Advertisement

UD-13:

“சார்…” என்று வந்து நின்ற பிரவீணை நிமிர்ந்து பார்க்கலாம், 

“சொல்லு பிரவீண்… என்னாச்சு…?” என்று கேட்ட மகிழனின் பார்வை தனக்கு எதிரில் இருந்த லேப்டாப்பின் மீதே பதிந்திருந்தது…. 

“புல்லா செக் பண்ணிட்டோம் சார்… எதுவும் கிடைக்கல…” என்றதில் உதட்டை வளைத்து யோசித்தவன்,

 

“ம்ம்ம்…” என்று லேப்டாபின் பட்டன்களை பென்னால் தட்டியபடி, புருவம் சுருங்க ‘எதுவுமே கிடைக்கல… அப்ப இவங்க மூலமா எதுவும் இல்ல… ம்ம்ம்… அப்ப மத்தவங்கள்ல யாராச்சும் இருக்குமா…? நான் எதையாச்சும் மிஸ் பண்ணிட்டேனா…?’ என்று யோசிக்கையில் இவன் தட்டியதில் கீ பட்டன் தெரித்து வந்து விழுந்தது… 

அதில் தன் யோசனையில் இருந்து வெளிவந்தவன், “என்ன பண்ணலாம் பிர…” என்றபடி மீண்டும் அதே இடத்தில பட்டனை வைக்க போனவனின் கையும் வார்த்தையும் சட்டென நின்றது சந்தேகத்தில்… 

“சார்…” என்று பிரவீண் அழைக்கவும், 

பட்டனை கையில் வைத்து பார்த்திருந்த மகிழன், அதை எதிரில் இருப்பவன் முன் நகரத்தியபடி, “இதை செக் பண்ண சொல்லு பிரவீண்….” என்றிட, 

புரியாமல் முழித்தவனை கண்டு, “வாட்…?” என்றிட, 

“இல்ல சார்… இதை என்ன செக் பண்ணனும்…? ” என்று கையில் எடுத்து திருப்பி பார்த்து கேட்க, 

அவனை நிமிர்ந்து பார்த்த மகிழன், “நீங்க அயன் படம் பார்த்து இருக்கீங்களா…?” என்று சுழல்நாற்காளியில் சாய்ந்தபடி கேட்கவும், கண்தளை விரித்தவன், 

“புரிஞ்சுது சார்…” என்றவன் அந்த பட்டனை உடனே ரிசர்ச் டிபார்ட்மென்ட்கு அனுப்பி வைத்தான் சோதனைக்காக…

அடுத்த சில மணி நேரத்தில் மகிழனுக்கு அழைப்பு வந்தது ரிசர்ச் டிபார்ட்மென்டில் இருந்து…

 

“எஸ்…” என்று அழைப்பை ஏற்றவனுக்கு, 

“சார்… ரிசர்ச் டிபார்மென்ட்டுல இருந்து பேசுறோம்…” என்றதும் மூளை கூர்மையாக, 

“சொல்லுங்க… ஏதாச்சும் கிடைச்சுதா…?” என்று கேட்க, 

“ஆமா சார்… ஹெவி டிரக் சார்…” என்றிட, எதிர்பார்த்தது தான் என்பது போல், நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன்

“டீலைல்டா சொல்லுங்க…” 

 

“சார்… இது ஒருவகையான டிரக்னு சொல்லலாம்… தெளிவா சொல்லணும்னா இதை மெடிசன்ல யூஸ் பண்ணாங்க சில கன்டிரிஸ்ல…” என்று முடிக்கும் முன், 

“புரியல… யூஸ் பண்ணாங்கனா…? இப பண்ணுறது இல்லையா…?” 

“ஆமா சார்… தடை பண்ணிட்டாங்க…. இது நல்லது இல்ல ஒருவகையான போதையை கிரியேட் பண்ணும்… அதோட இல்லாம இதுனால உடம்புல  நிறைய பிரச்சனையும் உண்டு பண்ண வாய்ப்பு இருக்கு சார்… அதான் தடை பண்ணி இருக்காங்க…” என்றிட

“அப்ப இந்தியால…?” 

