Advertisement

UD-18:

உணவை உண்டவன், “கழுத வயசாச்சு… ஒழுங்கா சமைக்க தெரியல… என்னத்த சொல்லி கொடுத்தா உன் அம்மா… ஒழுங்கா நாளைல இருந்து சமைச்சு பழகு அப்புறம் பள்ளிகூடம் போகலாம்…” என்று படுத்திருந்தவளின் தலையில் இடியை இறக்க,

 

படுத்திருத்தவள் வெடுக்கென்று எழுந்து, “ப்பா…” என்று அதிர்ச்சியாக, ராஜ் அதை கண்டு கொள்ளவே இல்லை….

மறுநாள் திவ்யதர்ஷினி எத்தனை கெஞ்சியும் அவளை பள்ளி அனுப்ப மறுத்துவிட்டான் கட்டாயமாக… 

உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தவனிடம், திவ்யதர்ஷினி “ப்பா….” என்று தயங்கி நிற்க, 

“அம்மாவை பார்க்கணும்….?” என்று தயங்கி இழுக்க, 

“பார்க்கலாம்… பார்க்கலாம்… முதல்ல போய் ஒழுங்கா மதியத்துக்கு சமைச்சு வை…” என்று நகர போக, 

“ப்பா… அம்மா வயித்துல பாபா இருக்குல… பாபாக்கு ஒன்னும் இல்லையே… நல்லாதானே இருக்கு…?” என்று கேட்டதில் பக்கென்று ஆனது ராஜிற்கு… 

யாருக்கும் தெரியாது என்று நினைத்த விஷயம் இவளுக்கு தெரிந்துள்ளது… 

“உனக்கு யாரு சொன்னது…?” என்று முறைக்க, உள்ளுக்குள் பயம் உருண்டது சின்னவளுக்கு… 

திருதிருவென முழித்தபடி நின்றவளை பார்த்து, “எதுக்கு முழிக்குற…? சொல்லு யாரு சொன்னது…?” என்று கத்தவும், 

“ம்மா தான்… முதல்ல என்கிட்ட தான் சொன்னாங்க நேத்து காலைல ஸ்கூல் போகும் முன்னாடி… அப்புறம் உங்க கிட்ட சொல்லி சாக்லேட் வாங்கி வைக்குறேன்னு சொன்னாங்க…” என்று சொல்லி முடிக்க, 

ராஜிற்கு எரிச்சலாக வந்தது, ‘இவளை… அறிவே இல்ல… எதுக்கு பொண்ணுகிட்ட எல்லாம் சொல்லி வச்சு இருக்கா… எதுவா இருந்தாலும் கமுக்கமா முடியும்னு பார்த்தா இப்படி பண்ணி இருக்காளே..’ வந்த கோவத்திற்கு அடி வெளுக்க வேண்டும் போல் ஆத்திரமாக வந்தது… 

“இதை வேற யாருக்கிட்டையாச்சும் சொன்னியா…?” என்று கேட்க, 

‘இல்லை’ என்று தலையை ஆட்டி வைத்தாள் மௌனமாக… இதுவரை நிம்மதியென்று எண்ணியவன், மகளின் புறம் திரும்பியவன், 

“இங்க பாரு… யாருகிட்டையாச்சும் போய் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்காத… புரிஞ்சுதா…” என்று மிரட்டியதில் எதற்கென்றே புரியாமல் சரியென்று தலையை ஆட்டி வைத்தாள் திவ்யதர்ஷினி… 

அதன்பின் வந்த ஒருவாரமும் இதே தொடர்கதையானது திவ்யாவின் படிப்பு நிறுத்தபட்டது… காலையும் மாலையும் தந்தையிடம் அன்னையை காண வேண்டும் என்று கெஞ்சுவதும் அதற்கு அவர் திட்டுவதும் வாடிக்கையாக அதுவும் ஒருகட்டத்தில் முடிவு வந்தது… 

