Advertisement

டோராவோடு ஒரு பயணம்
                
கண்ணை மூடி கற்பனை செய்யாமல்…. கண்ணை திறந்து வைத்துக் கொண்டே….. கற்பனையில் முழ்கி படிக்கவும்….

வணக்கமுங்க…. நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க…. எனக்கு டிவி பாக்குறது பிடிக்காதுங்க…. லீவு நேரம்ங்களா பிள்ளைகளுக்கு டிவிதான் பொழுதுபோக்காய் போச்சுங்க…. எங்க நம்ம பேச்ச கேட்குது…. இதுல வேற பார்த்தீங்க ன்னா என் பிள்ளைகள் சின்ன புள்ளைங்க இல்ல எல்லாம் வளர்ந்த பிள்ளைங்க…. ஆனா… வேற எந்த சேனலும் பாக்காதுங்க அந்த கார்ட்டூன் சேனலும்., இந்தச் சுட்டி டிவி இது தவிர வேறு எதுவுமே பார்க்க மாட்டாங்க… நானும்  கூட உட்கார்ந்து ரொம்ப இன்ட்ரஸ்டா வாயைத் திறந்து வைத்து  பாத்துக்கிட்டு இருந்தேனுங்க.., கார்ட்டூன் சேனல்ல சோட்டா பீம் போட்டுட்டு இருந்தாங்க….. லட்டு சாப்பிட்ட உடனே அந்த பயலுக்கு அம்புட்டு பலம் வந்துருதுங்க  ஆச்சரியமா இருந்துச்சு பார்த்துக்கோங்க….

அடக் கிரகம் புடிச்சவளே…. அட எங்க வீட்டு பிள்ளை தான் திட்டுனேனுங்க கையில ரிமோட்டை வச்சுக்கிட்டு ஒரு நிமிஷத்துக்கு ஒரு தடவை சேனல் மாத்திக்கிட்டு இருந்தா….. ஒரு மனுசி ரொம்ப நாள் கழிச்சு டிவி பாக்குறதால.. ஆசையா இருக்காதா…. என்ன நான் சொல்லுறது…..

சுட்டி டிவியில டோரா போட்டுட்டு இருந்தாங்க….. கொஞ்ச நேரத்தில் ஜாக்கி ஜான் ஆரம்பிக்க போறானு போட்டுட்டு இருந்தாங்க…. சரி இதையாவது உருப்படியா பார்க்கணும்….. பிள்ளைகளிடம் ஸ்க்ரீட்டா ஆர்டர்  போட்டுட்டு டேன்ங்க சேனலை மாத்த கூடாது ன்னு….

இந்த டோரா புள்ள இருக்கு இல்ல அதான் அப்பதான் யாரையோ காப்பாற்றிக் கொண்டு ஊர்ல விட்டுட்டு வராங்க…. நல்ல பார்க்க இடம் அழகா இருந்துச்சு சரி இடம் அழகா இருக்கே ன்னு  டிவி பக்கத்துல போய்  பாத்தேனுங்க இந்த புஜ்ஜி இருக்குல்ல படக்குன்னு கைய புடிச்சு டிவி குள்ள இழுத்துருச்சிங்க..,. உள்ளே போய்  டோரா கிட்ட மாட்டிக்கிட்டேனுங்க…. எப்படி னு கேட்காதீங்க டிவி சைஸ் பெருசுங்க….

அவளே யாரையோ காப்பாற்ற போய் காடுக்குள்ள கிடக்குறாங்க…. இதில் நானும் உள்ள போய் மாட்டிகிட்டேன் ங்க….. எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க…. நான் உள்ளே போனதும் ஒரே அழுகை ங்க அய்யய்யோ என் பிள்ளை என் வீட்டுக்காரர் என்று சொல்லி அழ ஆரம்பிச்சிட்டாங்க….  அந்த புள்ள பயப்படாதீங்க ஆன்ட்டி நான் உங்களைக் கொண்டுபோய் விடுறேன் அப்படின்னு சொல்லுதுங்க தைரியமா…..

