Advertisement

UD-14:

‘அச்சோ… என்ன இது… இன்னும் வரல… பயமா இருக்கே…’ என்று கையை பிசைந்தபடி படுக்கை அறைக்கும் ஹாலில் இருந்த ஜன்னலுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ஷிவானி… 

மேலும் ஐந்து நிமிடம் கழிந்த நிலையில் படுக்கை அறையில் இருந்து ஏதோ விழுவது போன்ற சத்தம் கேட்கவும் ஒருநொடி மூச்சே நின்று போனது பெண்ணவளுக்கு… 

ஜன்னல் வழியாக கேட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல திரும்பி படுக்கை அறையின் வாசலை பார்த்தபடி இரண்டொரு நொடி நின்றவள் பின் உள்ளே சென்று பார்த்தவளுக்கு பயம் இருந்த இடம் போய் வெறுமை வந்து அமர்ந்து கொண்டது… 

படுக்கையில் மன்சூர் கால்களை அசைத்து நகர முயன்று கொண்டிருக்க அது முடியாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டிருந்தார்… 

இந்த தருணத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தது நினைவிற்கு வரவும், சட்டென கைகளுக்கு ஏதேனும் கிடைத்தால் கொன்று விடலாம் என்னும் கோபம் வர, வேகமாக கண்களை அலைய விட்டாள் ஷிவானி… 

ஆனால் ஒருநொடி தான்… ஒரே நொடி தான் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள் அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்து, 

“என்ன செய்து மன்சூர்…?” எப்பொழுதும் ஒழுக்கும் தேன் வார்த்தைகள்…. 

கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்தவனுக்கு பேச முடியவில்லை சுத்தமாக… ஏதோ சொல்ல வருவது புரிய, 

“ஏதாச்சும் சொல்லணுமோ…?” என்று கேட்க, மன்சூரின் கண்கள் இப்பொழுது அவளை கவனிக்க தொடங்கியது… 

‘நான் நகர முடியாம திணறுறேன்… பேச முடியாம கஷ்டப்படுறேன்… ஆனால் இவ நிதானமா இருக்கா… அப்படினா இவதான் ஏதாச்சும் பண்ணி இருக்காளா…?’ என்ற எண்ணம் தோன்றவும், தன் முயற்சிகளை விட்டுவிட்டு எதிரில் அருகில் இருக்கும் ஷிவானியை கவனிக்க தொடங்கினான்… 

“ஏன் அமைதி ஆயிட்டீங்க…? உடம்புக்கு முடியலையா…?” என்று கேட்டவள், பின் நாடியில் கை வைத்து தேய்த்தபடி, 

“எங்கையாச்சும் வலிக்குதா…? ஆம்புலன்ஸ் கூப்பிட்டா…?” என்றபடி எழுந்து நின்று தன் ஃபோனை தேடுவது போல பாவனை செய்தவளை பார்த்தவனுக்கு மண்டையில் அடித்தது போல் பல வருடங்களுக்கு முன் நடந்தது நினைவிற்கு வந்தது… 

முதல்முறை மன்சூரிடம் இருந்து தப்பிக்க நினைத்த ஷிவானியை கையும் களவுமாக பிடித்தவன் மிருக தன்மையை அவளிடம் காட்டி இருந்தான் மனசாட்சியின்றி… அதில் முழுவதும் சிதைந்து போய் படுக்கையில் இருந்தவளிடம், மெல்ல குனித்து 

“என்ன பேபி அப்படி பார்க்குற…?” என்று கன்னம் வருட, கோவத்தில் முகத்தை திருப்பி கொண்டவளை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை சிந்தியவனை கண்டு,

திட்ட நினைத்து பேச முயற்சித்தவளுக்கு வாங்கிய அரையின் பலனாக வீங்கிய கன்னம் விண்ணென்று வலிக்க கண்ணீரோடு விழிமூடி கொண்டாள் இயலாமையில்….