“என்ன டாக்டர் சொல்லுறீங்க…?” என்று அதிர்ச்சியாக கேட்கவும், 

“ஆமா ராஜ்… கங்காவோட தலையில் ரத்த கசிவு இருந்துட்டே இருந்து இருக்கு… எங்களால எவ்வளவு முயற்சி பண்ணியும் முடியல… வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொல்லி பார்த்துட்டேன் நீங்களும் கேட்கல… இப்ப எல்லாம் கைமீறி போயிருச்சு… சாரி…” என்ற வார்த்தைகள் ராஜை அசைக்கவில்லை… 

குழந்தை போனது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.. ஆனால் கங்காவின் இழப்பு அவனை சற்று கலங்க செய்தது தான்… உண்மையில் அது பாசத்தில் அல்ல வீட்டை பிள்ளையை வேலையை என்று அனைத்தும் தன் தலையில் விழுந்துவிட்டது என்னும் கவலை தான் பெரிதாக இருந்தது… 

இரண்டு வாரம் கண்கள் மூடி திறப்பதற்குள் ஓடி இருக்க… திவ்யதர்ஷினியின் உலகமும் மாறி இருந்தது… அன்னையில்லாமல் சற்றும் அவளால் இருக்க முடியவில்லை… மனதளவில் மிகவும் ஒடிந்து போனாள்… 

அண்ணனிடம் சென்று நின்றாள் ஆதரவிற்காக ஆனால் அவனோ சற்றும் கண்டுக்கொள்ளவில்லை… தந்தையிடம் செல்ல பயம்…

 

வாய்விட்டு ஆழுது ஆறுதல் தேட ஒருவரும் இன்றி போயினர் அவளுக்கு… அமைதியாகி போனாள், தந்தையின் கோபத்தையும் திட்டையும் பழக தொடங்கினாள், அண்ணனின் உதாசீனம் பழகியது அவளுக்கு… 

ஒருமாதம் கடந்த நிலையில், வீடு வந்த ராஜிற்கு பெருத்த அதிர்ச்சி… 

“ஏய்ய்… என்ன இதெல்லாம்…?” என்ற கேள்வியில் விசுக்கென்று நிமிரந்தவள், 

“ப்பா…”என்று ஓடி வந்து அணைத்துக்கொண்டவளுக்கு அப்படியொரு அழுகை வந்தது… 

“ம்பச்ச்… முதல்ல விலகு… என்னாச்சுனு சொல்லு…” என்று அதட்டவும், 

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “ப்பா… நீ… நீங்க வேலைக்கு கிளம்புனதும் சிவானந்த அங்கிள் வீட்டுக்கு வ…வந்தாரு…” என்று தேம்ப, 

“ஒழுங்கா அழாம சொல்லு…” என்று மீண்டும் அதட்ட, 

“அது… அவரு… எ…என்கிட்ட தப்பு தப்பா நடந்துகிட்டாரு ப்பா…” என்று சொல்லவும் பக்கென்று ஆனது ஒரு தகப்பனாக… 

“ஏய்ய்… என்ன சொல்லுற…? அவன் எனக்கு நல்ல பிரெண்டு…” என்று சொன்னாலும் அவனது பார்வை மகளின் அலங்கோல நிலையே காட்டியது மகள் கூறியது உண்மையென்று… 

ஆனால் ஏன்னோ மனம் சற்று முரண்டியது, “உ… உண்மையாதான் சொல்லுறேன் ப்பா… நா… நான் கத்தி எல்லாரையும் கூப்பிடவும் விட்டுட்டு ஓடிட்டாரு… ப… பயமா இருக்கு ப்பா… இனி என்னை விட்டுட்டு போகாதீங்க ப்பா…” என்று மீண்டும் அணைத்துக்கொண்டு அழுக, 

சிவானந்தா மேல் கோபமாக இருந்தவன் மகளின் வார்த்தையில், இருந்த கோபத்தை அவள் மீது கொட்டினான்… 

