Advertisement

அவளே என் பிரபாவம் 17
“இவங்க உன் ப்ரண்ட்தானே மித்ரா..?” என்று ராஜியை கை காட்டி  ப்ரேம் கேட்ட கேள்வியில் அதிர்ந்த மதுமித்ரா, பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட, அவளை கூர்மையாக பார்த்த ப்ரேம், 
“மித்ரா..” என்று அதட்டினான். 
“அது.. உங்களுக்கு எப்படி..?” என்று மது கணவனின் அதட்டலில்  திணறும் போதே, 
“ராஜி மது ப்ரண்ட்ன்னு தான் உனக்கெப்படிடா தெரியும்..?” என்று குமார் வேகத்துடன் நண்பனிடம் கேட்டுவிட்டான். குமாரின் வேககேள்வியில் மனைவியிடம் இருந்து தன் பார்வையை திருப்பிய ப்ரேம், 
“எனக்கெப்படி தெரியும்ன்னா..? இது  என்ன கேள்வி குமார்..?” என்றவனுக்கு அவர்களை பதட்டத்தில் எதோ  சரியில்லாததாக தோன்ற ஆரம்பித்தது. 
“இல்லை.. ராஜி உங்களோட மேரேஜூக்கு வரல, அதான் எப்படி தெரியும்..” என்று குமார் தடுமாற்றத்தை மறைத்து இயல்பாக கேட்பது போல கேட்கவும், ப்ரேம் முதல் முறையாக எல்லோரையும் சந்தேகத்துடன் பார்த்தான். 
“தம்பி.. ஒரு முக்கியமான போன் வந்துடுச்சு..” என்று சந்திரன் வரவும், ப்ரேம் அவரிடம் மரியாதை நிமித்தமாக பேச ஆரம்பித்துவிட,  மது ஒரு வித அவசரத்துடன் கிட்சனுக்குள் ஓடினாள்.  
அவளை தொடர்ந்து ராஜியும் ப்ரேமின் லேசர் பார்வையில் இருந்து தப்பிக்க மதுவிடம் ஓடிவிட, குமார் மட்டும் நண்பனின் குதறும் பார்வையை சமாளிக்க முடியாமல் முள் மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தான்.  
அடுத்த சில நிமிடங்கள் மது அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கழிய,  விருந்தினர்கள் கிளம்ப ஆயத்தமாகினர். 
“விருந்து ரொம்ப  நல்லா இருந்ததும்மா.. நாங்க வரோம்..” என்று மதுவுடன் விடைபெற்ற சந்திரன்,  
“தம்பி.. அப்போ நாங்க கிளம்பறோம், ரொம்ப சந்தோஷம், நீங்களும் நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரணும்..” என்ற அழைப்புடன் கைகுவித்து விடைபெற்றவரிடம், தானும் மரியாதையாக கை குவித்த ப்ரேம், 
“நீங்க வந்ததுல ரொம்ப மகிழ்ச்சி  சார்..” என்று சாதாரண அழைப்பாக முடித்துவிட்டான். 
“வரோம்ண்ணா..” என்ற ராஜியிடமும், “சரி..” என்ற ஒற்றை தலை அசைப்புடன் விடை கொடுத்தவன், நண்பனை பார்க்கவே இல்லை, 
அவர்களின் உதவிக்கு நன்றி சொல்லும் அழைப்பாக தான் அவர்களை வீடு வரை வருத்தி அழைத்திருந்தான். ஆனால்  ஏனோ  இறுதி வரை அவர்களுக்கு நன்றி சொல்ல மனம் வராததால் அமைதியாகவே இருந்துகொண்டான். அதை மதுவுமே உணர்ந்திருக்க, மேலும் பதட்டம் கூடியது. 
விருந்தினர்கள் கிளம்பிவிடவும், ப்ரேம் கண் மூடி சோபாவில் சாய்ந்துவிட, மது  மிக தீவிரமாக யோசித்தவாறே அங்கேயே நின்றாள். 
“எல்லா  சொல்லிடலாமா..? என்ன சொல்லுவார்..? கோபவப்படுவாரா..?” என்ற மதுவின் யோசனையை கலைத்தது ப்ரேமின் கேள்வி,
“சோ.. அவங்க உன்னோட ரெக்கமட்டேஷன்..” என்று சில நொடி மௌனங்களுக்கு பிறகு கணீரென ஒலித்த  ப்ரேமின் கேள்வியில் மது என்ன உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஏனெனில் இந்த சில மணி நேரங்களில் அவள் எடுத்திருந்த முடிவே  வேறு.
