Advertisement

UD-19: 

ஆனால் கொஞ்சம் நேரம் செல்லட்டும் என்று பொறுமை காத்தவன், முழுதாக இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் அவர்கள் முன் நின்றான் அப்பாவி போல்… 

“கியா சாப்… கர் தூண்தர்யோ கியா…?(வீட்டு தேடுறீங்களா..?)” என்று ஹிந்தியில் கேட்க, பாஷை தெரியாத மூவரும் முழித்தனர் ஒன்றும் புரியாமல்… 

அவள் முழிப்பதை கண்டு, “கியா சாப் தமிழா…?” என்று கேட்கவும், ராஜின் முகத்தில் அத்தனை பிரகாசம்… 

“ஆமா சார்… உங்களுக்கு தமிழ் தெரியுமா…?” என்று கேட்கவும், தன் நாடகத்தை தொடர்ந்தான் திவ்யாவின் மீது ஓர் பார்வை வைத்தபடி… 

“ஆமா சார்… சொந்த ஊர் தமிழ் தான்… ஆனா பிழைப்புக்காக இங்க வந்தேன்… நீங்க…?” பொய்யை அழகாக தொடர்ந்தான் நம்பும்படி… 

“நானும் தான் சார்…” என்ற ராஜ், எதிரில் இருப்பவன் பார்வை அடிக்கடி திவ்யாவின் மீது படிவை கவனித்து, 

“உங்க பேரு சார்…?” என்று கேட்டு தன்னை பார்க்க செய்ய, 

“மாலிக்… நீங்க…?” என்றவனின் பார்வை இப்பொழுது வரதனின் மீது விழுந்தது… 

“ராஜ்… இவங்க ரெண்டு பேரும் என் பசங்க… எங்களுக்கு ஒரு உதவி பண்ண முடியுமா சார்…?” என்றவனுக்கு, 

“கண்டிப்பா சார்… நீங்க ரொம்ப நேரம் திணறிட்டு இருக்குற மாதிரி இருந்துச்சு அதான் உதவி பண்ண வந்தேன்…” வார்த்தையில் அத்தனை தேன் ஒழுகியது… 

“ரொம்ப நன்றிங்க… எங்களுக்கு தங்க ஒரு இடம் பார்த்து தர முடியுமா சார்…?” என்று கேட்டவுடன், இதற்காகவே காத்திருந்தது போல, 

“முடியும் சார்… வாங்க போலாம்… எனக்கு தெரிஞ்ச இடம் தான்…” என்று அழைத்து சென்ற இடம் மிகவும் இடுக்காக சின்னதாகுவும் இருந்தது… 

அதில் சிறியவர்கள் முகம் சுழிக்க, “இங்க இந்த மாதிரி வீடு தான் நம்ம வசதிக்கு கட்டுபடியாகும் சார்… வேண்டாம்னா சொல்லுங்க வேற வீடு பார்க்கலாம்…” என்க, உடனே ராஜ்

“இல்ல இல்ல சார்… இதுவே போதும்…” என்று ஒப்புக்கொள்ள ஒருவாரம் ஓடியது கண்களை மூடி திறக்கும் முன்… சிரியவர்கள் வீட்டில் இருக்க, காலை வெளியே செல்லும் ராஜ் இரவிற்கு தான் வீட்டிற்கே வருவதாக இருந்தது… 

இதை கவனித்த மாலிக், “என்ன விஷயம் ராஜ்…? வேலை ஏதாச்சும் வேண்ணுமா…? ரொம்ப தேடி அலையுற மாதிரி இருக்கு…” என்று கேட்க, ராஜ்விற்கு எப்படி கேட்பது, என்னவென்று சொல்வது என்று தயக்கமாக இருந்ததே தவிர பயமோ குற்றுணர்வோ எதுவும் இல்லை… 

அவரது தயக்கம் கண்டு, “சும்மா சொல்லுங்க ராஜ்… நமக்குள்ள என்ன தயக்கம்…?” என்று ஊக்குவிக்க, சற்று தெளிந்தவன், 