“ம்ம்ம்… அப்புறம்… வேலைக்கு போகாம உன்கூட இருந்தா சோத்துக்கு என்ன பண்ணுறது…?” என்று எரிந்து விழுந்தவன், வேகமாக வெளியேறினான் கோபமாக… 

ஆரதல் தேடிய சின்னவளுக்கு தந்தையின் இந்த வார்த்தையும் முகமும் அதிர்ச்சியோடு ஒருவித ஒதுக்கத்தையும் உருவாக்கியது உள்ளுக்குள்… 

கோவமாக வெளியேறிய ராஜ் சிவானந்ததை தேடி அவன் வீட்டிற்கு செல்ல, அங்கு அவனோ குடியில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருக்க…. 

அவனை கண்டதும், “டேய்ய்…” என்று கத்தியபடி அவன் சட்டையை கொத்தாக பற்ற, அவனோ 

“கோவப்படாத பா…”  வார்த்தை குளறியது, கால்கள் தடுமாறியது… 

“கோவ படாம கொஞ்ச சொல்லுறியா…? நண்பன்னு நினைச்சு உன்னை வீட்டுக்குள்ள விட்டா நீ என்ன வேலை பார்த்து இருக்குற…” என்று அடிக்க, 

“அச்சோ… விடுப்பா…” என்று சிணுங்கியபடி அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிந்தவன், 

“நீ கோப படுற அளவுக்கு எல்லாம் ஒன்னும் நடக்கலை… பொண்ணு அவ அம்மா மாதிரி நல்லா அழகா பொறந்திருக்கா… என்ன பண்ண சொல்லுற… ஆசை வந்துருச்சு… அவ அம்மாவை தான் ஒன்னும் பண்ண முடியலையேன்னு கஷ்டமா இருந்துச்சு… இந்த சின்ன குட்டி மேல கை தான் வச்சேன் கத்தி ஊரை கூட்டுறா…” என்று போதையில் உளறியவனை கண்டு கோபத்தில் கையை முறுக்கியவன், 

அவன் முகத்தில் அடிக்க கை ஓங்கிய சமயம், “நானா இருந்திருந்தா இன்னேரத்துக்கு அவளை நல்ல ரேட்க்கு வித்து இருப்பேன்… இவ அழகுக்கு எப்படியும் ரெண்டு லட்சம் ஆச்சும் கிடைச்சு இருக்கும்…” என்ற வார்த்தையில் அடிக்க ஓங்கிய கை அந்திரத்தில் தொங்கியது… 

‘ரெண்டு லட்சமா…?’ பணம், பாசத்தை கடமையை கண்ணை மறைக்க செய்தது…

 

அமைதியாகி போனான் பணத்தை பற்றிய நினைப்பில், குடியில் இருந்தவன் அவன் போக்கில் உளற, மெதுவாக அவன் அருகில் சென்ற ராஜ், 

“நீ சொன்னது உண்மையா…?” சாத்தான் புகுந்தது அவன் புத்திக்குள், 

“நீ சொன்னது உண்மையா…?” என்று மீண்டும் தயங்கியபடி கேட்க, உளறுவதை நிறுத்திவிட்டு

“எது உண்மையா…?” என்று கண் திறந்து பார்க்க முடியாமல் கண் திறக்க முயற்சித்தபடி கேட்டவனை பார்த்து பல்லை கடித்தவன், 

“அதான் ரெண்டு லட்சம்…?” உள்ளுக்குள் தயக்கமாக இருக்கவும் வார்த்தையும் தயக்கமாகவே வந்தது… 

போதையில் இருந்தவனுக்கு என்ன பேசினோம் எதிரில் இருப்பவன் என்ன கேட்கிறான் என்று சுத்தமாக புரியவில்லை… 