“நமக்கும் தான் சார்… இது லைட்டா எடுத்துக்கிட்டா கூட ஆள் உச்ச போதைக்கு போயிருவான்… ஹெவியாவோ இல்ல கொஞ்சம் கொஞ்சமா தொடர்ந்து எடுத்துக்கிட்டா டெத் கன்பார்ம்…”-என்றதில் அதிர்ச்சி மகிழனிடம்,

 

“ம்ம்ம்… ” என்றவனுக்கு ஏதோ தோன்ற பேச வாய் திறக்கும் முன் எதிரில் இருப்பவரே, 

“ஆனா இதை டிரைக்டா யூஸ் பண்ணாம, வேற வேற கெமிக்கல் காம்போனன்ட் கூட சேர்த்து யூஸ் பண்ணா இதோட தாக்கம் கம்மி ஆகலாம்…” என்றதற்கு, 

“புரியல…” என்றவனிடம், 

“சார் தண்ணீ அடிக்கும் போது ஏன் சரக்கோடு வாட்டர் மிக்ஸ் பண்ணுறாங்க…? அதே கான்செப்ட் தான் இங்க…” என்றதும் தெளிவாக புரிந்தது… 

“ம்ம்ம்…” என்றவனுக்கு, 

“படத்துல வர மாதிரி டிரக்கை திட பொருளா மாத்தி இருக்காங்க… ஆனா இது நாளு நாளைக்கு மேல இந்த மாதிரி ஸ்டெடி ஸ்டேட்ல இருக்காது…” என்றதும், 

“அப்புறம் என்ன ஆகும்…?” 

“பொருளோட பவர் ஜாஸ்தி… சோ உருக ஆரம்பிச்சுடும்…”என்றதை கேட்டுக் கொண்டவன், 

“ம்ம்ம்… தேங்க்ஸ்…” என்றிட, 

“ஓகே சார்…” என்று அழைப்பை துண்டித்து இருந்தான்… 

பக்கம் இருந்த லேப்டாப்பை பார்வையிட்டவன், “கிளவர்…” என்று புருவம் தூக்கி மெச்சிக் கொண்டான்… 

அதே நேரம் உள்ளே நுழைந்த பிரவீணிடம், “பிரவீண்… எல்லா லேப்டாப்பையும் சீஸ் பண்ணுங்க… அந்த பத்து பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க… அவங்க கிட்ட வேற ஏதாச்சும் லேப் இருந்தாலும் அதையும் சீஸ் பண்ணுங்க…” என்றபடி எழுந்து சில கோப்பைகளை கையில் எடுக்க, 

மகிழனின் கட்டளையை ஏற்று, “எஸ் சார்… பட் வௌய்…?” என்று கேட்கவும், 

அவனை பார்த்து புன்னகைத்தவன், “வீ காட் இட்…” என்று அவன் தோள் தட்டி வெளியேறினான் வேகமாக, 

“சார்… இப்படி எல்லாம் கூட யோசிக்குறாங்க… சான்ஸே இல்ல சார்… ” என்றபடி வண்டியை ஓட்டிய பிரவீணை ஓர் பார்வை பார்த்தபடி அமைதியாக வந்தவன் எண்ணம் எல்லாம் வேறொன்றை எண்ணிக்கொண்டே வந்தது… 

“சார்…” என்று அழைக்கவும் தன் எண்ணத்தில் இருந்து கலைந்தவனுக்கு வர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டதை கண்டு, 

“நீங்க போய் நான் சொன்னதை செய்யுங்க… நான் வந்துறேன்…” என்று கட்டிடத்தின் உள்ளே சென்று விட, 

பிரவீண் அந்த பத்து பேரையும் வைத்திருந்த இடத்திற்கு சென்றான் வேகமாக… 

மகிழன் தன் தலைமை அதிகாரி ரவிசந்திரனிடம் விஷயத்தை கூற, “எப்படி எல்லாம் யோசிக்குறாங்க… ம்ம்ம்… உங்களுக்கு எப்படி டௌட் வந்துச்சு…? “என்ற கேள்வியில்… 

“மன்திலி மன்திலி அவங்க டிராவல் பண்ணுறதை வச்சு தான் சார்… இன்னும் ஓபனா சொல்லணும்னா அந்த கிளு நமக்கு வரலைன்னா கண்டிப்பா இந்த விஷயம் தெரியாமலேயே போயிருக்க வாயிப்பிருக்கு… “

“சரி தான்… அந்த டிரக்கோட அமௌன்ட் எவ்வளவு இருக்கும்…?”

