Advertisement

அவளே என் பிரபாவம் 12
“பொண்ணை அழைச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரலை தொடர்ந்து மதுமித்ரா பூரண மணப்பெண் அலங்காரத்தில் மலர்ந்த முகத்துடன் மணமேடையை நோக்கி வர, ப்ரேமின் பார்வை அவள் மேல் அச்சடித்து நின்றது. 
ப்ரேம் அவளுக்காக பார்த்து பார்த்து நெய்ய சொல்லியிருந்த மயில் கழுத்து வண்ண காஞ்சிப்பட்டும், வடிவேலு மகளுக்காக ஓடி ஓடி வாங்கியிருந்த ராணி அலங்கார நகைகளும் அவளை ஒரு ராணியாகவே ஜொலிக்க வைக்க, எல்லோரின் கண்களும் இமைக்க மறந்து அவள் மேலே நிலைத்தது. 
வசந்தியும், மேனகாவும் மணப்பெண்ணை தாங்கி அழைத்துவர, லேசான பதட்ட நடையும், அளவில்லா மகிழ்ச்சியில் மலர்ந்திருந்த முகமுமாக நடந்து வந்தவள், முதலில் சென்று நின்றது தன் தந்தையிடத்தில்தான். 
“ப்பா.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று இரு கைகளையும் குவித்து  வணங்கியவள், அவர் காலில் விழுக, வடிவேலு கண்ணில் நிறைந்த நீருடன் மனதில் தேவாதி தேவர்களை வணங்கியவாறே, 
“ரொம்ப ரொம்ப நல்லா இருப்படா, எல்லா செல்வமும் கிடைச்சு, கடவுள் அருளால நிறைஞ்ச வாழ்க்கையையும், நீடித்த ஆயுளையும் பெற்று  வாழணும்..” என்று ஆசீர்வதித்து மகளை தூக்கி கொண்டார். 
தந்தையின் வாழ்த்திலும், கண்ணில் அவளுக்காக தேங்கி நின்ற வைர துளியிலும், எல்லையில்லா பாசத்தை கண்ட மகள்,  அவரின் கையை இறுக்கமாக பற்றி கொள்ள, தந்தையும் மகளின் கையை தன் கையோடு பிணைந்து தானே அவளை  மணமேடைக்கு அழைத்து சென்று ப்ரேமின் பக்கத்தில் அமரவைக்க, பார்த்திருந்த எல்லோருக்கும் அவர்களின் ஜென்மபந்தம்  புரிவதாய். 
அப்போதும் “க்கும்.. ரொம்பத்தான்..” என்று வைஜெயந்தியும், திவ்யாவும் தோள்களை இடித்து நொடித்து கொள்ள, ரவியும், வசந்தாவும் அப்பா, மகளை கனிவாக பார்த்து கொண்டிருந்தனர். 
“ம்மா.. அப்பா மாதிரி நீயும் இப்போவே ஆரம்பிச்சிடாத, கண்ணை துடை.. இன்னும் தாலி கட்டியே முடியல..” என்று வசந்தா கண்கள் கலங்கவும், ரவி குறும்பாக சொன்னான். 
“ச்சு போடா..”  என்று  மகனின் தோளில் செல்லமாக தட்டிய வசந்தாவிடம், 
“ஆனாலும் நீ அப்பாவை போல இல்லம்மா, அவர் பாரு அவர் செல்ல மகள் கல்யாணத்துக்கு எப்படி எல்லாம் அழறாருன்னு, நீயும் தான் இருந்தியே என் கல்யாணத்துல, ஈஈன்னு இளிச்சிகிட்டு, விதவிதமா பட்டு புடவை கட்டிக்கிட்டு..” என்று கடுப்பாக சொல்ல, அவனை திரும்பி கிண்டலாக பார்த்த வசந்தா, 
“நீ என் செல்ல மகனா..? இது எப்போதிலிருந்து..?” என்று கேட்க, 
“ம்மா.. என்ன பட்டுன்னு இப்படி என் பிஞ்சு நெஞ்சை சாய்ச்சிட்ட..? அப்போ நான் உன் செல்ல மகன் இல்லையா..?” என்று பாவமாக கேட்டான். 