“அது என் நிலைமை கொஞ்சம் சரியில்லை… சொந்தமா ஏதாச்சும் பண்ணலாம்னா கையில காசு இல்ல… இதுல இந்த பொண்ணு வேற இருக்கா… இவளுக்கு கல்யாணம் காட்சியெல்லாம் பண்ணி வைக்குற நிலைமைல நான் இல்ல… அதான் அவளை…” என்று இழுக்கவும், 

சட்டென புரிந்துகொண்டவன், “வித்துரலாம்னு இருக்கீங்க… சரியா…?” என்று கேட்கவும், பயத்தில் வியர்த்தே விட்டது ராஜிற்கு… 

“பதறாதீங்க ராஜ்… இதெல்லாம் இங்க சகஜம்… இங்க அதுக்குன்னு தனியா ஊரே இருக்கு… பார்த்துக்கலாம் விடுங்க…” என்று சாதாரணம் போல பேசவும், உள்ளுக்குள் பெரும் நிம்மதி வந்தது அப்பொழுது தான்… 

“ரொம்ப நன்றி மாலிக்… நீ தப்பா எடுத்துக்குவியோன்னு பயமா இருந்துச்சு… இவளை கூட வச்சு இருக்குறது நெருப்பை கட்டிக்கிட்டு சுத்துற மாதிரி இருக்கு…” என்று சலித்துக்கொள்ள, 

“ம்ப்ச்ச்… வந்த அன்னைக்கே சொல்லி இருந்தா எப்பவோ வேலையை முடிச்சு இருந்து இருக்கலாம்…” என்றவன், 

“பொண்ணு செம அழகு… இவளுக்கு எல்லாம் நல்ல ரேட் போகும்… நான் பேசி முடிச்சு தரேன்…” என்றவன் அன்று மாலையே திவ்யதர்ஷினியை அழைத்துக்கொண்டு சென்றனர் ஒரு பங்களாவிற்கு… 

‘ம்மா… ம்மா…’ என்ற ஜபம் மட்டுமே திவ்யதர்ஷினியின் உள்ளத்தில்… என்னவோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது… நல்லவன் என்று நம்பிய மாலிக்யின் பார்வை மாறியது தொடுதல் புதிதாக இருந்தது… 

வரதன் நானும் வருவேன் என்று ஒற்றை காலில் நின்றவனை அதட்டி வேண்டாமென்று விட்டுவிட்டு தன்னை மட்டும் அழைத்து வந்தது புதிதாக இருந்தது… 

பங்காளாவின் உள்ளே நுழைந்தவர்களை ஒரு திருநங்கை வந்து வரவேற்க, அனைத்தையும் பயத்தோடு வேடிக்கை பார்த்தாள் சின்னவள்… 

மாலிக், “இங்கேயே இருங்க… நான் வந்துறேன்…” என்றவன் உள்ளே செல்ல, இருவருக்கும் குடிக்க பழச்சாறு தரபட்டது… 

அமைதியாக வாங்கி குடித்தவளை, அருகில் வந்த திருநங்கை ஹிந்தியில், “துமாரா நாம் கியாஹே பேட்டி…?” என்று வினவ, ஒன்றும் புரியவில்லை சின்னவளுக்கு… 

அவளுக்கு புரியவில்லை என்று புரிந்து கொண்ட திருநங்கை, “அந்தர் மச்சி ஹாய்… ஆவோ தேகோனா…” என்று வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல பார்க்க, அவளோ திரும்பி தந்தையை பார்த்தாள் பதற்றத்தோடு… 

அவரோ எந்த உணர்ச்சியும் இன்றி, “போ….” என்று மட்டும் சொல்ல, 

ஏனோ தந்தை இருக்கும் தைரியத்தில் திருநங்கை இழுத்த இழுப்பிற்கு உள்ளே செல்ல அங்கு பெரிய மீன் தொட்டி ஒன்றை காட்டி கொடுத்தார் அந்த திருநங்கை… 

அதை பார்த்து கண்கள் மலர்ந்தவள், ‘இதை தான் சொல்லி கூப்பிட்டு இருப்பாங்க போல… சே… கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்…’  என்று நினைத்தபடி மீன்களை ரசித்தவளுக்கு வெளியே பேச்சு குரல் கேட்கவும், அங்கு சென்று பார்த்தவளுக்கு தந்தையின் கையில் பெரிய பணகட்டை கண்டவள்,

