Advertisement

அவளே என் பிரபாவம் 19
“என்னோட  வாழ்க்கையையே நான் முழுசா  உன்கிட்ட மட்டும் தான்  கொடுத்திருக்கேன், என்னை மேல ஏத்துறதும் நீதான்.. கீழ இறக்கறதும் நீயாதான் இருப்ப..”
“அதை இன்னிக்கு ப்ரூப் செஞ்சுட்டா.. என்னை மொத்தமா கீழிறக்கிட்டா.. நடுசபையில் வச்சு என்னோட தன்மானம், சுயமரியாதையை மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்டா.. 
“அந்த மனுஷன் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு உழைப்புல தான் நீங்க.. உங்க கடைன்னு சொல்லி என்னை முடிச்சிட்டார்.. என்கிட்ட ஒருவார்த்தைக்கு கூட எதுவுமே  சொல்லாமல் என்னை எந்த இடத்துல கொண்டு வந்து நிக்க வச்சிருக்க மித்ரா நீ..?”
“இதை எல்லாம் கேட்க தானா நான் லோனுக்கு மேல் லோன் போட்டு வெளிநாடு எல்லாம் போய் வேலை செஞ்சு.. கடைசில எல்லாம் ஒன்னுமே இல்லாம போச்சு..” ப்ரேமின் அடங்கா கோவமே மது மேல் கை நீட்ட வைத்தது. 
“ஏய்.. என் பொண்ணு மேலயா கை வச்ச..?” என்று வடிவேலு அவனின் சட்டையை பிடிக்க, அவனால் அதை தாங்கவே முடியவில்லை, 
“என்ன செஞ்சு வச்சிருக்க நீ என்னை..?” என்று மனதுடன் மனைவியிடம் கொதித்தபடி இறுகிய உடலுடன் மூடிய கதவை வெறித்து கொண்டிருந்தான்.
“பெரியம்மா.. மதுக்கு என்னாச்சு..?   இப்போ எப்படி இருக்கா..?”  என்று கதவை திறந்து கொண்ட வந்த வசந்தாவின் பெரியப்பா மகள் டாக்டர் சுபாவிடம் ரவி பதட்டத்துடன் கேட்டான். 
“சொல்லு சுபா மதுமாக்கு என்னாச்சு..?” என்று  வடிவேலுவும் பதறிகொண்டிருக்க, ப்ரேம் திறந்திருந்த கதவின் வழியே பெட்டில் படுத்திருந்த மனைவியை பார்த்தான். 
“சுபாக்கா  ஏன் இப்படி அமைதியாவே இருக்க..? எதாவது சொல்லுக்கா..” என்று வசந்தாவும் அழுகையுடன் தன் அக்காவிடம்  கேட்க,
“வசு.. மது கன்சீவா இருக்கான்னு நினைக்கிறேன்..” என்ற சுபாவின் யோசனையான முகத்தை கவனிக்காமல், எல்லோரும் மகிழ, ப்ரேமின் கொதித்த மனதில்  இளக்கம், முகத்தில் மலர்ச்சி. 
“ஆனா..” என்று அவர் தொடர்ந்து  கவலையுடன் இழுக்கவும், எல்லோரின் முகமும் பயத்தை காட்டியது. 
“என்ன ஆச்சுக்கா..?” என்று வசந்தா அக்காவின் கையை பிடித்து தவிப்புடன் கேட்டார். 
“இல்லை வசு.. பேபி பீட் அவ்வளவு கிளியரா இல்லை, கொஞ்சம் லோவா இருக்கு..” என்று முடிக்க, எல்லோரின் முகமும் இருளடைந்தது. 
“அப்படின்னா..? என்ன சொல்ல வரீங்க பெரியம்மா..?” என்று ரவி கவலையுடன் கேட்டான். 
“எனக்கும் தெரியல  ரவி.. என்னன்னு செக் பண்ணாதான் காரணம் தெரியும்..” என, அனைவரின் பார்வையும் ஓய்ந்து போய் படுத்திருந்த மது மேல் நிலைத்தது. 