“அச்சோ… ரொம்ப வலிக்குதா பேபி… எதாச்சும் சொல்ல வரியோ…?” யோசிப்பது போல முகத்தை மாற்றியவன், பின் 

“இல்ல இப்ப நீ திட்டணும்னு தான் நினைப்ப சரியா…? ஆமா உடம்பு எங்கியாச்சும் வலிக்குதா என்ன? ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடவா…?” என்று எழுந்து நின்று அலைபேசியை தேடுவது போல் நடித்தவன், சட்டென

“இங்க பாரு, இது தான் கடைசியா இருக்கணும் சொல்லிட்டேன்… இனி நீ என்ன நினைச்சாலும் இங்க… என் கிட்ட இருந்து தப்பிச்சு போக முடியாது…புரிஞ்சுதா…?” என்று அவள் முடியை பிடித்து பல்லை கடித்து கொண்டு கேட்க வழியில் ஊமையாக கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது பெண்ணால்…  

இப்போது அவை அனைத்தும் நினைவிற்க்கு வர, அவன் முகம் லேசாக பயத்தை காட்டி, வியர்வையை சிந்த, லேசாக தலையை இல்லை என்பது போல் ஆட்டவும், 

“எதுக்கு தலையை ஆட்டுறீங்க மன்சூர்…? ஆம்புலன்ஸ் வேண்டாமா…? இங்கையை இப்படியே இருந்து சாக விருப்ப படுறீங்களா…?” என்று கேட்டதில் அதிர்ச்சியில் கண்களை மட்டுமே விரித்து பார்க்க முடிந்தது மன்சூர்க்கு…

 

அவனது முகத்தையே பார்த்திருந்தவள் ,”இப்ப நான் ரூம்க்குள் வரும் போது நீ திணறிட்டு இருந்தியா…” என்றபடி மீண்டும் அவன் அருகில் அமர்ந்தவள், தொடர்ந்தாள் மேலும்

“அப்ப அப்படி ஒரு வெறி வந்துச்சு… ஏதாச்சும் கிடைச்சா அதை வச்சு உன்னை கொண்ணுட்டு ஓடி போயிறலாம்னு… ஆனா அதுக்கு அப்புறம் நான் நிம்மதியா வாழ முடியுமா சொல்லு… போலிஸு அது இதுன்னு பயந்துட்டே சுத்தணும்… வேண்டாம்… இனியாச்சும் நான் நல்லா வாழணும்… நீ இத்தனை வருஷம் பண்ண கொடுமைக்கு துடிப்ப, கஷ்டப்படுவ, அதை நான் பார்ப்பேன்… என்னை எவ்வளவு துடிக்க வச்சு, காய படுத்தி என் வாழ்க்கையை சீரழிச்சு இருப்ப… அதுக்கு நீ அனுபவிப்ப…” என்றவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நிற்க, மன்சூர்க்கு முகத்தில் பயம்  அப்பட்டமாக தெரிந்தது…

‘ஆசிப்க்கு ஃபோன் பண்ணா போதும்… அவன் வந்து பார்த்துப்பான்… ஆனா ஃபோன் எங்க…?’ என்று அவசரமாக யோசித்தவன் தலையை திருப்பி தன் அலைபேசியை தேட, 

ஷிவானி, “இதையா தேடுற… ?” என்றபடி கையில் இருந்த அலைபேசியை காட்டி கேட்கவும், 

மன்சூர் உள்ளுக்குள் நொடிந்தே போனான், ‘அச்சோ… இப்ப எப்படி தப்பிச்சு போறது… என்னத்த பண்ணி தொலைச்சான்னு தெரியலையே..’  என்ற எண்ணியவன் தன் உடலை அசைக்க எண்ணி முயற்சிக்க அதுவோ ஒரு இன்ச் கூட நகரவில்லை… 