 

‘கடன் வாங்கதான் வந்தாங்க போல….’ என்று நினைத்து, அமைதியாக நிற்க, 

ராஜோ முழுதாக மூன்று லட்சத்தை பார்த்த சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்தவர், மாலிக்குடன் எழுந்து பணத்தை தந்த பெண்மணியிடம் நன்றி கூறி வெளியேறினான் மகள் என்ற உறவை மறந்து… எத்தகைய கொடுமையை இளைத்திருக்கிறோம் என்று உணராது தலைமுழுகி சென்றான் பணத்தோடு…

தந்தை தன்னை கண்டுக்கொள்ளாது செல்லவும், ஒன்றும் புரியாது பயத்தோடு “ப்பா…” என்று அழைத்து ஒரடி முன்வைக்க, அவளது கையை இறுக பற்றினாள் அந்த திருநங்கை… 

திரும்பி அவ்விடத்தையும் திருநங்கையையும் பணம் தந்த பெண்மணியையும் ஒருமுறை பார்த்தவளுக்கு புரிந்தது… தன்னை விட்டு செல்லும் தந்தையை பார்த்தாள்… 

அத்தனை அமைதி அவளிடம்… போராடவில்லை, கத்தவில்லை, கெஞ்சவில்லை ஏன் எதையும் யோசிக்கவும் இல்லை… அமைதி மட்டுமே…  இந்த அமைதிதான் பல வருட தவமாக இருந்து இறுதியில் காளியாக உருமாற செய்தது பெண்ணவளை… 

கால்களை கட்டியபடி அமர்ந்திருந்தவளின் முன் வெகுநேரம் அமர்ந்திருந்த லேகாவிற்கு பாவமாக இருந்தது திவ்யதர்ஷினியை காண… 

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க போற…? தோடாசே கானாகாலியே…” என்று அவள்முன் தட்டை நகர்த்தி வைக்க, நிமிர்ந்தாள் இல்லை… 

எதிரில் இருப்பவர் என்ன பேசினார் என்று புரியவில்லை, ஆனால் தட்டை நகர்த்தி வைத்ததில் தெரிந்தது தன்னை உண்ண சொல்கிறார் என்று… 

மனம் பொறுக்கவில்லை, ‘எப்படி என்னை இங்க இவங்க கிட்ட விட்டுவிட்டு போக தோணுச்சு…? நானும் அண்ணனை மாதிரி அவங்களுக்கு பொறந்த பொண்ணு தானே…? பாசம் கூட வேண்டாம் அடிப்படை அக்கறை கூட இல்லாம எப்படி போச்சு… ஒருவேலை அம்மா இருந்திருந்தா இப்படிப்பட்ட இடத்துல வந்து நின்னு இருப்பேனா…?’  என்று மீண்டும் மீண்டும் இதையே நினைத்து கொண்டிருந்தவள் அந்த படுக்கையின் ஓரத்தில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்ததோடு சரி… 

அன்றைய நாள் முழுவதும் அவள் நகரவே இல்லை… அங்கிருந்த பெண்கள் சிலர் வந்து பேசி பார்க்க, பதில் இல்லை அவளிடம்… 

சிறிது நகர்ந்து, தரையில் கால் வைத்தால் கூட உடல் நெருப்பில் பட்டுவிடுமோ என்ற பயம் உள்ளுக்குள் தோன்ற மேலும் மேலும் உடல் குறுகி போனாள்… 

இவளது விஷயம் அங்கிருந்த தலைமை பெண்மணி, ‘தேவியம்மா…’ என்பவரின் காதிற்கு செல்ல, இவர் இருக்கும் அறைக்கு வந்தார் தன் பெருத்த உடலை தூக்கி கொண்டு… 

“தும் சே நாம் கியா…?” என்று அவளது முகநாடியை பற்றி நிமிர்த்தி கேட்க, 

பயத்தில் முழித்தபடி இருந்தவளுக்கு பாஷை புரியவில்லை என்று ஓரளவிற்கு புரிந்து கொண்டவர், “நேம்… யூ நேம் வாட்…?” என்று தெரிந்த ஆங்கிலத்தில் கேட்க, 