“ம்ப்ச்ச்… அதான் டா பொண்ணை ரெண்டு லட்சத்திற்கு விக்கலாம்னு…” என்று இழுக்கவும், 

“அட ஆமா பா… பாம்பேல நிறைய பொண்ணுங்களை விப்பாங்களாம்… நிறைய பொண்ணுங்களும் கிடைக்குமாம்…” என்றபடி பல்லை இழிக்க, அறிவிழந்தான் ராஜ் அந்த நொடியில்… 

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தது அவனுக்கு… ஆனால் செய்யும் வேலையும் குடும்பதின் செலவும் எதுவும் முன்னேற விடவில்லை… 

இப்பொழுது திவ்யதர்ஷினியை கொண்டு பணம் சம்பாதிக்க நினைத்தான் எதையும் யோசிக்காமல்… செய்யவிருக்கும் காரியத்தின் வீரியம் புரியாமல்… 

வீடு வந்து சேர்ந்தவன், திவ்யதர்ஷினி அனைத்தையும் ஒதுக்கி தன்னையும் சீர்படுத்திக் கொண்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்ததை கவனித்த ராஜிற்கு எப்படி யாரிடம் அணுகுவது என்ற சிந்தனை மட்டும் தான்… 

மகள் என்ற எண்ணம் காற்றோடு பறந்திருக்க, படுக்கையில் விட்டத்தை பார்த்தபடி சிந்தனையில் இருந்தது எல்லாம் பணம் மட்டுமே இருந்தது… 

‘இவள வச்சுகிட்டு காவல் காக்க முடியாது… கல்யாணம் அதுஇதுன்னு நிறைய செலவுதான் நம்ம தலைல விழும் அதுக்கு பேசாம இந்த சிவானந்தம் சொன்னா மாதிரி பண்ணா…. வாழ்க்கைல அடுத்ததை நோக்கி போகலாம்… ம்ம்ம்…’ என்று அன்று இரவு முழுவதும் யோசித்தவன், அதிகாலையில் தான் உறங்க ஆரம்பித்தான்… 

திவ்யா, இது எதுவும் அறியாது முன்தினம் நடந்த நிகழ்வில் முழுவதும் தனக்குள் முடங்கி போனாள்… தனக்காக இங்கு யாரும் இல்லை, தந்தைக்கு தன் மேல் பாசம் அக்கறை என்று எதுவும் இல்லை, அண்ணனுக்கு அன்பில்லை என்ற எண்ணம் வேறுன்ற, இனி யாரிடமும் பேச கூடாது வெளியே செல்ல கூடாது என்னும் முடிவில் முற்றிலும் அமைதியாகி போனாள்… 

அதை புரிந்துக் கொள்ள வேண்டிய இருவரும் தங்கள் நினைவில் தங்கள் வாழ்க்கையை பற்றி மட்டும் யோசித்திருக்க, சின்னவளின் மாற்றம் யாருக்கும் புரியாமல் போனது… உண்மையில் புரிந்தாலும் அங்கு எந்த பிரோஜனும் இல்லை என்பதே நிதர்சனம்… அதை அவள் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தமான ஒன்று… 

இரண்டு நாள் சென்ற நிலையில், “நாம இந்த ஊரைவிட்டு போறோம்…” என்க, 

“எங்க ப்பா…” கேள்வி என்னவோ தியோவரதனிடம் இருந்து தான் வந்தது… 

திவ்யதர்ஷினி, காதில் விழுந்தாலும் என்னவென்று கண்டுக்கொள்ளவில்லை… 

எங்கு சென்றாலும் தன்  நிலை மாற போவதில்லை என்னும் எண்ணம்… ஆனால் வாழ்க்கையே மாற போகிறது என்று அறியாத பேதை ஆண்கள் இருவருக்கும் உணவை பரிமாறுவதில் கவனமாக இருந்தாள்… 

“பாம்பே…” என்ற ராஜின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை திவ்யாவின் முகத்திலும் எந்த மாற்றமும் இல்லை… 