“இல்லடா மகனே.. இல்லவே இல்லை.. நீ மிஸ்ஸர்ஸ் வைஜெயந்தியோட  செல்ல மருமகன்..” என்று சிரிப்புடன் சொல்லிவிட, மகன் அவரை முறையோ முறை என்று முறைத்தான். 
“பார்த்தியா நீயே  ப்ரூப் பண்ற..” என்று அவனின் முறைப்பை பார்த்து, வைஜெயந்தி பக்கம் கண் காட்டி சிரிக்கவும், அவர் எல்லோரையும் முறைப்புடனே பார்த்து கொண்டிருப்பது தெரிய, 
“கூப்பிட்டிங்களா..?” என்றவாறே  ஓடி போய் ஐயர் பக்கத்தில்  நின்றுகொண்ட மகனை வசந்தா சிரிப்புடன் பார்க்க, மகனோ முகத்தை தூக்கி வைத்து நின்றிருந்தான். 
இங்கு மணமேடையிலோ ப்ரேம்  நொடிக்கொருமுறை  திரும்பி மதுவை பார்த்து கொண்டேயிருக்க, வெட்கத்துடன் சங்கடம் கொண்ட மது, “போதும் பார்த்தது.. திரும்புங்க..” என்று  குனிந்த தலையுடன் கிசுகிசுத்தாள்.
“போதலையே.. இன்னும் இன்னும் பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு, என் ரெண்டு கண்ணுலையும்  அப்படியே நிறைஞ்சிருக்கடி.. நீ இப்படி தேவதையாட்டம்  மணப்பொண்ணா என் பக்கத்துல  உட்காரணுங்கிறது என்னோட இத்தனை நாள் கனவு, அது பலிக்கும் போது அனுபவிக்கணும்..” என்று  கரகரத்த குரலுடன் சொல்லிவாறே, அவளின் கையை பிடிக்க போகவும், மது அவசரமாக தன் கையை எடுத்து  கொண்டாள். 
“ம்ப்ச்.. மித்ரா.. கையை கொடு..”  என்று ப்ரேம் உரிமையாக அதட்டி கொண்டிருக்க, 
“தம்பி.. பொண்ணு கையை பிடிச்சிட்டிருந்தா மந்திரம் எப்படி சொல்றது..?, சத்த நேரம் பொறுங்கோ, நானே பிடிச்சு தரேன், விடாம பிடிச்சிக்கோங்க, இப்போ முதல்ல மந்திரத்தை சொல்லுங்கோ..” என்று ஐயர் சத்தமாக சொல்லிவிட, மதுவிற்கு தலையைவே நிமிர்த்த முடியவில்லை. 
“டேய்.. இப்படியா மானத்தை வாங்கிட்டிருப்ப, கொஞ்ச நேரம் பொறுடா..” என்று குமார் நண்பனை குறும்பாக கண்டிக்க, எல்லோரின் முகத்திலும் சிரிப்பு. 
அதே மகிழ்ச்சியுடன்  அடுத்த சில நிமிடங்களில் ப்ரேம் கையில் மஞ்சள் தாலி கொடுக்கபட, மது  இரு கைகளையும் வணங்கி கண் மூடி கடவுளை வேண்டியவாறே ப்ரேம் கட்டிய தாலியை மனதார ஏற்று கொண்டாள். 
“மிஸ்ஸர்ஸ் ப்ரேம்.. கண் திறங்க..” என்று ப்ரேம் தாலி கட்டி முடித்த கையோடு அவளை  உரிமையாக  அழைக்க, கண் திறந்து அவனை பார்த்து மெலிதாக புன்னகை புரிந்தவளை, அப்படியே தன் கையில் அள்ளிக்கொள்ள பரபரத்த கைகளை கட்டுப்படுத்திக்கொண்டவன், தானும் அவளை பார்த்து மலர்ந்து சிரித்தான். 