“எதுவும் பிரச்சனை இருக்காது இல்லை சுபா..” என்று வடிவேலு பயத்துடன் கேட்க, 
“இருக்காது.. நீங்க எல்லாம் வாயை மூடிட்டு இருந்தா..” என்று சுபா சற்று கோவத்துடனே வடிவேலுவையும், ப்ரேமையும், வைஜெயந்தியையும் பார்த்து சொன்னார். அவரும் தங்கை வீட்டு பங்க்ஷனுக்கு வந்திருக்க, நடந்த எல்லாவற்றையும் பார்த்திருந்ததாலே இந்த கோவம். 
“அவளோட இந்த மயக்கத்துக்கு காரணம் அதிர்ச்சியும், திடீர் பிபி ரைஸ் ஆனதும்தான்.. இதுவே கொஞ்சம் சிவியரா முடிஞ்சிருந்தா அவளுக்கு அபார்ஷன்..”  என்று முடிக்கும் முன்னே, 
“அப்படி சொல்லாதீங்க..” என்ற ப்ரேமின் கர்ஜனையும், “சுபா..” என்ற வடிவேலுவின் அதட்டலும், “க்கா..” என்ற வசந்தாவின் அழுகை குரலும் ஏக காலத்தில் ஒலித்தது. 
“நான் உண்மையை தான் சொன்னேன், என்னை அதட்டுனா நீங்க செஞ்சது சரின்னு ஆகிடாது, இனியாவது அவகிட்ட ஒழுங்கா  நடந்துக்கோங்க..” என்று ப்ரேமையும், வடிவேலுவையும் பார்த்து கண்டிப்புடன் சொன்னார், 
“இங்க பாரு வசந்தா நீ எதுக்கும் மதுவோடவே இருந்து அவளை பத்திரமா பார்த்துக்கோ.. யாரையும் அவ பக்கத்துல விடாத..” என்று வடிவேலுவையும், ப்ரேமையும் பார்த்து கடுப்புடன் சொன்னவர்,  
“முடிஞ்சா நீ நாளைக்கே அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா, என்னன்னு செக் பண்ணிரலாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவளே முழிச்சிடுவா.. பார்த்துக்கோ..” என்று முடித்தவர் கிளம்பிவிட, ரவி அவரை வழியனுப்ப சென்றான்.
“மது.. இப்போ எப்படிடா  இருக்கு..?” என்று சில நிமிடங்கள் கழித்தே மயக்கம் தெளிந்த மகளுக்கு ஜுஸ் கொடுத்த வசந்தா கேட்கவும், 
“ஓகேம்மா..” என்றவளின் பார்வை தவிப்புடன் கணவன் மேல் படிய, அவனின் உணர்ச்சிகளற்ற பார்வையை எதிர் கொள்ள முடியாமல் கண்கள் மூடி கொண்டாள். 
“சில நிமிடங்களில் நடந்துவிட்ட சம்பவத்தை எப்படி  நேர் செய்ய போகிறோம்..?” என்ற பயம் அவளின் மனம் முழுதும். 
“மது.. என்னடா..?” என்று வசந்தா மகளின் கையை பற்றிகொண்டு லேசான பயத்துடன் கேட்க, 
“ஒன்னுமில்லைம்மா.. கொஞ்சம் டையர்டா இருக்கு..” என்று  கண் மூடியே சொன்னவளின் முகம் மிகவும் கசங்கிதான் போயிருந்தது. அதிலும் ப்ரேம் அறைந்த தடம் ஐந்து விரல்களோடு கன்றி போயிருக்க, வடிவேலுவின் பார்வை மருமகன் மேல் கோபத்துடன் படிந்தது. 
“அவரால் இன்னமும் மருமகன் மகளை அடித்ததை ஜீரணிக்கவே  முடியவில்லை. பிறந்ததில இருந்து இதுவரை என் பொண்ணை நான் விளையாட்டா கூட அடிச்சதில்லை, இவர் எப்படி அடிக்கலாம்..?”
“ என் பொண்ணை இவருக்கு கட்டி கொடுத்திட்டா இவர் என்ன வேணும்ன்னாலும் செய்வாரா..? என்று ப்ரேமையே ஆத்திரத்துடன் பார்த்து கொண்டிருக்க, ப்ரேமா மனைவியையே பார்த்தபடி  மிக தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான். 
