Advertisement

UD-2:

“இன்னைக்கு என்ன ஆகா போகுதுன்னு தெரியல… சே…” என்று ஒருவன் புலம்பும் போது, 

“ம்ம்ம்… இப்ப புலம்பி என்ன பிரோஜனம்… நான் அத்தனை வாட்டி சொன்னேன்… கேட்டீங்களா… நல்லா என்ஜாய் மட்டும் பண்ண தெரிஞ்சது இல்ல… இப்ப அனுபவிங்க…” என்றவளை மற்ற நால்வரும் முறைத்து வைக்க, 

ஸ்வேதாவோ, “என்னை எதுக்கு காய்ஸ் முறைக்குறீங்க…? தப்பு பண்ணது நீங்க… சோ நீங்கதான் உங்களையே பார்த்து முறைச்சுக்கணும்… உண்மையை சொன்ன என்னை பார்த்து இல்ல…” என்றதோடு திரும்பி தன் முன் இருந்த கணினியை நோண்ட தொடங்கினாள்… 

அவளது பேச்சில் கோபம் கொண்டவன், “ஹலோ மேடம்… இப்ப மாட்டுனா… எங்களோட சேர்த்து நீயும் தான் மாட்டுவ… உனக்கும் தான் வேலை போகும்…” என்ற எச்சரிக்கையாக நினைவூட்டவும், சட்டென அவன் புறம் திரும்பியவள்

“கரெக்டா சொன்ன… ஆனா என்ன பண்ணுறது… டீம் போடும் போதே சொன்னேன்…என்னை உங்க கூட போட வேண்டாம்னு… கேட்கல… இப்ப பாருங்க… வேலை செய்யாத உங்களால வேலை செஞ்ச எனக்கும் சேர்த்து பிரச்சினை… ” என்றவளின் வார்த்தையில் அத்தனை நிமிர்வு அது அவளது நேர்மையால் வந்தது… 

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது… அங்கு வந்த டீம் லீடர் இவர்களை பார்த்து, “யூஸ்லெஸ் பெல்லோஸ்… எப்பபாரு பேசிட்டு அரட்டை அடிச்சுட்டு இருங்க…” என்று திட்டிவிட்டு ஹச்ஆர் அறைக்கு விரைந்தார் பதட்டத்தோடு… 

ஐவரும் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு தங்கள் கணினியில் தலையை நுழைத்து கொண்டனர் ஒருவித பீதியில்… 

உள்ளே நுழைந்தவரை, “எதுக்கு மேன் நீயெல்லாம் டீம் லீடர்னு சொல்லிக்குற…” என்று ஆரம்பிக்கும் நேரம், 

“இல்ல சார்… 90% வேலை முடிஞ்சுருச்சு…” என்று ஆரம்பிக்கும் போது,

“ஓஓ…. அப்ப மீதி வேலையை நான் பண்ணி தரட்டுமா…. இல்ல அதை அப்படியே கிளைன்ட் கிட்ட தரட்டுமா…?” என்னும் நக்கல் அவர் பேச்சில்… 

“சார் ஒரு திரீ டேஸ்ல முடிஞ்சுரும்… கொஞ்சம் டைம் மட்டும் வேண்ணும்… பிளீஸ் சார்…” என்க, 

“பிராஜக்ட் டைமிங் மூணு மாசம் தான்னு தெரியுமா சேகர்…” என்றபடி கணினியை நோண்ட, 

உள்ளே போன குரலில், “தெரியும் சார்…” 

“நம்ம கம்பெனி ரூல்ஸ் என்ன சேகர்…?” 

“சார்… இந்த ஒருமுறை மட்டும் எஸ்கியூஸ் பண்ணுங்க சார்…. ” என்று கெஞ்ச, ஹெச் ஆர் தீனாவோ அதே கரார் குரலில், 

“என்ன ரூல்ஸ்னு கேட்டேன் சேகர்…..” என்று கேட்டிட, 

“சொன்ன மாதிரி பிராஜக்டை முடிச்சு கொடுக்கணும்… நோ…”என்று சொல்ல வந்தவர், எச்சிலை முழுங்கி ஆள மூச்சை இழுத்து விட்டபடி, 

“முழுசா சொல்லி முடிங்க சேகர்…” 

“ம்ம்ம்… நோ எஸ்கியூஸ்… ஜாப்ல இருந்து பையர் பண்ணிருவாங்க…” என்றவர் இனி என்ன செய்வது என்று அறியாமல் திணறினார்…. 

