Advertisement

UD-10:

பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒரு கிளையின்ட் மீட்டிங்கை முடித்தவள், தன் ஃபோனை நோண்டியபடி கார் பார்க்கிங்க்கு சென்ற நேரம், வேகமாக எதிரில் வந்தவன் இடித்துவிட, 

“ஹலோ… பார்த்து வர மாட்டீங்களா…?” என்று திட்டியவள் கீழே விழுந்த தன் பேகையும் சிதறிய பொருட்களையும் எடுக்க, 

இடித்தவனோ தியாவிற்கு பொருட்களை எடுக்க உதவியபடி, “சாரி மேடம்… ஒரு எமர்ஜென்சி அதான் அவசரத்துல கவனிக்கல…” என்று கெஞ்ச, முறைத்து பார்த்தவள், 

“நானே பார்த்துக்குறேன்…” என்று அவனை தடுத்துவிட்டு தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் தன் காரை நோக்கி… 

பதில் கூறாது செல்பவளை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாக ஹாட்டலின் உள்ளே செல்ல, தியா தன் வீட்டை நோக்கி பயணமானாள் பல சிந்தனைகளோடு… 

டேபிளில் இருந்த கவரை பார்த்தபடி தண்ணீரை பருகியவள், அடுத்து என்னவென்று யோசிக்க தொடங்கினாள்… 

முதல் வேலையாக தன் அலைபேசியை எடுத்தவள், யாருக்கோ அழைத்து, 

“ஷிவானி….” என்றழைக்க, 

“தியா… சொல்லு… என்னாச்சு…? நீ என்னை மறந்துட்டன்னு நினைச்சு பயந்துட்டேன்…”  என்று பதற்றமாக பேசியவளுக்கு, 

“மறக்குறதா…? வாழ்க்கை லட்சியமே இதுதான்… அதை எப்படி மறப்பேன் நான்…?” என்று கையை முறுக்கிக் கொள்ள, 

“ம்ம்ம்… சரி என்னாச்சு நீ சொன்ன விஷயம்…?” என்று கேட்டவளுக்கு, 

“எல்லாம் ரெடி… நாளைக்கு மீட்டிங் முடிஞ்சு பார்ட்டி இருக்கு அதுல பார்க்கலாம்…” தியாவின் குரலில் அத்தனை நிதானம்… 

“பார்ட்டிலையா எப்படி…? மாட்டிக்கிட்டா..?” தியாவின் நிதானத்துக்கு எதிரான பதற்றம் அவள் குரலில் நன்றாகவே தெரிந்தது… 

“ஷ்ஷ்ஷ்… இப்படி பதறுனா எல்லாம் சொதப்பிரும்… பர்ஸ்ட் ரிலேக்ஸ்… நான் சொல்லுற மாதிரி செய் போதும்… மத்ததை நான் பார்த்துக்குறேன்…” என்ற தியாவிற்கு, 

“ம்ம்ம்… புரியுது…” என்றவளுக்கும் தெரியும் தியாவிற்கும் தெரியும் இது சாதாரண விஷயம் அல்ல என்று… 

ஆனால் பெண்கள் இருவரும் ஏதோ ஒருவகையில் துணிந்துவிட்டனர்… ஒருத்தி பகையால் என்றால் ஒருத்தி விடுதலைக்காக என்று முடிவெடுத்தனர்… 

“சரி நாளைக்கு பார்க்கலாம்….” என்றவள் ஃபோனை வைத்தவிட, அவள் எதிரில் இருந்த பார்சல் தியாவின் பல கால லட்சியத்தை காட்டியது…

‘சீக்கிரமே எல்லாத்தையும் முடிச்சு வைக்குறேன்…’ என்று பல்லை கடித்தவள் அந்த பார்சலை பிரித்து தனக்கு தேவையானதை எடுத்து பேகில் பத்திர படுத்தி வைத்தாள் யோசனையுடன்… 

