Advertisement

அவளே என் பிரபாவம் 15
“எதுக்கு இப்போ  முகத்தை இப்படி  தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க..?” என்று சண்முகம் சலிப்பாக வைஜெயந்தியிடம் கேட்டார். 
“பின்ன..? உங்க மகன் பொண்டாட்டியோட டார்ஜீலிங் கிளம்பி போய் முழுசா ரெண்டு நாள் ஆகிடுச்சு, இப்போவரைக்கும்  ஒத்த வார்த்தை கூட நம்மகிட்ட போன் செஞ்சு  பேசலை..” என்று புலம்ப, அவரை எரிச்சலாக பார்த்த சண்முகம், 
“அதான் மது  பேசினா இல்லை, போதாதா..?” என்றார். 
“அவ பேசினா..? நான் கேட்டது என் மகனை தான்..? ஆனா அவன்தான் இப்போ முழுசா மாறிட்டேனா..? எப்போ அந்த மது என் மகன் வாழ்க்கையில வந்தாளோ அப்பவே அவன் நம்மளை விட்டு விலக ஆரம்பிச்சுட்டான்..”, 
“இதோ இப்போகூட பாருங்க நமக்கு  பேசணுங்கிற  நினைப்பே இல்லாம எப்படி இருக்கான்ன்னு, எல்லாம் யாரால..? அந்த மதுவாலாத்தான்..” என்று வெறுப்புடன் சொல்ல, அவரை கோபத்துடன் பார்த்த சண்முகம், 
“போதும் ஜெயா.. நீ ரொம்ப அதிகமா பேசுற.. இதுக்கு முன்னாடி மட்டும் உன் மகன் உனக்கு தினமும்  போன் செஞ்சு  பேசிட்டிருந்தானா..? இப்போ வந்து மது அவன் கையை பிடிச்சு நிறுத்த..?” என்று சிடுசிடுப்புடன் கேட்டார். 
புதிதாக திருமணம் முடிந்த மகன்களை பெற்ற நிறைய தாய்மார்களின் எண்ணம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. அதற்கு முன்னமும் மகன் வாரத்துக்கு ஒரு முறை பேசியிருந்தால் கூட அது அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது, 
ஆனால் அதுவே அவனுக்கு திருமணம் முடிந்துவிட்டால் எங்கே மகன் நம்மை மறந்துவிடுவானோ என்கிற பயமே அவர்களின் இது போன்ற எண்ணத்திற்கு வித்தாகிறது. வைஜெயந்தியும் அதற்கு விதிவிலக்கல்ல.. இன்னும் சொல்ல போனால் இவர் மற்றவர்களைவிட கொஞ்சம் அதிகபடியே தான். 
“அதுக்காக..? இப்போ என்கூட பேசக்கூடாதா என்ன..? இவ போன் பேசும்போது அப்படியே என் மகன்கிட்டேயும் கொடுத்திக்கலாம் இல்லை, அவனும் நம்மகிட்ட ஒரு ரெண்டுவார்த்தை பேசியிருப்பான் இல்லை, ஆனா இவதான் அப்படி எல்லாம் கொடுக்க மாட்டாளே, எப்படி கொடுப்பா..? என்று அவருக்கே அவரே பேசிகொண்டிருக்க, தலையில் அடித்துகொண்ட சண்முகம், 
“உன் மகன் தூங்கிட்டிருக்கான்னு மது சொல்லத்தானே செஞ்சா, அப்படியும் எல்லாத்துக்கும் அவளையே சொல்லிட்டிருந்தா என்ன அர்த்தம்..?” 
“க்கும்.. உங்களுக்கு அவளைபத்தி ஒன்னும் தெரியாதுங்க, அவ அப்படித்தான்..” என்று விடாமல் பேசும் மனைவியை கண்டிப்புடன்  பார்த்த சண்முகம், 
“எனக்கு மதுவை பத்தி  வேணும்ன்னா ஒன்னும்  தெரியாம இருக்கலாம், ஆனா உன் மகனை பத்தி நல்லா தெரியும், அவனுக்கு  மட்டும் நீ இப்படி மதுவை பத்தி பேசிட்டிருக்கிறது தெரிஞ்சது அவ்வளவுதான், அப்பறம் அவன்தான் பேசுவான், நீ காதுகுளிர கேட்டிட்டு இருக்க வேண்டியதுதான்..” 
“அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்களா..? மதுவா..?ன்னா வந்தா நான் என்ன முடிவெடுப்பேன்னு எனக்கே தெரியாதுன்னு  தான் சொல்லயிருக்கான், அதை செயல்ல காமிக்க வச்சிராத, அப்பறம் உனக்குத்தான் நஷ்டம்..” என்று எச்சரிக்கையாக சொல்ல, வைஜயந்தியின் முகத்தில் லேசான பயம் தோன்றாமல் இல்லை, 
அவருக்குள்ளும் அந்த பயம் இருக்கவே தான் இருக்கவேதான் திருமணத்தில் எந்தவிதமான பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்துகொண்டார். அதையே இப்போது ஞாபகப்படுத்திய சண்முகம், 
“மருமகளை உயிருக்கு உயிரா வளர்த்த அவங்க அப்பாவையே மகளை நெருங்கவிடாம அடைகாக்கிறான் உன் மகன், நீயெல்லாம் அவனுக்கு எம்மாத்திரம்..? பார்த்து நடந்துக்கோ..” என்று சென்றுவிட, வைஜெயந்தி தாங்கமுடியாமல் மகளுக்கு போன் செய்து இதையே சொல்லி புலம்ப, மகளும், 
“ம்மா.. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு எப்போவே தெரியும், நான்தான் உனக்கு முதல்லே சொன்னேன் இல்லை, அண்ணன்  முன்ன மாதிரி இல்லை, மாறிடுச்சுன்னு..” என்று அவளும் அன்னைக்கு ஏத்துக்கொண்டு பேசினாள். 
“என் மகன் எங்க மாறினான்..? அவ தான் மாத்திட்டா..?” என்று வெறுப்புடன் மதுவை சொன்னவர், 
“அவமட்டும் நல்லவளாட்டம் போன் செஞ்சு பேசிட்டு என் மகனை பேசவே விடலையே, இவ எங்ககிட்ட பேசலன்னு யார் அழுதா..?” என்று தொடர்ந்து அம்மாவும், மகளும் மதுவையே தான் பேசினார்கள். 
“ம்மா.. நீ கவலைப்படாதம்மா, அண்ணன் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த மதுவை பத்தி கண்டிப்பா  புரிஞ்சுப்பான், விடுங்க..” என்று ஆறுதல் போல் சொல்லவிட்டு வைத்தவள், பால்கனியில் இருந்து ரூமிற்குள் வர, அங்கு ரவி இவளையே தீயாக எரித்துகொண்டிருந்தான். 
“அய்யயோ.. இவர் இன்னும் கிளம்பலையா..?” என்ற பயத்துடன் கணவனை பார்த்தவள், 
“நீங்க..? நீங்க எப்போ வந்தீங்க..?” என்று கேட்டாள். 
“ம்ம்.. என் தங்கச்சியை நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து  பாராட்டா ஆரம்பிச்சீங்களே அப்போவே  வந்துட்டேன்..” என்று வார்த்தைகள் மிகவும் சூடாக வந்து விழ, திவ்யா கணவனை அச்சத்துடன் பார்த்தாள். 
“எப்படி..? எப்படி..? என் தங்கச்சி உங்க அண்ணனை மாத்திட்டாளா..? அவளை பத்தி உங்க அண்ணன் புரிஞ்சுப்பானா..? எப்படி இப்போ உன்னைபத்தி நான் புரிஞ்சுகிற மாதிரியா..?” என்று கொதிப்புடன் கேட்டவன், 
“நீ மாறவே மாட்ட இல்லை, நேத்துதானே உன்னை உட்காரவச்சு அவ்வளவு அட்வைஸ் பண்ணினேன், வேண்டாம் திவி, நமக்கு இந்த பேமிலி பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம், நமக்குன்னு ஒரு குடும்பம் ஆகிருச்சு, நம்மை நம்பி ஒரு பேபி வர போகுது, அந்த பேபிக்கு நாமதான் ரோல்மாடலா இருக்கனும்..”
“நம்ம பேபிக்கு ஒரு செக்கியூர்ட் லைஃபை நாம்தான் கொடுக்கணும், அதுக்கு என்ன செய்ய..? எப்படி செய்யன்னு..? பிளான் பண்ணனும்.. நம்மளோட அடுத்த கட்ட வளர்ச்சியை பார்க்கணும், இப்படி எவ்வளவு பேசினேன். எல்லாத்துக்கும் ரொம்ப நல்லவ மாதிரி தலையை  தலையை  ஆட்டிட்டு இங்க  உன் இஷ்டம் போல தான்  செஞ்சிட்டிருக்க..”
“அதுவும் நான் மதுவை பத்தி பேசாத, அவ லைப்ல தலையிடாதன்னு எவ்வளவு  கிளியரா சொன்னேன், ஆனா நீ இன்னும் அவளை பத்திதான் பேசிட்டிருக்கே, சரியில்லை திவ்யா..” 
“உனக்கு நான் பலமுறை வார்னிங் கொடுத்திட்டேன், இப்போவும் சொல்றேன், மது விஷயத்துல தேவையில்லாம பேசிட்டிருக்காத, அவ உங்களை மாதிரி கிடையாது, நீங்க அவளை சீண்டிகிட்டே இருந்தா அவ உங்களுக்கு பதில் சொல்ல மாட்டா, கண்டுக்காம ஒதுங்கி போயிடுவா..”, 
“ஆனா  அவளுக்கும் சேர்த்து உங்க அண்ணனும், எங்க அப்பாவும் உங்களுக்கு பதில் சொல்லுவாங்க,  அதுவும் நடுமண்டையில் இறங்குற மாதிரி சொல்லுவாங்க..”
