Advertisement

அவளே என் பிரபாவம்  FINAL 1
“இங்க என்ன நடக்குது..?” என்ற வடிவேலுவின் சத்தத்தில் வசந்தாவும், ரவியும் பதட்டத்துடன் திரும்ப, ப்ரேம் சாதாரணமாக திரும்பி பார்த்தான். 
“உன்னை தான் கேட்கிறேன் வசந்தா..? இங்க என்ன  நடக்குது..?” என்று மனைவியின் கையில்  இருக்கும் பணத்தை பார்த்தே வடிவேலு  அதட்டி கேட்டார். 
“அது.. மாப்பிள்ளை.. பணம்..” என்று தன் கையில் இருந்த பணத்தை காட்டி திக்கிய வசந்தாவிடம்,
“அதை தான்  நானும் கேட்டுட்டு இருக்கேன், அவர் எதுக்கு உனக்கு பணம் கொடுத்துட்டு இருக்கார்..?” என்று சத்தமாக கேட்டு கொண்டிருக்க, 
“ அத்தை.. அவரை கொஞ்சம் மெல்ல பேச சொல்லுங்க, உள்ள மித்ரா தூங்கிட்டு இருக்கா, அவளுக்கு இதெல்லாம் தெரியறது எனக்கு விருப்பம் இல்லை..” என்று ப்ரேம் முகம் சுருக்கி சொல்ல, அவனை பார்த்த வடிவேலுவின் பார்வையில் ஆற்றாமையே..!!
“ரவி.. என்ன இதெல்லாம்..?” என்று வடிவேலு மகனிடம் மெதுவாகவே கேட்டார். 
“ப்பா.. இது அவருக்கும், மதுவுக்கும் மாசாமாசம் செலவுக்கு கொடுத்திட்டிருக்கிற  பணம்..” என்று சொல்ல, இதுவாக தான் இருக்கும் என்று வடிவேலு அதை எதிர்பார்த்திருந்தார். 
“ஏன் ரவி..? இப்படி..?” என்று கேள்வி மகனுக்காக இருந்தாலும், பார்வை மருமகன் மேல் தான் இருந்தது. 
“அத்தை.. நான் இங்க வந்த முதல் நாளே உங்ககிட்ட சொல்லிட்டேன்..” என்று ப்ரேம் சொல்லவும்,  
“அவர் சொன்னதை  பத்தி நான் கேட்கல வசந்தா, என் பொண்ணுக்கும், என் மருமகனுக்கும் சாப்பாடு போட  பணம் கொடுத்து ஏன் இப்படி என்னை அசிங்க படுத்துறார்ன்னு தான் கேட்கிறேன்..?” என்று வடிவேலு ஆதங்கத்துடன் கேட்டார். 
“ஏன் அத்தை..? அவர்  நடு சபையில் வச்சு என் சட்டையை பிடிச்சு என்னை பண்ணதை விடவா நான் பண்ணிட்டேன்..?” என்று நக்கலாக கேட்டாலும், அதில் தெரிந்த அவனுடைய கோவம் மூவருக்கும் கவலையை கொடுத்தது. 
“அவன் இதை மறக்க போவதே இல்லை..!!” என்ற உண்மை புரிய, வசந்தாவும், ரவியும் வேதனையுடன் வடிவேலுவை பார்த்தனர். 
“ஒரு மாமனாரா நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு.. நான் மனசார ஏத்துக்கிறேன்..” என்று வடிவேலு சொல்லி கொண்டிருக்கும் போதே,
“ரவி.. ப்ளீஸ்.. போதும்  அவரை நிறுத்த சொல்லுங்க, எனக்கு அதை பத்தி அவர் பேசுறது பிடிக்கல. நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு, அதை மாத்த முடியாது, மறக்கவும் முடியாது, ஏத்துக்கவும் முடியாது.. விட்டுட சொல்லுங்க..” என்று ப்ரேம் இறுகிய முகத்துடன் மிக மிக அழுத்தமாக சொன்னான். 
