Advertisement

UD-16: 

“விடுடா… விடு….” என்று திணறியவளின் கழுத்து ஆசிப்பின் கையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது… 

தியா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை… முற்றிலும் திணறி போனாள்தான்… மூச்சுவிட கஷ்டமாக இருக்கவும், ஆசிப்பை பார்த்தாள் சிரம பட்டு, கண்கள் சிவக்க இருந்தவனின் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்… 

“விடுடா…” என்று அவன் கையை விழக்கி விட முயற்சித்து தட்டிவிட பார்த்தவளை அவன் கண்டுக்கொள்ளவே இல்லை… 

அவன் எண்ணம் எல்லாம் இவள், தியா என்னும் ஒருத்தி இனி உயிருடன் இருக்க கூடாது என்பது மட்டுமே… அந்த எண்ணத்தின் வெறி அவனது கைபிடியின் இறுக்கத்தில் நன்றாக தெரிந்தது பெண்ணவளுக்கு… 

சுவற்றில் சாய்ந்து இருந்தவளின் கைகள் பக்கவாட்டில் இருந்த மேஜையின் மீது அழைந்தது தட்டு தடுமாறி… 

அதில் கண்ணாடி குவளை ஒன்று சிக்கவும் வேகமாக பலம் கொண்டு அவன் காதின் மீது அடிக்க,

 

“ஆஆஆஆ….” என்ற அலறலோடு காதினை பொத்தியபடி விலகி போனான் ஆசிப்…

 

சில நொடிகள் தான் தியா தன்னை சமன் செய்து கொள்ள, இருமியபடி நிமிர்ந்து பார்த்தவளின் எதிரே வலியில் துடித்து கொண்டிருந்தவன் தெரியவும் அத்தனை ஆத்திரம் வந்தது தியாவிற்கு… 

கண்ணாடி குவளை கொண்டு அடித்ததால் தியாவின் வலது உள்ளங்கையிலும் கண்ணாடி துண்டுகள் இறங்கி ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது…

ஆனால் அதை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை… கையின் வலியை விட, உள்ளத்தின் வலியும் காயமும் பெரிதாக இருக்க, வேகமாக அவன் அருகில் சென்றவள், 

பாதியாக குனிந்து அலறி கொண்டிருந்தவனை தூக்கி நிறுத்தி அவன் ஆண் உறுப்பில் பலம் கொண்ட மட்டும் தன் முட்டியால் எட்டி உதைக்க, 

“ஆஆஆ…” என்னும் அலற மட்டுமே அவனிடம்… 

“பொட்ட கழுத… உன்னை…” என்று அந்த வலியிலும் பல்லை கடித்தவன் அவளது கையை பிடித்து திருக்க பார்க்க, போராடி அவனிடம் இருந்து தப்பித்து நான்கடி பின் சென்று நின்றாள்… 

“ஏன் நீ பார்த்த பொட்ட கழுதை எல்லாம் இப்படி அடிச்சு பழக்கம் இல்லையோ… இல்ல அவங்க கிட்ட இருந்து நீ அடி வாங்கி பழக்கம் இல்லையா…?” என்று கேட்டு நக்கலாக சிரிக்க, 

கைகளால் அடிவாங்கிய இடத்தில் பொத்தி வைத்தபடி துடித்து கொண்டிருந்தவன், 

“ஏய்… என்ன டி ரொம்ப தான் வாய் நீலுது… உன்னை எல்லாம் எப்பவோ போட்டு இருந்து இருக்கணும்… உன்னை விட்டு வச்சதே தப்பு…” என்றவன் வேகமாக அவள் மீது பாய, 

தியா தடுமாறி சோபாவில் விழுந்தாள்ஆசிப்போடு, அவனோ விழுந்த அடுத்த நொடி வலியையும் பொருட்டு படுத்தாமல் அவளது கழுத்தில் முகம் பதிய முனைய, 

தியா, “சசீசீசீ… போடா பொறுக்கி…” என்று அவனை முடிந்த அளவிற்கு தடுக்க முயற்சிக்க அவளால் முடியவில்லை… 

ஆசிப்பின் மொத்த உடல் எடையும் அவள் மீதிருந்ததால் அவனுடன் போராட முடியாமல் தடுமாறினால் உள்ளக்குமறலோடு… 