“சரியா தெரியலை சார்… கண்டிப்பா கிராம் கணக்குல தான் வரும்… பிகாஸ் நான் கீபேடு மட்டும் தான் செக் பண்ணி இருக்கேன் அதுவும் ஒரு லேப் மட்டும் தான் இன்னும் ஒன்பது லேப் இருக்கு… வேற பார்ட்ஸும் இப்படிதான் இருக்கா இல்ல கீபேடு மட்டும்தானான்னு தெரியலை… நீடு டூ செக் சார்…” 

“ம்ம்ம்… வேல்யூ….?” என்று கேள்வியாக பார்க்க, 

“சார்… நான் அனலைஸ் பண்ணது… ரிப்போர்ட் வந்ததுன்னு எல்லாத்தையும் வச்சு பார்த்தா… கண்டிப்பா கம்மியா சொல்லிட முடியாது சார்… இதெல்லாம் டிரைக்டா யூஸ் பண்ணுறது கிடையாது சார்…”

“தென் ஹௌவ்…?” 

“அடல்டிரேஷன் சார்… அதாவது மாத்திரை மூலமா பண்ண அதிக வாய்பிருக்கு… இப்ப தலை வலின்னு மாத்திரை வாங்கினா, அதுல இந்த டிரக் மிக்ஸ் ஆகி இருக்கும்… வலி போறதுக்கு பதில் அதை மறைச்சு தூக்கத்தை குடுக்கும்… சோ திரும்பவும் வலி வந்தா இதை எடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்க வைக்குறது சார்… டிரக்னு தெரியாமலேயே எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்குறாங்க… கம்மி விலையில நிறைய லாபம்…” என்று தோளை உழுக்க, 

“அப்ப அது என்ன மாத்திரை…?” என்று சந்திரன் கேட்கவும், 

“இல்ல சார்… இது என்னோட கணிப்பு மட்டும் தான்… இனி விசாரிச்சா தான் அது என்ன அதுனால என்ன பிரச்சனை வரும் யார் பண்ணுறது எங்கிருந்து வருதுன்னு எல்லாமே தெரியும்…” என்றதும், 

“ம்ம்ம்… ஓகே கன்டினியூ… ஏதாச்சும் தேவைன்னா கேளுங்க…” என்றிட, எழுந்து கொண்டவன், 

“எஸ் சார்…” என்றிட, 

“வெல் டன் மகிழன்…” என்றவருக்கு, 

“தேங்கியூ சார்…” என்றதோடு ஒரு சலியூட் அடித்து விடைபெற்றான் பத்து பேரை வைத்திருந்த இடத்திற்கு… 

உள்ளே நுழைந்த மகிழனிடம், “சார் நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன்…” என்றவனை பார்த்து தலையை ஆட்டியவன், 

அந்த பத்து பேரிடம், “இதை பத்தி ஏதாச்சும் தெரியுமா…?” என்று கேட்க, 

“இல்ல சார்… நோ சார்…” என்று பதில் வர, 

“யார் உங்களுக்கு இந்த ஆஃபரை தந்தது…?” என்று கேட்கவும், ஒருவர்

“சார் எங்களுக்கு எதுவும் தெரியாது… எங்க பெர்பாம்மன்ஸ் பார்த்து தியா மேடம் எங்களை சூஸ் பண்ணி அனுப்புனாங்க… அங்க கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு திரும்ப இந்தியா வந்துருவோம்… அவ்வளவு தான் சார் தெரியும்….” என்றிட, 

“ம்ம்ம்…” என்று தலையை ஆட்டி கேட்க, 

“எத்தனை மாசம் அங்க வேலை பார்ப்பீங்க…?” 

“அது… அப்ப நாங்க எடுக்குற பிராஜட் பொருத்து மாறும் சார்…”

“இந்த ஆஃபர்ல போனவங்க திரும்பவும் போவாங்களா…?” 