“ம்பச்ச்… ரொம்ப டிரை பண்ணாத… உன்னால நகரவும் முடியாது, பேசவும் முடியாது… ஏன்னா அந்த அவளவுக்கு நான் வேலை பார்த்து இருக்கேன்…” என்று அவன் கன்னம் தட்டியவள், அலைபேசியை அருகில் இருந்த நைட்லேப் மேஜையின் மீது வைத்து, 

“முடிஞ்சா எடுத்துக்கோ… நான் உன்னை தடுக்க மாட்டேன்…” என்றபடி தோரணையாக கையை கட்டியபடி அமர்ந்து கொண்டவள், மன்சூர் முயற்சிப்பதை பார்த்து, 

“அச்சோ… முடியலையா… எப்படி முடியும் நான் குடுத்த மருந்து அப்படி… நீ சாக போறதை நீயே உணருவ… தப்பிக்க முடியாம துடிப்ப… கெஞ்சணும்னு நினைப்ப… ஆனா உன்னால முடியாது… எத்தனை நாள் நான் கெஞ்சி இருப்பேன்… தப்பிக்க முயற்சி பண்ணப்ப எவ்வளவு கொடுமை பண்ணின… எல்லாத்துக்கும் இப்ப அனுபவி… கொஞ்சம் கொஞ்சமா துடிச்சு துடிச்சு நீ சாகணும்…” என்று பல்லை கடித்துக்கொண்டு கண்கள் கலங்க, வெறி பிடித்தவள் போல பேசியவளை பார்க்க உண்மையில் மன்சூர்க்கு அவள் கூறியது போல பயமும் உடலில் உதறலும் உண்டானது என்ன செய்வதென்று அறியாமல்… 

“நீ என்னை பண்ண மாதிரி உன்னை நான் பண்ண மாட்டேன்… என் சுண்டுவிரல் நகம் கூட உன்மேல படாது… ஆனா நான் துடிச்ச மாதிரி நீ துடிப்ப…” என்னும் போது அவளது பின் இருந்து, 

“துடிக்க வைப்போம்…” என்று ஒரு குரல் கேட்கவும், மன்சூர் அவசரமாக கண்களை உருட்டி பின்னிருப்பது யாரென்று பார்க்க, ஷிவானியோ பொறுமையாக திரும்பி பார்த்தாள் தன் கண்களை துடைத்து கொண்டு…. 

தான் அணிந்திருந்த ஜெர்கினையும் ஹெல்மெடையும் கழட்டி, அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு திரும்ப, மன்சூரால் நம்பவே முடியவில்லை… 

அவனது விழிகளே காட்டியது, ‘நீயா…?’ என்னும் கேள்வியோடு தாங்கிய அதிர்ச்சியை… 

ஷிவானி, “நான் எல்லாத்தையும் முடிச்சுட்டேன்… இனி உன் பங்கு மட்டும் தான் பாக்கி…” என்றபடி நகர்ந்து சற்று விலகி அருகில் இருந்த அலங்கார கண்ணாடியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மன்சூரின் மீது பார்வையை பதித்து கைகளை கட்டியபடி… 

இங்கு மன்சூருக்கோ அடுத்தடுத்த அதிர்ச்சியில் நிலை குலைந்து போனான்… 

அவன் அருகில் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்ததோடு, அவனது கண்ணோடு கண் பார்த்தபடி கால்களில் கையூண்றி விரல் கோர்த்து அமர்ந்த அந்த உருவத்தின் முகத்தில் அத்தனை குரோதம், கண்களில் அத்தனை வெறி… 

அடுத்து வந்த ஒருமணி நேரமும் அவ்வரையில் மௌனமான மரண ஓலம் மட்டுமே… 

உள்ளுக்குள் எறியும் நெருப்பை போல வெளியே மழை பேயாக பெய்து கொண்டிருந்தது… 

அறையில் இருந்து வெளி வந்தவர்களின் உள்ள கொதிப்பு அடங்கவில்லை என்றாலும் முகம் சற்று அமைதியை காட்டியது… 