அவர் சொல்லி முடிக்கும் நேரம் தீனாக்கு அழைப்பு வந்தது லேண்ட் லைனில்… 

இத்தனை நேரம் எதிரில் இருப்பவனிடம் புலியாக சீறி கொண்டிருந்தவன் ஒற்றை அழைப்பிலேயே பூனையாக மாறி போனான் அழைப்பது யாரென்று அறிந்து…

முகத்திலும் குரலிலும் சற்று பவ்வியத்தை கூட்டி, “ம்பச்ச்… அதுக்குள்ள விஷயம் போயிச்சு போல…” என்று புலம்பியபடி, அழைப்பை ஏற்றவர், 

“ஹலோ…” என்றது மட்டும் தான் தாமதம், 

“இதோ இப்பவே வரேன்…” என்றதோடு அந்த அழைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது… 

அதில் கடுப்பானவர், “என் வயசு என்ன எஸ்பிரியன்ஸ் என்ன… இப்படி பயந்து பயந்து இருக்க வேண்டி இருக்கு சே….” என்று புலம்பியபடி எழுந்தவர், முடிந்தமட்டும் சேகரை முறைத்துவிட்டு சென்றார் தீனா… 

சேகரும் தான் என்ன செய்வார், நம்பினார் பெரிதாக நம்பினார் அந்த ஐவரும் வேலையை முடித்து விடுவார்கள் என்று முடிந்த மட்டும் விரட்டிபிடித்தார் தான் ஆனாலும் அஜாக்கிரதை விளையாட்டுதனத்தால் வேலையில் கோட்டை விட்டிருந்தனர் இந்த பிராஜக்டில் இருந்தவர்கள்… 

லிப்டினுல் இருந்த தீனாவிற்கு நிச்சயமாக என்ன சொல்வது என்றே தெரியவில்லை… பயம் ஒருபுறம் என்றால் எரிச்சல் ஒருபுறம்… 

‘நிறைய கமிட்மென்ட் ஆகி போச்சு… நல்ல சேளரி வேற இல்லாட்டி இப்படி கைகட்டி நிக்கணும்னு அவசியம் இல்லாம இருந்து இருக்கும்… சரிதான் போன்னு வேலையை விட்டுட்டு போயிருப்பேன்… சே…’ என்று எண்ணியவர், 

‘இப்ப என்ன சொல்லுறது… எப்படி சமாளிக்குறது…?இதுல நம்ம தப்பும் இருக்குன்னு சொல்லி வேலையை தூக்கிட்டா என்ன பண்ணுவேன்… ‘ என்று யோசித்துக்கொண்டே வந்தவர் போக வேண்டிய தளம் வந்ததும் வயிற்று வலி வரும் போல் இருக்க, பயத்தை முகத்தில் காட்டாது வெளியேறியவர் அமைதியான முகத்துடன் அந்த அறைவாசலில் நின்று கதவை தட்டினார்… 

கம்பீரம், அத்தனை கம்பீரம் அந்த குரலில், “எஸ்…. கம் என்…” என்ற குரலில் உள்ளே நுழைந்தவரை வரவேற்றது ஒரு பெண் புலி… 

“மேடம்…” மெல்லிய குரலில் இழுக்க, 

சற்றும் தலை நிமிர்த்தி பார்த்திராதவள், கருப்பு நிற காட்டன் புடவையில் எந்த ஒப்பனையும் இன்றி கண்ணுக்கு மையிட்டு நெற்றியில் சிறு பொட்டுடன் முடியை தூக்கி குதிரை கொண்டை போட்டிருந்தவளின் வயது இருபதியெழு தான் என்று சொன்னால் சற்று ஆச்சரியம் தான்… 

முகத்தில் அத்தனை இறுக்கம், யாரும் எளிதில் வந்து பேசிவிட முடியாத அளவில் ஒரு அளவு கோளை வைத்திருந்தாள்… அவள் தியாவதனி… 

எதிரில் நின்றிருந்தவனை திரும்பியும் பாராது, “சிட்…” என்றிட, 

அமைதியாக உட்கார்ந்து கொண்டவன் எதுவும் பேசவில்லை தியாவாக ஆரம்பிக்கும்வரை… இது அவளது பழக்கம் தேவையற்ற பேச்சை விரும்பாதவள், சொல்லும் போது தேவையை மட்டும் பேச சொல்லும் ரகம்… 