தட்டு தடுமாறி பயத்தோடு, “திவ்யதர்ஷினி…” என்று மெல்லிய குரலில் சொல்ல, 

“அச்சா… பகுத்து சுந்தர் நாம்… ஆனா அதை இனி மாத்தி சின்னதா வச்சுக்கலாம்… டிகே…? தியா… துமாரா நாம் இனி தியா…” என்க, அவர் பின் நின்றிருந்த, சில பெண்கள் கைதட்டி அதை ஆதிரிக்க, கண்கள் கலங்கியது திவ்யதர்ஷினிக்கு…. 

சுற்றி இருந்தவர்களை பார்வையால் அளந்தாள், அங்கிருந்த பெண்களின் அலங்காரமும், அணிந்திருந்த உடையின் விதமும் சின்னவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… 

புடவை தான் என்றாலும் முகம் சுழிக்கும் படி இருந்தது அவர்களின் தோற்றம்… பிடிக்கவில்லை எதுவும், அவளது பார்வையும் முக பாவனையையும் கவனித்த தேவிம்மா, 

“இனி இது தான் உனக்கும்… எதுவும் மாற போவதில்லை… நீயா புரிஞ்சு நடந்துக்கோ… சாப்பிடாமா இருந்தா ஒன்னும் ஆக போறதில்லை… முழுசா ரெண்டு லட்சம் குடுத்து வாங்கி இருக்கேன் உன்னை… ஒழுங்கா நடந்துக்கோ…” என்றவர், 

அங்கிருந்த மற்றொரு பெண்ணை பார்த்து, “புரியுர மாதிரி சொல்லி, சாப்பிட வை…” என்றுவிட்டு செல்ல, அந்த அறைக்குள் இருபெண்கள் மட்டும் இருந்தனர் கடைசியாக… 

செல்லும் அனைவரையும் பார்த்தவள், மீண்டும் தலையை குனிந்து கொண்டாள் அமைதியாக… 

“திவ்யதர்ஷினி…” என்று அழைத்தபடி அவள் அருகில் வந்தமர்ந்தவளை நிமிர்ந்து பார்க்க, 

“நான் தமிழ்தான்… சென்னை… இவ மலையாளி…” என்று அறிமுகமாகி கொள்ள, சின்னவளின் முகத்தில் சந்தேக ரேகை… 

அதை கண்டவள், “என்ன அப்படி பார்க்குற…? இங்க எல்லா ஸ்டேட்ல இருந்தும் பொண்ணுங்க இருக்காங்க…” என்க, 

“நீங்க எப்படி இங்க…?” என்று வாய்திறந்தவளை பார்த்து இகழ்ச்சியாக ஒரு புன்னகை சிந்தியவள், தட்டில் இருந்த சப்பாத்தியை பிட்டு அவளுக்கு ஊட்ட, திவ்யதர்ஷினி வாய்திறக்கவில்லை…

“சாப்பிடு டா… இப்படியே இருக்குறனால எதுவும் இங்க இனி மாறாது…” என்ற வார்த்தையில் திவ்யதர்ஷினியின் கண்கள் கலங்கியது… 

“எனக்கு இது வேண்டாம்… புடிக்கலை…” என்றவளை பார்க்க பாவமாக இருந்தது…

ஒருபெருமூச்சுடன்,”இங்க யாரும் புடிச்சு போய் இருக்கல… எல்லாரும் சூழ்நிலை கைதியா இருக்காங்க…” என்றவளுக்கும் கண்கள் கலங்கியது, 

“என்னை கடத்திட்டு வந்தாங்க… கோவிலுக்கு போனேன் லவ் பண்ண பையன் கூட… தீடிருன்னு மூக்குல எதையோ வச்சு அழுத்தினான்… அவ்வளவுதான் நியாபகம் இருக்கு… கண் முளிச்சு பார்த்தா இங்க இருக்கேன்…” என்றுவிட்டு மீண்டும் ஊட்ட இப்பொழுது வாய் திறந்தாள் சின்னவள், 