“நான் இல்லை அவங்க உனக்கு  உட்கார்ந்து பொறுமையா அட்வைஸ் செஞ்சிட்டிருக்க, அவங்க ரெண்டுபேருமே வேறமாதிரி.. பார்த்து நடந்துக்கோ, அப்பறம் நான் எல்லாம் எதுவும்  பேசமுடியாது, பேசவும் மாட்டேன்..”
“ஏன்னா எனக்கு என் தங்கச்சியை பத்தி நல்லா தெரியும், உங்களை பத்தியும் நல்லா  தெரியும்,  பார்த்து நடந்துக்கோ, இனியும் மது விஷயத்துல தேவையில்லாம தலையிட மாட்டேன்னு நினைக்கிறன்..”
“இல்லை  உங்க அம்மா மாதிரியே நீயும்  நான் அப்படித்தான்  தலையிடுவேன், பேசுவேன்னா வர்றதை சமாளிக்க ரெடியா இருந்துக்கோ.. அவ்வளவுதான்.. இதுதான் நான் உனக்கு கொடுக்கிற பைனல் வார்னிங்..” என்று மிகவும் கண்டிப்புடன் உறுதியாக சொல்லிவிட, திவ்யா அசையாமல் நின்றுவிட்டாள்.
“ப்பா.. இன்னிக்கு ஈவினிங் ரொட்டின் செக்அப் இருக்கு, வேலையில மறந்துராமா கிளம்பிடனும், செக்அப் முடிச்சிட்டு  டாக்டர் என்ன சொன்னார்ன்னு எனக்கு போன் பண்ணி சொல்லணும்..” என்று மது போன் செய்து வடிவேலுவிடம் சொல்ல, தந்தையின் முகம் முழுவதும் புன்னகைதான். 
“கண்டிப்பா போறேன்டா, டாக்டர் சொல்றதையும் கேட்டுட்டுவந்து உனக்கு சொல்றேன்..” என்று மகிழ்வுடன் சொன்னவர், 
“அப்பறம் மது அங்க கிளைமேட்  எப்படி இருக்கு..? குளிர் அதிகமில்லையே, வெளியே எல்லாம் ரொம்ப போகவேண்டாம், கோட்டை கழட்டாத மது, உனக்கு நிறைய குளிர் தாங்காது, அப்பப்போ  இஞ்சி டீ குடி..” என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்க, கடுப்பான வசந்தா, 
“அதெல்லாம் மாப்பிள்ளை பார்த்துப்பார்..” என்று நொடித்தார். 
“அப்படி பார்த்துகிறார் உன் மாப்பிள்ளை, என் மகளுக்கு இவ்வளவு குளிர் தாங்குமா..? இங்க பக்கத்துல எவ்வளவு நல்ல இடம் எல்லாம் இருக்கு.. அங்கெல்லாம் போறதை விட்டுட்டு எவ்வளவு  தூரத்துக்கு கூட்டிட்டு போயிருக்கார் பாரு..” என்று ப்ரேமை பேசிகொண்டே செல்ல, அவரிடம் இருந்து போனை பறித்த  வசந்தா, 
“ஏன் இங்க பக்கத்துல எங்கேயாவது கூட்டிட்டு போயிருந்தா நீங்களும் அவங்களோடே போலாம்ன்னு பார்த்தீங்களாக்கும்..” என்று காய்ந்தார். 
“ஏய்.. அறிவு கெட்டவளே, என்ன பேசிட்டிருக்க..? நான் போய் அப்படி போவேனா..?” என்று வடிவேலு கோவத்தோடு  மனைவியை அதட்டினார். 
“ரொம்ப நல்லது, அந்தளவாவது தெரிஞ்சிருக்கே..” என்று நக்கலாக சொன்ன வசந்தா, 
“மது.. நீ உங்க அப்பாகிட்ட கொஞ்சினது போதும், சும்மா சும்மா போன் செய்யாத, மாப்பிள்ளை கோவப்பட போறாரு..?” என்று ப்ரேமின் குணம் அறிந்து வசந்தா சொல்ல, 
“என்ன..?  என்கிட்ட என் மகள் பேசக்கூடாதா..? அதெப்படி அவர் அப்படி சொல்லலாம்..?” என்று வடிவேலு கோவத்தோடு  சண்டையிட  ஆரம்பித்தார். 
“ம்மா.. ஏன் இப்படி ..? அவர் அப்படி எல்லாம் எதுவும் சொல்லலை..” என்று மது சொல்ல, 
“நம்பிட்டேன் மகளே.. எனக்கு  என் மாப்பிள்ளையையும் தெரியும், என் புருஷனையும் தெரியும், நீ போனை வச்சிட்டு வேலையை பாரு..” என்று போனை வைத்துவிட, மது லேசான சிரிப்புடன் போன் பேசிக்கொண்டிருந்த ப்ரேமிடம் வந்தாள். 
“சரி குமாரு நீ விசாரிச்சிட்டு எனக்கு போன் பண்ணு..” என்று வைத்தவன்,  

Advertisement