“எஸ் சார்… அப்படி போயிருக்காங்க… ஆனா அதுக்கு ஒரு டைம் ரொட்டீன் இருக்கு சார்… இப்ப நாங்க போயிட்டு வந்தா அடுத்து கொஞ்ச மாசத்துக்கு இல்லைன்னா ஒன் இயர்க்கு போக முடியாது சார்…” என்றதில் புருவம் சுருக்கியவன்,

“ஏன்…?” அவனது கேள்விக்கு ஒருவர், 

“சரியா தெரியலை சார்… மத்தவங்களுக்கும் வாய்ப்பு வேண்ணும்னு இப்படி ரூல் இருக்குன்னு சொல்லி கேட்டு இருக்கேன் சார்…”என்றிட, அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டான்… 

“வேற ஏதாச்சும் உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் இல்லைன்னா சந்தேகமா ஏதாச்சும் தெரிஞ்ச விஷயம் இருக்கா…?” என்று கேட்டிட, யாரும் எதுவும் பதில் சொல்லவில்லை…

“பைன் தேங்க்ஸ்…” என்று கிளம்ப போகையில், கூட்டத்தில் ஒருவர் எழுந்து, 

“சார் நாங்க எந்த தப்பும் பண்ணல… எங்களை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க…?” என்று கேட்டிட, 

“நீங்க எதுவும் பண்ணலைன்னாலும் பொருள் உங்க மூலமா தான் கை மாறி இருக்கு… சோ… நீங்க கஸ்டடில தான் இருப்பீங்க… எல்லாம் தெளிவாகுற வரை…” என்றவனை பார்த்து அனைவருக்கும் கவலையாகி விட, மகிழன் வெளியேறி விட்டான் அமைதியாக…

பின்னோடு வந்த பிரவீண், “சார் அப்ப அடுத்து…?” என்று கேட்டிட, 

“அந்த கம்பெனி சேர்மனை இல்லைன்னா எம்.டி’யை பிடிக்கணும்…” என்று தன் கூலரை எடுத்து மாட்டியவன் வேகமாக தன் வண்டியை நோக்கி நடந்தான் பல எண்ணங்களுடன்… 

இங்கு மகிழன் தீவிரமாக தன் வேலையை பார்த்து கொண்டிருந்த சமயம், அங்கு மன்சூரின் ஆஃபீஸ் கலவரமாக இருந்தது… 

“போச்சு எல்லாம் போச்சு இப்ப என்ன பண்ணுறது… அந்த போலீஸ் வேற நோண்டி எல்லாத்தையும் கண்டு புடிச்சுருவான்… எல்லாம் மாட்ட போறோம்…” என்று ஆசிப் கத்திக்கொண்டிருக்க, 

தியா, “அதை உன் பிரெண்டு கிட்ட எல்லாத்தையும் சொல்லும் போது யோசிச்சு இருந்து இருக்கணும்… இப்ப புலம்பி நோ யூஸ்…” என்றவளிடம் வேகமாக நெருங்கியவன், 

“என்ன பண்ண போற…? அடிக்க போறியா இல்ல கழுதை பிடிச்சு நெருக்க போறியா…? நீ இனி என்ன பண்ணாலும் பிரச்சினை உனக்கு தான்… எனக்கு லாபமும் இல்ல நஷ்டமும் இல்ல…” என்று மிதப்பான பதில் அவளிடம்… 

“என்ன டி கொழுப்பா…?”என்று எகிற, 

“அப்படிதான்னு வச்சுக்கோயேன்…” இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டவள், கைகளை கட்டியபடி ஆசிப்பை உறுத்து பார்க்க, 

பல்லை கடித்தவன், “இந்த விஷயத்துல மாட்டுன்னா நீயும் தான் மாட்டுவ…” என்றதும், 

“வாய்ப்புகள் கம்மி தான்… ஏன்னா நீ தான் எம்.டி நான் இல்ல… நான் ஒரு எம்பளாய் தான்… அதுக்கும் மேல என் சைடு எல்லாமே கிளியரா இருக்கு… எனக்கே தெரியாம தான் எல்லாம் நடந்துச்சுன்னு சொல்லுவேன்… உன் பாக்ரௌண்டு அலசுனாலே நீ சிக்கிப்ப…” என்றவளின் வார்த்தைகள் அத்தனை தெளிவாக இருந்தது…