சரியாக அப்பொழுதென்று அலைபேசி அலர, எடுத்து காதிற்கு குடுத்தவளிடம் “பார்சல் பத்திரம்… இதை ரொம்ப கஷ்டப்பட்டு தான் எடுத்தேன்… மேக் இட் யூஸ்புல்…” என்க, 

“ம்ம்ம்… தேங்க்ஸ்…” என்றவளுக்கு, 

“இதுல போய் என்ன இருக்கு… நீ நினைச்சது நடந்தா சந்தோஷம் அதுலையும் எதுவும் பிரச்சினை ஆகமா இருந்தா ரொம்ப சந்தோஷம்…” என்றவனுக்கு, 

“ம்ம்ம்…சாஸ்திரி அங்கிள் எப்படி இருக்காங்க…?” என்ற நலம் விசாரிப்பில், 

“அப்பாடி… இப்பவாச்சும் கேட்டியே…” லேசான கேலி தெரிந்தது அவன் குரலில், 

“பதில்…” ஒற்றை வார்த்தை தான்… 

“ஷப்பா… இவ்வளவு அழுத்தம் ஆகாது தியா…” என்று பெருமூச்சு விட்டவன், 

“நல்லா இருக்காங்க… சிங்கப்பூரை விட்டு வர வேண்டாம்னு சொல்லிட்டேன்…” என்றிட, 

“நீ எப்ப அங்க கிளம்புற…?” 

“இன்னும் ரெண்டு வாரத்துல… இங்க இது காணாம போக நான் தான் காரணம்னு கண்டு பிடிக்க கஷ்டம் தான்… ஆனா கண்டு பிடிச்சா உயிர் உடம்புல இருக்காது… அதுக்கு நான் ஊருக்கு ஓடிறது தான் எனக்கு சேப்…” என்றதை அமைதியாக உள்வாங்கி கொண்டவள், 

“ஓகே… பத்திரம்…” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாது அழைப்பை துண்டித்திருந்தாள்… 

இங்கோ ஃபோனையே பார்த்திருந்த விஜய், இன்று பார்க்கிங்கில் அவளை கண்ட நொடிகளை மீண்டும் பார்வைக்கு கொண்டு வந்து பார்த்தான்… 

‘ரொம்ப மாறிட்ட தியா… நீ, உன் மேனரிஸம், லுக் எல்லாம் மாறி போச்சு… இது தேவையா…?’ என்று கேட்டவன் பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் தியாவை நேரில் சந்தித்தான் அதும் விபத்து போல ஒரு நாடகம்…

 

மனம் பொறுக்கவில்லை தான் ஆனால் அவள் அனுபவித்த வலிக்களுக்கு பழி தீர்க்க நினைப்பது ஒருவகையில் அவனுக்கு ஏற்று கொள்ளும்படி இருந்தாலும் உடன் பழகியவளின் வருங்கால நிலையை நினைத்தால் கவலை அரித்தது உள்ளுக்குள்… 

மறுநாள் மாலை தனக்கு எதிரில் இருப்பவனை வெரித்தபடி அமர்ந்திருந்தாள் தியா… 

மன்சூர், “இப்ப என்ன பண்ணுறது…? மாட்டிக்கிட்டா ரொம்ப பெரிய பிரச்சனை ஆகிரும்… ” என்று கத்தியவரை பார்த்தவள், 

“நான் இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்… என் பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை… யாரோ போட்டு குடுத்து தான் இந்த விஷயம் வெளியே போயிருக்கு… இல்லாட்டி இத்தனை வருஷம் வெளிய வராத ஒரு விஷயம் இப்ப மட்டும் எப்படி வந்துச்சு…?” அத்தனை நிதானமான கேள்வி அவளிடம்… 

“அப்ப நாங்களே போட்டு குடுத்தோம்னு சொல்லுறியா…?” என்று மன்சூர் எகிற, அசரவில்லை பெண்ணவள், 

“ஆமான்னு சொல்ல மாட்டேன் ஆனா உங்க சைட் தான் ஹோல் இருக்கு… நீங்க யாருகிட்டையாச்சும் இதை பத்தி பேசி இருக்கணும்…” என்றதும் ஆசிப் அமைதியாகி போனான்…

