்ட லேகா, “குச் நைய் தீதி… கியா மேட்டர்…?போலோ தீதி…?” என்று தோளில் கை போட்டு கேட்க, 

“ம்ம்ம்… கஸ்டமர் ஆகையா… ரெண்டு பேரையும் ரெடி ஆக சொன்னாங்க தேவிம்மா..” என்றுவிட்டு வெளியேற, லேகாவின் முகம் இறுகியது…

அதை கவனித்தவள், “புரியுது அக்கா… இப்ப என்ன பண்ணுறது…?” என்று பாவமாக கேட்டவளை கண்டு விரக்தி புன்னகை சிந்தியவளுக்கும் தெரியவில்லை… 

ஒருநாள் தப்பிக்க வைக்க முடியும் தான்… ஆனால் தினமும் முடியாதே, அதற்கு தேவிம்மா என்னும் பூதமும் விட்டு வைக்காது என்று தெரிந்திருந்தவளுக்கு சின்னவளிடம் அனைத்திருக்கும் தயாராகும் படி சொல்ல வாய் வரவில்லை…

ஏன்னோ தியாவிற்கு அழுகை வரும் போல் இருந்தது… நேற்று அவள் சந்தித்தது தெய்வமாக இருக்க போய் தப்பித்துவிட்டாள் ஆனால் இன்று மிருகம் வந்தாள் என்ன செய்வதென்று தெரியவில்லை… 

ஓடி சென்று லேகாவை இடுப்போடு அணைத்து கொண்டவள் எதுவும் பேசவில்லை பெரியவளும் ஆறுதல் கூறவில்லை… 

அமைதியாக அவளது தலையை நீவியபடி இருக்க, சட்டென சலசலப்பு உண்டானது அவ்விடமே… அணைவரும் ஓடுவதை கண்ட லேகா, 

“இங்கேயே இரு… நான் போய் என்னன்னு பார்க்குறேன்…” என்று அறைக்குள் வைத்து பூட்டியவள் மற்றவர்களை போல் மேலிருந்து கீழே எட்டி பார்க்க, இடமே கலவரம் போல் இருந்து… 

அடுத்த பதினைந்து நிமிடம் கழித்து வேகமாக கதவை திறந்தவளின் முகம் சொல்லில் வடிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சியை காட்டி இருந்தது… 

படுக்கையில் பதற்றத்துடன் அமர்ந்திருந்த தியாவிற்கு லேகாவை கண்டு எதையும் அனுமானிக்க முடியவில்லை… 

புரியாத குழப்பத்துடன் எழுந்து நின்றவள், “அக்கா…” என்ற அழைத்த மறுநொடி வேகமாக சென்று இழுத்து அணைத்து கொண்டாள் பரவசத்தில்…

தொடரும்… 

Advertisement