அவனது ஒருபக்க காது நெற்றி கன்னத்தில் இருந்து வழிந்த ரத்தம் பெண்ணவளின் முகம் பட்டு தேய்க்க, எரிச்சலாக வந்தது தியாவிற்கு… 

போராடி பார்த்தவள் முடியாமல் போகவும் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தால் இரண்டாவதாக… 

அதில் அவனை பக்கவாட்டில் தள்ளி விட முயற்சித்தவள் மீண்டும் முட்டியால் அவன் பிறப்புறுப்பை தாக்க…. அது முழு பலம் கொண்டு அவளால் அடிக்க முடியாமல் போனாலும் ஆசிப்பிற்கு வலிக்கதான் செய்தது…

“ஏய்ய்ய்….” என்று வலியோடு கீழே விழ, 

பட்டென எழுந்து கொண்டவள், டீபாயின் மீதிருந்த பேப்பர்களை கொண்டு அவன் தலையில் அடிக்க, 

ஆசிப்பிற்கு ஆத்திரமும் வெறியும் கூடிக்கொண்டே போனது… மீண்டும் மீண்டும் இவளிடம் தோற்று கொண்டே இருக்கிறோம் என்னும் எண்ணமே அவனை மீண்டும் மீண்டும் எழுந்து அவளை வேட்டை ஆட வேண்டும் என்னும் வெறியை தூண்டியது… 

அவளது கையை பிடித்து தட்டி விட, தடுமாறி கீழே விழுந்தவள் எழுந்து நிற்கும் பொழுது ஆசிப்பும் வலியோடு எழுந்தவன் அவள் அணிந்திருந்த சட்டையை பிடித்து இழுத்தான் வேகமாக…

 

அதில் கைபகுதியோடு முன்பக்கம் வரை கிழிந்துவிட, ஏதோ உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் ஆசிப்பிற்கு… 

“சீசீசீ… விடுடா நாயா…” என்று திட்டியவள் அவனிடம் இருந்து தப்பித்து பின்பக்கமாக விலகி ஓட பார்த்தவளுக்கு ஒருநொடி கூட அவனிடம் கெஞ்ச தோன்றவில்லை… 

இந்த அரக்கணை வதம் செய்தே ஆக வேண்டும் என்னும் எண்ணம் மட்டும் வலுபெற்றது உள்ளதிலும் மூளையிலும்… அதன் பொருட்டு அவனை எதிர்த்து நின்றாளே தவிர தப்பித்து வெளியே ஓட நினைக்கவில்லை… 

ஆசிப் அவளது உடையை பிடிக்க கைகளை மீண்டும் நீட்ட, அவனது நோக்கம் புரிந்தவள் கீழே குனிந்து கைகளின் இடையே  தப்பித்து அவன் பின் நகர்ந்தவளின் கண்களில் பட்டது டைனிங் டேபிளில் மேல் இருந்த கண்ணாடி குவலைகள் தான்…

 

பிடிக்க செல்கையில் கைகளின் இடையில் தப்பித்து தனக்கு பின் சென்றவளை திரும்பி பார்க்கும் சமயம், தியா சரியாக அவனது மண்டையில் கண்ணாடி குவலையை கொண்டு மீண்டும் அவன் காது பகுதியிலேயே அடித்தாள் பலம் கொண்ட மட்டும்… 

வலியை பொறுக்க முடியவில்லை அவனால்… அடிவாங்கிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் அடி வாங்கினான் பெண்ணவளிடம் இருந்து… 

கண்கள் கலங்கி காட்சிகள் மங்கியது, இரத்தம் சடசடவென கொட்டிய அதே நேரம் மண்டையில் பீங்கான் பூசாடியை கொண்டு அடித்தாள் ஓங்கி… 

முடியவில்லை அவனால் மொத்தமும் தடுமாறும் சமயம், தலை சுற்றியது எங்கிருந்து ரத்தம் வழிகிறது என்று தெரியாத அளவிற்கு தலை முகம் மொத்தமும் வலித்தது… 

நிற்க முடியாமல் தடுமாறிய சமயம், வேகமாக அருகில் வந்தவள் அவன் இரு தோள்களையும் பற்றி, “சாவு டா நாயே…” என்று பல்லை கடித்தபடி முட்டியால் மீண்டும் அவன் பிறப்புறுப்பை தாக்க, 

