Advertisement

அவளே என் பிரபாவம் FINAL அண்ட் EPILOGUE 
“வடிவேலு.. எப்படி இருக்க..?” என்று நீண்ட மாதங்களுக்கு  கடைக்கு வந்த சோமசுந்தரத்தை பார்த்து முகம் திருப்பி கொண்டார் வடிவேலு. 
“ஏய்.. என்னப்பா..?” என்று சோமு நண்பரை பரிதாபமாக பார்த்தார். 
“பின்ன என்னப்பா..? என் மகள் கல்யாணத்துக்கு வரச்சொல்லி உன்னை எவ்வளவு கூப்பிட்டேன், ஆனா நீ  சிங்கப்பூர்ல இருக்கிற உன் மகன் வீட்ல போய் உட்கார்ந்துகிட்டு வரமுடியலைன்னு சொல்லிட்ட இல்லை..”  என்று நண்பரை கோவித்து கொண்டார். 
“வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை வடிவேலு, உனக்குத்தான் தெரியுமே..? என் மருமக பொண்ணு வேலைக்கு போறதால பேரனை பார்த்துக்க வர சொல்லியிருந்தாங்கன்னு..” என்று வருத்தமாக சொல்ல, 
“சரி.. விடு,  இப்போவாவது வந்தியே..” என்று வடிவேலு நண்பரின் கையை பிடித்து கொண்டு மகிழ்ச்சியுடன் சொன்னார். 
“அப்பறம்..  வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க..?” என்று சோமு   விசாரித்தார். 
“எல்லாம் நல்லா இருக்காங்க, ரெண்டு வாரத்துக்கு முன்னதான் மதுமாக்கு பேத்தி பிறந்தா, மகனுக்கு பேரன் இருக்கான்..” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். 
“ரொம்ப நல்லதுப்பா.. என்ன சொல்றார் உன் மருமகன்..?” 
“யாரு.. என் பொண்ணு புருஷனா..?” என்று வடிவேலு கேட்க, அவரை குழப்பாக பார்த்த சோமு, 
“அது உன் மருமகன் தானே..?” என்று கேட்டார். 
“அதைத்தான் நானும் சொல்றேன்..” என்று வடிவேலு அதையே திரும்பி சொல்ல, 
“ஏய் என்னப்பா குழப்புற..? அவர் உன் மருமகன் தானே..?” என்று கேட்டார். 
“இங்க பாரு சோமு, நீ என் பொண்ணோட  புருஷனை பத்தி கேளு, சொல்றதுக்கு ஆயிரம் இருக்கு, ஆனா என் மருமகனை பத்தி ஒன்னும் கேட்காத, சண்டையை தவிர சொல்றதுக்கு வேற எதுவும் கிடையாது..” என்று கடுப்படித்தார். 
“என்ன..? மருமகன் கூட சண்டை போடுறியா..?” என்று சோமு அதிர்ச்சியாக கேட்டார். 
“சண்டை போடுற இல்லை.. சண்டை போடுறோம்.. அவரும் எந்த  விதத்திலும் குறைஞ்சவர் இல்லை..” என்று நொடித்தார். 
“ஏய்..? என்னப்பா இது.. ஒரு  மருமகன் கூட போய் மல்லு கட்டுற..?”  என்று சோமு அதட்ட, அவரை கடுப்பாக பார்த்த வடிவேலு, 
“இதுக்கெல்லாம் காரணம் நீதான், இனி எங்க பொண்ணு பார்த்து பேசினாலும், மாப்பிள்ளைக்கும், மருமகனுக்கும் பொருத்தம் இருக்கான்னு பார்த்திட்டு சம்மந்தம் பேசு சொல்லிப்புட்டேன்..” என்று மிரட்ட, 
“எதே..?  மாமானாருக்கும்.. மருமகனுக்கும் பொருத்தம் பார்க்கிறதா..?” என்று சோமு திகைத்து போய்  தலையை ஆட்டி வைத்தார். 
“அப்பறம் நாளைக்கு பேத்திக்கு தொட்டில் போட்டு பேர் வைக்கிறோம்.. வீட்டுக்கு வாப்பா..” என்று வடிவேலு உற்சாகமாக சோமுவை கூப்பிட்டார். 
