Advertisement

UD-12:

“நான் என்ன கேட்டேன் நீங்க என்ன பேசுறீங்க…?” தியாவிற்கு அத்தனை எரிச்சல்…

 

“நீ கேட்டதுக்கு பதில் இதுல இருக்கு… சொல்லு… காதல்னா என்ன..?” 

“எனக்கு தெரியாது… ” என்று முகத்தை திருப்பியவளை பார்த்து லேசாக புன்னகைத்தவன், 

“அதான் தெரியுதே…” என்று முனுமுனுக்க, அது பெண்ணவளின் செவியில் அழகாக விழ, 

“என்ன…?” என்று எகிறிக்கொண்டு வந்தவளை பார்த்து, 

“கூல்… கூல்..” என்று இருகரம் தூக்கி சமாதானம் செய்ய விளைந்தவன், 

“லுக் தியா… எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு… இது கண்டதும் காதல்னு சொல்லிட முடியாது… அதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை…” என்றதில் அவனை நக்கலாக ஓர் பார்வை பார்த்து வைத்தாள் நொடியில்… 

அதை புரிந்து கொண்டவன் , “உன் லுக்குக்கு என்ன அர்த்தம்னு புரியுது…. பர்ஸ்ட் டைம் பார்த்தப்ப சைட் அடிச்சேன்… அந்த சேரி… உன் வாக்… இதோ இந்த போனி டெயில்… உன் ஆட்டிடியூடு… எல்லாம் பிடிச்சு இருந்துச்சு… அவ்வளவுதான்…” என்றவறின் முகத்தில் அத்தனை ரசனை… 

“ஆனா உன்னை பத்தி தெரிஞ்சப்ப… ரியலி வாவ்ன்னு தான் சொல்ல தோணுச்சு… உன் போல்டுனஸ்… உன் கரேஜ்… உன்னோட செல்ப் கான்பிடன்ஸ்… முக்கியமா உன் ஸ்மாட்னஸ்… எல்லாமே என்னை ரொம்ப மிப்ரெஸ் பண்ணுச்சு… அதுலையும் எப்பவும் என்னை பார்த்தா முறைக்குற உன் கண்ணு… சப்ப்பா…” என்று நெஞ்சை நீவி கொண்டான்… 

“அப்படியே முள்ளு மாதிரி குத்துது இங்க… இத்தனை வருஷத்துல நான் யாருகிட்டையும் வழிஞ்சதும் இல்ல, காதலிச்சதும் இல்ல… யூ ஆர் மை வெரி பர்ஸ்ட் கேல்… உன்கிட்ட சண்டை போட ரொம்ப பிடிச்சு இருக்கு… நீ முறைக்குறது பிடிச்சு இருக்கு…” என்றவனை இமைக்காது பார்த்திருந்தாள் தியா… 

எதிரில் இருந்து பேசுபவனின் முகத்தில் அத்தனை பாவனைகள் இவை அனைத்தும் பெண்ணின் இதயத்தில் சொட்டு சொட்டாய் இறங்கி கொண்டிருந்தது… 

“எனக்கு தெரிஞ்சு என்கிட்ட மட்டும் தான் உன் கோவத்தை காட்டுற… வாக்குவாதம் பண்ணுற… அதும் உனக்கே தெரியாம நடக்கும் போது நீ சுதாரிச்சு அமைதியாகுற பாரு அப்ப என்கிட்ட அழகா மாட்டிக்குற…” என்று குறும்பாய் சிரித்தவனை பார்த்து தியாவிற்கு ஆச்சரியம் தான்… 

‘உண்மை தானே தியா… இவன்கிட்ட மட்டும் எப்படி இப்படி சிலிப் ஆகுற…? அதை கரெக்டா கவனிச்சு இருக்கான் பாரு… ஏன் இவன்கிட்ட மட்டும் இப்படி ஆகுது…’ என்ற சுய அலசலில் தலையை பிடித்துக்கொண்டாள் யோசனையில்… 

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், “தியா…” என்று அழைக்கவும் நிமிர்ந்தவளை பார்த்து, 

“எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு… சோ ரசிக்குறேன்… அளவுக்கு அதிகமா ரசிக்குறேன்… எனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட வழிஞ்சுட்டு நிக்குறேன்… தப்பா தெரியலை… போலீஸா இருந்தா லவ் பண்ண கூடாதா…? இல்ல கல்யாணம் பண்ண கூடாதா…?” என்று கேட்டவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள், 

