Advertisement

UD-11:

“டேய்… எந்திரக்க போறியா இல்லையா…?” என்று கத்தியதற்கு, 

புரண்டு படுத்தவன், “என்ன ம்மா…?”என்று சாவகாசமாக கேட்ட மகிழனின் மண்டை வின்னென்று வழித்தது… 

“ஷ்ஷ்ஷ்…” என்று மண்டையை தேய்த்துக் கொண்டவன், எரிச்சலில்

“எதுக்து ம்மா அடிச்சீங்க…?” என்றதற்கு சௌந்தர்யா, சாவகாசமாக

“ம்ம்ம்… ஆசை… அதான் அடிச்சேன்…” என்றதும் பல்லை கடித்தவன், 

“சரி… சொல்லுங்க என்ன விஷயம்…?” என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தபடி கேட்க, 

“என்ன டா போலீஸ் நீ… இவ்வளவு நியாபக மறதியா..?இன்னைக்கு ஸ்வேதா வீட்டுக்கு போகணும்… வரியான்னு கேட்டதுக்கு வரேன்னு சொல்லிட்டு இழுத்து மூடி தூங்குற…?” என்றதில் நெற்றியில் அரைந்து கொண்டவன் வேகாமக படுக்கையில் இருந்து எழுந்தபடி, 

“இதோ டூ மினிட்ஸ் ம்மா…” என்று குளியலறைக்குள் நுழைய போக, சௌந்தர்யா

“டூ மினிட்ஸ்ல வர நீ என்ன நூடுல்ஸா…? நூடுல்ஸ் கூட டூ மினிட்ஸ்ல ஆகாது…” என்றவர் அறையை விட்டு வெளியேறியபடி

“நீ மெதுவா கிளம்பி, டேபிள்ல வச்சு இருக்குறதை சாப்பிட்டு வர வழில ஸ்வீட்டு வாங்கிட்டு வா… நாங்க முன்னாடி கிளம்புறோம்…” என்றதற்கு, 

“ம்மா…” என்று கத்தியவனை, 

“ம்பச்ச்… சொன்னதை செய்…” என்று விட்டு போக, 

“போலீஸ்காரன்னு மட்டு இல்ல மரியாதை இல்ல இந்த வீட்டுல… ஒருத்தரும் பயபடுறதும் இல்ல… ச்சை…” என்று புலம்பியபடி அன்னை சொன்னது போல் செய்தவன், அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி தன் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு பேக்கரி முன்பு நிறுத்தினான்…

என்ன வாங்குவது என்று அலைந்தவனின் கண்ணில் பட்டது என்னவோ பிரச்சினை குறிய இடமாக தான் பட்டது… 

உல்லாசமாக விசிலை அடித்தபடி, “செம்ம அழகு போ…” என்று ரசித்தவனை முறைத்து பார்த்தாள் தியா… 

“ரெஸ்கல்… கண்ணை நோண்டிருவேன்..” என்று திரும்பி நின்றவளை பார்த்து சிரித்தவன், 

அவள் அருகில் காதின் அருகே குனிந்தவன், மெல்லிய குரலில் “நீ எப்படி மொறைச்சு பார்த்தாலும் சரி… ஒரு உண்மையை சொல்லணும்னா நீ சாரில சும்மா நச்சு பிகரா தெரியுறடி…” என்றதும் கோபமாக திரும்பியவள், 

“பப்ளிக்குன்னு பார்க்க மாட்டேன்… செருப்பு பிஞ்சுரும்…” என்று பல்லை கடித்தவள் விலகி தனக்கு வேண்டிய ஸ்வீட்டை ஆடர் குடுக்க, 

அவளை உரசியபடி நின்றவன், “எனக்கும் அதே ஸ்வீட்டுல ஒருகிலோ குடுங்க…” என்றவனை பார்த்து முறைத்தவளை

“இதே நீ வேற இடத்துல நான் டியூட்டில இருக்கும் போது சொல்லி இருந்தா என் ரியாக்ஷனை வேற… ஆனா பாரு… இப்ப நீ என்ன சொன்னாலும் எனக்கு ரொமன்ஸ் தான் வருது…” என்று ஒற்றை கண்ணை சிமிட்டி, பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தபடி பேசியவனை பார்க்க பார்க்க, தியாவின் பொறுமை காற்றில் பறக்க தொடங்கியது மெல்ல… 