எப்படியோ வீட்டுக்கு போன சரி அப்படின்னு நினைச்சு சரிமா கொண்டு போய் என்ன பத்திரமா சேர்த்திடு ன்னு சொன்னா….. பயப்புள்ள  ஊர் சுத்துறத்துக்குப் ப்ளான் போடுதுங்க…..

பெரிய பிளான்ங்க….  நான்தான் பயந்து போய் விட்டேனுங்க…. எம்புட்டு நேரம் ஆகும் போகுறதுக்கு ன்னு கேட்டா….. உங்களை சீக்கிரத்தில் கொண்டு போய் உட்டுறேன் ன்னு சொல்லுதுங்க….

‌சரி வேற வழியே இல்ல மாட்டிக்கிட்டோம்…. வீடு போய் சேர இவ பின்னாடி தான் போகணும்னு சொல்லி கிளம்பினா…. ஆன்ட்டி மேப்பை கூப்பிடுங்கள் அப்படின்னு சொல்லுது…. அட  கர்மம் புடிச்சவளே உனக்கு பாதை தெரியாதா என்று கேட்டா….. உங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நாம ஏர்போர்ட் போகணும்…. அப்ப நாம என்ன செய்யணும் …. மேப் அ கூப்பிடணும்…. அப்படி ன்னு சொன்னாங்க….

என்னமோ பண்ணு அப்படி ன்னு பார்த்தா…. பேக் ல மேப் வைச்சிகிட்டே…. ஊருக்கே கேட்குற மாதிரி கத்தி கூப்பிடுதாங்க….. அது எங்கயேயோ சுத்தி சுத்தி பாத சொல்லுச்சுங்க…. கடைசியாக ஒரு வழியா ஏர்போர்ட்டில் வந்து சேர்ந்தவுடனே இந்தியாக்கு போக ஃப்ளைட் ஏறுவான்னு பார்த்தா….. இந்தப் புள்ள சப்பான்னுக்கு ஃப்ளைட் ஏறிட்டுங்க….  எம்மாடி டோரா நம்ம இப்போ எங்க இருக்கோம் அப்படின்னு கேட்டேங்க…. அட அந்த புள்ள சிம்பிளா பதில்  பண்ணாது போலங்க…. அய்யய்யோ என் காதுல ரத்தம் வருது ன்னு சொல்ற அளவுக்கு பேசி…. நம்ம ஆப்பிரிக்கா உள்ள அமேசான் காட்டுப் பக்கத்தில இருக்கோம் ன்னு சொல்லுதுங்க….

பகீருன்னு ஆகிப்போச்சு ங்க…. நல்ல வேளை இந்த அனகொண்டா கண்ல நம்ம படல அப்படின்னு நெனச்சுக்கிட்டேங்க….

ஏமா….  டோரா ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா தானே பக்கம் அப்படின்னு கேட்டேனுங்க…. அதுக்கு அந்தப் புள்ள உங்களுக்காக எங்க பிளான மாத்தமுடியாது ஆன்ட்டி…. நாங்க ஏற்கனவே ஜாக்கிசானை பாக்குறதுக்கு ஜப்பானுக்கு போகணும் அப்படின்னு சொல்லுதுங்க….

வேற வழியே இல்லங்க இந்த பிள்ளை கூடத்தான் போயாகணும்… ஏன்னு கேக்கறீங்களா…. உங்ககிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்றேன் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க….. ஏன்னா இந்த புள்ளதான் பாஸ்போர்ட் இல்லாமல் நாடு நாடா போய்ட்டு வரும்ங்க….. அது தான்….