ஆனால் தியோவரதன், “ஏன் ப்பா அங்க…?” என்றவனின் குரலில் அத்தனை வருத்தம்… 

“அங்க போய் நிறைய சம்பாதிக்கலாம்… தெரிஞ்சவர் ஒருதர் இருக்காரு… அவர் பார்த்துப்பாரு… இங்கேயே இருந்தா இப்படியே தான் இருக்கணும்…” என்று சொல்லவும், 

முகம் சுருக்கியவன், “வேண்டாம் ப்பா… நாம இங்கேயே இருப்போம்… அது தெரியாத ஊர்… பிரெண்ட்ஸ் எல்லாம் இங்க தான் இருக்காங்க… பிளீஸ் ப்பா…” என்றதில்

“உருப்புடாதவனே… பிரெண்ட்ஸை கட்டிக்கிட்டு என்னத்த கிழிக்க போற…? சொல்லுறதை மட்டும் செய்…” என்று திட்டியவர், அமைதியாக தரையை நோண்டிக் கொண்டிருந்தவளிடம், 

“ஏய்ய்ய்… சொன்னது கேட்டுச்சா…? எல்லாத்தையும் எடுத்து வை… நாளைக்கு கிளம்பணும்…” என்று கத்த, சரியென்று ஆட்டி வைத்தாள் தலையை… 

வரதனோ ஒன்றும் சொல்ல இயலாமல் தனக்குள் புலம்பியபடி எழுந்து செல்ல, திவ்யாவிற்கு ஏனோ மனம் படபடத்துக்கொண்டே இருந்தது காரணம் அறியாது… இரவு படுக்கையில் இருந்தவளுக்கு அன்னையின் மடியை அதிகம் நாடியது அவளது உள்ளம் தன்னைபோல்… 

‘நீங்க என்கூட இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது ம்மா…’ என்று அமைதியாக கண்ணீர் வடித்தவளுக்கு தெரியவில்லை இனி கண்ணீர் மட்டுமே தனக்கு துணையென்று… 

மறுநாள் ராஜ் திட்டமிட்டபடி அனைத்தும் நடக்க, ஊரார் கேட்ட கேள்விக்கு முடிந்தமட்டும் சமாளிப்பாக பதில் அளித்துவிட்டு கிளம்பியும்விட்டான் இருவரையும் அழைத்துக்கொண்டு… 

சிவானந்திற்கு போதையில் சொன்னது சற்று நினைவில் நின்றாலும், ஓரளவிற்கு விஷயத்தை யூகித்தவன் வெளியே எதையும் சொல்லவில்லை… 

சொன்னால் தன்னுடைய தவறும் வெளியே வந்து விடும் என்ற காரணத்தால் அமைதியாகி போனவன், திவ்யதர்ஷினியின் வாழ்க்கை திசை மாற காரணமாகி போனான்… 

“இங்க ஒன்னுமே புரியல ப்பா…” என்ற வரதனுக்கு, 

“கொஞ்சம் பேசாம வரியா…?” என்று எரிந்து விழ, கோபமாக வந்தது தந்தையின் மீது, 

‘பேசாம ஊர்லையே இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல… இப்ப பாரு… காலைல வந்து சேர்ந்தது இன்னும் ஒன்னும் சாப்பிடலை… எங்க போறோம்னு தெரியாமலையே நடக்க வேண்டியாதா இருக்கு… சை…’ என்ற புலம்பல் மட்டும் அவனிடம்… 

திவ்யாவோ, நடந்ததில் கால்கள் வலித்தாலும் அமைதியாக சுற்றி இருப்பதை வேடிக்கை பார்த்தபடி உடன் நடத்துக்கொண்டிருந்தாள்… 

இவர்கள் ரயிலில் வந்திருக்கியதுமே இருகண்கள் திவ்யாவின் மீது படிந்து விட்டது காரியமாக… மூவருக்கும் தெரியா வண்ணம் பின்தொடர்ந்தவன், அவர்களது நிலையை வேகு சீக்கிரமே புரிந்துக்கொண்டான் அவர்களின் திணறலை கண்டு..

தொடரும்….

Advertisement