“மாப்பிள்ளை பொண்ணுக்கு குங்குமம் வைங்கோ..” என்று ஐயர் கொடுக்க, 
“பொண்ணா..?  என் பொண்டாட்டி..” என்று வடிவேலுவை பார்த்து கெத்தாக சொன்னவன்,  அவளின் பொன் தாலியிலும், நெற்றி வகிட்டிலும் அழுத்தமாக வைத்தான். 
அடுத்த சடங்குகளிலும் ப்ரேம், பிடித்த மதுவின் கையை விடாமலே செய்து கொண்டிருக்க, மதுவின் பார்வை அப்பாவை தொட்டு தொட்டு  மீண்டது. தன்னையே பார்த்து கொண்டிருக்கும் அவரின் முகம் சந்தோஷத்தில் விகசித்தாலும், கண்களில் பிரிவின் துக்கம் மண்டி கிடக்க, மதுவின் கண்களிலும் தன்னை போல் நீர் நின்றது. 
“கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வெளியே வந்தாலும், பார்த்துக்கோ..” என்று தன்னையே பார்த்து கொண்டிருந்த ப்ரேமின் எச்சரிக்கையில், இமை சிமிட்டி தன் கண்ணீரை அடக்கினாள். 
“இது நமக்கு ரொம்ப ப்ரேஷியஸான மூமென்ட் மித்ரா, இந்த நேரத்துல நீ அழுகவே கூடாது..” என்ற ப்ரேம், வடிவேலுவை நெருங்கவே விடாமல் மதுவை தன் கையில் பொத்தி கொண்டான். 
இப்படியாக பிரேமின் ஒவ்வொரு செயலிலும் மது மீதான உரிமை தெரிய, வடிவேலு மகளிடம் நெருங்க முடியாமல் தள்ளி நின்றுவிட்டார். கணவனின் தவிப்பு அவரின் தளர்ந்த உடலில் தெரிய வசந்தா  வேகமாகச்சென்று அவரின் பக்கத்தில் நின்று கொள்ள, ரவியும் மறுபக்கத்தில் நிற்பது தெரிந்தது. 
மதுவின் ஓரக்கண் பார்வை தள்ளி நிற்கும் தந்தையின் மேல் படிய, அவரிடம் ஓட துடித்த கால்களை கட்டுப்படுத்தி கொண்டு ப்ரேமுடன் சடங்குகளை செய்து கொண்டிருந்தாள். 
“பொண்ணும், மாப்பிள்ளையும் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க..” என்று   ஐயர் சொல்லவும், முதலில் இருவீட்டு மூத்த தலைமுறையிடம் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள், அடுத்து சண்முகம், வைஜெயந்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். 
இறுதியாக வடிவேலு, வசந்தா தம்பதியிடம் வர, ப்ரேம் மதுவை வடிவேலுவின் புறம் நகர்த்திவிட்டு தான் வசந்தாவின் பக்கம் நின்றுகொண்டான். அதில்  மகளுக்கும், தந்தைக்கும் வருத்தம் இல்லை, உண்மையில் மகிழ்ச்சிதான். 
அதே மகிழ்வுடன்  மது  தந்தையின் இரு பாதம் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற, வசந்தாவும் ப்ரேமின் திடீர் செயலில் அதிர்ந்தாலும் முழுமனதாகவே ஆசீர்வதித்தார். 
“தீர்க்க சுமங்கலியா எல்லா வளமும் பெற்று, சந்தோஷமா  வாழனும்..” என்று வடிவேலு மகளை ஆசீர்வதித்து தூக்கி கொள்ள, மது தாங்க முடியாமல்,  “ப்பா..” என்று கதறியவாறே  அவரின் தோள் சாய்ந்துவிட்டாள். 