“இனி…?” என்ற ஷிவானியின் கேள்விக்கு, 

“எதுவுமில்லை… இனி நீ ஃபிரி இந்த அரக்கன் கிட்ட இருந்து … அவ்வளவு தான்…” என்றபடி தன் ஜெர்கினை எடுத்து அணிய, 

“போலிஸ்….?” என்று அடுத்து கேட்க, 

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி செய் போதும்… கேள்வி கேட்டா பயப்படாம சொன்ன மாதிரி சொல்லு… தைரியமா இரு, தைரியமா பேசு… நீ இனி பேச போறதுல தான் உன் சுதந்திரமும் எதிர்காலமும் இருக்கு…” என்றதோடு ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்ள, 

“ம்ம்ம்…” என்ற பதில் மட்டுமே ஷிவானியிடம் இருந்து… 

ஆனால் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியேறி கேட்டை அடையும் முன்பே, வெளியே மகிழனின் வண்டியோடு மற்ற போலிஸ் வாகனமும் வந்து நின்றது… 

ஒருநொடியில் நிலையை யூகித்து, பக்கவாட்டில் ஒதுங்கி தோட்டத்துக்குள் புகுந்த அந்த உருவம், வேகமான ஓட்டத்தில் வீட்டின் பின்புறம் சென்று சுவர் ஏறி வெளியே குதித்ததோடு சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த தன் பைக்கில் ஏறி பறந்தும் விட்டது எங்கும் நில்லாமல்… 

எல்லாம் சில நிமிடங்களில் நடந்திருந்த சம்பவம், அந்த கொட்டும் மழையில் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த நபரின் உள்ளத்தின் துடிப்பை அதிக படுத்தியது… 

பயம் இல்லை வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை நினைத்தால் மகிழனின் முன்பு தைரியமாக சென்று நிற்கலாம் தான்… ஆனால் ஆசிப்… 

அந்த ஒருவனை விட்டுவிட மனம் கேட்கவில்லை… அந்த ஒருவனுக்காக இந்த ஓட்டம்… இந்த பதட்டம்… அவ்வளவுதான் என்று தோன்றியது மூளைக்குள்… 

கேட்டின் முன் இறங்கி நின்றவன், உடன் வந்த போலிஸிடம் “சீக்கிரம் உள்ள போங்க… எனக்கு அவன் வேண்ணும்… மிஸ் பண்ணிற கூடாது…” என்று கர்ஜித்த படி உள்ளே சென்றவன், 

“வீட்டை ரௌன்டப் பண்ணுங்க…யாராச்சும் சந்தேக படுற மாதிரி இருந்தா உடனே அரெஸ்ட் பண்ணுங்க…” என்று கொட்டும் மழையில் கத்திக் கொண்டே போகும் சமயம் தான் அந்த உருவம் சுவர் ஏறி குதித்தது ஆனால் போலீஸ் வீட்டை சுற்றி வலைக்கும் முன் அந்த உருவம் தன் ஓட்டத்தை துரித படுத்தி இருக்க, அந்த மழையில் அதை யாரும் கவனியாது போனது அந்த நபரின் அதிர்ஷ்டமே… 

கதவை வேகமாக தள்ள அது பூட்ட படாததால் பட்டென்று திறந்து கொள்ளவும் அவன் கண்டது, ஹாலில் இருந்த சோபாவில் தேமேவென்று படுத்திருந்த ஷிவானியை தான்… 

இந்த போலிஸ் சட்டென வரும் என்று எதிர் பாராதவள் வேகமாக எழுந்து நின்றாள் பதற்றத்தோடு… 

மகிழனின் பார்வை கூர்மையானது சட்டென, கையில்லாத முட்டி வரை மட்டுமே இருந்த அந்த இறுகிய உடையில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை… 