வலியில் கத்த கூட முடியாத நிலையில் சுருண்டு தரையில் விழ்ந்தான் புழுவாக… 

மேஜையின் மீதிருந்த  மற்றொரு கண்ணாடி குவலை ஒன்றை எடுத்தவள், மீண்டும் அவனை அடிக்க போகும் சமயம் அவனிடம் அதற்கான பயம் பதற்றம் எதுவும் தெரியவில்லை பெண்ணவளுக்கு… 

புரிந்துக்கொண்டாள் இவன் இப்போதைக்கு வலியில் எழுந்துக்கொள்ள மாட்டான் என்று… அனுபவிக்கும் வலியை அவன் உணரவே சரியாக இருக்கும் இதில் மேலும் மேலும் அடித்தாள் நிச்சயம் செத்துவிடுவான் என்று புரிந்து கொண்டாள்… 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முகம் கழுத்து உள்ளங்கையில் இரத்தம் வழிய, தலை கலைந்து கையில் கண்ணாடி குவலையை ஆயுதமாக வைத்து நின்றிருந்தவளை பார்க்க காளியாக தெரிந்ததாலும் உண்மையில் அரக்கனை வதம் செய்யும் நிலையில் தான் இருந்தாள் தியா… 

சில நொடிகள் சென்ற நிலையில், அவன் அருகில் ஒரு இருக்கையை இழுத்து போட்டு அம்ர்ந்தவள், ஒரு காலால் அவனை தட்டி, 

“நான் பேசுறது கேட்குதா…?” என்று கேட்க, அவனிடம் வலியில் முனுங்கும் சத்தம் மட்டுமே… 

 “கேட்குதா இல்லையா டா நாயே…” என்று சற்று பலம் கூட்டி உதைக்க, 

இப்பொழுது, “ம்ம்ம்….” என்ற முனுங்கள் கலந்த பதில் அவனிடம்…. 

“நல்லது…” என்றவள் சற்று இலகுவாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, 

“ஆம்பலைங்கற திமிர்ல தானே இப்படி ஆடுன… இப்ப வா டா….” என்றவளை கஷ்டப்பட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு கோபம் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை….

கொட்டும் ரத்தம் அதிகமாக இருக்கவே வலி அதிகரிக்கும் அதே சமயம் உடம்பில் வலுவும் குறைந்தது போல் இருந்தது… 

“என்ன முடியலையா…?” என்று நக்கலாக சிரித்தவள்,

இருக்கையின் சாயில் ஒரு கையை வைத்து இன்னும் சாய்ந்து அமர்ந்து தொடையில் கண்ணாடி குவலையை வைத்து உண்றியபடி ஒரு பெருமூச்சை விட்டபடி, 

உதட்டை சுழித்து, “ஆமா…. நான் யாருன்னு நினைச்ச நீ…?” என்று கேட்ட கேள்வி ஆசிப்பிற்கு  புரியவில்லை… 

“என்ன கேட்ட கேள்வி புரியலையா…?” என்றவள் மீண்டும், 

“நான் யாருன்னு தெரியுமா…?” என்றவள் அவனது புருவம் சுருங்குவதை பார்த்து,

 

“வேலைல எடுக்கும் போது எல்லாம் நல்லா விசாரிச்சு எடுக்க வேண்டாமா…?” என்றதோடு தன் முகத்தில் வழிந்த அவன் ரத்தத்தை கையில் எடுத்து அவன் முகத்தின் முன் காட்டியவள், 

“உனக்குள்ள யாரோடு ரத்தம் ஓடுதோ அதே ரத்தம் தான் எனக்குள்ளையும் ஓடுது டா பரதேசி நாயே…” என்று எழுந்து அவனை உதைக்க போக,

தரையில் கிடந்தவனிடம் அப்படியொரு அதிர்ச்சி, ஆணி அடித்தார் போல் கிடந்தான் அவளது வார்த்தையில்…. 