என்ன..? ரெகமெண்ட்டா..? அப்போ நாந்தான் இவங்களை ரெகமண்ட் செஞ்சேன்னு மட்டும் நினைச்சிகிட்டாரோ..? இப்போ என்ன செய்ய..? இப்படியே விட்டுடுவோமா..? இல்லை எல்லா சொல்லிடலாமா..?”  என்று மது அவனின் கேள்விக்கு பதில் சொல்ல யோசித்து கொண்டிருக்க, கண் திறந்து மனைவியை கோபத்துடன் பார்த்தவன்,  
“மித்ரா.. உன்கிட்ட தானே கேட்கிறேன், நீதான் அவங்களை  நம்ம கடைக்கு ஏற்பாடு செஞ்சியா..?” என்று அதட்டலாக கேட்டான். 
“ஆமா.. அது மட்டுமில்லாமல்..” என்று மது எல்லாம் சொல்லிவிட தயாரான நேரம், அவளை நெருங்கி வந்தவன், 
“ஏன் என்கிட்ட இத்தனை நாளா சொல்லலை..?” என்று முகம் இறுக கேட்டான். அவனின் முக இறுக்கத்திலும்,  நெருக்கத்திலும் மது கணவனை  லேசான அச்சத்துடன் பார்க்க, அவளின் முழங்கையை வலுவாக பற்றியவன், 
“ஏன் மித்ரா என்கிட்ட சொல்லலை..?” என்று சீறினான். 
“இல்லை.. அது நீங்க கோவப்படுவீங்கன்னு..”
“கண்டிப்பா கோவப்படுவேன்தான், ஏன் நான் சில விஷயங்கள் ரொம்ப பார்ப்பேன்னு உனக்கு  தெரியாதா..?”  என்று கண்டிப்புடன் கேட்க, 
“அது தெரிஞ்சதாலதானே சொல்ல பயமா இருக்கு..” என்று  மனதுள் புலம்பியவள், 
“தெரியும்..” என்று சொல்ல, அவளை விட்டு விலகி நின்றவன், 
“இங்க பாரு மித்ரா.. எந்த சூழ்நிலையிலும் நான் என்னோட  தன்மானத்தை, சுயமரியாதையை யார்கிட்டேயும் விட்டு  கொடுத்தது இல்லை, இனியும் அப்படித்தான்..”
“முக்கியமா உங்க அப்பா முன்னாடி  நான் என்னோட நிலையை விட்டு ஒரு பர்சன்ட் இறங்க விரும்பல, அவர் ஒருவார்த்தை இதை எல்லாம் சொல்லி காமிச்சிட்டா என்னால அதை பேர் பண்ணவே முடியாது..” என்று இறுக்கத்துடன் சொன்னான்.
“ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறீங்க..? அப்பா அதுபோல எல்லாம் நடந்துக்க மாட்டார்..”  என்று மது சொல்லவும், அவளை மிக தீவிரமாக பார்த்தவன், 
“உனக்கு மிஸ்டர் வடிவேலுவை உங்க அப்பாவா மட்டும்தான் தெரியும், என்னோட மாமனாரா தெரியாது, எங்களுக்குள்ள இருக்கிறது ஒருவகையான போராட்டம், அதுல நான் அவரை தோற்கடிக்கணும்ன்னு நினைக்கல, அதே சமயம் அவர்கிட்ட தோற்க சுத்தமாவே விரும்பல..”
“ஆனா இனி இதெல்லாம் உன் கையிலதான் இருக்கு, நான் என்னோட வாழ்க்கையை முழுசா  உன்கிட்ட மட்டும்தான்  கொடுத்திருக்கேன், என்னை மேல ஏத்துறதும் நீதான், கீழ இறக்க போறதும் நீயாதான் இருப்ப.. இதை மட்டும்  எப்போவும் மனசுல வச்சுக்க..” என்று சொல்லி சென்றுவிட மது மனதில் லேசான திகில் பிறந்தது. 
“சும்மா ரெகமண்ட்டுக்காகவே இவ்வளவு பேசுறாரு, முழு உண்மை தெரிஞ்சா..?”  நினைக்கவே மதுவிற்கு பதறியது. 
**********************************
“திவ்யா.. நான் கடை வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்..” என்று வந்த நின்ற கணவனை சலிப்புடன் பார்த்த மனைவி, 
“நேத்துத்தானே பெங்களூரிலிருந்து வந்தோம், அதுக்குள்ள கடைக்கு போகணுமா..? என்னோட இருக்கலாம் இல்லை..” என்று முகம் தூக்கி வைத்தாள். 
“ம்ப்ச்.. ஒருநாள் கூட விடாம அப்பாதான்  தினமும் கடைக்கு பார்த்துக்கணும்,  நான் இப்படி லீவுக்கு வரும்போது தான் அவருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்.. நான் போய்ட்டு சீக்கிரமே வரப்பார்க்கிறேன்..” என்று ரவி பொறுமையாகவே விளக்கினான். 