“அவனால் இன்னமும் மனைவி செய்ததை நம்ப முடியவில்லை, எனக்கு தெரியாம எவ்வளவு செஞ்சிருக்கா..? ஹனிமூன் முடிஞ்சு வந்த கொஞ்ச நாள்லே அவகிட்ட கேட்டேனே.. உன்கிட்ட இருந்த பணம் எல்லாம் எங்க..? ஏன் வீட்ல காசு வாங்கினே, உன்னோட பேஷன் ட்ரீம் அவுஸ் என்னாச்சு..?”
“ஏன் இன்னமும் எதுவும் செய்யாம இருக்கன்னு, அப்போவும் உண்மையை சொல்லாமல்  ப்ரண்ட்க்கு காசு கொடுத்திருக்கேன், அவங்க கொடுத்துக்கு அப்பறம் ஸ்டார்ட் பண்ணிடலாம்ன்னு சொல்லி, என்கிட்ட இருந்து எல்லாம் மறைச்சி இப்படி என்னை..?”  என்று விரல்களை இறுக மூடி தன் கோவத்தை அடக்கியவன், தந்தையிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான். 
“மது..” என்ற சண்முகத்தின் குரலில் கண் திறந்த மது மாமனாரை பார்த்து எழ முயன்றாள். 
“இருக்கட்டும்மா.. நீ படு..” என்றவர், “நாங்க கிளம்பறோம்.. நீ உடம்பை பார்த்துக்கோம்மா..” என்று கனிவுடனும், குற்ற உணர்ச்சியுடனும் சொன்னார். 
“சரிங்க மாமா..” என்ற மதுவின் பார்வை தள்ளி நின்றிருந்த திவ்யாவின் மேலும், வாசலில் குறுகி போய் நின்றிருந்த வைஜயந்தியின் மேலும் படிந்தது. 
“நாங்க கிளம்பறோம் சம்மந்தி..” என்ற கை குவித்த சண்முகத்திடம், தானும் எழுந்து  கை குவித்த வடிவேலுவுக்கு கொதித்து கொண்டு வந்தது. 
ஆனால் சண்முகத்தின் உடல் நிலையையும், அவரின் நல்ல குணத்தையும் புரிந்து,  “சரிங்க சம்மந்தி..” என்று மரியாதையாகவே முடித்து கொண்டவர்,  வைஜெயந்தி பக்கம் திரும்பகூட வில்லை. அடுத்து வசந்தாவிடமும், ரவியிடமும்  சொல்லிக்கொண்ட சண்முகம், பெண்களை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.  
“ம்மா.. நீ  அண்ணனோட போய் அவங்களை அனுப்பிவச்சுட்டு வாம்மா..” என்ற மதுவின் குரலில் வடிவேலு அதிர்ப்தியோடு முகம் திருப்பிகொண்டார். 
வசந்தாவிற்கும் மருமகள் பிரசவத்திற்கு செல்லும் போது சரியாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் மகனை அழைத்து கொண்டு கீழே சென்றவர், மருமகளை முறையாக அனுப்பிவைக்க, திவ்யாவின் கண்களில்  கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 
மனைவியின் கண்ணீரை கண்ட ரவி காணாதது போல்  முகம் திருப்பிகொள்ள, முதல் முறையாக அவளுள் ஒரு வெறுமை, ஏக்கம், குற்ற உணர்ச்சி.. 
“நான் வரேன் அத்தை..” என்று வசந்தாவிடம் விடைபெற்ற திவ்யாவின் பார்வை கணவன் பக்கம் திரும்ப, அவன் அவளின் பக்கம் பார்க்கவே இல்லை, 
“இருக்கும் கோவத்தில் எதாவது பேசிவிடுவோம்..” என்ற பயமே ரவியை தடுக்க, திவ்யா அழுகையுடனே பிரசவத்திற்கு பயணமானாள்
“நாங்க வரோம்மா.. வரோம் மாப்பிள்ளை..” என்ற சண்முகத்திற்கு தலை ஆட்டிய வசந்தாவிற்கும், ரவிக்கும்  வைஜயந்தியின் பக்கம் திரும்ப கூட மனம் வரவில்லை. வைஜெயந்தியும்  யாரையும் நிமிர்ந்தே பார்க்க முடியாமல்  கருத்து போன முகத்துடன்  கிளம்பிவிட்டவர்கள் வீடு செல்ல காவேரி திவ்யாவிற்கு ஆரத்தி எடுத்தவர், 
“மதுமா  வரலையாம்மா..” என்று வைஜெயந்தியிடம் கேட்க, அவரால் என்ன சொல்ல முடியும்..? 