உதைக்க காலை தூக்கியவள் அதை செய்யாமல் மீண்டும் அதே இடத்தில் அதே தோரணையில் அமர்ந்து, “சும்மா சும்மா அடிச்சா சொரணை இல்லாம போயிரும்ல… அதுனால வேண்டாம்… இனி வார்த்தையால அடிக்குறேன் அது இன்னும் வலிக்கும் பார்க்குறியா…?” என்றவள், ரத்தம் ஒழுகிய தன் வலது கரத்தால் தன் நெற்றியை துடைத்து கொண்டவள், 

“அதெப்படி டா… நீ ஆம்பளைன்னா எதிர்ல இருக்குற பொண்ணு யாரா இருந்தாலும் அனுபவிச்சுறணும்னு தோணுமா உனக்கு…?” என்று கேட்க, 

ஆசிப் மெல்ல எழுந்து அருகில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி மூச்சு விட சிரமபட, 

“மூச்சுவிட முடியலையா…?” என்று தியா கேட்கவும், 

‘ஆம்…’ என்று தலையை ஆட்டி வைத்தான் ஆசிப்… 

இருந்தும் தன்னை சமன் செய்து கொண்டு, “உன் முழு பேரு என்ன…?” என்று கேட்டவனுக்கு வெளியே இருந்த காயத்தை விட உள்ளே உள்ளம் பதறியது அவள் சொல்ல போகும் விஷயத்தை கேட்டு… 

“எப்பா சாமி… சீக்கிரம் கேட்டுட்ட…. என் பேரு சொன்னா நியாபகம் இருக்குமா உனக்கு…?” என்று கேட்டவள்,

ஒரு பெருமூச்சை விட்டவள், அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி “தியா அலைஸ் திவ்யதர்ஷினி…” என்று சொல்லவும் அத்தனை அதிர்ச்சி அவன் முகத்தில்… 

“நீ… நீ… இன்…” வார்த்தை வரவில்லை ஆசிப்பிடம்… அதிர்ச்சியிலும் பெரும் அதிர்ச்சியென்றால்… சற்று முன்பு நிகழ்ந்த நிகழ்வு அதை விட அசிங்கம் அல்லவா… 

“என்ன பேசு வரலை… என்ன சொல்லுறதுன்னு தெரியலையா…?” என்று கேட்கவும் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவளின் விழிகளில் பட்டது மகிழனின் அதிர்ந்த முகம் தான்… 

அவள் யார் என்று அறிந்த ஆசிப்பிற்கு ஒருவகை அதிர்ச்சி என்றால் அவள் இருந்த கோலத்தை கண்டு மகிழன் ஒருவகை அதிர்ச்சியில் நின்றிருந்தான்…

ஆனால் பெண்ணவளுக்கு அதுபோல் எதுவும் இல்லையென்பது அவள் அதே தோரணையில் அமர்ந்திருந்த விதமும், முகமுமே காட்டி கொடுத்தது… 

“என்ன போலீஸ் அதுக்குள்ள வந்துட்டீங்க… பயங்கரமான ஆளுதாங்க நீங்க…” என்றவளை பார்த்தபடி அருகில் வந்தவன், கீழே ரத்தம் வழிய சரிந்த கிடந்தவனை பார்த்து மகிழனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… 

“என்ன தியா… இதெல்லாம்…?” என்று கேட்டவனின் பார்வை தியாவை தலைமுதல் கால் வரை பார்வையால் அலசினான்… 

கையில் வழியும் ரத்தம் கண்ணில் பட, “என்ன பண்ணி வச்சு இருக்க…?” என்று குரலை உயர்த்தியவன்,

ஆசிப் இன்னும் தியாவை அதிர்ந்து பார்த்தபடி இருப்பதை புருவம் சுருங்க பார்த்தவன், அவளது கையை பற்ற வர, அவனை தடுத்து தன் கையை பின்னுக்கு இழுத்து கொண்டாள் சட்டென… 

அதில் கோபம் கொண்டவன், “தியா…” என்று குரலை உயர்த்தவுமே தான் ஆசிப் நிகழ்காலத்திற்கு வந்தான்.. 

தியா தன் பேரை சொன்னதும் அதிர்ச்சி என்றாலும் அவளிடம் எத்தனை முறை தான் தவறாக நடக்க முயற்சித்தோம் என்று நினைக்கையில் மனம் குற்ற உணர்வில் கொன்று தின்றது அவனை… 

“திவ்யா….” என்று மெல்லிய குரலில் அழைத்தவனை திரும்பி பார்த்தவளுக்கு அத்தனை கோபம் வந்தது… 

“இன்னொரு முறை நீ அப்படி கூப்பிட்ட அடுத்த செக்கண்டு உன்னை கொன்னுருவேன்…” என்று கண்களை உருட்டி மிரட்டியவளை பார்த்து ஆண்கள் இருவருமே அதிர தான் செய்தார்கள்… 

 தொடரும்….

Advertisement