அன்று ஒருநாள் நண்பனிடம்  தியாவின் திட்டமான இதையும் அதில் வந்த வளர்ச்சியும், தந்தை தன்னை மதிக்காமல் தியாவை பெருமை பேசுவதை பற்றி எல்லாம் பேசி அவளை திட்டியதும் நினைவிற்கு வந்தது சட்டென்று… 

அவனது முகமாற்றங்களை கவனித்து கொண்டிருந்தவள், எதிரில் இருந்த டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து பருகியவள், 

“என்ன மிஸ்டர் ஆசிப்… யாரு அந்த ஆளு…? ” என்று நக்கலாக கேட்க, 

பல்லை கடித்து, கைகளை இறுக மூடி தன் கோபத்தை அடக்கியவன், பதில் கூறவில்லை… 

“என்னாச்சு சார்…? பதில் இல்ல…?” என்று மீண்டும் கேட்கவும், மன்சூர்

“என்ன ஆசிப் இது…? தியா கேட்குறது சரியா…? உன்னால தான் இது வெளிய போச்சா…?” என்று குரலை உயர்த்த, அமைதியாக பல்லை கடித்தவன், 

மெல்லிய குரலில், “சரியா தெரியலை… மேபி இருக்காலம்…” என்று கூறவும் சுறுசுறுவென ஏரியது மன்சூருக்கு…

 

வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவன், அவனை அடிக்க கை ஓங்கியவர் பின் கோபத்தை அடக்கி, 

“முட்டாள்… முட்டாள்… சரியான முட்டாள்…” என்று திட்டி, வேகமாக இங்கும் அங்கும் நடந்தவர், 

திரும்பி தன் கையாளிடம், “அவன் யாருன்னு பார்த்து தூக்கிடு…” என்றதோடு, 

“அப்படியே அந்த போலீஸையும் தூக்கிடு…” என்றதும், தியா நிதானமான குரலில்

“ஹைலி ரிஸ்க்… ” என்றிட, 

“என்னது…?” என்று கோவத்தில் கத்த, தியா அசரவில்லை

“மகிழனை கொன்னா பிரச்சினை நமக்கு தான்… யார் யார் கிட்ட இந்த விஷயம் போயிருக்குன்னு தெரியல… இதுவரை சந்தேகம் மட்டும் தான் இருக்கு… இதுல அவன் மேல கை வச்சா நாமதான்னு உறுதி ஆகிரும்… ” என்றிட…. 

“அப்ப என்னதான் செய்யுறது…?” என்று தலையை பிடித்துக்கொள்ள, 

“அமைதியா இருக்கலாம்…” என்று முடிக்கும் முன், 

“என்னது… அமைதியாவா…? அப்படினா பாரின் போற ஆட்களை நிறுத்த சொல்லுறியா…? ” என்று புரியாமல் பார்க்க, 

“இல்ல அப்படி பண்ணாலும் ரிஸ்க் தான்… எப்பவும் போல இந்த பிராசஸ் நடக்கட்டும் ஆனா நாம பொருள் போக வேண்டாம்…  செக் பண்ணாலும் மாட்டிக்க மாட்டோம்… கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் ஆரம்பிக்கலாம்…” என்றிட, 

மன்சூருக்கு அதுவே சரியென்று பட, ஆசிப்பிற்கு கோபம் உச்சியில் நின்றது… 

‘இப்படியே போன இவ தான் என் வாரிசுன்னு சொல்லிடுவாரு போல அப்பா… விட கூடாது…’ என்று பல்லை கடித்தவன் வேகமாக எழுந்து வெளியேறி விட்டான் கோவத்தில்… 

அதை பார்த்த மன்சூர், “இதுக்கு மட்டும் குரைச்சல் இல்ல… ஒன்னாச்சும் ஒழுங்கா பண்ணுறானா பாரு… எல்லாத்தையும் சொதுப்புறான்… சை… இவனால தலை வலி…” என்று நெற்றியை பிடித்துக்கொள்ள,