சரியாக இரண்டு நிமிடம் தன் கணினியில் பார்வையை பதித்திருந்தவள், வேலை முடிந்ததும் திரும்பி,

“ரீசன்…” என்று ஒற்றை வார்த்தை தான் வந்தது அவளிடமிருந்து…

 

ஆனால் பதில்தான் பாவம் எதிரில் இருப்பவனிடம் இல்லையே… சற்று முழித்தவன், 

“டீம் சரியா அமையல மேம்… கேர்ளஸ்ஸா இருந்து இருக்காங்க… டீம் லீடரும் கொஞ்சம் லூசுல விட்டுட்டாரு…” என்று சொல்லும் போதே அவர்புறம் சில காகிதங்களை தள்ளி வைத்தாள் தியா…

“என்னது மேம் இது…” என்று கேட்க, 

“அந்த பேப்பரை உங்க பக்கம் வச்சது நீங்க அதை பார்க்க தான்… அது என்னனு நான் சொல்லுறதுக்கு எதுக்கு உங்க கிட்ட தரணும் நான்…?” என்றபடி மீண்டும் கணினியின் புறம் திரும்பி கொள்ள, பல்லை கடித்தார் தீனா…

‘எவ்வளவு திமிர்…’ என்ற எரிச்சலோடு, வெளியே, 

“சாரி மேம்…” என்றதோடு அந்த பேப்பர்களை எடுத்து பார்க்க லேசான அதிர்ச்சி அவர் முகத்தில்… 

எதிர்பார்த்தும் எதிர்பாராத ஒருமுடிவு தான் இது… தியாவை பற்றி கேள்வி பட்டிருக்கார் தான் இப்படியான விஷயத்தில் ஆனால் இதுவே முதல் முறை நேரில் பார்ப்பது… 

அதனால், “மேம்… ஒரு வார்னீங் குடுத்து பார்க்கலாமே.. இப்படி பண்ணியே ஆகணுமா…?” என்ற கேள்வியில் மீண்டும் ஒரு பேப்பரை அவன் புறம் தள்ளி வைத்தாள் தியா… 

அது என்னவென்பது போல் யோசனையுடன் எடுத்து பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சியே… 

“மேம்…” அதிர்ச்சியில் குரல் சற்று அதிகமாகவே வெளியே வந்தது… 

ஆனால் எதையும் சட்டை செய்யாமல், பொறுமையாக இருக்கையில் சாய்ந்தமர்ந்தவள், 

“ஷ்ஷ்ஷ்….” என்ற நிதானமான பார்வை…

“டூ  திங்ஸ் மிஸ்டர் தீரன்….” என்றபடி எதிரில் இருப்பவனை ஆழ்ந்துபார்த்தவள், 

“என்னை பொறுத்தவரை ஒரு வொர்க் கமிட் பண்ணிட்டா அதை ஒழுங்கா முடிக்கணும்… இல்லாட்டி ஒதுங்கி நின்னுறணும்… அந்த டீம்ல இருந்தவங்களுக்கு கேர்லெஸ்… அதொட ரிசல்ட் தான் இந்த டிலே… எனக்கு இப்படி பட்டவங்க தேவையில்லை… ” என்றவளை பார்த்து முழித்தவன் மெல்லிய குரலில், 

“ஆனா அந்த டீம்ல ஐஞ்சு பேர் மேம்….” என்றவனை பார்த்து இகழ்ச்சி புன்னகை ஒன்றை காட்டியவள், 

“யார் வேலை செய்யுறா இல்லையான்னு கூட நோட் பண்ணாம இருக்க நான் என்ன நீங்களா மிஸ்டர் தீரன்…” என்ற வார்த்தையில் முகம் கருத்து போக, தியா மேலே தொடர்ந்தாள்… 

“ஸ்வேதா ஒரு டெடிகேட்டடு கேண்டிடேட்… இதை போன பிராஜக்ட்ல பார்த்தேன் சேம் ஹியர்… இன்னும் தெளிவா சொல்லணும்னா அவ மட்டும் தான் ஒழுங்கா வொர்க் பண்ணது… மிஸ்டர் சேகரும் அவர் இன்புட்டை எவ்வளவு தர முடியுமோ அதை கொடுத்து இருக்காரு… அண்ட் அந்த நாலு பேரை கண்டிரோல் பண்ணவும் டிரை பண்ணி இருக்காங்க… பட் திஸ் இஸ் நாட் எ ஸ்கூல்… அவங்க வொர்க்கை அவங்க தான் பொறுப்பா பண்ணணும்… இந்த மாதிரி நாலு பேர் இந்த கம்பெனிக்கு தேவையில்ல… ” என்றவளின் குரலில் அடக்கிய கோபம், 