“கண்டிப்பா பண்ணலாம்… ஆனா அதுக்கும் ஒரு தகுதி வேண்ணும்… என்கிட்ட அதில்ல… நீ நினைக்குற மாதிரி நான் இல்ல… நான் யாரு என்னனு எதுவும் உனக்கு தெரியாது… உன் காதலுக்கு ஆயிசு கிடையாது… நான் இப்ப இருக்குற மாதிரி பியூச்சர்ல இருக்க மாட்டேன்… இதை நீ தெரிஞ்சுக்க வரும்போது ரொம்ப வருத்தபடுவ…. ” என்று பேசியவளை புருவம் சுருக்கி பார்த்தவன், 

“நீ எப்படி இருந்தாலும் எதுவா இருந்தாலும் அதை நான் பார்த்துக்குறேன்… என்னை லவ் பண்ணுற வேலையை மட்டும் நீ கரெக்டா பார்த்தா போதும்…” என்றவன், உள்ளுக்குள்

‘நீ சொல்லுறது சரியா இல்லையான்னு தெரியலை… ஆனா என் கெஸ் கரெக்டா இருக்குணும்னு மட்டும் தோணுது இப்ப நீ பேசுறதை பார்த்தா…’என்று நினைத்து கொண்டவன் அடுத்து தியா பேச வாய்திறக்கும் நேரம் சௌந்தர்யா வந்திருந்தார்… 

“இந்தா ம்மா…” என்று தட்டை நீட்ட அமைதியாக வாங்கி கொண்டவளின் முகம் இப்பொழுது குழப்பத்தை காட்டியது…. 

தியாவின் முகத்தையும் தன் பாட்டிற்கு தட்டில் இருப்பதை முழுங்கி கொண்டிருந்தவனையும் கண்டவருக்கு ஏதோ பேசி இருக்கிறார்கள் என்று புரிந்தது…

‘இவனை…’ என்று பல்லை கடித்தவர், தியாவின் பொதுவான விஷயங்களை பற்றி பேச, அவளது மனம் சற்று அமைதியானது… 

ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகி இருக்க, தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள், 

“ஆன்ட்டி டைமாச்சு… நான் கிளம்புறேன்…” என்று எழுந்துக்கொள்ள, 

“இரு மா… மகிழனை வந்து விட சொல்லுறேன்…” என்று மகன் புறம் திரும்ப, அவனோ நான் உன்னை அறிவேன் என்பது போல் சாட்டமாக அமர்ந்திருந்தவன் தியாவை பார்க்க, 

அவளோ அவனை கண்டுக்கொள்ளாது, “இல்ல அன்ட்டி வேண்டாம்… நானே போய்க்குவேன்… கார்ல தானே வந்தேன்… சோ நானே பார்த்துக்குறேன்…” என்றிட சௌந்தர்யாக்கு சரியென்று சொல்வதை தவிர வேறு வழி இல்லாமல் போனது… 

கிளம்புகையில் கூட மகிழனை பார்க்காமல் சௌந்தர்யாயிடம் மட்டும் இடைபெற்று செல்ல, “என்ன டா இது…?” என்ற அன்னையின் கேள்வியில், 

“என்னது ம்மா…?” என்று எதிர்கேள்வி கேட்க, 

“இது சரி வருமா….? போய் டிராப் பண்ணாம எனக்கென்னனு உட்கார்ந்து இருக்க, அவளும் உன்கிட்ட எதுவும் சொல்லாம கிளம்புறா… நான் உள்ள இருந்தப்ப ஏதாச்சும் சண்டை போட்டீங்களா…?” என்று கேட்டவரை பார்த்து கண்ணடித்தவன், 

“சண்டையெல்லாம் போடலை ம்மா… உண்மையை சொன்னேன் அவ்வளவு தான்… அதுவும் இல்லாம நாங்க இப்படிதான்…” என்றவனை ஒருவிதமாக பார்த்தவர், 

“எப்படியோ ஒன்னு நல்லது நடந்தா சரி….” என்று தன் வேலையை பார்க்க செல்ல, மகிழன் தியாவின் வார்த்தையை அசை போட ஆரம்பித்தான்… 

‘ஏதோ இருக்கு சீக்கிரம் அது என்னன்னு கண்டுப்பிடிக்குறேன்…’ என்று எண்ணிக்கொண்டான் உள்ளுக்குள்… 

வீட்டிற்கு வந்த தியாவிற்கு மண்டை வெடித்தது… தெளிவாக யோசிக்க மனம் ஒருநிலையில் இல்லை… 

முயன்றாள் தான் ஆனால் கவனம் சிதறியது எங்கும் மகிழனே வந்து நின்றான்… அவனது வார்த்தைகளே வந்து தடுமாற செய்தது… 