ஒரு வழியா சப்பானில் போயி இறங்கியாச்சு….. ஆனா எனக்கு ஒரு கோவம் பார்த்துக்கோங்க…. பொம்பள பிள்ளைங்க இப்படி பேசாம ஊர் சுத்திட்டு இருக்கா…. அப்படின்னு தாங்க…..  டோரா வோட அம்மா மட்டும் என் கைல கிடைச்சா இப்படியா பிள்ளையை வளர்ப்ப அப்படின்னு சொல்லி நாலுபோடு போட்டு  இருப்பேங்க மண்டைல…..நீங்க சொல்ல வருவது புரியுதுங்க அவள் வெளியே சுத்திகிட்டு இருக்க போயி தானே உங்கள வீட்ல கொண்டு பத்திரமா சேர்த்து விடுறேன்னு சொல்லியிருக்கா ன்னு தானே…..   ஆனா பொம்பள புள்ளை பாக்க வேற அழகா இருக்குதுன்னு…. பயம் தாங்க…. இந்த கேடுகெட்ட உலகத்தில யாரை நம்ப முடியும் சொல்லுங்க…. சின்ன பிள்ளைங்க பெரிய பிள்ளைங்க ன்னா பார்க்காங்க….. நாமதான் பத்திரமா பாத்துக்கணும் அதுக்கு தான்….. நம்ம பிள்ளை மாதிரி தானே… அது தான்  பயமா இருக்கு….

ஆனா சும்மா சொல்லக் கூடாதுங்க….  சாப்பிடும் போது எல்லாம் நமக்கும் சேர்த்து வாங்கி கொடுத்து விடுத்துங்க…. இவ்வளவு பிரச்சினைலையும் சாப்பாடு எப்படி இறங்குதுன்னு கேட்டுடாதீங்க….. ஏனா  நமக்கு எங்க இருந்தாலும் சாப்பாடும் முக்கியம்ங்க அதை மறந்திடக் கூடாது…..

அய்யய்யோ சப்பான் வந்துட்டோம் அப்படி ன்னு நெனச்சா பயமா தாங்க இருக்கு…  ஏன்னா இங்கே இருக்கிறதே ஒரு அறுந்த வால் கூட்டங்க….. இதுல எக்ஸ்ட்ரா இன்னொரு கூட்டம் வேற சேர போகுதுங்க…
அது தான் எனக்கு பயமா இருக்குங்க……

நான் இப்ப வரைக்கும் அந்த புஜ்ஜி ட்ட  பேசவே இல்லையே…. இப்படியாக கையப் பிடிச்சு இழுத்து காட்டுக்குள்ள சுத்த விடுவான்….

ஐய்யய்யோ இங்க வந்ததுக்கு அப்புறம் பார்த்தா….. டோரா புள்ள பரவால்ல ன்னு தோணுது ங்க…. இந்த ஜுலி புள்ள சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்குது ங்க…..  ஆனா இந்த புள்ளையும் பாக்குறதுக்கு துருதுருன்னு அழகா இருக்கு……  ஜாக்கிசான் தான் பாவம் ங்க….. அடங்காத பிள்ளையாக வச்சுக்கிட்டு அவர் படும்பாடு… ஐயையோ சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குதுங்க….. மரத்துக்கு மரம் தாவுற புஜ்ஜியை விட மோசமா சேட்டை பண்ணுதுங்க….. ஏதோ மந்திர கல்லுஅது இதுன்னு சுத்துதுங்க….. ஜப்பான் மக்களை சும்மா சொல்லக் கூடாதுங்க…. சுறுசுறுப்புங்க…  இயற்கையை பாதுகாப்பதில் அவங்கள மாதிரி முடியாதுங்க…ஜுலி புள்ள ஆளு  குட்டையா தெரிஞ்சாங்க….  நானும் ஜாக்கிட்ட போயி இந்தப் பிள்ளைக்கு காம்ப்ளான் வாங்கி கொடுக்க கூடாதா அப்படின்னு கேட்டேங்க…. அதுக்கு ஜாக்கி உங்க ஊரு மாதிரி நினைச்சிங்களா நாங்க விளம்பரத்த நம்ப மாட்டோம் எங்களுக்கு இயற்கையாக கடவுள் என்ன கொடுக்காறோ…. அதை ஏற்றுக் கொள்வோம் அப்படின்னு சொல்லிட்டாருங்க…..  அது சரி நம்ம மக்கள் தான் முட்டாள் ன்னா எல்லாரும் அப்படியா இருப்பாங்க…..சரி ஒரு வழியா அதெல்லாம் முடிஞ்சு ….. நம்மளை இந்தியா கூட்டிட்டு போவாங்கனு பாத்தா….. இந்தியாக்கு  தாங்க ஃப்ளைட் ஏறுனாங்க…. ஆனா பாருங்க நேரா டோலக்பூர் போயிட்டாங்க….. அட இன்னொரு அருந்த வால் கூட்டத்தில் கொண்டு வந்து நம்மல சேர்த்துட்டாங்க ன்னு பயந்துட்டேங்க…..