தியாவோ எதையும் கண்டுக்கொள்ளாமல் , “நான் கீழ பார்ட்டிக்கு போறேன்…” என்று எழுந்துக்கொள்ள,

“ஹான்… எல்லாம் சரி தான்… இப்ப ஒரு பேட்ச் கிளம்பி இருக்கே அதை என்ன பண்ணுறது…?” என்று கேட்டிட, 

நிதானமாக ஏறிட்டவள், “ஒன்னும் பண்ண முடியாது… இனி ஒவ்வொரு அடியும் பார்த்து வச்சா தான் முடியும்… ” என்றவள் அந்த அறையைவிட்டு வெளியேறிவிட, 

மன்சூர்க்கு தியாவை காண்கையில் என்னவோ போல் இருந்தது… இத்தனை அறிவை கண்டு மெச்சிக்கொள்வதா அல்லது இது தனக்கு ஆபத்தில் கொண்டு நிறுத்துமா என்ற எண்ணம் தோன்ற தொடங்கியது அவளது நிதானத்தில்…

பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தவளின் பார்வை ஆசிப்பை தான் கூர்ந்து கவனித்தது… கோபம் வெறி அத்தனையும் தெரிந்தது அவன் முகத்தில்… 

தியாவை முறைத்தபடி மதுவை வேக வேகமாக உள்ளே சரித்துக் கொண்டிருந்தான்… தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்னும் கோபம் நன்றாக தெரிந்தது… 

கவனித்தாள் தான் ஆனால் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, ‘இப்படி குடிக்குறதை விட்டா வேற என்ன தெரியும் உனக்கு…?’ என்று எண்ணியவளின் பார்வை அவனை விடுத்து சுற்றி இருப்போரை அலச தொடங்கியது… 

தியாவின் அந்த அலட்சிய பார்வையை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை… எல்லாம் அந்த தாமோதரன்னால வந்தது… 

“ச்சை… ” என்றவன் மீண்டும் வாயில் சரித்து கொண்டான் இன்னும்மொரு கிளாஸை… 

இவளது பார்வைகாக காத்திருந்த ஜீவன் ஒன்று, எழுந்து பாத்ரூம்மிற்கு செல்ல, தியாவும் உள்ளே நுழைந்தாள் சுற்றி வேடிக்கை பார்த்தபடி… 

அங்கிருந்த கண்ணாடியின் முன் நின்று கையை கழுவிக்கொண்டிருந்த ஷிவானியின் பக்கம் இருந்த மற்றொரு பைப்பில் தன் கையை கழுவியவள் வாயை திறக்காது மெல்லிய குரலில், 

“மொத்தம் மூன்னு டோஸ்…. இன்னைக்கு இங்க வச்சு ஒன்னு குடுத்துரு… இன்னொனு நான் எப்பன்னு சொல்லுறேன்… மூன்னாவது நானே என் கையால பண்ணுறேன்…” என்றவள் இருவருக்கும் நடுவில் ஒரு பெட்டியை வைக்க, 

ஷிவானி கண்ணாடியில் தன்னை பார்த்தபடி அதை எடுத்து திறந்து பார்க்க, உள்ளே இரண்டு சிறிய சைஸ் குப்பி இருந்தது… 

பார்த்ததும் அதில் ஒன்றை எடுத்து தன் உள்ளாடைக்குள் ஒளித்து வைத்தவள் மற்றொன்றை தன் பையில் வைத்துக்கொண்டு வெளியேறிவிட, 

தியா சற்று நேரம் கண்ணாடியின் முன் நின்று தன்னை ஆசுவாசபடுத்தி விட்டு வெளியேறினாள்… 

வெளி வந்ததும் அவள் கண்ட முதல் காட்சி, ஷிவானி தான் கொடுத்த குவலையில் இருந்ததை மது கோப்பையில் கலந்ததை தான்… 