“மது.. என்னடா இது..? அழுகையை நிறுத்து, இன்னும் சடங்கு இருக்கு பாரு, போய் மாப்பிள்ளையோட சேர்ந்து நில்லு, போ..” என்று வசந்தாதான் ப்ரேமின் வெறித்த பார்வையில்  மகளை கணவனிடம் இருந்து பிரித்து மருமகனுடன் நிற்கவைத்தார். 
அன்றே மறுவீடு மற்ற சடங்கு எல்லாம் முடிக்கப்பட்டு, ப்ரேமும், மதுவும் ஹனிமூன் செல்வதாக முடிவு. அதை எடுத்தும் ப்ரேம்தான், இதை கேள்விப்பட்டு வடிவேலு பயங்கரமாக எதிர்க்க, ப்ரேம் எப்போதும் போல் உறுதியாக நின்று சாதித்து கொண்டான். 
அதனாலே அடுத்த சில நிமிடங்களில் எல்லா சடங்குகளும் அவசர அவசரமாக  முடிக்கபட்டு மணமக்கள் ப்ரேமின் வீட்டின் வாயிலில் நின்றனர். மேனகா தான் ஆரத்தி எடுக்க, மது உலகத்தில்  உள்ள எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு வலது கால் எடுத்து வைத்து புகுந்த வீட்டினுள் நுழைந்தாள். 
எல்லோருக்கும் மிகவும் மகிழ்வாக, எதிர்பார்ப்புடனே நடக்கும் புகுந்த வீட்டின் பிரவேசம் மதுவுக்கு மட்டும் திகில் நிறைந்ததாகவே இருந்த போதும், ப்ரேமிற்காக அதை மறைத்து புன்னகையை பூசி கொண்டவள், மேனகாவின் வழிகாட்டுதலின்படி  விளக்கேற்றி வழிபட்டாள். 
அடுத்து பால், பழம் கொடுக்கபடும் சடங்குகள் முடியவும், மது மேனகாவுடன் ஓய்வெடுக்க விருந்தினர் அறைக்கு அழைத்து செல்லபட்டாள். தங்கையுடன் வந்த ரவி, தனியாக சோபாவில் அமர்ந்திருக்க, உடை மாற்றி கொண்டு வந்த ப்ரேம் அவனுடன் அமர்ந்து கொண்டு தங்கையை அழைத்தான். 
“சொல்லுங்கண்ணா..” என்று வந்த திவ்யாவிடம், 
“உள்ள என்ன செஞ்சிட்டிருக்க..? மாப்பிள்ளை தனியா உட்கார்ந்திருக்கார் பாரு..” என்று கண்டிப்புடன் அதட்டினான்.  
“இல்லைண்ணா.. காலையிலே சீக்கிரமே எழுந்தது முடியல..”  என்று உண்மையாகவே சோர்ந்து போயிருந்தவளை பார்த்த ரவி, 
“இருக்கட்டும் ப்ரேம், நீ போய் ரெஸ்ட் எடு போ..” என்று கனிவாகவே மனைவியிடம் சொல்ல, திவ்யாவிற்கு லேசாக சுருக்கென்று இருந்தது. இந்த சில மாதங்களாகவே கணவனை சுத்தமாகவே கண்டு கொள்ளாமல் இருந்தவளுக்கு அவனின் கரிசனம், மனதை தைக்க, 
“நீங்களும் வாங்க, ரெஸ்ட் எடுக்கலாம்..”  என்று கணவனை தன்னோடு அழைத்தாள். 
தன் பிள்ளையை சுமப்பவளின் மேல் கோவப்பட முடியாமல், இத்தனை நாள் பொறுமையாகவே இருந்தவனுக்கு மனைவியின் உணர்வு புரிய, பெரு மூச்சோடு எழுந்து மனைவியுடன் சென்றான். 