அடக்கொடுமையே ன்னு இருந்துச்சுங்க..
இந்த சுக்கி புள்ள பீம் அ பார்த்தாலே கண்ணம் சிவக்குது…. அப்புறம் அந்த ராசு பய சொல்லுதான்….. இவ  மட்டும் இல்ல  டோலக்பூர் மகாராஜா மகளும் அப்படி தான் அப்படிங்கான்….. அடக்கடவுளே பச்சைப் பிள்ளைகள் பார்க்கிற டிவி விஷயத்திலேயும் மா  இந்த காதல் கண்றாவியெல்லாம் கொண்டு வரணும்….
என்ன பண்ண மனசுக்குள்ளே திட்டிகிட்டேன்ங்க….. இந்த பீம் பய இருக்காம் பாருங்க  ஒரே லட்டு சாப்பிட்டுகிட்டே இருக்காங்க…… அவன் சாப்பிடுவதைப் பார்த்தாலே நமக்கு பயமா இருக்குங்க…. எங்க நம்மளும் லட்டு சாப்பிட ஆரம்பிச்சுடுவமோ ன்னு…. எனக்கு ரொம்ப டயர்டா இருக்குங்க….. எப்படித்தான் இப்படி சலிக்காமல் ஊர்சுத்துகளோ தெரியல….

ஒரு வழியா எல்லாரோட வீரதீர பராக்கிரமங்களை கேட்டு முடிச்சேனுங்க….. என்னை கொண்டு வந்து வீட்டில் விட்டுச்சிங்க பிள்ளைங்க….

சரி நம்மள கொண்டு வீட்ல விட்டிருக்க இந்த பிள்ளைகளுக்கு நல்ல ஜூஸ் போட்டு கொடுத்தா இந்த வெயிலுக்கு இதமா இருக்கும் அப்படின்னு ஜூஸ் போட்டு குடிக்க சொன்னேன்ங்க….. நான் ஜூஸ் போட்டு குடித்து முடித்து கொஞ்சம் நேரத்துக்குள்ள என் வீடு பார்த்தீங்கன்னா ரண களமா போச்சுங்க…. நாலு அறுந்த வால் கூட்டமும் சேர்ந்து என் வீட்ட உண்டு இல்லை என்று ஆக்கிருசிங்க….. மூன்று தானே வந்துச்சி நாலு சொல்லுதேனு யோசிக்காதீங்க….
ஒரு கூட்டம் தான் எங்க வீட்டில இருக்கு இல்ல…… வேற வழியே இல்லாம சிரிச்ச முகத்தோட எல்லாத்தையும் அனுப்பினேங்க…. இந்த வீட்டை சுத்தப்படுத்த  எனக்கு ரெண்டு நாள் ஆகும் போலங்க…..

எனக்கு வீடு குப்பையா இருந்தா பிடிக்காதுங்க….. அழுகாச்சி அழுகாச்சியா வரும்….. கண்ணுல கண்ணீரோட எங்க வீட்ட கிளீன் பண்ண ஆரம்பிச்சேங்க….  திடீர்னு என்னை யாரோ தட்டி தட்டி கூப்பிடுற மாதிரி இருந்துச்சு….

கண்ணீரோட கண்ணை திறந்து பார்த்தால் என் பிள்ளைங்க  எழுப்புதாங்க…. அவ்வளவும் கனவுங்க…

இந்த பிள்ளைகளோட டிவி பார்ப்பது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் தெரியுது…..

இதனால் தோழமைகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால்….. டோரா., ஜாக்கிசான்., சோட்டாபீம் இப்படின்னு பார்த்து பிள்ளைகளுடன் நேரத்தை போக்கிடேன்…..  கதை எழுதவில்லை….  இன்னும் ஒரு வாரம் நேரம் கொடுத்தீர்கள் என்றால் கதையோடு வந்துவிடுவேன்…….

உங்கள் தோழி.,
ஆதிபிரபா……

Advertisement