“காவேரி கேட்கிறா இல்லை, பதில் சொல்லு..” என்ற சண்முகத்தின் சீறலில் வைஜயந்தி கணவனை பயத்துடன் பார்த்தார். 
“சொல்லு.. அவ வரமாட்டா.. நான் என் மகன், மகள் வாழ்க்கையை ஒரே நாள்ல முடிச்சு வச்சு சாதனை செஞ்சிட்டு வந்திரூக்கேன், இந்த உலகத்திலே என்னை மாதிரி ஒரு அம்மாவை பார்க்கவே முடியாதுன்னு நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்லு..” என்று அதுவரை கட்டுப்படுத்தி வைத்து கொண்டிருந்த  கோவத்தை கரத்தின் மூலம்   மனைவியின் மேல் மொத்தமாக  இறக்கினார்.  
“ப்பா.. அடிக்காதீங்க.. அய்யா.. வேண்டாம், அடிக்காதீங்க..” என்று காவேரியும், திவ்யாவும்  தடுக்க தடுக்க  மனைவியை வெளுத்துவிட்டார். 
“இத்தனை வருஷம் உன்னை மாதிரி ஒரு பொம்பளையோட வாழ்ந்திருக்கேன்னு நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு, நீயெல்லாம் ஒரு தாயா..? உன்னோட சொந்த விருப்பு வெறுப்புக்கு பெத்த பிள்ளைங்க வாழ்க்கையை பலியாக்கிட்டியே..”
“சொந்த மகள் வளைகாப்புல இப்படி பிரச்சனை பண்ணிட்டு வந்து நிக்கிறியே, நீயெல்லாம் என்ன மனுஷுடி, மருமக உண்டாகியிருக்க சந்தோஷத்தை கூட கொண்டாட விடாம இப்படி அவங்களை பாடப்படுத்திட்டியே..”
“உன்னையெல்லாம் கொன்னா கூட என் ஆத்திரம் தீராது. போ.. எங்கேயாவது போய் தொலை.. என் கண் முன்னாடியே வராத..” என்று உச்சகட்ட வெறுப்புடன் மனைவியிடம் கத்திவிட்டு செல்ல, வைஜெயந்தி அழுது கரைந்தார்.
“ம்மா.. அவர் எங்க..?” என்று வசந்தா சொன்ன விஷயத்தில் கண்ணில் தேங்கிய நீருடன் கணவனை கேட்ட மகளை  வருத்தத்துடன் பார்த்தவர், 
“அவர் தோட்டத்திலே நிக்கிறார் மது..” என்றார். 
“ம்மா.. இது அவருக்கு தெரியுமா..?” என்று அவள் பிள்ளை பேறு பெற்ற விஷயத்தை எதிர்பார்ப்புடன் கேட்டாள். 
“தெரியும் மது..” என்று வசந்தா சொல்லவும், மது கண்ணில் கண்ணீர் தேங்கியது.  “தெரிந்துமா என் பக்கத்தில் வரவில்லை..” என்று மனது கதற, கண் மூடி கொண்டாள். 
“ப்ரேம்.. வீட்டுக்குள்ள வாங்க..” என்று தோட்டத்திலே  நின்றிருந்த ப்ரேமை ரவி கூப்பிட, 
“வரேன்.. நீங்க போங்க..” என்றவனின் தீவிர முகம் ரவிக்கு கவலையை கொடுத்தது. அவன் ஏதோ முடிவெடுத்துவிட்டான் என்று புரிய, தங்கையை நினைத்து வேதனை கொண்டான். 
“ப்ரேம்.. கொண்டு வந்துட்டேன்..” என்று வந்த சண்முகத்தை மகனிடம் கொடுத்த பேப்பரை பார்த்த ரவிக்கு ஏதோ புரிவது போல இருந்தது. 
“ப்ரேம்.. என்ன செய்ய போறீங்க..? ப்ளீஸ் இப்படி எல்லாம் செய்யாதீங்க, மதுவை கொஞ்சம் நினைச்சு பாருங்க.. அவ கண்டிப்பா  தாங்க மாட்டா, அப்பா பேசினது ரொம்ப தப்பு, அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், வேண்டாம் இப்படி செய்யாதீங்க..”