“நீ தானே இந்த ஸ்மக்லிங் ஐடியா குடுத்த…?” அவன் வார்த்தையில் சற்று நடுக்கம் தெரிந்தது… 

“ஆமா… நான்தான்… ஆனா யாருக்கு தெரியும்…?” என்றவள் யோசிப்பது போல் பாவனை செய்து பின், முகத்தை தீவிரமாக்கி

“சொன்னாலும் நம்ப வாய்ப்பு கம்மி தான்…” என்றவளின் வார்த்தையில் அத்தனை கேலி இருந்தது…

“ஏய்ய்….” என்று ஆசிப் கத்தும் போது, அத்தனை நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த மன்சூர்,

 

“ஆசிப்…” என்று குரல் உயர்த்தி தடுக்க, தந்தையின் புறம் திரும்பியவன்

“ப்பா… பார்த்தீங்களா… எவ்வளவு திமிரா பேசுறான்னு… நான் அன்னைக்கே சொன்னேன் இவளை நம்ப வேண்டாம்னு… கேட்டீங்களா நீங்க… இப்ப பாருங்க… எப்படி எஸ்கேப் ஆகுறான்னு…” என்று தந்தையிடம் எகிற, 

“ஷ்ஷ்ஷ்…” என்று மகனை அடக்கியவர், தியாவை பார்த்து

“எதுக்கு இப்படி பண்ணுற…?” அத்தனை நிதானம் அவரிடம், 

“நான் எதுவும் பண்ணல… நீங்க இந்த கேள்வியை உங்க பையன் கிட்ட தான் கேட்கணும்… பிரச்சினை ஆரம்பிச்சது உங்க பையன் கிட்ட இருந்து தான்… இத்தனை வருஷம் எந்த பிரச்சினையும் இல்லாம தான் போயிருக்கு… இப்ப இப்படி ஆக யாரு காரணம்…?” என்று சாதாரணம் போல் கேட்டவளின் தோரணை வேறாக இருந்தது… 

“சரி பிரச்சினை ஆயிருச்சு… இனி என்ன பண்ணுறது…?” என்று கேட்டவரை பார்த்து எழுந்து நின்றவள், 

“அது எனக்கு தெரியாது சார்… நேத்தே கமிஷனர் கிட்ட பேச சொன்னேன்… ஆனா நீங்க பயங்கர பிஸியா இருந்தீங்க… இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்…? என்னால ஒரு பிரச்சனை வந்திருந்தா நான் அதுக்கு யோசிக்கலாம்… ஆனா இது… அப்படி இல்ல… நான் இதுக்கு மேல இதுல தலையை விட்டா சரி வராது… சாரி சார்…” என்றவளை பார்த்து ஆசிப், 

“ஏய்ய்ய்… என்ன டி நைஸா நழுவுற…?” என்று அருகில் நெருங்கிய சமயம், 

மன்சூர், “ஆசிப்… விடு…” என்று குரலை உயர்த்த, அவனோ

“ப்பா… என்ன ப்பா இப்ப கூட அவளை எதுவும் சொல்ல மாட்டீங்கறீங்க… நம்மளை இப்படி பிரச்சினைல மாட்டிவிட்டு போறா…” என்று தந்தையிடம் எகிற, 

“ஒருநிமிஷம்…” என்று அழைத்தவள், 

“பிரச்சினைல மாட்டிவிட்டது நான் இல்ல நீ… நீ மட்டுமா தான்…” என்றவள் அவனை ஓர் பார்வை பார்த்து விட்டு வெளியேறிவிட்டாள் அந்த அறையை விட்டு… 

ஆசிப் பேச வாய் திறக்கும் நேரம், மன்சூர் “அவளை விடுஆசிப்… அவ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கா… நாம தான் யோசிக்கல… இந்த ஐடியா அவ தந்தது ஆனா அதுல இருந்து ஒரு ரூபாய் கூட அவ எடுக்கல… சம்பளம் மட்டும் தான் அவளுக்கு போயிட்டு இருக்கு… வெளிய பார்த்தா அவ ஒரு லிமிட்டோட இருந்து இருக்கா… சேப் கேம்…” என்ற தந்தையை முறைத்து பார்த்தவன், 