“அவங்களுக்கு வார்னிங் குடுத்தாலும் இதையே திரும்பி பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்…? தெரியாம பண்ணுற மிஸ்டேக் அக்ஸெப்ட் பண்ணலாம் இன்னொரு சான்ஸ் தரலாம் ஆனா இந்த அலட்சியம்… நோ எஸ்கியூஸ் இன் திஸ் பிளேஸ்…” என்று நிறுத்த தீரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

 

‘அனைத்தையும் கவனிக்கின்றாள் என்று புரிந்து கொண்டான்… அதை நானும் கவனித்து இருக்கின்றேனா என்றும் கவனித்திருக்கிறாள் என்பதை கையில் இருக்கும் தன்னுடைய ஒருமாத கால வேலை நிறுத்ததிற்கான சஸ்பென்ஷன் பேப்பர் பதில் சொல்லியது…

எவ்வித பதிலும் இல்லை அவனிடம் அதை அவளும் எதிர் பார்க்கவில்லை போலும்… மேலே தொடர்ந்தாள், 

“செகண்ட் திங்…” என்றவளின் உடல் மொழி இறுகியது, கண்கள் கூர்மையை காட்டியது, 

“இங்க எதுவும் ஈஸியா ஃபிரியா கிடைக்காது… எல்லாத்துக்கும் உழைக்கணும்… எல்லாத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கு… நான் இந்த வயசுல இங்க உட்கார்ந்து இருக்கேனா அதுக்கான விலை மதிப்பு… என் புத்தி…” என்று நெற்றியை காட்டியவள், 

“ஒன்னும் சும்மா தூக்கி கைல குடுக்கல, கம்பெனியோட சிஈஓ போஸ்டை… அதுக்கு நான் தகுதி தான்னு காட்டினேன், உழைச்சேன், புது டெக்னாலஜி ஐடியா யூஸ் பண்ணினேன்… ” என்றவளை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கியவன், 

“இல்ல மேம்…” என்னும் போதே, 

“ஷ்ஷ்ஷ்…” என்று புருவம் சுருக்கி தலையை லேசாக திருப்பி தீனாவின் பேச்சுக்கு தன் எதிர்ப்பை காட்ட, அமைதியாகி போனான் முற்றிலும்…

“உங்களுக்கு உங்க ஏஜுக்கு நான் அதிகாரம் பண்ணுறது இங்க இருக்குறது பிடிக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்… ” என்று மேஜையை குத்தி காட்டியவள், 

லேசாக தோளை உலுக்கி, “அது என் பிராப்ளம் கிடையாது… அதுனால நான் இந்த முடிவு…” என்றிட என்ன சொல்வது என்றே தெரியவில்லை தீனாவிற்கு…

 

பொறாமை தான் அதில் விளைந்த எண்ணங்கள் இப்பொழுது அவன் வேலைக்கு ஆபத்தாகி போனது… 

இங்கு எதிரில் இருப்பவளிடம் எதையும் பேசிவிட முடியாது என்று தெரிந்துக்கொண்டான்… எதிர்த்தால் எதிர்க்கலாம்…? ஆனால் அமைதியாக ஆளுமை செய்பவளிடம எவ்வாறு அணுகுவது என்று பாவம் தீனாவிற்கு தெரியவில்லை… 

அமைதியாக ஒரு பெருமூச்சை விட்டவன், அவளது தண்டணையை பெற்று கொள்ள எண்ணி, “சாரி மேம்…” என்றிட, 

உதட்டோரம் ஒரு கேலி புன்னகை அவளிடம் ஆனால் வார்த்தைகள் வேறொன்றும் இல்லை… 

அவ்வளவு தான் பேச்சு வார்த்தை என்னும் ரீதியில் தியா தன் வேலையில் கவனத்தை திருப்ப, புரிந்துக்கொண்டவன் போல் அமைதியாக எழுந்துக் கொண்டவன் வாசலை நோக்கி நகர போகும் முன், தியா

“அப்புறம்…” என்று நிறுத்தியவள், வெளியே செல்ல இருந்தவன் அவள் குரலில் திரும்பி பார்க்க, 