“மாமா.. ஏன் மாமா நீங்களாவது சொல்லலாம் இல்லை..” என்று சண்முகத்திடம் ஆதங்கத்துடன்  கேட்டான். 
“இல்லை மாப்பிள்ளை.. ஒரு புருஷனா, அப்பாவா நான் தோத்து போயிட்டேன், என்னால எதுவும் செய்ய முடியல.. இனி எதுவா இருந்தாலும் என் மகன் முடிவுதான்..” என்று அவர் விரக்தியுடன் முடித்துவிட, ரவி எதுவும் செய்ய இயலாதவனாக ப்ரேமின் பின் சென்றான். 
“உங்க அப்பாவை, உங்க தங்கச்சியை கூப்பிடுங்க ரவி..” என்று ஹாலில் நின்று கொண்டே சொன்ன ப்ரேமின் உறுதியில் ரவி பெரு மூச்சுடன் சென்று அழைத்து வந்தான். 
“ரவி.. இது கடையோட பத்திரம்..” என்று அவர்கள் வரவும்  ரவியிடம் நீட்ட வடிவேலுவும், மதுவும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர். அவன் செய்ய வருவது புரிய மதுவிற்குள் ஏதோ உடைந்தது. 
“ப்ரேம்.. ப்ளீஸ்..” என்று ரவி வாங்காமல் நிற்க, அங்கிருந்த டீபாய் மேல் வைத்தவன், 
“கடையை எடுத்துக்கோங்க.. இந்த வீட்டு பொண்ணோட உழைப்புல நாங்க வாழவேண்டாம், அவங்க என்ன செஞ்சங்களோ அதை திருப்பி கொடுத்துட்டு வாங்கிக்கிறோம்…”
“இல்லை நீங்களே வச்சிக்கிறதுன்னாலும் வச்சுக்கோங்க, உங்க வீட்டு  பொண்ணோட உழைப்புல ஓடுன கடைல எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எப்படின்னாலும் சரிதான்..”
“நான் அந்த கடை மேல கொஞ்சம் லோன் போட்டிருக்கேன், பாதி அடைச்சிட்டேன், இன்னும் பாதி இருக்கு, நீங்க எடுத்துகிறதா இருந்தா சொல்லுங்க, மீதி லோனையும் அடைச்சிடுறேன்.. முடிவு நீங்கதான் சொல்லணும்..” என்று முற்றிலும் யாரோ போல் பேசும் கணவனை மது வெறித்து பார்த்தாள். 
சில மணி நேரங்களுக்கு  முன்பு வரை  இருந்த என்னுடைய கணவன் இல்லை இது.. என்று மனதிற்கு புரிய மதுவிடம் ஓர் விறைப்பு
“மாப்பிள்ளை.. என்ன இது..? வேண்டாம் மாப்பிள்ளை.. இப்படி செய்யாதீங்க, மதுவோட அப்பா பேசினது ரொம்ப தப்புதான், அதுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம், வேண்டாம் மாப்பிள்ளை..” என்ற வசந்தாவின் வேண்டுகோளும் ப்ரேம் எனும் மனிதனை சென்றடையவே இல்லை.
“எனக்கு இதெல்லாம் தெரியாது சம்மந்தி..  தெரிஞ்சிருந்தா நான் விட்டிருக்கவே மாட்டேன், குமாருக்கு தெரிஞ்சவர், அதனாலதான் நமக்கு இந்த சலுகை, புது புது மெட்டீரியல் எல்லாம் கிடைக்குதுன்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள  மதுவோட கஷ்டம் இருக்கும்ன்னு தெரியாது..” என்று சண்முகம் சொல்ல, வடிவேலுவுக்கு எப்படியோ ஆகிவிட்டது. 
“ஐயோ.. சம்மந்தி இப்படி எல்லாம் பேசாதீங்க, நான் அது கோவத்துல அப்படி பேசிட்டேன்,  பணத்தை வச்சு உங்க வீட்டம்மா எங்களை பேசின கோவத்துல பேசிட்டேன், மத்தபடி மனசுல இருந்து இல்லை..” என்று வடிவேலு சண்முகத்தின் நிலை உணர்ந்து மனதார சொன்னார். 