“ப்ரேம்.. அன்னிக்கு அந்த இடத்துல யாரா  இருந்தாலும் அப்பா அப்படித்தான் நடந்திருப்பார், மது விஷயத்துல அவர் ரொம்ப டச்ட், யோசிக்கவே மாட்டார்.. எதிர்ல யார் இருக்காங்கிறது எல்லாம் அவருக்கு தெரியாது.. அந்த செகண்ட்லே ரியாக்ட் செஞ்சிடுவார்..” என்று ரவி உண்மையை சொன்னான். 
“ஆமாம் மாப்பிள்ளை.. மகள்ன்னு  வந்துட்டாலே அவருக்கு கண்முன்னே தெரியாது..” என்று வசந்தாவும் கணவருக்காக பேச, வெறுமையாக சிரித்த ப்ரேம், 
“அப்போ எனக்கு மித்ரா மேல அந்த டச் இல்லைங்கிறீங்களா..?” என்று கேட்டான். 
“ப்ரேம்.. அது அப்படி இல்லை..” என்று ரவி திணறலுடன் சொன்னான். 
“ஏன் ரவி..? என் பொண்டாட்டி மேல எனக்கு எந்த உரிமையும் இல்லையா..? அவ மேல நான் கோவபட கூடாதா..?” என்று ப்ரேம்  கூர்மையாக கேட்டான்
“அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை, அது அன்னிக்கு..”  என்று வசந்தா அவன் மதுவை அடித்ததை சொல்ல முடியாமல் இழுக்கவும், புரிந்து கொண்ட ப்ரேம், 
“அத்தை.. அதுக்கான விளக்கமும் என்கிட்ட  இருக்கு, ஆனா அது மித்ராக்கு மட்டும் தெரிஞ்சா போதும்..”  என்று அவள் அவனிடம் சொல்லாமல் மறைத்த ஏமாற்றத்தில் அடித்ததை சொன்னவன்,
“இங்க இருக்கிற நம்ம மூணு பேருக்குமே கல்யாண வாழ்க்கை என்னன்னு தெரியும், ஹஸ்பண்ட் வைப் உறவை பத்தி தெரியும், இதுக்கு மேல நான் என்ன சொல்ல..?” என்றுவிட, மூவருக்குமே அவன் சொல்ல வருவது புரிந்தது. 
கணவன், மனைவி உறவுக்குள் யார் நுழையவும் அனுமதி இல்லை, அதற்கான உரிமையும் இல்லை.. இது ஏற்று கொள்ளபட வேண்டிய உண்மையும்  கூட.. ஆனால் அந்த இடத்தில ஒரு பாசமிகு தந்தையாக வடிவேலுவின் மனநிலை..? 
“ப்ரேம்.. உங்க கோவம் எங்களுக்கு புரியுது, நியாயம் கூட, ஆனா அப்பாவோட இன்டேன்க்ஷனும் எந்த இடத்திலும் தப்பு இல்லை, அதுவும் அன்னிக்கு அவர் உங்ககிட்ட நடந்துக்கிட்டது  அப்படி தான்..” என்று ரவி விளக்கம் கொடுக்க முயன்றான். 
“எதை தப்பு இல்லைன்னு சொல்றீங்க ரவி..?  என் பொண்டாட்டியை நான் அடிச்சதுக்கு இவர் என் சட்டையை பிடிச்சதையா..”  என்று ப்ரேம் ஆவேசத்துடன் வெடித்தான். 
“தப்பு தான் ப்ரேம், ஒரு மருமகனா உங்களோட கோவத்தை என்னால் நல்லா புரிஞ்சுக்க முடியுது, ஆனால் ஒரு அப்பாவா அவரை பத்தி கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ்..” என்று ரவி  வேண்டுகோலாக கேட்க, மறுப்பாக தலையை ஆட்டி கொண்ட ப்ரேம், 
“யாரை பத்தியும்  நான்  ஏன் யோசிக்கணும் ரவி..?, அவர் என்னை பத்தி யோசிச்சாரா..?” 