“நல்ல விஷயம்ப்பா.. நான் நாளைக்கு வரமுடியாது, உன் தங்கச்சிக்கு ஹாஸ்பிடல் செக் அப் இருக்கு, அதை பார்த்துட்டு இன்னொரு நாள் வரேன்..” என்று மேலும் சில நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார். 
“திவ்யா.. இன்னும் கொஞ்ச பூ எடுத்துட்டு வா..” என்று தொட்டிலை அலங்கரித்து கொண்டிருந்த வைஜெயந்தி மகளிடம் கேட்டார். 
“இதோம்மா..” என்று மகள் எடுத்து வந்த பூவை தாராளமாக சுற்றியவர், தொட்டிலுக்குள் பட்டு துணியை படுக்கையாக விரித்தார். 
“ம்மா.. கீழ வேற ஏதாவது துணி வைப்போமா..? பேபிக்கு உறுத்த போகுது..” என்று திவ்யா யோசனையாக சொல்ல, தொட்டு பார்த்த வைஜெயந்தி, 
“அவ்வளவு ஒன்னும் உறுத்தல திவ்யா, கொஞ்ச நேரம் தானே..?” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றார். 
அதுவரை அவர்கள் பேச்சை கேட்டபடி சோபாவில் அமர்ந்திருந்த  வடிவேலு வேகமாக எழுந்து சென்று தொட்டிலுக்குள் தொட்டு பார்த்தார். 
“என்ன இது உறுத்தாதமா அந்த அம்மாக்கு..?” என்று வைஜெயந்தியை கடிந்து கொண்டவர், உள் சென்று பேத்தியின் மெலிதான பஞ்சு மெத்தையை எடுத்து வந்து தொட்டிலுக்குள் போட்டு, அதற்கு மேல் பட்டு துணி விரித்தார். 
இதை எல்லாம் மெலிதான சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த சண்முகம், வடிவேலு வரவும் அவரை பார்த்து சிரித்தார். 
“இல்லை சம்மந்தி பட்டுக்குட்டிக்கு உறுத்தும் இல்லை அதான்..” என்று விளக்கம் கொடுத்தபடி அமர்ந்தவர், சண்முகத்தின் கையில் இருந்த பேரனை தன்னிடம் தாவவும், “வாடா.. வாடா.. தங்க குட்டி..” என்று வாங்கி  மடியில் வைத்து கொண்டார்.
“அம்முகுட்டி.. என்ன பண்றீங்க..? தூங்குறீங்களா..?” என்று தூங்கி தூங்கி விழித்து கொண்டிருக்கும் மகளை கொஞ்சி கொண்டிருந்த ப்ரேமின் முதுகில் குஷன் வந்து விழுந்தது. 
“என்னடி..?” என்று சிரிப்புடன் திரும்பிய ப்ரேம், மனைவி இடையில் கை வைத்து கோபத்துடன் நிற்பது தெரிய, 
“பெரிய அம்முக்குட்டிக்கு என்னவாம்..?” என்றவாறே மனைவியை இழுத்து அவளின் வயிற்றில் முகம் புதைத்தான். 
“எத்தனை முறை சொல்றது, தூங்கிட்டிருக்கிற பிள்ளையை கொஞ்சதீங்கன்னு..  கேட்க மாட்டிங்களா..?” என்று மது கணவனின் தலை முடியை பிடித்து ஆட்டி கண்டிப்புடன் சொன்னாள். 
“அதுக்கு நான் என்ன செய்ய..? அவ நிறைய நேரம் தூங்கிட்டே தான் இருக்கா..?” என்று சுணக்கத்துடன் மனைவியின் வயிற்றில் தலையால் லேசாக முட்டியவன், 
“மித்ரா.. மித்து குட்டி..” என்று மனைவியை செல்லமாக கொஞ்சினான்.  கணவனின் புதிதான கொஞ்சலில்,  விழி விரித்து நின்ற மது 
“என்ன..? என்ன இது புதுசா..?” என்று சிவந்து விட்ட முகத்துடன் திணறி கேட்டாள். 
“ம்ம்.. என் மகளை கொஞ்சும் போது, என் ஆருயிர் பொண்டாட்டியையும் கொஞ்ச ஆசையா இருக்கே..” என்று மனைவியையும், மகளோடு சேர்ந்து கொஞ்ச நினைக்கும் கணவனின் தாய்மை பெருக்கை புரிந்து  கொண்ட மது, கணவனை தன் வயிற்றோடு இன்னும் நெருக்கமாக சேர்த்தனைத்தாள். 
“ஏய்.. வேண்டாம்..” என்று மனைவியின் இறுக்கமான அணைப்பை தளர்த்தி லேசாக அணைத்தான். தன் உடல் நிலையை நினைத்து பயப்படும் கணவனை பார்த்து நிறைவாக சிரித்த மது, 
“கிளம்ப வேண்டாமா..? எல்லோரும் வெளியே வெய்ட் பண்றாங்க.. பங்கஷனுக்கு நேரம் ஆச்சு..” என்றாள். 
“ம்ம்.. நீ முதல்ல கிளம்பு, நான் அது வரைக்கும் என் அம்மு குட்டியோட இருக்கேன்..” என, மது கிளம்ப சென்றாள். 
“ரவி.. மதுவை வரச்சொல்லு, நேரம் ஆச்சு பாரு..” என்று வசந்தா குரல் கொடுக்க, அவன் சென்று கதவை தட்டினான். 
“சொல்லுங்க ரவி..” என்று கதவை திறந்த ப்ரேம் கேட்க, 
“அம்மா வரச்சொல்றாங்க ப்ரேம், பன்க்ஷனுக்கு நேரம் ஆச்சாம்..” என்றான். 
“இதோ ஆச்சு..” என்ற ப்ரேமின் பார்வை சோபாவில் அமர்ந்திருந்த மாமனார் மீது பதிய, அவர் வேகமாக தன் பார்வையை மாற்றி கொண்டார். 
அவர் அதுவரை இங்குதான் பார்த்து கொண்டிருந்தார்.. என்று ப்ரேமிற்கு தெரிய, அவரை சிரிப்புடன் பார்த்தவனுக்கு  சுபா அன்று அவரை ஹாஸ்பிடலில் வைத்து அரட்டியது ஞாபகத்திற்கு  வந்தது. குழந்தை பிறந்த அன்று அவரும் தன்னுடன் குழந்தையை வாங்க கை நீட்ட, 
“இது யார் பிள்ளை..? நீங்க ஏன் கை நீட்டுறீங்க..? உங்க மகள் பொறந்தப்போ நீங்கதான் முதல்ல வாங்கணும்ன்னு எங்க எல்லார்கிட்டயும்  என்ன ஆட்டம் ஆடுனீங்க..? இப்போ மட்டும் ஊருக்கு முன்னாடி வந்து கை நீட்டுறீங்க..?” என்று பொரிந்து தள்ள, வடிவேலு நீட்டிய கைய மடக்கி விட்டு முகத்தை தூக்கி வைத்து நின்றுவிட்டார். 
இறுதியில் ப்ரேம் தான் மகளை தன் கையில் ஏந்தியவன், கலங்கிய கண்களுடன்  மகளை பார்த்தான். அப்படியே மனைவியின் மறுபிறப்பாக இருந்த மகளை பார்க்க பார்க்க அவளை தன்னுள் புதைத்து கொள்ளும் தீரா ஆசை பொங்கியது, 
ரோஸ் வண்ணத்தில் கண் மூடி மூடி திறந்த மகளை லேசாக தன் மார்போடு சாய்த்தவனுக்கு உடல் முழுதும் புது ரத்தம் பாய்ந்தது போல இருந்தது. 
“என் மகள்.. என் ரத்தம்.. என் வாரிசு.. என் உயிர்..” என்ற கர்வம் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்து அவனை சிலிர்க்க வைத்தது. அதிலும் பேபி அவனின் மார்பு பக்கம் தலையை சாய்க்க, ப்ரேமின் இதயம் நின்று துடித்தது. 
தாய்மை என்ற உணர்வை அந்த நொடி முழுவதுமாக உணர்ந்தவன், சட்டென திரும்பி தன் மாமனாரை தான் பார்த்தான். அவர் எட்டி எட்டி தன் கையில் இருக்கும் பேத்தியை பார்த்து கொண்டிருக்க, மனதில் ஏதோ போல உணர்ந்தவன், வசந்தாவிடம் கொடுத்து அவரை கண் காட்டினான். 
வசந்தா மருமகனை ஆச்சரியமாக பார்த்தவாறே பேத்தியை தன் கையில் வாங்கி உச்சி முகர்ந்தவர், கணவரிடம் கொண்டு சென்று கொடுக்க, வடிவேலு  ஆனந்த கண்ணீருடன்  பேத்தியை தன் கையில் ஏந்தினார். 
மகளை முதன் முதலாக தன் கையில் ஏந்தும் போது கிடைத்த அதே சிலிர்ப்பு, பூரிப்பு, ஆனந்த அழுகை.. உவகை.. என்று அந்த நிமிடங்களை இன்னொரு முறை தன்  பேத்தியின் மூலமாக அனுபவித்தவர்,  அவளை அப்படியே தன்னோடு சேர்த்து கொண்டார். 
அந்த நொடி அவரின் முகத்தில் தெரிந்த அந்த பரவச உணர்வை  இன்று நினைத்து பார்த்த ப்ரேம், உள்ளே சென்று தயாரான மகளையும், மனைவியையும் கூட்டி கொண்டு வந்தான். 
“வாங்கண்ணா..” என்று பங்கஷனுக்கு  வந்திருந்த எல்லோரையும் வரவேற்று கொண்டிருந்த மது  குமார்  வரவும் அவனை   சந்தோஷமாக  வரவேற்றாள். 
“வரேன்மா.. ஏஞ்சல் என்ன சொல்றாங்க..” என்று மதுவின் கையில் இருந்த குழந்தையை பார்த்து கொஞ்சியவன், பக்கத்தில் நின்றிருந்த நண்பனை பார்த்து முகம் திருப்பி கொண்டவன், 
“நான் உனக்காக மட்டும் தான் வந்திருக்கேன் மது, வேற யாருக்கும் இல்லை..” என்று  நண்பனை முறைத்து சொன்னான். 
“போடா போ.. ரொம்பதான்..”  என்று நண்பனின் வயிற்றில் குத்திய ப்ரேம்  அவனை  மகிழ்ச்சியுடன் அணைத்து கொண்டான். 
நண்பனும்  தன்னிடம் எல்லாம் மறைத்து விட்டானே என்ற கோவத்தில் இத்தனை மாதங்களாக அவனிடம் முறுக்கி கொண்ட நின்ற ப்ரேம், சமீப நாட்களாக தான் முதல் போல உறவாட ஆரம்பித்திருந்தான். 
“மது.. குழந்தையை தொட்டில் போடணும்..” என்று வசந்தா சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் குழந்தை தொட்டிலில் போடப்பட்டு, “ப்ரேமிதா..!!”    என்ற பேரும் வைக்கபட்டது.
ஐந்து வருடங்களுக்கு பிறகு..
“மித்ரா.. சீக்கிரம் கிளம்பு, நேரம் ஆச்சு..” என்று அவளின் பேஷன் அவுஸில் வரைந்து கொண்டிருந்த மனைவியிடம்  ப்ரேம் குதித்து கொண்டிருந்தான். 
போன வருடம் தான் மித்ரா, ப்ரேம் இருவரும் இணைந்து அந்த பேஷன் அவுஸை உருவாக்கியிருந்தனர்.  வடிவேலு மகளிடம் போராடி இன்டீரியர் செய்து கொடுத்திருந்தார். 
“இருங்க.. இன்னும் பைவ் மினிட்ஸ்..” என்று டிசைன் வரைந்து கொண்டிருந்த மனைவியை முறைப்போடு பார்த்த ப்ரேம், 
“இப்போ நீ கிளம்பல, நான் உன்னை தூக்கிட்டு போயிடுவேன்..” என்று அவளை உண்மையாகவே தூக்கிவிட, 

Advertisement