“தப்பிச்சு போயிருக்கலாமே…ஏன் இங்கையே இருக்கீங்க…?” அப்பாவிதனமான முகம், வெளியேறிவிட மாட்டோமா என்னும் நற்பாசை அந்த விழிகளில் பார்க்க முடிந்தது… 

“முயற்சி பண்ணாம இருந்து இருப்போம்னு நினைக்குறியா…?” என்ற லேகா தன் புடவையை தூக்கி காலை காட்ட, திவ்யதர்ஷினியின் கண்கள் விரிந்தது அதிர்ச்சியில்… 

“என்னதிது இவ்வளவு பெரிய தீகாயம்….?” என்றவளுக்கு உணவை ஊட்டியபடி, 

“தப்பிச்சு போக முயற்சி பண்ணி தண்டனையா வாங்கி கட்டிகிட்டது… நான் மட்டும் இல்ல இங்க மொத்தம் பதினைஞ்சு பேரு இருக்கோம்… எல்லாருக்கும் இப்படி ஏதாச்சும் தழும்பு இருக்கும்… இதோ இவ…” என்று அருகில் இருந்தவளை காட்டி, 

“இங்க மாட்டிக்கிட்டு சீரழியுறதை விட செத்துறலாம்னு விஷம் குடிச்சா… ஆனா காப்பாத்தி விட்டு அடிபின்னி எடுத்துட்டாங்க…” என்ற லேகா, திவ்யதர்ஷினியின் முகத்தை பார்த்து, 

“இது ஒருவழி பாதை டா… நம்மளை இங்க கொண்டு வந்து தள்ளுறவங்களுக்கு மனசாட்சி இல்ல… நம்ம கிட்ட வரவங்களுக்கும் மனசாட்சி இல்ல… நமக்கு இங்க இருந்து தப்பிக்க முடியாது… சாகணும்னு நினைச்சா செத்துறணும் அதில்லாம பிழைச்சுட்டோம்னா நரக வேதனை… இப்படி வேதனையை அனுபவிக்குறதுக்கு பதில் குடுக்குற சாப்பாட்டை சாப்பிட்டு, சொல்லுறதை செஞ்சுட்டு போயிட்டா இந்த உடம்புல உயிர் இருக்குறவரை பிரச்சினை இல்லாம போயிரும்…” என்ற வார்த்தைகள் சின்னவளை முழுதாக கொன்றது… 

“அப்ப இங்க இருந்து போகவே முடியாதா…?” என்ற அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய, பாவமாக இருந்தது லேகாவிற்கு… 

“ம்ம்ம்… கடவுளா பார்த்து காப்பாத்துனா உண்டு…” என்னும் போது உள்ளே வந்த திருநங்கை, 

“உஸ்கோ தையாரு கரோ… (உனக்கு ஆள் வந்திருக்கு)…” என்று சொல்லவும், 

“வரேன்….” என்றவள், திவ்யதர்ஷினியிடம்

“போக போக பழகிருவ…” என்றதோடு எழுந்து செல்ல, அவள் கரம் பிடித்து தடுத்து, 

“எங்க போறீங்க விட்டுட்டு…?” என்று கேட்டதில் சங்கடமாக உணர்ந்த லேகா, 

“அரைமணி நேரம் தான்… வந்துறேன்…” என்று கன்னம் தட்ட, புரிந்துக்கொண்டாள்…

லேகாவுடன் அந்த மலையாள பெண்ணும் சிறு புன்னகையுடன் தலையசைத்து வெளியேற, உள்ளுக்குள்

‘ஒருநாள் நானும் இப்படி ஆயிருவேனா…?’ என்ற எண்ணமே உயிரை கொன்றது… 

இருதினங்கள் மெல்ல மெல்ல அந்த வீட்டை சுற்றி வந்தாள், பாஷை தெரியாததால் அமைதியே மொழியானது… லேகாவும் மலையாள பெண்ணுமே அவளை நெருங்கினர்…