‘இவன் நம்மளை சீண்டுறான்… ரியாக்ட் பண்ணாத தியா…’ என்ற எண்ணம் வரவும் அமைதியாகி போனாள் அதன்பின்… 

அதை புரிந்துக்கொண்டான் போலும், அவளை பார்வையால் விழுங்கியபடியே வாங்கிய ஸ்வீட்டிற்கு பணத்தை செலுத்தியவன் தியாவுடனே கடையை விட்டு வெளியேறியவன், 

தியாவிடம், “எங்க போகணும்…?” என்று பார்வையில் ரசனையோடு கேட்க, 

“சொல்லணும்னு அவசியம் இல்ல…” 

 

“அஹான்…. எங்க இருந்தாலும் கடைசி என்கிட்ட தான் வந்தாகணும்டி… அழகி…” என்றவன் தன் கண்ணாடியை அணிந்தபடி, பைக்கை உயிர்பிக்க, 

அவனது வாக்கியதை அலட்சியம் செய்தவள், தன் காரில் ஏறி சென்றுவிட்டாள் மகிழனை சிறிதும் கண்டுக்கொள்ளாது… 

“ஓவர் திமிர் தான்….” என்று முனுமுனுத்தவன், கிளம்பி ஸ்வேதா வீட்டிற்கு சென்றான் தியாவின் நியாபகத்தோடு…

“ஹே…. என்ன நீ என்னை பாளோ பண்ணுறியா…?” என்று எகிறினான் மகிழன்…

“என்ன முறைக்குற… இப்படி முறைச்சா என்ன அர்த்தம்… இப்ப எதுக்கு என்னை பாளோ பண்ணுற…?” என்று மீண்டும் கத்தவும், முறைத்துக்கொண்டிருந்த தியா, 

“ச்சை…” என்று விட்டு நகர்ந்து விட, மகிழன் முகத்தில் குறும்பு புன்னகை ஒன்று தவழ்ந்தது அவள் அகன்றதும்…

‘இங்க தான் குடி இருக்காளா…? எப்படி இத்தனை நாள் கவனிக்காம விட்டோம் இந்த பிகரை….’ என்ற எண்ணதோடு அவள் பின்னே செல்ல, 

தியாவோ தன்னை தொடரும் மகிழனை திரும்பி பார்த்தவள், “இப்ப யாரு யார பாளோ பண்ணுறது…? ” என்று கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு முறைத்தபடி கேட்டதற்கு, 

“நீ எனக்கு முன்னாடி நடக்குறனால நான் உன்னை பாளோ பண்ணுறேன்னு அர்த்தம் ஆகாது மேடம்…” என்று தோளை உழுக்கி விட்டு முன்னே நடந்தவன் ஒரே காம்பௌன்டிற்குள் இருக்கும் வேற பிளாக் அப்பார்ட்மென்டிற்கு செல்ல, 

பல்லை கடித்தவளுக்கு முறைக்க மட்டுமே முடிந்தது மகிழனை நினைத்து… 

வேகமாக வீட்டிற்குள் வந்தவளுக்கு அத்தனை கோபம் உள்ளுக்குள்… வெளிகாட்ட முடியாத அத்தனை கோபத்தையும் வீட்டிற்கு வந்து திட்டி தீர்த்து விட்டாள்… 

“எவ்வளவு திமிர் இவனுக்கு எப்ப பாரு சீண்டிட்டே இருக்கான்… இவன் போலீஸா இருந்தா எப்படி வேண்ணும்னாலும் இருக்கலாமா…? என்ன வேண்ணும்னாலும் பேசலாமா… ஹாவ் டேர்… ராஸ்கல்…” என்று திட்டி புலம்பியது ஒருமணி நேரம் இருக்கும்… 

இத்தனை வருடத்தில் நிறைய பேர் காதலிக்கின்றேன் என்று வந்து நின்றிருக்கிறார்கள் தான் ஆனால் யாரும் இவன் போல் தியாவை நிதானம் இழக்க செய்தது இல்லை… 

இவன் பார்வையும் பார்வையில் வழியும் ரசனையும் தியாவிற்கு ஏன்னென்று புரியாத தெரியாத குழப்பமும் கோபமும் உண்டானது உள்ளுக்குள்… 