“நீ தூங்கு..” என்று கட்டிலின் ஓரம் அமர்ந்த ரவியின் மடியில் தானே சென்று தலை வைத்து படுத்து கொண்ட திவ்யாவை பார்த்து ஆச்சரியபட்ட  ரவிக்கு அவளை ஒதுக்கி வைக்க மனமில்லாமல்  தலையை வருடி விட்டவன், 
“என்ன ஆச்சு..? ரொம்ப டையர்டா இருக்கா..? ஜுஸ் ஏதாவது குடிக்கிறியா..?” என்று வாஞ்சையாக கேட்டான். 
“வேண்டாங்க.. கொஞ்ச நேரம் இப்படியே படுத்திருக்கேன்..” என்று மேலும் தன்னை  ஒட்டி கொண்டு படுத்த மனைவியை, தானும் சேர்த்தணைத்த ரவிக்கு மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று தோன்றியது. 
“மதுவையும், ப்ரேமையும் நைட் ஹனிமூன் அனுப்பிட்டு இவகிட்ட பேசலாம்..” என்று நினைத்து கொண்டவனின் கைகள் மனைவியை வருட தவறவில்லை. திவ்யாவிற்குமே கணவனின் அந்த அருகாமை தேவைப்பட, வேறெதுவும் பேச தோன்றாமல் படுத்திருந்தாள்.
ப்ரேமின் திட்டபடியே அடுத்த சில நிமிடங்களில் மணமக்கள் அருகில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும், ரவி தம்பதியினர் முறையாக மணமக்களை மறுவீடு அழைத்து சென்றனர். 
வசந்தா ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல அங்கும் புதுமணப்பெண், மாப்பிள்ளைக்கான  சடங்குகள் முடிக்கபட்டு, எல்லோரும் சற்று ஓய்வாக சோபாவில் அமர, திவ்யா ஓய்வெடுக்க தன் அறைக்கு சென்றுவிட்டாள்.. 
“மாப்பிள்ளை.. காபி..” என்று வசந்தா கொடுத்த காபியை மறுக்காமல் எடுத்து கொண்ட ப்ரேமிடம், 
“ப்ரேம்.. எத்தனை மணிக்கு பிளைட்..?”  என்று ரவி கேட்கவும், 
“நைட் தான் ரவி, பட் இங்கிருந்து சென்னை போகணுமில்லை, சோ இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பணும், வீட்டிலும் சொல்லிட்டு வந்துட்டதால, இப்படியே கிளம்பிரலாம்..” என்று முடிக்க, வடிவேலுவுக்கும் சரி, மதுவுக்கும் சரி மனம் பாரமாகி தான் போனது. 
இருவரும் சில அடி தூரத்தில் தான் அமர்ந்திருந்தனர். ஆனால் இருவராலும்  ப்ரேம் எனும் செக்போஸ்ட்டை கடக்கத்தான் முடியவில்லை, வந்ததில் இருந்து மதுவை  தன் கைப்பிடியிலே வைத்து கொண்டிருக்கும் கணவனிடம், மல்லுக்கு நிற்க மனமில்லாமல் அமைதியாக இருந்து கொண்ட மதுவிற்கு, வடிவேலுவின் “மதுமா..” என்ற  அழைப்பு என்று வரும் என்றிருந்தது. 
“ஆம்.. என்று அவருக்கு தெரியாமல் மது ப்ரேமிற்கு பணஉதவி செய்தாளோ.. அன்றிலிருந்தே வடிவேலுவின் மதுமா.. அழைப்பு நின்றே   போய்விட்டது. அதை மதுவும் அன்றே உணர்ந்து கொண்டாள்தான், ஆனால் அவரிடம் சென்று அதைபற்றி பேசவும் துணிவில்லாமல் பாரமான மனதுடன் மௌனமாக இருந்துகொண்டாள். 
இதோ இன்று தான் பிரிந்து போகும் நேரத்திலும்கூட மது என்றே அழைக்கும் தந்தையை அடைத்த மனதோடு பார்த்தவள், தாங்க முடியாமல் அங்கிருந்து செல்ல பார்க்க, ப்ரேம் அவளின் கையை விட்டால்தானே..?

Advertisement