“க்கும்.. வந்துட்டாலும்..” என்று நொடித்த திவ்யா கணவனுடன் கீழிறங்கி வந்தவளுக்கு மதுவின் ரூம் பால்கனியில் இருந்த ஊஞ்சல் கண்ணில் பட, கணவனின் கையை பிடித்தாள். 
“என்ன திவ்யா..?” என்று மனைவியின் பிடியில் ரவி கேட்க, ஊஞ்சலை கை காட்டியவள், 
“அந்த ஊஞ்சலை கழட்டி கொண்டு போய்  நம்மளோட ரூம்ல மாட்ட சொல்லுங்க..” என்றாள். 
“ஆரம்பிச்சிட்டியா..?” என்ற ரவியை  கடுப்பாக பார்த்த திவ்யா, 
“அப்படி என்ன நான் கேட்க கூடாததை கேட்டுட்டேன், சும்மா தொங்கிட்டு இருக்கிற ஊஞ்சலை தானே கேட்டேன், அதுகூட தப்பா..?  இந்த வீட்ல எனக்குன்னு எதுவும் கிடையாதா..?” என்று ஆற்றாமையுடன் கேட்ட திவ்யாவிற்கு பதில் வடிவேலுவிடம் இருந்து வந்தது. 
“இந்த வீட்ல உனக்குன்னு எல்லாம் இருக்கு மருமகளே, ஆனா அது எல்லாம் உரிமை கொண்டாட இல்லை..” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, ரவி திவ்யா இருவரும் வேகமாக கீழிறங்கி வந்தனர். 
“ப்பா..” என்ற ரவியை கை காட்டி நிறுத்தியவர், 
“உனக்கு வேற ஊஞ்சல் ஆர்டெர் கொடுக்கிறேன்மா,  இன்னிக்கே வந்திரும்..” என்று வடிவேலு அவளின் நிலையை உணர்ந்து உண்மையான பாசத்துடன் சொல்ல, புரிந்து கொள்ள முடியாத திவ்யா, 
“அந்த ஊஞ்சல் சும்மாதானே இருக்கு மாமா.. கழட்டுனாதான் என்ன..?”  என்று கேட்டுவிட்டாள். 
“சும்மா இருந்தா..?” என்ற வடிவேலு மருமகளை கண்டிப்புடன் பார்த்தவர், 
“இதே ரவிக்கு ஒரு தம்பி இருந்தா நீ இப்படி கேட்டிருப்பியா மருமகளே..?” என்று கேட்டார். 
“அது.. அது..” என்று திவ்யா பதில் சொல்ல முடியாமால் திணறியவள், கணவனை பார்க்க, அவனோ எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்பது போல் நின்றிருந்தான். 
“கேட்க மாட்டா இல்லை, அப்போ இனி மதுவையும் அப்படியே நினைச்சிக்கோ, அவளும் இந்த வீட்டு வாரிசுதான், அவளுக்கும் எல்லா உரிமையும் இருக்கு, அவளோடதுன்னு இருக்கிறது அவளுக்கு மட்டும்தான், அவ இங்கிருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி.. அதை மாத்தமுடியாது, மாத்தவும் நான் விடமாட்டேன்..”
“ இல்லை.. அப்படி யெல்லாம் முடியாதுன்னு சொன்னா, இப்போவே எல்லாத்தையும் ரவிக்கும், மதுவுக்கும் சரிக்கு சமமா பிரிச்சு எழுதிருவோம், என்ன சொல்ற ரவி..?” என்று மகனிடம் வேறு கேட்டார் மனிதர். மகனும் அவருக்கு சளைத்தவன் இல்லை என்பது போல, 
“எப்போ கையெழுத்து போடணும்ப்பா..” என்று கேட்டு வைத்தான். 
“என்னங்க இது..?, புள்ளைதாச்சு பொண்ணு ஏதோ ஆசைப்பட்டு கேட்டுட்டா.. விடுங்க..”  என்று வசந்தாதான் கணவனை அமைதிபடுத்தி அழைத்து செல்ல, திவ்யா கணவனை ஆத்திரத்துடன் பார்த்தவள், 
“நீங்க எப்போதான் எனக்கு புருஷனா இருப்பீங்க..?” என்று வெடித்தாள். 
“நீ எப்போ உன்னோட இந்த கிறுக்கு தனத்தை எல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு என்னோட பொண்டாட்டியா இருக்கிறியோ அப்போ..” என்று நக்கலாக சொல்ல, திவ்யாவின் முகம் கருத்து போனது.

Advertisement