அவனது பார்வை அது காதலையும் தாண்டி ஒருவித ரசனையை காட்டியது, அதில் காமம் இல்லை நேரபோக்கிர்க்கு பழகுவது இல்லை ஆனால் உண்மையில் ஒரு அழகிய சிற்பத்தை ரசிக்கும் விதம் அவனிடம்…

 

அந்த ஒன்று தான் தியாவை பாதித்தது பெரிதும்… உணர்வுகளை பெரிதும் வெளிகாட்டாத தியாவிற்கு இப்பொழுது அவன் மேல் தோன்றும் கோபத்தை அடக்க மிகவும் சிரமபட்டாள் என்பதே உண்மை… 

உள்ளுக்குள் இருப்பதை வார்த்தையாக வெளிகொட்டியதும் சற்று அமைதியானவள், தான் வாங்கி வந்த இனிப்பை எடுத்து டேபிளில் வைத்தவளுக்கு இப்பொழுது எண்ணங்கள் முழுவதும் தன் அன்னையை பற்றிய சிந்தனைகளே…

 

அமைதியாக கண்களை மூடி சோபாவில் சாய்ந்தவளுக்கு மனம் வலித்தாலும் அன்னையை தேடினாலும் பல்லை கடித்து அமைதியாக இருந்தாள்…

அன்னையின் இழப்பு அவளை தலைகீழாக மாற்றி இருந்தது… உண்மையில் அன்னையை இழந்ததில் இருந்து அனைத்தையும் இழந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்… 

கடந்து வந்த பாதைகள் அனைத்தும் முட்களே… வலித்தாலும் வாய்விட்டு சொல்லி அழ கூட யாருமின்றி தவித்த தருணங்கள் அநேகம்… இதற்கு காரணமானவர்களை பழி தீர்க்க மட்டுமே தன்னை இத்தனை வருடங்கள் சிறிது சிறிதாக செதுக்கி உள்ளாள் பெண்ணவள்… 

மாலை வரை அமைதியாக வீட்டிற்குள் வலம் வந்தவள் கோவிலுக்கு செல்ல எண்ணி வெளியேறினாள் வேறு எண்ணங்கள் எதுவுமின்றி… 

கோவிலுக்கு செல்லலாம் என்று வாசல்வரை வந்தவளுக்கு எப்பொழுதும் போல் உள்ளே செல்ல மனம் உருத்தியது… 

‘எல்லாம் உன்னால தான்… உன்னால தான் நான் என் அம்மாவை இழந்தேன்… நிம்மதியை இழந்தேன்… இப்ப வாழ்க்கையை இழந்துட்டேன்… இனி உன்கிட்ட பேச என்ன இருக்கு…?’ என்று கோவில் கோபுரத்தை பார்த்து நின்றவளின் உள்ளத்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி கோபமாக வந்து நின்றது… 

அதில் வெடுக்கென்று அங்கிருந்து கிளம்பிய அவள் கார் நின்ற இடம் கடற்கரையில் தான்…

மணலில் கால் பதித்து தூரத்தில் தெரிந்த சூரியனை கண்கொட்டாமல் பார்த்திருந்த தியாவிற்கு மனம் இப்பொழுது வெறுமையை தந்தது… 

வாழ்க்கையின் லட்சியம் ஒன்று தான்… ஆனால் அதை தாண்டி என்ன இருக்கிறது தன்னிடம் என்னும் பெரும் கேள்வி உள்ளுக்குள் உருண்டு கொண்டே இருந்தது… 

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ எங்க பார்த்துட்டு வர… ?” என்று சௌந்தர்யா மகிழனை அழைக்கவும், அவர் புறம் திரும்பியவன், 

“ம்மா… தியா…” என்று தூரத்தில் தெரிந்தவளை காட்ட, 

“எங்க டா…?” என்று அலைபாய்ந்த கண்களுக்கு தனியே நின்றிருந்தவளின் தோற்றம் தெரிய சௌந்தர்யாயின் முகம் ஆராய்ச்சியில் இருந்து கனிவாக மாறியது… 