ஓர் பார்வை பார்த்தவள் அமைதியாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தவள், ஒரு பழச்சாறை பருகியபடி அவ்விடத்தை நோட்டம் விட்டாள் என்பதை விட, மன்சூர் ஷிவானியை கவனித்தபடி இருந்தாள் என்பதே உண்மை… 

சற்று நேரத்திற்கு எல்லாம் ஷிவானி, தியா சொல்லியது போல் செய்துவிட, 

‘ம்ம்ம்… பாஸ்ட்…’ என்று உள்ளுக்குள் மெச்சியவள், ஆசிப்பை பார்க்க அவனோ முழுவதும் போதையில் சரிந்திருந்தான்… 

“யூஸ்லெஸ்….” என்று முனுமுனுத்தவள், அடுத்து செய்ய வேண்டியவைகளை யோசித்தபடி அமர்ந்திருக்க, 

இங்கு மகிழனும் அடுத்து என்ன என்பதை போல் யோசித்தபடி இருந்தான்…

அவனை கண்டு பிரவீண், “சார்…” என்றிழுக்க, 

“ம்ம்ம்…” என்ற மகிழனுக்கு, 

“எப்படி சார் இப்ப செக் பண்ணுறது…?” என்ற கேள்விக்கு, 

“அததானே யோசிக்குறேன்… எதுக்கு அவசர படுற…?”என்று உதட்டை கடித்து யோசினையில் மூழ்கியவனை, 

“கண்டிப்பா வேலை செய்யுறவங்க மேல சந்தேக பட முடியாது சார்…” என்றிட, 

“ஏன்…?” புருவம் சுருங்கியது மகிழனுக்கு… 

“ஏன்னா மோடு ஆஃப் டிரான்ஸ்போட்டு இருக்கு சார்… அதாவது பிளைட்டுல ஏறுறதுக்கு முன்னாடி புல்லா செக் பண்ணி தான் அனுப்புறாங்க… லேப் லக்கேஜ் முதற்கொண்டு அந்த ஆளை டாப் டூ பாட்டம் செக் பண்ணுறாங்க… இதுல எப்படி சார் முடியும்… ?” 

“அப்ப மத்தவங்க மேல சந்தேக படலாமா…?” சுழற் நாற்காலியில் ஆடியபடி கேட்க, 

“அவங்களுக்கும் தான் சார்…” என்னும் போது, 

“அப்ப இந்த நியூஸ் பேக்னு சொல்லுறீங்களா…?” என்ற மகிழனுக்கு, 

“இருக்கலாம்னு தோணுது சார்… ஏன்னா பிளைட்டை விட ஷிப்ல ஸ்மக்லிங் ரொம்ப ஈஸி… அதை விட்டுட்டு ஏன் ரிஸ்க் எடுக்கணும் இதுல…?” என்றதற்கு

“கரெக்ட்டு தான்… ஆனா நாம இப்படிதான் யோசிப்போம்னு பிளான் பண்ணி ஏன் பிளைட்ல பண்ண கூடாது…?” என்று எதிர்த்து கேட்டவனை பார்த்து யோசித்த பிரவீண்

“வாய்ப்பிருக்கு சார்… ஆனா எப்படி முடியும்…? இவ்வளவு கட்டுப்பாட்டுக்கு நடுவுல… ?” என்னும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க, 

“எஸ்…” என்ற மகிழனுக்கு, உள்ளே நுழைந்த அதிகாரி ஒருவர் தாமோதரனின் கொலையை பற்றி தெரிவிக்க, 

புருவம் சுருக்கியவன், “சரி நீங்க போங்க… நான் பார்த்துக்குறேன்…” என்று இருக்கையில் இருந்து எழ, பிரவீண்

“சார்…” என்று இழுக்கும் போது, 

“கிரிமினல் பயங்கர ஸ்மார்ட்… டெஸ் சீ… என் சந்தேகம் கரெக்ட்டான்னு பார்க்கலாம்…” என்றுவிட்டு நகர, பிரவீணுக்கு ஒன்றும் புரியவில்லை… 

தொடரும்….

Advertisement