“விடுங்க சம்மந்தி, இது எல்லாம் நடக்கணும்ன்னு இருந்திருக்கு..” என்ற சண்முகத்திடம் டீபாய் மேல் இருந்த பத்திரத்தை எடுத்து கொடுத்த வடிவேலு, 
“இதெல்லாம் வேண்டாம் சம்மந்தி..” என்றார். 
“இருக்கட்டும் சம்மந்தி.. ப்ரேம் சொன்ன மாதிரி பணத்தை கொடுத்துட்டே வாங்கிக்கிறோம், இல்லை நீங்களே கூட எடுத்துகோங்க, எப்படியும் என்னால இனி பிஸ்னஸ் நடத்த முடியாது..” என்று சண்முகம் மனது விட்டு பேச எல்லோருக்கும் மனம் கனமானது. 
யாரோ யாரையோ பேச காயப்பட்டது  மற்றவர்கள் தான், காயப்பட்டதும் மட்டுமில்லாமல் பாதிக்க பட்டதும் தான்..
“ப்ரேம்.. வேண்டாம், கொஞ்சம் யோசிங்க..”  என்ற ரவியிடம், 
“இதை பத்தி எதுவும் பேசாதீங்க ரவி, மாத்தமுடியாது.. உங்க வீட்டு பொண்ணை உழைப்பை கொடுத்திட்டு நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்..” என்று ப்ரேம் இறுதியாக  சொல்லிவிட, எல்லோரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, மது  வெறுமையாக பார்த்தாள். 
“என்ன..? என்ன..? சொல்றீங்க ப்ரேம்.. இதுசரியில்லை..” என்று ரவி சற்று கோவத்துடனே சொல்ல, ப்ரேம் இரும்பாய் நின்றவன், 
“நான் சொல்லலை ரவி.. உங்க அப்பாதான்  சொன்னார், அவர் பொண்ணோட உழைப்புல தான் நாங்களும், எங்க கடையையும்ன்னு.. அதான் அவர் பொண்ணோடதை கொடுத்திட்டு என் பொண்டாட்டியை கூட்டிக்கிறேன்..” என உறுதியுடன் சொல்லிவிட, வடிவேலு மருமகனை கோவத்தோடே பார்த்தார். 
“இங்க பாரு ரவி.. நான் என் பொண்ணை பேசவும்தான் அப்படி பேசினேன், அதுக்காக இப்படி எல்லாம் செய்ய வேண்டாம்ன்னு சொல்லு..” என்று மகனை  வைத்து பேச, ப்ரேம்  உதடு வளைத்து சிரித்தவன், 
“அது அவரோட பொண்ணு மட்டுமில்லை, என்னோட பொண்டாட்டியும் தான்னு உங்க அப்பாக்கு ஞாபகம் இருக்கான்னு கேளுங்க  ரவி..” என்றான். 
“அது அவருக்கு ஞாபகம் இருக்கிறது இருக்கட்டும், உங்களுக்கு முதல்ல ஞாபகம் இருக்கா..?” என்ற மதுவின் ஆத்திர குரலில் எல்லோரும் அவளையே பார்த்தனர். ப்ரேமை தவிர. அவன்தான் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. 
“உங்களைதான் கேட்கிறேன் மிஸ்டர் ப்ரேம்.. நான் உங்க பொண்டாட்டின்னு உங்களுக்கு முதல்ல ஞாபகம் இருக்கா..?” என்று மறுபடியும் அதே கேள்வியை கேட்டவாறே கணவனை நெருங்க, எல்லோரும் உள்ளே சென்றுவிட்டனர்.  
“என்னடி பேர் சொல்லி கூப்பிடுற..? நொறுக்கிருவேன்..” என்ற ப்ரேம்  மனைவியை கடுமையாக முறைத்தான். 
“முதல்ல  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க,  அப்பறம்  நொறுக்கலாம்..” என்று மது விடாமல் கேட்க, 
“அது ஞாபகம் இருக்க போய்தான் உன் முகத்தை இன்னும் பேக்காம இருக்கேன்..” என்று கொதித்த  ப்ரேமின் கையை பிடித்த மது சட்டென தன் வயிற்றின் மேல் வைத்துவிட, ப்ரேமின் கை நடுங்கவே செய்தது.

Advertisement