அவள் அருகில் சென்றவர், எந்த உணர்வுமின்றி பார்வையை பதித்திருந்தவளின் தோளை தொடவும் சட்டென திரும்பி பார்த்தாள் தியா, 

“ஹே… ரிலாக்ஸ் டா…” என்றவரை புரியாமல் தியா பார்க்கவும், அதை புரிந்து கொண்ட சௌந்தர்யா

“நான் மகிழனோட ம்மா… பேரு சௌந்தர்யா…” என்றதில் முகம் தெளிந்தவள், 

“ஓஓஓ… வணக்கம் ஆன்ட்டி…” என்று கையை கூப்பி வணக்கம் வைக்க, 

“அட இதெல்லாம் வேண்டாம் டா… சும்மா சாதாரணமா பேசு போதும்…” என்றவர், திரும்பி சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி, 

“அழகா இருக்குல…?” என்று கேட்கவும், இவர் எதற்கு நம்மிடம் பேசுகிறார் என்று புரியாமல் முழித்தவள், 

அவர் கேட்டதற்கு, “ஆமா ஆன்ட்டி…” என்றவள்,

 

“நான் யாருன்னு தெரியுமா…?” என்று கேட்கவும், 

“ம்ம்ம்… தெரியுமே… பசங்க ரெண்டு பேருமே உன்னை பத்தி சொல்லி இருக்காங்க…” என்றதில் குழம்பி அவரை பார்த்தபடி, 

“ரெண்டு பேரா…?” புருவம் சுருக்கி கேட்க,

 

“ம்ம்ம்… எனக்கு ரெண்டு பசங்க… மூத்தவன் தமிழ்செல்வன்… டிஸ் கம்பெனி ஓனர்…” என்றதுமே தியாவிற்கு அது யாரென்று தெரிந்தது… 

“சின்னவன் மகிழன்… போலீஸ்…” என்றதும், தியா வெறுப்பாக 

“ஓஓஓஓ….” என்னும் போது கையில் ஐஸ்கிரீமுடன் வந்து நின்றான் பெண்ணவளின் வெறுப்புக்கு சொந்தக்காரன்…

 

“வேண்ணுமா…?” என்று மகிழன் கேட்கவும், அவனை முறைத்தபடி வேண்டாம் என்றவளை பார்வையால் விழுங்கியபடி அன்னையிடம் ஒன்றை நீட்டினான்… 

“அதென்ன என்னை பத்தி சொல்லும் போது அவ்வளவு கடுப்பா ஓஓஓ சொல்லுற…?” என்று கேட்டபடி ஐஸ்க்ரீமை உண்டவனை பார்த்து முறைத்தவள் சௌந்தர்யாயின் பொருட்டு வாயை திறக்காமல் அமைதி காத்து நின்றாள் பல்லை கடித்தபடி…

தியாவின் முறைப்பையும் மகனின் கேலியையும் கண்டவர், “ம்ம்ம்… நீ சும்மா தொல்லை பண்ணிட்டே இருந்தா கடுப்பாதான் இருக்கும்…” என்றதில் அன்னையை பார்த்து போலியாக முறைத்து வைத்தான் தியாவை கவனித்தபடி…

எந்த உணர்ச்சியையும் காட்டாதவளை கண்டு சௌந்தர்யா, “வீட்டுக்கு வரியா டா…?” என்று கேட்கவும், 

“இல்ல நான் கிளம்புறேன்… டைமாச்சு…” என்றவளை, 

“ம்பச்ச்… ஒருமுறை வந்துட்டு போயேன்… ஸ்வேதா வீட்டுக்கு பக்கம் தானே உன் வீடும்… இங்க எங்க வீடு பக்கமா தான் இருக்கு… வா டா… வந்து ஒரு காபி குடிசிட்டு போவியாம்…” என்று வற்புறுத்தவும் தவிர்க்க முடியாது திணற, 

மகிழன், “அம்மா கூப்பிடுறாங்கல வா தியா…” என்றதில் பல்லை கடித்தவள், 

“ம்ம்ம்… சரி ஆன்ட்டி…” என்றதும், 

சௌந்தர்யா, “ஏதாச்சும் முக்கியமான வேலை இருக்கா டா…? அதான் வர யோசிக்குறியோ…?” என்று கேட்கவும், 