தலையை பிடித்துக்கொண்டாள் ஒருகட்டத்தில் முடியாமல், ‘இவன் ஒரு ஸ்டேஜ் வரை தான் கூட இருப்பான் அப்புறம் நமக்கு ஆப்போஸிட் சைடு போயிருவான்… இப்ப இவனை பத்தி யோசிச்சா நாம தான் பிரச்சினைல மாட்டுவோம்… வேண்டாம்… நம்ம வேலையை நாம பார்க்குறது நமக்கு நல்லது…’ என்று யோசிக்கவும் அதன் பின் இருக்கும் பிரச்சினை அணிவகுத்தது அவள் முன்… 

வேகமாக தன் அலைபேசியை எடுத்த, யாருக்கோ அழைத்தவள் அடுத்து வரும் பேட்சை அவசரமாக நிறுத்த சொல்ல, அந்த பக்கமோ அதை நிறுத்தும் நிலை தாண்டி இருந்தது… 

யோசித்தாள்… கடைசி வாய்ப்பாக தான் இது தோன்றியது… ஏன்னோ மகிழன் விஷயத்தை மோப்பம் பிடித்து விட்டான் என்று புரிந்தது… 

“நான் தியா…” என்றவளுக்கு, 

“ம்ம்ம்…” என்ற மன்சூரின் முனுங்களே அவன் நிலையை உணர்த்தியது… 

அதில் முகம் சுழித்தவள்,”நான் அப்புறம் பேசுறேன்…” என்று பட்டென்று வைத்து விட்டாள்… 

ஒருவித அறுவறுப்பு அவளிடம், பல்லை கடித்து அமைதியாக இருக்க முயன்றாள்… 

அடுத்த ஐந்து நிமிடத்தில் மன்சூரே அழைத்து, “இப்ப சொல்லு…” என்று கேட்டதில் எரிச்சலாக வந்தது தியாவிற்கு… 

‘இந்த வயதில் அதுவும் இப்படியான சூழ்நிலையில் உனக்கு பெண் சுகம் தேவையா…’என்று கேட்க வாய் துடித்தது…

ஆனால் முயன்று அதை கட்டுபடுத்தியவள், “டேவிட் கிட்ட பேசினேன்…” என்றிட, 

“எதுக்கு…? என்னாச்சு…?” இப்பொழுது தான் லேசான பதற்றம் அவன் குரலில், 

“எனக்கு என்னமோ இந்த முறை மாட்டீக்க வாய்ப்பிருக்குன்னு தோணுது… சோ… இந்த பேட்சை ஸ்டாப் பண்ண கேட்டு இருந்தேன்… பட் அங்க ஏற்கனவே ப்ராசஸ் ஆயிட்டதா சொன்னான்….” என்றதற்கு, 

“ஓஓஓஓ….” என்று பதிலளிக்க, பல்லை கடித்து கொண்டாள்… 

“இப்ப என்ன பண்ணுறது…?” என்ற கேள்வியில் சற்று யோசித்தவள், ஒரு பெருமூச்சுடன், 

“இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது… உங்க பவர் யூஸ் பண்ணி கமிஷனர் கிட்ட பேசி வைங்க… இப்போதைக்கு அது தான் முடியும்…” என்றிட, 

“ம்ம்ம்… சரி… நான் பார்த்துக்குறேன்…” என்று அழைப்பை துண்டித்தவர் அத்தோடு அந்த இரவுக்கான வேலையில் இறங்கிவிட, நாளையை பிரச்சனையை மறந்தே போனார் பெண் சுகத்தில்…

 

மறுநாள் காலை வேலை அது… பல விளக்குகளின் வெளிச்சத்தில் பகல் போல் காட்சியளித்த விமானநிலையம்… பல வித மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் மகிழன்… 

“சார் பிளைட் வந்துருச்சு…” என்றதும் கண்கள் கூர்மையாக, 

“ம்ம்ம்…” என்றவன், 

“ஆபிஸர்ஸ் வந்துட்டாங்களா…?” என்று கேட்டபடி நடக்க தொடங்க, அவனை பின் பற்றிய பிரவீண், 

“சொல்லியாச்சு சார்… வரவங்களை ரௌன்டப் பண்ணி பிடிச்சுறலாம் சார்…” என்றவனை திரும்பி பார்த்த மகிழன், 

“ஒருவிஷயம்… வரவங்க யாரும் அக்யூஸ்ட் இல்ல… ஒரு டௌட்ல தான் அவங்களை அரெஸ்ட் பண்ண போறோம்… சோ… டீரிட் தெம் ரெஸ்பெக்ட்புல்லி…” என்றிட, 

“சியூர் சார்…” என்றவன் தொடர்ந்து வந்த மணிதுளிகளில் அடுத்தடுத்த வேலையில் அனைவரும் பிஸியாகி இருந்தனர்…

தொடரும்… 

 

 

 

 

Advertisement