ஒருவாரம் கடந்த நிலையில் மனதளவிலும் உடலளவிலும் முற்றிலும் ஒடுங்கி போனாள் திவ்யதர்ஷினி… காண கூடாத காட்சிகள், பதிமூன்று வயதில் அறிய தேவைபடாத விஷயங்கள் என அனைத்தும் காண வேண்டிய கொடுமை நேர்ந்தது… 

அவளை அவள் போக்கில் விட்ட தேவிம்மா ஒருவாரத்திற்கு பின் தன் வேலையை காட்டினார்… 

“அவளை ரெடி பண்ணு…” என்ற படி வாயில் பீடாவை வைத்து மெல்ல, 

“தேவிம்மா, தியா சோட்டி லடுக்கி ஹே…” என்று பேச வாய் திறக்கும் முன், முறைத்து பார்த்த தேவிம்மா, 

“நான் ஒன்னும் இங்க சத்திரம் வச்சு நடத்தல… ஓசில சாப்பாடு போட… ரெண்டு லட்சம் குடுத்து அவளை வாங்கினது கண்ணு முன்னாடி வச்சு அழகு பார்க்க இல்ல… சொன்னதை செய்… ஜாவோ…” என்று கத்த, பயத்தில் கையை பிசைந்தபடி திவ்யதர்ஷினியிடம் வந்து நின்றாள் லேகா… 

ஜன்னல் வழியாக தூரம் தெரிந்த காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தவள் லேகாவை கண்டு, “சொல்லுங்க அக்கா…” என்றவள், அவரது அமைதியை கண்டு

புருவம் சுருக்கியபடி, கையில் இருந்த புடவையை காண அதிர்ந்து போனவள், “இல்ல க்கா… வேண்டாம்… என்னை விட்டுற சொல்லுங்க… வேண்டாம் க்கா…” என்று அழுதபடி ஜன்னலோடு ஒட்டிக்கொள்ள, 

லேகாவுக்கும் உள்ளுக்குள் வலித்து, “என்னை என்ன டா பண்ண சொல்லுற… உன்னை மாதிரி தானே நானும்… முடியாதுன்னு சொன்னாலும் அடிச்சு நோகடிச்சு நம்மளை அடிபணிய தான் செய்வாங்க…” என்றவள் தன் கண்களை துடைத்து கொண்டு, 

“ரெண்டு வலியையும் அனுபவிக்குறதுக்கு பதில் பல்லை கடிச்சுகிட்டு இதை அனுபவிச்சுட்டு போயிறலாம்…” என்னும் போது எத்தனை அடக்கியும் முடியாமல் அழுகை வரதான் செய்தது… 

வாயை பொத்திக்கொண்டு மடங்கி அழுத திவ்யதர்ஷினியை காண உள்ளம் வலித்தது… தனக்கு தங்கை போன்று இருப்பவளிடம் இப்படி பேச வேண்டிய காட்டாயத்தில் இருக்க, இந்த வாழ்க்கை ஜென்மத்தை முற்றிலும் வெறுத்தாள்… 

அடுத்த ஐந்து நிமிடம் அழுகையில் கரைய, “இப்படியே அழுகுறனால எதுவும் மாறாது திவ்யா… எழுந்திரு…” என்று கட்டாய படுத்தி எழுப்பியவள், 

புடவையை கட்டி, எதற்காக தயார் செய்கிறாளோ அதற்கேற்றார் போல் ஒப்பனை செய்ய, ஜடமாகி இருந்தாள் திவ்யதர்ஷினி… 

அந்த நொடி முடிவெடுத்தாள், அவளுள் இருந்த மென்மை இலகு தன்மை அனைத்தும் இறந்துவிட, ராஜின் மீது வன்மத்தை வளர்த்தாள்… 

‘என் அம்மா சாக நீ தான் காரணம்… நான் இப்ப இங்க இருக்க நீதான் காரணம்… விட மாட்டேன்… என்ன ஆனாலும் உன் சாவு என்கைல தான்… வருவேன்… நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி வருவேன்…’ என்ற உறுதி அவளிடம் பிறந்த நேரம் கண்களில் இருந்த கண்ணீர் காணாமல் போனது அந்த நொடி… 

தொடரும்…. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement