Advertisement

“மித்ரா.. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் உண்டு, அதுல எது சரிங்கிறது அவங்க யோசிக்கிற கோணத்தை பொறுத்ததுதான், உன்னை பொறுத்தவரைக்கும் நான் என்னோட தன்மானத்தை, சுய மரியாதையை ப்ரூப் செய்ய தான் அப்படி செஞ்சேன்.. சரி.. ரொம்ப சரி.. ஏன் அதிலென்ன தப்பு..?”
“ஒருத்தர் மத்தவங்களை பார்த்து இன்னாரோட உழைப்புல தான் நீன்னு சொன்னா அவங்களுக்குள்ள  சுருக்கன்னு குத்தாத,  இப்போ உங்க அப்பா உங்க அண்ணனை பார்த்து  என் உழைப்புல தான் நீன்னு சொன்னா.. உங்க அண்ணனுக்கு  உள்ள சுருக்குன்னு குத்தாத..”
“உன்னை  பார்த்து  என் உழைப்புல தான் நீ சொன்னா உனக்கு  உள்ள சுருக்கன்னு குத்தாத.. அதுக்கு என்ன பேரு..? அவங்களோட தன்மானம், சுயமரியாதை தான், அது இல்லைன்னா நமக்கு ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் தெரியுமா..?”
“அப்படித்தான் எனக்கும் உங்க அப்பா கேட்டப்போ உள்ள பயங்கரமா குத்துச்சு, குடைஞ்சுச்சு..  அதிலும் என்ன  நடந்ததுன்னே  நமக்கே தெரியாத ஒரு விஷயத்துக்காக நாலு பேர் முன்னாடி சபையில் வச்சு பேச்சு வாங்கிறது எல்லாம் நம்மை நாமே ரொம்ப கீழா உணருற இடம்..”
“அதுவும் அவர் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணோட உழைப்புல தான் நீங்கன்னு சொல்லும் போது நான் இல்லைன்னு சண்டை போட முடியுமா..? அப்போ நீ அவரோட மகளாதானே இருந்த.. அதுவே  இப்போன்னா அவர் நமக்குள்ள வரவே முடியாது,  வரவும் மாட்டார்..”
“இதெல்லாம் புரிஞ்சு, இது போல எதுவும் நடந்துட கூடாதுன்னு தான் நான் முதல்ல இருந்து  உன்னை தள்ளியே வச்சேன்.. ஆனா நீ எனக்காக செய்றேன்னு எதையும் யோசிக்காம செஞ்சுட்ட, அதுல ஒரு கணவனா எனக்கு கொள்ளை பெருமை, சந்தோசம் தான், இல்லைன்னு சொல்ல முடியாது..”
“ஆனா.. அதுவே இப்படி ஒரு பிரச்சனையை கொண்டு வரும்ன்னு உனக்குள்ள  ஒரு கெஸ் இருக்கிற பட்சத்திலே நீ என்கிட்ட சொல்லியிருக்கணும் இல்லை, இப்போ நீ என்கிட்ட  கேட்டதானே நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நாம ரெண்டு பேரும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த பின்னாடி என்னை விட்டு போக உங்களால எப்படி முடிஞ்சதுன்னு..?”
“அதைத்தான் நானும் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன், ஏதாவது ஒரு நேரத்துல நீ என்கிட்ட  இதை கண்டிப்பா சொல்லியிருக்கணும், இது மறைக்க கூடிய விஷயமா இல்லை..” 
“இதை நீ சொல்லும்போது நான் நிச்சயமா  கோவப்பட்டிருப்பேன் தான், ஏன் உன்கிட்ட சண்டை கூட போட்டிருப்பேன், இல்லன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், ஆனா இதை கண்டிப்பா சார்ட் அவுட் பண்ணியிருப்பேன், இவ்வளவு பெரிய பிரச்சனை ஆக விட்டிருக்க மாட்டேன்..”
“அதிலும் அந்த இடத்துல என்னை ரொம்ப  ஹர்ட் செஞ்சது,  நீ என்கிட்ட சொல்ல வேண்டிய விஷயத்தை வேற ஒருத்தர் சொன்னது தான், அந்த செகண்ட் என் மனசுல ஓடுன ஒரே விஷயம் நாம அப்படியா வாழ்ந்தோங்கிற ஒரு ஏமாற்றம்..”
“நாம நம்மளை விட அதிகமா ஒருத்தரை  நம்பும் போது கிடைக்கிற அந்த ஏமாற்றம், அதை அனுபவிச்சாதான் அந்த வலி தெரியும், அந்த வேதனையை நீ எனக்கு கொடுத்திருக்க..?”
“அதுவே நீ இதை  என்கிட்ட சொல்லியிருந்தா அப்படியென்ன செஞ்சிருப்பேன்..? மிஞ்சி மிஞ்சி போன ரெண்டு கத்து கத்தியிருப்பேன், ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு பேசாம இருந்திருப்பேன், அதுக்கு மேல என்னால இருக்க முடியாதுன்னு உனக்கே தெரியும்..”
“அப்படியும் இவ ஏன் என்கிட்ட இதை சொல்லலைங்கிற என்னோட கோவம் தப்புன்னு சொல்றியா..? இல்லை உங்க அப்பா சொல்லிட்ட வார்த்தையை ஏத்துக்கிட்டு உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிருக்கணும் சொல்றியா..?” 
“ஏன் கூட்டிட்டு போனா என்ன தப்பு..” என்னை இங்க விட்டுட்டு போகாம உங்களோடே  கூட்டிட்டு போய்ட்டு பணத்தை ரிட்டர்ன் கொடுத்திருக்கலாம் இல்லை, என்னை அந்த இடத்துல நீங்க விட்டு கொடுத்ததா தான் நான் இப்போவும் பீல் பண்றேன்..” என்று மது துயரத்துடன் சொன்னாள். 
“மே பி.. நான் அதை செஞ்சிருக்கலாம், ஆனா அந்த இடத்துல எனக்கு அவ்வளவு டீப்பா யோசிக்க முடியல, அவர் அவரோட பொண்ணுன்னு பிரிச்சு பேசினத்துக்கு அப்பறம், உன்னை என்னோட கூட்டிட்டு போக மனசு வரல, இதுதான் உண்மை..”
“ஆனா நீ இப்படி யோசிச்சு ஹர்ட் ஆவேன்னு நான் நினைக்கல, அதுக்காக நீ இந்தளவு பேசுவேன்னும் நான்  சுத்தமா எதிர்பாரக்கல, உன்னைவிட்டு என்னால இருக்க முடியலன்னு தான் நான் வேகவேகமா பணத்தை ரெடி செஞ்சு எடுத்துட்டு வந்தேன், ஆனா நீ என்கூட வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கற..”
“அதிலும் மேடமுக்கு எங்களால மனசு கஷ்டம் வேற, உங்க அப்பா உன்மேல் வச்ச பாசம், நான் உன்மேல வச்சிருக்கிற காதல்.. இதெல்லாம் உனக்கு பெருசா தெரியல, நாங்க உன்கிட்ட இருந்து  எதிர்பார்க்கிற உரிமை மட்டும் தப்பா தெரியுது இல்லை..”
“உனக்கு தெரியாது மித்ரா.. நீயெல்லாம் ப்ளஸ்ட்.. இப்படி ஒரு அப்பா கிடைக்க, பேமிலி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், என்னை போல நிறைய பேர் இருக்காங்க, பேமிலி இருக்கும்..ஆனா இருக்காது..”
“நம்ம பெத்து வளர்த்த அப்பா, அம்மா, கூட பிறந்த தங்கச்சின்னு எல்லாம் இருப்பாங்க, ஆனா யாரும் மனசளவுல கூட இருக்க மாட்டாங்க,  பாசம் இருக்கும், ஆனா அவங்களுக்குள்ள ஒரு எமோஷனல் டச் இருக்காது..”
“எப்படி சொல்ல..? எப்போவும் மனசுல ஒரு தனிமை, வெறுமை.. இதுதான் நிறைஞ்சிருக்கும், எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாத பீல்..  ரொம்ப கொடுமை.. நம்ம கஷ்டத்தை, வேதனையை.. அவ்வளவு ஏன் நம்ம சந்தோஷத்தை சொல்லி கொண்டாட கூட  யாரும் இருக்க மாட்டாங்க..”
“அந்த  வெறுமையை  தினம் தினம் அனுபவிக்கும் போது  நமக்கே நமக்குன்னு ஒரு உறவு கிடைச்சா எப்படி இருக்கும்..? தூக்கி வச்சு கொண்டாட தோணும், அவங்களை நமக்குள்ள முழுசா மறைச்சுக்க தோணும்..”
“அவங்ககிட்ட எல்லா விதமான உரிமையை எடுத்துக்க தோணும், அதுக்கு நடுவுல அவங்க அப்பாவே  வந்தாலும் விட்டு கொடுக்காம நம்மளோட உரிமையை நிலைநாட்டதான் தோணும்..”
“அப்படித்தான் நானும் இருக்கேன்,  நீ எனக்கே எனக்கான உறவு.. உன்னை எந்த இடத்திலும் என்னால விட்டு கொடுக்க முடியல, அதை  நீயும் ஏதோ ஒரு இடத்துல புரிஞ்சுகிட்டு என்னை தாங்குறேன், என்னோட இத்தனை வருஷ வெறுமையை இந்த சில மாசத்துல நிறைச்சிட்ட..”
“ஆனா நீ ஒரு விஷயத்துல என்னை புரிஞ்சுக்க தவறிட்ட.. உங்க அப்பா.. அவரோட  உரிமையையும் நான் எப்போவும் பறிக்க நினைச்சதில்லை, அவர்கிட்ட இருந்து உன்னை நான் மொத்தமா விலக்க  ஆசைப்பட்டதில்லை..”
“என்னோட ஒரே கோவம், ஏன் என்னை உன்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாரு, ஏன் உனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு.. இதுதான்.. இதுல ஒரு அப்பாவா அவர் சரிதான்னாலும், என்னோட விஷயத்துல அவர் தப்பு தானே..?”
“என்னால எப்படி இதை சாதாரணமா ஏத்துக்க முடியும்..? எதுவுமே நடக்காதது போல  எப்படி சாதரணமா பழக முடியும்..? மனசுக்குள்ள விழுந்த அடியை எப்படி மறக்க முடியும்..? முடியாது, அதுவும் அவர் இவ்வளவு பேசி.. என் சட்டையை பிடிச்சதுக்கு அப்பறம் கண்டிப்பாவே முடியாது, இதுதான் உண்மை.. இதை நீ ஏத்துக்க தான் வேணும்..”
“உன்னை ஓர் அளவுக்கு  மேல என்னால விட்டு கொடுக்க முடியாது, அவருக்கும் அப்படித்தான்.. இதுல நீ மாட்டிகிட்டு கஷ்டபடுறேங்கிறதும் உண்மை..”
“ஆனா அதுக்காக யாரும் யாரை விட்டு கொடுக்க முடியாது, யாரோட இடத்தை  யாரும்  எடுத்துக்க முடியாது, யாரோட உரிமையையும் யாரும் பறிக்க முடியாது..”
“அவர் உன்கிட்ட அவரோட அம்மாவை பார்க்கிறார்ன்னா..? நான் உன்னை என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையாவும் பார்க்கிறேன்.  இந்த இடத்துல அவரும் சரி.. நானும் சரி.. எனக்கு புரிஞ்சுக்க முடியுது, இதுல நீதான் எங்களுக்கு பொதுவா இருக்க,  நீதான் பார்த்துக்கணும்..”
“என்னோட காதல்,  அவரோட பாசம்.. உனக்கு புரியும் போது, இதுவும் உனக்கு புரியனும், எங்களை நீதான் பேலன்ஸ் செய்யணும், அதுக்காக எங்ககிட்ட மாட்டிகிட்டு உன்னை கஷ்டப்பட சொல்லலை..”
“எங்க ரெண்டு பேர்ல யார் அதிகமா போனாலும் கேளு.. உரிமையா சத்தம் போடு, அதுக்கான முழு உரிமையை நானும் கொடுத்திருக்கேன், அவரும் கொடுத்திருக்கார்.. அதைவிட்டு சின்ன குழந்தை மாதிரி யோசிக்காத..”
“யார் விட்டு கொடுக்கணும்ன்னு கேட்டு எங்களை ஹர்ட் செய்யாத.. நானும் சரி.. அவரும் சரி.. இப்போதைக்கு சரியாக மாட்டோம், எங்களுக்குள்ள இருக்க அந்த ஈகோ எங்களை தள்ளி தான் வைக்கும்..”
“நீ சொன்ன மாதிரி ஏதோ ஒரு இடத்துல நாம மூணு பேருமே ஒருத்தரால ஒருத்தர் பாதிக்கபட்டிருக்கோம், அந்த காயம் சீக்கிரம் சரியாகாது, நீ அதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவும் முடியாது, எங்களுக்கான டைம்மை எங்களுக்கு கொடு.. வாழ்க்கை இன்னும் நீண்டு இருக்கு, அதுக்குள்ள ஏன் அவசரப்படுற..?”
“யாருக்கு தெரியும் ஒரு நாள் எல்லாம் மாறும்.. இல்லை மாறாம கூட போகும், அதை யோசிச்சு இப்போ இருக்கிற நிம்மதியை, சந்தோஷத்தை இழக்காத.. அதுவும் நீ இருக்கிற நிலையில் உன்னோட எண்ணம் முழுசும் நம்ம பேபியை நல்லா படியா பார்த்துகிறதால் தான் இருக்கனும்..”
“அதைவிட்டு இப்படி  எல்லாம் யோசிச்சு உன்னை நீயே வருத்திகிட்டு எங்களையும் வேதனை படுத்தகூடாது, நீ பயங்கர மெச்சூர்.. அது எனக்கும் தெரியும். இப்போ நான் சொன்னதை எல்லாம் பொறுமையா யோசி.. உனக்கே கண்டிப்பா புரியும்..” என்று மிக நீண்ட விளக்கம் கொடுத்தவன், எழுந்து சென்று மனைவியின் முன் நின்றான். 
“நான் இப்போ பேசினது எல்லாம் என் மனசுல இருந்து அப்படியே பேசினது, எதையும் யோசிக்கல, பில்டர் பண்ணல, இதில ஏதாவது தப்பா  இருந்தா கேளு, உனக்குள்ளே வச்சு மருகாத..”
“உங்க அப்பாக்கும்.. எனக்கும் இருக்கிற எல்லாத்தையும் நான் முழுசா பேசிட்டேன், இனி இதை பத்தி நான் எப்போவும் பேசவும் மாட்டேன். பார்த்துக்கோ.. டைம் எடுத்து நிறைய யோசி..” என்று குனிந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தவன், புடைவையை விலக்கி தன் பேபிக்கும் முத்தம் வைத்தவன், 
“உன்னை என்னோட கூட்டிட்டு போகணும்ன்னு ரொம்ப எதிர்பார்ப்போட வந்தேன்,  ஆனா.. இனி அது முடியாது.. ”
“நான் கிளம்புறேன்..பார்த்துக்கோ.. உன்னையும்.. நம்ம பேபியையும்..” என்று இறுக்கத்தோடு சொன்னவன், கிளம்பியும்விட்டான். 

Advertisement