அதே நேரம் கண்கள் சிவந்து தலை கலைந்து முகம் வாட நின்றிருந்தவளின் கோலமும் கவனித்து கொண்டான் சில நொடிகளில்… 

அதே சில நொடிகளில் ஷிவானியும், முதலில் திகைத்து பின் தன்னை சுதாரித்து கொண்டாள்… 

‘எப்படியும் போலீஸ் வரதான் போகுது நீ பேசதான் போற… அது இப்பவே நடக்க போகுது அவ்வளவுதான்… சோ… சொதப்பிறாத…’ என்று எண்ணிக்கொண்டவள் அடுத்து நடக்க போகும் சம்பவத்திற்கு தயாரானாள்…

“என்ன வேண்ணும் உங்களுக்கு… எதுக்கு இப்படி இத்தனை பேர் உள்ள வரீங்க…?” என்று பதற்றமாக கேட்டபடி அருகில் இருந்த மேல் கோட்டை எடுத்து அணிந்து கொண்டாள்… 

மகிழன், “மன்சூர் வேண்ணும்… எங்கன்னு நீயா சொல்லிட்டா பிரச்சினை இல்ல…” என்று பக்கவாட்டில் பார்க்க, இரண்டு போலீஸ் முன்வந்து நின்றது… 

“என்னாச்சு… என்ன பிரச்சனை…? அவர் உள்ளதான் இருக்காரு…” என்று கூறி முடிக்கும் முன்பே அவள் காட்டிய திசை பக்கம் நகர்ந்திருந்தான் வேகமாக… 

“சார்… யார் சார் நீங்க எல்லாம்… எதுக்கு இப்படி உள்ள புகுந்து பிரச்சினை பண்ணுறீங்க…?” என்றபடி மகிழனை பின் தொடர, 

அறையின் வாசலில் கண்கள் இடுக்க நின்றுவிட்ட மகிழனுக்கு எதுவும் சரியாக படவில்லை தரையில் கிடந்த மன்சூரின் உடலை பார்த்து…

பின் தொடர்ந்து  வந்த ஷிவானி, மகிழனின் பார்வை சென்ற திசையில் தலையை திருப்பி பார்த்தவள், 

“அச்சோ பேபி…”என்று பதறியபடி வேகமாக அவன் அருகில் சென்று பார்த்தவள், வாயில் நுரை தள்ளிய நிலையில் கையும் காலும் ஒருபக்கம் இழுத்திருக்க வலிப்பு வந்து உயிரை விட்டிருப்பது தெரிந்தது… 

“அச்சோ மன்சூர்…. என்னாச்சு… மன்சூர்… மன்சூர்…..”என்று அவன் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தவளுக்கு குரலில் ஒரு வித பதற்றம் இருந்தது….

ஷிவானியையும் மன்சூரையும் கூர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சமயம் அவன் அருகில் பிரவீண் வர, “வீட்டை சுத்தி சர்ச் பண்ணுங்க… பாரன்சிக் ஆளுங்களை வர சொல்லுங்க…” என்று கட்டளையிட்டு விட்டு அந்த அறையை நோட்டம் விட்டான்…

 

ஷிவானி, ஒருவித அமைதியை காட்ட, எரிச்சலானவன் “அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… எதாச்சும் பேசுங்க மேடம்…” என்று குரலை உயர்த்தியும் அதே அமைதி அவளிடம்….