“அன்னிக்கு நிச்சயம் செஞ்ச கல்யாணத்தை நிறுத்தினப்போ என்னை பத்தி யோசிச்சாரா..? என் மனசு எவ்வளவு துடிக்கும் நினைச்சு பார்த்தாரா..? இல்லை கல்யாணம் நின்னு போனதுக்கு ஊர் உலகம் என்னை பார்த்து பேசின பேச்சுக்கு பொறுப்பாவரா..? சொல்லுங்க..”
“இவர் என்னை மித்ராகிட்ட ர் இருந்து பிரிச்ச கோவத்துல தான் நான் இவரை மித்ராகிட்ட இருந்து தள்ளி வச்சேன், அந்த கோவத்துல தான் அவரை  சீண்டவும் செஞ்சேன், இதுல என்ன தப்பு இருக்கு..?”
“ஒரு அப்பாவா அவர் சரின்னா ப்ரேம்ன்ற தனி மனுஷனா நானும் சரிதான்..”என்று அடித்து பேசினான்
“புரியுதுங்க மாப்பிள்ளை.. உங்க கோவம் ரொம்ப சரிதான்.. ஆனா மதுக்காக கொஞ்சம் யோசிக்கலாமே..?” என்று வசந்தா கேட்க, வெறுமையாக சிரித்த ப்ரேம், 
“அவளுக்காக.. அவளுக்காக மட்டும் தான்  இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நான் இங்க வந்து தங்கிட்டிருக்கேன் அத்தை.. எனக்கு அவளோட இருக்கனும்ன்னு வேண்டிதான்  யுஸ் ட்ரிப்பையும்  கேன்சல் பண்ணேன்..”
“அவ  எங்களோட இந்த பிரச்சனையால ரொம்ப பாதிக்கபடுறா, அவளுக்கு அது அழுத்தத்தை கொடுக்குது, அவ மனசு முழுசும் எங்களை சுத்தியே இருக்கு, அவளை பத்தியே அவ யோசிக்க மாட்டேங்கிற..”
“இதோ இப்போ கூட பாருங்க எங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்ல வச்சு  எப்படியாவது சேர்த்திடனும்ன்னு முயற்சி செஞ்சிட்டிருக்கா, ஆனா..?” என்று விரக்தியாக உச் கொட்டியவன், 
“அவளுக்கு நானும் வேணும், அவங்க அப்பாவும் வேணும், யாரையும் விட்டு கொடுக்க முடியல,  இன்னும் சொல்ல போனால் அவளால  எங்களை சமாளிக்க முடியல, சில நேரங்கள்ல ரொம்பவே திணறி போறா..”
“வேண்டாம்.. இனியும் அவளுக்கு அந்த கஷ்டம் வேண்டாம்..” 
“அவளுக்காக என்னோட உரிமைகளை, கடமையை என்னால்  விட்டு கொடுக்க முடியாம போனாலும், அட்ஜஸ்ட் செஞ்சுக்க முயற்சி பண்றேன், என்னோட விருப்பு.. வெறுப்பு அவளை  எந்த விதத்திலும் பாதிக்காம இருக்க பார்க்கிறேன்..” எனவும் தான் மூவருக்கும் புரிந்தது.அவன் ஏன் இப்போது எல்லாம் வடிவேலுவை சீண்டுவதில்லை..? என்ற பதில்.
“அன்னிக்கு நடந்ததுக்கு என்ன காரணம் இருந்தாலும் நான் அபெக்ட் ஆனது உண்மை, அதை மாத்த முடியாது, நான் அதிலிருந்து வெளியே வர முயற்சி எடுத்துட்டு இருக்கேன், சோ.. மறுப்படியும் அதை பத்தி பேசி என்னை அதுக்குள்ள இழுக்காதீங்க, விட்டுட சொல்லுங்க, இந்த உறவு என்னிக்குமே இப்படி தான்..”
“அண்ட் நான் முதல்லே சொன்னது போல என்னோட உரிமைகளை, கடமையை நான் யாருக்காகவும் எப்போவும் விட்டு கொடுக்க மாட்டேன், என் மனைவிக்கும், குழந்தைக்கும்  நாந்தான் செய்வேன்..” என்று வசந்தாவின் கையில் இருக்கும் பணத்தை காட்டி சொன்னவன்,  சென்றுவிட, மூவரும்  கலங்கி தான் போனர். 
“ப்பா.. விடுங்க, ப்ரேம் ஒரு நாள் கண்டிப்பா உங்களை புரிஞ்சுப்பார்..” என்று தளர்ந்து அமர்ந்துவிட்ட வடிவேலுவை ரவி சமாதானம் செய்ய, 
“ஏன்..? அவர் ஏன் இவரை ஏன் புரிஞ்சுக்கணும் ரவி, இவர் முதல்ல அவரை புரிஞ்சுக்கிட்டாரா..? மது மேல அவர் வச்சிருக்கிற அன்பை புரிஞ்சிகிட்டாரா..?” என்று வசந்தா கணவன் மேல் பாய்ந்தார். 
“எப்போ பார்த்தாலும் மருமகனை எதிரி மாதிரி பார்த்துகிட்டே இருந்ததால தான் அவர் மதுவை அடிக்கவும், இவர்  அவர் சட்டையை பிடிச்சது. ஒரு மாமனார் நாலு பேருக்கு மத்தியில மருமகன் சட்டையை பிடிக்கிறதை எந்த மருமகன் தான்  பொறுத்துப்பாங்க..?”
“அது அவங்க புருஷன் பொண்டாட்டி விஷயம். அதுக்குள்ள இவர் போகலாமா..? பாரு.. மருமகன் எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு போறாரு.. அவர் இவ்வளவு உறுதியா இருந்தா எப்படி நம்மளோட எல்லாம் ஓட்டுவாரு..?”
“இவருக்கு மகள் மட்டும் இருந்தா போதும்ன்னு தான் அன்னிக்கு அப்படி நடந்துக்கிட்டது.. அப்படியே இருக்க சொல்லு..” என்று வசந்தா  மருமகனை வேதனை படுத்தி விட்டதில் கொதித்தார். 
“ம்மா.. விடுங்கம்மா.. நீங்களும் பேசாதீங்க, அவரை பத்தி தான் தெரியுமே..” என்று ரவி அம்மாவை அடக்கியவன், 
“ப்பா.. எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா சரியாகிடும், இங்க யாருமே தப்பு இல்லை, இப்படி எல்லாம் நடக்கணும்ன்னு இருந்திருக்கு,  அவ்வளவுதான்  இதுக்கு நீங்க ப்ரேம் மேல வருத்த படாதீங்க..” என்றான் ஆதரவாக. 
“அவர் மேல நான் வருத்தபடறதா..?  இல்லை ரவி.. எனக்கு சந்தோஷம் தான், எனக்கு வேண்டியது அவர் என் பொண்ணை நல்லா பார்த்துக்கணுங்கிறது தான், ஆனா அவர் நான் எதிர்பார்த்தத்துக்கு மேலேயே என் பொண்ணை அப்படி தாங்குறார்.
“என்ன வேலையில் இருந்தாலும் அவ மேல ஒரு கண் இருந்துட்டே இருக்கு, ரொம்ப கேர் எடுத்து பொறுப்பா பார்த்துகிறார். மதுமா முகத்திலும் அவ்வளவு சந்தோஷம், எனக்கு இதைவிட வேறென்ன வேணும் ரவி..?” என்று உணர்ந்து நிறைவோடு சொன்னவர், 
“என்ன அன்னிக்கு மதுமா மேல அவர் கை நீட்டாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்லை ரவி..?” என்று அதை விடமுடியாமல் பேசியவரை, வசந்தா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தார். 
“அதை யார் சொல்றது..? இந்த யோக்கிய சிகாமணியா..?” என்று கொந்தளிக்க, வடிவேலு மனைவியை கடுப்பாக பார்த்தார். 
“உனக்கெல்லாம் அந்த வலி எங்க தெரிய போகுது..? அவர் என் பொண்ணை அடிச்சதை பார்த்த செகண்ட் என் துடிப்பே நின்னு போச்சு தெரியுமா..?” 
“ஆமாம்.. நின்னு போகுமே..? இவருக்கு தான்  இந்த உலகத்திலே மகள் பாசம் அதிகம்ன்னு நினைப்பு, போங்க.. போய் வேலையை பாருங்க போங்க..” என்று கணவரை விரட்டினார்.
“ண்ணா.. அண்ணியையும், தம்பியையும் பார்க்க போகல..” என்று ரவியை பார்த்து மது கேட்க, 

“இல்லை மது..” என்ற ரவியின் முகத்தில் பிள்ளையை பார்க் முடியாத ஏக்கம் தெரிந்தது. 
“ஏன்..? நாளைக்கு மறுப்படியும் பெங்களூர் போகணும் இல்லை, அதுக்குள்ள போய் பார்த்துட்டு வா..”
“ம்ப்ச்.. எங்க போக..? விடு மது..?”
“என்ன பேசற நீ..? வரவர நீ சரியே இல்லைண்ணா..  தம்பி பிறந்தப்போ பெங்களூர் போன நீ  கிட்டத்தட்ட ரெண்டு மாசம் கழிச்சு இப்போதான் திரும்பி வந்திருக்க, இப்போவும் போய் அண்ணியையும், என் மருமகனையும் பார்க்க வேண்டாமா..?”
“இதுல இன்னும் பேர் வேற வைக்காம  இருக்கு, கேட்டா எதோ சொல்லி தள்ளி போட்டிட்டுருக்க..?” என்று கோவத்தோடு கேட்க, ரவி சங்கடத்துடன் ப்ரேமை பார்த்தான். 
அவன் இவர்கள் பேச்சு காதில் விழுந்ததின் அறிகுறியாக புருவம் சுளித்ததோடு சரி, அதற்கு பிறகு தொடந்து வேலை பார்த்து கொண்டே இருந்தான். 
“என்னண்ணா..? நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ அமைதியா இருக்க, போ.. போய் பார்த்துட்டு வா..” என்ற மது வசந்தாவை பார்த்தாள். 
“என்னம்மா இது..? நீ என்னன்னு பார்க்க மாட்டியா..?”
“நான் நேத்தே சொன்னேன் மது, போக மாட்டேங்கிறான், நான் ரெண்டு நாள் முன்னாடி போய் பேரனை பார்த்துட்டு வந்தப்போ கூட திவ்யா என்னை எப்போ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்கன்னு கேட்கிறா.. எனக்கு சங்கடமா போச்சு தெரியுமா..? இவனை கேட்டா இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு சொல்றான்..? என்னதான் செய்ய..?” என்று அவரும் ஆதங்கத்துடன் சொன்னார். 
“என்னம்மா சொல்றீங்க..? அண்ணி கேட்டும் ஏன் கூட்டிட்டு வரல..?” என்று மது அண்ணணை பார்த்தாள். 
“இருக்கட்டும் மது.. பொறுமையா கூப்பிட்டுக்கலாம்..” என்று  ரவி சொல்ல, அவனை கூர்மையாக பார்த்த மது, 
“நான் இங்க இருக்கிறதால தான் நீ  அண்ணியை கூட்டிட்டு வரலையா..? அப்போ  நான் எங்க வீட்டுக்கே போறேன்..” என்றுவிட, அம்மாவும் மகனும் அதிர்ந்து தான் போனார்கள். 
“என்ன என்ன பேசுற நீ..? அப்படி எல்லாம் எதுவும் இல்லை..” என்று ரவி மறுத்தாலும் அதுதான் உண்மை. 
“என்னதான் மனைவியின் பேச்சில் மாற்றம் தெரிந்தாலும், முழுதாக நம்ப மனம் இடம் கொடுக்கவில்லை. எப்போதும் போல மதுவை ஏதாவது பேசிவிடுவாளோ, ஏற்கனவே இருக்கும் பிரச்சனையே போதும்.. என்ற பயமே ரவிக்கு

Advertisement