“உங்களோட இந்த ஒன் மன்த் சஸ்பென்ஷன்ல உங்க எல்லா கிரெக்டிஸும் போயிரும்… நோ மோர் ஆஃபர்ஸ் அண்ட் வேலியூஸ் ஆல்வேஸ்… சோ பெட்டர் இன்னும் இங்க இருக்கணுமானு பொறுமையா யோசிச்சு நீங்களே முடிவு பண்ணுங்க…” என்றவளை பரிதாபமாக பார்த்து வைத்தவனுக்கு வேறு வழியின்றி, 

“ஓகே மேம்…” என்ற பதிலை தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை…

வெளியே சென்றவன் நொந்தே போனான் உண்மையில் , கையில் இருக்கும் காகிதங்களில் பார்வை பதிந்தது… 

“ரெண்டுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல… அந்த நாலு பேருக்கு டைரக்டா வேலையை விட்டு போன்னு சொல்லிட்டாங்க என்னை சொல்லாம சொல்லுறாங்க சஸ்பென்ஷன் குடுத்து…” என்று மெல்லிய குரலில் புலம்பியவன் இரு கைகளில் இருந்த சஸ்பென்ஷன் காகிதத்தையும் ட்ரமினேஷன் காகிதத்தையும் மாற்றி மாற்றி பார்த்தவருக்கு ஒரு பெருமூச்சு தான் வந்தது… 

ஒன்றும் செய்வதறகும் இல்லை சொல்லுவதற்கும் இல்லை என்று புரிந்து அமைதியாக லிப்ட்டை நோக்கி நடந்தார் அன்றொரு நாள் செய்த தப்பை எண்ணி… 

இங்கு அறையில் தியாவின் நிலையோ வேறாக இருந்தது… அமைதி என்பது டன் கணக்கில் முகத்தில் தெரிந்தாலும் மனம் புயல் வீசும் கடலை போல் இருந்தது… 

அமைதியாக பென்சிலை கொண்டு டேபிளில் தட்டியபடி இருந்தவளின் எண்ணங்கள் சிதறிக் கொண்டிருந்தது பட்ட கஷ்டங்களை எண்ணி… 

சில நிமிடங்கிளில் மீண்டும் அறை கதவு தட்டபடவும், எந்த சலனமும் காட்டாத அதே முகத்துடன் “எஸ் வென்கட்….” என்றதும் உள்ளே நுழைந்தான் அவளது பிஏ… 

மாலை கிளம்புவதற்காக தன் இருக்கையில் இருந்து எழுந்த மகிழனின் மனம் அலாரம் அடித்தது போல் உள்ளே நுழைந்தான் பிரவீண்… 

“நினைச்சேன்… இப்பதான் நினைச்சேன்… கிளம்பலாம்னு எந்திரிச்சு இருக்கோமே இப்ப நீ வருவன்னு நினைச்சேன்… அதே மாதிரி வந்து நிக்குற…” என்றபடி முறைக்க, 

“சார்…. அது வந்து ரவி சார் இப்பதான் கூப்பிட்டு இந்த பைலை கொடுத்தாங்க…” என்றபடி முழித்தவனை பார்த்து பல்லை கடித்தவன், 

“எல்லாத்துக்கும் ஒரு பதில் இருக்கும் ரெடியா… ” என்றதோடு மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன் கையை நீட்டினான் பைலுக்காக…. 

பிரவீணுக்கு லேசாக சிரிப்பு வந்துவிட, எதுவும் சொல்லாது அதை மகிழனின் கையில் கொடுத்தாலும், போலிஸ்காரன் கண்ணில் இருந்து எதுவும் தப்புவதற்கான வழியில்லாமல், 

“எதுக்கு சிரிச்ச…?” என்ற கேள்வியில் முதலில் வியந்தாலும் பின் சுதாரித்து, 

“ஒன்னுமில்ல சார்….” கோப்பையை புரட்டியவன் புருவங்கள் சுருங்கி பார்வை கூர்மையுடன் இருந்தாலும் கேள்வி நிற்கவில்லை… 

“எதுக்கு சிரிச்ச…?” 