 

பின், “எழுந்து வெளிய போ…” என்று கத்தவும், மெல்ல எழுந்தவள் தரையில் இடக்கும் மன்சூரை ஓர் பார்வை பார்த்தவள் வெளியே சென்று நின்று கொண்டாள் கண்களில் வழியும் கண்ணீரோடு…

அறையை முற்றிலும் பார்வையிட்டவன், சடலமாக கிடக்கும் மன்சூரை பார்த்து, “ஜஸ்ட் மிஸ் ஆயிட்ட…” என்று முனுமுனுத்தபடி, வெளியே வந்து சோபாவில் தோரணையாக அமர்ந்தவன், 

எதிரில் இருந்த இருக்கையை காட்டி, கையில் இருந்த காப்பை இறுகியபடி “சிட்…” என்றான் ஷிவானியை பார்த்து… 

கண்களை துடைத்து கொண்டவள் மெல்ல அவன் காட்டிய இருக்கையில் அமர, மகிழன் 

“உன் பேரு….? வயசு…?” என்று நிறுத்திக் கொண்டவனுக்கு அவள் யார் என்ன உறவு என்பதை அவளது உடையும் மன்சூரின் வயசுமே காட்டி கொடுக்க, மரியாதை என்ன விலை என்று கேட்கும்படி இருந்தது அவனிடம்… 

“ஷிவானி…. இருபத்திரெண்டு…” என்றவளை முறைத்தவன்… 

“இருபத்திரெண்டு…  ம்ம்ம்… எத்தனை நாளா கூட இருக்க…?” என்று கேட்கவும், உதட்டை கடித்து கொண்டவள், 

“ஆறு வருஷமா இருக்கேன் கூட…” என்ற வார்த்தையில் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை… 

“ம்ம்ம்….” என்றவன் அவ்வீட்டை நோட்டமிட செய்தவன், தொலைவில் இருந்த பிரவீணை செய்கையால் அருகில் அழைத்து ,

 “சிசிடிவி செக் பண்ணுங்க…” என்று கட்டலையிட்டவன், “எல்லாரையும் வெளியே இருக்க சொல்லு…” என்று விட்டு ஷிவானியின் புறம் திரும்பினான்… 

அவன் சொன்னபடி அனைவரும் வெளியேறவும், “உன் குடும்பம்…?” 

“நான் சென்னை சார்…” என்று தயங்கி இழுக்க, 

“மேல சொல்லு…”என்று அதிகார தோரணையில் சொல்லவும், ஷிவானி தயங்கியபடி

“என்ன சொல்லணும் சார்…” என்று கேட்டு முழித்தவளை மகிழன் முறைத்து பார்த்தவன் அவள் வயத்தின் காரணத்தை கண்டு, 

“இந்த மன்சூர்கூட எப்படி இத்தனை வருஷ பழக்கம் ஆச்சு…?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்க, 

“அ…அது… நான்…” என்று திணறியவளை, 

“சீக்கிரம் சொல்லு…” என்று கத்தியவனுக்கு ஆத்திரமாக வந்தது இத்தனை சிரமபட்டு பிரோஜனம் இல்லாமல் போனதே என்று… 

அதை ஷிவானியிடம் காட்டினான் அவனையும் மீறி, 

“சார்… நான் அம்மா அப்பா கூட ஷாப்பிங் போனப்ப என்னை பார்த்துட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு…” என்று பட்டென்று சொல்லவும், 

“கூட்டிட்டா…?” என்று புருவம் சுருக்கி கேட்டவன், பின்

“எதுவா இருந்தாலும் உண்மையை சொல்லு… இல்ல நீ தான் பிரச்சினைல மாட்டுவ… இப்ப இந்த மன்சூர் செத்தது உன்கூட வச்சு… இது இயற்கை மரணமா இல்ல நீ பிளான் பண்ணினியான்னு தெரியாது… ஒழுங்கா உண்மைய சொன்னா தப்பிக்க வாயிப்பிருக்கு….” என்ற வார்த்தைக்கு நிதானித்தவள், ஒரு பெருமூச்சுடன்

“கடத்திட்டு வந்துட்டான்…” என்றவளின் வார்த்தையிலும் உடல் மொழியிலும் மகிழனுக்கு நன்கு வித்தியாசம் தெரிந்தது… 

“எப்ப…?” 

தொடரும்….

Advertisement