“நான் அப்பவே சொன்னேன்… அவளை நம்ப வேண்டாம்னு கேட்டீங்களா… இப்ப பாருங்க… எப்படி மாட்டிக்கிட்டோம்னு…” என்று புலம்ப, 

“தியாவை விடு ஆசிப்… அவ எங்கையும் போயிற முடியாது… நாம முதல்ல இந்த பிரச்சினையை பார்ப்போம்… அப்புறம் அவளை கவனிக்கலாம்…” என்றவர், 

தன் ஃபோனை எடுத்து வக்கீலுக்கு அழைத்தவர், அவசர கால முன்ஜாமீனை எடுத்தார் முதற்கட்டமாக… 

தியா பேசிவிட்டு அறையில் இருந்து வந்ததும் காரில் ஏறி அமர்ந்தவள் முதலில் செய்த வேலை, ஷிவானிக்கு அழைத்தது தான்… 

“சொல்லு…” என்று ஷிவானி கேட்கவும், 

“இன்னைக்கு இன்னொரு ஷாட் குடுத்துற…” என்க, 

“இன்னைக்கா… அதுக்குள்ளையா…?” என்றவளுக்கு, 

“ஆமா… இன்னையோடு எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்…நான் என் பிரெண்டு கிட்ட சொல்லி இருக்கேன் அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்… உன்னையும் சேர்த்து..  ” என்றதில் பதற்றமாகியவள், 

“தியா…” என்றழைக்க, 

“ஷ்ஷ்ஷ்… பதறாத… எல்லாம் முடிஞ்ச பின்னாடி போலீஸ் வரும்… கேள்வி கேட்பாங்க… உனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லு… என் விஷயம் தவிர்த்து மத்த எல்லாத்தையும் சொல்லு… உண்மையை மட்டும் சொல்லு… போதும்…” என்றவள், 

“சொதப்பிறாத ஷிவானி… இந்த நாளுக்காக பல வருஷம் காத்திருந்தேன்…” என்க, 

“ம்ம்ம்… புரியுது… நான் பார்த்துக்குறேன்…” என்றவள், 

“ஒருவேலை வரலைன்னா…?” என்று சந்தேகம் எழ, 

“கண்டிப்பா வருவான்… நல்லா சூடாகி இருக்கான்… எங்க போறதுன்னு தெரியாம அங்கதான் வருவான்…” என்றதும், 

“சரி நான் பார்த்துக்குறேன்…” என்றவள் அழைப்பை துண்டித்துவிட,

பேசிவிட்டு தன் நண்பனுக்கு அழைக்க, “தியா… என்னாச்சு… எங்க இருக்க…?” பதற்றமான குரல் அவனிடம்… 

“ஷ்ஷ்ஷ்… விஜய்… எனக்கு ஒன்னும் இல்ல… நான் சொல்லுறதை தெளிவா கேளு…” என்றவள் சிலவற்றை சொல்ல,

 

“எல்லாம் முடிஞ்சதும் ஷிவானியை கூட கூட்டிட்டு போயிரு…” என்றதும் சற்று தயங்கியவன், 

“இதெல்லாம் தேவையா தியா…?” என்று தயங்க, 

“இதே கேள்வியை அன்னைக்கு சஸ்த்திரி அங்கிள் யோசிச்சு இருந்தா நான் இன்னைக்கு இப்படி இருந்திருக்க முடியாது…” என்றதும் விஜய்,

 

“தியா…” என்று திணற, 

அவளோ, “நீ அவளை முழுசா பார்த்துக்கோன்னு சொல்லல… ஜஸ்ட் கூட்டிட்டு போயிரு போதும்… அதுக்கு அப்புறம் அவ அவளை பார்த்துப்பா…” என்றதோடு அழைப்பை துண்டித்தவள், இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள் தளர்வாக… 

கண்ணாடியில் தன்னையே பார்க்க, உடலில் தெரிந்த சோர்வு அவள் முகத்திலோ அல்லது அவள் கண்களிளோ இல்லை… 

 

தொடரும்… 

Advertisement