“இல்ல சார்…நா…” என்று முடிக்கும் முன்பே, 

“நான் உன்கிட்ட எதுக்கு சிரிச்சன்னு தான் கேட்டேன்… ஏதாச்சும் இருக்கா இல்லையான்னு கேட்கல….” என்றபடி நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்தி என்னவென்று கேட்கவும், 

உண்மையில் ஒருநொடி திணறிதான் போனான் பிரவீண் என்னும் போலிஸ்காரன்… 

“சார்… அது ஸ்கூல் பசங்க மாதிரி எப்படா மணி அடிப்பாங்க எப்படா வீட்டுக்கு ஓடலாம்னு இருக்கீங்கன்னு நினைச்சேன் லேசா சிரிப்பு வந்துருச்சு… ” என்று பல்லை காட்ட, 

அவனை ஒருபார்வை பார்த்தவன் எதிரில் இருந்த கோப்பையில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கையெழுத்திட்டு முடித்ததும் அதை மூடி மீண்டும் பிரவீண் கையிலேயே கொடுத்தவன், 

இருக்கையில் இருந்து எழுந்தபடி, “நான் எல்லாம் கௌண்டமணி சார் பேன்…” என்றதோட பிரவீணின் முதுகை தட்டிவிட்டு செல்ல,

 

முதலில் புரியாமல் முழித்தவன் பின் தான் அவரது டைலாக் ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல வேலை செய்ய மாட்டேன்….’ என்ற வசனம் நினைவிற்கு வந்தது… 

அதில் புன்கைத்தபடி வெளியேறியவன், மகிழன் ஜெட் வேகத்தில் சென்றிருந்ததை பார்த்து மேலும் சிரித்துக்கொண்டான் அவனது குணத்தை எண்ணி… 

இங்கு வீட்டிற்குள் நுழையும் போதே, சோபாவில் மடியில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்த அண்ணனை கண்டவன் அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து டேபிளில் காலை நீட்டி அமர்ந்து, 

“ம்மா…. உன் பிள்ளை வந்துட்டேன்… குடிக்க ஏதாச்சும் கொண்டு வா ம்மா…” என்று கத்த, 

எதிரில் இருப்பவனிடம் எந்த அசைவும் இல்லை… அதை கவனித்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை முதலில்… 

சற்று நேரத்தில் சௌந்தர்யா கையில் ஒரு டம்ளருடன் வர, அதை வேகமாக வாங்கியவன் முகம் சுருங்கி போனது கடுப்பில்…. 

அதை கவனித்தவர், “என்ன டா…?” 

“என்ன… என்ன டா…? வேலைல இருந்து வந்தவன் ஏதாச்சும் வயித்து கேட்டா இப்படி தான் தண்ணீ மட்டும் கொண்டுவந்து கொடுக்குறதா…? மனசாட்சி இல்ல…?” என்று கேட்கவும், 

“டேய்… இப்பதானே வந்த… நீ கேட்டதும் எல்லாம் ரெடி பண்ணி குடுக்க நான் ஒன்னும் மந்திரவாதி இல்ல… இப்போதைக்கு இதை குடிச்சுட்டு போய் குளிச்சு பிரெஸ் ஆயிட்டு வா… எதாச்சும் செஞ்சு தரேன்…” என்று சமையலறை பக்கம் திரும்ப போக, 

“என்னம்மா நீங்க… நான் வந்தா ஏதாச்சும் கேட்பேன்னு தெரியாதா…? டீயாச்சும் போட்டு வச்சு இருக்கலாம்ல…” என்று முனுமுனுத்தபடி எழுந்து நிற்க, 

“ம்ம்ம்… அதுக்கு டைய்லியும் ஒரே நேரத்துக்கு வீட்டுக்கு வரணும் ஒருநாள் எட்டு மணி ஒரு நாள் ஆறு மணி ஒரு நாள் திருடன் மாதிரி ஒருமணின்னு வந்தா எப்படி செய்ய முடியும்…” இடுப்பில் கை வைத்து முறைத்தபடி கேட்கவும்,

“ஹே… கூல் ம்மா… நான் சும்மா தான் சொன்னேன்… நான் போய் குளிச்சுட்டு வரேன்…”  என்று கண்ணம் தட்டியவன் மீண்டும் அண்ணனை ஒரு பார்வை பார்த்தபடி தன் அறைக்கு சென்றான் ரெப்ரஸாக..

எல்லாம் முடிந்து இருபது நிமிடம் கழித்து மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தவனுக்கு எதிரில் அதே நிலையில் தான் இருந்தான் தமிழ் செல்வன்… 

“என்னாச்சு அண்ணா… ஏதாச்சும் பிரச்சினையா…?” என்று கேட்டவனுக்கு தெரியவில்லை இந்த கேள்வியால் திருப்பங்கள் நிறைய காண போகிறோம் என்று… 

தொடரும்….

 

 

 

 

 

 

 

Advertisement