“இல்ல ஆன்ட்டி… நான் வரேன்…” என்றாள் மரியாதை நிமித்தமாக…

அடுத்த பத்து நிமிடத்தில் மகிழனின் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தாள் தியா… வீட்டை சுற்றி பார்த்திருந்தவளை மட்டும் பார்த்திருந்தான் மகிழன்… 

“பிடிச்சுருக்கா…?” என்ற கேள்வியில், 

“என்னது…?” என்று சந்தேகமாக முறைத்தபடி கேட்டவளை பார்த்து, 

“நான் வீட்டை பத்தி கேட்டேன்… சுத்தி பார்த்தியே அதான் கேட்டேன்…” என்று சமாளிக்க, பெருமூச்சை விட்டவள், நெற்றியை நீவியபடி நிமிர்தவள், 

ஏதோ சொல்ல வாய் திறக்க இருந்த சமயம் கையில் டீயுடன் வந்த சௌந்தர்யாவை கண்டு கப்பென்று வாயை மூடிக்ககொண்டதை பார்த்து வாய்குள் சிரிப்பை அடக்கி கொண்டான் கள்வன்… 

“எடுத்துக்கோ மா…” என்று நீட்டிய டீயை வாங்கி கொண்டவள், 

“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றதோடு அமைதியாகி விட, 

சௌந்தர்யா, “நீ எப்பவும் இப்படி தான் அமைதியான டைப்பா…? இல்ல என் பையனால இப்படியா இருக்கியா…?” என்று கேட்கவும், 

“இல்ல ஆன்ட்டி எப்பவும் சைலன்டு தான்…” 

“ம்ம்ம்… சரி என்ன சாப்பிடுற…? என்ன பிடிக்கும் உனக்கு…?” என்றதும், 

“இல்ல ஆன்ட்டி எதும் வேண்டாம்… இதுவே போதும்… ” என்றிட, 

“இல்ல ஏதாச்சும் சாப்பிட்டே ஆகணும்… பக்கோடா சாப்பிடுறியா…? பேசிட்டு இருங்க வரேன்…” என்று எழுந்துக்கொள்ள சங்கடமாக இருந்தது தியாவிற்கு… 

“தியா பீல் பிரி…” அவள் நிலை உணர்ந்து மகிழன் சாதாரணம் போல் பேச, 

தியாவிற்கு அத்தனை கோபம் வந்தது எதிரில் இருப்பவன் மேல், “உனக்கு என்ன தான் வேண்ணும் சொல்லு…?” என்று பல்லை கடிக்க, 

“எனக்கு எதும் வேண்டாமே…?” என்று கூலாக தோளை உழுக்க, 

“ம்ம்ம்… அப்புறம் எதுக்கு என்னை டார்ச்சர் பண்ணுற…?” மெல்லிய குரலில் பல்லை கடித்து பேசியவளை கண்டு 

“பர்ஸ்ட் நார்மலா பேசு… ம்மா க்கு கேட்காது… கேட்டாலும் எதுவும் நினைக்க மாட்டாங்க…” என்றவன் அவளை தீர்க்கமாக பார்த்தபடி, 

“எதைவச்சு நான் உன்னை டார்ச்சர் பண்ணுறேன்னு சொல்லுற ….?” என்று கேட்கவும், தியா

“நீ பண்ணுறதுக்கு பேரு என்ன…?” என்று அவனையே திருப்பி கேள்வி கேட்டாள் குரலை உயர்த்தாது…

“அப்படி என்ன மேடம் நான் பண்ணிட்டேன்…?” நாடியில் கைவைத்து முகத்தை சீரியஸ்ஸாக வைத்து கேள்வி கேட்டவனை பார்த்த தியாவிற்கு தான் பிபி ஏறியது… 

சற்று தன்னை நிதானித்தவள், “ஒரு போலீஸா இருந்துட்டு இப்படி விரும்பம் இல்லாத பொண்ணுகிட்ட வழிஞ்சுட்டு இருக்கீங்களே… இது பேரு என்ன சார்…?” என்று கேட்டவளை ஆழ்ந்து ஓர் பார்வை பார்த்தவன், 

நிதானமாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து, “காதல்னா என்ன தியா…?” என்று கேட்டதில் கண்கள் விரித்தாள் தியா…

தொடரும்….

Advertisement